Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 291 online users.
» 0 Member(s) | 288 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,309
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,635
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,060
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,463
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,483
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,029
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  அவசரகாலச் சட்டம் என்பது தமிழ் மக்களின் அவமானச் சின்னம்:
Posted by: Vaanampaadi - 12-22-2005, 11:51 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

அவசரகாலச் சட்டம் என்பது தமிழ் மக்களின் அவமானச் சின்னம்: மனோ கணேசன்
[வியாழக்கிழமை, 22 டிசெம்பர் 2005, 15:58 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]
சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து நீட்டித்து வரும் அவசர கால சட்டமானது தமிழ் மக்களின் அவமானச் சின்னம் என்று மேலக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.


தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை மேலக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் இன்று வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்புக்குப் பின்னர் ஊடகவியலளார்களுக்கு அவர் அளித்த நேர்காணல்:

கேள்வி: இன்றைய சந்திப்பு தொடர்பாக?

பதில்: இன்றைய சந்திப்பு காத்திரமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. புதிதாக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பற்றிய பார்வை எப்படியுள்ளது என்பதை தெரிந்துகொள்வதற்காக எமது பயணம் அமைந்திருந்தது.

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உத்தேச பேச்சுவார்த்தையானது தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அடிப்படையாக வைத்து அதன் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தை நடைபெறும் என்பதை தமிழ்ச்செல்வன் எமக்கு தெளிவுபடுத்தியிருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு தேசிய விடுதலை இயக்கம். வடக்கு - கிழக்கு சார்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று செயற்பட்டுக்கொண்டு இருக்கும் கட்சிகள், இதைத் தவிர வடக்கு - கிழக்குக்கு வெளியே எங்களின் மேலக மக்கள் முன்னணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலைய மக்கள் முன்னணி ஆகிய அனைத்து கட்சிகளும் ஒருசேர செயற்பட்டு சிறிலங்கா நாடாளுமன்றத்திலேயே ஒருபலம் மிக்க அரசியல் பேரம் பேசக்கூடிய அணியாக செயற்படவேண்டும் என்ற அடிப்படையில் இன்றைய கலந்துரையாடல் அமைந்திருந்தது.

எங்களைப் பொறுத்த வரையிலேயே ஏற்கனவே நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் மேலக மக்கள் முன்னணி தமிழ்க் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டுக்கொண்டு இருக்கிறது. பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழர் விரோத சட்டமூலங்களும் செயற்பாடுகளும் நாடாளுமன்றத்திற்குள்ளே முன்னெடுக்கப்படும் போது அதற்கு எதிரான நிலைப்பாடுகளை நாம் எடுத்துள்ளோம் என்பது எமது நேர்மையான வரலாறாக இருந்து இருக்கின்றது.

அதேபோன்று நாடாளுமன்றத்திற்கு வெளியே சிறிலங்கா தலைநகரத்தில் தெருக்களில் இறங்கி தமிழ்த் தேசிய முழக்கத்தை முன்வைப்பதும் தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுப்பதும் நடைமுறையிலேயே செய்து காட்டியுள்ளோம்.

ஆகவே பொதுவான இணக்கப்பாடு ஏற்கனவே உள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரசைப் பொறுத்த வரையிலேயே கடந்த காலங்களிலேயே அவ்வாறான செயற்பாடுகளில் இறங்கவில்லை. அவசர கால சட்டம் போன்ற பல்வேறு சட்டமூலங்கள் வரும்போதெல்லாம் பொதுவான இணக்கப்பாட்டுடன் அவர்கள் செயற்படவில்லை.

இன்றைய சூழ்நிலையிலேல் சமீபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை சந்தித்துப் பேசிய பின்னர் தற்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்துள்ள முழக்கங்களின் அடிப்படையில் எங்கள் அனைவருடனும் இணைந்து செயற்பாடுவார்கள் என எதிர்பார்க்கின்றோம். அதற்கான கோரிக்கையும் விடுக்க விரும்புகிறேன்.

கேள்வி: அவசரகாலச் சட்டம் தொடர்பாக தங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்: அவசரகாலச் சட்டம் என்பது தமிழ்மக்களின் அவமானச் சின்னம். அச்சட்டத்தின் அடிப்படையில் வரக்கூடிய பலத்தை வைத்துக்கொண்டுதான் சிங்கள இராணுவமும் காவல்துறையினரும் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.

வடக்கு - கிழக்கு தமிழர் தாயகத்திலேயே நடைபெறக்கூடிய கள நிலைமைகள் வேறு. வடக்கு - கிழக்கு வெளியே சிறிலங்காவின் தலைநகரப் பகுதியிலே எங்களது மேலகப் பகுதிகளிலே வாழக்கூடிய தமிழ் மக்களை இந்த அவசரகாலச் சட்டத்தை வைத்துக் கொண்டுதான் சிறிலங்கா காவல்துறையினர், இராணுவத்தினர் பல்வேறு கெடுபிடிகளுக்கும் தொந்தரவுகளுக்கும் சர்சைகளுக்கும் உள்ளாக்கிக்கொண்டு இருக்கின்றார்கள்.

வீடு, வீடாக தேடுதல் நடத்தி எந்தவித குற்றச் செயல்களும் செய்யாத தமிழ் மக்களை கைது செய்வது சோதனை செய்து காவல் நிலையங்களில் அடைத்து வைப்பது தனிப்பட்ட குடும்ப விவரங்களைக் கூட எழுத்து மூலமாக பதிவு செய்து தரவேண்டும் என்று பல்வேறு இன்னல்களுக்கு தமிழ் மக்கள் முகம் கொடுத்து வருகின்றனர்.

பல சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்திற்கு எதிராக நான் குரல் எழுப்பியுள்ளேன்.

அடிப்படையிலேயே சிறிலங்கா இராணுவம், காவல்துறை என்று இருந்தாலும் அது பலமுறை சிங்கள இராணுவ காவல்துறையாக செயற்பட்டு வருகிறது. சிங்கள இராணுவத்தை எடுத்துக்கொண்டால் இது 99 வீதத்திற்கு மேலாக சிங்கள மயப்படுத்தப்பட்ட இராணுவமாகவுள்ளது.

மருந்துக்கு கூட தமிழர்கள் சிறிலங்கா படையில் பணியில் இல்லாததால் தமக்கு கிடைக்கின்ற அதிகாரங்களை வைத்துக்கொண்டு சிங்கள இராணுவம், காவல்துறை தமிழ்மக்களை அடக்க ஒடுக்கிவருகிறது.

கேள்வி: இதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படுகிறதா?

பதில்: நாடாளுமன்றத்திற்குள்ளேயும் வெளியேயும் இதற்கு எதிரான நடவடிக்கை எடுத்துக்கொண்டு இருக்கின்றறோம். சர்வதேச சமூகங்களுக்கும் அவசரகாலச் சட்டம் தொடர்பாக எடுத்துக் கூறியுள்ளோம்.

எதிர்காலத்தில் அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து அவசரகாலச் சட்டத்திற்கு எதிராக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு திட்டங்களை தீட்டிவருகிறோம்.

கேள்வி: ஆறுமுகம் தொண்டமான் தங்களுடன் இணைந்து செயற்பட தொடர்பு கொண்டாரா?

பதில்: ஆறுமுகம் தொண்டமான் என்னிடம் இதுவரை பேசவில்லை. அவர்களது கட்சியைச் சேர்ந்த சிலர் எமது கட்சியின் சிலருடன் தொடர்பு கொண்டு இருக்கிறார்கள். அனைத்து கட்சிகளும் ஒன்று இணைந்து செய்ற்படவேண்டுமென்ற சில நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன. காத்திரமான எந்தச் செயற்பாடுகளும் நடைபெறவில்லை.

எம்மைப் பொறுத்த வரையில் அரசியல் ரீதியாக இணக்கப்பாட்டுடன் செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றோம்.

ஆறுமுகம் தொண்டமானின் கட்சிதான் பழைய நிலைப்பாடுகளை மாற்றி புதிய நிலைப்பாட்டுக்கு வரவேண்டும்.

கேள்வி: இதில் ஏதாவது அரசியல் சந்தர்ப்பவாதம் உள்ளது எனக் கருதுகிறீர்களா?

பதில்: இக்கேள்விக்கான பதில் பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும். ஆறுமுகம் தொண்டமான் உறுதியளித்த படி அவரும் அவரது கட்சியும் விசுவாசமாக தமிழ்த் தேசிய சிந்தனையுடன் செயற்படுமா என்பதை காலம் காட்டும். பொறுத்திருந்து பாருங்கள்.


Puthinam

Print this item

  ஆறுமுகம் போன்ற வேடதாரிகளுடன் புலிகள் உறவுவைத்துக் கொள்ளக் கூ
Posted by: Vaanampaadi - 12-22-2005, 11:46 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

ஆறுமுகம் போன்ற வேடதாரிகளுடன் புலிகள் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது

அமைச்சர் சி.பி.இரத்நாயக்க கூறுகிறார்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் அரசாங்கத்துடன் இணைவதை தான் ஆட்சேபிக்கவில்லை. ஆனால், அதற்காக மீண்டும் எனது அமைச்சை தாரைவார்க்கமாட்டேன் அதற்கு இடமளிக்கவும் மாட்டேன் என உறுதிபடத் தெரிவிக்கும் தோட்ட உட்கட்டமைப்பு கால் நடை அபிவிருத்தி அமைச்சர் சி.பி.இரத்நாயக்க சுய நலத்திற்காகவும் பதவிகளுக்காகவும் எனது நண்பர் ஆறுமுகம் தொண்டமான் மலையகத்தில் அமைதியை சீரழித்து விடக் கூடாதென்றும் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில், கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் சி.பி.இரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

`சிரிசங்கபோ' அரசனைப் போல கடந்த முறை எனது அமைச்சுப் பதவியை தாரைவார்த்தேன். அதற்காக நான் வருத்தப்படவில்லை. சிறுபான்மை பலம் கொண்ட அன்றைய அரசைப் பாதுகாப்பதே எனது நோக்கமாக இருந்தது.

ஆனால், இம்முறை அந்த அவசியம் ஏற்படவில்லை. எமக்கு பெரும்பான்மைப் பலம் இருக்கின்றது. எனவே, ஒரு போதும் எனது அமைச்சை கைவிட மாட்டேன்.

இ.தொ.கா. தற்போது வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. இந்நிலையில் ஆறுமுகம் தொண்டமான் விடுதலைப் புலிகளை சந்தித்து புதியதொரு நாடகமொன்றை அரங்கேற்றியுள்ளார். அவர் தனது மக்களின் நன்மைக்காகவோ ஏனைய தமிழ் கட்சிகளின் மீதுள்ள மதிப்பினாலோ தமிழ்ச் செல்வனை சந்திக்கப் போகவில்லை. தன்னுடைய சுயநலத்திற்காகவும் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்குமாகவே புலிகளை நாடிச் சென்றுள்ளார்.

புலிகளுக்கு ஆறுமுகம் தொண்டமானைப் பற்றி நன்கு தெரியும். எனவே, இது போன்ற வேடதாரிகளுடன் புலிகள் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது. அமைதியாக வாழும் தோட்டத் தொழிலாளர்களின் நிம்மதியை எனது இனிய நண்பர் ஆறுமுகம் தொண்டமான் கெடுத்து விடக் கூடாது. தனது சுயநலத்திற்காக தோட்டத் தொழிலாளர்களை அடமானம் வைக்க முயற்சிப்பது துரோகச் செயலாகும்.

தொண்டமான் ஞாபகார்த்த அமைப்பு, வெவன்டன் கலாசார மண்டபம் போன்றவற்றில் பாரிய அளவில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. அதுபோல் தோட்ட உட்கட்டமைச்சிலும் பெருமளவில் நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த அமைச்சு உருவாக்கப்பட்ட காலம் தொடக்கம் தொழிலாளர்களின் தலைவர்களே அமைச்சர்களாக பதவி வகித்தனர். ஆனால், இன்றுவரை தோட்டத் தொழிலாளர்கள் எட்டடி லயன் காம்பராக்களிலேயே வாழ்கின்றனர். மலையகத்தில் பிறந்த நான் இதனை மாற்றியமைப்பேன்.

2006 ஆம் ஆண்டு முடிவிற்குள் பல வீடமைப்பு திட்டங்களை முன்னெடுப்பேன் என்றும் அமைச்சர் சி.பி. இரத்நாயக்க தெரிவித்துள் ளார்.

http://www.thinakural.com/New%20web%20site...ocal%20News.htm

Print this item

  ஆச்சர்யமான துண்டு பிரசுரம் - நம்பவே முடியவில்லை
Posted by: Vaanampaadi - 12-22-2005, 11:36 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

படையினருக்கு ஆதரவாக
நகரில் பிரசுரங்கள்
யாழ்.நகரத்தின் மையப்பகுதியில் படையினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வாசகங்களுடன் பரவலாக துண்டுப் பிரசுங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

"சமாதானத்தைப் பாதுகாப்போம்' என்று தலைப்பிடப்பட்டு மக்கள் முன்னணி என்ற அடிக்குறிப்புடன் இந்த துண்டுப்பிரசுரங்கள் காணப்படுகின்றன. குடாநாட்டில் படையினர் மீது அதிகளவிலான சீண்டுதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றபோதும் படையினர் மக்களின் உயிரைப் பாதுகாப்பதிலும் சமாதானத்தைப் பாதுகாப்பதிலும் அக்கறையுடன் செயற்படுகிறார்கள். ஆகவே அவர்களுக்கு நன்றி சொல்வோம். என்று அப்பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உதயன்

http://www.uthayan.com/pages/news/today/12.htm

Print this item

  வீறாப்புத் தணிவதால் விவரம் புரிகிறது தெற்குக்கு
Posted by: Vaanampaadi - 12-22-2005, 11:32 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

வீறாப்புத் தணிவதால்
விவரம் புரிகிறது தெற்குக்கு
நோர்வே அனுசரணையாளர்களை வேண்டாம் என் றார்கள். இப்போது அனுசரணைப் பணியைத் தொடங் குங்கள் என்று நோர்வேக்கு அழைப்பு விடுக்கின்றார்கள். "வெள்ளைப் புலி' என நோர்வேயை விமர்சித்தவர்களே இப்போது நோர்வேக்கு வெற்றிலை வைக்கும் நிலைமை.
போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பொருத்தமற் றது, நிராகரிக்கவேண்டும் என்றார்கள். பின்னர் அதை மாற்றியமைப்போம் எனச் சூளுரைத்தார்கள். இப்போது, நடைமுறையில் இருக்கின்ற போர்நிறுத்த ஒப்பந்த ஏற் பாடுகளை செவ்வனே நடைமுறைப்படுத்துவது குறித்துப் பேசத் தயார் என்கிறார்கள்.
ஒற்றையாட்சிக்குள்தான் எந்தத் தீர்வும் என்றார்கள். அதை விட்டுக்கொடுக்கவே மாட்டோம் எனப் பிரகடனம் செய்தார்கள். இப்போது ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்று தட்டை மாற்றுகின்றார்கள்.
இனி, சமஷ்டி அடிப்படையில் தீர்வு காண்பதற்கான ஒஸ்லோ இணக்கப்பாட்டையும் விரைவில் ஏற்றுக்கொள்வார்கள். அதில் சந்தேகமே இல்லை.
இப்படி நடக்கும் என்று நாடாளுமன்றில் சவால் விட்டி ருக்கின்றார் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த பிரமுகரும் முன்னாள் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரின் வேடிக்கை யான கூட்டமைப்புத் தோழர்கள், அவர்கள் கடைப்பிடிக் கும் கொள்கைகள் ஆகிய விடயங்கள் குறித்து நையாண் டித் தொனியில் உரையாற்றியபோதே இவ்வாறு சவால் விட்டிருக்கின்றார் அவர்.
நோர்வேயை வெறுத்தவர்கள் இப்போது அதன் காலில் கிடக்கின்றார்கள். நோர்வேயோ அவர்களுக்கு நிபந்தனை போடுகின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என்பதற்காக பௌத்த, சிங்களப் பேரினவாதத்தைக் கிளப்பி, நடைமுறைச்சாத்தியமற்ற வாக்குறுதிகளைக் கொடுத்தவர் கள், அதனால் தென்னிலங்கை மக்களை ஏமாற்றி, ஆட் சிக் கட்டில் ஏறியதும், தாம் கூறியவற்றை நடைமுறைப் படுத்த முடியாமல் தடுமாறுகின்றார்கள்; திண்டாடுகின் றார்கள். மெய் நிலைக்கு அப்பாற்பட்ட தமது வாக்குறுதிகளை ஒவ்வொன்றாகக் காற்றில் பறக்கவிட்டு, மெய்மை நிலையை ஏற்றுக்கொள்வதற்காக இறங்கிவந்து கொண்டிருக்கின்றார்கள்.
தமிழரின் உரிமைப் போராட்டத்தை அடக்குவதற்கு நசுக்குவதற்கு அயலில் உள்ள வல்லாதிக்க நாடான இந் தியா, அளவு கடந்த உதவிகளை வழங்கும் என்ற அள வுக்குமீறிய நம்பிக்கை காரணமாகத்தான் மணலைக் கயி றாகத் திரிக்கும் ஆரவார வாக்குறுதிகளை நடைமுறைச் சாத்தியமற்ற கொள்கை நிலைப்பாட்டை மஹிந்த ராஜ பக்ஷவும் அவரது தோழமை அணியினரும் தேர்தலுக்கு முன்னர் விடுத்தனர்.
1987இல் செய்யப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந் தத்தில் உள்ள அடிப்படை அம்சங்களைக் கூட தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்கமுடியாத விடயங்கள் என அவர் கள் நிராகரித்தனர்.
வடக்கும், கிழக்கும் தமிழர்களின் பூர்வீக வாழிடப் பிரதேசம் என்றும், தமிழர்கள் தனியான தேசிய இனத்த வர்கள் என்றும் இலங்கை இந்திய ஒப்பந்தம் கூறுகின்றது.
ஆனால், இந்தத் தனித் தாயகக் கோட்பாட்டையும், தமிழர்கள் தனியான தேசிய இனம் என்ற நிலைப்பாட் டையும் "மஹிந்தவின் சிந்தனை' எனும் அவர்களின் தேர் தல் விஞ்ஞாபனமும் மற்றும் தேர்தல் பிரசாரங்களும் அடி யோடு நிராகரித்தன.
ஆனால், இப்போது நிலைமை தலை கீழாகி விட்டது.
இந்தியா, யதார்த்தபூர்வமான நிலையை களநிலை வரத்தை இலங்கைத் தரப்புக்கு எடுத்துரைத்து, தனது அழுத்தமும், பங்களிப்பும் எவ்வளவு தூரத்துக்குச் செல் லும் என்ற உண்மையை இலங்கைத் தலைமைக்குத் தெட்டத் தெளிவாக வெளிப்படுத்திவிட்டது.
""யுத்தம் வேண்டாம். போர் மூளாமல் பார்த்துக் கொள் ளுங்கள். யுத்தம் வெடித்தால் நாம் அப்படி ஒன்றும் பெரிய நேரடியான உதவிக்கு வரமுடியாது. அதுதான் நிலைமை.
""எப்படியாயினும் பேச்சு மேசையில் புலிகளை இழுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
""நோர்வேயைவிட வேறுயாரும் அனுசரணைப் பணியை சிறப்பாகச் செய்ய முடியாது. ஆகவே, நோர்வேத் தரப்பை விட்டுவிடாதீர்கள். அவர்களின் உதவியைத் தொடர்ந்து பெற்றுக் கொள்வதுதான் ஒரேவழி.''
இந்த மூன்று விடயங்களும் இந்தியத் தரப்பினால் இலங்கை அரசுத் தரப்புக்குத் தெரியப்படுத்தப்பட்டிருப்பதாக நம்பகரமாக அறியவந்துள்ளது.
இந்த நிலைமை புரியத் தொடங்கியதும், புதிய இலங்கை அரசு மெல்லத் தனது தட்டை சுருதியை மாற்றிப் போடத் தயாராகிவிட்டது.
சமஷ்டி முறையில் தீர்வுகாண்பதற்கான வாய்ப்புகள் குறித்துப் பேசுவதற்கும் தயார் என்று உதவும் நாடுகளின் இணைத் தலைமைகளுக்கு இலங்கை அரசுத் தலைமை கோடிகாட்டியிருப்பதாகக்கூட கொழும்பு ஊடகங்களுக் குத் தகவல்கள் கசியத் தொடங்கியிருக்கின்றன.
ஆரம்பத்தில் வீறாப்புப் பேசிய தென்னிலங்கைச் சிங் களத் தலைமை இப்போது வேறு வழியின்றி மெல்ல உரிய தடத்துக்குத் திரும்பத் தயாராகி வருகின்றது.
இதற்குக் காரணம் அத்தலைமை உண்மையாகத் திருந்தி விட்டது என்பதல்ல.



Uthayan

Print this item

  இராணுவம்-புலிகள் பேச்சு தேவையில்லை: மகிந்த ராஜபக்ச
Posted by: Vaanampaadi - 12-22-2005, 11:27 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

இராணுவம்-புலிகள் பேச்சு தேவையில்லை: மகிந்த ராஜபக்ச
[வியாழக்கிழமை, 22 டிசெம்பர் 2005, 06:46 ஈழம்] [ச.விமலராஜா]
சிறிலங்கா இராணுவமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுகள் நடத்த வேண்டிய தேவையில்லை என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


தம்மைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் மகிந்த ராஜபக்ச இதைத் தெரிவித்துள்ளார்.

சமாதானப் பேச்சுவார்த்தையினை தொடங்க தாம் தயார் என்றும் கிளிநொச்சிக்கு சென்று விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை சந்தித்துப்பே தயார் அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைக்க வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் புலிகளும் இராணுவத்தினருடன் பேச வேண்டிய அவசியமில்லை. அரசியல்வாதிகளான நாம் அது குறித்து பேச்சு நடத்துவோம் என்றும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

இச்சந்திப்பில் பங்கேற்ற சிறிலங்கா இராணுவ தளபதி பொன்சேகா தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் மூன்றாவது சக்தி ஒன்று தலையிட்டு வன்முறையில் ஈடுபட்டதால் இராணுவம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நேரிட்டது என்றும் மூன்றாவது சக்திக்கு எதிராக சிறிலங்கா இராணுவம் என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன என்றும் விளக்கியுள்ளார்.

ஆனால் பொன்சேகாவின் இந்தக் கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நிராகரித்தனர்.


puthinam

Print this item

  குடா நாடு முழுவதும் படையினரை 5 மீற்றருக்கு ஒரு இராணுவ வீரர்
Posted by: Vaanampaadi - 12-22-2005, 11:25 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

குடா நாடு முழுவதும் படையினரை 5 மீற்றருக்கு ஒரு இராணுவ வீரர் என்ற வீதத்தில் நிறுத்த படைத் தலைமை முடிவு
Written by Paandiyan Thursday, 22 December 2005

யாழ். மாவட்டத்தின் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரங் கள் தெரிவிக்கின்றன. அத்துடன் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் பேரில் இம் மாதம் 27ம் நாள் முதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் இரட்டிப்பாக்கப் படவுள்ளதாகவும், அடிக்கடி மோதல்கள் முறுகல்கள் இடம் பெறும் பகுதிகளில் ஐந்து மீற்றருக்கு ஒரு படையினன் என்ற ரீதியில் குடாநாட்டில் படையினரை நிறுத்த உள்ளதாகவும் அவ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை சுற்றுக் காவல் நடவடிக்கைகளும் நாள் முழுவதும் நடைபெறவுள்ளது. படையினரின் நடவடிக்கைகளை கவனிக்கவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மேற்;பார்வை குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பும் மேற்;கொள்ளப்படவுள்ளது. படையினரின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காவல்த் துறையினரினதும் ஒத்துழைப்பும் பெறப்படவிருக்கிறது. தேவை ஏற்படும் பட்சத்தில் வான் பரப்பு கண்காணிப்புக்களும். அதிக அளவான கடல் ரோந்து நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்படவுள்ளன.

வீடுகள். கடைகள், பொது இடங்கள் அனைத்திலும் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன் ஊர்திச் சோதனைகளும் அதிகரிக்கப்படவுள்ளன. படையினர் மீது தாக்குதல் மேற்க்கொள்ளப்படும் போது பதில் தாக்குதல் நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவங்கள் நடைபெறும் பகுதிகளில் பொது மக்கள் பெருமளவில் திரண்டு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

படையினர் தமது தேவைக்கு ஏற்ப வீதிப் போக்குவரத்து மற்றும் மற்றும் வீதிச் சோதனை நடவடிக்கைகளை மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், குடாநாட்டில் முகாம்களின் பாதுகாப்பை உறுதி செய்ய படையினரின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் எனவும் அவ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Sankathi

Print this item

  நல்லூரில் படையினர் மீது கைக்குண்டு வீச்சு: ஒருவர் பலி
Posted by: Vaanampaadi - 12-22-2005, 11:22 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

நல்லூரில் படையினர் மீது கைக்குண்டு வீச்சு: ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்
Written by Paandiyan Thursday, 22 December 2005

நல்லூர் வீராமாகாளி அம்மன் கோவிலடியில் வைத்து ஸ்ரீலங்கா படையினர் மீது அடை யாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட கைக்குண்டுத் தாக்குதலில் ஒரு படையினன் கொல்லப்பட்டதாகவும் மற்றொருவர் படுகாயமடைந்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (மேலதிக விபரம் இணைப்பு)

இன்று நண்பகல் 12 மணிக்கு இடம் பெற்ற கைக்குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து இராண்டு இராணுவ வீரார்கள் படுகாயமுற்ற நிலையில் பலாலி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களில் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அரசடிச் சந்தி, கந்தர்மடம் சந்தி, கோவில் வீதி ஆகிய பகுதிகளில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர், பொது மக்கள் வாழும் பகுதிகள் மற்றும் வீதிகளை நோக்கி சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகத்தை மேற் கொண்டனர்.

இப் பகுதியில் தற்போதும் பொது மக்கள் இராணுவத்தினருடைய தாக்குதல்களுக்கு உள்ளாகிக் கொண்டு இருக்கின்றனர். இதன் காரணமாக பலத்த பதட்டமான நிலைமை அங்கு காணப்படுகினறது.

உந்துருளியில் வந்தவர்களே இத்தாக்குதலை நடாத்தியுள்ளனர்.

Sankathi

Print this item

  நடுக்கடலில் சுங்கத்துறைபோலீஸ் சேஸ்
Posted by: Vaanampaadi - 12-22-2005, 11:15 AM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

நடுக்கடலில் சுங்கத்துறைபோலீஸ் சேஸ், ரூ. 61 கோடி ஹெராயின் பறிமுதல்
டிசம்பர் 22, 2005

தூத்துக்குடி:



தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு படகு மூலம் ரூ. 61 கோடி மதிப்புள்ள ஹெராயினை கடத்த முயன்ற கும்பலை சுங்கத்துறை மற்றும் போலீஸார் படகில் துரத்திச் சென்று நடுக்கடலில் வைத்து மடக்கிப் பிடித்தனர்.

தூத்துக்குடியிலிருந்து படகுகள் மூலம் ஹெராயின் கடத்தப்பட்டு வருகிறது. இந் நிலையில் ஒரு கும்பல் கடத்தலுக்குத் தயாராவது குறித்து சுங்கத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸார் உதவியுடன் சுங்கத் துறையினர் மாறு வேடத்தில் கடலோர கிராமத்தில் பதுங்கியிருந்தனர்.

அப்போது அதி நவீன படகு ஒன்றில் 3 பேர் கடலுக்குள் கிளம்பிச் சென்றனர். இதையடுத்து சுங்கத்துறை மற்றும் காவல்துறையினர் இன்னொரு படகில் அந்தப் படகைத் துரத்தினர். இவர்களைப் பார்த்ததும் கடத்தல்காரர்கள் அதிவேகமாக சென்றனர்.

ஆனால் நடுக்கடலில் வைத்து கடத்தல் படகை அதிகாரிகள் வளைத்துப் பிடித்தனர். அப்போது ஒருவர் கடலில் குதித்துத் தப்பி விட்டார். மற்ற 2 பேரையும் அதிகாரிகள் மடக்கினர். அந்தப் படகில் ரூ. 61 கோடி மதிப்புள்ள 61 கிலோ ஹெராயின் இருந்தது.

தப்பியவரைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Thatstamil

Print this item

  கடற்படையினர், விடுதலைபுலிகள், சிறைபிடிக்கப்பட்டனர்
Posted by: Vaanampaadi - 12-22-2005, 11:14 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - Replies (1)

Time is GMT + 8 hours
Posted: 22 December 2005 1632 hrs


<b>Sri Lanka's sea battle ends with rebels, sailors captured</b>

COLOMBO : Sri Lanka's navy and Tamil Tigers have fought a sea battle off the island's northwestern coast with 10 people being seized, the navy said.

Tiger rebels attacked two naval boats off the town of Mannar, sparking an exchange of gunfire, navy spokesman Jayantha Perera said.

"They have taken away three of our sailors and we presume they have been killed," Perera said adding that a fourth sailor had escaped.

"We have captured seven Tigers during the battle," he said.

There was no immediate comment from the Tamil Tigers on whether they had killed the three sailors.

The latest battle came one day after at least two soldiers were killed in Sri Lanka's embattled northern peninsula of Jaffna and security forces recovered three land mines meant for troops.

At least 38 people have been killed in northeast Sri Lanka this month alone, heightening fears about the future of an already fragile ceasefire between government forces and Tamil Tigers.

Thursday's battle is one in a series of skirmishes at sea despite the truce which has been in place since February 2002.

In March 2003, the navy sank a rebel boat with 11 guerrillas onboard. Just two months into the truce, the navy and the Tigers clashed off the island's east, leaving one sailor and several rebels dead.

Some 23 Chinese crew members were killed when suspected Tiger rebels sank a fishing trawler off the island's northeastern coast in March 2003.

- AFP/ir

http://www.channelnewsasia.com/stories/afp.../184936/1/.html


<b>Sri Lanka sea battle ends with rebels, sailors captured</b>
http://www.bakutoday.net/afps/english/shar...0.oi4pinln.html

<b>Sri Lanka sea battle ends with rebels, sailors captured</b>
http://www.abc.net.au/news/newsitems/20051...12/s1536715.htm

<b>Sri Lanka Navy, Tigers in gun battle</b>
http://english.peopledaily.com.cn/200512/2...222_230079.html

<b>Sri Lanka rebels, navy in sea clash</b>
http://www.radioaustralia.net.au/news/stor...es/s1536744.htm

Print this item

  கடற்படையின் இரு படகுகள் சேதம் ஒன்றைக் காணவில்லை
Posted by: Sriramanan - 12-22-2005, 08:11 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (6)

கடற்படையினர் மீது தாக்குதல்: இரு படகுகள் சேதம் - மற்றொரு படகுடன் 3 கடற்படையினரைக் காணவில்லை
றுசவைவநn டில Pயனெயசய ஏயnnலையn வுhரசளனயலஇ 22 னுநஉநஅடிநச 2005

மன்னார் கடற்பரப்பில் வைத்து இன்று காலை 7.30 மணியளவில் சிறீலங்கா கடற்படை யினரின் படகுகள் மீது திடீரெனத் தோன்றிய நான்கு மர்மப்படகுகள் தாக்குதலை நடாத்தியுள்ளன. இதனால் சிறீலங்கா கடற்படையின் இரு படகுகள் சேதமடைந்து ள்ளதுடன், மூன்று கடற்படையினருடன் மற்றொரு படகு காணாமல் போயுள்ளது.

இத்தாக்குதலின் போது படுகாயமடைந்த சஞ்சீவ என்ற கடற்படையினன் மன்னார் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இத்தாக்குதலைத் தொடர்ந்து மன்னார் நகரத்தை சுற்றிவளைத்துள்ள சிறீலங்கா காவல்துறையினரும்இ இராணுவத்தினரும் கடற்கரையில் நின்றிருந்த

மக்களை வெளியேற வேண்டாமென்றும் கடைகளை மூடுமாறும் கூறி மிரட்டுகின்றனர். அதனால் மன்னார் நகரப்பகுதியெங்கும் வெறிச்சோடியுள்ளது. மொத்த மன்னார் நகரமுமே பதட்டத்திலும் அச்சத்திலும் மூழ்கியுள்ளது.

இந்த நிலைமைகள் தொடர்பில் படையினருடன் மன்னார் ஆயர் சந்திப்பொன்றை மேற்கொண்டு கலந்துரையாடிய பின்னர் நிலைமைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.

ஆனாலும் கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.


சங்கதி

Print this item