![]() |
|
ஆலங்காய்ப் பிட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: ஆலங்காய்ப் பிட்டு (/showthread.php?tid=1869) |
ஆலங்காய்ப் பிட்டு - shanmuhi - 12-22-2005 <b>ஆலங்காய்ப் பிட்டு </b> ஆலங்காய்ப் பிட்டு என்றால் எனது மகனுக்கு நல்ல விருப்பம். அனேகமான சிறார்களுக்கு இது பிடிக்கும் என்று அடித்துக் கூறலாம். எனது சின்ன வயசில் நான் அதிகம் விரும்பிச் சாப்பிடும் காலை உணவு இதுவே. இப்பொழுதும் மகனுக்குச் செய்து கொடுக்கும் சாக்கில் ஒரு பிடி பிடித்துவிடலாம் தேவையான பொருட்கள் ஓரு கப் வறுத்த அரிசிமா அரை கப் வறுத்த உழுத்தம்மா ஓரு கப் பசும்பால் கால் கப் வறுத்த சவ்வரிசி ஒரு ரின் மில்க் (200 m.l. condensed milk) இரண்டு தேக்கரண்டி சீனி சுவைக்காக முந்திரிப் பருப்பு, முந்திரிகை வத்தல் வாசனைக்கு ஏலம் செய்முறை அரிசிமா, உழுத்தம்மா அளவான உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பசும்பாலை தண்ணீர் கலந்து மெதுவாகச் சூடாக்கிக் கொள்ளுங்கள். இப்பொழுது கலந்து வைத்த மாவினுக்குள் மெதுவான சூட்டில் உள்ள பாலை ஊற்றி நன்கு பிசைந்து கொண்டு ஆலங்காய் அளவிலான உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இவ் உருண்டைகளை ஆவியில் வேகவைத்து ஒரு பாத்திரத்தில் பரவி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக கொதிக்கும் தண்ணீரில் சவ்வரிசியைப் போட்டு அதனுடன் ரின் மில்க், சீனி போட்டு கிளறியபடியே வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் மா உருண்டைகளையும் போட்டு மெதுவாகக் கிளறவும். இறுதியில் முந்திரிப் பருப்பு, முந்திரிகை வத்தல், ஏலம் போட்டு இறக்கி விடுங்கள். என்ன ஆலங்காய்ப்பிட்டு கமகமக்கிறதா? சாப்பிட்டுவிட்டுச் சொல்லுங்கள். http://suuvvai.blogspot.com/ - sinnappu - 12-22-2005 ம் செய்து பாப்பம் ஆலங்காய் எண்டவுடனே எங்கையடா ஆலங்காய்க்கு போறது எண்டு நினைச்சன் நன்றி நன்றி ஆ .கா. பிட்டுக்கு எல்லாம் இருக்கட்டும் பேசாமல் சமைத்து அனுப்பலாமே - Snegethy - 12-22-2005 ஆகா எனக்கு ஆலங்காய்ப்புட்டு விருப்பம்.செய்யுறவை எனக்கும் அனுப்புங்கோ ஓ.கே. - shanmuhi - 12-22-2005 களத்தில் எல்லாம் சாப்பிடுறதுக்குத்தான் இருக்கினம். செய்யிறதுக்கு இல்லப்போல - கீதா - 12-22-2005 ஆகா ஆலங்காய்பிட்டு என்ட உடனே எனக்கு ஊ ர்நினைவு வந்தது ? எங்க அம்மா காலையில் Üடதலாக (சாப்பாடு)ஆலங்காய்பிட்டுத்தான் செய்து தருவா நாங்கள் சாபிட்டு பாடசாலைக்கு போய்விடுவம் இப்போ அதெல்லாம் நினைக்க ஆசையாக இருக்கு ? மிகவும் சுவையானது நன்றாக இருக்கும் ஆலங்காய்பிட்டு (இன்னும் ஒன்று எனக்கு அதுகும் றொம்பப்பிடிக்கும் பனங்காய் கொழுக்கொட்டை ) நன்றி சண்முகிஅக்கா தகவலுக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sabi - 12-22-2005 தெரியாத தெரியாத சாப்பாடெல்லாம் சொல்லுறீங்கள். ம்.. ம்.. அம்மாட்டைச் சொல்லி செய்து சாப்பிடவேணும் செய்முறைக்கு நன்றி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Rasikai - 12-23-2005 ஆ இதுவா ஆலங்காய் பிட்டு. எண்ட அம்மா ஒரு நாளும் செய்து தந்ததில்லை. நன்றி தகவலுக்கு சண்முகி - vasisutha - 12-23-2005 எனக்கு செய்து அனுப்பாமல்..தாங்களே செய்து சாப்பிடுபவர்கள் எல்லாருக்கும் வயித்துக்குத்து வர வரம் தருகிறேன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 12-23-2005 ஆலங்காய்ப்பிட்டு புதிசா இருக்கிறது. பால்க்கொழுக்கட்டை இப்படியா செய்யிறது..?? எனவே சண்முகி அக்காட ரெசபியை முயுற்சிக்க நான் தயார்? எத்தனை பேர் எவ்வளவு வேணும் என்று அளவோட 1000 Pounds தமிழினி என்ற பெயருக்கு வெஸ்டேன் யூனியன்ல அனுப்பிவிடுங்கோ காசு கிடைச்ச அடுத்த நிமிடம் DHLல பாசல் வரும் ஓகேயா..?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- RaMa - 12-23-2005 என்ன இது புதிசாக இருக்கு... செய்முறைக்கு நன்றி சண்முகி அக்கா... என்ன தமிழினி சொந்த வியாபாரம் தொடங்கிறிங்கள் போல இருக்கு?. எதற்கும் பார்ட்னார் வேணும் என்றால் இங்காலை ரமாவிற்கு ஒரு 1000 டொலர்ஷ் அனுப்பி விடுங்க. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - shanmuhi - 12-23-2005 தமிழினியின் சொந்த வியா-பாரம் வெற்றி பெற வாழ்த்துக்கள்... - tamilini - 12-23-2005 ஓடரைத்தருவம் என்டில்லை. வாழ்த்தோட நிண்டிட்டியளே ரமா உங்க ஊருப்பக்கம் உங்களிட்ட பொறுப்பைத்தரலாம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 12-24-2005 என்ன டமிழ் Fast Food கடை தொடங்கியாச்சுப் போல அப்ப சின்னப்புவையும் பிடிச்சு பக்கத்திலை மற்றதையும் திறக்கிறது சும்மா வியாபாரம் பிக்குமெல்லோ........ - Snegethy - 12-24-2005 வயித்துக்குத்து வரம்குடுக்கிறாங்களே...செய்யுறவங்க வசிக்கு அனுப்புங்க. றமாக்க என்ன எல்லாரிட்டயும் 1000 டொலர் கேக்குறிங்கள்?? எனக்கென்னமோ பத்திரம் அனுப்புறன் என்று சொன்னீங்கள் கோயில் பிஸினஸ் தொடங்க<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kuruvikal - 12-24-2005 ரிசிப்பி கொடுத்தது சண்முகி அக்கா..அதில பிழைப்பு நடத்திறது...! :?: :roll: நன்றி சண்முகி அக்கா.. இந்த வகைப் பிட்டுப் பற்றி இப்பதான் அறியுறம்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Danklas - 12-24-2005 Rasikai Wrote:ஆ இதுவா ஆலங்காய் பிட்டு. எண்ட அம்மா ஒரு நாளும் செய்து தந்ததில்லை. நன்றி தகவலுக்கு சண்முகி அமா, சின்ன பபா, அம்மா செய்து தந்தால்த்தான் சாப்பிடுவீங்களோ? 2 கழுதை வயசாகுது இப்பவும் அம்மாதானோ?(ஆமா ஒரு கழுதைக்கு என்ன வயசு? :roll: 8,9?) அம்மா வந்து தான் கனனியை போட்டுவிடுவாவோ? அல்லது யாழ்.கொம் எண்டு அடிச்சுவிட்டால்த்தான் யாழ்களத்தை பார்ப்பியளோ?? :evil: :evil: :evil: வந்துட்டா கதைக்க,, பேசாமல் சன்முகி மாமி எழுதி தந்த குறிப்பை பார்த்து சாப்பிட்டு நல்ல பிள்ளையாட்டம் சட்டி பானைகளை கழுவி வைச்சிட்டு பேசாமல் இருக்கனும்,,, :evil: :evil: இதில மேல சொன்னது எல்லாருக்கும் பொருந்தும், ஓய் சின்னா உங்களுக்கும்தான்,,, :evil: :evil: - kuruvikal - 12-24-2005 டன்...பெண்களட்ட கேட்கக் கூடாததைக் கேட்டிட்டேள்..! பாருங்கோ அவையள் உங்களைக் குடையாட்டி..இதை வைச்சே..! இப்ப காசு கொடுக்க கள்ளப் பாஸ்போட் கள்ள பேர்த்சேட்டி பிக்கட் றிசல்சீட் வரும் அதைக் கொடுத்தும் பல விசயங்கள் நடக்குது..கவனம் டன்..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 12-24-2005 தம்பி டண் கிறிஸ்மஸ்க்கு நல்ல கச்சேரி இருக்குப் போல சும்மா கிடந்த ரசிகையை உசுப்பேத்தி விடுகிறாய் பாத்தப்பு.... - Mathan - 12-24-2005 ஆலங்காய் புட்டு கேள்வி பட்டதே இல்லை. செய்முறையை பார்க்க நல்ல டேஸ்டா இருக்கும் போல தான் இருக்கு. - Danklas - 12-24-2005 Mathan Wrote:ஆலங்காய் புட்டு கேள்வி பட்டதே இல்லை. செய்முறையை பார்க்க நல்ல டேஸ்டா இருக்கும் போல தான் இருக்கு. ஓய் மதன் பால் புட்டு கேள்விபடல்லையா? ஆலங்காய் உருண்டை மாதிரி மாவை உருட்டி பாலுக்கை போடுவாங்கள்.. :wink: ஓய் முகத்தார் என்ன லொள்ளா? அக்காச்சிக்கும் தம்பிக்கு 999 இருக்கும்,, விட்டால் நெருப்பு அதிரடி மாதிரி அறிக்கை விடுவீங்க போல... நேற்றுக்கூட அக்காச்சி சோறு காச்சி பொங்கல் மாதிரி வந்தது, இதையெல்லாம் சொன்னனா? சொன்னாலும் அக்காச்சி பேசுவாளா? இல்லையே.... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|