![]() |
|
வீறாப்புத் தணிவதால் விவரம் புரிகிறது தெற்குக்கு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: வீறாப்புத் தணிவதால் விவரம் புரிகிறது தெற்குக்கு (/showthread.php?tid=1884) |
வீறாப்புத் தணிவதால் விவரம் புரிகிறது தெற்குக்கு - Vaanampaadi - 12-22-2005 வீறாப்புத் தணிவதால் விவரம் புரிகிறது தெற்குக்கு நோர்வே அனுசரணையாளர்களை வேண்டாம் என் றார்கள். இப்போது அனுசரணைப் பணியைத் தொடங் குங்கள் என்று நோர்வேக்கு அழைப்பு விடுக்கின்றார்கள். "வெள்ளைப் புலி' என நோர்வேயை விமர்சித்தவர்களே இப்போது நோர்வேக்கு வெற்றிலை வைக்கும் நிலைமை. போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பொருத்தமற் றது, நிராகரிக்கவேண்டும் என்றார்கள். பின்னர் அதை மாற்றியமைப்போம் எனச் சூளுரைத்தார்கள். இப்போது, நடைமுறையில் இருக்கின்ற போர்நிறுத்த ஒப்பந்த ஏற் பாடுகளை செவ்வனே நடைமுறைப்படுத்துவது குறித்துப் பேசத் தயார் என்கிறார்கள். ஒற்றையாட்சிக்குள்தான் எந்தத் தீர்வும் என்றார்கள். அதை விட்டுக்கொடுக்கவே மாட்டோம் எனப் பிரகடனம் செய்தார்கள். இப்போது ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்று தட்டை மாற்றுகின்றார்கள். இனி, சமஷ்டி அடிப்படையில் தீர்வு காண்பதற்கான ஒஸ்லோ இணக்கப்பாட்டையும் விரைவில் ஏற்றுக்கொள்வார்கள். அதில் சந்தேகமே இல்லை. இப்படி நடக்கும் என்று நாடாளுமன்றில் சவால் விட்டி ருக்கின்றார் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த பிரமுகரும் முன்னாள் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரின் வேடிக்கை யான கூட்டமைப்புத் தோழர்கள், அவர்கள் கடைப்பிடிக் கும் கொள்கைகள் ஆகிய விடயங்கள் குறித்து நையாண் டித் தொனியில் உரையாற்றியபோதே இவ்வாறு சவால் விட்டிருக்கின்றார் அவர். நோர்வேயை வெறுத்தவர்கள் இப்போது அதன் காலில் கிடக்கின்றார்கள். நோர்வேயோ அவர்களுக்கு நிபந்தனை போடுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என்பதற்காக பௌத்த, சிங்களப் பேரினவாதத்தைக் கிளப்பி, நடைமுறைச்சாத்தியமற்ற வாக்குறுதிகளைக் கொடுத்தவர் கள், அதனால் தென்னிலங்கை மக்களை ஏமாற்றி, ஆட் சிக் கட்டில் ஏறியதும், தாம் கூறியவற்றை நடைமுறைப் படுத்த முடியாமல் தடுமாறுகின்றார்கள்; திண்டாடுகின் றார்கள். மெய் நிலைக்கு அப்பாற்பட்ட தமது வாக்குறுதிகளை ஒவ்வொன்றாகக் காற்றில் பறக்கவிட்டு, மெய்மை நிலையை ஏற்றுக்கொள்வதற்காக இறங்கிவந்து கொண்டிருக்கின்றார்கள். தமிழரின் உரிமைப் போராட்டத்தை அடக்குவதற்கு நசுக்குவதற்கு அயலில் உள்ள வல்லாதிக்க நாடான இந் தியா, அளவு கடந்த உதவிகளை வழங்கும் என்ற அள வுக்குமீறிய நம்பிக்கை காரணமாகத்தான் மணலைக் கயி றாகத் திரிக்கும் ஆரவார வாக்குறுதிகளை நடைமுறைச் சாத்தியமற்ற கொள்கை நிலைப்பாட்டை மஹிந்த ராஜ பக்ஷவும் அவரது தோழமை அணியினரும் தேர்தலுக்கு முன்னர் விடுத்தனர். 1987இல் செய்யப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந் தத்தில் உள்ள அடிப்படை அம்சங்களைக் கூட தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்கமுடியாத விடயங்கள் என அவர் கள் நிராகரித்தனர். வடக்கும், கிழக்கும் தமிழர்களின் பூர்வீக வாழிடப் பிரதேசம் என்றும், தமிழர்கள் தனியான தேசிய இனத்த வர்கள் என்றும் இலங்கை இந்திய ஒப்பந்தம் கூறுகின்றது. ஆனால், இந்தத் தனித் தாயகக் கோட்பாட்டையும், தமிழர்கள் தனியான தேசிய இனம் என்ற நிலைப்பாட் டையும் "மஹிந்தவின் சிந்தனை' எனும் அவர்களின் தேர் தல் விஞ்ஞாபனமும் மற்றும் தேர்தல் பிரசாரங்களும் அடி யோடு நிராகரித்தன. ஆனால், இப்போது நிலைமை தலை கீழாகி விட்டது. இந்தியா, யதார்த்தபூர்வமான நிலையை களநிலை வரத்தை இலங்கைத் தரப்புக்கு எடுத்துரைத்து, தனது அழுத்தமும், பங்களிப்பும் எவ்வளவு தூரத்துக்குச் செல் லும் என்ற உண்மையை இலங்கைத் தலைமைக்குத் தெட்டத் தெளிவாக வெளிப்படுத்திவிட்டது. ""யுத்தம் வேண்டாம். போர் மூளாமல் பார்த்துக் கொள் ளுங்கள். யுத்தம் வெடித்தால் நாம் அப்படி ஒன்றும் பெரிய நேரடியான உதவிக்கு வரமுடியாது. அதுதான் நிலைமை. ""எப்படியாயினும் பேச்சு மேசையில் புலிகளை இழுத்து வைத்துக் கொள்ளுங்கள். ""நோர்வேயைவிட வேறுயாரும் அனுசரணைப் பணியை சிறப்பாகச் செய்ய முடியாது. ஆகவே, நோர்வேத் தரப்பை விட்டுவிடாதீர்கள். அவர்களின் உதவியைத் தொடர்ந்து பெற்றுக் கொள்வதுதான் ஒரேவழி.'' இந்த மூன்று விடயங்களும் இந்தியத் தரப்பினால் இலங்கை அரசுத் தரப்புக்குத் தெரியப்படுத்தப்பட்டிருப்பதாக நம்பகரமாக அறியவந்துள்ளது. இந்த நிலைமை புரியத் தொடங்கியதும், புதிய இலங்கை அரசு மெல்லத் தனது தட்டை சுருதியை மாற்றிப் போடத் தயாராகிவிட்டது. சமஷ்டி முறையில் தீர்வுகாண்பதற்கான வாய்ப்புகள் குறித்துப் பேசுவதற்கும் தயார் என்று உதவும் நாடுகளின் இணைத் தலைமைகளுக்கு இலங்கை அரசுத் தலைமை கோடிகாட்டியிருப்பதாகக்கூட கொழும்பு ஊடகங்களுக் குத் தகவல்கள் கசியத் தொடங்கியிருக்கின்றன. ஆரம்பத்தில் வீறாப்புப் பேசிய தென்னிலங்கைச் சிங் களத் தலைமை இப்போது வேறு வழியின்றி மெல்ல உரிய தடத்துக்குத் திரும்பத் தயாராகி வருகின்றது. இதற்குக் காரணம் அத்தலைமை உண்மையாகத் திருந்தி விட்டது என்பதல்ல. Uthayan |