Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 292 online users.
» 0 Member(s) | 289 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,309
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,635
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,060
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,463
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,483
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,029
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  ஆலங்காய்ப் பிட்டு
Posted by: shanmuhi - 12-22-2005, 08:24 PM - Forum: சமையல் - Replies (41)

<b>ஆலங்காய்ப் பிட்டு </b>

ஆலங்காய்ப் பிட்டு என்றால் எனது மகனுக்கு நல்ல விருப்பம். அனேகமான சிறார்களுக்கு இது பிடிக்கும் என்று அடித்துக் கூறலாம். எனது சின்ன வயசில் நான் அதிகம் விரும்பிச் சாப்பிடும் காலை உணவு இதுவே. இப்பொழுதும் மகனுக்குச் செய்து கொடுக்கும் சாக்கில் ஒரு பிடி பிடித்துவிடலாம்

தேவையான பொருட்கள்

ஓரு கப் வறுத்த அரிசிமா
அரை கப் வறுத்த உழுத்தம்மா
ஓரு கப் பசும்பால்
கால் கப் வறுத்த சவ்வரிசி
ஒரு ரின் மில்க் (200 m.l. condensed milk)
இரண்டு தேக்கரண்டி சீனி
சுவைக்காக முந்திரிப் பருப்பு, முந்திரிகை வத்தல்
வாசனைக்கு ஏலம்

செய்முறை

அரிசிமா, உழுத்தம்மா அளவான உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.
பசும்பாலை தண்ணீர் கலந்து மெதுவாகச் சூடாக்கிக் கொள்ளுங்கள். இப்பொழுது கலந்து வைத்த மாவினுக்குள் மெதுவான சூட்டில் உள்ள பாலை ஊற்றி நன்கு பிசைந்து கொண்டு ஆலங்காய் அளவிலான உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இவ் உருண்டைகளை ஆவியில் வேகவைத்து ஒரு பாத்திரத்தில் பரவி வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக கொதிக்கும் தண்ணீரில் சவ்வரிசியைப் போட்டு அதனுடன் ரின் மில்க், சீனி போட்டு கிளறியபடியே வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் மா உருண்டைகளையும் போட்டு மெதுவாகக் கிளறவும். இறுதியில் முந்திரிப் பருப்பு, முந்திரிகை வத்தல், ஏலம் போட்டு இறக்கி விடுங்கள்.

என்ன ஆலங்காய்ப்பிட்டு கமகமக்கிறதா? சாப்பிட்டுவிட்டுச் சொல்லுங்கள்.

http://suuvvai.blogspot.com/

Print this item

  வாகனத்தை ஒளிப்பதிவு செய்ததாக இந்தியப் பிரஜை கைது
Posted by: narathar - 12-22-2005, 08:09 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

தயாசந்தகிரி பயணம் செய்த வாகனத்தை ஒளிப்பதிவு செய்ததாக இந்தியப் பிரஜை கைது

முப்படைகளின் கட்டளை அதிகாரியான வைஸ் அட்மிரல் தயா சந்தகிரி பயணம் செய்த பாதுகாப்பு வாகனத்தை வீடியோ படம் எடுத்ததாக இந்தியாவைச் சேர்ந்த தமிழர் ஒருவரை கொழும்பு கோட்டை பொலிஸார் நேற்று புதன்கிழமை மாலை 5 மணியளவில் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் மின்சாரப் பொறியியலாளராவார். தொழில் நிமித்தம் இலங்கை வந்திருந்த இவர் இன்று வியாழக்கிழமை இந்தியாவிற்கு திரும்பிச் செல்ல இருந்த நிலையில் பொருள் கொள்வனவு செய்து கொண்டு காலிமுகத்திடல் வழியாக நடந்து சென்ற போது, இயற்கைக் காட்சிகளை தனது வீடியோ கமரா மூலம் பதிவு செய்துள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில் அவ்வழியாக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தயா சந்தகிரியின் வாகனம் வந்துள்ளது. அதிலிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேக நபர் வீடியோ கமராவுடன் செல்வதைக் கண்காணித்துள்ளனர்.

இதனையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகளின் வாகனத்தை ஒருவர் வீடியோ செய்வதாக அவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் உடனடியாக அவரைக் கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்து வந்துள்ளனர்.

பொலிஸ் நிலையத்தில் வைத்து குறிப்பிட்ட வீடியோ கமரா தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்ட போது, அதில் இயற்கைக் காட்சிகள் தவிர, பாதுகாப்பு அதிகாரிக்கோ, பாதுகாப்பிற்கு குந்தகம் விழைவிக்கும் எதுவும் அதில் பதியப் படவில்லை என்று தெரிய வந்துள்ளது.

அதனையடுத்து, சந்தேக நபரிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொண்டு அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Print this item

  யாழ் என்ற தோட்டத்தில் புதிதாய் மலர்ந்த பூ
Posted by: roadrash - 12-22-2005, 07:16 PM - Forum: அறிமுகம் - Replies (19)

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நான் இங்கு கூடுவதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்.
எனது பெயர் ராஜிக் பரீத் . நான் துபாய் ல் இருக்கிறேன்.
கணினி கண்கானிப்பளாரக உள்ளேன்

Print this item

  உயிரே உயிரின் உயிரே....
Posted by: Vishnu - 12-22-2005, 06:49 PM - Forum: கவிதை/பாடல் - Replies (8)

<img src='http://img333.imageshack.us/img333/7263/kavithai2sn.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  புலிகள் இணங்கினால் ஜப்பானில் நாளையே பேச்சு
Posted by: Rasikai - 12-22-2005, 03:39 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<b>புலிகள் இணங்கினால் ஜப்பானில் நாளையே பேச்சு ஜனாதிபதி தெரிவிப்பு </b>
அரசாங்கத்திற்கும் புலிகளுக்குமிடையிலான சமாதான பேச்சுவார்த்தையை ஜப்பான் நாட்டில் நடத்த புலிகள் இயக்கம் விரும்பினால் பேச்சுக்களை நாளைக்கு ஆரம்பிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் புலிகள் இயக்கம் கோரிக்கை விடுக்கும் நோர்வே நாட்டில் அல்ல. பேச்சுவார்த்தைக்கான இடம் முக்கியமல்ல, பேச்சுவார்த்தையே முக்கியம் என நேற்று மாலை இந்திய ஊடகவியலாளர்களிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தை முன்னிட்டு இந்திய ஊடகவியலாளர்கள் அடங்கிய குழுவொன்று ஜனாதிபதியை அலரி மாளிகையில் வைத்து நேற்று சந்தித்து கலந்துரையாடியது.

அரசு புலிகளுக்கிடையிலான சமரசப் பேச்சுவார்த்தை நோர்வே நாட்டில் நடைபெற வேண்டும் என புலிகள் இயக்கம் விரும்புகிறது. ஆனால், சமரச பேச்சுவார்த்தை ஜப்பான் நாட்டில் நடைபெற வேண்டும் என அரசாங்கம் விரும்புகிறது. அதற்கு புலிகள் இணங்குமானால் பேச்சுவார்த்தையை நாளையே ஆரம்பிக்க தயாராக இருக்கிறோம்.

இலங்கைக்கு நிதியுதவிகளை வழங்கும் நாடுகளின் இணை தலைமை நாடுகளுடன் இந்தியாவும் இணைந்து கொண்டு இலங்கையின் சமாதான முயற்சிகளுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நாம் விரும்புகிறோம்.இது குறித்து எனது இந்திய விஜயத்தின் போது விரிவாக ஆராயப்படும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயலாளர் ஆறுமுகம் தொண்டமான், கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி எம்.பி.யான தி.மகேஸ்வரன் ஆகியேõரும் தன்னுடன் இந்தியாவுக்கு வருவதாகவும் ஜனாதிபதி ஊடகவியலாளர்களிடம் கூறினார்.

http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&

Print this item

  யாழ்ப்பாணத்தில் இன்று மாலை வரை 10 தாக்குதல்கள் நாடத்தப்பட்ன.
Posted by: Rasikai - 12-22-2005, 03:35 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (4)

<b>யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை மாலை வரை 10 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. </b>

இந்தத் தாக்குதல்களில் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த ஒருவரும் படையினர் மூவரும் இராணுவம் தாக்கியதில் பொதுமக்கள் 5 பேரும் படுகாயமடைந்துள்ளனர்.


யாழ். புறநகர்ப்பகுதி, நல்லூர் முத்திரைச் சந்தி, நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவிலடி, அச்சுவேலி, கந்தர்மடம் சந்தி, நாச்சிமார் கோவிலடி, கோப்பாய், அரியாலை, நெல்லியடி ஆகிய பகுதிகளில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

நல்லூர் முத்திரைச் சந்தியடியில் இன்று மாலை 6 மணியளவில் சிறிலங்கா படையினர் காவலுக்கு நின்றிருந்த போது அவர்கள் மீது அடையாளம் தெரியாதோர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

யாழ்.நகரிலிருந்து 3 கிலோ மீற்றர் தொலைவில் வடக்கில் உள்ள ஐந்து சந்திப் பகுதியில் இந்துக் கல்லூரிக்கும் பன்றிக்குட்டிப்பிள்ளையார் கோயிலுக்கும் இடையே இராணுவ வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் 51 ஆம் டிவிசனுக்கு படையினரை இந்த இராணுவ வாகனம் ஏற்றி வந்தது. மறைவிடம் ஒன்றிலிருந்து அடையாளம் தெரியாத நபர்கள் அடங்கிய குழுவினர் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் மூன்று ரி-56 ரக குண்டுகள் இராணுவ வாகனத்தை துளைத்தது. இருப்பினும் இராணுவத்தினர் உயிர் தப்பினர். இராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டை 5 நிமிட நேரம் நீடித்தது. தாக்குதலையடுத்து காங்கேசன்துறை வீதியூடாகச் சென்ற பொதுமக்களை இராணுவத்தினர் காட்டுமிராண்டித்தனமானத் தாக்கினர்.

இராணுவத்தினரின் தாக்குதலில் படுகாயமடைந்த

தேவரட்ணம் மகேஸ்வரன் (வயது 31)

பிரான்சிஸ் சேவியர் அனுஸ்டன் (வயது 28 )

நிசாந்தன் (வயது 28 )

கே. தெய்வேந்திரம் (வயது 39)

ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தட்டாதெருச் சந்தி, மனோகரா திரையரங்கு சந்திகள் மற்றும் ஐந்து சந்தி ஆகிய பகுதிகளில் அனைத்து போக்குவரத்துப் பாதைகளையும் இராணுவம் முடக்கி உள்ளனர்.

கோப்பாய் பிரதேச செயலக கட்டடம் அருகே இராணுவத்தினர் மீது மாலை 4 மணியளவில் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் சிப்பாய் ஒருவர் காயமடைந்தார்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் வீதியூடாகச் சென்று கொண்டிருந்த ரூபன் ஜெயந்தன் (வயது 26) என்ற இளைஞரை இராணுவத்தினர் கடுமையாகத் தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த ரூபன் ஜெயந்தன், யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்திற்கு வெளியே 300 மீற்றர் தொலைவில் பலாலி வீதி கந்தர்மடம் சந்தியில் பிற்பகல் 1 மணியளவில் படையினர் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த குலதுங்க பண்டா என்பவர் படுகாயமடைந்துள்ளார். அவர் பலாலி இராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அச்சுவேலி பேரூந்து நிலையத்தடியில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது கைக்குண்டு வீசுப்பட்டது. இதில் படையினர் ஒருவர் காயமடைந்தார்.

யாழ். நல்லூர் வீரமாகாளி அம்மன் கோயிலடியில் சிறிலங்கா படையினர் மீது கைக்குண்டு வீசப்பட்டது. அடையாளம் தெரியாத நபர்களால் வீசப்பட்ட இக் கைக்குண்டு வெடித்தில் 2 இராணுவத்தினர் படுகாயமடைந்தனர். இவர்கள் பலாலி இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

யாழ். நாச்சிமார் கோவிலடி, கோப்பாய், அரியாலை பகுதிகளில் கைக்குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை 5.30 மணிக்கு வடமராட்சி நெல்லியடி மத்திய கல்லூரிக்கு அண்மையில் கிளைமோர்க் குண்டுத் தாக்குதலில் இருந்து சிறிலங்கா இராணுவ வாகனம் தப்பியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் தொடரும் தாக்குதல்களையடுத்து கந்தர்மடம், அரசடி, ஐந்து சந்திப் பகுதிகளில் மேலதிக படையினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டு பாரிய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீதிகளில் செல்லும் பொதுமக்களையும் வாகனத்தில் செல்வோரையும் படைத்தரப்பினர் கடும் சோதனைகளுக்குள்ளாக்கி தாக்கி வருவது அதிகரித்துள்ளது.

மேலும் சுற்றுக்காவல் நடவடிக்கைகளையும் சிறிலங்கா இராணுவத்தினர் யாழ். குடாநாடு முழுவதும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கோப்பாய் சிறிலங்கா காவல் நிலையம் மீது நேற்று புதன்கிழமை இரவு நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 4 காவல்துறையினர் படுகாயமடைந்தனர்.

மல்லாகம் நாவலர் இராணுவ முகாம் மீது நேற்றிரவு கைக்குண்டு வீசப்பட்டது. இதில் படை தரப்புக்கு சேதமில்லை என்று படைதரப்பு தெரிவிக்கின்றது.

http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&

Print this item

  7 புலிகள் சிறைபிடிப்பு
Posted by: Luckylook - 12-22-2005, 01:18 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (7)

விடுதலைப் புலிகள் இலங்கை கடற்படை பயங்கர சண்டை: 3 வீரர்கள் பலி 7 புலிகள் சிறைபிடிப்பு
டிசம்பர் 22, 2005

கொழும்பு:

இலங்கை கடற்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இன்று திடீரென மீண்டும் போர் வெடித்தது.



தங்களது கட்டுப்பாட்டில் உள்ள வடகிழக்கு கடற் பகுதிக்குள் வந்த இலங்கை கடற்படையின் கண்காணிப்புப் படகுகளை விடுதலைப் புலிகள் தாக்கினர். இதையடுத்து நடந்த மோதலில் 3 இலங்கை கடற்படையினர் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது.

கடற்படையின் பதில் தாக்குதல் நடத்தி 7 விடுதலைப் புலிகளை சிறை பிடித்துச் சென்றுள்ளனர்.

மன்னார் அருகே தங்களது இரு படகுகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது விடுதலைப் புலிகள் தாக்கியதாக கடற்படையின் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தா பெரைரா கூறினார்.

இதையடுத்து கடும் துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும், 3 கடற்படையினரை புலிகள் கடத்திச் சென்றதாகவும் கூறிய அவர், அந்த மூவரும் கொலை செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது என்றார்.

அதே நேரத்தில் 7 விடுதலைப் புலிகள் தங்களிடம் பிடிபட்டதாகவும் பெரைரா கூறியுள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கு இலங்கை அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. புலிகளின் தாக்குதலைத் தடுத்து நிறுத்த சர்வதேச சமுதாயம் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும், புலிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அரசின் செய்தித் தொடர்பாளரும் நலத்துறை அமைச்சருமான நிமல் சிரிபாலா கூறியுள்ளார்.

நார்வே மத்தியஸ்தத்தில் கடந்த 2002ம் ஆண்டில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இதன் மூலம் புலிகள் மீறிவிட்டதாகவும் நிமல் சிரிபாலா குற்றம் சாட்டியுள்ளார்.

இத் தாக்குதல் குறித்து புலிகள் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வெளியிடப்படவில்லை.

நார்வேயில் பேச்சு: ராஜபக்ஷே மறுப்பு

முன்னதாக அமைதிப் பேச்சுவார்த்தையை நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடத்தலாம் என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கையை இலங்கை அதிபர் மகந்தா ராஜபக்ஷே நிராகரித்திருந்தார்.

பேச்சுவார்த்தைகளை ஆசியாவில் ஏதாவது ஒரு நாட்டில் நடத்தலாம் என ராஜபக்ஷே கூறி வருகிறார். ஆனால், ஆசியாவில் நடத்தலாம் என்ற அதிபரின் கருத்தில் உள் நோக்கமும் சதியும் இருப்பதாக புலிகள் கூறியுள்ளனர்.

இந் நிலையில் புலிகளின் கோரிக்கையை நிராகரித்து ராஜபக்ஷே நிருபர்களிடம் கூறுகையில்,

ஓஸ்லோவுக்குச் செல்லலாம் என்பதை நான் ஏற்கத் தயாராக இல்லை. இந்த விஷயத்தில் எங்களது நிலையில் மாற்றம் ஏதும் இல்லை. ஆசியாவில் ஏதாவது ஒரு நாட்டில் பேச்சு நடத்தலாம். தனது நாட்டில் பேச்சுவார்த்தையை வைத்துக் கொள்ளுமாறு ஜப்பான் கூறியுள்ளது. அதை நான் வரவேற்கிறேன்.

ஆனால், சிலருக்கு இன்னும் மேற்கத்திய மோகம் பிடித்து ஆட்டுகிறது. இதனால் தான் ஓஸ்லோ செல்வோம் என்கிறார்கள். இதை புலிகளும் ஒப்புக் கொள்வார்கள் என்று கருதுகிறேன். இதனால் ஆசியாவில் ஏதாவது ஒரு நாட்டில் பேச்சு நடத்தலாம் என்றார் ராஜபக்ஷே.

இதற்கிடையே அமைதி முயற்சிகளில் நார்வே அமைச்சர் எரிக் சோல்ஹைம் தலையிடுவதை ராஜபக்ஷே விரும்பவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், அதை அவர் ராஜபக்ஷே மறுத்துள்ளார். தனிப்பட்ட நபர்கள் குறித்து எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றார்.

( நன்றி : தட்ஸ் தமிழ்)

Print this item

  சீக்கியர்களிடம் மன்னிப்புக் கோரும் இந்தியா, தமிழீழத்திடம்
Posted by: நர்மதா - 12-22-2005, 12:43 PM - Forum: தமிழீழம் - Replies (9)

சீக்கியர்களிடம் மன்னிப்புக் கோரும் இந்தியாஇ தமிழீழத்திடம் எப்போது மன்னிப்பு கேட்கும்?


தென்செய்தி இணையத்தளத்திற்காக பழ. நெடுமாறன்


1975 ஆம் ஆண்டு நிடத்தப்பட்ட அவசரகாலக் கொடுமைகளுக்கு 1980ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா மன்னிப்புக் கேட்டார்.
1984 ஆம் ஆண்டு நிடைபெற்ற சீக்கியர்கள் படுகொலை நிகழ்ச்சிக்கு 2005 ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன்சிங் மன்னிப்புக் கேட்டார்.
1989ஆம் ஆண்டு இலங்கை சென்ற இந்திய அமைதிப்படை செய்த அட்டூழியங்களுக்கு யார் எப்போது மன்னிப்பு கேட்பது?
1989 ஆம் ஆண்டுஇ ஆகஸ்ட் மாதம் 2-4 வரையுள்ள ன்று நாள்களிலும் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவம் நடத்திய படுகொலைகள் வரலாறு காணாத துயர நகழ்ச்சி ஆகும்.


தம்பி பிரபாகரன் அவர்களையும் மற்றும் பல புலிகளையும் பெற்றெடுத்த ஊர் என்பதனாலும்இ இவ்வூர் மக்கள் அனைவருமே புலிகளுக்கு முழுமையாக ஆதரவு தந்தவர்கள் என்பதனாலும் வல்வெட்டித்துறை மீது இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு மிகுந்த கோபம் இருந்தது. அந்தக் கோபத்தை அவர்கள் தீர்த்துக் கொண்ட விதம் மிகக் கொடூரமானது.


1919 ஆம் ஆண்டுஇ ஏப்ரல் 13 ஆம் நாள் இந்தியாவில் அமிர்தசரஸ் நகரத்தில் ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்தது. மைதானத்தில் கூடியிருந்த அப்பாவிப் பொதுமக்களைப் பிரித்தானிய இராணுவம் கண்மூடித்தனமாகச் சுட்டுப் படுகொலை செய்தது. அந்தப் படுகொலையைத் தலைமை தாங்கி நடத்திய பிரித்தானிய ஜெனரல் டையர் 'சுட்டேன்இ சுட்டேன்இ குண்டுகள் தீரும்வரை சுட்டேன்" என்று கொக்கரித்தான். ஜாலியன் வாலாபாக் படுகொலை இந்திய மக்களை அன்று கொதித்தெழ வைத்தது. ஆனால்இ இன்று அதே இந்திய நாட்டைச் சேர்ந்த இராணுவம் வல்வெட்டித்துறையில் மற்றொரு ஜாலியன் வாலாபாக்கை நடத்திக் காட்டியது.


ஜனதாதள தலைவர்களுள் ஒருவரும் என்னுடைய நண்பருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் இந்தப் படுகொலையை வியட்நாமில் நிடைபெற்ற 'மயிலாய்" படுகொலைக்கு ஒப்பிட்டார். வியட்நாமில் மயிலாய் என்ற இடத்தில் அமெரிக்க இராணுவம் நடத்திய காட்டுமிராண்டித்தனமான படுகொலைகள் பற்றி அறிய நேர்ந்த போது உலகெங்கும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அமெரிக்காவிலேயே பத்திரிகையாளர்கள்இ மாணவர்கள்இ இளைஞர்கள் ஒன்று திரண்டு இந்தக் கொடூரமான கொலைகளைப் பகிரங்கமாகக் கண்டித்தனர். ஆனால்இ வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவம் நடத்திய படுகொலைகளை இந்திய அரசு திட்டமிட்டு மறைத்தது. இந்தியப் பத்திரிகைகளுள் பெரும்பகுதி இச்செய்தியை மறைப்பதில் ஒத்துழைப்புக் கொடுத்தன. ஆனால்இ வல்வெட்டித்துறையில் இச்சம்பவம் நடந்த 13 நாட்களுக்குப் பிறகு அங்கு சென்ற இலண்டன் 'பைனான்ஸியல் டைம்ஸ்" பத்திரிகையின் டெல்லி நிருபர் டேவிட் ஹவுஸ்கோ இச்சம்பவத்தைப் பற்றிய விவரங்களை முதன் முதலாக ஆகஸ்ட் 17 ஆம் நாளன்று அவரது பத்திரிகையின் வாயிலாக அம்பலப்படுத்தினார். அதையடுத்து இலண்டன்இ 'டெலிகிராப்" பத்திரிகையின் டெல்லி நிருபர் ஜெரமி கங்ரான் என்பவரும் இச்செய்தியை வெளியிட்டார். இந்தியப் பத்திரிகைகள் இச்செய்தியை அடியோடு மூடி மறைத்தன. வெளிநாட்டுப் பத்திரிகைகளில் இச்செய்தி பரபரப்பாக வெளிவந்த பிறகு செப்டம்பர் 3 ஆம் நாள் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்" சிறிய அளவில் இச்செய்தியை வெளியிட்டது.


இந்த முறை வல்வெட்டித்துறைக்கு நான் சென்றபோது இந்தப் படுகொலைகள் பற்றிய முழு விவரத்தையும் அறிந்துகொள்ள முயற்சி செய்தேன். வல்லை மக்கள் குழுவின் தலைவர் எஸ்.செல்வேந்திராஇ செயலாளர் ஆனந்தராஜ்இ பொருளாளர் நடனசிகாமணி உட்பட பலரை நான் சந்தித்துப் பேசினேன். இப்படுகொலைகள் நடைபெற்று ஏறத்தாழ ஆறு மாதங்களுக்குப் பிறகு கூட அந்த அதிர்ச்சியில் இருந்து வல்லை மக்கள் மீளாததை நான் பார்த்தேன்.


1989 ஆம் ஆண்டுஇ ஆகஸ்டு மாதம் 2 ஆம் நாள் வல்வெட்டித்துறை சந்தைச் சதுக்கத்தில் காலை 11 மணிக்கு யாரும் எதிர்பாராத விதமாக விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் 6 இந்தியப் படை வீரர்கள் இறந்ததுடன் 11 பேர் காயம் அடைந்தனர்.


இந்நகழ்ச்சியைத் தொடர்ந்து வல்வெட்டித்துறையைச் சுற்றி இருந்த அன்று இராணுவ முகாம்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான இந்திய இராணுவத்தினர் வெறியுடன் புறப்பட்டு வந்து வல்வெட்டித்துறையைச் சுற்றி வளைத்தனர். உடனடியாக ஊரடங்குச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தினர். தொடர்ச்சியாக அன்று நாள்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டது. வீடுகளை விட்டு வெளியே வராமல் அச்சத்துடன் பதுங்கியிருந்த மக்களை வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து பதறப் பதறச் சுட்டுக் கொன்றார்கள். மொத்தம் 63 பேர் இவ்விதம் படுகொலை செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ உதவி செய்வதற்கு முன்வந்த பிரான்சு மருத்துவக் குழுவினரை ஊருக்குள் நுழையவே இந்திய இராணுவம் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து அன்று நாள்களாக இராணுவத்தினர் ஊரைச் சுற்றி முற்றுகையிட்டு இருந்ததால் இறந்து போனவர்களின் பிணங்களைக்கூட அப்புறப்படுத்த முடியவில்லை. பிணங்கள் அழுகிப்போன நிலையில் அந்தந்த வீடுகளுக்குள்ளேயே வைத்து உறவினர்களால் எரிக்கப்பட்டன. கணவர் உடலை மனைவியும்இ மனைவியின் உடலைக் கணவரும்இ பெற்றோரின் உடலைப் பிள்ளைகளும்இ பிள்ளைகளின் உடலைப் பெற்றோரும் எரிக்க வேண்டிய அவலத்திற்கு ஆளாயினர்.


மொத்தம் 123 வீடுகள் அடியோடு நாசமாக்கப்பட்டன. 45 கடைகள் முழுமையாக எரிக்கப்பட்டுச் சாம்பலாயின. 12 மீன்பிடி படகுகள் நாசம் செய்யப்பட்டன. 176 மீன்பிடி வலைகள் எரிக்கப்பட்டன. பல வீடுகளில் தங்க நிகைகள்இ பணம்இ மின்னணுப் பொருள்கள் இந்திய இராணுவத்தினரால் கொள்ளையடிக்கப்பட்டன. ஏராளமான பெண்கள் மிக மோசமான முறையில் கற்பழிக்கப்பட்டார்கள்.


இந்த நிகழ்ச்சி நடப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் இந்திய இராணுவ பிரிகேடியர் சங்கர் பிரசாத் என்பவர் மக்கள் குழு உறுப்பினர்களைக் கூட்டிப் பின்வருமாறு கொக்கரித்தாராம்.


'இந்திய இராணுவம் மீது புலிகள் தாக்குதல் மேற்கொண்டால் உங்கள் ஊரை அடியோடு எரிப்பேன். நூற்றுக்கணக்கில் மக்களைச் சுட்டுத் தள்ளுவேன். இராமாயணத்தில் இலங்கை எரிக்கப்பட்டதைப் போல மீண்டும் இலங்கை எரியும். எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. நாங்கள் உலகின் 4 ஆவது பெரிய இராணுவம்"


அவர் மிரட்டியதைப் போலவே விரைவில் நடந்தது. அழகிய வல்லை நிகரம் சுடுகாடானது.


அந்த சோக வரலாற்றினைக் கீழே தந்துள்ளேன்.


மினி வீடியோ சினிமா கொட்டகை ஒன்றில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த சுமார் 30 பேரை வெளியே கொண்டுவந்து நடுத்தெருவில் உச்சி வெயிலில் உட்கார வைத்தார்கள். அங்கு நின்ற ஒரு சீக்கிய சிப்பாய் திடீர் என இயந்திரத் துப்பாக்கி மூலம் படபடவென்று சுட்டான். அண்மையில் திருமணம் செய்துகொண்ட இராஜரத்தினம் என்பவர் அந்த இடத்திலேயே துடிதுடித்து மாண்டார். அவர் அருகில் இருந்த கருணாநந்தராஜா என்பவர் படுகாயத்துடன் கீழே விழுந்தார். அவர் மார்பில் இருந்து இரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. அந்தப் பயங்கரங்களைக் கண்டு மற்றவர்கள் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். மற்றொரு இந்திய இராணுவ சிப்பாய் அங்கிருந்த கடைகள் மீது மண்ணெண்ணையை ஊற்றித் தீயை வைத்தான். இதற்கிடையில் சடையாண்டி கோயிலுக்குள் இருந்த பெண்கள்இ குழந்தைகள் உட்பட 20 பேரை வேறு சில சிப்பாய்கள் அடித்து இழுத்துக்கொண்டு வந்தார்கள். அவர்கள் உடலிலிருந்து இரத்தம் பீறிட்டு வந்தது. அப்போது ஒரு ஜீப் வேகமாக வந்து நின்றது. அதிலிருந்து கீழே குதித்த சிப்பாய்கள் திடீர் என்று நாலாபுறமும் தானியங்கித் துப்பாக்கிகளினால் சடசடவெனச் சுட்டார்கள். 40 வயதான சிவபாக்கியம்இ 60 வயதான தங்கராஜா ஆகியோர் அந்த இடத்திலேயே துடிதுடித்துச் செத்தார்கள். முப்பதுக்கும் அதிகமானவர்கள் பலத்த காயத்துடன் கீழே சரிந்து விழுந்தார்கள். காயம் அடைந்தவர்கள் தண்ணீர்இ தண்ணீர் என்று கதறிக்கொண்டு இருந்தார்கள். இரத்த வெறி பிடித்த இந்தியச் சிப்பாய்கள் அதைப்பற்றிக் கவலைப்படாமல் மேலும் மேலும் தங்கள் நரவேட்டையைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தார்கள்.


சிவபுர வீதி என்னும் தெருவை நான் பார்வையிட்டேன். அங்கு 10 வீடுகள் முழுவதுமாக எரிந்து நாசம் ஆகிக் கிடப்பதைக் கண்டேன்.


கோட்சேயின் மறுபிறவி


இந்திய இராணுவ சிப்பாய்கள் வெறிக்கு இந்தியத் தலைவர்களின் படங்கள் கூடத் தப்பவில்லை. நெடியகாடு என்னும் பகுதியில் கணபதி படிப்பகம் ஒன்று உள்ளது. அதில் ஐந்து அடி உயரமான மகாத்மா காந்தியின் உருவப்படம் தொங்க விடப்பட்டு இருந்தது. இந்திய சிப்பாய்கள் அந்தப் படிப்பகத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்து தங்கள் தேசத் தந்தையின் படத்தையும் உடைத்து எரித்துவிட்டுச் சென்றார்கள். காந்தி அடிகளின் எரிந்து கிடந்த அலங்கோலமான படத்தை நானும் பார்த்தேன். காந்தியைச் சுட்ட கோட்சே மறுபிறவி எடுத்து வந்து காந்தியின் படத்தைக்கூட விட்டுவைக்கவில்லை.


அதைப் போல வர்ணகுலசிங்கம் அரசரத்தினம் என்னும் ஒரு வணிகன் பெரிய வீடு ஒன்றும் நாசப்படுத்தப்பட்டு இருந்தததை நான் பார்த்தேன். அவர் ஓர் இந்திய பக்தர். இந்தியத் தூதுவராக இருந்த தீட்சித்தின் நெருங்கிய நண்பர். தமிழீழ மக்களின் பிரச்சினைகளை இந்தியாவினால்தான் தீர்க்க முடியும் என்று உறுதியாக நம்பியவர். 1987 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர்தம் மனைவி பத்மலோசினிஇ தம் 5 பெண் குழந்தைகளுடன் தனியாக இருந்து குடும்பத்தை எப்படியோ சிரமப்பட்டு நடத்திக் கொண்டிருந்தார். அந்தப் பெரிய வீட்டில் வரவேற்பறையில் இந்திரா காந்தியின் ஆளுயர மூவர்ணப்படம் தொங்கவிடப்பட்டு இருந்தது. அந்த வீட்டிற்குள் புகுந்த இந்திய இராணுவத்தினர் அதைப் பார்த்துக்கூடத் தங்கள் கொடுஞ்செயலை நிறுத்தவில்லை. வீட்டையே கொளுத்திவிட்டுச் சென்றார்கள்.


வித்தனை ஒழுங்கை என்னும் தெருவில் ஒரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து கண்டபடி சுட்டு 8 பேரைப் படுகொலை செய்துஇ ஏராளமானவர்களைப் படுகாயப்படுத்தி விட்டுச் சென்றார்கள். இறந்தவர்களின் சடலங்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு நடுவே மற்றவர்கள் அன்று நாள்கள்வரை அப்படியே பதுங்கி இருக்க வேண்டியிருந்தது. வல்வெட்டித்துறை கிராமிய வங்கி முற்றிலுமாக எரிந்து சாம்பல் மேடாகிக் கிடந்தது. எந்தத் தெருவுக்கு நான் சென்றபோதிலும் அந்தந்த தெருக்களில் இந்திய இராணுவம் இழைத்த அட்டூழியங்களைப் பற்றியும்இ படுகொலைகளைப் பற்றியும் கண்ணீர்க் கதைகளை மக்கள் கூறினார்கள்.


வல்வெட்டித்துறையில் மட்டுமில்லாமல் அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊரணிஇ பொலிகண்டி ஆகிய இடங்களிலும் இந்திய இராணுவத்தினர் வன்முறை வெறியாட்டம் நடத்தினார்கள். ஊரணி அரசு மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான மக்கள் அடைக்கலம் புகுந்திருந்தார்கள். இந்திய இராணுவம் அந்த மருத்துவமனையைச் சுற்றி வளைத்துக்கொண்டு யாரையும் வெளியே செல்லவிடவில்லை. அதே நேரத்தில் வீடுகளில் இருந்தும் கோயில்களில் இருந்தும் பலர் இராணுவத்தினரால் இழுத்து வரப்பட்டு மருத்துவமனைக்கு முன்னால் உள்ள தார்ச் சாலையில் உட்கார வைக்கப்பட்டு இருந்தனர். மருத்துவமனைக்கு உள்ளே இருந்தவர்கள் வெளியில் உட்கார வைக்கப்பட்டவர்களின் கதி என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் இருந்தார்கள். நீண்ட நேரத்திற்குப் பிறகு அனைவரும் முகாமுக்குக் கொண்டு போகப்பட்டனர்.


வல்வெட்டித்துறை சந்தையில் இருந்து 100 மீட்டர் தெற்கே தெணிய அம்பை என்ற இடத்தில் பல வீடுகள் எரிக்கப்பட்டு அந்தத் தீ மேலும் பரவிக்கொண்டே இருந்தது.


இராணுவத்தினர் போய்விட்டதாக நினைத்து அங்கிருந்த மக்கள் தண்ணீரை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். வல்லை மக்கள் குழுவின் செயலாளர் ஆனந்தராஜாவும் அங்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஒத்துழைத்தார். அப்போது உடுப்பிட்டியில் இருந்து இந்திய இராணுவச் சிப்பாய்கள் 30 பேர் திடீர் என அங்கு வந்து சேர்ந்தனர். தீயை அணைக்க முயற்சி செய்து கொண்டிருந்த ஆனந்தராஜாவை அவர்கள் பார்த்துவிட்டார்கள். அவருடன் சேர்ந்து மேலும் 8 பேரைப் பிடித்துக் கைதிகளாகத் தங்களுடன் இழுத்துச் சென்றார்கள். அப்போது கேப்டன் பர்க் என்னும் இந்திய அதிகாரி அங்கு வந்தார். அவர் ஏற்கெனவே ஆனந்தராஜாவிற்கு நன்கு அறிமுகமானவர். எனவே அவரிடம் ஏதோ முறையிடுவதற்காக ஆனந்தராஜா முயன்றபோது தன்னிடம் இருந்த துப்பாக்கியை அவர் மார்புக்கு நேரே தூக்கிப் பிடித்தார். ஆனந்தராஜ் பாடசாலை ஒன்றின் முதல்வர்இ மக்கள் குழுவின் செயலாளர்இ இந்திய இராணுவத்திற்கும் மக்களுக்கும் இடையே பாலமாக இருந்து செயல்பட்டவர். ஒரு முறை பருத்தித்துறை இந்திய இராணுவ முகாமைச் சேர்ந்த சிப்பாய் ஒருவனைப் புலிகள் கைது செய்து கொண்டுபோய் விட்டார்கள். அவரை மீட்பதற்கு வடமராட்சி முழுவதும் இராணுவத்தினர் சல்லடை போட்டுத் தேடினார்கள். ஆனாலும்இ அவர்களால் சிப்பாயை மீட்க முடியவில்லை. அந்த Nநிரத்தில் இந்திய அதிகாரி ஆனந்தராஜாவிடம் மன்றாடினார். புலிகளின் வடமராட்சிப் பொறுப்பாளரான தீபன் என்பவருடன் தொடர்புகொண்டு அந்தச் சிப்பாயை விடுவிக்கச் செய்து இந்திய இராணுவ அதிகாரிகளிடம் ஆனந்தராஜாவும் மக்களும் ஒப்படைத்தார்கள்.


இப்படியெல்லாம் செய்த ஆனந்தராஜாவையே அவர்கள் துச்சமாக மதித்தார்கள். ஆனந்தராஜாவையும்இ அவருடன் கைது செய்யப்பட்ட மற்றவர்களையும் அழைத்துச் சென்று உடுப்பிட்டி இராணுவ முகாமில் மிருகத்தனமாகத் தாக்கினார்கள். நான்கு சீக்கிய சிப்பாய்கள் ஆனந்தராஜாவைச் சுற்றிக்கொண்டு உருளைக் கட்டைகளால் மாறி மாறித் தாக்கினார்கள். அவர் தலையில் இருந்து குருதி ஓடியது. முகத்தில் ஆழமான காயங்கள் ஏற்பட்டன. கீழே விழுந்த அவர் தொண்டையின் மீது ஒரு மரக்கட்டையை வைத்துச் சீக்கிய சிப்பாய் ஒருவன் அதன் மீது ஏறி நன்றான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்ட நேரத்தில் அவர் அவனைப் பிடித்துத் தள்ளியதும் ஆத்திரம் கொண்ட அந்தச் சிப்பாய் அவர் முகத்தில் மாறி மாறி மிதித்தான். அவர் மூச்சு திணறி மயங்கிவிட்டார். அவர் இறந்துவிட்டதாகக் கருதி அந்த வெறியர்கள் விலகிச் சென்றார்கள். சிறிது நேரத்தில் அங்கு வந்த இராணுவ டாக்டர் கேப்டன் சௌத்ரி ஆனந்தராஜாவை ஏற்கெனவே அறிந்தவர். அதனால் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று தக்க சிகிச்சை செய்து அவர் உயிரைக் காப்பாற்றினார்.


மறுநாள் காலை மருத்துவமனையில் படுத்திருந்த ஆனந்தராஜாவை டாக்டர் கேப்டன் சௌத்திரி 'உடல்நிலை விசாரிப்பதுபோல" வந்தார். தலையிலே பட்ட காயத்திற்கு மருந்து போடப்பட்டு இருந்தது. முகம் வீங்கி இருந்தது. வலது கன்னத்தில் ஆழமான காயம் இருந்ததால் எழுந்திருக்க முடியவில்லை. படுத்திருந்தார். டாக்டருடன் வந்த கேப்டன் கர்பத்சிங் என்னும் சீக்கியன் அவரின் தலைமயிரைப் பிடித்துத் தூக்கி நிமிர்த்தினான். பின்பு இந்தியில் ஏதோ திட்டினான். 'போரில் இரண்டு பக்கமும் இழப்புகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததுதான்இ ஆனால்இ போரில் எந்தச் சம்பந்தமும் இல்லாத பொது மக்களிடம் நீங்கள் நடந்து கொண்ட முறை காட்டுமிராண்டித்தனமானதுஇ கொடூரமானது" என ஆனந்தராஜா பதில் கூறினார். அதைக் கேட்ட டாக்டரின் முகம் கோபத்தினால் சிவந்தது.


'புலிகளின் ஆயுதக் கிடங்குகள் இருக்கும் இடத்தை நீங்கள் காட்டிக் கொடுத்தால் உங்கள் உயிரைக் காப்பாற்றும்படி மேலதிகாரிகளுக்கு நான் சிபாரிசு செய்வேன். நீங்களும் குடும்பஸ்தர்இ பள்ளியின் முதல்வராக இருப்பவர்இ எதற்காக வீணாக உயிரை இழக்க வேண்டும்" என்றார்.


அவரது வார்த்தைகளைக் கேட்டதும் ஆனந்தராஜா அந்த வேதனையின் நடுவிலும் சிரித்துக்கொண்டே 'டாக்டர் நான் கடவுளை பிரார்த்திக்கப் போகிறேன். இவ்வாறு கூறியதும் டாக்டர் சௌத்திரி வேகமாக விலகிச் சென்றார்.


அவர் போய்ச் சேர்ந்த சில நிமிடங்களில் பிரிகேடியர் சங்கர் பிரசாத்இ கர்னல் அவுஜியாஇ கர்னல் சர்மா ஆகியோர் ஜீப்பில் வந்து சேர்ந்தனர். நேராக ஆனந்தராஜா படுத்திருந்த கட்டிலை நோக்கி வந்தார்கள். அவரைப் பார்த்ததும் ஆச்சரியப்படுபவர் போல் பிரிகேடியர் நடந்தார்.


'என்ன மிஸ்டர் ஆனந்தராஜா என்ன நடந்தது. உங்களை எதற்காக இங்குக் கொண்டு வந்தார்கள்" என்று கேட்டார். என்னை ஏன் கொண்டுவந்தார்கள் என்பது எனக்கே தெரியாது. என்னுடைய கோலத்தைப் பாருங்கள் என்று கூறிக் குருதியில் தோய்ந்து உலர்ந்து இருந்த தனது சட்டைஇ வேட்டிஇ குருதி ஓடி உறைந்து போயிருந்த தலை எல்லாவற்றையும் பிரிகேடியருக்குக் காட்டினார்.


'மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாடுதானா உங்கள் நாடு? சே! என்னால் நம்பவே முடியவில்லை". என்று வேதனையோடு ஆனந்தராஜா கூறியபோது அந்தப் பிரிகேடியர் பின்வரும் பதிலைச் சொன்னார்.


'மிஸ்டர் ஆனந்தராஜாஇ வெரி சாரிஇ உங்களைத் தற்செயலாகத்தான் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்காக மனம் வருந்துகிறேன். உங்களுடைய சொல்லைப் புலிகள் கேட்கமாட்டார்கள். எப்படியாவது அவர்களை நாங்கள் அழித்து விடுவோம். அதற்கு உங்களைப் போன்ற படித்தவர்கள் தான் உதவி செய்ய வேண்டும். புலிகள் ஒளிந்திருக்கும் இடங்களை நீங்கள் கூறினால் உங்களைப் பத்திரமாக இந்தியாவுக்கே அனுப்பி அங்கே நீங்களும் உங்கள் குடும்பம் நிம்மதியாக வாழ்வதற்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்கிறோம். நீங்கள் பயப்படத் தேவையில்லை. உங்கள் முகத்தை மறைத்து முகமூடி போட்டு அழைத்துச் செல்கிறோம். எங்களுடைய ஜீப்பில் வந்தே புலிகளின் மறைவிடங்களைக் காட்டிக் கொடுக்கலாம்" என்றார்.


பிரிகேடியரின் இந்தக் கோமாளித்தனமான வார்த்தைகளைக் கேட்டு ஆனந்தராஜா எரிச்சலுடன் பதில் கூறினார்.


'அத்தகைய துரோகத்தை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன். புலிகளை அழிக்க நினைப்பதை மறந்துவிட்டு அவர்களுடன் பேசிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள். அதுதான் உங்களுக்கும் உங்கள் நாட்டிற்கும் நல்லது. அதை விட்டுவிட்டுச் சிறு பையன்களிடம் கூறுவது போல என்னிடம் கூறாதீர்கள்." என்று கூறிவிட்டு அவர் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டார்.


பிரிகேடியர் அருகே நின்ற கர்னல் சர்மா 'நாங்கள் சொன்னபடி செய்யாவிட்டால் உம்மை காங்கேசன்துறை முகாமுக்கு அனுப்பிவிடுவோம்" என்று மிரட்டினார்.


புலிகள் அல்லது அவர்களின் ஆதரவாளர்கள் என்று சந்தேகத்தின் பேரில் சிறைப்பிடிக்கப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைச் சித்திரவதை முகாமான காங்கேசன்துறை முகாமுக்கு அனுப்பிவிடுவார்கள். அங்கு 750 சதுர அடி கொண்ட ஒரு வீட்டில் 150 பேரை அடைத்து வைப்பார்கள். ஒரே ஒரு மலக்கூடத்தைத்தான் அத்தனை பேரும் பயன்படுத்த வேண்டும். சாப்பாடு ஒழுங்காக அளிக்கப்படுவது இல்லை. கைதிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5ஃஸ்ரீ வழங்கப்படவேண்டும் என்பது விதிமுறை ஆகும். அனால்இ கைதிகளிடம் கையெழுத்து பெற்றுக் கொள்வார்களே தவிர பணத்தைக் கொடுக்க மாட்டார்கள். இராணுவ அதிகாரிகளே அவற்றை எடுத்துக் கொள்வார்கள். யாராவது தப்பித் தவறி இதைத் தட்டிக் கேட்டால் அன்று முழுவதும் அவருக்கு அடியும் உதையும்தான் கிடைக்கும்.


முன்பொரு நாள் காங்கேயன்துறை முகாமுக்கு அங்குள்ள கைதிகளைப் பார்வையிட்டு அவர்களது குறைகளைக் கேட்டு ஏதாவது உதவி செய்வதற்காகச் சென்ற மக்கள் குழுவில் ஆனந்தராஜாவும் ஒருவராக இருந்தார். அந்தக் கொடுமையான முகாம் பற்றி அவருக்கு ஏற்கெனவே தெரியும். அதனால்தான் அவரை அந்த முகாமுக்கு அனுப்பப் போவதாக அதிகாரிகள் மிரட்டினார்கள்.


'அந்த முகாமுக்கு அனுப்புவதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. நீங்கள் என்னைச் சுட்டுக் கொன்றால் கூட நீங்கள் கூறும் கீழ்த்தரமான வேலைகளை நான் செய்யப்போவது இல்லை" என ஆனந்தராஜா பதில் கூறினார்.


தங்களின் மிரட்டல் பலிக்காத கோபத்தில் அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். அவர் துயரம் அத்துடன் ஓயவில்லை. ஆகஸ்ட் 4 ஆம் நாள் அன்று காலை 10 மணி அளவில் டாக்டர் சௌத்திரி மீண்டும் வந்தார். ஆனந்தராஜாவிடம் ஒரு கோப்பைக் காட்டிக் கையெழுத்து போடும்படி வற்புறுத்தினார்.


'மிஸ்டர் ஆனந்தராஜா இங்கே அடைத்து வைக்கப்பட்டவர்களுள் 6 பேர் இறந்து போனார்கள். அவர்களின் அடையாளம் தெரியாததால் அவர்களை இங்கேயே தகனம் செய்துவிட்டோம்"


'டாக்டர்இ அவர்கள் இங்கே கொண்டு வரும்போது நின்றாகத்தானே இருந்தார்கள். அவர்கள் விடுதலைப் புலிகள் அல்லவே. அப்பாவிப் பொது மக்கள்தானேஇ திடீர் என அவர்கள் எப்படி இறந்தார்கள்" என்று ஆனந்தராஜா கேட்டார்.


ஆனால் டாக்டர் எவ்விதப் பதிலும் சொல்லாமல் ஆறு பேரை எரித்ததற்கு ஆதாரமாக அவரிடமிருந்து கையெழுத்தைக் கட்டாயமாகப் பெற்றுக் கொண்டார்.


ஒரு மரண வீட்டில் துக்கம் கொண்டாடுவதற்காக உறவினர்கள் வந்து கூடியிருந்தார்கள். திடீர் என அந்த வீட்டை இந்திய இராணுவம் சுற்றி வளைத்துக் கொண்டது. ஆண்கள் அனைவரையும் வயது வேறுபாடு இல்லாமல் வெளியே இழுத்து வந்து வரிசையாக நிறுத்தி வைத்தார்கள். நீங்கள் எல்லோரும் புலிகள்இ உங்களைச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று வெறிபிடித்தவன் போல ஒரு சிப்பாய் கத்தினான். துக்க வீட்டில் இருந்த பெண்கள் எல்லோரும் வெளியே ஓடிவந்து சிப்பாய்களின் கால்களில் விழுந்து கதறினார்கள். அனால்இ அந்த மூர்க்கர்களின் மனம் இரங்கவில்லை.


ஆண்களையெல்லாம் அடித்து இழுத்துக்கொண்டு முச்சந்தியை நோக்கி நடந்தார்கள். அவர்களுக்கு பின்னால் அழுது கொண்டும் புலம்பிக்கொண்டும் ஓடிவந்த பெண்களை 'பூட்ஸ்" கால்களினால் உதைத்தும்இ துப்பாக்கிக் கட்டைகளினால் அடித்தும் விரட்டினார்கள். வல்வெட்டித்துறைச் சந்தியை அடைந்ததும் அவர்களை ஒரு சாலையில் உட்கார வைத்தார்கள். முதல் நாள் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் ஊதிப்போய் அங்கேயே கிடந்தன. சிலருடைய தலைமயிரைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் எதிர்ப்புறமாக எரிந்த கடை ஒன்றின் முன்னால் நிற்க வைத்தார்கள். அடுத்து என்ன நிடக்குமோ என்ற அச்சம் எல்லோரையும் ஆட்டிப் படைத்தது. அங்கு நின்ற மற்றொரு சிப்பாய் அவ்வாறு நிறுத்தப்பட்ட ஆறு பேரையும் சுட்டுத் தள்ளினான். அந்த ஆறு பேரும் அந்த இடத்திலேயே அவர்களுடைய உறவினர்கள் பார்த்துக் கொண்டிருக்க துடிதுடித்து இறந்தார்கள்.


மனிதர்கள் மட்டுமல்லாமல் பறவைகளையும் இந்திய இராணுவம் விட்டுவைக்கவில்லை. வல்வெட்டித்துறை இராணுவ முகாமிலிருந்து சிறிது தொலைவில் பூச்சிபுத்தான் என்ற இடத்தில் இருந்த கோழிப்பண்ணையை இந்திய இராணுவம் கொளுத்தியதன் விளைவாக அங்கிருந்த 500க்கும் மேற்பட்ட கோழிகள் எரிந்து கருகிப் போயின.


வல்வெட்டித்துறைப் பிள்ளையார் கோயில் ஊரிலிருந்து சிறிது ஒதுக்குப்புறத்தில் அமைந்து இருக்கிறது. பொதுவாக எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் மக்கள் அங்கே ஓடி அடைக்கலம் புகுவார்கள். அன்றும் ஏறக்குறைய 400 பேர் வரையில் அந்த ஆலயத்திற்குள் தஞ்சம் புகுந்து இருந்தனர். அவர்களையும் இந்திய இராணுவம் விட்டுவைக்கவில்லை.


கோவில் என்றும் பார்க்காமல் பூட்ஸ் கால்களோடு வெறித்தனமாகப் பாய்ந்து ஓடி வந்தார்கள். உள்ளே நுழைந்த அவர்களின் கண்களுக்கு முதலில் பட்டவர்கள் கோயில் அர்ச்சகர்கள்தாம். அந்த இரண்டு அர்ச்சகர்களையும் கோவிலுக்குள் வைத்தே பலமாகத் தாக்கினார்கள். பிறகு அங்கிருந்த இளைஞர்களையெல்லாம் தேடிப்பிடித்து அடித்து வெளியே சந்திக்குக் கொண்டு வந்தார்கள். மேலும்இ மற்றப் பகுதிகளில் பிடிபட்டவர்களையும் அங்கே கூட்டி வந்தார்கள். கொதிக்கும் வெயிலில் அங்கிருந்து உருண்டுகொண்டே உடுப்பிட்டியில் இருந்த இந்திய இராணுவ முகாம் நோக்கிச் செல்லுமாறு ஆணையிட்டார்கள். கொதிக்கும் தார்ச்சாலையின் சூட்டைப் பொறுக்கமுடியாமல் வேதனையுடன் உருண்டு உருண்டு சென்று கொண்டிந்த மக்களை மரக்கட்டைகளால் அடித்துக் கொண்டே சென்றார்கள்.


உடுப்பிட்டி முகாமிலும் மிகக் கொடுமையான சித்திரவதைகள் நடந்தன. அதன் விளைவாக இறந்த 11 பேரின் சடலங்களை முகாமுக்குள்ளேயே மற்றக் கைதிகள் முன்னால் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினார்கள்.


வல்வெட்டித்துறையில் அன்று நாள்களாகத் தொடர்ந்து நரவேட்டை நடத்திய இந்திய இராணுவம் அச் செய்திகளை அடியோடு மறைத்தது. இந்திய இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நிடந்த மோதலில் சற்றும் எதிர்பாராத விதமாகப் பொதுமக்கள் 24 பேர் கொல்லப்பட்டனர்.


விடுதலைப் புலிகள் தாக்குதல் மேற்கொண்டதன் விளைவாகச் சில வீடுகளும்இ கடைகளும் சேதம் அடைந்தன. இம்மோதலில் 6 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர் என்று இந்திய இராணுவம் கூறிய அப்பட்டமான பொய்யை இந்திய வானொலியும்இ தொலைக்காட்சியும்இ பத்திரிகைகளும் வெளியிட்டன. இந்தக் கொடுமைகளை அடியோடு மறைப்பதற்கு முயற்சி செய்தன. ஆனால்இ அன்னிய நாடுகளைச் சேர்ந்த பத்திரிகைகள்தாம் முதன் முதலாக இந்திய அக்கிரமங்களை அம்பலப்படுத்தின.


அதைப் போல சர்வதேச மன்னிப்புச் சபைஇ ஆசியா வாட்ச் என்னும் உலக மனித உரிமை அமைப்புகள் வல்வெட்டித்துறைப் படுகொலைகளைப் பற்றி விசாரணை நடத்தி இந்திய இராணுவத்தைக் கண்டனம் செய்தன.
வல்வெட்டித்துறை மக்கள் குழுவின் செயலாளரும் இந்திய இராணுவத்தின் பாதிப்புக்கு நேரிடையே ஆளானவருமான ஆனந்தராஜா அவர்கள் தலைமையில் மக்கள் குழு ஒன்று சென்னைக்கு வந்து சகல அரசியல் தலைவர்களையும் சந்தித்து இந்தக் கொடுமைகளை அம்பலப்படுத்தியது.


இக்குழு டெல்லிக்கும் சென்று பல அரசியல் தலைவர்களையும் சந்தித்து உண்மையை விளக்கிற்று. ஜனதா தளப் பொதுச் செயலாளரான ஜார்ஜ் பெர்ன்னாண்டஸ் இந்தப் பிரச்சினையை அம்பலப்படுத்துவதில் முன்னின்றார். வெறும் வார்த்தைகளோடு அவர் நின்றுவிடவில்லை. வல்வெட்டித்துறைப் படுகொலை பற்றிய ஆதாரங்கள்இ புகைப்படங்கள் ஆகியவற்றைத் தொகுத்து ஆங்கிலத்திலும்இ தமிழிலும்இ இந்தியிலும் நூலாக வெளியிட்டு இந்தியா முழுவதிலும் மட்டுமன்றுஇ உலகெங்கிலும் அனுப்பி இராஜீவ் அரசின் முகமூடியைக் கிழித்து எறிந்தார். அவரின் இந்த முயற்சிக்குத் தமிழ் மக்கள் கடமைபட்டுள்ளார்கள்.



யாழ். மருத்துவமனை


27.2.90 அன்று யாழ். மருத்துவமனைக்குச் சென்றேன். இந்திய இராணுவம் செய்த கொடுமைகளுக்கெல்லாம் தலையாய கொடுமை இங்குதான் நடத்தப்பட்டது. எந்த நாடாக இருந்தாலும் அந்த நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் இராணுவமோஇ காவல்துறையோ உள்ளே புகக்கூடாது. போர் விதிகளில் மிக முக்கியமானதாக இதை உலகெங்கும் கடைப்பிடித்து வருகிறார்கள். இந்தப் போர் விதியை இந்திய இராணுவம் அடியோடு மீறியது.


யாழ். நகரின் ஒரு பகுதியில் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு ஆளானதால் ஆத்திரம் கொண்ட இந்திய இராணுவம் யாழ். மருத்துவமனையுள் வெறியுடன் புகுந்தது. அங்கிருந்த பலரைச் சுட்டுக் கொன்றது. இந்தக் கொடிய நிகழ்ச்சியைப் பற்றி நேரில் விசாரிக்க நேரின் அங்கு சென்றேன். அங்குள்ள டாக்டர்கள் என்னை அன்போடு அழைத்துச் சென்று நிகழ்ச்சிகள் நடைபெற்ற இடங்களை எனக்குக் காட்டினார்கள்.


இந்தியப் படை உள்ளே சுட்டுக்கொண்டே வந்தபோது மாடி அறை ஒன்றில் இருந்த டாக்டர்கள் இந்த ஒலி கேட்டுக் கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார்கள். 'இது மருத்துவமனைஇ நாங்கள் டாக்டர்கள்" என அவர்கள் அலறியதற்கு இந்தியப் படை செவிசாய்க்கவில்லை. மாடிப்படிகளிலேயே அவர்களைச் சுட்டுத் தள்ளினார்கள். மருத்துவமனையின் பல பகுதிகளில் கண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட்டார்கள். இதன் விளைவாக டாக்டர்கள்இ செவிலியர்கள் 21 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.


நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் 109 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அந்த மருத்துவமனையில் 89 ஆகிய இரண்டு பிரிவுகள் முழுமையாகச் சேதம் அடைந்துவிட்டன. படுகொலை செய்யப்பட்ட டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பெயர்கள் எழுதப்பட்ட பலகை மருத்துவமனையின் முகப்பில் தொங்கவிடப் பட்டுள்ளது. இஃது இந்திய இராணுவத்தின் கொடுமையை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. அந்த அதிர்ச்சியில் இருந்து அந்த மருத்துவமனை டாக்டர்களும் செவிலியர்களும் இன்னமும் மீளவில்லை என்பதையும் நேரின் பார்த்தேன்.




தம்பி வீட்டில் இந்தியப்படை


1985 ஆம் ஆண்டுஇ அக்டோபரில் வல்வெட்டித்துறையில் உள்ள தம்பி பிரபாகரன் அவர்களுடைய வீட்டிற்கு நான் சென்று பார்த்தபொழுது வீட்டின் கூரை மட்டுமே நாசமாகிக் கிடந்தது. சுவர்கள் சேதமடையாமல் நின்றன. சிங்கள இராணுவம் அதற்கு மேல் நாசப்படுத்தவில்லை. ஆனால்இ ஐந்தாண்டுகளுக்குப் பின்பு 1990 ஆம் ஆண்டுஇ மார்ச்சு மாதம் அதே வீட்டைச் சென்று பார்த்தபொழுது சுவர்கள் எல்லாம் இடிக்கப்பட்டு அடியோடு நாசமாகிக் கிடந்தன.


பிரபாகரனைப் பிடிக்க முடியாத இந்திய இராணுவம் பீரங்கியால் சுட்டு அவரின் வீட்டை நாசப்படுத்தியது. பிரபாகரனைச் சுடமுடியாத ஆத்திரத்தை அவரது வீட்டைச் சுட்டுத் தீர்த்துக்கொண்டது.


அனாலும்இ இந்தியப்படை வீரர்கள் தம் நாட்டிற்குத் திரும்பும் சமயத்தில் அணிஇ அணியாக அந்த வீட்டிற்கு வந்து அதன் முன் நின்று ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டுப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். இந்த வினோதக் காட்சியை வல்வெட்டித்துறை மக்கள் வேடிக்கையாகப் பார்த்து இரசித்தனர்.



நன்றி: தென்செய்தி

Print this item

  உயிரா ? உறவா?
Posted by: kuruvikal - 12-22-2005, 12:23 PM - Forum: கதைகள்/நாடகங்கள் - Replies (6)

"விடிஞ்சிட்டுது எழும்பு தம்பி கடைக்குக்கிடைக்குப்போய் காய் கறி களை வாங்கி வந்தால் காய்ச்சி படைச்சுப்போடலாம் எல்லே. இப்ப போனால் தான் நல்ல மரக்கறியள் வாங்கலாம் எழும்பப்பன்". அம்மாவின் குரல் என்னை சங்கடப்படுத்துகிறது. அதுகளுக்காய் ஒரு சொட்டுக்கண்ணீர் சிந்த வக்கில்லாமல் ஓடிய நாங்கள் படைச்சென்ன காச்சி என்ன?? அலுத்தது மனசு.

கண்கள் மூட மறுத்த இந்த வாரத்தின் முடிவு நாள் இந்த மாதத்தின் தொடக்க நாள். கண்ணீர் இன்றி என் மனசழும் காலமிது. எத்தனையோ வீடுகளில் இது தான் நிலை, அத்தனை சுமையை எங்கள் மீது கொடிய கடவுள் இறக்கிவைத்த நாட்கள் இவை. எப்படி நான் மறப்பன், வருசங்கள் சும்மா இல்லை காலில சக்கரத்தைக்கட்டிக்கொண்டு ஓடுது. நானும் தான் சேந்து ஓடிறன் பலன் என்ன. என்ர மனச்சாச்சியைக்கொண்டு, நான் மிருகமாய் நடந்த அந்த நாளை அந்த கணங்களை பத்து வருசமாகியும் என்னால மறக்கவே முடியவில்லை.

"இன்று என் நண்பன்ரையும் அவன்ர குடும்பத்தின்ரையும் நினைவுநாள். ஒன்றாய் நாலு உருப்படிகளை நான் அநாதைப்பிணங்களாய் விட்டு விட்டு கோழையாய் ஓடிய நாள். வலிகாமத்திற்கு ஆமியின் படை நகர்வு ஆரம்பித்த வேளை அது, செல்லடிகள் பலரது காதுகளை ஊனமாக்கிச்சென்றது. நான் கூட அந்த தாக்கத்தை கனநாள் உணர்ந்திருக்கிறன். நாங்கள் மண்ணில் அ, ஆ எழுதிப்பழகிய காலம் தொட்டு கள்ள மாங்காய்க்கு கல்லெறிந்து, மாடு மேய்ச்சு, மாட்டுக்குப்புல்லறுத்து, தோட்டம் செய்து, மதவடியில சைக்கிலும் கையுமாய் கூட்டம் கூடி காட்ஸ்விளையாடி, அரும்பும் மீசையுடன் அவரவர் வாழ்க்கைத்துணைகளை தேடி இப்படிப்பல நிகழ்வுகளிற்கு என்னோடு ஒன்றாய் நின்றவன். அந்த இடப்பெயர்வோடு என் தோழமையை முடித்துக்கொண்டான்.

என்ர நண்பன் பாஸ்கரன் ஒரு வேலி இங்கிருந்து நான் சமிக்கை காட்ட அதுக்கு ஏற்றபடி எங்களது அன்றாட நடவடிக்கைகளை அமைத்துக்கொள்வான். ஒன்றாய் உண்டு ஒன்றாய் உறங்கி வாழ்ந்த
தோம். நாங்கள் மட்டும் இல்லை எங்களுக்கு அமைஞ்ச மனைவிமார் கூட இருவரும் நல்ல நண்பிகள் தான். குடும்பம் குடும்பமாய் எங்கட நட்பு விரிந்து சென்றது. செல்லடியின் உக்கிரம் உணர்ந்த பாஸ்கர். தோட்டம் துரவு காணி வீடு என்று இதுகளை கட்டிக்கொண்டிருந்த என்னையும் என் குடும்பத்தையும் எத்தனை தரம் கெஞ்சி இடப்பெயரச்செய்தான். "எட பைத்தியக்காரா காணி பூமிகளை நாளைக்கு நாங்கள் வாங்கிச்சேர்க்கலாமடா இதுகள் எங்க ஓடப்போகுதுகள் நீ எத்தனை வருசம் கழிச்சு வந்தாலும் இங்க தான் இருக்கும். இதுகளைப்பாக்கிறதுக்கு நீ முதலில உயிரோட இருக்கோணுமடா. விசர்க்கதை கதைக்காமல் வெளிக்கிடு போவம்."

அவனது அதட்டலும் அன்பான வேண்டுதலும் உயிர்காக்க எங்களது ஓட்டத்தை ஆரம்பிக்க வைத்தது. இருவரும் ஆளுக்கொரு உழவு இயந்திரத்தில் அத்தியவசியமான பொருட்களை ஏத்திககொண்டு வெளிக்கிட்டோம். அவனது வண்டி முன்னால் சென்று கொண்டிருந்தது நான் அவனைப்பின் தொடர்ந்தேன். இடையில் இரு மரநிழலில் அவன் வண்டியை மறித்து "மச்சான் சீப்பிளேன் மேலால பறக்குது இப்படி இரண்டு வண்டி முன்னாலும் பின்னாலும் போக வந்து அடிக்கப்போறான். நான் முன்னால போறன் ஒரு கால் மணித்தியாலம் கழிச்சு பின்னால வா பத்திரமாய் ஓடுடா அவசரப்படாதே. நான் கொஞ்சத்தூரம் போய் காத்திருக்கிறன்." என்றான்.

அவன் எப்பொழுதும் தீர்க்க தரிசனத்தோடு நடப்பதுண்டு நானும் உடன்பட்டேன். அது தான் எங்கள் கடைசி பேச்சு என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவன் சொன்னபடி கால் மணிநேரம் கடந்தபின்னர் எனது குழந்தைகள் பசியாறி முடிய மரநிழலில் இருந்து வண்டியை எடுத்துக்கொண்டு நெடுஞ்சாலையில் பயணமானேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவனைக்காணவில்லை கொஞ்சம் விரைந்து சென்றேன். அவனது வண்டி ஒரு மதவுடன் மோதி நின்றிருந்தது அந்த பெட்டியில் இருந்த பொருட்களிற்கும் அவர்களது தசைகளிற்கும் வித்தியாசம் தெரியவில்லை எல்லாம் ஒன்றாகி கிடந்தது நாங்கள் நிழலில் நின்ற வேளை காதைக்கிழித்துக்கொண்டு சென்ற செல் என் நண்பனை பதம் பார்த்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஒருவர் கூட மிச்சம் இல்லை அவனது நாய் மட்டும் மதவின் கீழ் முனகிக்கேட்டது. அந்த சத்தத்தைக்கேட்ட எனது நாயோ தன் தோழனைத்தேடிக்குரைத்து குதித்துச்சென்றது. நாயை நின்று அழைத்து வர அவசரம் என்னை விடவில்லை. குடும்பத்தோடு அநாதையாய் சிதறிப்போயிருக்கும் என் நண்பனை அருகில் சென்று கட்டி அணைத்து அழ என்னால் முடியவில்லை. "அப்பா பாஸ்கரன் மாமாவையிட வண்டி அங்க கிடக்குது நாங்கள் எங்க போறம்" என் மகனின் கேள்விக்கு எனக்கு விடை கிடைக்கவில்லை. தேம்பி அழுது கொண்டிருந்த அவர்களை. "சத்தம் போடாமல் இருக்கிறியளா இப்ப இதில நிண்டா உங்களுக்கும் இது தான் கதி" சற்று முரட்டுத்தனமாய் அடக்கிவிட்டு நான் வண்டியை ஓடியபடியே இருந்தேன்.

ஒரு கணம் நின்று நான் அவனிற்காய் அழுதால் அடுத்த கணம் தொடர்ந்து பெய்து கொண்டிருந்த செல்மழையில் நானும் அதே நிலைக்குத்தான் ஆளாகியிருக்கக்கூடும். மரணத்தை தொட்டுவிட்ட என்ன நண்பனைப்பற்றி விளிம்பில் நிற்கும் நான் சிந்திக்கலாமா?? என்ற சமாதானத்தை எனக்கு நானே கூறியபோதும் அடிக்கடி நான் தலைகுனிவேன். கோழையாய் நான் எப்படி ஓடினே. சீவனை விட்டுக்கிடப்பவன் என் நண்பன் அவனது உருவம் கூட சரியாக இல்லை சிதறிப்போய் இருந்தான். கையும் காலும் எங்கெங்கோ போயிருக்க முண்டங்களாய் கிடந்த அவனது மனைவி பிள்ளைகளை திரும்பிப்பார்க்காமல் ஓடிய என்னை நண்பன் என்று அவன் ஏற்றுக்கொள்வானா.?? எனது நாய்க்கு இருந்த உணர்வு கூட அந்த நிமிடங்கள் எனக்குள் செத்துப் போனதே இதை அவனது உயிர் பார்க்கக்கிடைத்தால் என்னை மன்னிக்குமா? ஒன்றா இரண்டா 35 ஆண்டுகள் நட்பை அரைநொடியில் வந்த மரணபயம் அறுத்துவிட்ட அவமானக்கதையை மறந்து விடத்தான் முடியுமா.? என்னையே என்னால் மன்னிக்க முடிவதில்லை. அவனிடம் மண்றாடுவதுண்டு மன்னித்துவிடும்படி இறைஞ்சுவதுண்டு மன்னிப்பானா? கேட்டுச்சொல்லுங்கள்! இன்று அவன் நினைவு நாள் காய்ச்சிப்படைப்போம் அவன் வந்து போவான் என்னை காறித்துப்பாமல் போவானா.??

<i>ஆக்கம் - கயல்விழி</i>

Print this item

  உயிரா ? உறவா?
Posted by: kuruvikal - 12-22-2005, 12:20 PM - Forum: கதைகள்/நாடகங்கள் - No Replies

"விடிஞ்சிட்டுது எழும்பு தம்பி கடைக்குக்கிடைக்குப்போய் காய் கறி களை வாங்கி வந்தால் காய்ச்சி படைச்சுப்போடலாம் எல்லே. இப்ப போனால் தான் நல்ல மரக்கறியள் வாங்கலாம் எழும்பப்பன்". அம்மாவின் குரல் என்னை சங்கடப்படுத்துகிறது. அதுகளுக்காய் ஒரு சொட்டுக்கண்ணீர் சிந்த வக்கில்லாமல் ஓடிய நாங்கள் படைச்சென்ன காச்சி என்ன?? அலுத்தது மனசு.

கண்கள் மூட மறுத்த இந்த வாரத்தின் முடிவு நாள் இந்த மாதத்தின் தொடக்க நாள். கண்ணீர் இன்றி என் மனசழும் காலமிது. எத்தனையோ வீடுகளில் இது தான் நிலை, அத்தனை சுமையை எங்கள் மீது கொடிய கடவுள் இறக்கிவைத்த நாட்கள் இவை. எப்படி நான் மறப்பன், வருசங்கள் சும்மா இல்லை காலில சக்கரத்தைக்கட்டிக்கொண்டு ஓடுது. நானும் தான் சேந்து ஓடிறன் பலன் என்ன. என்ர மனச்சாச்சியைக்கொண்டு, நான் மிருகமாய் நடந்த அந்த நாளை அந்த கணங்களை பத்து வருசமாகியும் என்னால மறக்கவே முடியவில்லை.

"இன்று என் நண்பன்ரையும் அவன்ர குடும்பத்தின்ரையும் நினைவுநாள். ஒன்றாய் நாலு உருப்படிகளை நான் அநாதைப்பிணங்களாய் விட்டு விட்டு கோழையாய் ஓடிய நாள். வலிகாமத்திற்கு ஆமியின் படை நகர்வு ஆரம்பித்த வேளை அது, செல்லடிகள் பலரது காதுகளை ஊனமாக்கிச்சென்றது. நான் கூட அந்த தாக்கத்தை கனநாள் உணர்ந்திருக்கிறன். நாங்கள் மண்ணில் அ, ஆ எழுதிப்பழகிய காலம் தொட்டு கள்ள மாங்காய்க்கு கல்லெறிந்து, மாடு மேய்ச்சு, மாட்டுக்குப்புல்லறுத்து, தோட்டம் செய்து, மதவடியில சைக்கிலும் கையுமாய் கூட்டம் கூடி காட்ஸ்விளையாடி, அரும்பும் மீசையுடன் அவரவர் வாழ்க்கைத்துணைகளை தேடி இப்படிப்பல நிகழ்வுகளிற்கு என்னோடு ஒன்றாய் நின்றவன். அந்த இடப்பெயர்வோடு என் தோழமையை முடித்துக்கொண்டான்.

என்ர நண்பன் பாஸ்கரன் ஒரு வேலி இங்கிருந்து நான் சமிக்கை காட்ட அதுக்கு ஏற்றபடி எங்களது அன்றாட நடவடிக்கைகளை அமைத்துக்கொள்வான். ஒன்றாய் உண்டு ஒன்றாய் உறங்கி வாழ்ந்த
தோம். நாங்கள் மட்டும் இல்லை எங்களுக்கு அமைஞ்ச மனைவிமார் கூட இருவரும் நல்ல நண்பிகள் தான். குடும்பம் குடும்பமாய் எங்கட நட்பு விரிந்து சென்றது. செல்லடியின் உக்கிரம் உணர்ந்த பாஸ்கர். தோட்டம் துரவு காணி வீடு என்று இதுகளை கட்டிக்கொண்டிருந்த என்னையும் என் குடும்பத்தையும் எத்தனை தரம் கெஞ்சி இடப்பெயரச்செய்தான். "எட பைத்தியக்காரா காணி பூமிகளை நாளைக்கு நாங்கள் வாங்கிச்சேர்க்கலாமடா இதுகள் எங்க ஓடப்போகுதுகள் நீ எத்தனை வருசம் கழிச்சு வந்தாலும் இங்க தான் இருக்கும். இதுகளைப்பாக்கிறதுக்கு நீ முதலில உயிரோட இருக்கோணுமடா. விசர்க்கதை கதைக்காமல் வெளிக்கிடு போவம்."

அவனது அதட்டலும் அன்பான வேண்டுதலும் உயிர்காக்க எங்களது ஓட்டத்தை ஆரம்பிக்க வைத்தது. இருவரும் ஆளுக்கொரு உழவு இயந்திரத்தில் அத்தியவசியமான பொருட்களை ஏத்திககொண்டு வெளிக்கிட்டோம். அவனது வண்டி முன்னால் சென்று கொண்டிருந்தது நான் அவனைப்பின் தொடர்ந்தேன். இடையில் இரு மரநிழலில் அவன் வண்டியை மறித்து "மச்சான் சீப்பிளேன் மேலால பறக்குது இப்படி இரண்டு வண்டி முன்னாலும் பின்னாலும் போக வந்து அடிக்கப்போறான். நான் முன்னால போறன் ஒரு கால் மணித்தியாலம் கழிச்சு பின்னால வா பத்திரமாய் ஓடுடா அவசரப்படாதே. நான் கொஞ்சத்தூரம் போய் காத்திருக்கிறன்." என்றான்.

அவன் எப்பொழுதும் தீர்க்க தரிசனத்தோடு நடப்பதுண்டு நானும் உடன்பட்டேன். அது தான் எங்கள் கடைசி பேச்சு என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவன் சொன்னபடி கால் மணிநேரம் கடந்தபின்னர் எனது குழந்தைகள் பசியாறி முடிய மரநிழலில் இருந்து வண்டியை எடுத்துக்கொண்டு நெடுஞ்சாலையில் பயணமானேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவனைக்காணவில்லை கொஞ்சம் விரைந்து சென்றேன். அவனது வண்டி ஒரு மதவுடன் மோதி நின்றிருந்தது அந்த பெட்டியில் இருந்த பொருட்களிற்கும் அவர்களது தசைகளிற்கும் வித்தியாசம் தெரியவில்லை எல்லாம் ஒன்றாகி கிடந்தது நாங்கள் நிழலில் நின்ற வேளை காதைக்கிழித்துக்கொண்டு சென்ற செல் என் நண்பனை பதம் பார்த்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஒருவர் கூட மிச்சம் இல்லை அவனது நாய் மட்டும் மதவின் கீழ் முனகிக்கேட்டது. அந்த சத்தத்தைக்கேட்ட எனது நாயோ தன் தோழனைத்தேடிக்குரைத்து குதித்துச்சென்றது. நாயை நின்று அழைத்து வர அவசரம் என்னை விடவில்லை. குடும்பத்தோடு அநாதையாய் சிதறிப்போயிருக்கும் என் நண்பனை அருகில் சென்று கட்டி அணைத்து அழ என்னால் முடியவில்லை. "அப்பா பாஸ்கரன் மாமாவையிட வண்டி அங்க கிடக்குது நாங்கள் எங்க போறம்" என் மகனின் கேள்விக்கு எனக்கு விடை கிடைக்கவில்லை. தேம்பி அழுது கொண்டிருந்த அவர்களை. "சத்தம் போடாமல் இருக்கிறியளா இப்ப இதில நிண்டா உங்களுக்கும் இது தான் கதி" சற்று முரட்டுத்தனமாய் அடக்கிவிட்டு நான் வண்டியை ஓடியபடியே இருந்தேன்.

ஒரு கணம் நின்று நான் அவனிற்காய் அழுதால் அடுத்த கணம் தொடர்ந்து பெய்து கொண்டிருந்த செல்மழையில் நானும் அதே நிலைக்குத்தான் ஆளாகியிருக்கக்கூடும். மரணத்தை தொட்டுவிட்ட என்ன நண்பனைப்பற்றி விளிம்பில் நிற்கும் நான் சிந்திக்கலாமா?? என்ற சமாதானத்தை எனக்கு நானே கூறியபோதும் அடிக்கடி நான் தலைகுனிவேன். கோழையாய் நான் எப்படி ஓடினே. சீவனை விட்டுக்கிடப்பவன் என் நண்பன் அவனது உருவம் கூட சரியாக இல்லை சிதறிப்போய் இருந்தான். கையும் காலும் எங்கெங்கோ போயிருக்க முண்டங்களாய் கிடந்த அவனது மனைவி பிள்ளைகளை திரும்பிப்பார்க்காமல் ஓடிய என்னை நண்பன் என்று அவன் ஏற்றுக்கொள்வானா.?? எனது நாய்க்கு இருந்த உணர்வு கூட அந்த நிமிடங்கள் எனக்குள் செத்துப் போனதே இதை அவனது உயிர் பார்க்கக்கிடைத்தால் என்னை மன்னிக்குமா? ஒன்றா இரண்டா 35 ஆண்டுகள் நட்பை அரைநொடியில் வந்த மரணபயம் அறுத்துவிட்ட அவமானக்கதையை மறந்து விடத்தான் முடியுமா.? என்னையே என்னால் மன்னிக்க முடிவதில்லை. அவனிடம் மண்றாடுவதுண்டு மன்னித்துவிடும்படி இறைஞ்சுவதுண்டு மன்னிப்பானா? கேட்டுச்சொல்லுங்கள்! இன்று அவன் நினைவு நாள் காய்ச்சிப்படைப்போம் அவன் வந்து போவான் என்னை காறித்துப்பாமல் போவானா.??

<i>ஆக்கம் - கயல்விழி</i>

Print this item