12-22-2005, 11:22 AM
நல்லூரில் படையினர் மீது கைக்குண்டு வீச்சு: ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்
Written by Paandiyan Thursday, 22 December 2005
நல்லூர் வீராமாகாளி அம்மன் கோவிலடியில் வைத்து ஸ்ரீலங்கா படையினர் மீது அடை யாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட கைக்குண்டுத் தாக்குதலில் ஒரு படையினன் கொல்லப்பட்டதாகவும் மற்றொருவர் படுகாயமடைந்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (மேலதிக விபரம் இணைப்பு)
இன்று நண்பகல் 12 மணிக்கு இடம் பெற்ற கைக்குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து இராண்டு இராணுவ வீரார்கள் படுகாயமுற்ற நிலையில் பலாலி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களில் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அரசடிச் சந்தி, கந்தர்மடம் சந்தி, கோவில் வீதி ஆகிய பகுதிகளில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர், பொது மக்கள் வாழும் பகுதிகள் மற்றும் வீதிகளை நோக்கி சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகத்தை மேற் கொண்டனர்.
இப் பகுதியில் தற்போதும் பொது மக்கள் இராணுவத்தினருடைய தாக்குதல்களுக்கு உள்ளாகிக் கொண்டு இருக்கின்றனர். இதன் காரணமாக பலத்த பதட்டமான நிலைமை அங்கு காணப்படுகினறது.
உந்துருளியில் வந்தவர்களே இத்தாக்குதலை நடாத்தியுள்ளனர்.
Sankathi

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>