Aggregator

வெற்றிலை மென்றவாறு வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

4 days 7 hours ago
வெற்றிலை போடக்கூடாது என்றொரு சட்டம் இருப்பது எனக்குத்தெரியாது. அப்படி ஒன்றிருந்தால் வரவேற்கத்தக்கதே.

ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்

4 days 7 hours ago
இயக்க காலத்திற்கு முன்னரும் பொதுமகன்கள் தான் முடிவெடுத்தார்கள்.எவ்வித காய்களும் கனியவில்லை. நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் உலக அரசியல் நிலமைகளுக்கமைய அன்றைய முடிவுகள் சரியாக இருந்தது.அதற்காக மீண்டும் பழைய குதிரையில் ஏறி உலகவலம் வரவேண்டும் என்கிறீர்கள்?

"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்"

4 days 7 hours ago
"தமிழர்களின் மரபும் பாரம் பரியமும்" / பகுதி: 09 ஒரு சமுதாயம் எப்படி எல்லாம் ஒழுகுகிறதோ, அந்த ஒழுக்கம் வழக்கமாகி, மரபாக ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு கொண்டு செல்லப்பட்டு, ஒரு சங்கலித் தொடராக காலம் காலமாக காத்து வரப்படும் ஒரு வாழ்க்கை முறையாக, பாரம்பரியமாக மாறுகிறது. எனவே நாம் தமிழரின் பாரம்பரியத்தின் மூலத்தை பரந்த அளவில் அறிய நாம் பழந்தமிழர் வாழ்க்கைக் கோலங்களையும் பண்பாட்டையும் அக்கால வரலாற்றுப் போக்கையும் எடுத்துக்காட்டும் சங்க இலக்கியங்களை ஆராயவேண்டும். இவ்வகையில், தமிழர்கள் நீரின் மீது கொண்டிருந்த பண்பாட்டு தொடர்பை நிறைய அங்கு காண்கிறோம். அது மட்டும் அல்ல நீரை மையமிட்ட பழமொழிகளும் மரபுத் தொடர்களும் கூட தமிழர்களிடத்தே உண்டு. 'நீரடித்து நீர் விலகாது', 'நீர்மேல் எழுத்து', 'தண்ணீருக்குள் தடம் பிடிப்பவன்', தாயை பழித்தாலும், தண்ணீரை பழிக்காதே' என்பவை அவற்றுள் சில ஆகும். அத்து டன் நீர் குளிர்ச்சியினையுடையது என்பதனால் நீரைத் 'தண்ணீர்' என்றே அன்றில் இருந்து இன்று வரை தமிழர்கள் வழங்கி வருகின்றனர். அப்படியான நீரில் நீராடுவதே [குளித்தலே] ஒரு சடங்காகவும் தமிழர்களால் கருத்தப்பட்டது. குளித்தல் என்பதின் பொருள் குளிர்வித்தல், அல்லது வெப்பம் தனித்தல் (to get rid of the accumulated heat within our body to get refreshed), எனவே குளியல் அழுக்கை நீக்க மட்டும் அல்ல உடலை குளிர்விக்கவும் என்றாகிறது. மனிதர்களுக்கு உள்ள பல நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம். எனவே ஒரு ஒழுங்கு முறையில் உடலை குளிர்விக்க வேண்டும். காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி, வாய் மற்றும் காது வழியாக வெளியேறும் என்று அன்று நம்பினார்கள். இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அன்று குளத்திலோ ஆற்றிலோ பொதுவாக குளித்தார்கள். உதாரணமாக குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக உடல் நனையத் தொடங்கும். அப்ப வெப்பமும் கீழிருந்து மேல் எழும்பி வெளியே போகும். குளத்தில் இறங்கும் முன் உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்து விட்டு இறங்குவார்கள். இது உச்சந்தலைக்கு கீழ் இருந்து மோலாக எழும் வெப்பத்தால் அதிக சூடு ஏற்படுவதை தடுப்பதற்கான முன் ஏற்பாட்டு நடவடிக்கை ஆகும். என்றாலும் அறிவியல் ரீதியாக உடல் வெப்பம் இலகுவாக தோலினூடாக வெளியேறலாம் என்பதுடன், காலில் இருந்து தொடங்க வேண்டும் என்றோ, இல்லை உச்சியில் இருந்து தொடங்க வேண்டும் என்றோ, எந்த காரணத்தையும் அறிய முடியவில்லை. எனினும் குளிக்க தொடங்கும் பொழுது, அதன் குளிர் அல்லது வெப்ப தன்மையை அறிய, முதலில் காலை நனைப்பது அல்லது அல்லது தலை உச்சியை நனைப்பது அல்லது கையை அலம்புவது ஒரு வழமையாக இருப்பதைக் காண்கிறோம். ‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு, கூழானாலும் குளித்துக் குடி' எனும் மூதுரை நீராடலின் இன்றியமையாமையை எமக்கு வலியுறுத்துகிறது. இதனையே ஔவையாரும் “சனி நீராடு” என்று ஆத்திசூடிப் பாடலில் கூறுகிறார். இதை பெரும் பாலோர் " சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்து நீராடு " என பொருள் கொள்கின்றனர், எனினும் சனித்தல் என்னும் தொழிற் பெயரின் அடியாக சனி என்னும் சொல் வருவதால், அதற்கு உண்டாதல், பிறத்தல், தோன்றுதல் என அகராதியில் பொருள் இருப்பதால், சனி நீராடு என்னும் சொல் புதிதாகத் தோன்றும் நீரில் நீராடு எனவும் சிலர் பொருள் கற்பிக்கிறார்கள். எனவே அது ஊற்றுநீர் மற்றும் கிணற்றுநீரைக் குறிக்கலாம். மேலும் சிலர் அதன் பொருளை விடியல், இருள் முற்றும் நீங்காப் பொழுது என்று பொருள்கொண்டு, "வைகறையில் [dawn] நீராடு " என்றும் உரை எழுதுகிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. இனி தமிழ் இலக்கியம் நீராடலை எப்படி கூறுகிறது என்று இரு பாடல்கள் மூலம் பார்ப்போம். முதலாவதாக நதிகளில் புதுவெள்ளம் பெருகி வருகிற காலத்தில் மக்கள் அதிகம் குளித்து மகிழந்ததைக் கூறும் பரிபாடல் என்ற சங்க பாடலில், பாடல் 16 இல், இளம் பரத்தை ஒருத்தி, தன் தோழியர்களுடன் வையையில் நீராடிக்கொண்டிருந்தாள். அவர்களிற் சிலர் பீச்சாங்குழலில் சிவப்புச் சாய நீரை எடுத்து அப்பரத்தையின் மீது பீச்சி அடித்தனர். அச் சிவப்புச் சாயம் குரும்பை போல் விளங்கிய அப் பரத் தையின் மார்பகத்தின் மீது பட்டது. அதனை அவள் முற்றவும் துடையாது, தான் உடுத்திருந்த பெரிய சேலையின் முன்தானையால் ஒற்றிக் கொண்டாள். அதனால் அச்சிவப்புக் கறை அவள் முன்தானையிலும் ஏறிக் கொண்டது. அதேநேரம் தலைவன் அவளை நாடி வந்தான் என்பதை "சுருங்கையின் ஆயத்தார் சுற்றும் எறிந்து, குரும்பை முலைப் பட்ட பூ நீர் துடையாள், பெருந்தகை மீளி வருவானைக் கண்டே, இருந்துகில் தானையின் ஒற்றி" என்ற வரியில் காண்கிறோம். இந்த, எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான, பரிபாடலுக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள் குளியலைப் பற்றி எழுதுகிறாள். இடைப் பட்ட நூற்றாண்டுகளில் குளியல் சமயம் சார்ந்த காரியமாகி விட்டது என்பது இங்கு புலப்படுகிறது. பரிபாடலில் எல்லோரும் எல்லோரையும் பார்க்க முடிகிற பகலில்தான் குளியல் நடை பெறுகிறது. ஆனால், "கோழி அழைப்பதன் முன்னம், குடைந்து நீராடுவான் போந்தோம்" என்கிறாள் ஆண்டாள், அதாவது கோழி கூவும்முன் – அதாவது இன்னும் இருள் பிரியாத நேரத்தில், அதி காலையில் குளத்தில் நீராட என்கிறது. இவள் தேர்ந்தெடுத்த பொழுது இருளாக இருப்பது பெண்கள் நீராடும் துறையில், ஆண்டாளின் காலத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் காட்டுகிறது எனலாம். ஆண்டாள் பாடலில் சுட்டிக் காட்டிய பயம் பரிபாடலில் இல்லை. பரிபாடலில் பெண் உடம்பு திறந்து காட்டப்படுகிறது. தைரியம் திறக்கிறது. பயம் மூடுகிறது. பொதுவாக வீட்டில் உள்ள பெரியவர்கள் சாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது என கூறுவார்கள் நாமும் அதைக் கேட்டு நடந்திருப்போம். அதற்கு பின் ஒரு அறிவியல் காரணம் உண்டு. உணவை ஜீரணிக்க நொதிகள் தேவை. சாப்பிட்டவுடன் குளித்தால் உடலில் உண்டான குளிர்ச்சித்தன்மையால் நொதிகள் சுரக்காது போகலாம். இதனால் அஜீரணத்திற்கு வழி வகுக்கலாம் என்பதே அந்தக் காரணம் ஆகும் [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 10 தொடரும்

இலங்கையில் இன்று முதல் புதிய விசா முறை அமுல்

4 days 7 hours ago
அரசாங்கம் தங்கள் வசதிக்கு, தங்கள் இஸ்டத்துக்கு மாற்றங்கள் செய்கின்றது. இலங்கைக்கு வருகை தருகின்ற மக்களில் கணிசமான தொகையினர் இலங்கையில் பிறந்து வளர்ந்தவர்கள். இவர்கள் புதிய வீசா நடைமுறையை எப்படி பார்ப்பார்கள் என்பது முக்கியமானது. வீசா இழுபறிகள், வெளி நிறுவனத்தின் கையாள்கையால் தகவல் பரிமாற்றத்தில் வரக்கூடிய மாற்றங்கள் போன்றவை பலர் இலங்கைக்கு பயணம் செய்வதை ஊக்குவிக்காது போகலாம். இது வருகையில் கணிசமான வீழ்ச்சியை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்பட ஏதும் இல்லை.

'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா?

4 days 8 hours ago
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 22 சோழ நாட்டிலிருந்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக, இங்கு வந்த, உயர்குடியில் பிறந்த, தமிழன் எல்லாளன் என்று [A Damila of noble descent, named ELARA, who came hither from the Cola-country to seize on the kingdom], அதாவது வெளியில் இருந்து வந்தான் என்று குறிப்பிட்டு கூறும் மகாவம்சம், அவனுக்கு முதல் ஆட்சி செய்த இரு தமிழரை அப்படி குறிப்பிட்டு கூறவில்லை, அவர்களை "குதிரைகளை இங்கு கொண்டு வந்து வாணிகம் செய்த ஒருவரது பிள்ளைகளான சேனன் மற்றும் குத்திகன் ஆகிய இரண்டு தமிழர்கள் சூரதீசனை வெற்றி கொண்டார்கள். பெரும் படையொன்றைத் திரட்டிக்கொண்டு, இந்த இருவரும் சேர்ந்து இருபத்திரண்டு வருட காலம், கி மு 237 இல் இருந்து கி மு 215 வரை நீதி தவருமல் ஆட்சி செய்தனர் [Two Damilas, SENA and GUTTAKA, sons of a freighter who brought horses hither/ conquered the king Suratissa, at the head of a great army and reigned both (together) twenty-two years justly.] என்று மட்டும் கூறுகிறது. மகாவம்சத்தின் முக்கிய பிரச்சனை என்னவென்றால், இலங்கையில் வாழும் சிங்களவர்கள் புத்தரால் தன் கொள்கைகளை பரப்ப தேர்ந்து எடுக்கப்பட்ட மக்கள் [chosen people] என்ற நம்பிக்கையே ஆகும். புத்தர் காலத்தில் உலகில் எங்கும் சிங்களவர் என்ற ஒரு இனமே இல்லை, சிங்களம் என்ற ஒரு மொழியும் இல்லை. அவர் இறந்து கிட்ட தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு தான், மகாவம்சம் கதையும் அத்துடன் சிங்கள இனம் ஒன்றும் தோன்றத் தொடங்கியது என்பது வரலாற்று உண்மையாகும். எனவே தான் சாதாரண சிங்கள மக்கள், வரலாற்றை, கல்வெட்டு ஆதாரங்களை, மரபணு ஆய்வுகளை மற்றும் சிங்கள மொழியில் ஏராளமாக காணப்படும் தமிழ் சொற்களை கவனத்தில் எடுக்காமல், இன்றைய தமிழர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் என்ற தப்பெண்ணம் கொண்டு உள்ளார்கள். 1956 இல் சிங்களம் மட்டும் [sinhala only act] என்ற சட்டம் கொண்டு வந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா [S.W.R.D. Bandaranaike] உண்மையில் அவரது மூதாதையர் கண்டியை ஆண்ட தெலுங்கு கண்டி நாயக்கர் வம்சத்தை சார்ந்தவர் ஆகும். பதினாறாம் நூறாண்டில் தென் இந்தியாவில் இருந்து வந்த நீல பெருமாள் [Neela-Perumal], “சமன்” எனும் பௌத்தக் கடவுளின் [God Saman] பிரதம குருவாக நியமிக்கப்பட்டு ‘நாயக்க பண்டாரம்’ [‘Nayaka Pandaram’ ] என்ற பெயரை 1454 இல் பெற்றார். அவர்களின் வாரிசே இவர் ஆவார். அதே போல, 1977, 1981,1983 இல் தமிழருக்கு எதிரான கலவரங்கள் மற்றும் யாழ் நூலக எரிப்பு [anti-Tamil pogroms of 1977, 1981 and 1983 , the burning of the Jaffna public Library] போன்றவற்றின் நாயகன் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவின் [Junius Richard Jayewardene] முப் பாட்டனார் [great-grandfather was called Tambi Mudaliyar] தம்பி முதலியார் ஆகும். இவை சில உதாரணங்களே. இவ்வாறு பிற்காலத்திலும் பல தென் இந்தியர்கள் பல பல சந்தர்ப்பங்களில் இங்கு அழைக்கப்பட்டு அல்லது வந்து சிங்களவர்களுடன் ஒன்றிணைந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது [Many South Indians, not just Tamils but also Telugus and Malayalis, migrated to southern Sri Lanka and assimilated with the Sinhalese] உதாரணமாக, டச்சு [Dutch] அரசாங்கம் இலங்கையை ஆளும் பொழுது, புகையிலை சாகுபடிக்கு தமிழ் நாட்டில் இருந்து பெருவாரியான தமிழர்களை கொண்டு வந்து இலங்கையின் தென்மாகாணத்தில், மாத்தறையில் குடியேற்றினார்கள். அதே மாதிரி ஒரு 2017 அறிக்கையின் படி, 4,000 ஜிப்சிகள் தீவு முழுவதும் இருப்பதாக குறிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பலர் தென் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள். கிட்டத் தட்ட அனைவரும் இப்போது சிங்கள மொழி பேசுபவர்களாக மாறி விட்டார்கள். [The Dutch brought South Indian people in large numbers for tobacco cultivation. They were settled mostly in Matara. According to a 2017 government report, Sri Lanka has nearly 4,000 gypsies scattered across the island. Many of their origins can be traced to south India. While almost all of them are now Sinhala speakers] விஜயனும் அவனது கூட்டாளிகளும் மதுரை பாண்டிய மகளீரை திருமணம் செய்ததுடன் ஆரம்பமாகிய தென் இந்தியர் மதம் - இனம் மாற்றம், கடைசியாக அண்மைய வரலாற்றில் வத்தளை, நீர்கொழும்பு முதல் சிலாபம், புத்தளம் வரை தமிழர்கள் "மதம் - இனம்" மாற்றம் வரை நடை பெற்றதை வரலாறு சான்றுகளுடன் எடுத்துக் காட்டுகிறது. அவர்கள் முதலில் கத்தோலிக்க மதத்துக்கு மாற்றப் பட்டார்கள். எனவே அவர்களது பிள்ளைகள் கத்தோலிக்க பாடசாலைகளில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப்பிரிவு மூடப்பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப்பட்டார்கள். வீட்டிலே தமிழ் பேசினாலும் பிள்ளைகளின் பாடசாலை மொழி சிங்களம் ஆனது. பின்னர் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம் அடைந்தார்கள் என்பது வரலாறு ஆகும். வரலாற்றாசிரியர் ஒருவர் ஒரு நாட்டின் தற்கால வரலாற்றை எழுதுவதற்கும் அதன் புராதனகால வரலாற்றை எழுதுவதற்கும் அதிக வேறுபாடு உள்ளது. அச்சுயந்திரம் மற்றும் தொழில் நுட்பப்பயன்பாட்டினால், வரலாறு மற்றும் செய்திகள், இன்று முறையாக ஆவணப் படுத்தப்படுகின்றன. ஆனால், ஏட்டுச் சுவடிகளையும் புராணக் கதைகளையும் செவிவழிச் செய்திகளையும் ஓரளவு கிடைத்த சாசனங்களையுமே சேர்த்து, ஆயிரம் ஆண்டுகளின் பின், இலங்கையின் பூர்வீக வரலாற்றை எழுதியவர் தான் இந்த மகாநாம தேரர். ஆகவே தான் எமக்கு கிடைத்த வரலாற்று சான்றுகளுடன் ஒப்பிட்டு, இந்த மகாவம்சம் என்ற அறிவு வயலில் இருந்து களைகளை, தக்க காரணங்களை சான்றுகளுடன் காட்டி இன்று அகற்ற வேண்டியுள்ளது. [படம் : 01 அல்லது Table 10: Table 10, depicts the signatures of the Dissawes and Adigars who were a party to the March’ 1815 Kandyan convention. The mixture of Tamil and yet evolving Sinhala alphabets used by many may depict a period in our history (especially in the Kandyan Kingdom) when a combination of Sinhala and Tamil alphbets were used. The fact that the Sinhala and Tamil languages share in common 4000+ words also may point to a time where both languages were less divergent. (Please note that the table numbers are as denoted in the original document.)] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Are converted Sinhalas responsible for Srilankan Tamil problem? https://www.facebook.com/groups/978753388866632/posts/5137468916328371/?] பகுதி: 23 தொடரும்

"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

4 days 9 hours ago
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்" தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !! “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!. உதாரணமாக ,சோதிடர் நம் எதிர்காலத்தைப் பற்றி சொல்வது உண்மை என்று வைப்போம். அதனால் என்ன பயன் என்று யோசிக்க வேண்டும். சோதிடத்தை நம்புகிறவர்கள் சொல்லும் ஒரு உதாரணம் - இருட்டில் போகிறவனுக்கு ஒரு விளக்கு இருந்தால் கொஞ்சம் வழி நன்றாகத் தெரியும். வழியில் குண்டு குழிகளில் விழாமல் தப்பிக்கலாம். அப்படி எல்லாத் தடங்கல் களையும் சோதிடம் மூலம் தாண்டி விடலாம் என்று. அப்படி என்றால் சோதிடத்தை நம்புகிறவர்களுக்கு கஷ்டம் ஏன் வருகிறது? இதற்கு அவர்கள் பொதுவாக சொல்லும் பதில், சோதிடன் சொன்ன பரிகாரத்தை சரியாகச் செய்யவில்லை என்பதாகும். சோதிடம் பார்க்கும் எல்லோருடைய கஷ்டங்களையும் பரிகாரங்கள் மூலம் விலக்கி விட முடியும் என்றால் அனைத்து மக்களும் கஷ்டங்கள் இல்லாமல் வாழலாமே?சோதிடம் சொல்லுகிறவன் உட்பட? சோதிடத்தை பிறருக்கு சொல்லி அன்றாடம் தன் வயிரையும் குடும்பத்தின் வயிரையும் நிரப்புகிறவன், அதில் இருந்து தான் மீள ஏன் தன் சோதிடத்தைப் பார்ப்பதில்லை? இந்த மாதிரி கேள்விகளும் விளக்கங்களும் இருந்து கொண்டே தான் இருக்கும். ஆகவே மனது உறுதியாக இருப்பவர்கள் நடப்பது நடந்தே தீரும் என்று ஒரே கொள்கையில் நிற்பார்களை சோதிடம் ஏமாற்ற முடியாது. அது அவர்களுக்கு தேவையும் இல்லை. மன உறுதி இல்லாதவர்கள் எப்பொழுதும் ஏதாவது ஊன்று கோலைத் தேடிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் இருக்கும் மட்டும் இந்த ஏமாற்றுகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும். தமிழன் சங்க காலத்திலேயே இதை நம்ப தொடங்கி விட்டான். சங்கத் தமிழ் நூல்களில் அக்காலத் தமிழரின் மாறு பட்ட நம்பிக்கைகள் பரவிக்கிடக்கின்றன. இடி ஓசை கேட்டால் பாம்பு நடுங்கும் அல்லது இறந்துவிடும் என்றும், மயிரை இழந்துவிட்டால் கவரிமான் உயிர் வாழாது என்றும், புலி வேட்டையாடுகையில் இடப்பக்கம் விழும் இரையை உண்ணாது என்றும் சங்கத் தமிழ் நூல்களிலும் தொல்காப்பியத்திலும் இது போல எண்ணற்ற குறிப்புக்களைக் காண முடியும். மேலும் சங்ககாலத் தமிழர்கள் பறவைகள் பறக்கும் திசை, எழுப்பும் ஒலி ஆகியவற்றைக் கொண்டு ஆருடம் கூறினார்கள். பல்லி சொல்லுக்குப் பலன் கண்டனர். இடது கண் துடிப்பதைக் கொண்டு சகுனம் பாரத்தனர். பெண்ணின் மனநோயைக் (உண்மையில் காதல் நோய்) குணப்படுத்த கட்டுச்சிவியைக் கொண்டு “விரிச்சி” கேட்டனர். வேலனைக் கொண்டு வெறியாடினர். நல்லநாள் பார்த்துத் திருமணம் செய்தனர். சில பெண் சோதிடர்கள், அவர்கள் பையிலுள்ள கழங்கு என்னும் காய்களைக் கொண்டு வருங்காலம் உரைத்தனர். கண் துடிப்பதற்கு நரம்பியல்க் கூறுகள் காரணமாகின்றது. ஆனால் வலக்கண் துடித்தால் ஒரு பலன், இடக்கண் துடித்தால் ஒரு பலன் என இவர்கள் படும் பாடு கொஞ்சமல்ல. பெண்ணின் இடது புருவமும், ஆணின் வலது புருவமும் துடிக்குமானால் நல்லது நடக்கும் என்றும், பெண்ணிற்கு வலது புருவமும், ஆணிற்கு இடது புருவமும் துடித்தால் ஏதோ துன்பத்திற்கு அறிகுறி என்றும் நம்பி வருகின்றனர். ”கண்ணகி கருக்கணும் மாதவி செங்கணும் உண்ணிறை கரந்து அகத்து ஒளித்து நீர் உகுத்தன எண்ணும் முறை இடத்திலும் வலத்திலும் துடித்தன விண்ணவர் கோமான் விழவுநாள் அகத்தென” என்று இளங்கோவடிகள் இந்திரவிழா நாளில் கண்ணகி கருங் கண் இடத்திலும், மாதவி செங்கண் வலத்திலும் துடித்தன என்கிறார். கண்ணகி தன் கணவனை, மாதவியிடமிருந்து பெறப் போகின்றாள், மாதவி கோவலனின் நட்பை இழக்கிறாள் என்பதையே இவ்விரு பெண்களின் கண்துடிப்புகளும் இங்கு குறிப்பிடுகின்றன? எந்த பத்துப் பொருத்தங்களை பார்த்தார்கள் என்பதில் தான் திருமணத்தின் மகிமை தங்கி உள்ளது என்று பத்துப் பொருத்தங்களைத் தொல்காப்பியப் பொருள் அதிகாரம் பாடல் 273 பட்டியலிடுகிறது. "பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டொடு உருவு, நிறுத்த, காம வாயில் நிறையே, அருளே, உணர்வொடு திருவென முறையுறக் கிளத்த ஒப்பினது வகையே" குடிப் பெருமை, குடி ஒழுக்கம் வழுவாமை, ஊக்கம், ஆணின் வயது கூடியிருத்தல், உருவப் பொருத்தம், இன்ப நுகர்ச்சி உணர்வு சமமாக அமைந் திருத்தல், குடும்பச் செய்தி காத்தல், அருளும், உணர்வும் ஒத்திருத்தல், செல்வச் சமநிலை ஆகிய பத்தைக் குறிக்கின்றது. அதே போல இல்வாழ்க்கைக்குப் பொருந்தாத பத்துத் தன்மைகளையும் தொல்காப்பியம் மேலும் கூறுகிறது. "நிம்புரி, கொடுமை வியப்பொடு புறமொழி வன்சொல், பொச்சாப்பு மடிமையொடு குடிமை இன்புறல் ஏழைமை மறப்போடொப்புமை என்றிவை இன்மை என்மனார் புலவர்." தற்பெருமை, கொடுமை, (தன்னை)வியத்தல் புறங்கூறாமை, வன்சொல், உறுதியிலிருந்து பின் வாங்குதல், குடிப்பிறப்பை உயர்த்திப் பேசுதல், வறுமை குறித்து வாடக்கூடாது, மறதி, ஒருவரையொருவர் ஒப்பிட்டுப் பார்த்தல், பேசுதல் ஆகிய பத்துத் தன்மைகளும் இருக்கக் கூடாதவை என்கிறது. ஒத்த அன்பு, ஒன்றிய உள்ளங்களின் உயர் நோக்கு ஆகியவை இங்கு காணக்கிடைக்கிறது குறிப்பிடத்தக்கது. திருமணம் என்று சொல்லப்படுவதெல்லாம் ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவர்க்கொருவர் கட்டுப்பட்டு அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப் பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்து கொள்ளும் சடங்கே ஆகும். ஆகவே அதற்கு சாட்சி கட்டாயம் கிரகங்களாக இருக்காது. எல்லா திசையிலும் அவர்களை சுற்றி வாழும் வயதில் முதிர்ந்த உறவினரும் நண்பர்களுமே ஆகும். அது தான் அவர்களை ஒன்றாக முறியாமல் வைத்திருக்க உதவும். திருமணத்திற்கான சாட்சியாக மூன்று முடிச்சோ அல்லது மோதிரமோ இருக்கலாம். ஆனால் உண்மையில் தேவைப்படுவது இரு மனங்கள் ஒன்று சேருவதே. இதை குறுந்தொகையில் 40 இப்படி கூறுகிறது. "யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்? யானும் நீயும் எவ் வழி அறிதும்? செம் புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே." இப்படி அமையாத திருமணங்கள் விவாகரத்திலும், கள்ள தொடர்பிலும் தொங்கி நிற்பதில் வியப்பில்லை. மேலே கூறிய வாறு தனிச்சிறப்பு கொண்ட தமிழர், பிற்காலத்தில் ஏற்பட்ட கெட்ட விளைவால் பத்து வகைப் பொருத்தங்கள் - தினம், கணம், மகேந்திரம், பெண் தீர்க்கப் பொருத்தம், யோனி, ராசி, வசியம், ரஜ்ஜூ, வேதை, நாடிப் பொருத்தம் என மாறியது. கணித்துக் கூறுபவன் ஜோசியன். ஜாதகக் கட்டங்களைப் போட்டு கூறி விடுவான். பத்தில் ஒன்பது பொருத்தங்கள் நன்றாக அமைந்திருக்கின்றன என்பான் அவன். கல்யாணம் நடந்த பின்னர்தான் தெரியும் பொய்களும் புரட்டுகளும்!! ஒருவர் எந்த நட்சத்திரத்தின் கீழ்ப் பிறந்தாரோ அதைக் கொண்டு அவருக்கு ஜாதகம் கணிக்கும் வழக்கம் பழந் தமிழகத்திலும் இருந்தது; புறம் 24-ம் பாடலில் பிறந்த நாள் நட்சத்திரம் பற்றிய குறிப்பு உள்ளது. திரண்ட நெல் விளையும் முத்தூர்க் கூற்றத்தையும் வென்ற வெற்றி பொருந்திய உயர்ந்த குடையும், கொடியாற் பொலிந்த தேரினையும் உடைய செழிய! உனது நட்சத்திரங்கள் நிலைத்து வளரட்டும்! என்று அந்த பாடல் அவனை வாழ்த்துகிறது. "குப்பை நெல்லின், முத்தூறு தந்த கொற்ற நீள் குடை, கொடித் தேர்ச் செழிய! நின்று நிலைஇயர் நின் நாள்மீன்;" இடைக்காட்டுச் சித்தர் வறட்சி ஏற்படப்போவதை அறிந்துகொண்டு ஆடு மாடுகளுக்கு எருக்க இலைகளைத் தின்பதற்குப் பழக்கியதாக ஒரு வரலாறு உண்டு. இவர் 60 தமிழ் ஆண்டுகளின் பலன்களையும் பா வடிவில் தந்துள்ளார். மழைக்கும் வெள்ளி கிரகத்திற்கும் உள்ள தொடர்பைச் சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர். வெள்ளி எனப்படும் சுக்கிரன் தெற்குத் திசைக்குச் சென்றால் பஞ்சமும் வறட்சியும் ஏற்படும் என்று பழந்தமிழர்கள் கருதினர். "வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்கேகினும் தற்பாடிய தளியுணவிற் புட்டேம்பப் புயன்மாறி" [பட்டினப்பாலை] இப்படியாக கண்களை மூடியபடி எல்லாவிதமான அசட்டு நம்பிக்கைகளுடனும் மனிதன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்

படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று

4 days 10 hours ago
நீங்கள் சாக்லேட் வாங்கிக் கொடுப்பதை யாராவது படமெடுத்து போட்டு அமெரிக்காவிலிருந்து வந்தவர் விமானநிலைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து மாட்டிக் கொண்டார் என்று தொலைக்காட்சியில் உங்களைக் காட்ட இப்படி எனது கற்பனை போகுது.

படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று

4 days 10 hours ago
🤣..... படம் எதுவும், ஒரு இடத்தை தவிர, எங்கேயும் எடுக்கவில்லை. அதனால என் பயணத்தில் இரண்டு 'படமும்' இல்லை என்று சொல்ல நினைத்தேன்........நாம என்னதான் அடக்கமாக இருந்தாலும், ஆள் வெளியிலிருந்து வந்திருக்கின்றார் என்று எப்படியோ கண்டு கொள்கின்றனர்.....100 ரூபா கச்சானை 200 ரூபா என்று கோவில் வீதியில் எனக்கு விற்றும் விட்டனர்....... 🤣

இரான் பெண்கள் ஹிஜாப் போராட்டம்: மாசா அமினி மரணத்தால் முடியை வெட்டி எதிர்ப்பு தெரிவிப்பு

4 days 10 hours ago
பெண்களுக்கெதிரான வன்முறை என்பது மத்திய கிழக்கு நாடுகள் எல்லாவற்றிற்கும் பொதுவானது. ஆனால் மேற்குலகினருடன் ஒத்துழைக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் சனநாயகத்தின் தூண்களான பத்திரிகைகள் கொஞ்சமாவது அக்கறை செலுத்துபவையாக இருந்தால் அவர்களது மனித உரிமை மீறல் தொடர்பான அக்கறை நியாயமானது என நம்ப இடமுள்ளது. இல்லாவிட்டால் இப்பத்திரிகைகள் மேற்குலகின் தூண்டு கருவியாக மட்டுமே கருதப்பட்டு அதன் மீதான நம்பகத்தன்மை படிப்படியாக இல்லாமல் போகும். ☹️

புதுக் கவிதை / நவீன கவிதை: "பெருவெடிப்புச் சித்திரம்"

4 days 11 hours ago
புதுக் கவிதை / நவீன கவிதை: "பெருவெடிப்புச் சித்திரம்" "பெருவெடிப்பு ஒன்று சிதறிப் பாய சிதறிய ஒவ்வொன்றும் ஒரு உலகமாக உலகம் எல்லாம் வெவ்வேறு அழகு தர காட்சிகள் மனதைக் கொள்ளை கொள்ள மகிழ்ச்சி தந்த உத்வேகத்தில் தூரிகை எடுத்து வரையத் தொடங்கினேன்!" "மாலைக் காற்று மெதுவாய் வீச பாடும் குயில்கள் பறந்து செல்ல வானவில் ஜாலங்கள் புரிய மனதை நெருடி மகிழ்ச்சி தர நாணம் கொண்ட என்னவளை நினைத்து என் எண்ணத்தின் பெரு வெடிப்பில் சிதறிய அவள் அழகுத் துகள்களை பொறுக்கி எடுத்து ஒன்று சேர்த்து ஓவியம் ஆக்கினேன்!" "அகன்ற மார்பும் சிறுத்த இடையும் ஒரு பக்கம் சரிந்த கார் குழலும் இதலைத் தொட்டு கோர்த்த இரு கைகளும் இதழில் மலரும் புன்னகையும் தோளில் சரிந்து விழுந்து முழங்காலை துப்பட்டா கொஞ்ச அந்த அழகு சிலை என் இதய பெரு வெடிப்பின் அழகு துகள்களே!" "அவள் அழகில் தென்னை மரமும் குனிந்து ரசிக்க ஞாயிறும் மயங்கி துயில் போக தில்லை நடராஜன் ஒரு காலில் கூத்தாட அவள் கயல் விழிகள் இமைத்தன என்னைப் பார்த்து நாணம் கொண்டன!!" கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்

புதுக் கவிதை / நவீன கவிதை: "பெருவெடிப்புச் சித்திரம்"

4 days 11 hours ago

புதுக் கவிதை / நவீன கவிதை: "பெருவெடிப்புச் சித்திரம்"

 

"பெருவெடிப்பு ஒன்று சிதறிப் பாய
சிதறிய ஒவ்வொன்றும் ஒரு உலகமாக
உலகம் எல்லாம் வெவ்வேறு அழகு தர
காட்சிகள் மனதைக் கொள்ளை கொள்ள
மகிழ்ச்சி தந்த உத்வேகத்தில்
தூரிகை எடுத்து வரையத் தொடங்கினேன்!"
 
 
"மாலைக் காற்று மெதுவாய் வீச
பாடும் குயில்கள் பறந்து செல்ல
வானவில் ஜாலங்கள் புரிய
மனதை நெருடி மகிழ்ச்சி தர
நாணம் கொண்ட என்னவளை நினைத்து
என் எண்ணத்தின் பெரு வெடிப்பில்
சிதறிய அவள் அழகுத் துகள்களை
பொறுக்கி எடுத்து ஒன்று சேர்த்து
ஓவியம் ஆக்கினேன்!"
 
 
"அகன்ற மார்பும் சிறுத்த இடையும்
ஒரு பக்கம் சரிந்த கார் குழலும்
இதலைத் தொட்டு கோர்த்த இரு கைகளும்
இதழில் மலரும் புன்னகையும்
தோளில் சரிந்து விழுந்து
முழங்காலை துப்பட்டா கொஞ்ச
அந்த அழகு சிலை
என் இதய பெரு வெடிப்பின்
அழகு துகள்களே!"
 
 
"அவள் அழகில்
தென்னை மரமும் குனிந்து ரசிக்க
ஞாயிறும் மயங்கி துயில் போக
தில்லை நடராஜன் ஒரு காலில் கூத்தாட
அவள் கயல் விழிகள் இமைத்தன
என்னைப் பார்த்து நாணம் கொண்டன!!"
 
 
கந்தையா தில்லைவிநாயகலிங்கம், 
அத்தியடி, யாழ்ப்பாணம்
281161591_10221031847648650_674991457962821184_n.jpg?stp=dst-jpg_p600x600&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=RKJLS6WlnYIQ7kNvgECbfvS&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCzHzJ0letiTpUCVio7T70AkgldT21jBMBlcjJjlJ-t0A&oe=664585DE 281430594_10221031848728677_9015384990684833992_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=VpnstiRfJBIQ7kNvgEmUZdp&_nc_oc=AdgAQ301K-YjHSmV58e50nw5U2RbrgDCkHY5hBsUVCzKYYOrz0oMjvbU5_-IGekKqZvPMjvuBTsbHedolx7xTEu1&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYC59oqbg9d7CDXUYEgtCqwqd1jPtAxfinFVgppf8JtD8A&oe=66459709 
 

 

"காத்திருப்பேன் உனக்காக"

4 days 11 hours ago
"காத்திருப்பேன் உனக்காக" படை படையாக ஒன்றின் பின் ஒன்றாக பொங்கி எழுந்து வரும் கடல் அலைகளின் அசைவிலே, அவ்வற்றின் அசைவிற்கு தாளம் போடுவது போல, அங்கு கடற்கரையில் ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த பனை மரங்கள், தம் பனை ஓலைகளை அசைத்தன. அது மாலை நேரம், பகல் முழுவதும் உழைத்து சோர்வு அடைந்த தொழிலாளியின் பெரு மூச்சு போல, கதிரவனும் ஓடிக் களைத்து பிரியா விடை பெற்றுக் கொண்டு இருந்தான். வீசி வந்த கடற்கரை காற்று, அள்ளி வந்த வெண் மணலையும் சருகுகளையும், கவிதாவின் மேல் கொட்டி. அது எதோ ரகசியங்களை கவிதாவிடம் கிசுகிசுத்தது போல் இருந்தது. காலத்தின் ஆழத்தில் தொலைந்து போன காதலின் எதிரொலிகளை அலைகளும் அவளுக்கு நினைப்பூட்டிக்கொண்டு இருந்தன. அவள் கரையோரம் அசையாமல் வெறுத்துப் பார்த்துக் கொண்டு நின்றாள். அர்ஜுன் இல்லாதது அவளது உள்ளத்தில் ஒரு குழியை செதுக்கியிருந்தது, அது காலப்போக்கில், கடலின் மென்மையான தாலாட்டுகளால் நிரப்ப முடியாத வெற்றிடமாகியது. பகல்களை அவளுக்கு இரவுகளாகவும், இரவுகளை முடிவில்லாத தனிமையாகவும் மாற்றியது, கடற்கரை மணலில் நிழலாடிய நினைவுகளில் அவள் இன்று சங்கமித்து விட்டாள். அவர்களின் கடந்த கால நெருக்கமான காட்சிகள் அவள் கண்களுக்கு முன்பாக நடனமாடின - சிரிப்பு மற்றும் மென்மையின் தருணங்கள், நிலவொளிக்கு அடியில் திருடப்பட்ட முத்தங்கள் மற்றும் வாக்குறுதிகள் அலைகளின் தழுவலில் அவள் நெஞ்சில் கிசுகிசுத்தன. ஆனால் அவள் விரல்களில் மணல் துகள்கள் போல, நழுவிச் சென்ற அன்பின் கொடூரமான நினைவூட்டலாக அது இன்று அவளுக்கு இருந்தது. காகங்கள் கூட அவளுடன் கலக்க விரும்பாதது போல, கெந்திக் கெந்திக் மண்ணில் தாவி பறந்து கொண்டு இருந்தன. மனோரம்மியமான அந்த கடற்கரை மாலைப் பொழுது அவளுக்கு எரிச்சல் ஊட்டியது போலும், அவள் அந்த கடற்கரையின் ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு பாறையில் ஏறி குந்தி இருந்தாள். சில சின்ன சின்ன கற்களை எடுத்து, கரை நோக்கி வரும் அலைகளுக்கு குறி பார்த்து எறிந்தாள். ஆனால் அலைகள் ஓயவில்லை. அது ஒவ்வொரு முறையும் அவளது மென்மையான பாதங்களை தழுவி முத்தமிட்டு சென்றன. கவிதாவின் இன்றைய பைத்தியக்காரத் தனத்தின் ஆழத்தில், மனம் உடைந்த எண்ணங்கள் மற்றும் சிதைந்த கனவுகளின் எச்சங்கள் இன்னும் இருந்தன. கடலோரத்தில் புராணங்களில் வரும் பேயாக அலைந்து திரிந்தாள், அலையினால் அடித்துச் செல்லப் பட்ட மணலில் தடம் பதித்த அவளது காலடிகள், மீண்டும் இன்னும் ஒரு அலையால் அடித்து அழிக்கப் படுவதை பார்த்து தனக்குள் சிரித்தாள். காற்றினால் கலைந்த தலைமுடியை அவள் பொருட்படுத்தவில்லை. அவளது கண்கள் அன்பை, காதலை, தன் அழகை தேடுவதை நிறுத்தி விட்டது . அது பல ஆண்டுகளாக அவளுக்கு இரக்கமற்றவையாக இருந்தன, ஒரு காலத்தில் துடிப்பான, வசீகரமான பெண்ணாக இருந்த அவளது வாழ்வு, பழங்கதையாகி விட்டது. முணுமுணுப்புகளுக்கும் பரிதாபப் பார்வைகளுக்கும் நடுவே கவிதா கடலோரத்தில், இடிந்து விழும் அலைகளுக்கும், உப்பு முத்தமிட்ட தென்றலுக்கும் நடுவே, தன் காதலனின் கரங்களில் அவள் மிகவும் மகிழ்வுடன் இருப்பது போல ஒரு புன்சிரிப்புடன் இருக்கிறாள். என்றாலும் நீண்ட காலமாக மறைந்து போன ஒரு அன்பின் நினைவுச் சின்னம் போல இன்று அவளுடைய தலைமுடி வெள்ளி நிறமாக இருக்கிறது. அவளுடைய தோல் சுருங்கியுள்ளது, ஆனால் அவள் கண்கள் வானம் கடலை சந்திக்கும் அடிவானத்தில் நிலைத்திருந்து, இன்னும் அவனுக்காக காத்திருக்கிறாள். என்றும் தணிக்க முடியாத ஏக்கத்தில் அவள் இதயம் வலிக்கிறது, அவள் காற்றில் கிசுகிசுத்தாள், "என் அன்பே, நான் காத்திருப்பேன் உனக்காக, காலம் முடியும் வரை." வடக்கிலும், கிழக்கிலும் இந்தியப் பெருங்கடலும், மற்றும் மேற்கிலும், தெற்கிலும் யாழ்ப்பாணக் கடலேரியும் அமைந்துள்ள, யாழ்ப்பாண குடா நாட்டின், கடற்கரையின் வசீகரத்தை அனுபவிக்க வரும் ஒவ்வொரு பார்வையாளர்களையும் ஈர்க்கும் அமைதியான ஒரு அழகிய கடற்கரை நகரத்தில், கவிதா என்ற இந்த பெண், இளமைப் பருவம் பூத்துக் குலுங்க வாழ்ந்து வந்தாள். "நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து நிலா என்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை! கோல முழுதும் காட்டிவிட்டால் காதல் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச் சோலையிலே பூத்த தனிப்பூவோ?" என்று பாரதிதாசன் நிலவின் அழகை வர்ணித்தான். ஆனால் இவளோ அன்று அந்த நிலவே நாணும் அளவுக்கு வசீகரமாக இருந்தாள். அழகிலும் மட்டும் அல்ல, ஒரு இரக்கத்திற்கான மனோபாவத்திலும், அறிவிலும் கூட சிறந்து விளங்கினாள். அவள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதல் முதல் படிப்பை தொடரும் பொழுது, நடந்த பகிடிவதையின் (ragging, ரேகிங்க்) பொழுதுதான் நான்காம் ஆண்டு அர்ஜுனை சந்தித்தாள். "ஜூன் பிறக்கும் ஜூலை பிறக்கும் சீனியருக்கும் ஜூனியருக்கும் கல்லூரிச் சாலை எங்கும் ராக்கிங் நடக்கும் ஸ்டூடண்ஸ் மனம் ஒரு நந்தவனமே ரோஜா இருக்கும் முள்ளும் இருக்கும் நட்புக்கு ராக்கிங் கூட பாதை வகுக்கும்" கவிஞர் வாலியின் வரி இவர்கள் இருவருக்கும் பொருந்தும். அவர்கள் இருவரும் அன்றில் இருந்து நட்பில் பின்னிப்பிணைந்தனர். தேன் போன்ற இனிய சொற்களைப் பேசும், திரண்ட, மென்மையான தோள்களைக் கொண்ட கவிதாவின் குளிர்ச்சியான பூப்போன்ற கண்கள் அம்புகளைப் போல் அவன் நெஞ்சை துளைத்தது. அவளும், அவனின் அலைகளைப் போல நடனமாடும் சிரிப்புக்கும், அவனின் கடல் ஆழத்தின் மர்மங்களைப் போன்ற கண்களுக்கும் அந்த கணமே தன்னை முழுதாகக் கொடுத்து விட்டாள். அவள் அவனை, தன்னைப் போலவே நம்பிவிட்டாள். அவளின் காதல், குளத்தில் தாமரை போல தூய மற்றும் நம்பிக்கைக்குரியதாக மலர்ந்தது. சிறப்பான பட்டப்படிப்புக்குப் பிறகு, அர்ஜுன் அமெரிக்காவிற்கு உயர் படிப்பிற்காக ஒரு பயணத்தைத் தொடங்கினான், அவனைப் பிரிய போகிறோமே என்ற ஏக்கத்தால் கவிதாவின் இதயம் கனத்தது, அவள் கண்கள் கண்ணீரால் நிரம்பியது. ஒரே ஒரு ஆண்டுதான் அவர்களின் நேரடியான நெருக்கமான காதல் வாழ்வு பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளும் கடற்கரையிலும் இருந்தது. ஆனால் அவளைப் பொறுத்தவரையில் அது மாற்ற முடியாத, மறக்க முடியாத இணைந்த வாழ்க்கை. அனல் பறக்கும் காற்றும், சுட்டெரிக்கும் மணலும், விடியும் வெண்ணிலவும், தன் விருந்துக்கு வரவேற்க, அலைகளோ, ஒன்றன் மேல் ஒன்றாய், முந்தி வந்து முத்தமிட, முன்னும் பின்னுமாய் கை கோர்த்தும் கோர்க்காமலும் நடந்து, அர்ஜுனும் கவிதாவும் கால்கள் நீரில் நனைய தம்மை மறந்து அனுபவித்த நாட்களை அவள் நினைத்துப் பார்த்தாள். ஏன் இந்த அவசரம் என்னவனுக்கு என்று அவளுக்குள் ஒரு ஊடலும் வந்தது. என்றாலும் அவனின் வாக்குறுதியிலும் அவன் மேல் இருந்த நம்பிக்கையிலும், அந்த கடைசி நாளை அவனின் விருப்பத்தின் படியே தன்னை முழுமையாக சமர்ப்பித்தாள். மெல்லிய பூங்காற்று மென்மையாய் மேனி மேல் ஊடுறுவ, மெய் சிலிர்த்து நின்றாள், அவன் பேரழகினைக் கண்டு! பிரிய மனமில்லாமல் அவனும் பிரிந்தான், கவிதாவிடம் பிரியா விடைப்பெற்று!!! முதலில், அவர்களுக்கிடையில் இலங்கை - அமெரிக்கா என்று தூரம் பெரிதாக இருந்தாலும், இன்றைய இணையத்தள மேம்பாட்டால் அது வெல்லக் கூடியதாகத் அவளுக்கு தோன்றியது. காதல் மற்றும் ஏக்க வார்த்தைகளை சுமந்து கொண்டு தினம் தினம் வீடியோ அழைப்பு கண்டங்கள் கடந்து முன்னும் பின்னுமாக பறந்தன. ஆனால் காலப் போக்கில், அவை, அவனிடம் இருந்து அரிதாகவே வரத் தொடங்கின. தனக்கு படிப்பு, ஆராச்சியென காரணம் சொல்லிக் கொள்வான். அதுமட்டும் அல்ல, அந்த சில அழைப்புகளும் அவற்றின் உள்ளடக்கங்கள் ஒரு காலத்தில் இருந்ததைப் போன்று இல்லாமல் வெறும் சம்பிரதாயமாக எதிரொலித்தன. இறுதியில், முற்றிலுமாக திடீரென நின்று விட்டது. அவனின் தொலை பேசியோ, ஈ மெயிலோ, முகநூலோ எல்லாமே முடங்கிவிட்டது. காதல் மழை பொழிந்த அந்தி நேரம் அமைதி பெற்று விட்டது. கடற் கரையின் ஓரத்தில் கடல் அலை அடங்கி ஓய்ந்து விட்டது. ஓடங்களும், மீன்பிடி படகுகளும் கரையை நெருங்கிக் கொண்டிருந்தன. கடலில் மீன் தேடச் சென்ற பறவைகள் கூட இருள் வருகிறதுவென கரைநோக்கி பறந்து கொண்டிருந்தன. கரையில் சிறிது தூரம் வெண்மணல் பரந்த வெளியைக் கொடுத்தது. அதற்கு அப்பால் பனை மரங்களும் புதர்ச்செடிகளும் கொஞ்சம் இருந்தன. பனை ஓலைகள் மற்றும் பற்றைகள் ஆடவில்லை; அசையவில்லை. நாலா பக்கமும் அமைதி நிலவியது. கதிரவன் சிவந்து, கடலும் வானும் கலக்கும் அடிவானத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தான். மேகத்திரள்கள் சில கதிரவனின் செங்கதிர்களை பட்டும் படாமலும் மறைத்தன. கவிதா ஒரு பாறையில் இருந்தபடி கடலை பார்த்தாள். கடலின் மெல்லிய அலையில் ஒரு சிறிய ஓடம் மிதந்து வந்து கொண்டு இருந்தது, அது அலையுடன் மெள்ள மெள்ள மேலும் கீழும் ஆடி ஆடி அசைந்தது. அந்தப் படகில் அவன், அர்ஜுன், அவளை வா வா என்று அழைப்பது போல கை அசைத்துக் கொண்டு இருக்கிறான். கொஞ்சம் வயது போய், முறுக்கு மீசையுடனும் ஆனால் மிடுக்கான தோற்றத்திலும், கொஞ்சம் வெளிறிய தலை முடியுடனும் அவன், அவனே தான்! கவிதா பாறையில் ஒய்யாரமாகச் சாய்ந்து கொண்டு எதோ முணுமுணுத்தாள். தூரத்தில் தெரிந்த ஓடம் அசையாமல் நின்று அவளுடைய முணுமுணுப்பை கவனமாகக் கேட்டது. ஏன் வானமும், பூமியும் கூட அந்த முணுமுணுப்பைக் கேட்டு மதிமயங்கி அசைவற்று நின்றது! கதிரவன் கூட அந்த முணுமுணுப்பை கேட்க கடலை அடைந்தும் முழுகி மறையாமல் தயங்கி கொஞ்சம் நின்றது. "அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்? நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்? வானகமும் நானிலமும் மோனமதில் ஆழ்ந்திருக்க மான்விழியாள் பெண்ணொருத்தி மனத்தில் புயல் அடிப்பதுமேன்?" பொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தியின் பாடல் வரிகள் அது. கவிதாவின் உள்ளத்தில், அவளின் சோகத்தை அது காட்டியது. அப்பாடலின் சொற்களோடு அவள் கண்ணீரும் கடலில் கலந்து அர்ஜுனிடம் சென்றது, ஆனால் அவன் ஓடத்தில் இருந்து மறைந்து விட்டான். அதில் யாரோ ஒரு முதியவர் மீனுடன் திரும்பிக் கொண்டு இருந்தார், அவன் இப்படி இனி எத்தனை தடவை ஏமாற்றுவானோ? வருடங்கள் கரையில் மோதிய அலைகளைப் போல உருண்டோடின, ஆனால் கவிதா தன் காதலில், நம்பிக்கையில் உறுதியாக இருந்தாள். அவளுடைய பெற்றோர் மற்றும் மூத்தவர்கள் முன்வைத்த வரன்களையும் அவள் மறுத்துவிட்டாள், அவளுடைய இதயம் தன் ஆன்மாவில் அழியாத முத்திரையை பதித்த அர்ஜுனனுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு மாலையும், அவள் கடற்கரையோரம் நடந்து செல்வாள், அவள் அந்த கடைசி நாளில் அவனுடன் அனுபவித்த அந்த ஒதுக்குப்புறத்தில், அந்த பாறையின் மேல் குந்தி இருப்பாள். அவளுடைய பார்வை வெறிச்சோடி இருக்கும். படபடத்து வேலைக்கு ஓடும் மனிதர்களில் சிலர் அவளை எட்டிப் பார்ப்பார்கள். வண்டி இல்லாத பாதையும் மக்கள் இல்லாத வீதியும் தான் இப்ப அவளை வரவேற்கிறது. ஒவ்வொரு சூரிய அஸ்தமனத்திலும் அவள் இன்னும் மெல்லிய குரலில் "நான் காத்திருப்பேன் உனக்காக" என்று சொல்ல மட்டும் மறக்க மாட்டாள்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

இரான் பெண்கள் ஹிஜாப் போராட்டம்: மாசா அமினி மரணத்தால் முடியை வெட்டி எதிர்ப்பு தெரிவிப்பு

4 days 11 hours ago
மேற்குலகில் சுகபோகமாக வாழ்ந்துகொண்டு அந்த நாடுகளுக்கெதிராக வரிந்துகட்டிகொண்டுவரும் அடிப்புல்லன்றிமேய்பவர்கண் இந்த இரானின் பயங்கரவாதம் இன்னும் கண்ணிற்படாமலிருப்பது பேராச்சரியமொன்றுமல்லவே!

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 16ம் திகதிக்குள் - தேர்தல்கள் ஆணைக்குழு

4 days 11 hours ago
இலங்கை ஜனாதிபதி தேர்தல் செப்17-ஆக் 16 இடையே நடக்கும் என இலங்கை தேர்தல்கள் ஆணையம் அறிவித்துள்ளது. இது சம்பந்தமாக இலங்கை ஆங்கில, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.thehindu.com/news/international/sri-lanka-to-hold-presidential-election-between-september-17-and-october-16-election-commission/article68156936.ece/amp/ டிஸ்கி இந்த முக்கியமான செய்தி இரெண்டு நாட்களாகியும், யாழில் பகிரபடவில்லை என நினைக்கிறேன். பகிரபட்டிருபின் - திரியை நூத்து விடவும்🙏. தமது பிடியை தளரவிட விரும்பாத இராஜபக்சேக்கள் பாராளுமன்ற தேர்தலை முதலாவதாக நடத்துமாறு ஜனாதிபதிக்கு அளுத்தம் கொடுத்த சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது

4 days 11 hours ago
பதில் சொன்னே. சரி கொஞ்சம் நீட்டி சொல்கிறேன். சிங்கப்பூர், தாய்லாந்து இரெண்டுமே மட்டுபட்ட சுதந்திரம் உள்ள நாடுகள். ஆனால் இரெண்டுக்கும் இடையே பாரிய வேறுபாடு உண்டு. சிங்கபூரில் அரச கொள்கை நடைமுறையை எதிர்த்து செயல்பட முடியாது. ஆனால் தாய்லாந்தில் இந்த இடம் அரச கொள்கைகளுக்கு அன்றி, அரச குடும்பத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சிங்கபூரில் முதலாளிதுவ அமைப்பின் நலனை பேணவும், மக்களின் பொது நன்மைக்காகவும், மக்களின் சுதந்திரத்தை அரசு பரவலாக மட்டுப்படுத்துகிறது. தாய்லாந்தில் அரச குடும்பம், இன்னும் பல தனியார் கூட்டுகளின் நலனை பேண குறிப்பிட்ட விடயங்களின் மக்களின் சுதந்திரத்தை மட்டுப்படுத்தினாலும், பாலியல் சுந்தந்திரம் உட்பட பலதில் மிகவும் தாராளவயமாக இருக்கிறனர். இப்படி இருப்பது கூட மக்களை கட்டுப்படுத்தும் ஒரு பொறிமுறையே. இலங்கையிலும் சட்டபூர்வ கஞ்சா பாவனை, ஏற்றுமதி, சட்ட பூர்வ பாலியல் தொழில், இரவு நேர பொருளாதாரம், கசினோ தீவுகள் என தாய்லாந்து பாணி பொருளாதாரத்தை நிறுவி, தொடர்ந்தும் தற்போதுள்ள ஆளும் வர்க்கத்தின் இருப்பை தக்க வைக்கும் முறை ஒன்றை டயனா முன்னெடுத்தார். மக்கள் நலனை பொறுத்தவரை தாய்லாந்து சிஸ்டத்தைவிட சிங்கபூர் சிஸ்டம் சிறந்தது. ஆகவே டயனா முன்வைத்த, இலகுவில் நடைமுறை படுத்த கூடிய தாய்லாந்து பாணியா? அல்லது….. இதுவரை இலங்கை அரசியல்வாதிகள் வாயால் வடைசுட்ட சிங்கப்பூர் பாணியா? இதைத்தான் நான் சுட்டினேன்.