![]() |
|
குடா நாடு முழுவதும் படையினரை 5 மீற்றருக்கு ஒரு இராணுவ வீரர் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: குடா நாடு முழுவதும் படையினரை 5 மீற்றருக்கு ஒரு இராணுவ வீரர் (/showthread.php?tid=1886) |
குடா நாடு முழுவதும் படையினரை 5 மீற்றருக்கு ஒரு இராணுவ வீரர் - Vaanampaadi - 12-22-2005 குடா நாடு முழுவதும் படையினரை 5 மீற்றருக்கு ஒரு இராணுவ வீரர் என்ற வீதத்தில் நிறுத்த படைத் தலைமை முடிவு Written by Paandiyan Thursday, 22 December 2005 யாழ். மாவட்டத்தின் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரங் கள் தெரிவிக்கின்றன. அத்துடன் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் பேரில் இம் மாதம் 27ம் நாள் முதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் இரட்டிப்பாக்கப் படவுள்ளதாகவும், அடிக்கடி மோதல்கள் முறுகல்கள் இடம் பெறும் பகுதிகளில் ஐந்து மீற்றருக்கு ஒரு படையினன் என்ற ரீதியில் குடாநாட்டில் படையினரை நிறுத்த உள்ளதாகவும் அவ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை சுற்றுக் காவல் நடவடிக்கைகளும் நாள் முழுவதும் நடைபெறவுள்ளது. படையினரின் நடவடிக்கைகளை கவனிக்கவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மேற்;பார்வை குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பும் மேற்;கொள்ளப்படவுள்ளது. படையினரின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காவல்த் துறையினரினதும் ஒத்துழைப்பும் பெறப்படவிருக்கிறது. தேவை ஏற்படும் பட்சத்தில் வான் பரப்பு கண்காணிப்புக்களும். அதிக அளவான கடல் ரோந்து நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்படவுள்ளன. வீடுகள். கடைகள், பொது இடங்கள் அனைத்திலும் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன் ஊர்திச் சோதனைகளும் அதிகரிக்கப்படவுள்ளன. படையினர் மீது தாக்குதல் மேற்க்கொள்ளப்படும் போது பதில் தாக்குதல் நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவங்கள் நடைபெறும் பகுதிகளில் பொது மக்கள் பெருமளவில் திரண்டு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. படையினர் தமது தேவைக்கு ஏற்ப வீதிப் போக்குவரத்து மற்றும் மற்றும் வீதிச் சோதனை நடவடிக்கைகளை மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், குடாநாட்டில் முகாம்களின் பாதுகாப்பை உறுதி செய்ய படையினரின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் எனவும் அவ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. Sankathi |