Aggregator

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி -  2024

2 days 23 hours ago
இந்த‌ முறை போட்டி கேள்விக‌ள் முன்பை விட‌ வித்தியாச‌ம் தானே அது தான் இவை ப‌ம்பின‌ம் 18ம் திக‌தி 10க்கும் மேல் ப‌ட்ட‌ உற‌வுக‌ள் க‌ல‌ந்து கொள்ளுவின‌ம்.......................அப்ப‌ கேள்விக்கான‌ ப‌தில‌ ப‌திஞ்சு புள்ளிய‌ அள்ளுவின‌ம்..........................................

இந்தியாவால் வல்லரசாக உருவெடுக்க முடியுமா? விஸ்வரூபம் எடுத்து நிற்கும் சவால்கள்

2 days 23 hours ago
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பெர்னாண்டோ டுவார்டே பதவி, பிபிசி உலக சேவை 31 நிமிடங்களுக்கு முன்னர் ஏப்ரல் 19ஆம் தேதி உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மக்களவைத் தேர்தல் தொடங்க உள்ளது. ஆறு வாரங்களுக்கு நடைபெற உள்ள இந்த தேர்தலில் 96.9 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர். தற்போதைய பிரதமரான நரேந்திர மோதி மற்றும் அவரது பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க முனைப்பு காட்டுகிறது. அணு ஆயதம் கொண்டுள்ள நாடாகவும், நிலவில் தனது விண்கலத்தை தரையிறக்கிய நாடாகவும் இந்தியா முன்னிலை வகிக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, உலகின் அதிக மக்கள் தொகைக் கொண்ட நாடாக மாறிய இந்தியா, இங்கிலாந்து பொருளாதாரத்தை முந்தி தற்போது உலகின் 5வது வலிமை மிக்க பொருளாதாரம் கொண்ட நாடாக உருவெடுத்துள்ளது. பலரும் இந்தியா உலகின் அடுத்த வல்லரசு நாடாக உருவெடுக்கும் என்று கணித்துள்ளனர். ஆனாலும், அந்த முன்னேற்றம் நம்பிக்கை மற்றும் எச்சரிக்கையுடன் கலந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகின் அதிக ஏற்றுமதி செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியா 10வது இடத்தில் உள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. வளர்ந்து வரும் பொருளாதாரம் கடந்த ஆகஸ்ட் மாதம் தென்னாப்பிரிக்கா சென்றிருந்த போது பிரதமர் மோதி, “இந்தியா உலகின் வளர்ச்சி இயந்திரமாக இருக்கும்" என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டின் இறுதியில், கடைசி மூன்று மாதங்களில் 8.4 சதவீதமாக விரிவடைந்த பொருளாதாரத்தின் மூலம் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம் என்ற அங்கீகாரத்தை பெற்றது இந்தியா. ஒரு நாட்டில் உள்ள நிறுவனங்கள், அரசுகள் மற்றும் தனிநபர்களின் பொருளாதார செயல்பாடுகளை அளவிடும் GDP (மொத்த உள்நாட்டு உற்பத்தி) மூலம் உலகப் பொருளாதாரங்களை வரிசைப்படுத்தலாம். அமெரிக்க முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி உட்பட பல நிதி நிறுவனங்களின் கூற்றுப்படி, 2027 ஆம் ஆண்டுக்குள் இந்தியா ஜெர்மனி மற்றும் ஜப்பானை முந்தி மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான வழித்தடத்தில் சென்றுக் கொண்டிருக்கிறது. இந்தியா 1947 இல் சுதந்திரம் பெற்ற போது உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பல தசாப்தங்களாக நீடித்து வந்த ஆங்கிலேயரின் ஆட்சி, வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வசதிகள் செய்ய முடியாத அளவிற்கான மோசமான உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத் துறையையே விட்டுச் சென்றது. அப்போது இந்தியாவின் தனிநபர் ஆயுட்காலம் 35 ஆண்டுகளாக இருந்தது. ஆனால் உலக வங்கியின் கூற்றுப்படி, இன்று அது கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்து 67 ஆண்டுகள் என்ற நிலையில் உள்ளது. அதே நேரத்தில் உலகளாவிய சராசரி 71 ஆண்டுகள் ஆகும். உலகின் அதிக ஏற்றுமதி செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியா 10வது இடத்தில் உள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. அதில் முக்கியமாக சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், வைரங்கள் மற்றும் பேக் செய்யப்பட்ட மருந்துகள் ஆகியவை அடங்கும். இந்தியாவின் செழிப்பு மிக்க சேவைத் துறை மற்றும் தொலைத்தொடர்பு, மென்பொருள் துறைகளின் வளர்ச்சியே அதன் பொருளாதார ஏற்றம் காண காரணமாக அமைந்தது. ஆனால் அதே வேகத்தில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்று பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். HSBC யின் ஒரு மதிப்பீட்டின்படி, அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை உயரும்போது, 70 மில்லியன் வேலைவாய்ப்புகளை அது உருவாக்க வேண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதில் மூன்றில் ஒருபங்கை தாண்டி அதற்கு மேல் உருவாக்க வாய்ப்பில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐ.நா.வின் கூற்றுப்படி, இந்தியாவைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான குடிமக்கள் வெளிநாட்டில் வாழ்கின்றனர் . 'மக்கள் தொகை பெருக்கம்' பல வளர்ந்த நாடுகளை விட இந்தியாவின் மக்கள் தொகையின் சராசரி வயது குறைவு. ஐ.நா கூற்றுப்படி 2022 ஆம் ஆண்டில், சீனா மக்கள் தொகையின் சராசரி வயது 38.4 மற்றும் ஜப்பான் 48.6 ஆகியவற்றோடு ஒப்பிடுகையில் இந்தியாவின் மக்கள் தொகை சராசரி வயது 28.7 ஆக இருந்தது. தற்போது, இந்தியாவின் மொத்த மக்கள்தொகை 140 கோடியாக உள்ளது. இந்திய பொருளாதார வல்லுநர்களான பஷார் சக்ரவர்த்தி மற்றும் கௌரவ் டால்மியா ஆகியோர் 2030 ஆம் ஆண்டிற்குள் இந்திய மக்கள் தொகையில் வேலைக்கு செல்லும் வயதினரின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டும் என்று கணித்துள்ளனர். ஹார்வர்ட் பிசினஸ் ரிவியூவிடம் அவர்கள் பேசுகையில், ஜப்பான் மற்றும் சீனா உள்ளிட்ட பிற ஆசிய நாடுகள் அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் இந்த "உழைக்கும் வயது மக்கள் தொகையையே" நம்பியுள்ளது என்று தெரிவித்தனர். ஆனால் அந்த தொழிலாளர்கள் அனைவரையும் நாட்டில் தக்கவைப்பது கடினம். ஐ.நா.வின் கூற்றுப்படி, இந்தியாவைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான குடிமக்கள் வெளிநாட்டில் வாழ்கின்றனர் . அதாவது சுமார் 1.8 கோடி மக்கள். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25 லட்சம் பேர் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். இதில் உயர்கல்வியில் சாதனை படைத்தவர்களும் அடங்குவர். இந்தியக் குடியுரிமையை ரத்து செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையைப் பதிவு செய்யும் வெளிவிவகார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, அதிகமான இந்தியர்கள் காலவரையின்றி வெளிநாட்டில் தங்குவதைத் தேர்வு செய்கிறார்கள். இந்தியாவில் இரட்டை குடியுரிமைக்கு அனுமதியில்லை. 2022 ஆம் ஆண்டில், 225,000 க்கும் அதிகமான இந்தியர்கள் தங்களது குடியுரிமையை ரத்து செய்துள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் இதுவே அதிக எண்ணிக்கை. பலருக்கும் உள்ளூரில் வேலைவாய்ப்பை பெறுவது சவாலாக அமைந்துள்ளது. அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் வேலையின்மை விகிதம் 8% என்று கூறுகிறது. இது அமெரிக்காவில் 3.8% ஆக உள்ளது. மார்ச் மாதத்தில், சர்வதேச தொழிலாளர் அமைப்பு, இந்தியாவில் வேலையில்லாமல் இருப்பவர்களில் 15-29 வயதிற்குட்பட்டவர்கள் 83% பேர் இருப்பதாகவும், அவர்களில் பெரும்பான்மையானவர்கள் குறைந்தபட்சம் இடைநிலைக் கல்வி பெற்றவர்கள் என்றும் தெரிவித்தது. இந்திய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சித்தார்த்தா டெப், "நான் இந்தியா முழுவதும் பயணம் செய்து, இளைஞர்களுடன் உரையாடுகிறேன். அவர்கள் மன சோர்வடைந்துள்ளனர்” என்று கூறுகிறார். "பொருளாதார வளர்ச்சியானது நெடுஞ்சாலைகள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற புதிய உள்கட்டமைப்பைக் கொண்டுவந்தது. மேலும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் பொதுவாகவே இந்தியாவில் உள்ள மக்கள் சிரமப்படுகிறார்கள்," என்று கூறுகிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பேராசிரியர் அஷ்வினி தேஷ்பாண்டே கூறுகையில், பல உழைக்கும் பெண்கள் சுயதொழில் செய்கிறார்கள் என்கிறார். உழைக்கும் பெண்கள் எங்கே போனார்கள்? இந்தியாவில் பணிபுரியும் பெண்களின் விகிதம் 33% என்று அரசு கூறுகிறது. இதை அமெரிக்காவில் 56.5%, சீனாவில் 60.5% மற்றும் உலகளாவிய சராசரி 49% என்ற அளவுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் குறைவாகவே உள்ளது என்று உலக வங்கி கூறுகிறது. கடந்த காலத்தை விட அதிகமான இந்தியப் பெண்கள் கல்வியில் முன்னேறியிருந்தாலும், திருமணம் செய்து கொள்ளும் மற்ற பெண்கள், கலாசாரத்தை பின்பற்றி வீட்டில் தங்க வேண்டிய சூழலே உள்ளது. பெங்களூரில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணரான பேராசிரியர் அஷ்வினி தேஷ்பாண்டே கூறுகையில், பல உழைக்கும் பெண்கள் சுயதொழில் செய்கிறார்கள் என்கிறார். "வேலை ஒப்பந்தங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்புப் பலன்களுடன் கூடிய வழக்கமான ஊதியம் பெறும் வேலைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டிய அவசரத் தேவை உள்ளது" என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய பில்லியனர்களின் எண்ணிக்கை 1991 இல் ஒருவரில் இருந்து 2022 இல் 162 ஆக உயர்ந்துள்ளது என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. நீடிக்கும் சமத்துவமின்மை உலகின் மிகவும் சமத்துவமற்ற நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. ஏறக்குறைய இந்தியாவின் பாதி மக்கள் தொகையானது, உலக வங்கியின் சராசரி வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கிறது, அதே நேரத்தில் இந்திய பில்லியனர்களின் எண்ணிக்கை 1991 இல் ஒருவரில் இருந்து 2022 இல் 162 ஆக உயர்ந்துள்ளது என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச பொருளாதார கொள்கைக்கான பேராசிரியர் டாக்டர் அசோகா மோதி, "இந்தியாவில் பரந்த சமத்துவமின்மை நிலவுகிறது" என்று கூறுகிறார். மேலும் இதுவே, "பெரியளவிலான கட்டமைப்பு சார்ந்த மாற்றங்கள் எதுவும் இல்லாமல் இந்தியா வல்லரசாக மாறும் என்று கூறுவது முட்டாள்தனமான ஒன்று" என்று கருதுவதற்கான முக்கிய காரணமாகும். அப்படியான முக்கிய மாற்றங்களில் ஒன்று, இந்திய பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்துவது உட்பட, சமத்துவமின்மையை போக்கும் சமூக சீர்திருத்தங்களை கொண்டு வருவது என்று டாக்டர் மோதி குறிப்பிடுகிறார். "நூற்றுக்கணக்கான மில்லியன் இந்தியர்களுக்கு வேலை கிடைப்பது கடினம். மேலும் கல்வி மற்றும் சுகாதாரமும் மோசமாக உள்ளது" என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,எழுத்தாளர் தேவிகா ரேஜ், தனது நாடு "வகுப்புவாத முரண்பாட்டின்" அலையை எதிர்கொண்டு வருவதாக நம்புகிறார். தீவிரமடையும் அரசியல் கருத்து வேறுபாடு இந்தியாவில் அரசியல் கருத்து வேறுபாடு ஒன்றும் புதிதல்ல. 1800களில் இருந்தே இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டுமா அல்லது இந்து நாடாக இருக்க வேண்டுமா என்ற விவாதம் நடந்து வருகிறது. இந்தியாவில் சுமார் 80% மக்கள் இந்துக்கள். 2014 இல் நரேந்திர மோதியின் இந்து தேசியவாத பாஜக கட்சியின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இந்த விவாதம் தீவிரமடைந்தது. இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுக்கத்தக்க குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில், ஐ.நா. மற்றும் அமெரிக்க அரசு ஆகிய இரண்டும் சிஏஏ சட்டத்திற்கு எதிராக தங்களது கவலைகளை தெரிவித்திருந்தன. ‘2014 தேர்தலுக்குப் பிறகு இந்தியா’ குறித்த சர்ச்சைக்குரிய நாவலான Quarterlife என்ற புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்ட எழுத்தாளர் தேவிகா ரேஜ், தனது நாடு "வகுப்புவாத முரண்பாட்டின்" அலையை எதிர்கொண்டு வருவதாக நம்புகிறார். இதுகுறித்துஅவர் கூறுகையில் : "இந்தியாவில் மக்கள் எப்படி வாக்களிக்கிறார்கள் என்பதற்கு அடையாள அரசியல் ஏற்கனவே ஒரு காரணியாக இருந்தது. ஆனால் 2014 தேர்தல் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என்ற மட்டத்தில் இருந்தே மக்களை வெவ்வேறு திசைகளை நோக்கி தள்ளியது." "இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை மறுப்பது கடினம், ஆனால் அதேசமயம் இந்தியாவில் சிவில் உரிமைகள் சமரசம் செய்யப்பட்டுள்ளது மட்டுமின்றி வகுப்புவாத முரண்பாடு நிறைந்துள்ளது. இதுபோன்ற சூழல் விரைவில் கைமீறி செல்லும்போது, அதன் பின்விளைவுகள் மோசமாக இருக்கும்.” பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தியா எப்போதும் மேற்குலகின் விருப்பப்படி நடந்து கொள்வதில்லை. "மேற்குலகின் கைப்பாவை அல்ல இந்தியா" ஆசியாவில் சீனாவின் செல்வாக்கை சமநிலைப்படுத்தும் சக்தியாக இந்தியா மாறும் என்று பல ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகள் நம்பி வந்தன. அணு ஆயுதம் கொண்ட நாடாக இருப்பதுடன், 1.45 மில்லியன் சுறுசுறுப்பான பணியாளர்களைக் கொண்ட உலகின் இரண்டாவது பெரிய இராணுவத்தையும் கொண்டுள்ளது. ஆனால் இந்தியா எப்போதும் மேற்குலகின் விருப்பப்படி நடந்து கொள்வதில்லை. ரஷ்யா-யுக்ரைன் போரில் அதன் நடுநிலை நிலைப்பாடு மற்றும் மாஸ்கோவிற்கு எதிரான மேற்கத்திய தடைகளை மீறி ரஷ்ய எண்ணெயை தள்ளுபடி விலையில் வாங்கியதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் அது பல்வேறு விமர்சனங்களை பெற்றுள்ளது. லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிகல் சயின்ஸின் சர்வதேச உறவுகளுக்கான நிபுணர் சானியா குல்கர்னி, மேற்கத்திய நாடுகள் அணுகுவதற்கு சீனாவை விட இந்தியா "குறைந்த சவால்கள்" கொண்டதாக இருக்கும் என்று மேற்குலகம் எதிர்பார்க்கலாம். ஆனால் எப்போதும் இந்தியாவிற்கு அதன் சொந்த இலக்குகள் இருப்பதாக எச்சரிக்கிறார்.” "இந்தியா மேற்கத்திய நாடுகளுக்கான தூதராக செயல்படும் என்று எதிர்பார்ப்பது தவறானது" என்று கூறும் அவர், "மேற்கத்திய எதிர்ப்புக்கு எதிரான மேற்கத்தியர் அல்லாத ஒரு நாடாக இருக்க வேண்டும் என்பதையே இந்தியா வலியுறுத்துகிறது" என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c51nmv8nn50o

வேற்றுக்கிரகத்துக்கு செல்ல உயிரை மாய்த்துக்கொண்ட மூவர்... - கேரளாவை உலுக்கிய பிளாக் மேஜிக் மரணம்!

2 days 23 hours ago
ஆசிய நாடுகளை பொறுத்தவரை படித்தவர்கள் தான் கூடுதலாக பகுத்தறிவுக்கு முரணாண பலவற்றை நம்புவர்களாக உள்ளனர். ஸ்ரிபன் ஹக்கின் தனது நூலில் எழுதியிருந்தார், தான் கீழ் திசை நடுகளுக்கு சொற்பொழிவாற்ற சென்ற போது அடுத்த 2000 கோடி வருடங்களில் பிரபஞ்ச சுருக்கம் ஏற்பட்டு கோள்கள் ஒன்றோடு ஒன்று மோதி அழியலாம் என்ற, “பிரபஞ்ச சுருக்க கோட்பாடு” என்பது பற்றி அங்கு குறிப்பிட வேண்டாம் என்றும் அது பங்கு சந்தையில் எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டாராம். அந்த அளவுக்கு 2000 கோடி வருடங்களுக்கு பின்பு நடக்கும் என கூறப்படும்( அதுவும் இன்னமும் முழுமையாக நிரூபிக்கப்படாத ஆய்வில் இருக்கும் ஒரு கோட்பாடு) விடயங்களை பற்றி கூட கவலைப்படும் அளவுக்கு அங்கு படித்தவர்கள் கூட இருகிறார்கள்.

ஆமையும் தமிழனும்....

2 days 23 hours ago
எல்லோருக்கும் என் நன்றிகளும் வாழ்த்துக்களும் வாதம் பிரதிவாதம் என்றும் உண்மையைக் கண்டறிய நல்ல வழியே ! எனக்கு ஒரு ஆமை சம்பந்தமான தேவாரம் இப்ப ஞாபகம் வருகிறது. இது கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவருமான திருநாவுக்கரசு நாயனாரால் பாடப்பட்டது "வளைத்துநின் றைவர் கள்வர் வந்தெனை நடுக்கஞ் செய்யத் தளைத்துவைத் துலையை யேற்றித் தழலெரி மடுத்த நீரில் திளைத்துநின் றாடு கின்ற வாமைபோற் றெளிவி லாதேன் இளைத்துநின் றாடு கின்றே னென்செய்வான் றோன்றி னேனே." ஐந்து கள்வர் போன்ற ஐம்பொறிகள் இவ்வுடம்பில் என் உள்ளத்தைச் சுற்றி நின்று கொண்டு என்னை நடுங்கச் செய்தலால், எங்கும் செல்லாதபடி பிணித்து வைத்துப் பாத்திரத்தில் நீரை நிரப்பி அப்பாத்திரத்தைத் தீயினால் சூடாக்க, அந்நீரிலே பிணியை அவிழ்த்து நீந்தவிட்ட அளவிலே மகிழ்வோடி நீந்தி விளையாடிக்கொண்டு சூட்டில் வெந்து உயிர் நீங்க இருக்கும் அவலத்தைப் பற்றிச் சிந்திக்க மாட்டாத ஆமையைப் போல உள்ளத்தெளிவு இல்லாதேனாய் வாழ்க்கையில் இளைத்து நின்று தடுமாறுகின்றேன். வேறு யாது செய்வதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ? என கேட்கிறார் . அது பொதுவாக இன்று எல்லோருக்கும் பொருந்தும். தலைக்கு மேல் போனபின்புதான் எங்கே பிழை / தவறு என்று தேடுகிறோம் . அதற்கு பல விளக்கங்களும் கொடுக்கிறோம். ஆனால் அதில் இருந்து பாடம் கற்றால் , என்னையும் சேர்த்து, அது நன்றே !!

விதிகளை மீறும் பேருந்து சாரதிகள் தொடர்பில் அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கம்

2 days 23 hours ago
புத்தாண்டு காலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் பேருந்து சாரதிகள் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் செயற்பாட்டில் இருக்கும் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. புத்தாண்டு காலத்தில் பேருந்துகளின் மூலம் ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. குறித்த அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/298988

விதிகளை மீறும் பேருந்து சாரதிகள் தொடர்பில் அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கம்

2 days 23 hours ago
bus-2-300x200.jpg

புத்தாண்டு காலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் பேருந்து சாரதிகள் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் செயற்பாட்டில் இருக்கும் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

புத்தாண்டு காலத்தில் பேருந்துகளின் மூலம் ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

குறித்த அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/298988

 

ஆமையும் தமிழனும்....

2 days 23 hours ago
@goshan_che @kandiah Thillaivinayagalingam இதில் குமாரசாமி இணைத்த முதலாவது பதிவும் முன்பு யாரோ ஒருவர் நையாண்டியாக பதிந்த பதிவாக இருக்கலாம். அது கோஷான் கூறிய முதலாவது வகையை ஒத்த சிலரால் உண்மை என நம்பி முக நூல்களில் பகிரப்பட்டதாக இருக்கும். அது போல் கோஷானின் நையாண்டிப்பதிவும் அவ்வாறு உண்மை என நம்பி பகிரப்படும் அளவுக்கும் அதை நம்பும் குறிப்பிட்ட தொகை ஆட்களும் உள்ளனர்.

ஒரே வங்கியில் ரூ.3.30 லட்சம் கோடி மோசடி கடன் வாங்கி இந்த தொழிலதிபர் ஏமாற்றியது எப்படி?

2 days 23 hours ago
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி வியட்நாம் பதவி, பாங்காக்கில் இருந்து 13 ஏப்ரல் 2024, 15:38 GMT புதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர் வியட்நாமின் ஹோ சி மின் நகரில் உள்ள காலனித்துவ கால நீதிமன்றத்தில், ஒரு அதிசயக் காட்சி அரங்கேறியது. அப்போது நீதிமன்ற அறை முழுவதும் ஒரு பெயர் எதிரொலித்தது. அது ட்ரூங் மை லான். வியட்நாமின் மிகவும் பரபரப்பான வழக்குகளில் ஒன்றாகக் கருதப்படும் இது, உலகின் மிகப்பெரிய வங்கி மோசடிகளில் ஒன்றைத் திட்டமிட்டதற்காக செவ்வாயன்று மரண தண்டனை விதிக்கப்பட்ட 67 வயதான வியட்நாமிய ரியல் எஸ்டேட் அதிபரின் சுரண்டல்களை வெளிப்படுத்தியது. அத்தகைய வழக்கில் மரண தண்டனை என்பது வழக்கத்திற்கு மாறாக கடுமையான தண்டனையாகும். வியட்நாமில் ஒயிட் காலர் (White collar crime) குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட மிகச் சில பெண்களில் ட்ரூங் மை லானும் ஒருவர். முடிவை மேல்முறையீடு செய்ய அவருக்கு வாய்ப்பு உள்ளது. ட்ரூங் மை லான், சைகான் வணிக வங்கியில் (Saigon Commercial Bank- எஸ்சிபி) 11 வருடங்களாக சுமார் 44 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 3,30,000 கோடிகள்) கடனாகப் பெற்றதற்காக தண்டிக்கப்பட்டார். இதில் 27 பில்லியன் டாலர்களை திரும்பப் பெற முடியாது என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இது 2023இல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6%க்கு சமம். பொதுவாக மெத்தனமாக இருக்கும் கம்யூனிஸ்ட் அதிகாரிகள் இந்த வழக்கை வெளிப்படையாக விவாதித்து, ஊடகங்களுக்கு சிக்கலான விவரங்களை அளித்து பலரை ஆச்சரியப்படுத்தினர். சாட்சியமளிக்க 2,700 பேர் அழைக்கப்பட்டதாகவும், 10 அரசு வழக்கறிஞர்கள் மற்றும் சுமார் 200 வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மொத்தம் 6 டன் எடையுள்ள 104 பெட்டிகளில் ஆதாரம் இருந்தது. 85 பிரதிவாதிகள் ட்ரூங் மை லானுடன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர், அவர் குற்றச்சாட்டுகளை மறுத்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. நால்வர் ஆயுள் தண்டனை பெற்றனர். மீதமுள்ளவர்களுக்கு 20 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ட்ரூங் மை லானின் கணவர் மற்றும் மருமகள் முறையே ஒன்பது மற்றும் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றனர். வியட்நாமில் நீண்டகால அனுபவமுள்ள ஓய்வுபெற்ற அமெரிக்க அரசுத் துறை அதிகாரி டேவிட் பிரவுன் கூறுகையில், "கம்யூனிஸ்ட் காலத்தில் இதுபோன்ற ஒரு விசாரணை இதுவரை இருந்ததில்லை. இந்த அளவில் நிச்சயமாக எந்த வழக்கும் விசாரிக்கப்பட்டது இல்லை" என்றார். ஆனால் இந்த நீதிமன்ற வழக்கின் மைய நபரைப் பற்றி நமக்கு தெரிந்த விவரங்கள் என்ன? பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,வியட்நாமின் மிகப்பெரிய வங்கி ஒன்றில் 11 ஆண்டுகளாக நடந்த நிதி மோசடிக்காக ட்ரூங் மை லான் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். ஏழ்மையிலிருந்து உச்சத்திற்கு... ஹோ சி மின் நகரில் ஒரு சீன-வியட்நாமிய குடும்பத்தில் ஒரு எளிய பின்னணியில் இருந்து நிதி ஊழலின் மையத்திற்குச் சென்ற ட்ரூங் மை லானின் பயணம், பல ஏற்ற இறக்கங்களைக் கொண்டது. வியட்நாமின் டோய் மோய் என்று அழைக்கப்படும் பொருளாதார சீர்திருத்த சகாப்தத்தின் போது அவர் தனது தாயுடன் சந்தை விற்பனையாளராக ஒரு சாதாரண பின்னணியில் இருந்து, ரியல் எஸ்டேட் துறையில் இறங்கினார். 1990களில், அவர் கணிசமான ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் விற்பனையில் ஈடுபட்டிருந்தார், இது அவரது புத்திசாலித்தனமான வணிகச் செயல்பாட்டிற்கு ஒரு சான்றாகும். இருப்பினும், சைகான் வணிக வங்கியுடனான அவரது ஈடுபாடு தான் அவரை கவனத்தில் கொள்ளச் செய்தது. ஷெல் நிறுவனங்கள் மற்றும் ப்ராக்ஸிகள் மூலம், வங்கியின் 90 சதவீதத்தை திறம்பட கட்டுப்படுத்தி, தனிப்பட்ட உரிமைகள் தொடர்பான விதிமுறைகளை ட்ரூங் மை லான் மீறியதாக வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டினர். இந்த வங்கி சாம்ராஜ்ஜியத்திற்குள் தான் மோசடி நடந்துள்ளது எனவும், ட்ரூங் மை லான் தனிப்பட்ட லாபத்திற்காக திகைக்க வைக்கும் அளவுக்கு பணத்தை மோசடி செய்தார் எனவும் கூறப்பட்டுள்ளது. அவரது கடன்கள் வங்கியின் மொத்த கடன்களில் 93% ஆகும். வழக்குரைஞர்களின் கூற்றுப்படி, பிப்ரவரி 2019 முதல் மூன்று ஆண்டுகளில் இந்த கடன் வழங்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,1990களில், அவர் கணிசமான ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் விற்பனையில் ஈடுபட்டிருந்தார். அவர் தனது டிரைவருக்கு 108 டிரில்லியன் வியட்நாமிய ரூபாயை, இந்திய மதிப்பில் 30,000 கோடி ரூபாய் ரொக்கத்தை வங்கியில் இருந்து எடுத்து, அதை தனது வீட்டின் அடித்தளத்தில் சேமிக்க உத்தரவிட்டார். அவ்வாறு சேமிக்கப்பட்ட மொத்த வியட்நாமிய ரூபாய் நோட்டுகளின் எடை இரண்டு டன்களாக இருக்கும், இது பல வியட்நாமியர்களை வியப்பில் ஆழ்த்தியது. பொதுவாக, தனிநபர்கள் கடன் வாங்கும்போது ஒரு சிக்கலான செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும் மற்றும் அத்தகைய நிதிகளின் ஒரு பகுதியை அணுகுவதற்கு இணை (Collateral) வழங்கப்பட வேண்டும். தனது கடன்கள் ஒருபோதும் ஆராயப்படாமல் இருக்க தாராளமாக லஞ்சம் கொடுத்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவருடன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் ஒருவர் மத்திய வங்கியின் தலைமை ஆய்வாளராக இருந்தார், அவர் சுமார் 37.5 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ‘என்னுடைய உலகம் சரிந்தது’ பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹோ சி மின் நகரில் இந்த வழக்கின் விசாரணை நடந்தது. ட்ரூங் மை லான், பண மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும், பத்திர மோசடி உட்பட மற்ற குற்றச்சாட்டுகளில் குறைந்தது இரண்டு கூடுதல் வழக்குகளுக்கான விசாரணை இன்னும் அவருக்கு காத்திருக்கிறது. 42,000க்கும் மேற்பட்ட நபர்கள், 27 முதல் 60 வயது வரை மற்றும் பல்வேறு பின்னணியில் இருந்து வந்தவர்கள், இந்த திட்டங்களுக்கு பலியாயினர். எஸ்சிபி வங்கியின் மூலம் விற்கப்பட்ட மோசடி பத்திரங்களை வாங்கினர். அவர்களில் ஒருவர் 48 வயதான டாங் ட்ரூங் லாங் (Dang Trung Long). வியட்நாமின் பரபரப்பான ஹோ சி மின் நகரில், ரியல் எஸ்டேட் துறையில் சொத்துகளை விற்பதில் முடிவில்லாத பல மணிநேரங்களை அவர் அர்ப்பணித்தார். இரண்டு தசாப்தங்களாக இடைவிடாத உழைப்பால், அவர் 1.7 பில்லியன் வியட்நாமிய டாங்குகளை (இந்திய மதிப்பில் 52.5 லட்சம்) சேமித்தார். சராசரி மாத வருமானம் 25,000 ரூபாயைத் தாண்டாத ஒரு நாட்டில் இது குறிப்பிடத்தக்க சாதனையாகும். "எனது ஒரே மகளுக்கு சிறந்த கல்வியைத் தருவதற்காக ஒவ்வொரு பைசாவையும் சேமித்தேன், ஆனால் இந்த மோசடியால், நான் மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்," என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார். "என் உலகம் சரிந்துவிட்டது, என் மகளின் கனவு உடைந்துவிட்டது. எல்லாவற்றையும் மீண்டும் கட்டியெழுப்பும் அளவுக்கு எனக்கு உடலில் வலு இருக்கிறதா எனத் தெரியவில்லை" என்றார். பதிலில்லா கேள்விகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் நுயென் பு ட்ரோங் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார். ட்ரூங் மை லானின் முதல் வழக்கு விசாரணை வெளிவந்த போது, இதுபோன்ற ஒரு திட்டம் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கண்டறியப்படாமல் நீடிக்க முடிக்க முடிந்தது எப்படி என்ற கேள்விகள் எழுந்தன. சிங்கப்பூரில் உள்ள ஐஎஸ்இஏஎஸ்- யூசப் இஷாக் இன்ஸ்டிட்யூட்டில் வியட்நாம் ஆய்வுத் திட்டத்தை நடத்தும் லே ஹாங் ஹிப், "நான் குழப்பத்தில் இருக்கிறேன்" என்கிறார். "ஏனென்றால் அது ஒரு ரகசியம் அல்ல. ட்ரூங் மை லானும் அவரது வான் தின் பாட் குழுவும் எஸ்சிபி வங்கியை தங்கள் சொந்த உண்டியலாகப் பயன்படுத்தி, மிக முக்கியமான இடங்களில் ரியல் எஸ்டேட் சொத்துகளை பெருமளவில் கையகப்படுத்திய விஷயம் சந்தையில் நன்கு அறியப்பட்ட ஒன்றாக இருந்தது. அவருக்கு எங்கிருந்து பணத்தைப் பெற வேண்டும் என்பது தெளிவாகத் தெரிந்தது. ஏனென்றால் அது மிகவும் பொதுவான நடைமுறை. எஸ்சிபி மட்டும் இந்த நடைமுறையைப் பயன்படுத்தப்படும் வங்கி அல்ல. எனவே இதுபோன்ற பல வழக்குகள் இருப்பதால் அரசாங்கம் குழப்பம் அடைந்திருக்கலாம்" என்கிறார் அவர். வணிகம் மற்றும் அரசியலில் உள்ள சக்தி வாய்ந்த நபர்கள் ட்ரூங் மை லானை சட்டத்தில் இருந்து பாதுகாத்து, நாட்டின் வங்கித் துறையை பாதித்த உள்ளூர் ஊழலைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர் என்று ஊகிக்கிறார் டேவிட் பிரவுன். ஆயினும்கூட, இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், ஒரு பரந்த கதை வெளிப்பட்டது. விசாரணையானது ட்ரூங் மை லானின் குற்றச் செயல்களைப் பற்றியது மட்டுமல்ல, வியட்நாமின் அரசியல் நிலப்பரப்பில் அதிகாரத்திற்கான ஒரு பெரிய போராட்டத்தையும் அது பிரதிநிதித்துவப்படுத்தியது. கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் நுயென் பு ட்ரோங் (Nguyen Phu Trong), ஊழலுக்கு எதிரான பிரசாரத்திற்கு தலைமை தாங்கி, ஹோ சி மின் நகரத்தில் செல்வாக்கு மிக்க நபர்களின் கட்டுப்பாடற்ற அதிகாரத்தை கட்டுப்படுத்த முயன்றார். இந்த பிரசாரத்தால் இரண்டு ஜனாதிபதிகள் மற்றும் இரண்டு துணைப் பிரதமர்கள் ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கான அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த அதிகாரப் போராட்டத்தில் ட்ரூங் மை லானை வழக்கு விசாரணை ஒரு போர்க்களமாக மாறியது. இது கட்சியின் பழமைவாத கொள்கைகள் மற்றும் வியட்நாமின் பொருளாதார அபிலாஷைகளின் உண்மைகளுக்கு இடையிலான பதற்றத்தின் அடையாளமாகும். தொழில்நுட்பம் மற்றும் அறிவு சார்ந்த பொருளாதாரத்திற்கு நாடு மாற முற்பட்டபோது, ஊழலை எதிர்த்துப் போராடும் முரண்பாடு, பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் போது, வியட்நாமின் எழுச்சியைத் தூண்டிய இயந்திரத்தையே சீர்குலைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. "அதுதான் முரண்பாடு" என்கிறார் லு ஹாங் ஹிப். "அவர்களின் வளர்ச்சி மாதிரி நீண்ட காலமாக ஊழல் நடைமுறைகளை நம்பியிருக்கிறது. ஊழல் என்பது இங்கு இயந்திரங்களை வேலை செய்ய வைக்கும் கிரீஸ் போல. அவர்கள் கிரீஸ் போடுவதை நிறுத்தினால், அரசு இயந்திரங்கள் இனி வேலை செய்யாமல் போகலாம்" என்கிறார் அவர். ட்ரூங் மை லானின் சோதனையானது, வேகமாக மாறிவரும் வியட்நாமில் அதிகாரம், லட்சியம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்கு இடையேயான சிக்கலான தொடர்புகளின் அடையாளமாகும். நடவடிக்கைகள் முடிவடைந்தவுடன், ட்ரூங் மை லானின் கதை நீதிமன்றத்தின் சுவர்களுக்கு அப்பால் எதிரொலித்தது. வியட்நாம் தேசம் அதன் மோசமான கடந்த காலத்தையும் அதன் நிச்சயமற்ற எதிர்காலத்தையும் பற்றி கவலைப்பட அது ஒரு காரணமாக அமைந்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cqvn22d6lpwo

ஒரே வங்கியில் ரூ.3.30 லட்சம் கோடி மோசடி கடன் வாங்கி இந்த தொழிலதிபர் ஏமாற்றியது எப்படி?

2 days 23 hours ago
ரூ.3.30 லட்சம் கோடி வங்கி மோசடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பிபிசி வியட்நாம்
  • பதவி, பாங்காக்கில் இருந்து
  • 13 ஏப்ரல் 2024, 15:38 GMT
    புதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர்

வியட்நாமின் ஹோ சி மின் நகரில் உள்ள காலனித்துவ கால நீதிமன்றத்தில், ஒரு அதிசயக் காட்சி அரங்கேறியது. அப்போது நீதிமன்ற அறை முழுவதும் ஒரு பெயர் எதிரொலித்தது. அது ட்ரூங் மை லான்.

வியட்நாமின் மிகவும் பரபரப்பான வழக்குகளில் ஒன்றாகக் கருதப்படும் இது, உலகின் மிகப்பெரிய வங்கி மோசடிகளில் ஒன்றைத் திட்டமிட்டதற்காக செவ்வாயன்று மரண தண்டனை விதிக்கப்பட்ட 67 வயதான வியட்நாமிய ரியல் எஸ்டேட் அதிபரின் சுரண்டல்களை வெளிப்படுத்தியது.

அத்தகைய வழக்கில் மரண தண்டனை என்பது வழக்கத்திற்கு மாறாக கடுமையான தண்டனையாகும். வியட்நாமில் ஒயிட் காலர் (White collar crime) குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட மிகச் சில பெண்களில் ட்ரூங் மை லானும் ஒருவர். முடிவை மேல்முறையீடு செய்ய அவருக்கு வாய்ப்பு உள்ளது.

ட்ரூங் மை லான், சைகான் வணிக வங்கியில் (Saigon Commercial Bank- எஸ்சிபி) 11 வருடங்களாக சுமார் 44 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 3,30,000 கோடிகள்) கடனாகப் பெற்றதற்காக தண்டிக்கப்பட்டார். இதில் 27 பில்லியன் டாலர்களை திரும்பப் பெற முடியாது என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இது 2023இல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6%க்கு சமம்.

பொதுவாக மெத்தனமாக இருக்கும் கம்யூனிஸ்ட் அதிகாரிகள் இந்த வழக்கை வெளிப்படையாக விவாதித்து, ஊடகங்களுக்கு சிக்கலான விவரங்களை அளித்து பலரை ஆச்சரியப்படுத்தினர்.

சாட்சியமளிக்க 2,700 பேர் அழைக்கப்பட்டதாகவும், 10 அரசு வழக்கறிஞர்கள் மற்றும் சுமார் 200 வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மொத்தம் 6 டன் எடையுள்ள 104 பெட்டிகளில் ஆதாரம் இருந்தது. 85 பிரதிவாதிகள் ட்ரூங் மை லானுடன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர், அவர் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. நால்வர் ஆயுள் தண்டனை பெற்றனர். மீதமுள்ளவர்களுக்கு 20 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ட்ரூங் மை லானின் கணவர் மற்றும் மருமகள் முறையே ஒன்பது மற்றும் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றனர்.

வியட்நாமில் நீண்டகால அனுபவமுள்ள ஓய்வுபெற்ற அமெரிக்க அரசுத் துறை அதிகாரி டேவிட் பிரவுன் கூறுகையில், "கம்யூனிஸ்ட் காலத்தில் இதுபோன்ற ஒரு விசாரணை இதுவரை இருந்ததில்லை. இந்த அளவில் நிச்சயமாக எந்த வழக்கும் விசாரிக்கப்பட்டது இல்லை" என்றார்.

ஆனால் இந்த நீதிமன்ற வழக்கின் மைய நபரைப் பற்றி நமக்கு தெரிந்த விவரங்கள் என்ன?

மரண தண்டனை விதிக்கப்பட்ட வியட்நாமிய பெண்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,வியட்நாமின் மிகப்பெரிய வங்கி ஒன்றில் 11 ஆண்டுகளாக நடந்த நிதி மோசடிக்காக ட்ரூங் மை லான் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
ஏழ்மையிலிருந்து உச்சத்திற்கு...

ஹோ சி மின் நகரில் ஒரு சீன-வியட்நாமிய குடும்பத்தில் ஒரு எளிய பின்னணியில் இருந்து நிதி ஊழலின் மையத்திற்குச் சென்ற ட்ரூங் மை லானின் பயணம், பல ஏற்ற இறக்கங்களைக் கொண்டது.

வியட்நாமின் டோய் மோய் என்று அழைக்கப்படும் பொருளாதார சீர்திருத்த சகாப்தத்தின் போது அவர் தனது தாயுடன் சந்தை விற்பனையாளராக ஒரு சாதாரண பின்னணியில் இருந்து, ரியல் எஸ்டேட் துறையில் இறங்கினார். 1990களில், அவர் கணிசமான ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் விற்பனையில் ஈடுபட்டிருந்தார், இது அவரது புத்திசாலித்தனமான வணிகச் செயல்பாட்டிற்கு ஒரு சான்றாகும்.

இருப்பினும், சைகான் வணிக வங்கியுடனான அவரது ஈடுபாடு தான் அவரை கவனத்தில் கொள்ளச் செய்தது. ஷெல் நிறுவனங்கள் மற்றும் ப்ராக்ஸிகள் மூலம், வங்கியின் 90 சதவீதத்தை திறம்பட கட்டுப்படுத்தி, தனிப்பட்ட உரிமைகள் தொடர்பான விதிமுறைகளை ட்ரூங் மை லான் மீறியதாக வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டினர்.

இந்த வங்கி சாம்ராஜ்ஜியத்திற்குள் தான் மோசடி நடந்துள்ளது எனவும், ட்ரூங் மை லான் தனிப்பட்ட லாபத்திற்காக திகைக்க வைக்கும் அளவுக்கு பணத்தை மோசடி செய்தார் எனவும் கூறப்பட்டுள்ளது. அவரது கடன்கள் வங்கியின் மொத்த கடன்களில் 93% ஆகும். வழக்குரைஞர்களின் கூற்றுப்படி, பிப்ரவரி 2019 முதல் மூன்று ஆண்டுகளில் இந்த கடன் வழங்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட வியட்நாமிய பெண்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,1990களில், அவர் கணிசமான ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் விற்பனையில் ஈடுபட்டிருந்தார்.

அவர் தனது டிரைவருக்கு 108 டிரில்லியன் வியட்நாமிய ரூபாயை, இந்திய மதிப்பில் 30,000 கோடி ரூபாய் ரொக்கத்தை வங்கியில் இருந்து எடுத்து, அதை தனது வீட்டின் அடித்தளத்தில் சேமிக்க உத்தரவிட்டார்.

அவ்வாறு சேமிக்கப்பட்ட மொத்த வியட்நாமிய ரூபாய் நோட்டுகளின் எடை இரண்டு டன்களாக இருக்கும், இது பல வியட்நாமியர்களை வியப்பில் ஆழ்த்தியது. பொதுவாக, தனிநபர்கள் கடன் வாங்கும்போது ஒரு சிக்கலான செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும் மற்றும் அத்தகைய நிதிகளின் ஒரு பகுதியை அணுகுவதற்கு இணை (Collateral) வழங்கப்பட வேண்டும்.

தனது கடன்கள் ஒருபோதும் ஆராயப்படாமல் இருக்க தாராளமாக லஞ்சம் கொடுத்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவருடன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் ஒருவர் மத்திய வங்கியின் தலைமை ஆய்வாளராக இருந்தார், அவர் சுமார் 37.5 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

 
‘என்னுடைய உலகம் சரிந்தது’
மரண தண்டனை விதிக்கப்பட்ட வியட்நாமிய பெண்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஹோ சி மின் நகரில் இந்த வழக்கின் விசாரணை நடந்தது.

ட்ரூங் மை லான், பண மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும், பத்திர மோசடி உட்பட மற்ற குற்றச்சாட்டுகளில் குறைந்தது இரண்டு கூடுதல் வழக்குகளுக்கான விசாரணை இன்னும் அவருக்கு காத்திருக்கிறது.

42,000க்கும் மேற்பட்ட நபர்கள், 27 முதல் 60 வயது வரை மற்றும் பல்வேறு பின்னணியில் இருந்து வந்தவர்கள், இந்த திட்டங்களுக்கு பலியாயினர். எஸ்சிபி வங்கியின் மூலம் விற்கப்பட்ட மோசடி பத்திரங்களை வாங்கினர்.

அவர்களில் ஒருவர் 48 வயதான டாங் ட்ரூங் லாங் (Dang Trung Long). வியட்நாமின் பரபரப்பான ஹோ சி மின் நகரில், ரியல் எஸ்டேட் துறையில் சொத்துகளை விற்பதில் முடிவில்லாத பல மணிநேரங்களை அவர் அர்ப்பணித்தார்.

இரண்டு தசாப்தங்களாக இடைவிடாத உழைப்பால், அவர் 1.7 பில்லியன் வியட்நாமிய டாங்குகளை (இந்திய மதிப்பில் 52.5 லட்சம்) சேமித்தார். சராசரி மாத வருமானம் 25,000 ரூபாயைத் தாண்டாத ஒரு நாட்டில் இது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

"எனது ஒரே மகளுக்கு சிறந்த கல்வியைத் தருவதற்காக ஒவ்வொரு பைசாவையும் சேமித்தேன், ஆனால் இந்த மோசடியால், நான் மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்," என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார்.

"என் உலகம் சரிந்துவிட்டது, என் மகளின் கனவு உடைந்துவிட்டது. எல்லாவற்றையும் மீண்டும் கட்டியெழுப்பும் அளவுக்கு எனக்கு உடலில் வலு இருக்கிறதா எனத் தெரியவில்லை" என்றார்.

 
பதிலில்லா கேள்விகள்
நுயென் பு ட்ரோங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் நுயென் பு ட்ரோங் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்.

ட்ரூங் மை லானின் முதல் வழக்கு விசாரணை வெளிவந்த போது, இதுபோன்ற ஒரு திட்டம் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கண்டறியப்படாமல் நீடிக்க முடிக்க முடிந்தது எப்படி என்ற கேள்விகள் எழுந்தன.

சிங்கப்பூரில் உள்ள ஐஎஸ்இஏஎஸ்- யூசப் இஷாக் இன்ஸ்டிட்யூட்டில் வியட்நாம் ஆய்வுத் திட்டத்தை நடத்தும் லே ஹாங் ஹிப், "நான் குழப்பத்தில் இருக்கிறேன்" என்கிறார்.

"ஏனென்றால் அது ஒரு ரகசியம் அல்ல. ட்ரூங் மை லானும் அவரது வான் தின் பாட் குழுவும் எஸ்சிபி வங்கியை தங்கள் சொந்த உண்டியலாகப் பயன்படுத்தி, மிக முக்கியமான இடங்களில் ரியல் எஸ்டேட் சொத்துகளை பெருமளவில் கையகப்படுத்திய விஷயம் சந்தையில் நன்கு அறியப்பட்ட ஒன்றாக இருந்தது.

அவருக்கு எங்கிருந்து பணத்தைப் பெற வேண்டும் என்பது தெளிவாகத் தெரிந்தது. ஏனென்றால் அது மிகவும் பொதுவான நடைமுறை. எஸ்சிபி மட்டும் இந்த நடைமுறையைப் பயன்படுத்தப்படும் வங்கி அல்ல. எனவே இதுபோன்ற பல வழக்குகள் இருப்பதால் அரசாங்கம் குழப்பம் அடைந்திருக்கலாம்" என்கிறார் அவர்.

வணிகம் மற்றும் அரசியலில் உள்ள சக்தி வாய்ந்த நபர்கள் ட்ரூங் மை லானை சட்டத்தில் இருந்து பாதுகாத்து, நாட்டின் வங்கித் துறையை பாதித்த உள்ளூர் ஊழலைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர் என்று ஊகிக்கிறார் டேவிட் பிரவுன்.

ஆயினும்கூட, இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், ஒரு பரந்த கதை வெளிப்பட்டது. விசாரணையானது ட்ரூங் மை லானின் குற்றச் செயல்களைப் பற்றியது மட்டுமல்ல, வியட்நாமின் அரசியல் நிலப்பரப்பில் அதிகாரத்திற்கான ஒரு பெரிய போராட்டத்தையும் அது பிரதிநிதித்துவப்படுத்தியது.

கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் நுயென் பு ட்ரோங் (Nguyen Phu Trong), ஊழலுக்கு எதிரான பிரசாரத்திற்கு தலைமை தாங்கி, ஹோ சி மின் நகரத்தில் செல்வாக்கு மிக்க நபர்களின் கட்டுப்பாடற்ற அதிகாரத்தை கட்டுப்படுத்த முயன்றார்.

இந்த பிரசாரத்தால் இரண்டு ஜனாதிபதிகள் மற்றும் இரண்டு துணைப் பிரதமர்கள் ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கான அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த அதிகாரப் போராட்டத்தில் ட்ரூங் மை லானை வழக்கு விசாரணை ஒரு போர்க்களமாக மாறியது. இது கட்சியின் பழமைவாத கொள்கைகள் மற்றும் வியட்நாமின் பொருளாதார அபிலாஷைகளின் உண்மைகளுக்கு இடையிலான பதற்றத்தின் அடையாளமாகும்.

தொழில்நுட்பம் மற்றும் அறிவு சார்ந்த பொருளாதாரத்திற்கு நாடு மாற முற்பட்டபோது, ஊழலை எதிர்த்துப் போராடும் முரண்பாடு, பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் போது, வியட்நாமின் எழுச்சியைத் தூண்டிய இயந்திரத்தையே சீர்குலைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

"அதுதான் முரண்பாடு" என்கிறார் லு ஹாங் ஹிப். "அவர்களின் வளர்ச்சி மாதிரி நீண்ட காலமாக ஊழல் நடைமுறைகளை நம்பியிருக்கிறது. ஊழல் என்பது இங்கு இயந்திரங்களை வேலை செய்ய வைக்கும் கிரீஸ் போல. அவர்கள் கிரீஸ் போடுவதை நிறுத்தினால், அரசு இயந்திரங்கள் இனி வேலை செய்யாமல் போகலாம்" என்கிறார் அவர்.

ட்ரூங் மை லானின் சோதனையானது, வேகமாக மாறிவரும் வியட்நாமில் அதிகாரம், லட்சியம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்கு இடையேயான சிக்கலான தொடர்புகளின் அடையாளமாகும்.

நடவடிக்கைகள் முடிவடைந்தவுடன், ட்ரூங் மை லானின் கதை நீதிமன்றத்தின் சுவர்களுக்கு அப்பால் எதிரொலித்தது. வியட்நாம் தேசம் அதன் மோசமான கடந்த காலத்தையும் அதன் நிச்சயமற்ற எதிர்காலத்தையும் பற்றி கவலைப்பட அது ஒரு காரணமாக அமைந்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cqvn22d6lpwo

தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்திகள்

2 days 23 hours ago
பெருமைமிகு நாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் சஜித் 11 APR, 2024 | 04:25 PM ஒவ்வோர் இருண்ட யுகத்திலும் ஒரு வெள்ளிக் கோட்டைப் பார்ப்பது போல, இந்த இருண்ட யுகத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் ஒரு வளமான யுகத்தை உருவாக்கவும் அணிதிரள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில், மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு சூரியன் பெயர்ச்சியுடன் தொடங்கும் சிங்கள, தமிழ் புத்தாண்டை உலகில் உள்ள மற்றும் இலங்கை வாழ் சிங்கள, தமிழ் மக்கள் வெகு விமர்சையாகக் கொண்டாடும் பண்டிகை எனவும் குறிப்பிடலாம். இலங்கையின் மாபெரும் கலாசார விழாவாக அறியப்படும் இந்நாளில், அனைவரும் ஒரே சுப நேரத்தில் இருந்து ஒரே கடமையில் ஈடுபடும் இந்த சம்பிரதாயத்தின் காரணமாக சிங்கள, தமிழ் புத்தாண்டு உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகக் காணப்படுகிறது. இந்த நாளில் அனைத்து மக்களும் எதிர்வரும் ஆண்டில் செழிப்பு மற்றும் சௌபாக்கியத்தை எதிர்பார்த்து, தங்களால் இயன்றவரை இந்த சடங்குகளை செய்கின்றனர். ஆனால், கடந்த காலம் இலங்கை வாழ் மக்களுக்கு சிறந்த காலப் பகுதியாக அமையவில்லை என்று நான் நம்புகிறேன். வரிச்சுமை அதிகரிப்பு, பொருட்களின் விலையேற்றம், நாட்டில் உள்நாட்டு நெருக்கடி என பல பிரச்சினைகளை நாடு எதிர்கொண்டதுடன், தற்போது தேர்தல் ஆண்டாகவும் காணப்படுகிறது. இந்த வருடம் மக்கள் எதிர்பார்க்கும் அரசாங்கம் நாட்டில் உருவாகும் என்பதும், மீண்டும் எமது தாய்நாட்டுக்கு சுபீட்சம் வரும் என்பதும் எனது நம்பிக்கையாகும். மேலும், தற்போது காணப்படுகின்ற வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டு, மீண்டும் தன்னிறைவு பெற்ற பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக அமைதியும் மகிழ்ச்சியும் நிம்மதியும் கொண்ட பெருமை மிக்க நாட்டை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் வந்துவிட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டை முன்னைய வாழ்க்கைத்தரத்துக்கு கொண்டு செல்வது எமக்கு பாரிய சவாலாக உள்ளது. அந்தச் சவாலை 220 லட்சம் பேரும் ஒன்றாக செயற்பட்டால் சமாளிக்க முடியும். ஒவ்வொரு இருண்ட யுகத்திலும் ஒரு வெள்ளிக் கோட்டைப் பார்ப்பது போல, இந்த இருண்ட யுகத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் ஒரு வளமான யுகத்தை உருவாக்கவும் அணிதிரள்வோம் என கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/180991

மட்டக்களப்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

2 days 23 hours ago
13 APR, 2024 | 07:50 PM
image
 

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான வெயிலுடனான காலநிலை நீங்கி மழைபெய்துவரும் நிலையில் மக்கள் குடியிருப்புகளை நோக்கி முதலைகள் வரும் சாத்தியம் இருப்பதால் மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மக்கள் அதிகளவாக வாழும் கூழாவடி பகுதிக்குள் நுழைந்த முதலையொன்று மக்களினால் பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்குள் நீர்நிலைகள் இல்லாதபோதிலும் முதலையொன்று மக்கள் பகுதிக்குள் நுழைந்ததனால் பெரும் பதற்ற நிலைமையேற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அதனை அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிடித்து அது தொடர்பான தகவல்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த முதலையினை கொண்டுசெல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தற்போது மழையுடனான காலநிலை நிலவும் நிலையில் முதலைகளின் நடமாட்டம் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/181055

ஆமையும் தமிழனும்....

3 days ago
நீங்கள் சொல்வதிலும் ஒரு நியாயம் உண்டு. யாழில் பகிர்ந்த ஏப்ரல் பூல் செய்தியை இந்திய இலங்கை ஊடகங்கள் எல்லாம் காவி, இந்திய தூதரகம் மறுப்பறிக்கை விட்ட நிகழ்வு கூட முன்னர் நடந்துள்ளது. எனக்கு ஒரே ஒரு மனக்குமுறல் மட்டுமே: நையாண்டியாக எழுதிய என்னையே கேள்வி கேட்ட நீங்கள், முதலாம் பதிவை சீரியசாக இட்ட @குமாரசாமி அண்ணையை இன்னும் கொஞ்சம் கேட்டிருக்கலாம்😆. பிகு மிக குறுகிய காலத்தில் உங்கள் தமிழுக்கு நான் இரசிகனாகி விட்டேன். யாழில் கருத்தாளர்களை பொதுவாக இருவகை படுத்தலாம். 1. தமிழ், தமிழன் வீரம், தொன்மை, மாண்பு என எதை சொன்னாலும் அதை உண்மை என நம்பி பகிர்ந்து, ஆதாரதோடு எடுத்து காட்டினாலும், காட்டுபவர்கள் தமிழை தரம் தாழ்த்துகிறார்கள் என முறையிடுவோர். 2. இப்படியான பதிவுகளை நேரடியாகவும், நையாண்டியாகவும் கேள்வி கேட்போர். இதில் தமிழ், அதன் தொன்மை அறிந்த நீங்களும் 2ம் வகையே என்பதில் எனக்கு உண்மையில் மட்டற்ற மகிழ்ச்சி.

ஆமையும் தமிழனும்....

3 days ago
"அயிர, அயிர வைத்தான் விடுங்கள், ஆமை - அருகா, கொட்டை இரிக்கா, நீர்யோக நகரம், எரு-சலேம் இவற்றை வாசித்த பின்னுமா இது நையாண்டி என்பது உங்களுக்கு விளங்கவில்லை? " இது முழு புளுகு என்பது புரிய யாழுக்கு புதிது , பழது தேவையில்லை ஆனால் "இவ்வாறாக ஆமையில் ஏறி மட்டும் அல்ல, அயிரை மீனின் ஓட்டத்தை வைத்து தமிழர்கள் ஐரோப்பா போனதை பாடி நிற்கும் சங்க கால செய்யுள்தான் “அயிர, அயிர ஐரோப்பா” என்ற செய்யுள். இதைத்தான் பின்னாளில் வைரமுத்து கூட ஒரு பாடலில் எடுத்தாண்டிருப்பார். " என தொடங்கி அந்த பொய்யை எடுத்துக் காட்டி நயாண்டி செய்யத் தவறி அதன் தொடர்ச்சிபோல மேலும் மேலும் புளுகியது தான் அங்கு ஏற்பட்ட தவறு என்று எண்ணுகிறேன் ? என்றாலும் "- உடான்ஸ் சாமி மூலிகை மயக்கத்தில் அருளியது- காலம் 10/04/2024 இடம் முன்னர் இலந்தை நகர் என அழைக்கப்பட்டு, இப்போ இலண்டன் என மாறிய நகர்." இதில் ஒரு நையாண்டி தெரிகிறது வாழ்த்துக்கள் !! "ஆனால் ஒரு விடயம் நையாண்டியாக இருக்க, உங்களுக்கு அது நையாண்டி என விளங்க வேண்டும் என்பது ஒரு முன் தகமை அல்லவே." அதனால்தான் சொல்லுகிறேன் முட்டாள் கூட்டங்கள் அதை மேலும் முன்னதையின் தொடர்ச்சியாக பகிரத்தொடங்கும் என்று

ஆமையும் தமிழனும்....

3 days 1 hour ago
உங்களுக்கு விளங்கும் நையாண்டி இதுதான். நையாண்டிகள் பலவகைப்படும். ஆனால் ஒரு விடயம் நையாண்டியாக இருக்க, உங்களுக்கு அது நையாண்டி என விளங்க வேண்டும் என்பது ஒரு முன் தகமை அல்லவே.

ஆமையும் தமிழனும்....

3 days 1 hour ago
"எந்தை அவள் ..........." [ எந்தை அவள் சிரித்து, சிந்தித்து திருந்த ஒரு நையாண்டி பாடல்] காலை: "கந்தப்பு வண்டியில் பால் விற்கிறான் முந்தைய கடனை பேசி வாங்கிறான் சந்தானம் கிணற்றில் முகம் கழுவுறான் சிந்திய தண்ணீரை வாழைக்கு விடுறான் செந்தணல் சூரியன் மேலே எழுகிறான் பந்தி பந்தியாய் பறவை பறக்குது மந்த வெயில் மெல்ல சுடுகுது எந்தன் கண்ணகி போர்வை விலத்துகிறாள்!" நண்பகல் [மத்தியானம்]: "சந்தியில் சத்தமிட்டு கந்தப்பு வாறான் கந்தை துணியுடன் சுந்தரி சமைக்கிறாள் சந்தனப் பொட்டு பள பளக்குது சந்தானம் நந்திக்கு தீபம் காட்டுறான் செந்தாமரை கண்ணாடியில் அழகு தேடுறாள் வெந்திய குளம்பு அடுப்பில் கொதிக்குது சிந்திய முத்துகள் பொறுக்கி எடுத்து எந்தன் ஊர்வசி அரட்டை அடிக்கிறாள்!!" மாலை: "தொந்தி பிள்ளையாரை விழுந்து கும்பிட்டு வந்தனம் கூறி வசந்தி போறாள் பிந்திய பகலில் சூரியன் மறைகிறான் சுந்தரி பிள்ளைக்கு நிலவு காட்டுறாள் பந்து பிடித்து செந்தாமரை துள்ளுறாள் சந்து பொந்துக்குள் குஞ்சுகள் போகினம் உந்தி ஊஞ்சலை விரைவா ஆட்டி எந்தன் சிந்து, பைரவி பாடுறாள்!!!" இரவு: "சுந்தரி பிள்ளையை தொட்டிலில் ஆட்டுறாள் கந்தப்பு விராந்தையில் பாய் விரிக்கிறான் வந்தோரை வசந்தி அன்பாய் கவனிக்கிறாள் சந்தானம் அவளுக்கு ஒத்தாசை புரிகிறான் செந்தாமரை மாடியில் சரித்திரம் படிக்கிறாள் அந்தபுரத்து ரகசியங்கள் அலசி பார்க்கிறாள் தந்தன தந்தன தாளம் போட்டு எந்தன் மாதவி அபிநயம் பிடிக்கிறாள்!!!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] குறிப்பு: நான் விளங்கிக்கொண்ட நையாண்டி இதுதான்!!

"எந்தை அவள் ..........." [ எந்தை அவள் சிரித்து, சிந்தித்து  திருந்த ஒரு நையாண்டி பாடல்] 

3 days 1 hour ago
"எந்தை அவள் ..........." [ எந்தை அவள் சிரித்து, சிந்தித்து திருந்த ஒரு நையாண்டி பாடல்] காலை: "கந்தப்பு வண்டியில் பால் விற்கிறான் முந்தைய கடனை பேசி வாங்கிறான் சந்தானம் கிணற்றில் முகம் கழுவுறான் சிந்திய தண்ணீரை வாழைக்கு விடுறான் செந்தணல் சூரியன் மேலே எழுகிறான் பந்தி பந்தியாய் பறவை பறக்குது மந்த வெயில் மெல்ல சுடுகுது எந்தன் கண்ணகி போர்வை விலத்துகிறாள்!" நண்பகல் [மத்தியானம்]: "சந்தியில் சத்தமிட்டு கந்தப்பு வாறான் கந்தை துணியுடன் சுந்தரி சமைக்கிறாள் சந்தனப் பொட்டு பள பளக்குது சந்தானம் நந்திக்கு தீபம் காட்டுறான் செந்தாமரை கண்ணாடியில் அழகு தேடுறாள் வெந்திய குளம்பு அடுப்பில் கொதிக்குது சிந்திய முத்துகள் பொறுக்கி எடுத்து எந்தன் ஊர்வசி அரட்டை அடிக்கிறாள்!!" மாலை: "தொந்தி பிள்ளையாரை விழுந்து கும்பிட்டு வந்தனம் கூறி வசந்தி போறாள் பிந்திய பகலில் சூரியன் மறைகிறான் சுந்தரி பிள்ளைக்கு நிலவு காட்டுறாள் பந்து பிடித்து செந்தாமரை துள்ளுறாள் சந்து பொந்துக்குள் குஞ்சுகள் போகினம் உந்தி ஊஞ்சலை விரைவா ஆட்டி எந்தன் சிந்து, பைரவி பாடுறாள்!!!" இரவு: "சுந்தரி பிள்ளையை தொட்டிலில் ஆட்டுறாள் கந்தப்பு விராந்தையில் பாய் விரிக்கிறான் வந்தோரை வசந்தி அன்பாய் கவனிக்கிறாள் சந்தானம் அவளுக்கு ஒத்தாசை புரிகிறான் செந்தாமரை மாடியில் சரித்திரம் படிக்கிறாள் அந்தபுரத்து ரகசியங்கள் அலசி பார்க்கிறாள் தந்தன தந்தன தாளம் போட்டு எந்தன் மாதவி அபிநயம் பிடிக்கிறாள்!!!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] குறிப்பு: நான் விளங்கிக்கொண்ட நையாண்டி இதுதான்!!

"எந்தை அவள் ..........." [ எந்தை அவள் சிரித்து, சிந்தித்து  திருந்த ஒரு நையாண்டி பாடல்] 

3 days 1 hour ago

"எந்தை அவள் ..........." [ எந்தை அவள் சிரித்து, சிந்தித்து  திருந்த ஒரு நையாண்டி பாடல்] 


காலை:


"கந்தப்பு வண்டியில் பால் விற்கிறான் 
முந்தைய கடனை பேசி வாங்கிறான்
சந்தானம் கிணற்றில் முகம் கழுவுறான் 
சிந்திய தண்ணீரை வாழைக்கு விடுறான்
செந்தணல் சூரியன் மேலே எழுகிறான் 
பந்தி பந்தியாய் பறவை பறக்குது
மந்த வெயில்  மெல்ல சுடுகுது  
எந்தன் கண்ணகி போர்வை விலத்துகிறாள்!"


நண்பகல் [மத்தியானம்]:


"சந்தியில் சத்தமிட்டு கந்தப்பு வாறான் 
கந்தை துணியுடன் சுந்தரி சமைக்கிறாள்  
சந்தனப் பொட்டு பள பளக்குது    
சந்தானம் நந்திக்கு தீபம் காட்டுறான்
செந்தாமரை கண்ணாடியில் அழகு தேடுறாள்  
வெந்திய குளம்பு  அடுப்பில் கொதிக்குது 
சிந்திய முத்துகள்  பொறுக்கி எடுத்து   
எந்தன் ஊர்வசி அரட்டை அடிக்கிறாள்!!" 


மாலை:


"தொந்தி பிள்ளையாரை விழுந்து கும்பிட்டு 
வந்தனம் கூறி வசந்தி போறாள் 
பிந்திய பகலில் சூரியன் மறைகிறான் 
சுந்தரி பிள்ளைக்கு நிலவு காட்டுறாள் 
பந்து பிடித்து செந்தாமரை துள்ளுறாள் 
சந்து பொந்துக்குள் குஞ்சுகள் போகினம் 
உந்தி ஊஞ்சலை விரைவா ஆட்டி  
எந்தன் சிந்து, பைரவி பாடுறாள்!!!" 


இரவு:


"சுந்தரி பிள்ளையை தொட்டிலில் ஆட்டுறாள் 
கந்தப்பு விராந்தையில்  பாய் விரிக்கிறான் 
வந்தோரை வசந்தி அன்பாய் கவனிக்கிறாள் 
சந்தானம் அவளுக்கு ஒத்தாசை புரிகிறான்  
செந்தாமரை மாடியில் சரித்திரம் படிக்கிறாள் 
அந்தபுரத்து ரகசியங்கள் அலசி பார்க்கிறாள்  
தந்தன தந்தன  தாளம் போட்டு 
எந்தன் மாதவி அபிநயம் பிடிக்கிறாள்!!!!"


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]   

குறிப்பு: நான் விளங்கிக்கொண்ட நையாண்டி இதுதான்!!