Yarl Forum
நடுக்கடலில் சுங்கத்துறைபோலீஸ் சேஸ் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: நடுக்கடலில் சுங்கத்துறைபோலீஸ் சேஸ் (/showthread.php?tid=1888)



நடுக்கடலில் சுங்கத்துறைபோலீஸ் சேஸ் - Vaanampaadi - 12-22-2005

நடுக்கடலில் சுங்கத்துறைபோலீஸ் சேஸ், ரூ. 61 கோடி ஹெராயின் பறிமுதல்
டிசம்பர் 22, 2005

தூத்துக்குடி:



தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு படகு மூலம் ரூ. 61 கோடி மதிப்புள்ள ஹெராயினை கடத்த முயன்ற கும்பலை சுங்கத்துறை மற்றும் போலீஸார் படகில் துரத்திச் சென்று நடுக்கடலில் வைத்து மடக்கிப் பிடித்தனர்.

தூத்துக்குடியிலிருந்து படகுகள் மூலம் ஹெராயின் கடத்தப்பட்டு வருகிறது. இந் நிலையில் ஒரு கும்பல் கடத்தலுக்குத் தயாராவது குறித்து சுங்கத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸார் உதவியுடன் சுங்கத் துறையினர் மாறு வேடத்தில் கடலோர கிராமத்தில் பதுங்கியிருந்தனர்.

அப்போது அதி நவீன படகு ஒன்றில் 3 பேர் கடலுக்குள் கிளம்பிச் சென்றனர். இதையடுத்து சுங்கத்துறை மற்றும் காவல்துறையினர் இன்னொரு படகில் அந்தப் படகைத் துரத்தினர். இவர்களைப் பார்த்ததும் கடத்தல்காரர்கள் அதிவேகமாக சென்றனர்.

ஆனால் நடுக்கடலில் வைத்து கடத்தல் படகை அதிகாரிகள் வளைத்துப் பிடித்தனர். அப்போது ஒருவர் கடலில் குதித்துத் தப்பி விட்டார். மற்ற 2 பேரையும் அதிகாரிகள் மடக்கினர். அந்தப் படகில் ரூ. 61 கோடி மதிப்புள்ள 61 கிலோ ஹெராயின் இருந்தது.

தப்பியவரைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Thatstamil