12-22-2005, 11:51 AM
அவசரகாலச் சட்டம் என்பது தமிழ் மக்களின் அவமானச் சின்னம்: மனோ கணேசன்
[வியாழக்கிழமை, 22 டிசெம்பர் 2005, 15:58 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]
சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து நீட்டித்து வரும் அவசர கால சட்டமானது தமிழ் மக்களின் அவமானச் சின்னம் என்று மேலக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை மேலக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் இன்று வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்புக்குப் பின்னர் ஊடகவியலளார்களுக்கு அவர் அளித்த நேர்காணல்:
கேள்வி: இன்றைய சந்திப்பு தொடர்பாக?
பதில்: இன்றைய சந்திப்பு காத்திரமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. புதிதாக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பற்றிய பார்வை எப்படியுள்ளது என்பதை தெரிந்துகொள்வதற்காக எமது பயணம் அமைந்திருந்தது.
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உத்தேச பேச்சுவார்த்தையானது தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அடிப்படையாக வைத்து அதன் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தை நடைபெறும் என்பதை தமிழ்ச்செல்வன் எமக்கு தெளிவுபடுத்தியிருந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு தேசிய விடுதலை இயக்கம். வடக்கு - கிழக்கு சார்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று செயற்பட்டுக்கொண்டு இருக்கும் கட்சிகள், இதைத் தவிர வடக்கு - கிழக்குக்கு வெளியே எங்களின் மேலக மக்கள் முன்னணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலைய மக்கள் முன்னணி ஆகிய அனைத்து கட்சிகளும் ஒருசேர செயற்பட்டு சிறிலங்கா நாடாளுமன்றத்திலேயே ஒருபலம் மிக்க அரசியல் பேரம் பேசக்கூடிய அணியாக செயற்படவேண்டும் என்ற அடிப்படையில் இன்றைய கலந்துரையாடல் அமைந்திருந்தது.
எங்களைப் பொறுத்த வரையிலேயே ஏற்கனவே நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் மேலக மக்கள் முன்னணி தமிழ்க் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டுக்கொண்டு இருக்கிறது. பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழர் விரோத சட்டமூலங்களும் செயற்பாடுகளும் நாடாளுமன்றத்திற்குள்ளே முன்னெடுக்கப்படும் போது அதற்கு எதிரான நிலைப்பாடுகளை நாம் எடுத்துள்ளோம் என்பது எமது நேர்மையான வரலாறாக இருந்து இருக்கின்றது.
அதேபோன்று நாடாளுமன்றத்திற்கு வெளியே சிறிலங்கா தலைநகரத்தில் தெருக்களில் இறங்கி தமிழ்த் தேசிய முழக்கத்தை முன்வைப்பதும் தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுப்பதும் நடைமுறையிலேயே செய்து காட்டியுள்ளோம்.
ஆகவே பொதுவான இணக்கப்பாடு ஏற்கனவே உள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரசைப் பொறுத்த வரையிலேயே கடந்த காலங்களிலேயே அவ்வாறான செயற்பாடுகளில் இறங்கவில்லை. அவசர கால சட்டம் போன்ற பல்வேறு சட்டமூலங்கள் வரும்போதெல்லாம் பொதுவான இணக்கப்பாட்டுடன் அவர்கள் செயற்படவில்லை.
இன்றைய சூழ்நிலையிலேல் சமீபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை சந்தித்துப் பேசிய பின்னர் தற்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்துள்ள முழக்கங்களின் அடிப்படையில் எங்கள் அனைவருடனும் இணைந்து செயற்பாடுவார்கள் என எதிர்பார்க்கின்றோம். அதற்கான கோரிக்கையும் விடுக்க விரும்புகிறேன்.
கேள்வி: அவசரகாலச் சட்டம் தொடர்பாக தங்களின் நிலைப்பாடு என்ன?
பதில்: அவசரகாலச் சட்டம் என்பது தமிழ்மக்களின் அவமானச் சின்னம். அச்சட்டத்தின் அடிப்படையில் வரக்கூடிய பலத்தை வைத்துக்கொண்டுதான் சிங்கள இராணுவமும் காவல்துறையினரும் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.
வடக்கு - கிழக்கு தமிழர் தாயகத்திலேயே நடைபெறக்கூடிய கள நிலைமைகள் வேறு. வடக்கு - கிழக்கு வெளியே சிறிலங்காவின் தலைநகரப் பகுதியிலே எங்களது மேலகப் பகுதிகளிலே வாழக்கூடிய தமிழ் மக்களை இந்த அவசரகாலச் சட்டத்தை வைத்துக் கொண்டுதான் சிறிலங்கா காவல்துறையினர், இராணுவத்தினர் பல்வேறு கெடுபிடிகளுக்கும் தொந்தரவுகளுக்கும் சர்சைகளுக்கும் உள்ளாக்கிக்கொண்டு இருக்கின்றார்கள்.
வீடு, வீடாக தேடுதல் நடத்தி எந்தவித குற்றச் செயல்களும் செய்யாத தமிழ் மக்களை கைது செய்வது சோதனை செய்து காவல் நிலையங்களில் அடைத்து வைப்பது தனிப்பட்ட குடும்ப விவரங்களைக் கூட எழுத்து மூலமாக பதிவு செய்து தரவேண்டும் என்று பல்வேறு இன்னல்களுக்கு தமிழ் மக்கள் முகம் கொடுத்து வருகின்றனர்.
பல சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்திற்கு எதிராக நான் குரல் எழுப்பியுள்ளேன்.
அடிப்படையிலேயே சிறிலங்கா இராணுவம், காவல்துறை என்று இருந்தாலும் அது பலமுறை சிங்கள இராணுவ காவல்துறையாக செயற்பட்டு வருகிறது. சிங்கள இராணுவத்தை எடுத்துக்கொண்டால் இது 99 வீதத்திற்கு மேலாக சிங்கள மயப்படுத்தப்பட்ட இராணுவமாகவுள்ளது.
மருந்துக்கு கூட தமிழர்கள் சிறிலங்கா படையில் பணியில் இல்லாததால் தமக்கு கிடைக்கின்ற அதிகாரங்களை வைத்துக்கொண்டு சிங்கள இராணுவம், காவல்துறை தமிழ்மக்களை அடக்க ஒடுக்கிவருகிறது.
கேள்வி: இதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படுகிறதா?
பதில்: நாடாளுமன்றத்திற்குள்ளேயும் வெளியேயும் இதற்கு எதிரான நடவடிக்கை எடுத்துக்கொண்டு இருக்கின்றறோம். சர்வதேச சமூகங்களுக்கும் அவசரகாலச் சட்டம் தொடர்பாக எடுத்துக் கூறியுள்ளோம்.
எதிர்காலத்தில் அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து அவசரகாலச் சட்டத்திற்கு எதிராக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு திட்டங்களை தீட்டிவருகிறோம்.
கேள்வி: ஆறுமுகம் தொண்டமான் தங்களுடன் இணைந்து செயற்பட தொடர்பு கொண்டாரா?
பதில்: ஆறுமுகம் தொண்டமான் என்னிடம் இதுவரை பேசவில்லை. அவர்களது கட்சியைச் சேர்ந்த சிலர் எமது கட்சியின் சிலருடன் தொடர்பு கொண்டு இருக்கிறார்கள். அனைத்து கட்சிகளும் ஒன்று இணைந்து செய்ற்படவேண்டுமென்ற சில நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன. காத்திரமான எந்தச் செயற்பாடுகளும் நடைபெறவில்லை.
எம்மைப் பொறுத்த வரையில் அரசியல் ரீதியாக இணக்கப்பாட்டுடன் செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றோம்.
ஆறுமுகம் தொண்டமானின் கட்சிதான் பழைய நிலைப்பாடுகளை மாற்றி புதிய நிலைப்பாட்டுக்கு வரவேண்டும்.
கேள்வி: இதில் ஏதாவது அரசியல் சந்தர்ப்பவாதம் உள்ளது எனக் கருதுகிறீர்களா?
பதில்: இக்கேள்விக்கான பதில் பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும். ஆறுமுகம் தொண்டமான் உறுதியளித்த படி அவரும் அவரது கட்சியும் விசுவாசமாக தமிழ்த் தேசிய சிந்தனையுடன் செயற்படுமா என்பதை காலம் காட்டும். பொறுத்திருந்து பாருங்கள்.
Puthinam

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>