| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 449 online users. » 0 Member(s) | 446 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,309
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,635
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,060
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,463
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,482
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,029
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| வணக்கம் பிள்ளையள். |
|
Posted by: ஆறுமுகம் - 12-23-2005, 06:52 AM - Forum: அறிமுகம்
- Replies (24)
|
 |
வணக்கம் பிள்ளையள் நான் ஆறுமுகம்.!
உங்களோட சேர ஆர்வமாய் வந்திருக்கிறன்.
வேகமாய் போய்க்கொண்டிருக்கிற உங்களுக்கு நான் ஒரு வேகத்தடை மாதிரித்தான்.
எண்டாலும் என்னையும் சேத்துக்கொள்ளுங்கோ.!
|
|
|
| எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம் |
|
Posted by: Snegethy - 12-23-2005, 05:23 AM - Forum: கதைகள்/நாடகங்கள்
- Replies (28)
|
 |
<span style='color:darkred'><b>எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம்</b>
-சினேகிதி-
[size=15]அன்பான தன் சிறிய குடும்பத்துடன் வாழ்ந்தவள் ஆதிரை.சின்ன வயது முதலே படிப்படியாக பல வெற்றிகளைக் கல்வியில் அடைந்து மிகுந்த புகழுடன் இருந்தாள்.இனப்பிரச்சனையால் சொந்த ஊரை விட்டு நீங்கும் துன்பத்தை ஆதிரை குடும்பமும் ஏற்க வேண்டியதாயிற்று.கொழும்புக்கு வந்து வெள்ளவத்தையில் குடியேறினார்கள்.
கொழும்புக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.ஆதிரை வயதுக்கு வந்துவிட்டபிறகு அவளையும் தங்கை சுவேனாயையும் வளர்க்கப் பெற்றவள் பாடுபட வேண்டியதாயிற்று. வாரத்துக்கு ஒருமுறை தந்தை மூர்த்தி தொலைபேசியில் கதைப்பார். இந்தப்பிள்ளைகள் இருவரும் தகப்பனோடு முழுதாக இரண்டு வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருப்பார்களோ என்னவோ... இருந்தாலும் மூர்த்திக்கு இவர்கள் மேல் கொள்ளைப்பிரியம்.ஒருநாள் கதைக்கும்போது கதையோடு கதையாக தாய் சொன்னா .. என்னால் இனிம இதுகளோட தனியா இருக்க முடியாது எங்களைக் கெதியாக் கூப்பிடுற அலுவலைப் பாருங்கோ".
"அம்மா O/L பரீட்சைக்கு இன்னும் நான்கைந்து மாதங்கள் தான் இருக்கிறது அதுக்குள்ள சுதனும் அவன்ர வாலுகளும் எனக்குப் பின்னால நடுகலும் வாறாங்களம்மா இனிம நான் அந்த ரியூசனுக்குப் போகமாட்டன்."
சரிடி அதுக்காக ரியூசனுக்குப் போகாம வீட்டில இருந்தா நீ புத்தகத்தையே திறக்கமாட்டாய்.ஏதோ உன்ர இஷ்டம்.அப்பா கதைச்சவர் இன்னும் ஆறு மாதத்தில எங்களைக் கூப்பிடுவராம்.
இப்ப ஆர் அங்க போகவேணும் எண்டு கேட்டது?? நான் வரமாட்டன் நீங்களும் தங்கச்சியும் வேணுமெண்டால் போங்கோ.நான் அத்தையோட இங்கையே இருக்கிறன்.
ஆதிரைன்ர கூச்சலை அங்க யாரும் செவிமடுப்பதாயில்லை.தூதரகம் சென்று விஸாவும் எடுத்தாச்சு.ஒருநாள் வகுப்பு முடிந்து வெளியே வந்த ஆதிரையிடம் சுதன் போய்ச் சொன்னான். "ஆதிரை நான் உனக்காகத்தான் இவ்வளவு நேரமும் நிண்டனான்."அவள் அவனைக் கடந்து போக "நான் இனிம உன்னை இப்பிடித் தொந்தரவு செய்யமாட்டன் என்று சொல்லிட்டுப் போகத்தான் வந்தனான் என்ர சித்தப்பா கனடாவில இருக்கிறார் நான் அவரட்டைப் போகப்போறன்..நான் உன்னட்ட ஒன்று சொல்லோணும் உனக்கே தெரியும் நான் உன் பின்னால எவ்வளவு நாள் வந்தனான் எண்டு.நான் ஒண்டும் அந்த நகுல் மாதிரி சிரிச்சு சிரிச்சுப் பேசி பொண்ணுங்களை ஏமாத்திறவன் இல்லை.நான் உன்னை விரும்பிறன்.எனக்குத் தெரியும் உனக்கு இதெல்லாம் பிடிக்காதெண்டு இருந்தாலும் எனக்கு இனிமேல் உன்னைப் பார்க்கிற சந்தர்ப்பம் கிடைக்குமோ கிடைக்காதோ..அதான் நான் என்ர ஆசையைச் சொல்லிட்டன்.நல்லாத் தேர்வெழுத என் வாழ்த்துக்கள்." என்று சொல்லிட்டு அவளைத் தாண்டி சென்றான்.அவனுக்குத் தெரியும் எப்படியும் என் காதலனே நீ போய் வா என்று ஆதிரை தன்னை வழியனுப்பப் போவதில்லை என அதான் திரும்பிப்பாரமல் போய்க்கொண்டிருந்தான்.
ஆதிரை கனடாவுக்குப் போய் எங்களை எல்லாம் மறந்திடுவாய் என்ன? என்ற கேள்விதான் ஆதிரையின் வகுப்பில் அதிகம் கேட்கப்படுவத.ஆதிரையின் நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து Autograph ல் தாம் சேர்ந்திருந்து மகிழ்ந்த தருணங்களை எழுத்தில் வடித்துக் கொடுத்தார்கள்.ஒராள் எழுதினதுக்கு மற்றாள் நக்கலாக இன்னொரு வரி சேர்ப்பது இப்படிக் கடைசி நாள் கழிந்தது. ஆசிரியர்களின் ஆசீர்வாதத்துடனும் நண்பர்களின் பரிசுப்பொருட்களுடனும் ஆதிரை வீடு வந்து சேர்ந்தாள்.
கனடா செல்ல முதல்நாள் பரீட்சை முடிவுகளும் வந்தன.உறவினர்களுக்குக் கையசைத்தபடியே விடைபெற்று கனடாவுக்கு வந்து சேர்ந்தார்கள். மூர்த்தியும் நண்பர் கோபாலுவும் இவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பிரிந்தவர்கள் கூடினால் என்னவென்று சொல்லவும் வேண்டுமா.கனடா அழகை ரசித்தபடி வீடுவந்து சேர்ந்தார்கள்.
அடுத்த வாரமே பாடசாலையில் சேர்ந்தார்கள்.சுவேனா சின்னப்பிள்ளை பாடசாலைச் சூழலோடு தன்னை சுலபமாக இணைத்துக் கொண்டாள். ஆதிரைக்கு தான் முதல்நாள் கணித வகுப்பே சங்கடமாகிப் போய்விட்டது.ஆசிரியர் போட்ட கணக்கைத் தீர்க்க முடியாமல் மாணவர் சிலர் போராட ஆதிரை கையை உயர்த்திவிட்டு பேசாமல் இருந்தாள் ஆசிரியர் அவளைக் கவனிக்கவில்லை.ஆதிரை சொல்ல நினைத்த விடையை பின்னாலிருந்த யாரோ சொன்னார்கள்.இந்தக்குரல் எனக்குப் பரிச்சயமானதாயிற்றே..திரும்பிப் பார்க்க நினைத்தும் முடியவில்லை.
நேரஅட்டவணையின் படி ஒருமணி நேர இடைவேளை என்றிருக்கே என்ன செய்யலாம் என்று நினைத்தபடியே ஆசிரியரிடம் நூலகம் எங்கே என்று கேட்டறிந்தபடியே அங்கு போனவளை "ஆதிரை நான் உன்னை நான் மீண்டும் அதுவும் என்வகுப்பில் காண்பேன் என்று நினைச்சுகூடப் பார்க்கவில்லை" என்ற சுதனின் அழகு தமிழ் வாரத்தைகள் ஒருகணம் தடுமாற வைத்தது.வெள்ளவத்தையில் இருக்கும்போது சுதனோடு கதைப்பதில்லை இப்பமட்டும் என்னவென்று கதைப்பது எண்றெண்ணியபடியே சிரித்து விட்டுப்போனாள்.
கோபால் கெட்டிக்காரர் சுதன் வந்த புதிதில் அவனுடைய முகத்தை வைத்தே எல்லா விடயங்களையும் கேட்டறிந்திருந்தார்.இன்று பாடசாலையால் வந்த சுதன் தான் ஆதிரையை மீண்டும் இங்கே சந்திச்ச விடயத்தைச் சித்தப்பாவிடம் சொன்னான். "டேய் நீ வெள்ளவத்தையில பின்னால திரிஞ்ச மாதிரி இங்கேயும் திரியாத உனக்கு அவளெண்டு இருந்தால் நிச்சயம் நடக்கும்".
அடுத்தவார முடிவில் தன் மனைவி பிள்ளைகள் வந்த சந்தோசத்தைக் கொண்டாட மூர்த்தி தன் நண்பர் கோபாலையும் மற்றும் சிலரையும் இரவு விருந்துக்கு அழைத்திருந்தார்.சாப்பாட்டு மேசையில் உணவுகளை அடுக்கிக்கொண்டிருந்த ஆதிரை தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த சுதனைக் கண்டுவிட்டாள். அருகிலே இல்லாதபோதுதான் அதன் அருமை தெரியுமாம் அதப்போல சுதன் கனடா போனபின் அவனைப் பற்றி ஆதிரை அடிக்கடி நினைத்ததுண்டு.முதல்நாள் பாடசாலையில் அவனோடு கதைக்காததால் அவனும் அதன்பிறகு அவளைக் கண்டும் காணாமல் இருந்து வந்தான்.அதனால் தானோ என்னவோ ஏற்கனவே முளைவிட்டிருந்த காதல் விருட்சம் வேருன்றி நன்றாய் வளர்ந்து விட்டிருந்தது.
சுமையலறையில் அம்மாவிடம் சுதன் வந்திருப்பதை சொன்னாள்.ஓ அந்தப் பிள்ளையே அவன் கோபாலண்ணனோடு வந்தவன்.தாய்க்கு ஏற்கனவே சுதனைப் பற்றித்தெரியும்.இப்போது மகளின் மாற்றங்களையும் கவனித்தவள் கணவனிடம் நடந்த எல்லாவற்றையும் சொன்னாள்.மூர்த்தி தன் குடும்பத்தில் பற்றும் நம்பிக்கையும் கொண்டவர்.கோபாலைக் கூப்பிட்டுக் கதைத்தார்.கோபால் ஆச்சரியத்தை அடக்கிக்கொண்டு "டேய் அவன் என் அண்ணன் பையன் அதோட எனக்கு அவன்ர காதல் எல்லாம் தெரியும் ஆனால் அது உண் பொண்ணு என்று தெரியாமல் போட்டுது..அது கிடக்கட்டும் இப்பபார் இரண்டு பேரும் எங்களை நம்பிச் சொல்லியிருக்கினம் நாங்கள்தான் ஏதாவது செய்யவேணும்".
மூர்த்தி மனைவியிடம் சொல்லிவிட்டு ஆதிரையிடம் போய் "அம்மா ஆதிரை அந்தப்யையன் சுதன் காதல் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான் நீதான் மருந்து குடுக்கவேணும்."
ஆதிரைக்கு தன் காதுகளையே நம்பவே முடியவில்லை கண்களால் நன்றி சொன்னாள்.
நடந்த எதுவுமே தெரியாமல் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த சுதனை ஆதிரை சுவேனாட்டச் சொல்லி கூப்பிட்டாள்.சங்கடத்துடன் வந்தவனுக்கு ஆதிரையைக் கண்டதும் என்ன கதைப்பது என்றே தெரியவில்லை.ஆதிரைதான் மௌனத்தைக் கலைத்தாள். "அப்ப நீங்கள் போட்ட காதல் விண்ணப்பத்திற்கு பதில் எங்கள் வீட்டு முகவரிக்கு வந்திருக்கிறது" என்று ஒரு காகிதத்தைக் கொடுத்தாள்.பிரிச்சுப் பார்த்தால் சம்மதம் என்றிருந்தது.நம்பாமல் நின்றவனுக்கு "டேய் சுதன் நாங்கள் மூன்று பேரும்தான் ஆதிரையை உனக்கு மருந்து கொடுக்க அனுப்பினாங்கள்"என்ற சித்தப்பாவின் குரல் நம்பவைத்ததது.
"இப்ப நீங்கள் இரண்டு பேரும் ஒழுங்காப் படிக்கிறவேலையை பாருங்கோ.பிறகு அம்மா அப்பாவோடு கதைத்து ஐந்தாறு வருடம் கழித்து கல்யாணத்தை நாங்கள் நடத்திவைக்கிறம்."
எல்லோரும் சாப்பிடப்போக ஆதிரையுடன் ஆறுதலாகப் பேசலாம் என்றால் அவள் நழுவப்பார்த்தாள்.எட்டி அவளைப்பிடித்தவன் எவ்வளவு நாள்தான் நானே உன்னை நினைச்சு ஏங்கிக்கொண்டிருக்கிறது...நீ அப்பிடி ஏங்க வேண்டாமோ என்று ....</span>
முதல் காதல் முதல் முத்தம் ....
|
|
|
| ஆண்களிடம் இருந்து அதிகாரத்தைப் பறித்த பெண்கள் |
|
Posted by: SUNDHAL - 12-23-2005, 04:41 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (30)
|
 |
ஆண்களிடம் இருந்து அதிகாரத்தைப் பறித்த பெண்கள்
குரோஷியா நாட்டில் ஆண்கள் சமுதாயத்துக்காக எதுவும் செய்யாததைப் பார்த்த பெண்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான இயக்கத்தில் ஈடுபட்டனர்.
ஊராட்சித் தேர்தலில் அவர்கள் மொத்தம் உள்ள 7 இடங்களுக்கும் பெண்களே போட்டியிட்டு வெற்றி பெற்றனர். ஆண்களை
தோற்கடித்தனர்."சோம்பேறி ஆண்கள் இனி ஆட்சி அதிகாரத்துக்கு வரமுடியாது. அவர்களை படுக்கை அறைக்கு மட்டும் அனுமதிப்போம். அரசியலில் அனுமதிக்கமாட்டோம்'' என்று பெண்கள் கூறினர்.
அனைத்துப் பெண்களைக் கொண்ட கிராமிய ஊராட்சி ஏற்கனவே ஊரைச் சுத்தப்படுத்தி அலங்காரம் செய்யத் தொடங்கி விட்டது.
:evil: :evil: :evil: :evil: :evil:
|
|
|
| நடிகை சினேகா தற்கொலை மிரட்டல் |
|
Posted by: SUNDHAL - 12-23-2005, 04:39 AM - Forum: சினிமா
- Replies (3)
|
 |
நடிகை சினேகா - நாகாரவி பற்றிய விவகாரம் இன்னும் ஓயவில்லை.
தற்கொலை முயற்சி
நடிகை சினேகாவுடன் இணைத்து பேசப்பட்ட மலேசிய தொழில் அதிபர், நாகாரவி. இவருக்கும், நடிகை சினேகாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதை சினேகா மறுத்தார்.
இந்த நிலையில் சென்னை வந்த நாகாரவி, தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். தீவிர சிகிச்சைக்குப்பின் அவர் உயிர் பிழைத்தார்.
பேட்டி
தற்கொலைக்கு முயன்றது பற்றியும், சினேகாவுடன் இருந்த தொடர்பு பற்றியும் நாகாரவி பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
சினேகாவை நான் முதன் முதலாக சென்னை விமான நிலையத்தில் சந்தித்தேன். சினேகாவும், அவருடைய அண்ணனும் மலேசியா வந்தபோது அவர்களை அங்குள்ள ஓட்டலில் தங்க வைத்தேன்.
ஓட்டல் பிடிக்கவில்லை என்று சொன்னதால், அவர்களை என் வீட்டுக்கு அழைத்து வந்தேன். என் வீட்டில் இருந்தபோது எல்லா வேலைகளையும் சினேகாவே செய்தார்.
விருந்து
'பாண்டு' என்ற தெலுங்கு படப்பிடிப்பு மலேசியாவில், என் அலுவலகத்துக்கு அருகில் நடந்தது. சினேகாவை நான் என் காரில் கொண்டு போய் விடுவேன்.
கடந்த செப்டம்பர் மாதம் 13-ந் தேதி சினேகாவின் அக்கா டின்னருக்கு அழைத்தார். ஓட்டலுக்கு நான் சென்றேன். அங்கு சினேகா, அவரது அக்கா, நான் என 3 பேர் மட்டுமே இருந்தோம்.
வைர மோதிரம்
அப்போது சினேகாவின் அக்காதான் சினேகாவை திருமணம் செய்து கொள்ளச் சொன்னார். வைர மோதிரம் வாங்குங்க. மோதிரம் மாற்றிக் கொள்ளலாம் என்றார்.
எனது வீட்டில் சினிமா நடிகை என்றால் பிடிக்காது. இருந்தாலும் திருமணத்துக்கு பிறகு நடிக்காமல் இருந்தால் எங்கள் வீட்டில் சம்மதிப்பார்கள் என்றேன்.
தெலுங்கில் 'ராமதாஸ்', தமிழில் 'புதுப்பேட்டை' ஆகிய படங்கள்தான் சினேகாவின் கடைசி படங்கள். எனவே பிரச்சினை இல்லை என்றார்கள். எனவே நானும் சரி என்றேன். அதன் பிறகு சினேகா எனக்கு வைர மோதிரம் அணிவித்தார்.
வருமானவரி சோதனை
சினேகா வீட்டில் வருமான வரி சோதனை நடந்தபோது, நான் அவருக்கு வாங்கிக் கொடுத்த ரூ.8.9 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லசும் மாட்டிக் கொண்டது.
நான் அவருடைய வீட்டுக்கு சென்றபோது, சினேகாவின் தந்தை வருமானவரி அதிகாரிகளிடம் என்னைக் காட்டி, "இவர்தான் எங்கள் மருமகன்" என்று அறிமுகம் செய்தார்.
இந்த ஆண்டு தீபாவளியை கூட நானும் சினேகாவும், அவரது வீட்டில்தான் கொண்டாடினோம். சினேகாவின் பிறந்த நாளையும் சிறப்பாக கொண்டாடினோம்.
அவரது பிறந்த நாளுக்காக எனது கிரடிட் கார்டில் டிரஸ் எடுத்தோம். நகைகள், ஷூக்கள் எல்லாம் வாங்கினோம்.
அப்போது எங்களை நடிகர் அஜீத் பார்த்தார். அவரிடம் என்னை குடும்ப நண்பர் என்று அறிமுகம் செய்தார்.
மிரட்டல்
சினேகா என்னிடம் தற்கொலை மிரட்டல் விடுத்தார். நம் விஷயத்தை வெளியே சொன்னால் என் அறை முழுவதும் உங்கள் பெயரை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்வேன் என்று மிரட்டினார்.
நம்மால் ஒரு பெண்ணின் வாழ்க்கை பாதிக்கக் கூடாது என்று இவ்வளவு நாளும் அமைதியாக இருந்தேன்.
ஆனால் எனக்கும் என்னை வளர்த்து ஆளாக்கிய எனது தாயாருக்கும், என் உறவினர்களுக்கும் தொடர்ந்து அவமானத்தையும், மனக் கஷ்டத்தையும் கொடுப்பது போல சினேகா நடந்ததால்தான் வெளிப்படையாக நான் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது".
இவ்வாறு நாகாரவி கூறினார்.
சினேகா பேட்டி
நாகாரவியின் குற்றச்சாட்டுகள் பற்றி சினேகாவிடம் கேட்டபோது, முதலில் அவர், "பதில் சொல்ல விரும்பவில்லை" என்றார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
"என்னை எந்த அளவுக்கு அவமானப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு நாகாரவி அவமானப்படுத்தி விட்டார். அதனால் எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
இதற்கு மேல் நான் எதுவும் கூற விரும்பவில்லை".
மேற்கண்டவாறு சினேகா கூறினார்.
Thnaks:Thanthi...
|
|
|
| தரிசனம் கிடைக்காதா |
|
Posted by: Snegethy - 12-23-2005, 04:16 AM - Forum: கதைகள்/நாடகங்கள்
- Replies (57)
|
 |
<b>தரிசனம் கிடைக்காதா? </b>
ஓவ்வொரு வருசமும் முத்துமரி அம்மன் கோவில் திருவிழா இருபத்தைந்து நாட்களும் புத்தக விற்பனை நடப்பது வழக்கம்.அவ்வாறே 2000ம் ஆண்டும் புத்தக விற்பனைப் பிரிவுக்கு அருகில் உள்ள இரண்டு பாடசாலைகளிலிருந்தும் மாணவர்கள் அழைக்கப்பட்டு ஒவ்வொரு செயற்திட்டங்கள் வழங்கப்பட்டது.காலை ஆறு மணியிலிருந்து மத்தியானம் இரண்டு மணிவரைக்குமான காசுப்பொறுப்பாளர்கள் சயிந்தினியக்காவும் ராஜேஷண்ணாவும் மற்ற மற்ற பொறுப்புகளுக்குமாக மொத்தமாக எட்டு பேர் இருப்பார்கள்.அதில நான் விற்க வேண்டியது மு.வரதனாரின் புத்தகங்கள் ("தம்பிக்கு" "தங்கைக்கு" அப்பிடிதான் அவருடைய புத்தகங்களின் தலைப்புக்கள் இருந்நதாக ஞாபகம் ).இருபத்தைந்து நாட்கள் சந்திக்கிற இரண்டு பாடசாலை மாணவர்களுக்கும் இடையே நிறைய காதல் பூ பூக்கிறதும் நடக்கிறது.
நான் படிச்ச பள்ளிக்கூடத்தில திடீர் இராணுவ நடவடிக்கை மாதிரி எங்களை எல்லாம் பிறேயருக்கு அனுப்பிட்டு சில ரீச்சர்ஸ்மாரும் மாணவர் தலைவிகளும் சேர்ந்து எங்கட உடமைகள் அத்தனையும் ஆராய்வார்கள்..அதில யாராவது வைத்திருந்த நடிகர்களின்ர படம் லவ் லெற்றர்ஸ் ஏதாவது அகப்பட்டா அதோ கதிதான...அம்மா அப்பா வந்துதான் பிரின்ஸிட்ட போய் அதெல்லாம் வாங்கவேணும் …..அதுமட்டுமா இத்தின cm ல்தான் சட்டை collar இருக்கவேணும் அதில button இருக்கவேணும் சங்கிலி போடக்கூடாது மோதிரம் போடக்கூடாது ஒருநாள் கூட தலை பின்னி றிபன் கட்டாம வந்தி;ட்டா அவளவுதான் வாழைநாரால பின்னிக் கட்டி விடவெண்டே இருக்குது ஒரு குறூப்.இப்பிடியெல்லாம் செய்யிற அக்காமார் தப்பித்தவறி எங்கட அண்ணாமாருக்கு லைன் போடுறதா தெரிஞ்சது அம்புட்டுத்தான் அவங்க காதலுக்குச் சமாதிதான்.நிறைய பாவம் பண்ணிட்டன் போல இருக்கு. .என்னத்தையோ சொல்ல வந்து எங்கயோ போயிட்டன்.
சயிந்தினயக்காவும் எங்களுக்குப் பிடிக்காத ஒரு மாணவ தலைவிதான்.ராஜேஷண்ணாட்ட நாங்கள் ரியுசனுக்குப் போறனாங்கள்.அவருக்கு சயிந்தியக்காவில விருப்பம் அவா நல்ல வடிவு கெட்டிக்காரியும் கூட.அவேன்ர A/L ரியூசன் முடிய இன்னும் கொஞ்சநாள் தான் இருந்தது அதான் அவர் திருவிழாவிலேயே தன்ர காதலைச் சொல்லப் போறன் எண்டு சொல்லிட்டு வைரமுத்ததுவின் கவிதைப் புத்தகம் ஒன்றையும் வாங்கி வைச்சிருந்தவர்.எங்களிட்ட சொன்னவர் நான் சயிந்திட்டச் சொல்லப் போறன் என்று நாங்களும் குட் லக் சொல்லிட்டுச் சாப்பிட போட்டம்.சாப்பிட்டு வந்தால் சயிந்தியக்கா இல்லை ராஜேஷண்ணா தனிய கோபத்தில இருந்தார்.என்னாச்சு எண்டு கேட்டதுதான் தாமதம் சும்மா ஆமிக்காரன் கெலியிலிருந்து நெருப்புப்பொறி பொரிஞ்ச மாதரி வார்த்தைகள் வந்து விழுந்தன ... " பெடியங்கள் அப்பவே சொன்னவங்கள் டேய் சயிந்தியைப் பற்றி உனக்குத் தெரியாது.. வேண்டாம் என்று...நான்தான் நம்பாமால் ...இருந்தாலும் இந்தத்திமிர் கூடாது. பிடிக்கல என்றால் சொல்ல வேண்டியது தானே அத விட்டிட்டு நான் குடுத்த புத்தகம் சொக்லட் இரண்டையும் இங்க இந்தக் கால்வாயில போட்டிட்டுப் போட்டாள்.அழகு அறிவோட சேர்த்து மற்றவையை எப்பிடி நோகடிக்கலாம் என்றும் தெரிஞ்சு வைச்சிருக்கிறா."
நாங்கள் எட்டி கால்வாயைப் பார்த்தா சாமி தீர்த்தம் ஆடிட்டுப் போன மஞ்சள் குங்குமம நீரெல்லாம் வடிஞ்சு வந்து கவிதைப் புத்தகம் நனைஞ்சு சிதைஞ்சு கொண்டிருந்தது ராஜேஷண்ணான்ர மனசைப்போல.
-சினேகிதி-
|
|
|
| டீ குடிச்சா.. புற்றுநோய் ஆபத்து குறையும்...* |
|
Posted by: AJeevan - 12-22-2005, 11:05 PM - Forum: மருத்துவம்
- Replies (10)
|
 |
[size=14]<b>டீ குடிச்சா.. புற்றுநோய் ஆபத்து குறையும்...* </b>
<img src='http://www.dinakaran.com/health/daily/2005/dec/16/tea.jpg' border='0' alt='user posted image'>
டீ குடிப்பதன் மூலம் பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் ஆபத்து குறையும் என்று சுவீடன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தேனீர் அருந்துபவர்களுக்கு பல்வேறு வகையான புற்றுநோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். ஞாபக சக்தியும் அதிகரிக்கும் என்று முன்னதாக ஆய்வாளர்கள் கூறி இருந்தனர். இந்நிலையில் ஸ்டாக்ஹேhமில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தைச் சேர்ந்த சூசன்னா லார்சன் என்பவர் தலைமையிலான குழு, தேனீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி விரிவாக ஆய்வு நடத்தியது.
அப்போது, தினந்தோறும் குறைந்த பட்சம் 2 கோப்பை தேனீர் குடிக்கும் பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் வாய்ப்பு 46 சதவீதம் குறைவது தொpய வந்தது. இதற்கு தேநீரில் இருக்கும் நோய் எதிர்ப்பு பொருட்கள்தான் காரணம் என்று விஞ்ஞானிகள் விளக்கம் அளித்தனர்.
பிபிசி இணைய தளச் செய்தியில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது.
|
|
|
| மீன்வடை |
|
Posted by: கீதா - 12-22-2005, 10:13 PM - Forum: சமையல்
- Replies (36)
|
 |
மீன்வடை
தேவையானபொருட்கள்
விறால் மீன் 2
தயிர் 2கோப்பை
மிளகாய்ப்பொடி 2தேக்கரண்டி
வறுத்த கடலைப்பருப்பு 150கிராம்
முட்டை 3
லவங்காயம் 5
பட்டை 2துண்டு
நெய் 400 கிராம்
இஞ்சி பெரியதுண்டு
உப்பு தேவையானது
செய்முறை
தயிரிலிருந்து தண்ணீரை வடித்துக் கொள்ள வேண்டும் ?
மீனை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான தண்ணீரை விட்டு வேக விடவும் ?நன்றாக வெந்ததும்
மீனை தனியே எடுத்து உலர்த்தவும் -பிறகு அதிலுள்ள முட்டைகளை அகற்றிவிட்டு -மை போல அரைத்துக் கொள்ளவும் ?
மிளகு- சீரகம் -கசகசா-லவங்கம்-பட்டை-வறுத்தகடலைப் பருப்பு-தேவையான உப்பு -ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு -மசிய அரைக்க வேண்டும்
அரைத்த பின் எடுத்து-அரைத்த மீனுடன் கலந்து பிசைத்துக் கொள்ள வேண்டும் தயிரை அதில் கொட்டிக் கொள்ளவும் -
மிளகாய்த்தூளைப் போடவும் -இஞ்சியை பொடியாக அரிந்து போடவும் -பிறகு பிசைத்துக் கொள்ளவும் -முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் பாதியளவு எடுத்து மீன் கலவையில்
கலந்து பிசைந்து கொள்ளவும் மீதியுள்ள வெள்ளைக் கருவை
தனியே வைத்து விடவும் -ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி
காய்ந்ததும் -பிசைந்து வைத்துள்ள மீன்கறியை வடைகளாகத் தட்டி வெள்ளைக் கருவில் தேய்த்து -நெய்யில் போடவும் -
வடையின் இருபுறமும் சிவக்க வெந்ததும் எடுத்துவிடவும் ?
இதுவே மீன் வடை சாப்பிட சுவையாக இருக்கும் -மாலைநேரம் காப்பியுடன் சாப்பிட ஏற்றது -------
http://www.yarl.com/forum/posting.php?mode...e=newtopic&f=46
|
|
|
| சொக்காக் கணக்கு |
|
Posted by: Snegethy - 12-22-2005, 08:50 PM - Forum: பொழுதுபோக்கு
- Replies (2)
|
 |
<b>சொக்காக் கணக்கு</b>
1. உங்களுக்கு ஒரு கிழமையில எத்தின சொக்கா (1 ல இருந்து பத்துக்குள்ள) வேணும் என்று எழுதுங்கோ ஒரு பேப்பரில ([i]<span style='color:darkred'>அந்த ஒரு பேப்பர் இல்ல)
2. அதை 2 ஆல் பெருக்குங்கோ
3. இப்ப அதோட 5 ஐ கூட்டுங்கோ
4. இப்ப இருக்கிற எண்ணை 50 ஆல் பெருக்குங்கோ (கல்குலேற்றர் தேடுறீங்களோ)
5. இந்த வருசம் உங்கட பிறந்தநாள் ஏற்கனவே முடிஞ்சிருந்தா 1755 ஐ கூட்டுங்கோ.இனிமதான் எண்டால் 1754 ஐ கூட்டுங்கோ.
6. இப்ப நீங்கள் பிறந்த நாலு இலக்க ஆண்டை கழியுங்கோ.
7. இப்ப ஒரு மூன்றிலக்க எண் வந்ததா?
ஆதில முதலாவதுதான் நீங்கள் கேட்ட சொக்கா எண்.
கடைசி இரண்டிலக்க எண் உங்கட வயசு</span>
<b>சரியா??</b>
|
|
|
|