Yarl Forum
தரிசனம் கிடைக்காதா - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கதைகள்/நாடகங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=53)
+--- Thread: தரிசனம் கிடைக்காதா (/showthread.php?tid=1864)

Pages: 1 2 3


தரிசனம் கிடைக்காதா - Snegethy - 12-23-2005

<b>தரிசனம் கிடைக்காதா? </b>


ஓவ்வொரு வருசமும் முத்துமரி அம்மன் கோவில் திருவிழா இருபத்தைந்து நாட்களும் புத்தக விற்பனை நடப்பது வழக்கம்.அவ்வாறே 2000ம் ஆண்டும் புத்தக விற்பனைப் பிரிவுக்கு அருகில் உள்ள இரண்டு பாடசாலைகளிலிருந்தும் மாணவர்கள் அழைக்கப்பட்டு ஒவ்வொரு செயற்திட்டங்கள் வழங்கப்பட்டது.காலை ஆறு மணியிலிருந்து மத்தியானம் இரண்டு மணிவரைக்குமான காசுப்பொறுப்பாளர்கள் சயிந்தினியக்காவும் ராஜேஷண்ணாவும் மற்ற மற்ற பொறுப்புகளுக்குமாக மொத்தமாக எட்டு பேர் இருப்பார்கள்.அதில நான் விற்க வேண்டியது மு.வரதனாரின் புத்தகங்கள் ("தம்பிக்கு" "தங்கைக்கு" அப்பிடிதான் அவருடைய புத்தகங்களின் தலைப்புக்கள் இருந்நதாக ஞாபகம் ).இருபத்தைந்து நாட்கள் சந்திக்கிற இரண்டு பாடசாலை மாணவர்களுக்கும் இடையே நிறைய காதல் பூ பூக்கிறதும் நடக்கிறது.

நான் படிச்ச பள்ளிக்கூடத்தில திடீர் இராணுவ நடவடிக்கை மாதிரி எங்களை எல்லாம் பிறேயருக்கு அனுப்பிட்டு சில ரீச்சர்ஸ்மாரும் மாணவர் தலைவிகளும் சேர்ந்து எங்கட உடமைகள் அத்தனையும் ஆராய்வார்கள்..அதில யாராவது வைத்திருந்த நடிகர்களின்ர படம் லவ் லெற்றர்ஸ் ஏதாவது அகப்பட்டா அதோ கதிதான...அம்மா அப்பா வந்துதான் பிரின்ஸிட்ட போய் அதெல்லாம் வாங்கவேணும் …..அதுமட்டுமா இத்தின cm ல்தான் சட்டை collar இருக்கவேணும் அதில button இருக்கவேணும் சங்கிலி போடக்கூடாது மோதிரம் போடக்கூடாது ஒருநாள் கூட தலை பின்னி றிபன் கட்டாம வந்தி;ட்டா அவளவுதான் வாழைநாரால பின்னிக் கட்டி விடவெண்டே இருக்குது ஒரு குறூப்.இப்பிடியெல்லாம் செய்யிற அக்காமார் தப்பித்தவறி எங்கட அண்ணாமாருக்கு லைன் போடுறதா தெரிஞ்சது அம்புட்டுத்தான் அவங்க காதலுக்குச் சமாதிதான்.நிறைய பாவம் பண்ணிட்டன் போல இருக்கு. .என்னத்தையோ சொல்ல வந்து எங்கயோ போயிட்டன்.

சயிந்தினயக்காவும் எங்களுக்குப் பிடிக்காத ஒரு மாணவ தலைவிதான்.ராஜேஷண்ணாட்ட நாங்கள் ரியுசனுக்குப் போறனாங்கள்.அவருக்கு சயிந்தியக்காவில விருப்பம் அவா நல்ல வடிவு கெட்டிக்காரியும் கூட.அவேன்ர A/L ரியூசன் முடிய இன்னும் கொஞ்சநாள் தான் இருந்தது அதான் அவர் திருவிழாவிலேயே தன்ர காதலைச் சொல்லப் போறன் எண்டு சொல்லிட்டு வைரமுத்ததுவின் கவிதைப் புத்தகம் ஒன்றையும் வாங்கி வைச்சிருந்தவர்.எங்களிட்ட சொன்னவர் நான் சயிந்திட்டச் சொல்லப் போறன் என்று நாங்களும் குட் லக் சொல்லிட்டுச் சாப்பிட போட்டம்.சாப்பிட்டு வந்தால் சயிந்தியக்கா இல்லை ராஜேஷண்ணா தனிய கோபத்தில இருந்தார்.என்னாச்சு எண்டு கேட்டதுதான் தாமதம் சும்மா ஆமிக்காரன் கெலியிலிருந்து நெருப்புப்பொறி பொரிஞ்ச மாதரி வார்த்தைகள் வந்து விழுந்தன ... " பெடியங்கள் அப்பவே சொன்னவங்கள் டேய் சயிந்தியைப் பற்றி உனக்குத் தெரியாது.. வேண்டாம் என்று...நான்தான் நம்பாமால் ...இருந்தாலும் இந்தத்திமிர் கூடாது. பிடிக்கல என்றால் சொல்ல வேண்டியது தானே அத விட்டிட்டு நான் குடுத்த புத்தகம் சொக்லட் இரண்டையும் இங்க இந்தக் கால்வாயில போட்டிட்டுப் போட்டாள்.அழகு அறிவோட சேர்த்து மற்றவையை எப்பிடி நோகடிக்கலாம் என்றும் தெரிஞ்சு வைச்சிருக்கிறா."

நாங்கள் எட்டி கால்வாயைப் பார்த்தா சாமி தீர்த்தம் ஆடிட்டுப் போன மஞ்சள் குங்குமம நீரெல்லாம் வடிஞ்சு வந்து கவிதைப் புத்தகம் நனைஞ்சு சிதைஞ்சு கொண்டிருந்தது ராஜேஷண்ணான்ர மனசைப்போல.

-சினேகிதி-


- SUNDHAL - 12-23-2005

சாய் கொன்ஞ்ஞம் அழகா இருக்கிற பொண்ணுங'களே இப்பிடி தான்ப்பா திமிர் ஜாஸ்த்தி....என்னமோ பெரிய நினைப்புல திரிவினம்..


- Snegethy - 12-23-2005

சுண்டல் அதுக்குள்ள வாசிச்சிட்டீரோ...அவை பெரிய நினைப்பில திரிஞ்சா நீர் சின்ன நினைப்பில திரியுமன் யார் வேண்டாமெண்டது.


- SUNDHAL - 12-23-2005

ke ke ke என்ன நக்கலா? :evil: :evil: ஆண்களுக்கு எப்பவுமே சின்ன மனசு சின்ன நினைப்புப்பா...
நீங்க தான் சும்மாரா இருந்தா கூட ஜஸ்வர்யா ராய் ரேன்ஜ்கு திரிவிங்க......... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Snegethy - 12-23-2005

இங்க சண்டை வேண்டாம் சமாதானம போயிடுவம்.ஐஸ்வர்யா பழசு கண்ணா பழசு இப்ப புதுசு கண்ணா புதுசு Nataly!


- அருவி - 12-23-2005

Quote:நான் படிச்ச பள்ளிக்கூடத்தில திடீர் இராணுவ நடவடிக்கை மாதிரி எங்களை எல்லாம் பிறேயருக்கு அனுப்பிட்டு சில ரீச்சர்ஸ்மாரும் மாணவர் தலைவிகளும் சேர்ந்து எங்கட உடமைகள் அத்தனையும் ஆராய்வார்கள்..அதில யாராவது வைத்திருந்த நடிகர்களின்ர படம் லவ் லெற்றர்ஸ் ஏதாவது அகப்பட்டா அதோ கதிதான...அம்மா அப்பா வந்துதான் பிரின்ஸிட்ட போய் அதெல்லாம் வாங்கவேணும் …..அதுமட்டுமா இத்தின cm ல்தான் சட்டை collar இருக்கவேணும் அதில button இருக்கவேணும் சங்கிலி போடக்கூடாது மோதிரம் போடக்கூடாது


நான் படிச்ச பள்ளியிலும் இப்பிடி இருந்திச்சு. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Snegethy - 12-23-2005

அப்பிடியா அருவி??நிறைய பள்ளியில இப்பிடி நடந்திருக்கும்.


- தூயவன் - 12-23-2005

அடப்பாவி!!
*****வில் ஏதும் மாட்டுப்பட்டியா? பல பேர் குப்பை வாளிக்குள் ஒளித்து வைப்பதைப் பார்த்திருக்கின்றேன் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- RaMa - 12-23-2005

ம்ம் சிநேகிதி பாடசாலை வாழ்க்கை நினைக்கவே சந்தோசம் தான். எங்கள் பாடசாலையில் சட்டைக்கு ஊசி குத்தியிருந்தால் கூட 25 சதம் கொடுக்கணும். ஆசிரியார்களை விட மாணவத்தலைவர்களுக்கு பயப்பிட்ட காலம் தான் கூட.
நல்லாயிருக்கு... நன்றி இங்கு இனைத்தமைக்கு


- ப்ரியசகி - 12-23-2005

Quote:நான் படிச்ச பள்ளிக்கூடத்தில திடீர் இராணுவ நடவடிக்கை மாதிரி எங்களை எல்லாம் பிறேயருக்கு அனுப்பிட்டு சில ரீச்சர்ஸ்மாரும் மாணவர் தலைவிகளும் சேர்ந்து எங்கட உடமைகள் அத்தனையும் ஆராய்வார்கள்..அதில யாராவது வைத்திருந்த நடிகர்களின்ர படம் லவ் லெற்றர்ஸ் ஏதாவது அகப்பட்டா அதோ கதிதான...அம்மா அப்பா வந்துதான் பிரின்ஸிட்ட போய் அதெல்லாம் வாங்கவேணும் …..அதுமட்டுமா இத்தின cm ல்தான் சட்டை collar இருக்கவேணும் அதில button இருக்கவேணும் சங்கிலி போடக்கூடாது மோதிரம் போடக்கூடாது

ம்ம் நம்ம பள்ளியிலும் இப்பிடித்தான்..பொல்லாத ஆக்கள்..என்ன நமக்கு அண்ணா, அக்காமார் இருந்தால்..(அதே கிளசில) அவைக்காக (சில வேளை ரூட் ஏதும் விட்டல் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ) தப்பிக்க வழி இருக்கு..இல்லையா..சரி வீட்டு கோவத்தை எல்லாம் விடியக்காத்தால நம்ம கிட்ட தான் காட்டுவாங்க :evil: :evil: :evil: :evil: :evil:

அதுசரி சுண்டல்..ஏன் இந்த சின்ன விசயத்துக்கெல்லாம்..டென்சன் ஆகி..பெரீசா கதை விடுறீங்கள்? எனி ப்ரொப்ளம்? :roll: :wink:


- Snegethy - 12-23-2005

தூயவன் என்னத்த குப்பைக்குள்ள ஒளிச்சு வைக்கிறவை?


- Snegethy - 12-23-2005

ஆமா றமாக்கா ஆங்கிலப்பாட நேரம் தமிழ்ல கதைச்சாலும் ஒவ்வொரு சொல்லுக்கும் 25 சதம் குடுக்கோணும்.


- Snegethy - 12-23-2005

சகி விடிய வெள்ளன நல்லாத்தான் அக்காமாரல பாதிக்கப்பட்டிருக்கிறியள் போல...அது ஒரு கனாக்காலமா 8)


- Mathan - 12-24-2005

ம் ஓவர் ஆக்ட் பண்ணாமல் பிடிக்கவில்லை என்று அந்த புத்தகத்தை திருப்பி கொடுத்திருக்கலாம். கால்வாய்க்குள் போடுறது மனசை நோகடிக்கிறது போல தானே


- Mathan - 12-24-2005

SUNDHAL Wrote:சாய் கொன்ஞ்ஞம் அழகா இருக்கிற பொண்ணுங'களே இப்பிடி தான்ப்பா திமிர் ஜாஸ்த்தி....என்னமோ பெரிய நினைப்புல திரிவினம்..

சுண்டல் என்ன இதுதான் சான்ஸ் எண்டு எல்லாரையும் குற்றம் சாட்டுறீர் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- அருவி - 12-24-2005

தூயவன் Wrote:அடப்பாவி!!
*****வில் ஏதும் மாட்டுப்பட்டியா? பல பேர் குப்பை வாளிக்குள் ஒளித்து வைப்பதைப் பார்த்திருக்கின்றேன் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


மாட்டுப்படலைப்பா எடுத்திருக்கன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
(ஒருகாலத்தில மாட்டுப்பட்டிருக்கன், அது ஒரு சின்னவிடயம் இதப்போல இல்ல. :wink: )


- Snegethy - 01-02-2006

மதன் கொஞ்சம் ஓவர் அக்றிங்தான் ஆனால் ஏன் அவா அப்பிடி செய்தாவோ அவாக்குத்தான் தெரியும்.இனிம சந்திக்கிற வாய்ப்புக் கிடைச்சா கேக்கோணும்.


- Snegethy - 01-02-2006

அருவியும் தூயவனும் என்ன குப்பைவாழியைக் கிண்டினம்??எனக்கு சத்தியமா விளங்கேல்ல.


- அருவி - 01-02-2006

Snegethy Wrote:அருவியும் தூயவனும் என்ன குப்பைவாழியைக் கிண்டினம்??எனக்கு சத்தியமா விளங்கேல்ல.

அந்த வாளியை நீங்களும் கிளறிப்பாருங்க சிலவேளை அப்போதாவது ஏதாவது விளங்கும்.


- ப்ரியசகி - 01-02-2006

ம்ம்ம் என்ன நீங்கள் செய்வது காணாது என்று சிநேகிதியையும் இழுக்கிறீங்களா? :roll: உங்களுக்கு விளங்கினப்புறம் சொல்லுங்கோ..நான் வந்து தேடுறன் ஓகே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->




Mathan Wrote:ம் ஓவர் ஆக்ட் பண்ணாமல் பிடிக்கவில்லை என்று அந்த புத்தகத்தை திருப்பி கொடுத்திருக்கலாம். கால்வாய்க்குள் போடுறது மனசை நோகடிக்கிறது போல தானே

ஓம் என்ன..நானும் சொல்ல நினைத்தேன். பட் அவாக்கு என்ன பிரச்சனையோ...வேறு கோவத்தையும் இதில் காட்டி இருப்பாவோ எண்டு நெச்சன்..அதை விட சொன்னால்..சுண்டல் இன்னும் டென்சன் ஆவாரோ எண்டும் கொஞ்சம் நெச்சன்... :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->