![]() |
|
எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கதைகள்/நாடகங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=53) +--- Thread: எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம் (/showthread.php?tid=1860) Pages:
1
2
|
எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம் - Snegethy - 12-23-2005 <span style='color:darkred'><b>எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம்</b> -சினேகிதி- [size=15]அன்பான தன் சிறிய குடும்பத்துடன் வாழ்ந்தவள் ஆதிரை.சின்ன வயது முதலே படிப்படியாக பல வெற்றிகளைக் கல்வியில் அடைந்து மிகுந்த புகழுடன் இருந்தாள்.இனப்பிரச்சனையால் சொந்த ஊரை விட்டு நீங்கும் துன்பத்தை ஆதிரை குடும்பமும் ஏற்க வேண்டியதாயிற்று.கொழும்புக்கு வந்து வெள்ளவத்தையில் குடியேறினார்கள். கொழும்புக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.ஆதிரை வயதுக்கு வந்துவிட்டபிறகு அவளையும் தங்கை சுவேனாயையும் வளர்க்கப் பெற்றவள் பாடுபட வேண்டியதாயிற்று. வாரத்துக்கு ஒருமுறை தந்தை மூர்த்தி தொலைபேசியில் கதைப்பார். இந்தப்பிள்ளைகள் இருவரும் தகப்பனோடு முழுதாக இரண்டு வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருப்பார்களோ என்னவோ... இருந்தாலும் மூர்த்திக்கு இவர்கள் மேல் கொள்ளைப்பிரியம்.ஒருநாள் கதைக்கும்போது கதையோடு கதையாக தாய் சொன்னா .. என்னால் இனிம இதுகளோட தனியா இருக்க முடியாது எங்களைக் கெதியாக் கூப்பிடுற அலுவலைப் பாருங்கோ". "அம்மா O/L பரீட்சைக்கு இன்னும் நான்கைந்து மாதங்கள் தான் இருக்கிறது அதுக்குள்ள சுதனும் அவன்ர வாலுகளும் எனக்குப் பின்னால நடுகலும் வாறாங்களம்மா இனிம நான் அந்த ரியூசனுக்குப் போகமாட்டன்." சரிடி அதுக்காக ரியூசனுக்குப் போகாம வீட்டில இருந்தா நீ புத்தகத்தையே திறக்கமாட்டாய்.ஏதோ உன்ர இஷ்டம்.அப்பா கதைச்சவர் இன்னும் ஆறு மாதத்தில எங்களைக் கூப்பிடுவராம். இப்ப ஆர் அங்க போகவேணும் எண்டு கேட்டது?? நான் வரமாட்டன் நீங்களும் தங்கச்சியும் வேணுமெண்டால் போங்கோ.நான் அத்தையோட இங்கையே இருக்கிறன். ஆதிரைன்ர கூச்சலை அங்க யாரும் செவிமடுப்பதாயில்லை.தூதரகம் சென்று விஸாவும் எடுத்தாச்சு.ஒருநாள் வகுப்பு முடிந்து வெளியே வந்த ஆதிரையிடம் சுதன் போய்ச் சொன்னான். "ஆதிரை நான் உனக்காகத்தான் இவ்வளவு நேரமும் நிண்டனான்."அவள் அவனைக் கடந்து போக "நான் இனிம உன்னை இப்பிடித் தொந்தரவு செய்யமாட்டன் என்று சொல்லிட்டுப் போகத்தான் வந்தனான் என்ர சித்தப்பா கனடாவில இருக்கிறார் நான் அவரட்டைப் போகப்போறன்..நான் உன்னட்ட ஒன்று சொல்லோணும் உனக்கே தெரியும் நான் உன் பின்னால எவ்வளவு நாள் வந்தனான் எண்டு.நான் ஒண்டும் அந்த நகுல் மாதிரி சிரிச்சு சிரிச்சுப் பேசி பொண்ணுங்களை ஏமாத்திறவன் இல்லை.நான் உன்னை விரும்பிறன்.எனக்குத் தெரியும் உனக்கு இதெல்லாம் பிடிக்காதெண்டு இருந்தாலும் எனக்கு இனிமேல் உன்னைப் பார்க்கிற சந்தர்ப்பம் கிடைக்குமோ கிடைக்காதோ..அதான் நான் என்ர ஆசையைச் சொல்லிட்டன்.நல்லாத் தேர்வெழுத என் வாழ்த்துக்கள்." என்று சொல்லிட்டு அவளைத் தாண்டி சென்றான்.அவனுக்குத் தெரியும் எப்படியும் என் காதலனே நீ போய் வா என்று ஆதிரை தன்னை வழியனுப்பப் போவதில்லை என அதான் திரும்பிப்பாரமல் போய்க்கொண்டிருந்தான். ஆதிரை கனடாவுக்குப் போய் எங்களை எல்லாம் மறந்திடுவாய் என்ன? என்ற கேள்விதான் ஆதிரையின் வகுப்பில் அதிகம் கேட்கப்படுவத.ஆதிரையின் நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து Autograph ல் தாம் சேர்ந்திருந்து மகிழ்ந்த தருணங்களை எழுத்தில் வடித்துக் கொடுத்தார்கள்.ஒராள் எழுதினதுக்கு மற்றாள் நக்கலாக இன்னொரு வரி சேர்ப்பது இப்படிக் கடைசி நாள் கழிந்தது. ஆசிரியர்களின் ஆசீர்வாதத்துடனும் நண்பர்களின் பரிசுப்பொருட்களுடனும் ஆதிரை வீடு வந்து சேர்ந்தாள். கனடா செல்ல முதல்நாள் பரீட்சை முடிவுகளும் வந்தன.உறவினர்களுக்குக் கையசைத்தபடியே விடைபெற்று கனடாவுக்கு வந்து சேர்ந்தார்கள். மூர்த்தியும் நண்பர் கோபாலுவும் இவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பிரிந்தவர்கள் கூடினால் என்னவென்று சொல்லவும் வேண்டுமா.கனடா அழகை ரசித்தபடி வீடுவந்து சேர்ந்தார்கள். அடுத்த வாரமே பாடசாலையில் சேர்ந்தார்கள்.சுவேனா சின்னப்பிள்ளை பாடசாலைச் சூழலோடு தன்னை சுலபமாக இணைத்துக் கொண்டாள். ஆதிரைக்கு தான் முதல்நாள் கணித வகுப்பே சங்கடமாகிப் போய்விட்டது.ஆசிரியர் போட்ட கணக்கைத் தீர்க்க முடியாமல் மாணவர் சிலர் போராட ஆதிரை கையை உயர்த்திவிட்டு பேசாமல் இருந்தாள் ஆசிரியர் அவளைக் கவனிக்கவில்லை.ஆதிரை சொல்ல நினைத்த விடையை பின்னாலிருந்த யாரோ சொன்னார்கள்.இந்தக்குரல் எனக்குப் பரிச்சயமானதாயிற்றே..திரும்பிப் பார்க்க நினைத்தும் முடியவில்லை. நேரஅட்டவணையின் படி ஒருமணி நேர இடைவேளை என்றிருக்கே என்ன செய்யலாம் என்று நினைத்தபடியே ஆசிரியரிடம் நூலகம் எங்கே என்று கேட்டறிந்தபடியே அங்கு போனவளை "ஆதிரை நான் உன்னை நான் மீண்டும் அதுவும் என்வகுப்பில் காண்பேன் என்று நினைச்சுகூடப் பார்க்கவில்லை" என்ற சுதனின் அழகு தமிழ் வாரத்தைகள் ஒருகணம் தடுமாற வைத்தது.வெள்ளவத்தையில் இருக்கும்போது சுதனோடு கதைப்பதில்லை இப்பமட்டும் என்னவென்று கதைப்பது எண்றெண்ணியபடியே சிரித்து விட்டுப்போனாள். கோபால் கெட்டிக்காரர் சுதன் வந்த புதிதில் அவனுடைய முகத்தை வைத்தே எல்லா விடயங்களையும் கேட்டறிந்திருந்தார்.இன்று பாடசாலையால் வந்த சுதன் தான் ஆதிரையை மீண்டும் இங்கே சந்திச்ச விடயத்தைச் சித்தப்பாவிடம் சொன்னான். "டேய் நீ வெள்ளவத்தையில பின்னால திரிஞ்ச மாதிரி இங்கேயும் திரியாத உனக்கு அவளெண்டு இருந்தால் நிச்சயம் நடக்கும்". அடுத்தவார முடிவில் தன் மனைவி பிள்ளைகள் வந்த சந்தோசத்தைக் கொண்டாட மூர்த்தி தன் நண்பர் கோபாலையும் மற்றும் சிலரையும் இரவு விருந்துக்கு அழைத்திருந்தார்.சாப்பாட்டு மேசையில் உணவுகளை அடுக்கிக்கொண்டிருந்த ஆதிரை தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த சுதனைக் கண்டுவிட்டாள். அருகிலே இல்லாதபோதுதான் அதன் அருமை தெரியுமாம் அதப்போல சுதன் கனடா போனபின் அவனைப் பற்றி ஆதிரை அடிக்கடி நினைத்ததுண்டு.முதல்நாள் பாடசாலையில் அவனோடு கதைக்காததால் அவனும் அதன்பிறகு அவளைக் கண்டும் காணாமல் இருந்து வந்தான்.அதனால் தானோ என்னவோ ஏற்கனவே முளைவிட்டிருந்த காதல் விருட்சம் வேருன்றி நன்றாய் வளர்ந்து விட்டிருந்தது. சுமையலறையில் அம்மாவிடம் சுதன் வந்திருப்பதை சொன்னாள்.ஓ அந்தப் பிள்ளையே அவன் கோபாலண்ணனோடு வந்தவன்.தாய்க்கு ஏற்கனவே சுதனைப் பற்றித்தெரியும்.இப்போது மகளின் மாற்றங்களையும் கவனித்தவள் கணவனிடம் நடந்த எல்லாவற்றையும் சொன்னாள்.மூர்த்தி தன் குடும்பத்தில் பற்றும் நம்பிக்கையும் கொண்டவர்.கோபாலைக் கூப்பிட்டுக் கதைத்தார்.கோபால் ஆச்சரியத்தை அடக்கிக்கொண்டு "டேய் அவன் என் அண்ணன் பையன் அதோட எனக்கு அவன்ர காதல் எல்லாம் தெரியும் ஆனால் அது உண் பொண்ணு என்று தெரியாமல் போட்டுது..அது கிடக்கட்டும் இப்பபார் இரண்டு பேரும் எங்களை நம்பிச் சொல்லியிருக்கினம் நாங்கள்தான் ஏதாவது செய்யவேணும்". மூர்த்தி மனைவியிடம் சொல்லிவிட்டு ஆதிரையிடம் போய் "அம்மா ஆதிரை அந்தப்யையன் சுதன் காதல் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான் நீதான் மருந்து குடுக்கவேணும்." ஆதிரைக்கு தன் காதுகளையே நம்பவே முடியவில்லை கண்களால் நன்றி சொன்னாள். நடந்த எதுவுமே தெரியாமல் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த சுதனை ஆதிரை சுவேனாட்டச் சொல்லி கூப்பிட்டாள்.சங்கடத்துடன் வந்தவனுக்கு ஆதிரையைக் கண்டதும் என்ன கதைப்பது என்றே தெரியவில்லை.ஆதிரைதான் மௌனத்தைக் கலைத்தாள். "அப்ப நீங்கள் போட்ட காதல் விண்ணப்பத்திற்கு பதில் எங்கள் வீட்டு முகவரிக்கு வந்திருக்கிறது" என்று ஒரு காகிதத்தைக் கொடுத்தாள்.பிரிச்சுப் பார்த்தால் சம்மதம் என்றிருந்தது.நம்பாமல் நின்றவனுக்கு "டேய் சுதன் நாங்கள் மூன்று பேரும்தான் ஆதிரையை உனக்கு மருந்து கொடுக்க அனுப்பினாங்கள்"என்ற சித்தப்பாவின் குரல் நம்பவைத்ததது. "இப்ப நீங்கள் இரண்டு பேரும் ஒழுங்காப் படிக்கிறவேலையை பாருங்கோ.பிறகு அம்மா அப்பாவோடு கதைத்து ஐந்தாறு வருடம் கழித்து கல்யாணத்தை நாங்கள் நடத்திவைக்கிறம்." எல்லோரும் சாப்பிடப்போக ஆதிரையுடன் ஆறுதலாகப் பேசலாம் என்றால் அவள் நழுவப்பார்த்தாள்.எட்டி அவளைப்பிடித்தவன் எவ்வளவு நாள்தான் நானே உன்னை நினைச்சு ஏங்கிக்கொண்டிருக்கிறது...நீ அப்பிடி ஏங்க வேண்டாமோ என்று ....</span> முதல் காதல் முதல் முத்தம் .... - RaMa - 12-23-2005 சிநேகிதி கதை நல்லாயிருக்கு.. ஆமா நிஐத்தில் இப்படி எல்லாம் நடக்குமா? காதல் என்றால் அதற்கு எதிர்ப்பு காட்டினால் தானே அது பெற்றோர்க்கு அழகு என்று நினைப்பார்கள் :roll: :roll: :roll: ???? - Snegethy - 12-23-2005 இது கதைதானே றமாக்கா.நடக்கும் என நம்புவோம்<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Rasikai - 12-23-2005 உங்கள் காதல் கதை நன்றாக இருக்கிறது சிநேகிதி. ம்ம் சில எழுத்துப் பிழைகளை உள்ளன அதை திருத்தி எழுதினீர்களானால் உங்கள் கதை மேலும் அழகுறும்.... - தூயவன் - 12-23-2005 Rasikai Wrote:உங்கள் காதல் கதை நன்றாக இருக்கிறது சிநேகிதி. ம்ம் சில எழுத்துப் பிழைகளை உள்ளன அதை திருத்தி எழுதினீர்களானால் உங்கள் கதை மேலும் அழகுறும்.... குற்றம் கண்டு பிடிக்கவென்றே திரிகின்றார்கள். இப்ப அது தான் பாஷன். தெரியுமா? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Snegethy - 12-23-2005 ரசிகையக்கா நான் ஒருக்கா திரும்ப வாசிச்சு பாரத்து அழகுற வைக்கிறன் நன்றி. - Snegethy - 12-23-2005 தூயவன் பிழை கண்டு பிடிக்கிறதா பிழைவிட்டு எழுதிறதா எது பாஷன? - தூயவன் - 12-23-2005 quote="Snegethy"]தூயவன் பிழை கண்டு பிடிக்கிறதா பிழைவிட்டு எழுதிறதா எது பாஷன?[/quote] பாவம் என்று ஆதரவு கொடுத்தால் உப்படித்தான். உந்தப் பெண்கள் :evil: :evil: - Snegethy - 12-23-2005 ஏனிப்ப பெண்களை இழுக்கிறீர்??சும்மா கண்ணில நெருப்புப்பொறி பறக்குது போல. - ப்ரியசகி - 12-23-2005 ஆகா..கதைல டென்சனே இல்லை நண்பி..காதல்ன்னா..இப்பிடிதான் சுமூகமா முடியணும்..இதை விட்டுட்டு..அடி தடி, கண்ணீர்..என்னாது..எனக்கு பிடிக்காது :twisted: :twisted: ஆனாலும் நல்ல சித்த(அ)ப்பா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> தூயவன் Wrote:Rasikai Wrote:உங்கள் காதல் கதை நன்றாக இருக்கிறது சிநேகிதி. ம்ம் சில எழுத்துப் பிழைகளை உள்ளன அதை திருத்தி எழுதினீர்களானால் உங்கள் கதை மேலும் அழகுறும்.... hock: அது ஒரு கருத்து..குற்றம் கண்டு பிடிப்பதில்லை தூயவன்... :evil:
- ப்ரியசகி - 12-23-2005 தூயவன் Wrote:quote="Snegethy"]தூயவன் பிழை கண்டு பிடிக்கிறதா பிழைவிட்டு எழுதிறதா எது பாஷன? பாவம் என்று ஆதரவு கொடுத்தால் உப்படித்தான். உந்தப் பெண்கள் :evil: :evil:[/quote] <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - shanmuhi - 12-23-2005 சிநேகிதி உங்கள் காதல் கதை நன்றாக இருக்கிறது. - Snegethy - 12-23-2005 சகி யா யா டென்சனே இருக்கக் கூடாது.இப்ப க்றஸ் கல்குலேற்றர் என்றொன்று உலாவுது கவனம் நண்பிகளே தப்பித்தவறி உங்கட க்றஸ்களை அதில எழுதிப்போடாதயுங்கோ எழுதினா அவ்வளவுதான் நீங்கள் எழுதிற பெயரெல்லாம் உங்களுக்கு அந்த மெயில் அனுப்பின ஆக்களுக்குப் போயிடும். - Snegethy - 12-23-2005 சண்முகி நல்லாவா இருக்கு..<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->.வடிவா எழுதலாம் ஒழுங்கா வருதில்ல.
- RaMa - 12-23-2005 Snegethy Wrote:சகி யா யா டென்சனே இருக்கக் கூடாது.இப்ப க்றஸ் கல்குலேற்றர் என்றொன்று உலாவுது கவனம் நண்பிகளே தப்பித்தவறி உங்கட க்றஸ்களை அதில எழுதிப்போடாதயுங்கோ எழுதினா அவ்வளவுதான் நீங்கள் எழுதிற பெயரெல்லாம் உங்களுக்கு அந்த மெயில் அனுப்பின ஆக்களுக்குப் போயிடும். விளங்கலை சிநேகிதி????? - Snegethy - 12-23-2005 றமாக்கா crush calc.ஒரு fwd மெயில்.அதில நீங்கள் உங்களுக்கு பிடிச்ச மூன்று பேற்ற பேரை அதில எழுதினா நீங்கள் எழுதின பேரெல்லாம் உங்களுக்கு யாரந்த fwd அனுப்பிச்சனமோ அவைக்குத் தெரியவரும். - RaMa - 12-23-2005 Snegethy Wrote:றமாக்கா crush calc.ஒரு fwd மெயில்.அதில நீங்கள் உங்களுக்கு பிடிச்ச மூன்று பேற்ற பேரை அதில எழுதினா நீங்கள் எழுதின பேரெல்லாம் உங்களுக்கு யாரந்த fwd அனுப்பிச்சனமோ அவைக்குத் தெரியவரும். ஒ இதுவா இது 3 வருடங்களுக்கு முன்பே வந்ததது தான்.. ஆமாம் இதில் பல அகப்பட்டு கொண்டார்கள் பல விடங்கள் பரகசியமானது - Mathan - 12-24-2005 கதை நன்றாக இருக்கிறது சிநேகிதி. ஏதும் உண்மை கலப்பு இருக்கோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 12-24-2005 RaMa Wrote:Snegethy Wrote:றமாக்கா crush calc.ஒரு fwd மெயில்.அதில நீங்கள் உங்களுக்கு பிடிச்ச மூன்று பேற்ற பேரை அதில எழுதினா நீங்கள் எழுதின பேரெல்லாம் உங்களுக்கு யாரந்த fwd அனுப்பிச்சனமோ அவைக்குத் தெரியவரும். ம் இது வந்து கன வருசம் இருக்கும் பல தெரியாத ஆக்களும் இருக்கிறார்கள், இப்படியா அத போட்டு உடைக்கிறது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Snegethy - 01-02-2006 மதன் உண்மைக்கலப்பு இல்லாம கதையெழுதுறது ஒரு கலை எனக்கு கைவராத கலை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->க்றஸ் கல்குலேற்றர் விசயத்ததை போட்டு உடைச்சாத்தான் நிறைய ரகசியம் ரகசியமாவே இருக்கும். |