![]() |
|
ஆறுமுகம் போன்ற வேடதாரிகளுடன் புலிகள் உறவுவைத்துக் கொள்ளக் கூ - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: ஆறுமுகம் போன்ற வேடதாரிகளுடன் புலிகள் உறவுவைத்துக் கொள்ளக் கூ (/showthread.php?tid=1882) |
ஆறுமுகம் போன்ற வேடதாரிகளுடன் புலிகள் உறவுவைத்துக் கொள்ளக் கூ - Vaanampaadi - 12-22-2005 ஆறுமுகம் போன்ற வேடதாரிகளுடன் புலிகள் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது அமைச்சர் சி.பி.இரத்நாயக்க கூறுகிறார் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் அரசாங்கத்துடன் இணைவதை தான் ஆட்சேபிக்கவில்லை. ஆனால், அதற்காக மீண்டும் எனது அமைச்சை தாரைவார்க்கமாட்டேன் அதற்கு இடமளிக்கவும் மாட்டேன் என உறுதிபடத் தெரிவிக்கும் தோட்ட உட்கட்டமைப்பு கால் நடை அபிவிருத்தி அமைச்சர் சி.பி.இரத்நாயக்க சுய நலத்திற்காகவும் பதவிகளுக்காகவும் எனது நண்பர் ஆறுமுகம் தொண்டமான் மலையகத்தில் அமைதியை சீரழித்து விடக் கூடாதென்றும் தெரிவித்தார். கொழும்பிலுள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில், கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் சி.பி.இரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். `சிரிசங்கபோ' அரசனைப் போல கடந்த முறை எனது அமைச்சுப் பதவியை தாரைவார்த்தேன். அதற்காக நான் வருத்தப்படவில்லை. சிறுபான்மை பலம் கொண்ட அன்றைய அரசைப் பாதுகாப்பதே எனது நோக்கமாக இருந்தது. ஆனால், இம்முறை அந்த அவசியம் ஏற்படவில்லை. எமக்கு பெரும்பான்மைப் பலம் இருக்கின்றது. எனவே, ஒரு போதும் எனது அமைச்சை கைவிட மாட்டேன். இ.தொ.கா. தற்போது வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. இந்நிலையில் ஆறுமுகம் தொண்டமான் விடுதலைப் புலிகளை சந்தித்து புதியதொரு நாடகமொன்றை அரங்கேற்றியுள்ளார். அவர் தனது மக்களின் நன்மைக்காகவோ ஏனைய தமிழ் கட்சிகளின் மீதுள்ள மதிப்பினாலோ தமிழ்ச் செல்வனை சந்திக்கப் போகவில்லை. தன்னுடைய சுயநலத்திற்காகவும் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்குமாகவே புலிகளை நாடிச் சென்றுள்ளார். புலிகளுக்கு ஆறுமுகம் தொண்டமானைப் பற்றி நன்கு தெரியும். எனவே, இது போன்ற வேடதாரிகளுடன் புலிகள் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது. அமைதியாக வாழும் தோட்டத் தொழிலாளர்களின் நிம்மதியை எனது இனிய நண்பர் ஆறுமுகம் தொண்டமான் கெடுத்து விடக் கூடாது. தனது சுயநலத்திற்காக தோட்டத் தொழிலாளர்களை அடமானம் வைக்க முயற்சிப்பது துரோகச் செயலாகும். தொண்டமான் ஞாபகார்த்த அமைப்பு, வெவன்டன் கலாசார மண்டபம் போன்றவற்றில் பாரிய அளவில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. அதுபோல் தோட்ட உட்கட்டமைச்சிலும் பெருமளவில் நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இந்த அமைச்சு உருவாக்கப்பட்ட காலம் தொடக்கம் தொழிலாளர்களின் தலைவர்களே அமைச்சர்களாக பதவி வகித்தனர். ஆனால், இன்றுவரை தோட்டத் தொழிலாளர்கள் எட்டடி லயன் காம்பராக்களிலேயே வாழ்கின்றனர். மலையகத்தில் பிறந்த நான் இதனை மாற்றியமைப்பேன். 2006 ஆம் ஆண்டு முடிவிற்குள் பல வீடமைப்பு திட்டங்களை முன்னெடுப்பேன் என்றும் அமைச்சர் சி.பி. இரத்நாயக்க தெரிவித்துள் ளார். http://www.thinakural.com/New%20web%20site...ocal%20News.htm Re: ஆறுமுகம் போன்ற வேடதாரிகளுடன் புலிகள் உறவுவைத்துக் கொள்ளக் கூ - Mathan - 12-24-2005 Quote:புலிகளுக்கு ஆறுமுகம் தொண்டமானைப் பற்றி நன்கு தெரியும். எனவே, இது போன்ற வேடதாரிகளுடன் புலிகள் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது. அமைதியாக வாழும் தோட்டத் தொழிலாளர்களின் நிம்மதியை எனது இனிய நண்பர் ஆறுமுகம் தொண்டமான் கெடுத்து விடக் கூடாது. தனது சுயநலத்திற்காக தோட்டத் தொழிலாளர்களை அடமானம் வைக்க முயற்சிப்பது துரோகச் செயலாகும். இரத்நாயக்க சுயநலத்துக்காக சொன்னாலும் இதில் உண்மை இல்லாமல் இல்லை. தொண்டைமானும் அவருடைய வாரிசுகளும் பதவிக்காக எந்த பக்கம் வேண்டுமானாலும் சேர்வார்கள். ஜனாதிபதி தேர்தலில் ரணிலை ஆதரித்து விட்டு அவர் தோற்றதும் மகிந்த பக்கம் சாய்ந்து அவரை ஆதரித்து அமைச்சு பதவி பெற முயன்றார்கள். அதில் சிக்கல் என்றதும் அரசை பயமுறுத்த புலிகளை சந்திக்கிறார்கள். Quote:இந்த அமைச்சு உருவாக்கப்பட்ட காலம் தொடக்கம் தொழிலாளர்களின் தலைவர்களே அமைச்சர்களாக பதவி வகித்தனர். ஆனால், இன்றுவரை தோட்டத் தொழிலாளர்கள் எட்டடி லயன் காம்பராக்களிலேயே வாழ்கின்றனர். ம் இவர்கள் அமைச்சு பொறுப்பில் இருந்து தொழிலாளர்களுக்கு எந்த பயனும் கிடைத்தாக தெரியலை. |