Yarl Forum
கடற்படையின் இரு படகுகள் சேதம் ஒன்றைக் காணவில்லை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: கடற்படையின் இரு படகுகள் சேதம் ஒன்றைக் காணவில்லை (/showthread.php?tid=1890)



கடற்படையின் இரு படகுகள் சேதம் ஒன்றைக் காணவில்லை - Sriramanan - 12-22-2005

கடற்படையினர் மீது தாக்குதல்: இரு படகுகள் சேதம் - மற்றொரு படகுடன் 3 கடற்படையினரைக் காணவில்லை
றுசவைவநn டில Pயனெயசய ஏயnnலையn வுhரசளனயலஇ 22 னுநஉநஅடிநச 2005

மன்னார் கடற்பரப்பில் வைத்து இன்று காலை 7.30 மணியளவில் சிறீலங்கா கடற்படை யினரின் படகுகள் மீது திடீரெனத் தோன்றிய நான்கு மர்மப்படகுகள் தாக்குதலை நடாத்தியுள்ளன. இதனால் சிறீலங்கா கடற்படையின் இரு படகுகள் சேதமடைந்து ள்ளதுடன், மூன்று கடற்படையினருடன் மற்றொரு படகு காணாமல் போயுள்ளது.

இத்தாக்குதலின் போது படுகாயமடைந்த சஞ்சீவ என்ற கடற்படையினன் மன்னார் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இத்தாக்குதலைத் தொடர்ந்து மன்னார் நகரத்தை சுற்றிவளைத்துள்ள சிறீலங்கா காவல்துறையினரும்இ இராணுவத்தினரும் கடற்கரையில் நின்றிருந்த

மக்களை வெளியேற வேண்டாமென்றும் கடைகளை மூடுமாறும் கூறி மிரட்டுகின்றனர். அதனால் மன்னார் நகரப்பகுதியெங்கும் வெறிச்சோடியுள்ளது. மொத்த மன்னார் நகரமுமே பதட்டத்திலும் அச்சத்திலும் மூழ்கியுள்ளது.

இந்த நிலைமைகள் தொடர்பில் படையினருடன் மன்னார் ஆயர் சந்திப்பொன்றை மேற்கொண்டு கலந்துரையாடிய பின்னர் நிலைமைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.

ஆனாலும் கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.


சங்கதி


Re: கடற்படையின் இரு படகுகள் சேதம் ஒன்றைக் காணவில்லை - Danklas - 12-22-2005

Sriramanan Wrote:மூன்று கடற்படையினருடன் மற்றொரு படகு காணாமல் போயுள்ளது.

இம்மட்டும் அறுத்து உப்பு கண்டம் போட்டிருப்பாங்கள்,,,, <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry


- sinnappu - 12-22-2005

<b>எடயப்பு எங்கையடாப்பு இவ்வளவு நாளும் போனனீ
நான் நினைச்சன்.......</b>

Cry Cry Cry Cry Cry Cry Cry


(அழுறது போல நடிப்பம் நம்பிறானோ எண்டு பாப்பம் )


- sri - 12-22-2005

படகு முருங்கன் கடற்பரப்பில் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.


- தூயவன் - 12-22-2005

sinnappu Wrote:<b>எடயப்பு எங்கையடாப்பு இவ்வளவு நாளும் போனனீ
நான் நினைச்சன்.......</b>

Cry Cry Cry Cry Cry Cry Cry


(அழுறது போல நடிப்பம் நம்பிறானோ எண்டு பாப்பம் )

ஏனப்பு
இரண்டு பேருக்கும் ஏதும் ஊடலோ? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- நர்மதா - 12-22-2005

மன்னார் கடலில் 3 சிறிலங்கா படையினர் மூழ்கினர்: விடுதலைப் புலிகள் விளக்கம்

மன்னார் கடலில் 3 சிறிலங்கா கடற்படையினர் நீரில் மூழ்கி மரணமடைந்ததாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.


இது தொடர்பாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவுக்கு விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் அனுப்பியுள்ள கடிதம்:

மன்னார் கடலில் 22ஆம் நாள் காலை நடைபெற்ற சம்பவத்தை விளக்குவதற்காக இந்தக் கடிதத்தை நாம் அனுப்புகிறோம்.

சிறிலங்கா கடற்படையினரது தாக்குதலுக்குள்ளான எமது போராளிகள் தப்பி வந்தடைவதில் ஏற்பட்ட தாமதத்தால் தங்களுக்கு உடனடியாக முழுமையான தகவல்களை உரிய நேரத்தில் தர இயலவில்லை.

மன்னார் கடற்பிரதேசத்தில் பயணம் செய்து கொண்டிருந்த எமது 3 படகுகளை சிறிலங்கா கடற்படையினரின் படகுகள் இடைமறித்துத் தாக்குதல் நடத்தத் தொடங்கின. தற்காப்புக்காக எமது போராளிகளும் திருப்பித் தாக்குதல் நடத்தனர்.

கடற்படையினர் படகு பின்வாங்கிச் சென்ற போது ஒரு கடற்படை படகு பின்னால் நிற்பதையும் எதுவித அசைவுகளற்று அது இருப்பதையும் எமது போராளிகள் அவதானித்தனர். அந்தப் படகை எமது போராளிகள் பரிசோதித்ததில் கடும் சேதமடைந்து மூழ்கிக் கொண்டிருந்த அந்த படகில் 2 கடற்படையினர் இறந்து கிடந்தனர். கடும் காயங்களுடன் கடற்படையைச் சேர்ந்த ஒருவர் படகில் இருந்தார். மூழ்கிய படகையும் இறந்த இரு கடற்படையிரையும் கைவிட்டுவிட்டு உயிருக்குப் போராடிய கடற்படையைச் சேர்ந்தவரை காப்பாற்றுவதற்காக கடற்படையின் தாக்குதலுக்குள்ளாகி மிக மோசமாக சேதமடைந்திருந்த எமது படகில் ஏற்றினர்.

இருந்த போதும் எமது படகிலும் கடல் நீர் உள்புகுந்து படுகாயமடைந்த வீரருடன் மெதுவாக எமது படகும் மூழ்கத் தொடங்கியது.

இதையடுத்து எமது போராளிகள்இ காயமடைந்த சக போராளியுடன் கடலில் நீந்தி நேற்று மாலையில்தான் கரை சேர்ந்தனர்.

கரை சேர்ந்த எமது உறுப்பினர்களிடம் நாம் கேட்டறிந்த தகவல்கள் இவை. அதற்குள்ளாக சிறிலங்கா அரசாங்கம்இ கண்காணிப்புக்குழுவுக்கும் ஊடகங்களுக்கும் விடுதலைப் புலிகள் மூன்று கடற்படையினரை கடத்திச் சென்றதாக செய்தி பரப்பியுள்ளனர்.

மூன்று கடற்படையினரும் கடற்படை படகுடன் கடலில் மூழ்கிவிட்டனர் என்பதை எமது போராளிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சூழலில் முன்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைப்பாடுகளின் அடிப்படையில் கடலிலும் நிலத்திலும் எமது உறுப்பினர்களின் பயண ஒழுங்குகளுக்கான ஏற்பாடுகளை உரிய முறையில் செய்ய வேண்டும் என்று நாம் மீண்டும் வேண்டிக்கொள்கிறோம்.

கடலில் செல்லும் எமது போராளிகள் தொடர்ந்து தற்காப்புக்கான ஆயுதங்களோடு பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எமது வேண்டுகோளுக்கமைய எதிர்கால பயண ஒழுங்குகள் தொடர்பில் உத்தியோகப்பூர்வமான பதில் அவசியமாகிறது. இதுவிடயத்தில் விரைந்து உத்தியோகப்பூர்வமான ஒழுங்குகளை மேற்கொள்ளுதல் மூலம் தற்போதைய சம்பவங்கள் இனி நடைபெறாது தவிர்க்க முடியும் என்று தமிழ்ச்செல்வன் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

புதினம்


தற்காப்புக்காக கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் - நர்மதா - 12-22-2005

தற்காப்புக்காக கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் மூன்று சிறிலங்கா கடற்படையினர் பலி: தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
சிறிலங்கா கடற்படையினர் மன்னார் கடலில் பயணித்துக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் படகுகள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து தற்பாதுகாப்புக்காக மேற்கொண்ட தாக்குதலில் மூன்று கடற்படையினர் உயிரிழந்ததாகவும் அவர்களில் ஒரு கடற்படைச் சிப்பாயை உயிருடன் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவுக்கு அறிவித்துள்னர். விடுதலைப்புலிகள் மூன்று கடற்படையினரைக் கடத்தி விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை மறுத்திருக்கும் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் முழு விபரம் வருமாறு:-

கிளிநொச்சி
டிசம்பர் 22 2005

திரு. ஹக்ரப் கொக்லன்ட்
கண்காணிப்புக்குழுத் தலைவர்

அன்புள்ள திரு.கொக்லன்ட்

விடயம்: மன்னார் கடலில் இடம்பெற்ற சம்பவம்
டிசம்பர் 22 2005 அதிகாலையில் மன்னார் கடலில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக முழுமையான விபரங்களை வழங்குவதற்காக இக்கடிதத்தினைத் தங்களுக்கு எழுதுகின்றேன்.

சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளான எமது படகுகள் தாமதமாகவே கரையை வந்தடைந்தாலும் இத்தாக்குதலில் உயிர் தப்பிய எமது அங்கத்தவர்களிடமிருந்து முழுமையான விபரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்ததாலும் எம்மால் உரிய நேரத்தில் இச்சம்பவம் தொடர்பான தகவலைத் தரமுடியாமற் போய்விட்டது.

எமது மூன்று படகுகள் மன்னார் கடலில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் அப்படகுத் தொகுதியினை வழி மறித்த சிறிலங்கா கடற்படை அதன்மீது தாக்குதலை ஆரம்பித்தது. இதனால் தற்காப்புக்காக எமது போராளிகள் திரும்பித் தாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடற்படைப் படகுகள் பின்வாங்கிச் சென்றபோது ஒரு படகு தரித்து நிற்பதை எமது போராளிகள் அவதானித்தார்கள். அப்படகு நகராமல் நின்றமையினால் அப்படகை அண்மித்த எமது போராளிகள் அப்படகில் ஏற்பட்ட சேதம் காரணமாக அப்படகு கடலில் மூழ்கிக் கொண்டிருந்ததையும் அதில் இரண்டு படையினர் இறந்திருந்ததையும் ஒரு படைவீரர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகிய நிலையிலும் இருப்பதைக் கண்டார்கள்.

மூழ்கிக்கொண்டிருந்த கடற்படையின் படகினையும் அதிலிருந்த சடலங்களையும் கைவிட்டுவிட்டு காயமடைந்த படைவீரரைக் காப்பாற்றுவதற்குத் தீர்மானித்த எமது போராளிகள் ஏற்கனவே கடற்படையின் தாக்குதலால் சேதமடைந்திருந்த எமது படகில் அவரை ஏற்றினார்கள். கடற்படையினரின் தாக்குதலால் கடுமையாகச் சேதமடைந்திருந்த எமது படகில் வேகமாக நீர் புகத்தொடங்கியதுடன் காயமடைந்திருந்த அப்படைவீரருடன் அப்படகு இறுதியில் மூழ்கிப்போனது.

எமது போராளிகள் காயமடைந்திருந்த தம்முடைய போராளி ஒருவருடன் ஒருவாறாக நீந்தி மாலையிலேயே எமது பகுதியினை வந்தடைந்தார்கள். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போதே மேற்குறிப்பிட்ட இத்தகவல்கள் பெறப்பட்டன. இதற்கிடையில் புலிகள் மூன்று கடற்படையினரைக் கடத்தி விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் கண்காணிப்புக்குழுவிற்கும் ஊடகங்களுக்கும் விரைவாக அறிவித்தது. கடற்படையின் படகில் இருந்து மூன்று கடற்படையினரும் கடலில் மூழ்கிவிட்டதை எமது போராளிகள் உறுதிப்படுத்துகின்றனர்.

இது தொடர்பில் முன்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட புரிந்துணர்விற்கு அமைவாக தரையிலும் கடலிலும் எமது அங்கத்தவர்கள் பயணம் செய்வதற்கான ஒழுங்குகளை ஏற்படுத்தித் தரும்படி நாங்கள் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டதை இங்கு குறிப்பிடுவது முக்கியமானதாகும். மேலும் எமது போராளிகள் தற்காப்புக்கான ஆயுதங்களுடன் கடலில் இப்பயணத்தைத் தொடர்ந்தும் மேற்கொள்வார்கள் என்பதையும் எதிர்காலத்தில் பயணத்தினை ஒழுங்குபடுத்துவதற்கான எமது கோரிக்கைக்கு உத்தியோகபூர்வமாக பதிலளிக்கவேண்டியது அவசியம் என்பதையும் தங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கின்றோம். உத்தியோக பூர்வமான ஒழுங்குபடுத்தலை வழங்குவதில் காட்டப்படும் விரைவான நடவடிக்கை இப்படியான சம்பவங்கள் மீள இடம்பெறுவதைத் தவிர்த்துக்கொள்ளும்.

நன்றி

தங்கள் உண்மையுள்ள
சு.ப. தமிழ்ச்செல்வன்
பொறுப்பாளர்
அரசியல்துறை.

நன்றி
லங்காசிறி