Aggregator

Thailand’s Parliament Passes Landmark Marriage Equality Bill, Mar 27 / 28, 2024: "ஒருபால் திருமணம்" / பகுதி 03 

3 days 6 hours ago
"The House of Representatives voted overwhelmingly to legalize same-sex marriage. The bill now goes to Thailand’s Senate. This would make Thailand the first country or region in Southeast Asia to pass such a law and the third in Asia, after Taiwan and Nepal. Mar 27 / 28, 2024 [CBC News, The new york times, The diplomat ::Asia, : AL JAZEERA .. etc ]" "ஒருபால் திருமணம்" / பகுதி 03 [நீங்கள் வேறு கருத்துகள் / நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம். நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன். நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கையையும் திறனாய்வு செய்யவில்லை. இதில் கூறியுள்ள கருத்துக் களின் தவறுகளை ஆக்கபூர்வமாக அறிவியல் கண்ணோட்டத்துடன் விமர்சியுங்கள், அத்துடன் இதில் காணப்படும் கேள்விகளுக்கான, சந்தேகங்களுக்கான பதில்களை தரவுகளுடன் கூறுங்கள்] நீங்கள் திருமண பழக்கவழக்கங்களை வெளிப்படையாக, வரலாறு முழுவதும் உற்று நோக்கினால், அங்கே சில பொதுப்படையான காரணிகளை காணலாம். அவை அதிகமாக, திருமணத்திற்கு புறம்பான பாலியல் நடவடிக்கைகளுக்கு தடை, திருமணத்திற்குள் நம்பகத்தன்மை அல்லது ஒருவருக்கு ஒருவர் உண்மையாய் இருத்தல், வாழ்வு முழுவதும் ஒருவருக்கு ஒருவர் அர்ப்பணித்தல், திருமண வாழ்வில் ஒரு பிள்ளை பிறந்தால், அதன் தந்தை கணவரே என்ற அனுமானம், பரம்பரை தொடர்பான பழக்கவழக்கங்கள் மற்றும் குடும்ப சொத்துக்கள், திருமணம் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இருத்தல் (e.g. taboos against sex outside marriage, fidelity within marriage, life-long commitment, the assumption that a child born to a woman during a marriage is the child of her husband, customs concerning inheritance and family wealth, and ahem , the marriage being between a man and a woman) போன்றவற்றை காணலாம். இவை எல்லாம் கட்டாயம் இனப் பெருக்க நோக்கம் கொண்டவையாகவும், பெற்றோர் இருவருமே என உறுதி படுத்துவதுடன், உயிரியல் தாய் தந்தையர் கண்காணிப்பில் பிள்ளைகளுக்கு ஆதரவை நிலைநாட்டுவதும் ஆகும். எனவே தான் என்னைப் பொறுத்தவரையில், ஒருபால் கூட்டுக்கு அல்லது சமூக கூட்டு (civil partnerships - a new institution with a new purpose) ஒன்றிற்கு எந்த பிரச்சினையும் எனக்கு இல்லை. ஆனால் அதை திருமணம் என்று வரையறுப்பதில் தான் உடன்பாடு இல்லை, ஏன் என்றால் கருத்து முக்கிய விடயத்தில் முற்றாக அல்லது எதிர்மறையாக மாறுகிறது. இன்னும் ஒன்றை நான் கட்டாயம் சொல்ல வேண்டும், ஒரு ஆணின் உடலையோ அல்லது ஒரு பெண்ணின் உடலையோ, ஒரு பால் உறவு வைக்குமாறு அல்லது ஓரின சேர்க்கை செய்யுமாறு இயற்கை கட்டாயம் வடிவமைக்கவில்லை. ஒருவேளை அப்படித்தான் வடிவமைத்து இருந்தால், நாம் எல்லோரும் ஒரு இருபால் உயிரியாகவே (hermaphrodites!) இருந்திருப்போம். உயிரின் அடிப்படை இயல்புகளில் ஒன்று இனப்பெருக்கம். உயிர் தன் எளிய கட்டத்தில் இருந்து மேலும் சிக்கலான கட்டத்துக்கு படிமலர்ந்தது போலவே. இனப்பெருக்க முறைகளும் எளிய நிலையில் இருந்து சிக்கலான நிலைக்கு படிமலர்ந்து உள்ளது. தொடக்கத்தில் இனப்பெருக்கம் வெறும் மீளுருவாக்கமாகவே (replicating process), கலவியற்ற இனப்பெருக்கமாகவே (Asexual reproduction) நிலவியது. உதாரணமாக வைரஸ், பற்றீரியா, அதிநுண்ணுயிரி போன்றவை. சிக்கலான உயிரிகளில், இனப்பெருக்கத்திற்கான பாலணுக்களை பால் உறுப்புகள் தாம் உருவாக்கிப் பரிமாறுகின்றன. உதாரணமாக விலங்குகள், மனிதர்கள். ஆகவே நாம் மில்லியன் மில்லியன் ஆண்டுகளாக படிமலர்ந்து அல்லது பரிணமித்து இன்று இந்த நிலைக்கு தேவைகளின் அடிப்படையில் வந்துள்ளோம். எனவே இதை நாம் கவனத்தில் எப்பவும் எடுக்கவேண்டும். அண்மைய ஆய்வுகள், உலகில் இதுவரை 450 விலங்கு இனங்களிடையே ஓரினச்சேர்க்கை நடத்தைகள் காணப்பட்டு அவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதில், பாலூட்டிகள், பறவைகள், பூச்சிகள், ஊர்வன என எல்லாமே அடங்கும். இதில் மனிதர்களுக்கு நெருக்கமான உறவு கொண்ட போனோபோஸ் [ bonobos] ஆண் மற்றும் பெண்ணும் அடங்குகின்றன. சில சந்தர்ப்பங்களில் இனப்பெருக்க காரணங்களும் உள்ளன. உதாரணமாக, ஆண் கூடைட் மீன் [Goodeid fish], தன்னுடன் போட்டியிடும் மற்ற ஆண் கூடைட் மீன்களை [போட்டியாளர்களை] ஏமாற்றுவதற்க்காக, இப்படி நடிக்கின்றன, மற்றும் படி, உண்மையில் அப்படியல்ல. என்றாலும் ஒரே பாலின தோழர்களுக்கு இடையிலான நீண்ட கால உறவு மிருகங்களில் அரிதாகவே காணப்படுகிறது. ஆனால் 6% ஆண் பெரியகொம்பு செம்மறி ஆடுகள் [bighorn sheep] திறம்பட ஓரினச்சேர்க்கை மிருகமாகவே இருக்கின்றன. என்றாலும் விஞ்ஞானிகள் மனித ஓரினச்சேர்க்கை மிகவும் வித்தியாசமாக இருக்கக்கூடும் என்று எச்சரிக்கிறார்கள். மேலும் விலங்குகளில் இருந்து எத்தனையோ மில்லியன் ஆண்டுகளாக ஒரு தேவை அல்லது ஒரு இலக்கை நோக்கி பரிணமித்து தான், நாம் இன்றைய நிலைக்கு முன்னேறி வந்துள்ளோம். ஆகவே மனித சமுதாயத்தில் எது ஏற்றுக் கொள்ளத்தக்கது என்பதற்கு ஆதாரம் காட்டுவதற்கு விலங்குகளைக் குறிப்பிடுவதில் அல்லது விலங்குகளிடம் இருந்து எமக்கு உதாரணம் எடுப்பதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். "ஓரினச்சேர்க்கை: மனிதர்களை எதிர்ப்பீர்கள்; சிங்கங்களை என்ன செய்வீர்கள்?" , என்று ஒருவரின் கட்டுரையை [By ஜெயராணி • 17/10/2019] பார்த்தேன்' விலங்கு உலகில் ஆவணப்படுத்தப் பட்ட தன்னின ஊன் உண்ணும் ஆதாரம் உள்ளது, மேலும் சிங்கம் தன் குட்டிகளையே சாப்பிடுகிறது. ஆகவே மனிதர்களுக்கும் சிசுக்கொலை மற்றும் நரமாமிசம் (infanticide or cannibalism) சரியானதாக இருக்கும் என்று வாதாடலாமா ?. மனித ஓரினச் சேர்க்கை நடத்தை பற்றிய முக்கிய வாதங்களில் ஒன்று இது ஆண் குழுக்களை, உதாரணமாக, அவர்கள் வேட்டை அல்லது போரில் இருக்கும் பொழுது, அவர்களை ஒன்றாக இணைக்க உதவுகிறது என்கிறார் பேராசிரியரும் பரிணாம உயிரியலாளருமான ராபின் டன்பார் [Robin Dunbar is a professor of evolutionary psychology]. உதாரணமாக, பண்டைய கிரீஸில் ஸ்பார்டன்ஸ் [the Spartans, in ancient Greece], தமது சிறந்த மேம்பட்ட துருப்புகளுக்கு [elite troops] இடையில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவித்தார்கள். இரு ஆண்களுக்கு இடையில் அப்படி ஒரு உறவு இருந்தால், ஒருவருக்கு ஒருவர் தமது மற்ற நபர்களை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார் என்பது அவர்களின் நம்பிக்கையாகும். மேலும் ஓரினச்சேர்க்கைக்கு ஒரு செயல்பாடு இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் இது வேறொன்றின் கிளை விளைவு என்றும் [a spin-off or by-product] மற்றும் பரிணாம வளர்ச்சிக்கான முக்கியத்தை இது கொண்டிருக்கவில்லை என்றும் கூறுகிறார் [It could be a spin-off or by-product of something else and in itself carries no evolutionary weight.]. அவர் மேலும், உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை போதுமான வலுவானதாக இருந்தால் அல்லது மிகையாக வழிந்து கொட்டினால், அது வாலில்லாக் கருங்குரங்கு [போனோபோஸ்] மற்றும் செம்முகக் குரங்கு [மாகேக்] செயல்களால் பரிந்துரைக்கப்பட்டபடி, உற்பத்தி செய்யாத உடலுறவில் அந்த வேட்கை பரவக்கூடும் என்கிறார் [if the urge to have sex is strong enough it may spill over into nonreproductive sex, as suggested by the actions of the bonobos and macaques.]. இதன் விளைவால் அல்லது தாக்கத்தால், அவர்கள் வளரும் சமூக சூழலின் விளைவாக, அவர்களின் வாழ்நாள் முழுவதும், ஓரினச்சேர்க்கை யாளராகவே வாழ வாய்ப்பு உள்ளது அல்லது அப்படியான உணர்வுகளுக்குள் முடங்கி விட வாய்ப்பு உள்ளது என்கிறார். இதில் தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். என்றாலும், மனித ஓரினச்சேர்க்கைக்கான காரணங்களை முழுமையாக நாம் அறிந்து கொள்ள இன்னும் எவ்வளவோ தூரம் ஆராச்சியில் செல்ல வேண்டும் என்கிறார் ராபின் டன்பார். உலக மனித வரலாற்றின் படி, ஆண் - பெண் இருவருக்கும் இடையில் ஒரு இணைப்பை அல்லது கூட்டை சட்ட பூர்வமாக முதல் முதல் ஏறத்தாழ கி மு 2350 இல் மெசொப்பொத்தேமியாவில் அறிமுகம் செய்தவர்கள் சுமேரியர்கள் ஆகும். அதற்க்கு முதல் திருமணம் என்ற ஒரு சடங்கு இருக்கவில்லை. இங்கு சுமேரியர்கள் இன்றைய தமிழர்களின் முன்னையோர்கள் என அறிஞர்கள் இன்று பல எடுத்துக் காட்டுகளுடன் வாதிடுகிறார்கள். இதற்கு முதல் ஒரு குறிப்பிட்ட பழங்குடியில் [tribe] உள்ள ஆண்கள் தாங்கள் விரும்பும் பெண்களை அணுகலாம் என்றும், அங்கு குழந்தைகள் பிறக்கும்போது, அவர்கள் முழு சமூகத்துக்கும் சேர்ந்தவர்களாக கருதப் பட்டார்கள். இது மனிதனுக்கு வெவ்வேறு பாலியல் அனுபவங்கள் அல்லது வகைகள் வேண்டும் என்ற ஒரு கருத்தின் அடிப்படையுடன் தொடர்புடையது எனலாம். என்றாலும் நாளடைவில், சில முக்கிய காரணங்களால், பாலியல் அறநெறி வளர்ச்சி அடைய, அதுவும் அதற்கு ஏற்றவாறு மாற்றம் அடைந்தது. இதன் தொடர்ச்சியாக ஒரு தொகுதி ஆண்களுக்கும் ஒரு தொகுதி பெண்களுக்கும் இடையில் திருமணம் அமைக்கப் பட்டது [‘group marriage’]. அங்கு அவர்களுக்கு இடையில் பகிரப்பட்ட பாலியல் உறவுகள் நடைபெற்றன. இதனாலேயே பின் பலகணவர் மணம் [polyandry] ஏற்பட்டது. இது இலங்கை, இந்தியா, திபெத் போன்ற நாடுகளில் முன்னைய காலத்தில் வழமையில் இருந்தன. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 04 தொடரும் "same-sex marriages" / Part 03 [You may have different opinions / beliefs from me. Your "comments" / "Answers" for any of my questions with facts and statistics as well as reasons concerning relevant issues are welcome. This will improve our understanding / knowledge further as well as correct our thoughts / actions. Please note that, I am not criticised any particular person / belief, only sharing my thought.] If you look objectively at marriage customs throughout history it is clear that the common themes (e.g. taboos against sex outside marriage, fidelity within marriage, life-long commitment, the assumption that a child born to a woman during a marriage is the child of her husband, customs concerning inheritance and family wealth, and the marriage being between a man and a woman) are related to reproductive objectives (establishing paternity and the support of children by both parents) That is why I have no problem with civil partnerships (a new institution with a new purpose), but resist the institution of “same sex marriage” as a product of wooly thinking, for the simple reason that neither the male nor female body was created by nature to have sex with a same sex partner – if we had been created to do so – we would all be hermaphrodites! Recent research has found that homosexual behaviour in animals may be much more common than previously thought. Although Darwin’s theory of natural selection predicts an evolutionary disadvantage for animals that fail to pass along their traits through reproduction with the opposite sex. National Geographic somewhat favours that homosexual behaviour occurs in animals although their article leaves the question open. In addition, every cattle farmer is familiar with the phenomenon of "bulling", cows mounting other cows; in fact, this is one of the standard signs farmers look for when determining that a cow is coming into estrus. However, it does not follow that the cows involved are showing anything analogous to human lesbian orientation. It is worthy of note, however, that some species -- for example, New Mexico Whiptail lizards--exhibit apparently homosexual behaviour. However, these lizards exhibit parthenogenesis, in which there are no males in the species. Pseudo-copulation does occur, with one lizard (higher in progesterone) taking on the "male" role, while the other takes on the "female" role. Most zoologists would prefer to say that they are showing ‘same-sex attraction or behavior’, rather than label them with our words of ‘gay’. scientists say we should be wary of referring to animals when considering what's acceptable in human society. "There is...documented proof of cannibalism and rape in the animal kingdom, but that doesn’t make it right for humans." While some animals (like the lion) eat their young, neither supporters or opponents of "gay rights" have used this as an argument in favour of infanticide or cannibalism? Robin Dunbar is a professor of evolutionary psychology at the University of Liverpool, England, says the bonobo's [a chimpanzee with a black face and black hair, found in the rain forests of the Democratic Republic of Congo (Zaire), believed to be the closest living relative of humans] use of homosexual activity for social bonding is a possible example, adding, "One of the main arguments for human homosexual behaviour is that it helps bond male groups together, particularly where a group of individuals are dependent on each other, as they might be in hunting or warfare. For instance, the Spartans, in ancient Greece, encouraged homosexuality among their elite troops. "They had the not unreasonable belief that individuals would stick by and make all efforts to rescue other individuals if they had a lover relationship," Another suggestion is that homosexuality is a developmental phase people go through. Off the back of this, there's the possibility you can get individuals locked into this phase for the rest of their lives as a result of the social environment they grow up in. "But he adds that homosexuality doesn't necessarily have to have a function. It could be a spin-off or by-product of something else and in itself carries no evolutionary weight. In other words, if the urge to have sex is strong enough it may spill over into non-reproductive sex, as suggested by the actions of the bonobos and macaques. However, as Dunbar admits, there's a long way to go before the causes of homosexuality in humans are fully understood. As per history, The Sumerians were the first civilisation who initiate the first union between a man and a woman in Mesopotamia around 2350 BC and Studies revealed that marriage didn’t exist before this. The usual practice, before this, was that the men in a certain tribe had access to the women they like. When children are born, they belonged to the whole community. This is associated with the perception that humans want sexual variety. However, things have changed when sexual morality was developed and has since influenced the social life of the people. The earliest marriage was believed to be ‘group marriage’. The union was basically between groups of men and women, and there exists shared sexual relations. The group marriage allowed polyandry, and this existed in Ceylon, India, and Tibet many years ago. [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] Part 04 will follow

சந்தி சிரிக்கும் திருமா அரசியல்.

3 days 6 hours ago
தமிழ்நாட்டை ஏமாற்றும் தலைவர்கள். காவேரி பற்றி பேசாத முதலமைச்சர் மானம் கெட்ட முதலமைச்சர் அப்போ. தமிழ்நாட்டு விசிக தண்ணீர் விடுமாறு போராடும். கர்நாடகா விசிக தண்ணீர் விடக் கூடாது என்று போராடும். தலைவர் -திருமா.

சந்தி சிரிக்கும் திருமா அரசியல்.

3 days 6 hours ago

தமிழ்நாட்டை ஏமாற்றும் தலைவர்கள்.

காவேரி பற்றி பேசாத முதலமைச்சர் மானம் கெட்ட முதலமைச்சர் அப்போ.

தமிழ்நாட்டு விசிக தண்ணீர் விடுமாறு போராடும்.

கர்நாடகா விசிக தண்ணீர் விடக் கூடாது என்று போராடும்.

தலைவர் -திருமா.

விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு : நாடாளுமன்றில் தெரிவித்த பிள்ளையான்!

3 days 6 hours ago
விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு : நாடாளுமன்றில் தெரிவித்த பிள்ளையான்! தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு என நாடாளுமன்றத்தில் விழித்த இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் தன்மீது சுமத்த முடியாது என தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நேற்று சபையில் சாணக்கியன் பிள்ளையான் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கண்டறிய வேண்டுமானால் பிள்ளையானை கைது செய்து விசாரணை செய்யவேண்டும் என நேற்று நாடாளுமன்றத்தில் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்திருந்தார். அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2019ஆம் ஆண்டில் இடம்பெற்றிருந்தாலும் அதனுடன் தொடர்புடைய குழுக்கள் கடந்த 2005ஆம் ஆண்டு தொடக்கம் நாட்டில் செயற்பட்டு வந்துள்ளதாகவும் இரா.சாணக்கியன் நேற்று சபையில் தெரிவித்துள்ளார். மேலும் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கில் பிள்ளையானுடன் கைது செய்யப்பட்ட கஜன் மாமா என்பவர் சில மாதங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்துள்ளதாகவும் ஆனால் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு இடமளிக்காது உடலை எரித்துள்ளதாகவும் இரா.சாணக்கியன் சபையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் இன்று சபையில் சாணக்கியனின் கருத்தினை மறுத்துக் கருத்து வெளியிட்டிருந்ததுடன், தானும் ஏற்கனவே ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பில் இருந்ததாகவும் அது ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும் குறிப்பிட்டார். அத்துடன் ஜே.வி.பி உள்ளிட்ட அமைப்புக்களும் பல பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாகவும் தான் யார் என்பதை தனது மக்கள் நன்கு அறிவார்கள் எனவும், இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மேலும் குறிப்பட்டார். https://athavannews.com/2024/1379985

விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு : நாடாளுமன்றில் தெரிவித்த பிள்ளையான்!

3 days 6 hours ago
விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு : நாடாளுமன்றில் தெரிவித்த பிள்ளையான்! விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு : நாடாளுமன்றில் தெரிவித்த பிள்ளையான்!

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு என நாடாளுமன்றத்தில் விழித்த இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் தன்மீது சுமத்த முடியாது என தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நேற்று சபையில் சாணக்கியன் பிள்ளையான் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கண்டறிய வேண்டுமானால் பிள்ளையானை கைது செய்து விசாரணை செய்யவேண்டும் என நேற்று நாடாளுமன்றத்தில் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்திருந்தார்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2019ஆம் ஆண்டில் இடம்பெற்றிருந்தாலும் அதனுடன் தொடர்புடைய குழுக்கள் கடந்த 2005ஆம் ஆண்டு தொடக்கம் நாட்டில் செயற்பட்டு வந்துள்ளதாகவும் இரா.சாணக்கியன் நேற்று சபையில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கில் பிள்ளையானுடன் கைது செய்யப்பட்ட கஜன் மாமா என்பவர் சில மாதங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்துள்ளதாகவும் ஆனால் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு இடமளிக்காது உடலை எரித்துள்ளதாகவும் இரா.சாணக்கியன் சபையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் இன்று சபையில் சாணக்கியனின் கருத்தினை மறுத்துக் கருத்து வெளியிட்டிருந்ததுடன், தானும் ஏற்கனவே ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பில் இருந்ததாகவும் அது ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் ஜே.வி.பி உள்ளிட்ட அமைப்புக்களும் பல பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாகவும் தான் யார் என்பதை தனது மக்கள் நன்கு அறிவார்கள் எனவும், இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மேலும் குறிப்பட்டார்.

https://athavannews.com/2024/1379985

இலங்கையில் குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த புதிய கருவி

3 days 6 hours ago
இதை ஏன் கட்டுப்படுத்துகிறார்கள்? மிருகவதைகளுக்கான குழுக்கள் கண்டு கொள்ளவில்லையா? இனம் கூடினால் சீனா போன்ற நாடுகளுக்கு விற்று டாலரை சம்பாதிக்கலாமே. ஏற்றுமதிக்கு எதுவுமே இல்லாத போது குரங்கையாவது ஏற்றுமதி செய்யலாமே?

'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 12

3 days 6 hours ago
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 12 ஆறாம் அத்தியாயம் / விஜயன் வருகையில் [CHAPTEE VI / THE COMING OF VIJAYA ] "மற்றவர்கள் அங்கும் இங்குமாக ஓடி விட்டனர். ஆனல் அவள் [விஜயனின் தாய்], சிங்கம் வந்த அதே பாதையில் ஓடினாள் .... தூரத்தில் அவளைப் பார்த்தது. உடனே காமவெறி சிங்கத்தைப் பற்றிக் கொண்டது. வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது .... அவளைத் தனது முதுகின் மீது சுமந்து கொண்டு வேகமாகத் தனது குகையைச் சென்றடைந்தது. அங்கு சிங்கம் அவளுடன் கூடியது. இந்தக் கூடலின் விளவாக ராஜகுமாரி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். ஒன்று ஆண் [சீகபாகு / சிங்கபாகு /Sihabahu / Sinhabahu] ; ஒன்று பெண் [சிங்கசீவலி / சீகவலி / Sinhasivali or Sihasivali]. [the other folk fled this way and that, but she fled along the way by which the lion had come ... love (for her) laid hold on him, and he came towards her with waving tail and ears laid back ... took her upon his back and bore her with all speed to his cave, and there he was united with her, and from this union with him the princess in time bore twin-children, a son and a daughter.] என்றும் அதன் பின் தன் தந்தையான சிங்கத்தை, சிங்கபாகு கொன்று, தன் உடன்பிறந்த சகோதரியான சிங்கசீவலியை மணந்து, ராணியாக்கி, நாளடைவில் சிங்கசீவலி பதிறுை முறை இரட்டைக் குழந்தைகளாகப் பெற்றாள். மூத்தவன் விஜயன் இரண்டாவது சுமித்த ஆகும். எல்லோருமாக முப்பத்திரண்டு மகன்மார்கள் ..... [ As time passed on his consort bore twin sons sixteen times, the eldest was named Vijaya, the second Sumitta; together there were thirty-two sons ..... ] என்றும் மற்றும் ஏழாம் அத்தியாயம் விஜயனின் பட்டாபிஷேகத்தில் [CHAPTER VII / THE CONSECRATING OF VIJAYA ], தேவர்களுடைய பெரும் சபையில், மாமுனிவரும், பேச்சாற்றல் உடையவர்களிலேயே மிகச் சிறந்தவருமான புத்தபெருமான், அவருடைய நிர்வாணத்துக்கான படுக்கையிலே படுத்திருந்துகொண்டு, தம் அருகில் நின்ற சக்கனிடம் (இந்திரன்) "சிங்கபாகு" வின் மகன் விஜயன் லால நாட்டிலிருந்து எழுநூறு பேர்களுடன் இலங்கைக்கு வருகிறான். தேவர்கள் தலைவனே! இலங்கையில் என்னுடைய மதம் நிலை நிறுத்தப்படுவதற்காக, அவனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் இலங்கையையும் கவனமாகப் பாதுகாத்து வருவாயாக." என்று கூறினர். ததாககர் [புத்தபெருமான்] கூறிய இவ்வார்த்தைகளைக் கேட்ட தேவராஜன், அவரிடம் கொண்ட மரியாதை காரணமாக இலங்கையைப் பாதுகாக்கும் பொறுப்பை நீல தாமரை மலர் போன்ற மேனி வண்ணம் படைத்த *தேவனிடம் [நீல வண்ணமுடைய - விஷ்ணு] ஒப்படைத்தான். [(Tathagata) was lying on the bed of his nibbana, in the midst of the great assembly of gods, he, the great sage, the greatest of those who have speech, spoke to Sakka (Indra, king of the gods) who stood there near him: ' Vijaya, son of king Sihabahu, is come to Lanka from the country of Lala, together with seven hundred followers. In Lanka, O lord of gods, will my religion be established, therefore carefully protect him with his followers and Lanka. When the lord of gods heard the words of the Tathagata he from respect handed over the guardianship of Lanka to the god who is in colour like the lotus (Visnu)] என்கிறது. ஆகவே நாம் இங்கு சிங்கம் [மிருகம்] மனிதனுடன் குடும்ப வாழ்வு நடத்துவதையும், மீண்டும் தேவ லோகத்தையும், இந்திரன், விஷ்ணு போன்ற இந்து மத கடவுள்களையும் காண்கிறோம். ஆனால் கிறிஸ்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்து மதம், சமண மதம் சூழலில் பிறந்து வாழ்ந்து, அவைகளின் நடவடிக்கைகள், போதனைகளில் திருப்தி அற்றவராகி, அதிக போக வாழ்க்கை, ஞானத்தினைக் கொண்டுவராது என்றும், அதேபோல மிக நெடிய தவமும் ஞானத்தினைக் கொண்டு வராது என்றும் உணர்ந்து, எனவே அவை இரண்டையும் தவிர்த்து, ஒரு மத்திம மார்க்கத்தைக் கடைப் பிடிக்க வேண்டும் என்றும் மற்றும் நான்கு உயரிய சத்தியங்களைப் புரிந்துகொண்டு அவற்றையும் கடைப் பிடிக்க வேண்டும் என்றும் போதித்தவர் சித்தார்த்தர். அது மட்டும் அல்ல, தானே ஞானோதயம் [அறிவொளி] பெற்று, நிர்வாண நிலையை, அதாவது ஆசாபாசங்களிலிருந்தும் துயரங்களிலிருந்தும் விடுபட்டு பூரண அமைதியையும் ஞானோதயத்தையும் அடைந்து மக்களுக்கு வழியும் காட்டினார். மேலும் இவர், மரணப் படுக்கையில் தன் சீடர்களுக்கு “எவருடைய உதவியையும் நாடாமல் சத்தியத்திலே தன்னந் தனியாக நின்று முக்தியை நாடித் தேடுங்கள்.” என்று கூறியதாக ஒரு தகவலும் உண்டு. ஞானோதயம் தெய்வத்திடமிருந்து வருவது இல்லை, ஆனால் நல்ல சிந்தனை, நல்ல செயல்கள் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள ஒருவர் எடுக்கும் சொந்த முயற்சியிலிருந்து தான் வருகிறது என்பது புத்தரின் கருத்தாகும். கடவுளைப் பற்றி அவர் அதிகமாக எதுவும் சொல்லவில்லை. புத்தர் என்றுமே தன்னை ஒரு தேவன் என்றோ, கடவுளின் அவதாரம் என்றோ கூறிக்கொண்டதில்லை. தான் புத்த நிலையை அடைந்த ஒரு மனிதன் என்பதையும், புவியில் பிறந்த மானிடர் அனைவருமே இந்த புத்த நிலையை அடைய முடியும் என்பதையும் தெளிவாக வலியுறுத்தினார். ஆசையே துன்பத்தின் அடிப்படை என அவர் கூறினார். "புத்தன்" என்ற சொல்லுக்கு "விழித்தெழுந்தவன்", "ஒளியினைக் கண்டவன்" என்று பொருள் ஆகும். அதேபோல "ததாகதர்" என்பதற்கு உண்மையை அறிந்தவர் என்று பொருள். "தான்", "தனது" என்ற நிலையிலிருந்து விலகுவதையே "விடுதலை" அல்லது "நிர்வாண நிலை" என்றுரைப்பர். இந்த உண்மை நிலையில் நின்று நாம் மேலே கூறியவற்றை அலசும் பொழுது, கட்டாயம் இவை புத்தரின் போதனைக்கும் நம்பிக்கைக்கும் புறம்பாகவே, ஏற்கமுடியாததாகவே காட்சி அளிக்கிறது. எனவே இதற்கு ஏதாவது உள்நோக்கம் மகாநாம தேரருக்கு இருந்து இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. அதன் விளைவு தான் இன்று இலங்கையில் பர்மாவில் நடப்பவையாகவும் இருக்கலாம்? என்றாலும் அது நியாயமான இலங்கையை ஆண்ட மன்னர்களின் விபரங்களை, சரி பிழைகள் இருந்தாலும் ஓரளவு வரிசைக் கிரமமாக தருகிறது. அது மட்டும் அல்ல, மிகவும் நாகரிக இலங்கை பழங்குடி மக்களான நாகர்கள், இயக்கர்களைப் பற்றிய தகவல்களை தரும் சில அரிய நூல்களில் இதுவும் ஒன்று ஆகும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 13 தொடரும்

'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 12

3 days 6 hours ago
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 12
 
 
ஆறாம் அத்தியாயம் / விஜயன் வருகையில் [CHAPTEE VI / THE COMING OF VIJAYA ]
 
"மற்றவர்கள் அங்கும் இங்குமாக ஓடி விட்டனர். ஆனல் அவள் [விஜயனின் தாய்], சிங்கம் வந்த அதே பாதையில் ஓடினாள் .... தூரத்தில் அவளைப் பார்த்தது. உடனே காமவெறி சிங்கத்தைப் பற்றிக் கொண்டது. வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது .... அவளைத் தனது முதுகின் மீது சுமந்து கொண்டு வேகமாகத் தனது குகையைச் சென்றடைந்தது. அங்கு சிங்கம் அவளுடன் கூடியது. இந்தக் கூடலின் விளவாக ராஜகுமாரி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். ஒன்று ஆண் [சீகபாகு / சிங்கபாகு /Sihabahu / Sinhabahu] ; ஒன்று பெண் [சிங்கசீவலி / சீகவலி / Sinhasivali or Sihasivali].
 
[the other folk fled this way and that, but she fled along the way by which the lion had come ... love (for her) laid hold on him, and he came towards her with waving tail and ears laid back ... took her upon his back and bore her with all speed to his cave, and there he was united with her, and from this union with him the princess in time bore twin-children, a son and a daughter.]
 
என்றும் அதன் பின் தன் தந்தையான சிங்கத்தை, சிங்கபாகு கொன்று, தன் உடன்பிறந்த சகோதரியான சிங்கசீவலியை மணந்து, ராணியாக்கி, நாளடைவில் சிங்கசீவலி பதிறுை முறை இரட்டைக் குழந்தைகளாகப் பெற்றாள். மூத்தவன் விஜயன் இரண்டாவது சுமித்த ஆகும். எல்லோருமாக முப்பத்திரண்டு மகன்மார்கள் .....
 
[ As time passed on his consort bore twin sons sixteen times, the eldest was named Vijaya, the second Sumitta; together there were thirty-two sons ..... ]
 
என்றும் மற்றும் ஏழாம் அத்தியாயம் விஜயனின் பட்டாபிஷேகத்தில் [CHAPTER VII / THE CONSECRATING OF VIJAYA ],
 
தேவர்களுடைய பெரும் சபையில், மாமுனிவரும், பேச்சாற்றல் உடையவர்களிலேயே மிகச் சிறந்தவருமான புத்தபெருமான், அவருடைய நிர்வாணத்துக்கான படுக்கையிலே படுத்திருந்துகொண்டு, தம் அருகில் நின்ற சக்கனிடம் (இந்திரன்)
 
"சிங்கபாகு" வின் மகன் விஜயன் லால நாட்டிலிருந்து எழுநூறு பேர்களுடன் இலங்கைக்கு வருகிறான். தேவர்கள் தலைவனே! இலங்கையில் என்னுடைய மதம் நிலை நிறுத்தப்படுவதற்காக, அவனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் இலங்கையையும் கவனமாகப் பாதுகாத்து வருவாயாக." என்று கூறினர். ததாககர் [புத்தபெருமான்] கூறிய இவ்வார்த்தைகளைக் கேட்ட தேவராஜன், அவரிடம் கொண்ட மரியாதை காரணமாக இலங்கையைப் பாதுகாக்கும் பொறுப்பை நீல தாமரை மலர் போன்ற மேனி வண்ணம் படைத்த *தேவனிடம் [நீல வண்ணமுடைய - விஷ்ணு] ஒப்படைத்தான்.
 
[(Tathagata) was lying on the bed of his nibbana, in the midst of the great assembly of gods, he, the great sage, the greatest of those who have speech, spoke to Sakka (Indra, king of the gods) who stood there near him: ' Vijaya, son of king Sihabahu, is come to Lanka from the country of Lala, together with seven hundred followers. In Lanka, O lord of gods, will my religion be established, therefore carefully protect him with his followers and Lanka. When the lord of gods heard the words of the Tathagata he from respect handed over the guardianship of Lanka to the god who is in colour like the lotus (Visnu)]
 
என்கிறது. ஆகவே நாம் இங்கு சிங்கம் [மிருகம்] மனிதனுடன் குடும்ப வாழ்வு நடத்துவதையும், மீண்டும் தேவ லோகத்தையும், இந்திரன், விஷ்ணு போன்ற இந்து மத கடவுள்களையும் காண்கிறோம்.
 
ஆனால் கிறிஸ்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்து மதம், சமண மதம் சூழலில் பிறந்து வாழ்ந்து, அவைகளின் நடவடிக்கைகள், போதனைகளில் திருப்தி அற்றவராகி, அதிக போக வாழ்க்கை, ஞானத்தினைக் கொண்டுவராது என்றும், அதேபோல மிக நெடிய தவமும் ஞானத்தினைக் கொண்டு வராது என்றும் உணர்ந்து, எனவே அவை இரண்டையும் தவிர்த்து, ஒரு மத்திம மார்க்கத்தைக் கடைப் பிடிக்க வேண்டும் என்றும் மற்றும் நான்கு உயரிய சத்தியங்களைப் புரிந்துகொண்டு அவற்றையும் கடைப் பிடிக்க வேண்டும் என்றும் போதித்தவர் சித்தார்த்தர். அது மட்டும் அல்ல, தானே ஞானோதயம் [அறிவொளி] பெற்று, நிர்வாண நிலையை, அதாவது ஆசாபாசங்களிலிருந்தும் துயரங்களிலிருந்தும் விடுபட்டு பூரண அமைதியையும் ஞானோதயத்தையும் அடைந்து மக்களுக்கு வழியும் காட்டினார்.
 
மேலும் இவர், மரணப் படுக்கையில் தன் சீடர்களுக்கு
 
“எவருடைய உதவியையும் நாடாமல் சத்தியத்திலே தன்னந் தனியாக நின்று முக்தியை நாடித் தேடுங்கள்.”
 
என்று கூறியதாக ஒரு தகவலும் உண்டு. ஞானோதயம் தெய்வத்திடமிருந்து வருவது இல்லை, ஆனால் நல்ல சிந்தனை, நல்ல செயல்கள் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள ஒருவர் எடுக்கும் சொந்த முயற்சியிலிருந்து தான் வருகிறது என்பது புத்தரின் கருத்தாகும். கடவுளைப் பற்றி அவர் அதிகமாக எதுவும் சொல்லவில்லை. புத்தர் என்றுமே தன்னை ஒரு தேவன் என்றோ, கடவுளின் அவதாரம் என்றோ கூறிக்கொண்டதில்லை. தான் புத்த நிலையை அடைந்த ஒரு மனிதன் என்பதையும், புவியில் பிறந்த மானிடர் அனைவருமே இந்த புத்த நிலையை அடைய முடியும் என்பதையும் தெளிவாக வலியுறுத்தினார். ஆசையே துன்பத்தின் அடிப்படை என அவர் கூறினார்.
 
"புத்தன்" என்ற சொல்லுக்கு "விழித்தெழுந்தவன்", "ஒளியினைக் கண்டவன்" என்று பொருள் ஆகும். அதேபோல "ததாகதர்" என்பதற்கு உண்மையை அறிந்தவர் என்று பொருள். "தான்", "தனது" என்ற நிலையிலிருந்து விலகுவதையே "விடுதலை" அல்லது "நிர்வாண நிலை" என்றுரைப்பர். இந்த உண்மை நிலையில் நின்று நாம் மேலே கூறியவற்றை அலசும் பொழுது, கட்டாயம் இவை புத்தரின் போதனைக்கும் நம்பிக்கைக்கும் புறம்பாகவே, ஏற்கமுடியாததாகவே காட்சி அளிக்கிறது.
 
எனவே இதற்கு ஏதாவது உள்நோக்கம் மகாநாம தேரருக்கு இருந்து இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. அதன் விளைவு தான் இன்று இலங்கையில் பர்மாவில் நடப்பவையாகவும் இருக்கலாம்? என்றாலும் அது நியாயமான இலங்கையை ஆண்ட மன்னர்களின் விபரங்களை, சரி பிழைகள் இருந்தாலும் ஓரளவு வரிசைக் கிரமமாக தருகிறது. அது மட்டும் அல்ல, மிகவும் நாகரிக இலங்கை பழங்குடி மக்களான நாகர்கள், இயக்கர்களைப் பற்றிய தகவல்களை தரும் சில அரிய நூல்களில் இதுவும் ஒன்று ஆகும்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 13 தொடரும்
May be an image of 1 person, big cat and outdoors  309566633_10221628511124864_1572347925736925057_n.jpg?stp=dst-jpg_p552x414&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=ZSvH6VqxES8Ab79ll6R&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDNguopOeazZWnN0Ye1W64hHJlhHnThlRpbHqUYhAgaAw&oe=6631807BMay be an illustration
 
 
 
 
 

'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 11

3 days 7 hours ago
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 11 புத்தர் தன்னை கடவுள் என்று என்றும் உரிமை கூறவில்லை, அவர் ஒரு மனிதர், தனது அனுபவம் மூலம், நிர்வாணம் அடைவது எப்படி என்பதை போதித்தவர். உண்மையான புத்த மதம் மிகவும் சகிப்புத்தன்மை கொண்டது. அது மட்டும் அல்ல அது கிறிஸ்துவர், முஸ்லீம், இந்து அல்லது பெளத்தர் போன்ற அடையாளங்களுடன் [லேபிள்களுடன்] அக்கறை இல்லை. மற்றும் புனிதமான நான்கு பேருண்மைகளுடன், அநி­யா­ய­மாக எந்த உயி­ரையும் கொல்­லாதே. அனைத்து படைப்­பி­னங்­க­ளு­டனும் அன்­பாக நடந்­துகொள், தானமாக [இலவசமாக] கொடுக்கப்படாத எதையும் எடுக்கக்கூடாது, தவறான பாலியல் நடத்­தை­களில் ஈடு­ப­டாதே, பொய் சொல்­லாதே நேர்­மை­யா­கவும் வெளிப்­ப­டை­யா­கவும் நடந்து கொள், மது மற்றும் ஏனைய போதைப் பொருள்­களை பயன்­ப­டுத்­தாதே, என்ற ஐந்து கட்டளைகளையும் கொண்டுள்ளது. அப்படியாக தன்னையும் நிலைப்படுத்தி, மற்றவர்களையும் அப்படியே மாற்ற போதித்த புத்தர், இயக்கர்களை மாயாஜாலம் காட்டி பயமுறுத்தி, வெருட்டி துரத்தி, தனக்கு என ஒரு இடத்தை கைப்பற்றுவாரா? கொஞ்சம் நடு நிலையாக சிந்தியுங்கள் ! தீபவம்சத்தில் கூட, அத்தியாயம் 2 / நாகர்களை வென்றது என்ற பகுதியில் : "இரண்டு நாக படைகளின் தலைக்கு மேலாக காற்றில் மிதந்து, உலகின் தலைவரும் எல்லாம் அறிந்தவருமான அவர், ஒரு ஆழ்ந்த திகிலூட்டும் இருளை உண்டாக்கினார். திகிலுற்று பயந்த நாகர்களால் ஒருவரை ஒருவர் பார்க்க முடியவில்லை .... நாகர்கள் பயந்ததை உணர்ந்த அவர், நாகர்கள் மேல் இரக்கப்பட்டு, அருள் புரிந்தார் [Dipavamsa / II. The Conquering of the Nāgas : [Dipavamsa / II. The Conquering of the Nāgas ] Going through the air over the heads of both Nāgas, the Sambuddha, the chief of the world, produced a deep, terrifying darkness. The frightened, terrified Nāgas did not see each other, ... .when he saw that the Nāgas were terrified, he sent forth his thoughts of kindness towards them, and emitted a warm ray of light.]. இங்கு அவர்களை கலைக்கவில்லை, வெருட்டியதோடு நின்று விட்டது மட்டும் அல்ல, அருளும் புரிகிறார் [ஞான ஒளியும் பாச்சுகிறார்]. எனவே மகாவம்சம், அதற்கு முந்திய இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் போல், புராணங்கள், புனைவுகள், இயற்கைக்கு மாறான [அமானுஷ்ய] நம்பிக்கைகள், மற்றும் பிரபலமான பாரம்பரியங்களாலும் நிறைந்து உள்ளது தெரிகிறது. உதாரணமாக, பதின்மூன்றாவது அத்தியாயம் மகிந்த வருகையில் [CHAPTEE XIII / THE COMING OF MAHINDA ]: "இந்திரன், மிகச் சிறந்தவரான மகிந்த தேரரிடம் வந்து இலங்கையை மாற்றப் புறப்படுங்கள். சம்புத்தராலும் இது ஏற்கனவே உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கும். அங்கு உங்களுக்கு உதவுபவர்கள் நாங்களாக இருப்போம் என்றான் .... நான்கு தேரர்களுடனும சுமணனுடனும், பாமர சீடனுமான பந்தூகனுடனும், மனிதர்களுக்கு அவர்களைப் பற்றித் தெரிய வேண்டுமென்பதற்காக வானில் எழுந்தவர்களாக அந்த விகாரையிலிருந்து கிளம்பினர் [The great Indra sought out the excellent thera Mahinda and said to him: ' Set forth to convert Lanka ; by the Sambuddha also hast thou been foretold (for this) and we will be those who aid thee there .... with the four theras and Sumana, and the lay-disciple Bhanduka also, to the end that they might be known for human beings, rose up in the air (and departed) from that vihara] என்கிறது. ஆகவே நாம் இங்கு தேவ லோகத்தையும், இந்திரன், விஷ்ணு போன்ற இந்து மத கடவுள்களையும், தேவர்களையும், காற்றினூடாக பறந்து செல்வதையும், இன்னும் அது போன்ற பல மந்திர மாய வித்தைகளையும், உதாரணமாக தன்னை பின்பற்றுபவர்களை மற்றவர்களின் கண்ணுக்கு தெரியாதவாறு மாற்றுதல் போன்றவற்றையும் காண்கிறோம். இது கட்டாயம் இந்து புராணங்களையும், அங்கு இந்திரன், விஷ்ணுவின் விளையாடல்களையும் மற்றும் பல சம்பவங்களையும் நினைவூட்டுகிறது, உதாரணமாக, ராமாயணத்தில் அனுமான் இதே இலங்கைக்கு காற்றினூடாக பறந்து வந்ததையும், நெருப்பூட்டி பயமுறுத்தியதையும் காண்கிறோம். ஒரு தேசத்தின் வரலாறு நிச்சயமற்ற நிலை ஏற்படும் போது இனங்களுக்குள் உண்டாகும் குரோதங்களும், பகைமைகளும் அதிகரிக்கும். இதனாலேயே ஒரு பெரும்பான்மை அல்லது வல்லமையுள்ள இனம் மற்ற இனத்தை அடக்கி ஆளவும் முற்படும். அத்தகைய வரலாற்றாய்வுகளை மேற்கொள்ளப் பக்கச்சார்பில்லாத நடுநிலையான ஆய்வாளர்களின் கடுமையான உழைப்பு தேவைப்படுகின்றன என்பது மட்டும் நிச்சயம். அதனால் தான் மகாவம்சத்தை முழுக்க முழுக்க அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட இலங்கையின் வரலாற்றின் பிடியில் அகப்பட்டு, இன்று அதை அப்படியே கண்மூடித்தனமாக பின்பற்றுபவர்களை, மீட்டு எடுப்பது மிக கடினமான ஒன்றாக மாறி வருவதை காண்கிறோம். வரலாற்றை வரலாற்றுக்காகவும் அறிவிற்காகவும் ஆய்வு செய்ய வேண்டும், அதைவிட்டு, தனக்கு சார்ப்பாக ஒரு தார்மீக அறிவுறுத்தலை மையமாகக் கொண்ட ஒரு வெளிப்புற நோக்கத்திற்காகவோ, அல்லது அதை திரித்தோ, பொய்யுரைகளை வலுக்கட்டாயமாக சேர்த்தோ, தனது அரசியலின் நோக்கத்திற்காக உருவாக்கக் கூடாது ["The study of history must be for history and knowledge sake. History should never be didactic, nor should it be falsified and made into tools of politics."] என்ற தாரக மந்திரத்தை மனதில் கொண்டு மகாவம்சத்தை எவரும் அணுகவேண்டும் என்பதே என் விருப்பம் ஆகும். "புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 12 தொடரும்

'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 11

3 days 7 hours ago
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 11
 
 
புத்தர் தன்னை கடவுள் என்று என்றும் உரிமை கூறவில்லை, அவர் ஒரு மனிதர், தனது அனுபவம் மூலம், நிர்வாணம் அடைவது எப்படி என்பதை போதித்தவர். உண்மையான புத்த மதம் மிகவும் சகிப்புத்தன்மை கொண்டது. அது மட்டும் அல்ல அது கிறிஸ்துவர், முஸ்லீம், இந்து அல்லது பெளத்தர் போன்ற அடையாளங்களுடன் [லேபிள்களுடன்] அக்கறை இல்லை. மற்றும் புனிதமான நான்கு பேருண்மைகளுடன், அநி­யா­ய­மாக எந்த உயி­ரையும் கொல்­லாதே. அனைத்து படைப்­பி­னங்­க­ளு­டனும் அன்­பாக நடந்­துகொள், தானமாக [இலவசமாக] கொடுக்கப்படாத எதையும் எடுக்கக்கூடாது, தவறான பாலியல் நடத்­தை­களில் ஈடு­ப­டாதே, பொய் சொல்­லாதே நேர்­மை­யா­கவும் வெளிப்­ப­டை­யா­கவும் நடந்து கொள், மது மற்றும் ஏனைய போதைப் பொருள்­களை பயன்­ப­டுத்­தாதே, என்ற ஐந்து கட்டளைகளையும் கொண்டுள்ளது. அப்படியாக தன்னையும் நிலைப்படுத்தி, மற்றவர்களையும் அப்படியே மாற்ற போதித்த புத்தர், இயக்கர்களை மாயாஜாலம் காட்டி பயமுறுத்தி, வெருட்டி துரத்தி, தனக்கு என ஒரு இடத்தை கைப்பற்றுவாரா? கொஞ்சம் நடு நிலையாக சிந்தியுங்கள் !
 
தீபவம்சத்தில் கூட, அத்தியாயம் 2 / நாகர்களை வென்றது என்ற பகுதியில் :
 
"இரண்டு நாக படைகளின் தலைக்கு மேலாக காற்றில் மிதந்து, உலகின் தலைவரும் எல்லாம் அறிந்தவருமான அவர், ஒரு ஆழ்ந்த திகிலூட்டும் இருளை உண்டாக்கினார். திகிலுற்று பயந்த நாகர்களால் ஒருவரை ஒருவர் பார்க்க முடியவில்லை .... நாகர்கள் பயந்ததை உணர்ந்த அவர், நாகர்கள் மேல் இரக்கப்பட்டு, அருள் புரிந்தார்
 
[Dipavamsa / II. The Conquering of the Nāgas : [Dipavamsa / II. The Conquering of the Nāgas ] Going through the air over the heads of both Nāgas, the Sambuddha, the chief of the world, produced a deep, terrifying darkness. The frightened, terrified Nāgas did not see each other, ... .when he saw that the Nāgas were terrified, he sent forth his thoughts of kindness towards them, and emitted a warm ray of light.].
 
இங்கு அவர்களை கலைக்கவில்லை, வெருட்டியதோடு நின்று விட்டது மட்டும் அல்ல, அருளும் புரிகிறார் [ஞான ஒளியும் பாச்சுகிறார்]. எனவே மகாவம்சம், அதற்கு முந்திய இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் போல், புராணங்கள், புனைவுகள், இயற்கைக்கு மாறான [அமானுஷ்ய] நம்பிக்கைகள், மற்றும் பிரபலமான பாரம்பரியங்களாலும் நிறைந்து உள்ளது தெரிகிறது.
 
உதாரணமாக, பதின்மூன்றாவது அத்தியாயம் மகிந்த வருகையில் [CHAPTEE XIII / THE COMING OF MAHINDA ]:
 
"இந்திரன், மிகச் சிறந்தவரான மகிந்த தேரரிடம் வந்து இலங்கையை மாற்றப் புறப்படுங்கள். சம்புத்தராலும் இது ஏற்கனவே உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கும். அங்கு உங்களுக்கு உதவுபவர்கள் நாங்களாக இருப்போம் என்றான் .... நான்கு தேரர்களுடனும சுமணனுடனும், பாமர சீடனுமான பந்தூகனுடனும், மனிதர்களுக்கு அவர்களைப் பற்றித் தெரிய வேண்டுமென்பதற்காக வானில் எழுந்தவர்களாக அந்த விகாரையிலிருந்து கிளம்பினர்
 
[The great Indra sought out the excellent thera Mahinda and said to him: ' Set forth to convert Lanka ; by the Sambuddha also hast thou been foretold (for this) and we will be those who aid thee there .... with the four theras and Sumana, and the lay-disciple Bhanduka also, to the end that they might be known for human beings, rose up in the air (and departed) from that vihara]
 
என்கிறது. ஆகவே நாம் இங்கு தேவ லோகத்தையும், இந்திரன், விஷ்ணு போன்ற இந்து மத கடவுள்களையும், தேவர்களையும், காற்றினூடாக பறந்து செல்வதையும், இன்னும் அது போன்ற பல மந்திர மாய வித்தைகளையும், உதாரணமாக தன்னை பின்பற்றுபவர்களை மற்றவர்களின் கண்ணுக்கு தெரியாதவாறு மாற்றுதல் போன்றவற்றையும் காண்கிறோம். இது கட்டாயம் இந்து புராணங்களையும், அங்கு இந்திரன், விஷ்ணுவின் விளையாடல்களையும் மற்றும் பல சம்பவங்களையும் நினைவூட்டுகிறது, உதாரணமாக, ராமாயணத்தில் அனுமான் இதே இலங்கைக்கு காற்றினூடாக பறந்து வந்ததையும், நெருப்பூட்டி பயமுறுத்தியதையும் காண்கிறோம்.
 
ஒரு தேசத்தின் வரலாறு நிச்சயமற்ற நிலை ஏற்படும் போது இனங்களுக்குள் உண்டாகும் குரோதங்களும், பகைமைகளும் அதிகரிக்கும். இதனாலேயே ஒரு பெரும்பான்மை அல்லது வல்லமையுள்ள இனம் மற்ற இனத்தை அடக்கி ஆளவும் முற்படும்.
 
அத்தகைய வரலாற்றாய்வுகளை மேற்கொள்ளப் பக்கச்சார்பில்லாத நடுநிலையான ஆய்வாளர்களின் கடுமையான உழைப்பு தேவைப்படுகின்றன என்பது மட்டும் நிச்சயம். அதனால் தான் மகாவம்சத்தை முழுக்க முழுக்க அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட இலங்கையின் வரலாற்றின் பிடியில் அகப்பட்டு, இன்று அதை அப்படியே கண்மூடித்தனமாக பின்பற்றுபவர்களை, மீட்டு எடுப்பது மிக கடினமான ஒன்றாக மாறி வருவதை காண்கிறோம்.
 
வரலாற்றை வரலாற்றுக்காகவும் அறிவிற்காகவும் ஆய்வு செய்ய வேண்டும், அதைவிட்டு, தனக்கு சார்ப்பாக ஒரு தார்மீக அறிவுறுத்தலை மையமாகக் கொண்ட ஒரு வெளிப்புற நோக்கத்திற்காகவோ, அல்லது அதை திரித்தோ, பொய்யுரைகளை வலுக்கட்டாயமாக சேர்த்தோ, தனது அரசியலின் நோக்கத்திற்காக உருவாக்கக் கூடாது
 
["The study of history must be for history and knowledge sake. History should never be didactic, nor should it be falsified and made into tools of politics."]
 
என்ற தாரக மந்திரத்தை மனதில் கொண்டு மகாவம்சத்தை எவரும் அணுகவேண்டும் என்பதே என் விருப்பம் ஆகும்.
 
"புத்தம் சரணம் கச்சாமி,
தம்மம் சரணம் கச்சாமி,
சங்கம் சரணம் கச்சாமி"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 12 தொடரும்
No photo description available. No photo description available. No photo description available. No photo description available. No photo description available. 
 
 
 
 

"சந்தேகம்"

3 days 7 hours ago
"சந்தேகம்" "சந்தேகக் கோடு சந்தோஷக் கேடு சரித்திரம் சொல்லும் இவைகளின் கதைகளை சகோதரர்களை பிரித்தது சில வரலாறுகள் சர்ச்சைகளை ஏற்படுத்தியது சில நிகழ்வுகள்" "எதிர்காலம் குறித்த சில சந்தேகங்கள் எல்லா உறவுகளில் எழும் ஐயப்பாடுகள் எதிர்பாராமல் விஸ்வரூபம் எடுக்கும் ஒருநாள் எல்லாம் மனநோயாக மனிதனை மாற்றிவிடும்" "சிலருக்கு ஏற்பட்ட சில பாதிப்புக்கள் சில தனி நபருடைய குணாதிசயங்கள் சிரசில் எடுத்த முன் எச்சரிக்கைகளை சிலவேளை சந்தேகமென அழைக்கச் சொல்லும்" "தவறாக சம்பவத்தை புரிந்து கொள்ளுதல் தகவல் சரிபார்க்காமல் சுயவிளக்கம் கொடுத்தல் தருணம் அறியாமல் சினந்து பேசுதல் தம்பதியை குழப்பும் காதலரை பிரிக்கும்" "கொஞ்சம் கொஞ்சமாக சந்தேகம் அதிகமாகி கொலை வெறியாக மனதை ஆட்டி கொடும் எண்ணங்கள் மனதில் வெளிப்பட கொழுந்து விட்டு எரியும் சந்தேகம்" "மன அழுத்தம் கவ்விக் கொள்ளும் மகிழ்ச்சி இழந்து கண்கள் சுழரும் மடையார் மாதிரி அறிவைத் துறப்பர் மனதை குழப்பி வாழ்வை இழப்பர்" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]

"சந்தேகம்"

3 days 7 hours ago
"சந்தேகம்"
 
 
"சந்தேகக் கோடு சந்தோஷக் கேடு
சரித்திரம் சொல்லும் இவைகளின் கதைகளை
சகோதரர்களை பிரித்தது சில வரலாறுகள்
சர்ச்சைகளை ஏற்படுத்தியது சில நிகழ்வுகள்"
 
"எதிர்காலம் குறித்த சில சந்தேகங்கள்
எல்லா உறவுகளில் எழும் ஐயப்பாடுகள்
எதிர்பாராமல் விஸ்வரூபம் எடுக்கும் ஒருநாள்
எல்லாம் மனநோயாக மனிதனை மாற்றிவிடும்"
 
"சிலருக்கு ஏற்பட்ட சில பாதிப்புக்கள்
சில தனி நபருடைய குணாதிசயங்கள்
சிரசில் எடுத்த முன் எச்சரிக்கைகளை
சிலவேளை சந்தேகமென அழைக்கச் சொல்லும்"
 
"தவறாக சம்பவத்தை புரிந்து கொள்ளுதல்
தகவல் சரிபார்க்காமல் சுயவிளக்கம் கொடுத்தல்
தருணம் அறியாமல் சினந்து பேசுதல்
தம்பதியை குழப்பும் காதலரை பிரிக்கும்"
 
"கொஞ்சம் கொஞ்சமாக சந்தேகம் அதிகமாகி
கொலை வெறியாக மனதை ஆட்டி
கொடும் எண்ணங்கள் மனதில் வெளிப்பட
கொழுந்து விட்டு எரியும் சந்தேகம்"
 
"மன அழுத்தம் கவ்விக் கொள்ளும்
மகிழ்ச்சி இழந்து கண்கள் சுழரும்
மடையார் மாதிரி அறிவைத் துறப்பர்
மனதை குழப்பி வாழ்வை இழப்பர்"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No photo description available.  No photo description available. 
 
 
 

"நிம்மதியைத் தேடுகிறேன்" 

3 days 7 hours ago
"நிம்மதியைத் தேடுகிறேன்" "நிரந்தரம் இல்லாத ஒன்றிற்காக எனோ நிம்மதி இல்லாமல் தினம் அலைகிறோமே! நித்திரை கூட வர மறுக்குதே நினைத்து நினைத்து மனம் புலம்புதே!" நான் திருமணமான, ஆஸ்திக்கொரு ஆணும் ஆசைக்கு ஒரு பொண்ணும் என, இரு குழந்தையின் தந்தை. கொழும்பில் மனைவி பிள்ளைகளுடன் மகிழ்வாக இருந்த காலம் அது. நல்ல உத்தியோகம், வசதியான வீடு, அழகான மனைவி, புத்திசாலி பிள்ளைகள்! ஆனால் யாரும் எதிர்பாராத, திடீரென ஆனால் திட்டமிட்டு தோன்றிய இனக்கலவரம், எம்மை உள்நாட்டிலேயே ஏதிலியாக [அகதியாக] கப்பலில் யாழ்ப்பாணம் இடம் பெயரவைத்தது. அன்று தொலைந்த நிம்மதியை இன்றும் தேடிக் கொண்டே இருக்கிறேன்! "வாழ்க்கைக்கு நிம்மதி தேவை என்றால் வாளால் அறுத்து ஏறி ஞாபகத்தை! வாயில்கள் பல எமக்கு உண்டு வாட்டம் கொள்ளாமல் தெரிந்து எடு!" திரும்பவும் கொழும்பு வர மனமில்லாமல், பிள்ளைகளின் பாதுகாப்பும், படிப்பையும் முன்னிறுத்தி மனைவி ' ஏன் நாங்கள் குடும்பத்துடன் வெளிநாடு போகக் கூடாது?' என்று கேட்டார். 'உங்களுக்கு நல்ல படிப்பு உண்டுதானே. நானும் எதோ படித்துள்ளேன். அங்கு ஏதாவது ஒரு வேலை இருவரும் எடுத்து சமாளிக்கலாம் தானே !' என்று மேலும் கூறினார். கொழும்பை விட்டு, வேலையை விட்டு வெளியே வந்து ஆறு மாதம் கடந்துவிட்டது. யாழ்ப்பாணமும் ஒரு போர் சூழல் நிலமையாக நாளுக்கு நாள் மாறிக்கொண்டே போய்க்கொண்டு இருந்தது. ஆனால் இது முழுமையாக தமிழர் சமுதாயத்தின் இடம் என்பதால், ராணுவத்தின் எடுபிடிகளைத் தவிர, வேறு பிரச்சனைகள் அங்கு இல்லை என்பது கொஞ்சம் நிம்மதி. பாடசாலைகளும் நல்ல தரமான பாடசாலைகள். என்றாலும் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பது ஒருவருக்கும் தெரியாது? "சந்தோசம் நம்பிக்கை நிம்மதி மூன்றும் சறுக்கி போய் விடும் எளிதிலே! சமரசம் செய்து தொலைக்காமல் இரு சக்கரம் போல என்றும் மீளவராதே!" நாம் ஆறு மாதத்துக்கு முன் தொலைத்த நிம்மதி முழுதாக இன்னும் வந்த பாடில்லை. பாடசாலைகளும், படிப்பு நல்லதாக இருந்தாலும், அடிக்கடி ஏற்படும் குண்டு, ஷெல் தாக்குதல்களால் ஒழுங்காக நடைபெறுவதில்லை. இப்படியான நிலைமைகளால் மரணங்களும், காயப்படுபவர்களும் அங்கொன்று இங்கொன்றாக நிகழ்ந்த வண்ணமே இருந்தன. ஆகவே நாம் குடும்பமாக வெளிநாடு போக தீர்மானித்து, கொழும்பு சர்வதேச விமான நிலையம் ஊடாக இங்கிலாந்து போய் சேர்ந்தோம். எம்மை இங்கிலாந்து வரவேற்று விசாவும் தந்தார்கள். என்றாலும் எம் பிரச்சனை தீரவில்லை, பாடசாலை எடுப்பது பெரும் பிரச்சனையாக இருக்கவில்லை. ஆனால், நாம் இருவரும் உத்தியோகம் எடுக்கவேண்டும், பிள்ளைகள் பாடசாலைக்கு போக வசதியான இடத்தில் வீடு எடுக்கவேண்டும். இந்த இரண்டும் விரைவாக செய்யவேண்டும். அப்ப தான் நாம் எதிர்பார்க்கும் நிம்மதி மீண்டும் வரும்? "மகிழ்ச்சி உண்டேல் சிறு நிகழ்வுமே மகிமை ஆகி இன்பம் தருமே! மனதில் நிம்மதி இல்லை என்றால் மணம் வீசும் ரோசாவும் வெறுக்குமே!" எங்கள் படிப்பு, அனுபவம் எல்லாம் எங்கள் நாட்டில் என்பதால், நான் சென்ற நேர்முகப் பரீடசையில் வெற்றி கிடைக்கவில்லை. எல்லோரும் இங்கு ஒரு அதிகாரபூர்வமான ஒரு பயிற்சிநெறி கற்று, மீண்டும் வேலைக்கு மனு போடுவது நல்லது என்றனர். இதற்கு ஒன்றில் இருந்து குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகலாம்? அது மட்டும் குடும்பத்தை ஓரளவு நல்ல நிலையில் வைத்திருப்பது இயலாதகாரியமாக இருந்தது. எனவே நான் அதை கைவிட்டு, ஓரளவு நல்ல சம்பளம் உள்ள மாற்று வேலைகளுக்கு முயற்சி செய்தேன். அது உடனடியாக, பல கடைகளை நடத்தும் நிறுவனம் ஒன்றில் பொது மேலாளராக பதவி பெற்றேன். தொடக்கத்தில் பயிற்சி மேலாளராக , எனக்கு ஆறு மாத பயிற்சியும் அதனுடன் சம்பந்தபட்ட பாடமும் போதித்தார்கள். சம்பளம் - வீடு வாங்க, குடும்பத்தை நடத்த, மற்ற முக்கிய அன்றாட செலவுகளுக்கும் போதுமாக, கொஞ்சம் சேமிக்கக் கூடியதாகவும் இருந்தது. ஆனால் அப்பவும் நிம்மதி வரவில்லை. காரணம் கையில் கிடைத்த வாழ்வை மகிழ்வாக கொண்டு செல்லாமல், ' நீங்க என்ன இலங்கையில் படித்தீர்கள் ? என்ன வேலை செய்தீர்கள் ?, ஒன்றும் இங்கு சரிவரவில்லையே? உங்களை நம்பி நானும் திருமணம் செய்தேனே?' என்று மனைவி நச்சரிக்க தொடங்கியதே! "அடுத்தவர் பற்றி எண்ண நினைத்தால் அழகான வாழ்வும் அமைதி குலையுமே! அடுப்பு ஊதி நெருப்பு கொழுத்த அக்கம் பக்கம் பலர் உண்டே!" மனைவி தமிழ் பாடசாலை, ஆலயம் என இங்கு போகத் தொடங்க, மற்ற பெண் கூட்டாளிகளுடன் பழகத் தொடங்க, அவர்களின் நிலைகளுடன் எம்மை ஒப்பிட தொடங்கி விட்டார். ஆனால், அவர்கள் எப்ப இந்த நாட்டுக்கு வந்தவர்கள், என்ன படிப்பு இங்கு வந்து படித்தவர்கள், எப்படி பணம் சேர்க்கிறார்கள் / உழைக்கிறார்கள் .. இவை போன்றவற்றை அவர் கவனத்தில் எடுக்கவில்லை? அவரின் எண்ணம் எல்லாம் நாமும் அவர்கள் போல் இரண்டு மூன்று வீடு வாங்க வேண்டும், ஆளுக்கொரு மோட்டார் வண்டி வைத்திருக்கவேண்டும் .. இப்படி நீண்டு கொண்டே போனது. "இவர்கள் போல வாழ கலங்காதே இருப்பதை வைத்து உயரப் பார்! இன்பம் எல்லாம் உன்னில் தான் இருந்த நிம்மதியையும் விலக்கி விடாதே!" பாடசாலையில் பிள்ளைகள் மிகவும் திறமையாக படிப்பிலும் விளையாட்டிலும் மற்றும் கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கைகளிலும் முன்னுக்கு நின்றார்கள். அது எனக்கு உண்மையில் நிம்மதி தந்தது. அது மட்டும் அல்ல, அவர்களுக்கு படிப்பிற்க்கான எல்லா வசதிகளும் குறைவின்றி நான் கொடுக்கக் கூடியதாகவும் இருந்தது. இதை விட என்ன வேண்டும்.? சொந்த வீடு, சொந்த மோட்டார் வண்டி, இப்படி தேவைக்கு அளவாக எல்லாம் உண்டு. ஆனால் ஆடம்பரம் இல்லை. எனக்கு அதில் கவலையும் இல்லை "நிம்மதி தேடுவதை சற்று நிறுத்தினேன் நிமிர்ந்து என்னைக் கொஞ்சம் பார்த்தேன்! நில்லாமல் உழைத்த வேர்வையை கண்டேன் நிம்மதி கொண்டு பெருமை கொண்டேன்!" குடும்பம் என்பது இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்து மகிழ்வாக போவதே!. அதைத்தான் நான் இப்ப தொலைத்துவிட்டேன்! மற்றும் படி ஒரு பிரச்சனையும் இல்லை. குண்டு ஷெல் இங்கு இல்லை. ஆனால் வாயால் செயல்களால் வரும் இந்து குண்டுகள், ஷெல்களில் இருந்து தப்ப பலவேளை நிம்மதியைத் தேடுகிறேன்! அது என் வாழ்நாள் வரை தொடரும்! ஒருவேளை அதை அவள் உணர்ந்தால், நிலைமை மாறலாம்? அப்படி வந்தால், மீண்டு என் கதையை உங்களுடன் தொடர்கிறேன் ! "எனக் கென யாரு மில்லை என்று நிம்மதி இழக்கும் போது உனக்காக என்றும் நான் என மனதார கூறும் உறவு வரமே!" அப்படி அவள் கட்டாயம் வருவாள் என்ற நம்பிக்கையுடன் தான் என் கதையை இத்துடன் தற்காலிகமாக முடிக்கிறேன்! இது அவளில் சூழ்நிலையால் ஏற்பட்ட சிறு மாற்றமே!! ஆனால் என்றுமே அவளின் அன்பு, பாசம் என் மேலோ, பிள்ளைகள் மேலோ என்றும் குறையவில்லை, ஆக இப்படி - நான் அல்ல - நாமும் வாழவேண்டும் என்ற ஆசை! அவ்வளவுதான் !! "தேடினது கிடைக்காதோ என்ற ஆசை ஆசை நிறைவேறாதோ என்ற எதிர்பார்ப்பு எதிர்பார்ப்பு சற்று தந்த ஏமாற்றம் ஏமாற்றம் தந்த மன வலி வலியை சுமந்தபடி வாழுற மனசு இதுலே எங்க இருந்து இனி நிம்மதி வரப் போகுதோ நானறியேன்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]

"நிம்மதியைத் தேடுகிறேன்" 

3 days 7 hours ago
"நிம்மதியைத் தேடுகிறேன்" 
 
 
 
"நிரந்தரம் இல்லாத ஒன்றிற்காக எனோ  
நிம்மதி இல்லாமல் தினம் அலைகிறோமே!        
நித்திரை கூட வர மறுக்குதே  
நினைத்து நினைத்து மனம் புலம்புதே!" 
 
 
நான் திருமணமான, ஆஸ்திக்கொரு ஆணும் ஆசைக்கு ஒரு பொண்ணும் என, இரு குழந்தையின் தந்தை. கொழும்பில் மனைவி பிள்ளைகளுடன் மகிழ்வாக இருந்த காலம் அது. நல்ல உத்தியோகம், வசதியான வீடு, அழகான மனைவி, புத்திசாலி பிள்ளைகள்! ஆனால் யாரும் எதிர்பாராத, திடீரென ஆனால் திட்டமிட்டு தோன்றிய இனக்கலவரம், எம்மை உள்நாட்டிலேயே ஏதிலியாக [அகதியாக] கப்பலில் யாழ்ப்பாணம் இடம் பெயரவைத்தது. அன்று தொலைந்த நிம்மதியை இன்றும் தேடிக் கொண்டே இருக்கிறேன்!
 
 
"வாழ்க்கைக்கு நிம்மதி தேவை என்றால் 
வாளால் அறுத்து ஏறி ஞாபகத்தை!
வாயில்கள் பல எமக்கு உண்டு 
வாட்டம் கொள்ளாமல் தெரிந்து எடு!" 
 
 
திரும்பவும் கொழும்பு வர மனமில்லாமல், பிள்ளைகளின் பாதுகாப்பும், படிப்பையும் முன்னிறுத்தி மனைவி ' ஏன் நாங்கள் குடும்பத்துடன் வெளிநாடு போகக் கூடாது?' என்று கேட்டார். 'உங்களுக்கு நல்ல படிப்பு உண்டுதானே. நானும் எதோ படித்துள்ளேன்.  அங்கு ஏதாவது ஒரு வேலை இருவரும் எடுத்து சமாளிக்கலாம் தானே !' என்று மேலும் கூறினார். கொழும்பை  விட்டு, வேலையை விட்டு வெளியே வந்து ஆறு மாதம் கடந்துவிட்டது. யாழ்ப்பாணமும் ஒரு போர் சூழல் நிலமையாக நாளுக்கு நாள் மாறிக்கொண்டே போய்க்கொண்டு இருந்தது. ஆனால் இது முழுமையாக தமிழர் சமுதாயத்தின் இடம் என்பதால், ராணுவத்தின் எடுபிடிகளைத் தவிர, வேறு பிரச்சனைகள் அங்கு இல்லை என்பது கொஞ்சம் நிம்மதி. பாடசாலைகளும் நல்ல தரமான பாடசாலைகள். என்றாலும் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பது ஒருவருக்கும் தெரியாது?
 
 
"சந்தோசம் நம்பிக்கை நிம்மதி மூன்றும் 
சறுக்கி போய் விடும் எளிதிலே! 
சமரசம் செய்து தொலைக்காமல் இரு 
சக்கரம் போல என்றும் மீளவராதே!" 
 
 
நாம் ஆறு மாதத்துக்கு முன் தொலைத்த நிம்மதி முழுதாக இன்னும் வந்த பாடில்லை. பாடசாலைகளும், படிப்பு நல்லதாக இருந்தாலும், அடிக்கடி ஏற்படும் குண்டு, ஷெல் தாக்குதல்களால்  ஒழுங்காக நடைபெறுவதில்லை. இப்படியான நிலைமைகளால் மரணங்களும், காயப்படுபவர்களும் அங்கொன்று  இங்கொன்றாக நிகழ்ந்த வண்ணமே இருந்தன. ஆகவே நாம் குடும்பமாக வெளிநாடு போக தீர்மானித்து, கொழும்பு சர்வதேச விமான நிலையம் ஊடாக இங்கிலாந்து போய் சேர்ந்தோம். எம்மை இங்கிலாந்து வரவேற்று விசாவும் தந்தார்கள். என்றாலும் எம் பிரச்சனை தீரவில்லை, பாடசாலை எடுப்பது பெரும் பிரச்சனையாக இருக்கவில்லை. ஆனால், நாம் இருவரும் உத்தியோகம் எடுக்கவேண்டும், பிள்ளைகள் பாடசாலைக்கு போக வசதியான இடத்தில் வீடு எடுக்கவேண்டும். இந்த இரண்டும் விரைவாக செய்யவேண்டும். அப்ப தான் நாம் எதிர்பார்க்கும் நிம்மதி மீண்டும் வரும்?  
 
 
"மகிழ்ச்சி உண்டேல்  சிறு நிகழ்வுமே 
மகிமை ஆகி இன்பம் தருமே!
மனதில் நிம்மதி இல்லை என்றால் 
மணம் வீசும் ரோசாவும் வெறுக்குமே!"  
 
 
எங்கள் படிப்பு, அனுபவம் எல்லாம் எங்கள் நாட்டில் என்பதால், நான் சென்ற நேர்முகப் பரீடசையில் வெற்றி கிடைக்கவில்லை. எல்லோரும் இங்கு ஒரு அதிகாரபூர்வமான ஒரு பயிற்சிநெறி கற்று, மீண்டும் வேலைக்கு மனு போடுவது நல்லது என்றனர். இதற்கு ஒன்றில் இருந்து குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகலாம்? அது மட்டும் குடும்பத்தை ஓரளவு நல்ல நிலையில் வைத்திருப்பது இயலாதகாரியமாக இருந்தது. எனவே நான் அதை கைவிட்டு, ஓரளவு நல்ல சம்பளம் உள்ள மாற்று வேலைகளுக்கு முயற்சி செய்தேன். அது உடனடியாக, பல கடைகளை நடத்தும் நிறுவனம் ஒன்றில் பொது மேலாளராக பதவி பெற்றேன். தொடக்கத்தில் பயிற்சி மேலாளராக , எனக்கு ஆறு மாத பயிற்சியும் அதனுடன் சம்பந்தபட்ட பாடமும் போதித்தார்கள். சம்பளம் - வீடு வாங்க, குடும்பத்தை நடத்த, மற்ற முக்கிய அன்றாட செலவுகளுக்கும் போதுமாக, கொஞ்சம் சேமிக்கக் கூடியதாகவும்  இருந்தது. ஆனால் அப்பவும் நிம்மதி வரவில்லை. காரணம் கையில் கிடைத்த வாழ்வை மகிழ்வாக கொண்டு செல்லாமல், ' நீங்க என்ன இலங்கையில் படித்தீர்கள் ? என்ன வேலை செய்தீர்கள் ?, ஒன்றும் இங்கு சரிவரவில்லையே? உங்களை நம்பி நானும் திருமணம் செய்தேனே?' என்று மனைவி நச்சரிக்க தொடங்கியதே!   
 
 
"அடுத்தவர் பற்றி எண்ண நினைத்தால்  
அழகான வாழ்வும் அமைதி குலையுமே!
அடுப்பு ஊதி நெருப்பு கொழுத்த 
அக்கம் பக்கம் பலர் உண்டே!"
 
 
மனைவி தமிழ் பாடசாலை, ஆலயம் என இங்கு போகத் தொடங்க, மற்ற  பெண் கூட்டாளிகளுடன் பழகத் தொடங்க, அவர்களின் நிலைகளுடன் எம்மை ஒப்பிட தொடங்கி விட்டார். ஆனால், அவர்கள் எப்ப இந்த நாட்டுக்கு வந்தவர்கள், என்ன படிப்பு இங்கு வந்து படித்தவர்கள், எப்படி பணம் சேர்க்கிறார்கள் / உழைக்கிறார்கள் .. இவை போன்றவற்றை அவர் கவனத்தில் எடுக்கவில்லை? அவரின் எண்ணம் எல்லாம் நாமும் அவர்கள் போல் இரண்டு மூன்று வீடு வாங்க வேண்டும், ஆளுக்கொரு மோட்டார் வண்டி வைத்திருக்கவேண்டும் .. இப்படி நீண்டு கொண்டே போனது. 
 
 
"இவர்கள் போல வாழ கலங்காதே 
இருப்பதை வைத்து உயரப் பார்!
இன்பம் எல்லாம் உன்னில் தான் 
இருந்த நிம்மதியையும் விலக்கி விடாதே!"
 
 
பாடசாலையில் பிள்ளைகள் மிகவும் திறமையாக படிப்பிலும் விளையாட்டிலும் மற்றும்  கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கைகளிலும் முன்னுக்கு நின்றார்கள். அது எனக்கு உண்மையில் நிம்மதி தந்தது. அது மட்டும் அல்ல, அவர்களுக்கு படிப்பிற்க்கான எல்லா வசதிகளும் குறைவின்றி நான் கொடுக்கக் கூடியதாகவும் இருந்தது. இதை விட என்ன வேண்டும்.? சொந்த வீடு, சொந்த மோட்டார் வண்டி,  இப்படி தேவைக்கு அளவாக எல்லாம் உண்டு. ஆனால் ஆடம்பரம் இல்லை. எனக்கு அதில் கவலையும் இல்லை 
 
 
"நிம்மதி தேடுவதை சற்று நிறுத்தினேன் 
நிமிர்ந்து என்னைக்  கொஞ்சம் பார்த்தேன்!
நில்லாமல் உழைத்த வேர்வையை கண்டேன் 
நிம்மதி கொண்டு பெருமை கொண்டேன்!" 
 
 
குடும்பம் என்பது இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்து மகிழ்வாக போவதே!. அதைத்தான் நான் இப்ப தொலைத்துவிட்டேன்!  மற்றும் படி ஒரு பிரச்சனையும் இல்லை. குண்டு ஷெல் இங்கு இல்லை. ஆனால் வாயால் செயல்களால் வரும் இந்து குண்டுகள், ஷெல்களில் இருந்து தப்ப பலவேளை நிம்மதியைத் தேடுகிறேன்! அது என் வாழ்நாள் வரை தொடரும்! ஒருவேளை அதை அவள் உணர்ந்தால், நிலைமை மாறலாம்? அப்படி வந்தால், மீண்டு என் கதையை உங்களுடன் தொடர்கிறேன் ! 
 
 
"எனக் கென யாரு மில்லை
என்று நிம்மதி இழக்கும் போது
உனக்காக என்றும் நான் என 
மனதார கூறும் உறவு வரமே!"
 
 
அப்படி அவள் கட்டாயம் வருவாள் என்ற நம்பிக்கையுடன் தான் என் கதையை இத்துடன் தற்காலிகமாக முடிக்கிறேன்!  இது அவளில் சூழ்நிலையால் ஏற்பட்ட சிறு மாற்றமே!! ஆனால் என்றுமே அவளின்  அன்பு, பாசம் என் மேலோ, பிள்ளைகள் மேலோ என்றும் குறையவில்லை, ஆக இப்படி - நான் அல்ல - நாமும்  வாழவேண்டும் என்ற ஆசை! அவ்வளவுதான் !! 
 
 
"தேடினது கிடைக்காதோ என்ற ஆசை
ஆசை நிறைவேறாதோ என்ற எதிர்பார்ப்பு
எதிர்பார்ப்பு சற்று தந்த ஏமாற்றம்
ஏமாற்றம் தந்த மன வலி
வலியை சுமந்தபடி வாழுற மனசு 
இதுலே எங்க இருந்து இனி 
நிம்மதி வரப் போகுதோ நானறியேன்!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
May be an illustration of 1 person  May be an image of 4 people, child, people sitting, people standing and indoor  சுஹைதாவின் பகிர்வுத்தளம்: 2012 312611511_10221875538500394_5824855494569408837_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=zgfKfQ021ywAb7YVdUf&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfC_gXxtTTKlnBe3Cj2LDtV2PPhWIJBxDpikGbrYWcLKfQ&oe=6631694E
 

"வீரனும் அறவழி போரும்"

3 days 7 hours ago
"வீரனும் அறவழி போரும்" உலகில் எந்த ஒரு பெண்ணும் / தாயும் ஒரு கோழையைப் பெற ஒருபோதும், எப்போதும் எந்த நிலையிலும் எந்த காலத்திலும் விரும்ப மாட்டாள், உதாரணமாக கி மு 1700 க்கும் 1100 க்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்ட ரிக் வேதத்தில் கூட, விவாஹ சுக்தம்- மண்டலம் 10, சுக்தம் 85 பாடல் 44 இல் "Not evileyed-, no slayer of thy husband, bring weal to cattle, radiant, gentle hearted; Loving the Gods, delightful, bearing heroes, bring blessing to our quadrupeds and bipeds." இப்படி கூறுகிறது. அதாவது நீ பொறாமை, எரிச்சல் அற்றவளாக என தொடங்கி, இடையில் நீ வீரர்களைப் பெறுவாயாக என்று வாழ்த்துகிறது. அது மட்டும் அல்ல இந்த நூற்றாண்டு பாரதியும் இன்னும் ஒருபடி மேலே போய்: “வீரரைப் பெறாத மேன்மைதீர் மங்கையை ஊரவர் மலடி என்று உரைத்திடு நாடு” ["சத்ரபதி சிவாஜி"/ பாரதியார்] என மலடிக்கு ஒரு புது விளக்கமே கொடுக்கிறார். அப்படிபட்ட வீரத் தாயையும் அவள் பெற்ற அந்த மா வீரர்களையும் புறநானுறு கவிதையில் விரிவாக 2000 / 2500 வருடங்களுக்கு முன்பே வடித்த பெருமை எங்கள் சங்க தமிழர்களுக்கு உண்டு. மேலும் போரில் இறப்பதே வீரர்களுக்கு அழகு என்பதுடன் அப்படி சண்டையிட்டு இறப்பவர்கள் சொர்க்கத்திற்கு போவதாகவும் குறிக்கப்பட்டிருப்பது, சங்கத் தமிழர்கள் ஒரு உண்மையான வீரனை எவ்வளவு தூரம் உயர்வாக மதித்தார்கள் என்பது புலன்படுகிறது. இதைத்தான் பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு கண்ணன் சொல்கிறான்: "O son of Kuntī, either you will be killed on the battlefield and attain the heavenly planets, or you will conquer and enjoy the earthly kingdom. Therefore, get up with determination and fight." "குந்தியின் மகனே! கொல்லப்பட்டாலோ நீ சொர்க்கத்தை அடைவாய்; ஜெயித்தாலோ பூமியை அனுபவிப்பாய். ஆகையால் போருக்குத் துணிந்தவனாக எழுந்திரு! (கீதை 2-37)" மேலும் போரில் மடிந்த, பெரும் வீரர்களை புதைத்த இடத்தில், அவர்களின் நினைவாக நடு கல்கள் நாட்டப்பட்டதும், போரில் வெற்றி வேண்டி அங்கு நடு கல் வணக்கம் செய்வதும் ஒரு வழமையாக இருந்ததுள்ளது சங்க பாடல்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதாவது போரில் தன் வீரத்தை நிலை நிறுத்தி, எதிரி படையை கலங்கடித்து, இறுதியில் வீழ்ந்து மடிந்த அந்த மா வீரனை, எம் மூதாதையர்கள், தெய்வமாகவே போற்றி வணங்கினார்கள். அதாவது வீரத்தை தெய்வமாக கருதி வழிபாடு நிலை அங்கு இருந்துள்ளது. எனினும் அறம் சார்ந்த வீரமே அங்கு பெருமை உடையதாய் கருதப்பட்டது. அந்த நிலை இன்று அருகிப் போயிற்று. இதை நாம் கண்டு, கேட்டு,அனுபவித்தும் உள்ளோம். சங்க காலம் என்பது கி.மு. 700 ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 300 ஆம் ஆண்டு வரை உள்ள காலப் பகுதி ஆகும். இக்காலத்தில் தோன்றியது தான் புறநானுறு. அந்த புறநானூற்றில் தமிழர் வரலாற்றை எழுதுவதற்குரிய பல முதன்மைச் சான்றுகள் உள்ளன. எனினும், முழுமையான தரவுகள் இல்லை. அதாவது குறிப்புகள் மட்டுமே உள்ளன. சங்கக் காலம் என்பது இனக்குழு வாழ்க்கை மறைந்து, பேரரசர்களின் ஆட்சி தோன்றத் தொடங்கிய காலம் என்று கூறுவார். இதனால், புறநானூற்றில் இனக்குழுத் தலைவர்கள், குறுநில மன்னர்கள், பெருநில மன்னர்கள் ஆகியோரின் தகவல்கள் கிடைக்கின்றன. அதில் அரசர்களின் வீர செயல்கள், தன் நாட்டிற்காக, தன் இனத்திற்காக போரில் சண்டையிட்டு சாவதையே பெருமையாக கருதும் இயல்பு, அப்படி மாண்ட வீரர்களை தெய்வமாக்கிய பண்பாடு, அப்படி போரில் வீர சாவு அடைகிறவர்கள் சொர்க்கத்திற்கு போவார்கள் என்று உற்சாகப்படுத்தும் ஒரு நம்பிக்கை, இவைகளுக்கு மேலாக, எமக்கு கிடைத்த மிக முக்கிய தகவல் அறவழியில் போரை நடத்தும் வழக்கம். இது இந்த காலத்திற்கும் தேவையான ஒன்று. இப்ப இந்த ஒழுக்கம் போரில் இருப்பதில்லை. போர் விதி முறை அல்லது அனைத்துலக மனிதாபிமான சட்டத்திற்கு முரணாக செயல்படுகிறார்கள். குழந்தைகள், முதியோர்கள், பெண்கள், தாய்மார்கள், அப்பாவிகள் இவர்களை எல்லாம் கண் மூடித்தனமாக தாக்கி அழிக்கிறார்கள். அது மட்டும் அல்ல வைத்தியசாலை, பாடசாலை, பாதுகாப்பு இல்லங்கள் / இடங்கள் என அறிவிக்கப்பட்ட இடங்கள் கூட தாக்கப்படுகின்றன. சரண் அடைந்தவர்களும் கொல்லப்படுகிறார்கள். போர் பிணையாளர்களும் கொல்லப்படுகிறார்கள். இது இப்ப உலகில் பல இடங்களில் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன. ஆனால் முறைப்படி போர் சாற்றும் வழக்கம் பழங் காலத்திலேயே தமிழர்களிடம் இருந்தனை என்பதை புறநானுறு 9 கூறிச் செல்கிறது. கடைச்சங்க காலத்திற்கு முன்னர் வாழ்ந்தவனாகக் கருதப்படும் பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பவனை புகழ்ந்து, அவன் அறவழியில் போர் நிகழ்த்தும் பண்புடையவன் என்று போற்றி இப் பாடல் பாடப்பெற்றுள்ளது. அது தான் அந்த முக்கிய தகவல். அதாவது சங்க காலத்தில் அரசர்கள் நிகழ்த்திய போர்கள் அறவழிப்பட்டவை என்றும், தர்மயுத்தம் என்றும் இதனால் அறிகிறோம். இதே போல கி.மு ஏழாம் நூற்றாண்டு சுமேரிய காவியமான கில்கமெஷிலும் (Epic of Gilgamesh) இது காணப்படுகிறது. [Brien Hallett,The Lost Art of Declaring War]. கில்கமெஷ் காப்பியம் என்பது பண்டைக்கால மெசொப்பொத் தேமியாவில் எழுதப்பட்ட ஒரு செய்யுள் இதிகாசம் ஆகும். போர் தொடுக்கப்போகிறேன். ஆனிரை [பசுக் கூட்டம்], ஆனிரை போன்ற இயல்புடைய பார்ப்பன மாக்கள் [பிராமணர்], பெண்டிர், பிணியுடையவர், மக்கட்செல்வம் இல்லாதவர், ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள் என முன்கூட்டியே அறிவித்து தமிழர் போரை ஆரம்பித்தார்கள் என அறிகிறோம். இதோ அந்த பாடல்: "ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும், பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித் தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும், எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின் கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும் எங்கோ, வாழிய குடுமி! தங் கோச் செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த, முந்நீர் விழவின், நெடியோன் நன்னீர்ப் ப·றுளி மணலினும் பலவே!" பசுக்களும்,பசுவின் இயல்பை ஒத்த அந்தணரும், பெண்களும், நோயுடையவர்களும், இறந்ததன் பின்னர்த் தென்திசையில் வாழ்வோராகிய முன்னோர்களுக்கு விருப்பத்துடன் ஈமச் செயல்களைச் செய்வதற்குரிய பொன்னையொத்த ஆண் மக்களைப் பெறாதவர்களும் ["பிதிர்க்கடன்"/ "இறந்தவர்களுக்கு செய்யும் கடன்" ஆற்றுதற்குரிய புதல்வர்களைப் பெறாதாரையும்] பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுங்கள்! நாங்கள் எங்கள் அம்புகளை விரைவாகச் செலுத்தப் போகிறோம்’ என்று இந்த பாடல் கூறுகிறது. அதாவது அரசர்கள் போரில் இப்படி பட்ட அப்பாவிகளை கொல்லக்கூடாது. அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவிட்டுத் தான் போரைத் தொடங்க வேண்டும் என்று கூறுகிறது. அதுதான் யுத்த தருமமாகும். பண்டை மன்னர்கள் அவ்வாறுதான் போர்களை நடத்தினார்கள் என்றும் அது தான் அறவழிப்பட்ட போரின் அடையாளமாகும் என்றும் இப்பாடல் இடித்து கூறுகிறது. இப்படி போரை நடத்திய இந்த மன்னன், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, "பஃறுளி ஆற்றின் மணலை விட எண்ணிக்கை மிக்க பலகாலம் வாழ்வானாக” என மேலும் அவனை வாழ்த்துகிறது. பஃறுளி என்பது பழந்தமிழ் நாட்டிலிருந்த ஓர் ஆற்றின் பெயர். பல் துளி என்னும் சொற்கள் இணையும்போது பஃறுளி என அமையும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

"வீரனும் அறவழி போரும்"

3 days 7 hours ago
"வீரனும் அறவழி போரும்"
 
 
உலகில் எந்த ஒரு பெண்ணும் / தாயும் ஒரு கோழையைப் பெற ஒருபோதும், எப்போதும் எந்த நிலையிலும் எந்த காலத்திலும் விரும்ப மாட்டாள், உதாரணமாக கி மு 1700 க்கும் 1100 க்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்ட ரிக் வேதத்தில் கூட, விவாஹ சுக்தம்- மண்டலம் 10, சுக்தம் 85 பாடல் 44 இல்
 
"Not evileyed-, no slayer of thy husband, bring weal to cattle, radiant, gentle hearted; Loving the Gods, delightful, bearing heroes, bring blessing to our quadrupeds and bipeds."
 
இப்படி கூறுகிறது. அதாவது நீ பொறாமை, எரிச்சல் அற்றவளாக என தொடங்கி, இடையில் நீ வீரர்களைப் பெறுவாயாக என்று வாழ்த்துகிறது. அது மட்டும் அல்ல இந்த நூற்றாண்டு பாரதியும் இன்னும் ஒருபடி மேலே போய்:
 
“வீரரைப் பெறாத மேன்மைதீர் மங்கையை
ஊரவர் மலடி என்று உரைத்திடு நாடு”
["சத்ரபதி சிவாஜி"/ பாரதியார்]
 
என மலடிக்கு ஒரு புது விளக்கமே கொடுக்கிறார். அப்படிபட்ட வீரத் தாயையும் அவள் பெற்ற அந்த மா வீரர்களையும் புறநானுறு கவிதையில் விரிவாக 2000 / 2500 வருடங்களுக்கு முன்பே வடித்த பெருமை எங்கள் சங்க தமிழர்களுக்கு உண்டு. மேலும் போரில் இறப்பதே வீரர்களுக்கு அழகு என்பதுடன் அப்படி சண்டையிட்டு இறப்பவர்கள் சொர்க்கத்திற்கு போவதாகவும் குறிக்கப்பட்டிருப்பது, சங்கத் தமிழர்கள் ஒரு உண்மையான வீரனை எவ்வளவு தூரம் உயர்வாக மதித்தார்கள் என்பது புலன்படுகிறது. இதைத்தான் பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு கண்ணன் சொல்கிறான்:
 
"O son of Kuntī, either you will be killed on the battlefield and attain the heavenly planets, or you will conquer and enjoy the earthly kingdom. Therefore, get up with determination and fight."
 
"குந்தியின் மகனே! கொல்லப்பட்டாலோ நீ சொர்க்கத்தை அடைவாய்; ஜெயித்தாலோ பூமியை அனுபவிப்பாய். ஆகையால் போருக்குத் துணிந்தவனாக எழுந்திரு!
(கீதை 2-37)"
 
மேலும் போரில் மடிந்த, பெரும் வீரர்களை புதைத்த இடத்தில், அவர்களின் நினைவாக நடு கல்கள் நாட்டப்பட்டதும், போரில் வெற்றி வேண்டி அங்கு நடு கல் வணக்கம் செய்வதும் ஒரு வழமையாக இருந்ததுள்ளது சங்க பாடல்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதாவது போரில் தன் வீரத்தை நிலை நிறுத்தி, எதிரி படையை கலங்கடித்து, இறுதியில் வீழ்ந்து மடிந்த அந்த மா வீரனை, எம் மூதாதையர்கள், தெய்வமாகவே போற்றி வணங்கினார்கள்.
 
அதாவது வீரத்தை தெய்வமாக கருதி வழிபாடு நிலை அங்கு இருந்துள்ளது. எனினும் அறம் சார்ந்த வீரமே அங்கு பெருமை உடையதாய் கருதப்பட்டது. அந்த நிலை இன்று அருகிப் போயிற்று. இதை நாம் கண்டு, கேட்டு,அனுபவித்தும் உள்ளோம்.
 
சங்க காலம் என்பது கி.மு. 700 ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 300 ஆம் ஆண்டு வரை உள்ள காலப் பகுதி ஆகும். இக்காலத்தில் தோன்றியது தான் புறநானுறு. அந்த புறநானூற்றில் தமிழர் வரலாற்றை எழுதுவதற்குரிய பல முதன்மைச் சான்றுகள் உள்ளன. எனினும், முழுமையான தரவுகள் இல்லை. அதாவது குறிப்புகள் மட்டுமே உள்ளன. சங்கக் காலம் என்பது இனக்குழு வாழ்க்கை மறைந்து, பேரரசர்களின் ஆட்சி தோன்றத் தொடங்கிய காலம் என்று கூறுவார். இதனால், புறநானூற்றில் இனக்குழுத் தலைவர்கள், குறுநில மன்னர்கள், பெருநில மன்னர்கள் ஆகியோரின் தகவல்கள் கிடைக்கின்றன.
 
அதில் அரசர்களின் வீர செயல்கள், தன் நாட்டிற்காக, தன் இனத்திற்காக போரில் சண்டையிட்டு சாவதையே பெருமையாக கருதும் இயல்பு, அப்படி மாண்ட வீரர்களை தெய்வமாக்கிய பண்பாடு, அப்படி போரில் வீர சாவு அடைகிறவர்கள் சொர்க்கத்திற்கு போவார்கள் என்று உற்சாகப்படுத்தும் ஒரு நம்பிக்கை, இவைகளுக்கு மேலாக, எமக்கு கிடைத்த மிக முக்கிய தகவல் அறவழியில் போரை நடத்தும் வழக்கம்.
 
இது இந்த காலத்திற்கும் தேவையான ஒன்று. இப்ப இந்த ஒழுக்கம் போரில் இருப்பதில்லை. போர் விதி முறை அல்லது அனைத்துலக மனிதாபிமான சட்டத்திற்கு முரணாக செயல்படுகிறார்கள். குழந்தைகள், முதியோர்கள், பெண்கள், தாய்மார்கள், அப்பாவிகள் இவர்களை எல்லாம் கண் மூடித்தனமாக தாக்கி அழிக்கிறார்கள். அது மட்டும் அல்ல வைத்தியசாலை, பாடசாலை, பாதுகாப்பு இல்லங்கள் / இடங்கள் என அறிவிக்கப்பட்ட இடங்கள் கூட தாக்கப்படுகின்றன. சரண் அடைந்தவர்களும் கொல்லப்படுகிறார்கள். போர் பிணையாளர்களும் கொல்லப்படுகிறார்கள். இது இப்ப உலகில் பல இடங்களில் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன.
 
ஆனால் முறைப்படி போர் சாற்றும் வழக்கம் பழங் காலத்திலேயே தமிழர்களிடம் இருந்தனை என்பதை புறநானுறு 9 கூறிச் செல்கிறது. கடைச்சங்க காலத்திற்கு முன்னர் வாழ்ந்தவனாகக் கருதப்படும் பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பவனை புகழ்ந்து, அவன் அறவழியில் போர் நிகழ்த்தும் பண்புடையவன் என்று போற்றி இப் பாடல் பாடப்பெற்றுள்ளது. அது தான் அந்த முக்கிய தகவல்.
 
அதாவது சங்க காலத்தில் அரசர்கள் நிகழ்த்திய போர்கள் அறவழிப்பட்டவை என்றும், தர்மயுத்தம் என்றும் இதனால் அறிகிறோம். இதே போல கி.மு ஏழாம் நூற்றாண்டு சுமேரிய காவியமான கில்கமெஷிலும் (Epic of Gilgamesh) இது காணப்படுகிறது. [Brien Hallett,The Lost Art of Declaring War]. கில்கமெஷ் காப்பியம் என்பது பண்டைக்கால மெசொப்பொத் தேமியாவில் எழுதப்பட்ட ஒரு செய்யுள் இதிகாசம் ஆகும். போர் தொடுக்கப்போகிறேன். ஆனிரை [பசுக் கூட்டம்], ஆனிரை போன்ற இயல்புடைய பார்ப்பன மாக்கள் [பிராமணர்], பெண்டிர், பிணியுடையவர், மக்கட்செல்வம் இல்லாதவர், ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள் என முன்கூட்டியே அறிவித்து தமிழர் போரை ஆரம்பித்தார்கள் என அறிகிறோம். இதோ அந்த பாடல்:
 
"ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,
எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என
அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ, வாழிய குடுமி! தங் கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின், நெடியோன்
நன்னீர்ப் ப·றுளி மணலினும் பலவே!"
 
பசுக்களும்,பசுவின் இயல்பை ஒத்த அந்தணரும், பெண்களும், நோயுடையவர்களும், இறந்ததன் பின்னர்த் தென்திசையில் வாழ்வோராகிய முன்னோர்களுக்கு விருப்பத்துடன் ஈமச் செயல்களைச் செய்வதற்குரிய பொன்னையொத்த ஆண் மக்களைப் பெறாதவர்களும் ["பிதிர்க்கடன்"/ "இறந்தவர்களுக்கு செய்யும் கடன்" ஆற்றுதற்குரிய புதல்வர்களைப் பெறாதாரையும்] பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுங்கள்! நாங்கள் எங்கள் அம்புகளை விரைவாகச் செலுத்தப் போகிறோம்’ என்று இந்த பாடல் கூறுகிறது.
 
அதாவது அரசர்கள் போரில் இப்படி பட்ட அப்பாவிகளை கொல்லக்கூடாது. அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவிட்டுத் தான் போரைத் தொடங்க வேண்டும் என்று கூறுகிறது.
 
அதுதான் யுத்த தருமமாகும். பண்டை மன்னர்கள் அவ்வாறுதான் போர்களை நடத்தினார்கள் என்றும் அது தான் அறவழிப்பட்ட போரின் அடையாளமாகும் என்றும் இப்பாடல் இடித்து கூறுகிறது. இப்படி போரை நடத்திய இந்த மன்னன், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, "பஃறுளி ஆற்றின் மணலை விட எண்ணிக்கை மிக்க பலகாலம் வாழ்வானாக” என மேலும் அவனை வாழ்த்துகிறது. பஃறுளி என்பது பழந்தமிழ் நாட்டிலிருந்த ஓர் ஆற்றின் பெயர். பல் துளி என்னும் சொற்கள் இணையும்போது பஃறுளி என அமையும்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No photo description available. No photo description available. No photo description available. 
 
 
 

மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது?

3 days 8 hours ago
1. தூள்/கோப்பி - அங்கே வியாபாரிகளிடம் வாங்கும் மூலப்பொருட்களை வைத்தே இடிப்பது. ஆகவே பயிர் விளைவிக்கும் போது பாவிக்கப்படும் கெமிக்கல் பாதிப்பு இருக்கவே செய்யும். இந்த முறை போகும் போது பார்க்க நினைத்து முடியாமல் போன விடயம் ஒர்கானிக் தோட்டங்கள். இவை இப்போ கொஞ்சம் கொஞ்சமாக அங்கே வரத்தொடங்கி விட்டன. ஓர்கானிக் தோட்டங்களில் மிளகாய் எடுக்க முடியுமாய் இருக்கும். மல்லி, கோப்பி இப்படி எடுக்க முடியுமா என்பது கேள்விக்குறியே. எனது மகனுக்கு முடிந்தளவு மிளகாய் உறைப்பை பழக்காமல் தவிர்கிறேன். ஒரு காலத்தில் உறைப்பு சாப்பிடுவதை ஏதோ வீர சாகசம் போல நானும் கதைத்து திரிந்தவனே. ஆனால் இந்த பழக்கத்தால் தேவையில்லாமல் குப்பைகளை உண்கிறோம் என்பது காலம் செல்லவே உறைத்தது (pun intended 🤣). தவிரவும் மிளகாய் என்பதே தென்னமரிக்காவில் இருந்து எமக்கு போத்துகேயர் அறிமுகம் செய்ததுதானே. அதில் ஒரு “தமிழேண்டா” பெருமையும் இல்லை. யோசிக்க வேண்டிய கோணம்தான். நாங்கள் ஊரில் இருந்து எடுப்பிக்கலாம் அண்ணை. 1kg வுக்கு சுமைக்கூலி 1000 ரூபா.