புதன் 12-04-2006 17:56 மணி தமிழீழம் [நிருபர் செந்தூரன்]
திருமலையில் காடையரின் வெறியாட்டத்தில் 12 பேர் பலி மேலும் 50 பேர் படுகாயம்.
திருமலையில் சிறீலங்கா புலனாய்வுத்துறையினரும் சிங்கள கடற்படையினர் மற்றும் சிங்கள காடையரும் இணைந்து நடத்தப்பட்ட கடைத்தனமான வெறியாட்டத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
திருமலை நகர மத்திய வீதியில் இன்று புதன்கிழமை 4 மணியளவில் இனம் தெரியாத நபர்களினால் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் சிறீலங்கா படைவீரர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
இப்படைவீரர் கொல்லபட்டதற்கு பழிவாங்கும் முகமாக இன்று மாலை 4.15 மணிக்கு மத்திய வீதியில் உள்ள தமிழ் வர்த்தக நிலையம் ஒன்றினுள் நுழைந்த சிறீலங்கா படைப் புலனாய்வுத் துறையினரும் கடற்படையினரும் கைக்குண்டு ஒன்றை வெடிக்க வைத்தனர்.
இதன் போது வணிக நிலையத்தினுள் பணியாற்றிய நால்வர் அந்த இடத்திலேயே பலியாகினர். தொடர்ந்து சிறீலங்கா புலனாய்வாளர்களும் கடற்படையினரும் பாதுகாப்பு வழங்கின சிங்கள காடையர்கள் திருமலை நகரத்தை சுற்றிவளைத்து தமிழர்கள் மீது தாக்குதலை தொடுத்ததோடு பல வர்த்தக நிலையங்களையும் எரியூட்டியுள்ளனர்.
துப்பாக்கிகள், கைக்குண்டுகள், கத்திகள், தடிகள், பொல்லுகள், சைக்கிள் செயின்கள், கொட்டன்கள் தமிழ் மக்களை தாக்கி வருகின்றனர். பல வர்த்தக நிலையங்கள், வீடுகளை எரியூட்டியதோடு கொள்ளையடித்தும் வருகின்றனர்.
இந்த வன்முறையில் 12 பேர் கொல்லபட்டதோடு 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். திருமலை நகரில் அமைந்துள்ள தமிழ் மக்களுக்கான 20 வணிக நிலையங்கள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன.
நிலமை மோசமாகி கட்டுக்கடங்காமல் போயுள்ள இந்த நிலையில் கண்காணிப்பாளர்கள் அப்பகுதிக்குச் செல்லவில்லை என போர் நிறுத்த கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
வீதியிலும் வணிக நிலையங்கள் முன்பாக நின்ற பல தமிழ் மக்கள் சிங்கள காடையர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
லிங்கநகர்ப் பகுதியில் ஐ.ஓ.சி என்ற அழைக்கப்படும் எரிபொருள் நிரப்பு நிலையம் எரிக்கப்பட்டுள்ளது. இந்த எரிபொருள் நிலையத்தின் முன்பாக பல தமிழர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றும் அனுராதபுரச் சந்தியில் உந்துறுளியில் சென்ற இரு தமிழர்கள் எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இத்தகைய வன்முறைகள் குறித்து சிங்கள ஊடகங்கள் மூடி மறைக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். திருமலையில் இரு குழுக்களிடையே நடைபெற்ற மோதல் ஏற்பட்டதாகவும் இதனை காவல்துறையினர் கட்டுக்குள் கொண்டுவந்தாகவும் தெரிவிக்கின்ற போதும் சிறீலங்கா அதிகாரிகள் வெளிநாட்டு ஊடகங்களுக்கும் இதனையே தெரிவித்து வருகின்றனர்.
தற்பொழுது திருமலை நகர் முழுவதுமும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இன்றையதினம் திருமலை நகருக்குச் சென்ற பல தமிழர்கள் இன்றும் வீடு திரும்பவில்லை. வீதிகளில் மிதிவண்டிகளும் உந்துறுளிகளும் சிங்கள காடையர்களால் சேதமாக்கப்பட்டு காணப்படுகின்றன. குறிப்பாக மத்தியவீதி, அபயபுரச் சந்தி, 3ம்கட்டைச் சந்தி, அன்புவழி புரச்சந்தி ஆகிய பகுதிகளில் பல மிதிவண்டிகள், உந்துறுளிகள் எரியூட்டப்பட்டு காணப்படுகின்றன.
தொடரும் சிங்கள காடையர்களின் வன்முறைகளால் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர். நகரில் தொடர்ந்து வெடிச்சந்தங்கள் கேட்டவண்ணம் உள்ளதகா எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&
<b>இறுதி இணைப்பு
திருமலை மணிகூட்டு கோபுரத்திற்கு அருகில் மத்திய வீதியில் தேங்காய் வியாபார நிலையத்திருந்து இன்று பிற்பகல் 3.50 மணியளவில் பாரிய குண்டுச் சத்தம் கேட்டது. இதனை அடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் நாலாபுறமும் ஓடினர்.
ஆர்.ஆர் என்று சொல்லப்படுகின்ற தனியார் வர்த்தக நிலையம் ஒன்றினுள் புகுந்த ஒரு கும்பல் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதலை நடத்தினர். கடையில் பணிபுரிந்தவர்கள் கடையின் பின்புற வழியாகத் தப்பிச் சென்று உயிர் பிழைத்தனர்.
கைக்குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த 7 பேரின் உடல்களும் திருமலை பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 40 பேர் வந்து சிகிற்சை பெற்றுள்ள மருத்துவமனை வட்டராங்கள் தெரிவித்துள்ளன.
தாக்குதலை அடுத்து அருகில் உள்ள கொரியாவத்தை என்ற இடத்திலிருந்த வந்த சிங்கள காடையர்கள் வாள்கள்,கத்திகள், கம்புகள் சகிதம் வந்தவர்கள் மக்கள் மீது தாக்குதலைத் தொடுக்கத் தொடங்கினர். தாக்குதல் திருமலையில் பல இடங்களில் பரவலாக நடத்தப்பட்டன.
அத்தோடு தமிழ் மக்களின் வர்த்தக நிலையங்களை எரியூட்டினர். இவ்வாறக மத்தியவீதி, ஏகாம்பரவீதி, பிரதான வீதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் எரியூட்டப்பட்டன.
சம்வத்தை அடுத்து திருமலை வீதிகளில் பலரும் இரத்தம் சிந்த காங்களுடன் ஓடிக்கொண்டிருந்தனர்.
சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்டம் ஒரே புகைமண்டலமாகக் காட்சியளிக்கின்றது.
இன்றைய வன்முறையில் 6 பேர் குண்டுத் தாக்குதலி இறந்ததாகவும், ஏனையவர்கள் வன்முறைகளில் கொல்லபட்டுள்ளனர். இதில் 6 பேர் தமிழர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுமார் 25 கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. ஒரு மகிழுந்து, நான்கு உந்துறுளிகள், ஒரு பாரவூர்த்தி என்பன எரியூட்டப்பட்டுள்ளன. திருமலையில் உள்ள வீடுகள் மற்றும் வர்த்த நிலையங்களை எரியூட்டியுள்ளனர். குறிப்பாக திருமலை நகர், அபயபுரச் சந்தி, அன்புவழிபுரச் சந்தி, பட்டிக்கழி, லிங்கநகர்ச் சந்தி, அனுராதபுரச் சந்தி ஆகிய சந்திகளில் தீவைப்பு இடம்பெற்றுள்ளது.
திருமலையில் இராணுவத்தினர், கடற்படையினர், காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.</b>
http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>