1 week 3 days ago
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு 100 மில்லியன் நன்கொடை 19 Dec, 2025 | 10:47 AM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு CBL குழுமம் (CBL Group)100 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கியது. அதற்கான காசோலையை CBL குழுமத்தின் (CBL Group) குழும பணிப்பாளர் ஆர். விக்ரமசிங்க வியாழக்கிழமை (18) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார். CBL குழுமத்தின் (CBL Group) குழும பணிப்பாளர் என். விக்ரமசிங்க மற்றும் பணிப்பாளர் /பிரதான நிறைவேற்று அதிகாரி ரந்தீவ மலலசூரிய ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/233799
1 week 3 days ago
எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழ் தேசியப் பேரவைக்கும் இடையில் சந்திப்பு! 19 Dec, 2025 | 10:04 AM தமிழக முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு அவரது இல்லத்தில் இடம்பெற்றது. நேற்று வியாழக்கிழமை (18) இச்சந்திப்பு இரவு 10.15 மணியளவில் ஆரம்பமாகி சுமார் 40 நிமிட நேரம் இடம்பெற்றது. இதன்போது ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு நிராகரிப்பு, தமிழர் தேசம் இறைமை, சுயநிர்ணய உரிமை, அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்படல் வேண்டும், ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும். ஆகிய விடயங்கள் முக்கியமாக பேசப்பட்டன. முதலமைச்சருடன் பேசப்பட்ட விடயங்களும் எழுத்து மூலம் கையளிக்கப்பட்டது. இச்சந்திப்பில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனும் கலந்துகொண்டிருந்தார். தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் இதில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் MP, பொ.ஐங்கரநேசன் (தலைவர் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்), செ.கஜேந்திரன் (செயலாளர் ததேமமு), த.சுரேஸ் (தேசிய அமைப்பாளர்), க.சுகாஷ் (சிரேஸ்ட சட்டத்தரணி), ந.காண்டீபன் (சிரேஸ்ட சட்டத்தரணி) கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/233790
1 week 3 days ago
ராதாகிருஸ்ணன் ஏன் போக போறார்? அவர் என்ன லைனிலா வாழ்கிறார்? அவர் சம்பளம் என்ன 1000 மா? அந்த மக்கள் கொட்டடியில் மாய்ந்தால்தான், இவர் எம்பி இல்லாவிட்டால்? ஆகவே அவர் இப்படித்தான் பசப்பு வார்த்தை பேசுவார். நாங்களும் பதிலுக்கு நிகர்நிலை உதவி கரம் நீட்டினால் - எல்லாம் சுபம் 😂. இவர்களின் மலையக மக்கள் மீதான கரிசனையும், கருணாநிதியின் ஈழத்தமிழர் மீதான கரிசனையும் ஒரே வகை.
1 week 3 days ago
[ நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை ] நீங்கள் யாழ்பாணத்தில் குடியேறுவதற்கான நினைப்புக்கள் திட்டங்கள் வைத்து கொள்ளாதீர்கள் என்பதை அவர்கள் தெளிவுபடுத்திவிட்டனர்.
1 week 3 days ago
தயவு செய்து அப்டேட் ஆகவும். அதில் பாதிப்பேர் தற்போது அனுர படையணியின் சிறப்பு தளபதிகள்😂
1 week 3 days ago
மேலே கு சா அண்ணைக்கு கொடுத்த விளக்கத்தை போய் மீள வாசிக்கவும்😂. நடைமுறையில் சரி வரும், நாளைக்கே செய்யலாம் என நான் எழுதவில்லை. கொள்கை அளவில் இது நல்ல விடயம் என்பதை ஏற்றுகொள்ள வேண்டும் என்பது மட்டுமே நான் எழுதியது. என்ன நினைப்பில் அல்லது மிதப்பில் வந்தாலும் - கிடைத்த வேலை ஒன்றை பழகி, அதில் திறமை காட்டி, மேலேபோய், மேளாளர் ஆகி, பெற்றோல் ஷெட்டையிம் வாங்கினார்களா இல்லையா? இதையே ஏன் வடக்கில் மலையக மக்கள் செய்ய கூடாது. முடியாது? ஏன் என்றார் அவர்கள் எம்மை போல் ஊக்கம், திறமை, உந்தல் அற்றவர்கள்?
1 week 3 days ago
ரத்த திலகம் வைத்த காலங்களில் கூட்டணி தலைவர்கள் உசுபேற்றும் வகையில் பேசுவார்கள் என கேள்விப்பட்டேன். டெமோ காட்டியமைக்கு நன்றி. இத்து போன ஈரோஸ், ஈபி யை தவிர, அவர்களும் பின்னர் இதை கைவிட்டு விட்டார்கள் - எவரும் எந்த காலத்திலும் மலையகம் தமிழர் தாயகம் என கோரியதே இல்லை. மலையகத்தை விட கொழும்பு மாவட்டத்தில் தமிழர் செறிவு அதிகம். அதற்காக கொழும்பு தமிழர் தாயகமா? இனவழி, மரபுபழி தாயாகம் என்பது சும்மா புல்டா போண்டா கதை அல்ல. எழுந்தமானமாக யாழில் வீரவசனம் எழுதுவதால் மட்டும் மலையகம் தமிழர் தாயகம் என ஆகிவிடாது. சக தமிழனை அடுத்த நூறு ஆண்டுக்கு லைன்களில் கட்டி வைத்து, சிங்கள மேலாண்மையின் ரத்த கூலிகளாக இருக்க வைக்கும் -வடக்கில் தமிழ் இனப்பரம்பல் குறைந்து போனாலும் பரவாயில்லை எனது ஆள் இல்லா காணியில் இன்னொரு தமிழனை (இன்னொரு சாதியை சார்ந்த யாழ்ப்பாண தமிழனை கூட) இருக்க விடேன் எனும் நவீன பொன்னம்பலங்கள் சமூகத்தில் இருந்தே ஒதுக்கி வைக்கப்பட வேண்டியவர்கள்.
1 week 3 days ago
உதவி கரம் அல்ல உதவி-வாய் 😂
1 week 3 days ago
தையிட்டி விகாராதிபதிக்கு கௌரவம் வழங்கப்படும் நிகழ்விற்கு NPP கடும் எதிர்ப்பு! யாழ். தையிட்டி விகாரை விவகாரம்: தேசிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பு! adminDecember 19, 2025 தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது என மூன்று மொழிகளிலும் விகாரைக்கு முன்பாக பெயர் பலகை நாட்டுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விகாரை முன்பாக போராட்டம் நடத்தப்படும். இந்தத் தீர்மானங்கள் வலி வடக்கு பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியின் பூரண ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளன. வலி வடக்குப் பிரதேச சபையின் மாதாந்த அமர்வில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் பத்மநாதன் சாருஜனால் கொண்டுவரப்பட்ட பிரேரணைகள் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. தையிட்டியில் அமைந்துள்ள “திஸ்ஸ விகாரை” சட்டவிரோதமானது என்றும், அதற்கு பிரதேச சபையில் எந்த அனுமதியும் பெறப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விகாரை முன்பாக நடைபெறும் போராட்டம் அரசியல் கட்சிகள் சாராத ஒரு மக்கள் போராட்டமாக முன்னெடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியினர் தெரிவித்துள்ளனர். மக்கள் போராட்டமாக இருக்குமானால் தாங்களும் கலந்துகொள்வோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரருக்கு அமரபுர ஶ்ரீ கல்யான வம்ச குழுவின் வட இலங்கை துணை தலைமை சங்கநாயக பதவிக்கான ஸ்ரீ சன்னாஸ் சான்றிதழ் மற்றும் விஜின் சான்றிதழ் வழங்கும் விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை புத்தசாசன சமயம் மற்றும் கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தலைமையில் கொழும்பில் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/224487/
1 week 3 days ago
பிச்சை காசு தான் கிடைக்கும் . வழக்கம்போல் மீனுக்கு வாளும் பாம்புக்கு தலையும் காட்ட முடியாதளவுக்கு அமெரிக்கா வாலை ஓட்ட நறுக்கி விட்டுத்தான் உதவியே கொடுத்து உள்ளது கொஞ்சம் பணம் கிடைத்தாலும் சிங்களம் தென்னாசிய அரசியல் தன்ரை குடும்பியில் என்பது போல் இடற தொடங்கும் இது உள்ளே வந்தவங்களும் விளங்கும் வேற வழியே கிடையாது தமிழர் பகுதியில் நாலு புத்தர் சிலை வைத்து கபடி கபடி விளையாட வேண்டியதுதான் . அந்த கனிம வளத்தை கையாள கூடிய அளவுக்கு இந்தியா வளரவில்லை என்கிறார்கள் வழக்கம் போல் அணில் ஏற விட்ட கேஸ் தான் அநேகமா நம்ம அரசியல்வாதிகளிடம் மகஜர் ஒன்று வாங்கி கொண்டு இருப்பார்கள் .
1 week 3 days ago
எல்லாம் கொஞ்ச நாள்தான் .
1 week 3 days ago
இந்தியனை எங்கடை அரசியல்வாதிகள் நம்பும் அளவுக்கு சிங்களவர்கள் நம்ப போவதில்லை வழக்கம்போல் மகஜர் கொடுத்து விட்டு இங்கு வந்து அறிக்கை விட்டு குரைக்க வேண்டியதுதான் . இதெல்லாம் முடியமுன் டெல்லியின் அரசியல் சதுரங்க ராஜா வெட்டு பட்டு இருப்பார் .
1 week 3 days ago
யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் புதிய தீர்மானம்! Published By: Digital Desk 2 19 Dec, 2025 | 10:37 AM யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று வியாழக்கிழமை (18) பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, தையிட்டி தெற்கில் பொதுமக்களின் காணியில் சட்டவிரோதமாக அமைந்துள்ள “திஸ்ஸ விஹாரை" எனக் கூறப்படும் கட்டடத்திற்கு எந்த அனுமதியும் பிரதேச சபையில் பெறப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில், பிரதேச சபையின் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த கட்டடம், சட்டவிரோதம் என்பதை அறியப்படுத்த மும்மொழிகளிலும் சபையினால் அறிவித்தல் பலகை ஒன்று நாட்டப்பட வேண்டும் என்ற பிரேரணை சபையில் கொண்டுவரப்பட்டது. குறித்த பிரேரணைக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததை அடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அத்துடன் சட்டவிரோத தையிட்டி விகாரையின் விகாராதிபதியின் பவுதவி உயர்க்காக எதிர்ப்பை தெரிவித்தும், தீர்மான பிரேரணை ஒன்று சபையில் முன்மொழியப்பட்டது. குறித்த பிரேரணையையும் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதேவேளை, பிரதேச சபையின் உறுப்பினர்களால் தையிட்டியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/233791
1 week 3 days ago
யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் புதிய தீர்மானம்!
Published By: Digital Desk 2
19 Dec, 2025 | 10:37 AM

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று வியாழக்கிழமை (18) பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, தையிட்டி தெற்கில் பொதுமக்களின் காணியில் சட்டவிரோதமாக அமைந்துள்ள “திஸ்ஸ விஹாரை" எனக் கூறப்படும் கட்டடத்திற்கு எந்த அனுமதியும் பிரதேச சபையில் பெறப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பிரதேச சபையின் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த கட்டடம், சட்டவிரோதம் என்பதை அறியப்படுத்த மும்மொழிகளிலும் சபையினால் அறிவித்தல் பலகை ஒன்று நாட்டப்பட வேண்டும் என்ற பிரேரணை சபையில் கொண்டுவரப்பட்டது.
குறித்த பிரேரணைக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததை அடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் சட்டவிரோத தையிட்டி விகாரையின் விகாராதிபதியின் பவுதவி உயர்க்காக எதிர்ப்பை தெரிவித்தும், தீர்மான பிரேரணை ஒன்று சபையில் முன்மொழியப்பட்டது.
குறித்த பிரேரணையையும் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதேவேளை, பிரதேச சபையின் உறுப்பினர்களால் தையிட்டியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
https://www.virakesari.lk/article/233791
1 week 3 days ago
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்ப அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு, Noritake Company Limited நிறுவனத்திடமிருந்து 20 மில்லியன் ரூபா நிதியுதவி Published By: Vishnu 18 Dec, 2025 | 10:21 PM அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஆதரவாக, ஜப்பானின் நோரிடேக் (Noritake Company Limited) நிறுவனம் 20 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கியுள்ளது. இதற்கான காசோலையை, Noritake Lanka Porcelain நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் கென்ஜி ஒபாரா (Kenji Obara) அவர்கள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களிடம் 2025 டிசம்பர் 18ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாகக் கையளித்தார். இந்நிகழ்வில் அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன, Noritake Lanka Porcelain நிறுவனத்தின் பணிப்பாளரும் பொது முகாமையாளருமான சுஜாதா எகொடகெதர, உதவிப் பொது முகாமையாளர் கப்டன் எம்.எம். அதுல ரோஹான் சேனாரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/233772
1 week 3 days ago
பேரிடரில் பாதிக்கப்பட்ட மலையக மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் - கிருஷ்ணன் கலைச்செல்வி 18 Dec, 2025 | 05:52 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இயற்கைக்கு எதிராக நாம் செயற்பட்டால் அது என்றாவது ஒருநாள் அதன் பிரதிபலனை மீண்டும் எமக்குப் பெற்றுத் தரும் என்ற சிறந்த பாடத்தை இடம்பெற்ற அனர்த்தம் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் புகட்டியுள்ளது. எனவே அதிகம் பாதிக்கப்பட்ட மலையக மக்களை பாதுகாப்பான இடங்களில் மீண்டும் குடியமர்த்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆளும் தரப்பினரால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், வழமையாக இயற்கை அனர்த்தங்கள் இடம்பெறும் போது தனித்தனியே ஒவ்வொருவரும் அதற்கான பங்களிப்புகளை வழங்கி வருவர்.ஆனால் இம்முறை அரசாங்கம்,அமைச்சர்கள், அரச அதிகாரிகள், பொது அமைப்புகள் என அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டதாலேயே இயற்கை அனர்த்தம் ஏற்பட்டு 23 தினங்களுக்குள் நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடிந்தது. இயற்கை அனர்த்தங்களினால் மலையக பிரதேசங்களில் வாழும் மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 200 வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட வீடுகளில் வாழ்ந்த மக்கள் மற்றும் மலை பிரதேசங்களில் வாழ்ந்த மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தும் இடம் பெற்ற பின்னர் இன்றும் கூட அந்த மக்கள் தமக்கு இயற்கை அனர்த்தங்கள் மூலம் பாதிப்பு ஏற்படும் என்ற பயத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். பெருமளவு மக்கள் இன்னும் நலன்புரி நிலையங்களிலேயே வாழ்கின்றனர். எவ்வாறெனினும் இம்முறை இடம் பெற்றுள்ள இயற்கை அனர்த்தங்கள் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் ஒரு சிறந்த பாடத்தை புகட்டியுள்ளது. அதாவது இயற்கைக்கு எதிராக நாம் செயற்பட்டால் இயற்கையானது என்றாவது ஒருநாள் அதன் விளைவுகளை, பிரதிபலனை மீண்டும் எமக்குப் பெற்றுத் தரும் என்பதாகும். அனர்த்தத்தில் நுவரெலியா மாவட்டத்தில் பல வீதிகள் பல குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகள் பெரும் சேதமடைந்துள்ளன.கொத்மலை, வலப்பனை,ஹங்குரங்கெத்த போன்ற பிரதேசங்களே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரதேசங்களில் மக்கள் வீடுகளையும் இழந்து பெருமளவு உயிர்களையும் இழந்துள்ள நிலையையே காண முடிகிறது. பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் மீளக் குடியமர்த்துவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்கான உறுதி மொழியை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அந்த மக்களுக்கு வழங்கி யுள்ளார். இந்த இயற்கை அனர்த்தத்தின் போது எமது அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் மீதும் நம்பிக்கை வைத்து பெருமளவிலான நாடுகள் எமக்கு உதவி, ஒத்துழைப்புகளை வழங்கின.பல்வேறு நாடுகளும் எமக்கு உதவிகளை வழங்கின. சில தோட்டங்களில் தொழிலாளர்களும் தமது ஒருநாள் சம்பளத்தை வழங்க முன் வந்தனர். ஆனால் அந்த நிவாரணங்கள் உரிய வகையில் மக்கள் கைகளுக்கு போய் சென்றுள்ளதா என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/233753
1 week 3 days ago
பேரிடரில் பாதிக்கப்பட்ட மலையக மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் - கிருஷ்ணன் கலைச்செல்வி
18 Dec, 2025 | 05:52 PM

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
இயற்கைக்கு எதிராக நாம் செயற்பட்டால் அது என்றாவது ஒருநாள் அதன் பிரதிபலனை மீண்டும் எமக்குப் பெற்றுத் தரும் என்ற சிறந்த பாடத்தை இடம்பெற்ற அனர்த்தம் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் புகட்டியுள்ளது. எனவே அதிகம் பாதிக்கப்பட்ட மலையக மக்களை பாதுகாப்பான இடங்களில் மீண்டும் குடியமர்த்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆளும் தரப்பினரால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
வழமையாக இயற்கை அனர்த்தங்கள் இடம்பெறும் போது தனித்தனியே ஒவ்வொருவரும் அதற்கான பங்களிப்புகளை வழங்கி வருவர்.ஆனால் இம்முறை அரசாங்கம்,அமைச்சர்கள், அரச அதிகாரிகள், பொது அமைப்புகள் என அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டதாலேயே இயற்கை அனர்த்தம் ஏற்பட்டு 23 தினங்களுக்குள் நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடிந்தது.
இயற்கை அனர்த்தங்களினால் மலையக பிரதேசங்களில் வாழும் மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 200 வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட வீடுகளில் வாழ்ந்த மக்கள் மற்றும் மலை பிரதேசங்களில் வாழ்ந்த மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்தும் இடம் பெற்ற பின்னர் இன்றும் கூட அந்த மக்கள் தமக்கு இயற்கை அனர்த்தங்கள் மூலம் பாதிப்பு ஏற்படும் என்ற பயத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். பெருமளவு மக்கள் இன்னும் நலன்புரி நிலையங்களிலேயே வாழ்கின்றனர்.
எவ்வாறெனினும் இம்முறை இடம் பெற்றுள்ள இயற்கை அனர்த்தங்கள் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் ஒரு சிறந்த பாடத்தை புகட்டியுள்ளது. அதாவது இயற்கைக்கு எதிராக நாம் செயற்பட்டால் இயற்கையானது என்றாவது ஒருநாள் அதன் விளைவுகளை, பிரதிபலனை மீண்டும் எமக்குப் பெற்றுத் தரும் என்பதாகும்.
அனர்த்தத்தில் நுவரெலியா மாவட்டத்தில் பல வீதிகள் பல குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகள் பெரும் சேதமடைந்துள்ளன.கொத்மலை, வலப்பனை,ஹங்குரங்கெத்த போன்ற பிரதேசங்களே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரதேசங்களில் மக்கள் வீடுகளையும் இழந்து பெருமளவு உயிர்களையும் இழந்துள்ள நிலையையே காண முடிகிறது.
பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் மீளக் குடியமர்த்துவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்கான உறுதி மொழியை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அந்த மக்களுக்கு வழங்கி யுள்ளார்.
இந்த இயற்கை அனர்த்தத்தின் போது எமது அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் மீதும் நம்பிக்கை வைத்து பெருமளவிலான நாடுகள் எமக்கு உதவி, ஒத்துழைப்புகளை வழங்கின.பல்வேறு நாடுகளும் எமக்கு உதவிகளை வழங்கின. சில தோட்டங்களில் தொழிலாளர்களும் தமது ஒருநாள் சம்பளத்தை வழங்க முன் வந்தனர். ஆனால் அந்த நிவாரணங்கள் உரிய வகையில் மக்கள் கைகளுக்கு போய் சென்றுள்ளதா என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளது என்றார்.
https://www.virakesari.lk/article/233753
1 week 3 days ago
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு யூரோ 2.35 மில்லியனுக்கும் அதிகமான மனிதாபிமான உதவி Published By: Vishnu 18 Dec, 2025 | 09:40 PM இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வலுவான பங்குதாரர்கள் மற்றும், இலங்கையை மீட்டெடுக்கும் செயல்முறைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் வகையில், யூரோ 2.35 மில்லியனுக்கும் அதிகமான மனிதாபிமான நிவாரணப் பொருட்களை இந்நாட்டிற்கு அனுப்பியுள்ளது. இதில் IFRC இனால் யூரோ 500,000 மற்றும் DG-European Civil Protection and Humanitarian Aid Operations (ECHO) பங்குதாரர்கள் WFP மற்றும் UNICEF இனால் யூரோ1.85 மில்லியன் ஆகியவை அடங்கும். மேலும், Union Civil Protection Mechanism (UCPM) சேர்ந்த 37 நாடுகள், 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், அல்பேனியா, பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, ஐஸ்லாந்து, மோல்டோவா, மோண்டினீக்ரோ, வடக்கு மெசிடோனியா, நோர்வே, சேர்பியா, துருக்கி மற்றும் உக்ரைன் ஆகியவை இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் பங்களித்துள்ளன. UCPM மனிதாபிமான உதவி விநியோகத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கு நேற்று (17) ஒரு தொகுதி மனிதாபிமான உதவிகள் கிடைத்ததுடன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் லக்சம்பர்க் இல் இருந்து இரண்டு சரக்கு விமானங்கள் கொழும்புக்கு வந்தன. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் Carmen Moreno, பிரான்ஸ் தூதுவர் Rémi Lambert மற்றும் ஜெர்மன் தூதரகத்தின் பிரதி தூதுக்குழுத் தலைவர் Sarah Hasselbarth ஆகியோர் மனிதாபிமான உதவிகளை இந்நாட்டிற்கு உத்தியோகபூர்வமாக ஒப்படைத்ததுடன், இலங்கை அரசாங்கத்தின் சார்பாக, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கான பணிப்பாளர் நாயகம் சுகீஸ்வர குணரத்ன மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் சதுர லியனாரச்சி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். மனிதாபிமான உதவிப் பொருட்களில் கூடாரங்கள், மெத்தைகள், சுகாதாரம் மற்றும் சமையலறைப் பொருட்கள், படுக்கைகள் மற்றும் நீர் வடிகட்டிகள் போன்ற 83 டொன் நிவாரணப் பொருட்கள் இதில் அடங்கும். இந்த பொருள் உதவி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரமாக விநியோகிக்கப்பட உள்ளது. மேலும், இந்நாட்டின் அனர்த்த மதிப்பீடு மற்றும் மீட்பு செயல்முறைக்கு உதவ இத்தாலி பொறியலாளர்கள் குழுவும் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் அவசர முகாமைத்துவ சேவை (EMS) விரைவான வரைபடவியல் மூலம் இதுவரை சுமார் 30 வரைபடங்களை உருவாக்கி வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/233770
1 week 3 days ago
இந்தியாவிடம் சரணடைவதை தவிர்க்க பாகிஸ்தான் விமானிகள் டாக்காவில் இருந்து தப்பியது எப்படி? பட மூலாதாரம்,Bettmann via Getty Images படக்குறிப்பு,1971 போரில் தோல்வியடைந்த பிறகு சரணடைதல் ஆவணங்களில் பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் அமீர் அப்துல்லா கான் நியாசி கையெழுத்திடுகிறார். இந்திய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் ஜக்ஜித் சிங் அரோராவும் (இடது) காணப்படுகிறார். கட்டுரை தகவல் முனாஸ்ஸா அன்வர் பதவி,பிபிசி உருது, இஸ்லாமாபாத் 18 டிசம்பர் 2025 அது 1971ஆம் ஆண்டு டிசம்பர் 15 இரவு. பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் முறைப்படி சரணடையத் தயாராகிக் கொண்டிருந்தது. டாக்காவில் நிலைநிறுத்தப்பட்டிருந்த பாகிஸ்தான் ராணுவத்தின் 4வது ஏவியேஷன் படைப் பிரிவுக்கு, தங்களிடம் இருந்த ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆயுதங்களை அழித்துவிடுமாறு உத்தரவு வந்திருந்தது. ஆனால், அந்த விமானிகள் பிடிபட விரும்பவில்லை. அவர்கள் டாக்காவில் இருந்து தப்பிக்கத் திட்டமிட்டனர். அந்தத் திட்டம் எளிமையாகத் தோன்றியது. ஹெலிகாப்டர்களை அழிப்பதற்குப் பதிலாக, அவற்றை பர்மாவுக்கு ஓட்டிச் செல்ல விமானிகள் விரும்பினர். அப்போது இந்திய விமானப் படை வான்வெளியை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இந்திய ராணுவம் மற்றும் முக்தி பாஹினியால் டாக்கா முற்றுகையிடப்பட்டிருந்தது, வெளியேறும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டிருந்தன. இறுதியாக அந்த விமானிகள் ஹெலிகாப்டர்களில் பறந்து சென்றனர். ஆனால் அவர்கள் எப்படி உயிர் பிழைத்தார்கள்? இந்தக் கேள்விக்கான விடையைக் கண்டறிய, 54 ஆண்டுகளுக்கு முந்தைய அந்த இரவுக்கு நாம் செல்ல வேண்டும். அந்த நேரத்தில், இந்தப் படைப் பிரிவுக்கு பாகிஸ்தானின் லெப்டினன்ட் கர்னல் சையத் லியாகத் புகாரி தலைமை தாங்கினார். இந்தப் பிரிவு டாக்காவில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. இந்தப் படைப் பிரிவில் ஐந்து எம்ஐ-8 மற்றும் நான்கு அலூவேட்-3 ஹெலிகாப்டர்கள் இருந்தன. பாகிஸ்தான் விமானப்படை 1971ஆம் ஆண்டு டிசம்பர் 3 மாலை இந்தியா மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. அதைத் தொடர்ந்து அன்றிரவே இந்திய விமானங்கள் டாக்கா விமான நிலையத்தைத் தாக்கின. ஒவ்வோர் இரவும் இந்திய விமானங்கள் வந்து டாக்கா விமான நிலையத்தின் ஓடுதளத்தை தகர்க்கும். ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அலி குலி கான் அப்போது ஒரு மேஜராகவும், எம்ஐ-8 ஹெலிகாப்டர் விமானியாகவும் இருந்தார். அவர் 1971 ஏப்ரல் 10 அன்று டாக்கா வந்தடைந்தார். பிபிசியிடம் பேசிய ஓய்வுபெற்ற ஜெனரல் அலி குலி கான், மார்ச் 26இல் கிளர்ச்சி தொடங்கிய பிறகு, முக்தி வாஹினி பல இடங்களைக் கைப்பற்றியதாகக் கூறினார். அந்த நேரத்தில் டாக்காவில் ஒரேயொரு விமான நிலையம் மட்டுமே இருந்தது. அலி குலி கானின் கூற்றுப்படி, டிசம்பர் 3ஆம் தேதி இரவு, இந்திய விமானப் படை போர் தொடங்கிய முதல் நாளிலேயே சுமார் 130 முறை டாக்காவை தாக்கியது. "இந்திய விமானப் படை விமான நிலையத்தைத் தகர்த்தது. இதன் பிறகு, பாகிஸ்தான் விமானப் படை விமானங்களால் அங்கிருந்து புறப்பட முடியவில்லை. ஆனால் பாகிஸ்தான் ராணுவத்தின் 4வது விமானப் படையின் ஹெலிகாப்டர்கள் மட்டும் எஞ்சியிருந்தன" என்று குலி கான் விளக்குகிறார். டாக்கா வான்வெளி முழுவதும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் பட மூலாதாரம்,HISTORY OF PAKISTAN ARMY AVIATION இந்திய விமானப்படை மீது இருந்த பயத்தின் காரணமாக, பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர்கள் பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே பறந்தன. பாகிஸ்தானிய விமானிகள் சில நேரங்களில் உணவுப் பொருட்களையும், சில நேரங்களில் வெடிமருந்துகளையும் ஏற்றிச் சென்றனர். ஆனால், இந்த விமானங்கள் அனைத்தும் இரவின் இருட்டில் மட்டுமே இயக்கப்பட்டன. டாக்காவின் வான்வெளி முழுவதும் இந்தியாவின் ஆதிக்கத்தில் இருந்தது. தரையிறங்கும்போது தங்களது சொந்தப் படைகளை சந்திப்போமா அல்லது எதிரிப் படைகளை சந்திப்போமா என்ற நிச்சயமற்ற நிலையிலேயே விமானிகள் இருந்தனர். ஹிஸ்டரி ஆஃப் பாகிஸ்தான் ஏவியேஷன் 1947 to 2007 என்ற புத்தகத்தில், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் முகமது ஆசம், ஓய்வுபெற்ற மேஜர் அமீர் முஷ்டாக் சீமா ஆகியோர், 'சரியான வழிகாட்டும் கருவிகள் மற்றும் உபகரணங்கள் இல்லாமல், இருட்டில் மிகக் குறைந்த உயரத்தில் பறப்பது மிகவும் ஆபத்தானது' என்று குறிப்பிட்டுள்ளனர். பட மூலாதாரம்,HISTORY OF PAKISTAN ARMY AVIATION படக்குறிப்பு,பாகிஸ்தானின் 4வது விமானப் படையின் விமானிகள் தப்பிக்கும் திட்டம் அலி குலி கானின் கூற்றுப்படி, "எங்கள் கமாண்டிங் அதிகாரி டிசம்பர் 15 மாலை கிழக்கு மண்டல கட்டுப்பாட்டுப் பிரிவு தலைமையகத்திற்கு வந்தபோது, ஜெனரல் நியாசி டிசம்பர் 16 அன்று சரணடைய முடிவு செய்துள்ளதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. கிழக்கு மண்டல கட்டுப்பாட்டுப் பிரிவு தலைமைத் தளபதி பிரிகேடியர் பக்கீர் சித்திக், சரணடைவதற்கான உத்தரவுகளை வழங்கினார். மேலும் பீரங்கிகள், டாங்கிகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட அனைத்து கனரக உபகரணங்களையும் அழிக்குமாறும் அவர் உத்தரவிட்டார்." "இதைக் கேட்ட எங்கள் கமாண்டிங் அதிகாரி, சரணடைந்து ஹெலிகாப்டர்களை அழிப்பதற்குப் பதிலாக, நாம் இங்கிருந்து வெளியேறிவிடலாம் என்று கூறினார்." அந்த நேரத்தில் அங்கிருந்து தப்பிக்க இரண்டு வழிகள் இருந்தன என்கிறார் அலி குலி கான். "ஒரு வழி பர்மாவில் உள்ள அக்யாப் பகுதி. இது சிட்டகாங்கிற்கு தெற்கே அமைந்திருந்தது. பாகிஸ்தானிய விமானிகளால் அங்கு பறந்து செல்ல முடியும். மற்றொரு வழி நேபாளம்." ஆனால், ''அக்யாப் செல்வதே சிறந்ததாகக் கருதப்பட்டது.'' தற்போது 'சிட்வே' என்று அழைக்கப்படும் அக்யாப், மியான்மரில் ரக்கைன் மாகாணத்தின் தலைநகராகும். அலி குலி கானின் கூற்றுப்படி, ''ஆயுதங்களைக் கீழே போடக்கூடாது, ஹெலிகாப்டர்களை பர்மாவுக்கு எடுத்துச் செல்வோம்'' என்ற முடிவு எடுக்கப்பட்டது. பட மூலாதாரம்,HISTORY OF PAKISTAN ARMY AVIATION படக்குறிப்பு,லெப்டினன்ட் கர்னல் சையத் லியாகத் புகாரி தப்பிச் சென்ற செய்தி காட்டுத்தீ போல பரவியது கூடுதல் எரிபொருளுடன், எம்ஐ-8 ஹெலிகாப்டரால் சுமார் 24 பேரை ஏற்றிச் செல்ல முடியும், அதே நேரம் அலூவேட்-3 ஹெலிகாப்டர் ஆயுதங்களுடன் மூன்று முதல் நான்கு பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும். ஆனால், அந்த நேரத்தில் படைப்பிரிவின் அனைத்து ஹெலிகாப்டர்களும் டாக்கா கன்டோன்மென்ட்டின் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டிருந்ததுதான் பெரிய சிக்கலாக இருந்தது. அலி குலி கானின் கூற்றுப்படி, அவருக்குத் தனது ஹெலிகாப்டரை தயார் செய்யுமாறு உத்தரவிடப்பட்டது, மேலும் அவரிடம், "நீங்கள் ஹெலிகாப்டரை தயார் செய்யுங்கள், பயணிகள் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம்" என்று கூறப்பட்டது. சையத் லியாகத் புகாரி, ஹிஸ்டரி ஆஃப் பாகிஸ்தான் ஏவியேஷனுக்கு அளித்த நேர்காணலில், 1971 டிசம்பர் 16 அன்று அதிகாலை 3 மணி முதல் 3:35 மணிக்குள் விமானிகளுக்குப் புறப்படுமாறு அறிவுறுத்தப்பட்டது என்று தெரிவித்தார். ஒவ்வொரு ஹெலிகாப்டரும் ஐந்து நிமிட இடைவெளியில் புறப்பட வேண்டும் என்ற உத்தரவு கிடைத்தது. பீவர் ஹெலிகாப்டர்களுக்கு பிறகு எம்ஐ-8 ஹெலிகாப்டர்கள் புறப்பட வேண்டும், மேலும் கூடுதல் எரிபொருள் கொண்ட அலூவேட்-3 ஹெலிகாப்டர்கள் மெதுவாகப் பறக்க வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டது. கமாண்டிங் அதிகாரி லியாகத் புகாரி முதல் ஹெலிகாப்டரை இயக்கவிருந்தார். ஆனால் புறப்படுவதற்கு முன்பே, அவர்கள் தப்பிக்கப் போகும் செய்தி காட்டுத்தீ போலப் பரவி, இருநூறு அல்லது முந்நூறு பேர் அங்கு கூடியிருந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஒவ்வொருவருக்கும் ஹெலிகாப்டரில் ஏறிவிட வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. இறுதியாக அந்த ஹெலிகாப்டர் 40 பயணிகளுடன் புறப்பட்டது. லெப்டினன்ட் கர்னல் அதிஃப் ஆல்வி அப்போது ஏழு வயது சிறுவனாக இருந்தார். அவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் முகமது ஆசம், ஓய்வுபெற்ற மேஜர் அமீர் முஷ்டாக் சீமா ஆகியோரிடம் கூறுகையில், "நாங்கள் ஆறு சகோதரர்கள். நள்ளிரவில் என் தந்தை அவசரமாக வந்து என் தாயிடம் பொருட்களை பேக் செய்யச் சொன்னார். நான் என் கிரிக்கெட் பேட்டை எடுத்துக் கொண்டேன். பிறகு நாங்கள் ஒரு ஜீப்பில் ஒரு பள்ளிக்கு வந்தோம். அங்குவொரு பெரிய ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டிருந்தது, மக்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். அங்கு இடமே இல்லை. என் தந்தை எங்களை அங்கிருந்து வேறோர் இடத்திற்கு அழைத்துச் சென்றார், அங்கு எங்களுக்கு ஹெலிகாப்டரில் இடம் கிடைத்தது. ஆனால் என் தந்தை அங்கேயே தங்கிவிட்டார்," என்றார். கடினமான பயணம் பட மூலாதாரம்,HISTORY OF PAKISTAN ARMY AVIATION படக்குறிப்பு,பாகிஸ்தான் விமானிகள் பர்மா வந்தடைந்தனர். இந்திய விமானப்படை வான்வெளியை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆனால் பாகிஸ்தான் விமானிகள், சிட்டகாங் கடற்கரையோரம் வடக்கே மிகக் குறைந்த உயரத்தில் பறந்து அக்யாப் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். கடைசி எம்ஐ-8 ஹெலிகாப்டரை மேஜர் மன்சூர் கமல் பாஜ்வா இயக்கினார். அவர் 'ஹிஸ்டரி ஆஃப் பாகிஸ்தான் ஏவியேஷனுக்கு' அளித்த பேட்டியில், அன்றிரவு "வானம் முழுவதும் மேகங்களால் சூழப்பட்டிருந்தது, இது விமானிகளுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது" என்று கூறினார். இந்த ஹெலிகாப்டர்கள் அக்யாப் வந்தடையும்போது விடியற்காலை ஆகிவிட்டது. "நாங்கள் அக்யாப் விமான நிலையத்தைக் கண்டதும், கடலை நோக்கித் திரும்பி எங்களிடம் இருந்த தனிப்பட்ட ஆயுதங்கள், கேமராக்கள், அடையாள ஆவணங்கள், லாக் புக் மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்ட அனைத்து ராணுவ உபகரணங்களையும் கடலில் வீசினோம். அதன் பிறகே நாங்கள் திரும்பி வந்து தரையிறங்கினோம்" என்கிறார் அலி குலி கான். முன்னதாக, அவர் தனது ஹெலிகாப்டரில் இருந்த பாகிஸ்தான் ராணுவத்தின் அடையாளங்களை அழித்திருந்தார். அலி குலி கானின் ஹெலிகாப்டர் தான் அக்யாப் நகருக்குள் முதலில் சென்றடைந்தது. "நாங்கள் தரையிறங்கியவுடன், நான் ஹெலிகாப்டரை விட்டு வெளியே வந்தபோது, ஒரு பர்மா சிப்பாய் ஓடி வந்து என்னிடம் உருது மொழியில், 'நீங்கள் பாகிஸ்தானியா?' என்று கேட்டார். நான் 'ஆம்' என்றேன். அவர், 'நீங்கள் ராணுவ வீரரா?' என்று கேட்டார். நான் 'இல்லை, இல்லை, நாங்கள் வெள்ளத் தடுப்புப் பணியாளர்கள்' என்றேன். பிறகு அவர், 'நீங்கள் இஸ்லாமியரா?' என்று கேட்டார். நான் 'ஆம்' என்றதும், அவர் உடனடியாகத் தனது கையை நீட்டி, 'நானும் ஒரு முஸ்லிம்தான், என் பெயர் முஸ்தபா கமல்' என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்" என்று அலி குலி கான் கூறுகிறார். விரைவிலேயே, மற்ற ஹெலிகாப்டர்களும் வரத் தொடங்கின. அவற்றில் பெரும்பாலானவை பெண்கள், குழந்தைகள், வீரர்கள், விமானிகள் மற்றும் மெக்கானிக்குகளை ஏற்றிச் சென்றன. மொத்தம் ஏழு ஹெலிகாப்டர்களில் சுமார் 170 பேர் பர்மா சென்றடைந்தனர். பட மூலாதாரம்,HISTORY OF PAKISTAN ARMY AVIATION படக்குறிப்பு,ஹெலிகாப்டர்கள் அடையாளம் தெரியாமல் இருக்க ஏற்கெனவே வெள்ளை வண்ணம் தீட்டப்பட்டிருந்தன. பர்மாவில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர்கள் மறுநாள், ஒரு விமானம் வந்து அந்தப் பெண்களையும் குழந்தைகளையும் ரங்கூனுக்கு அழைத்துச் சென்றது. அங்கிருந்து ஒரு விமானம் அவர்களை பாகிஸ்தானுக்கு ஏற்றிச் சென்றது. விமானிகளும் மற்ற வீரர்களும் சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்தனர். பின்னர், ஒவ்வொரு விமானியுடனும் ஒரு துப்பாக்கி ஏந்திய வீரர் அனுப்பப்பட்டு, அவர்கள் மைதிலா விமானப் படை தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து ஒரு விமானம் அவர்களை ரங்கூனுக்கு அழைத்துச் சென்றது. அவர்கள் அங்கு சுமார் மூன்று வாரங்கள் தங்கியிருந்தனர். பிறகு ஒரு நாள், ஒரு பாகிஸ்தான் விமானம் ரங்கூனில் தரையிறங்கி அவர்களை மேற்கு பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்லும் என்று கூறப்பட்டது. அதன்படி, சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு அவர்கள் பாகிஸ்தானை சென்றடைந்தனர். ஹெலிகாப்டர்கள் அனைத்தையும் அவர்கள் பர்மாவிலேயே விட்டுச் சென்றனர். பாகிஸ்தான் வந்து சேர்ந்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பிறகு, அவர்கள் மீண்டும் பர்மாவுக்கு சென்று அந்த விமானங்களைத் திரும்பக் கொண்டு வருமாறு உத்தரவிடப்பட்டது. அந்த ஹெலிகாப்டர்கள் பர்மாவில் இருந்து பாங்காக் கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்து, 1972ஆம் ஆண்டு ஜனவரி 23 அன்று, அவை படகுகளில் ஏற்றப்பட்டு கடல் வழியாக கராச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy071kpwee5o
1 week 3 days ago
தென் அமெரிக்க நாடுகளுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒத்திவைப்பு 19 Dec, 2025 | 10:47 AM தென் அமெரிக்க நாடுகளுடன் மேற்கொள்ளப்படவிருந்த மிகப்பெரிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (EU–Mercosur) ஐரோப்பிய ஒன்றியம் (ஈயூ) ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈயூ விவசாயிகளின் கடும் எதிர்ப்பும், பிரான்ஸ் மற்றும் இத்தாலி முன்வைத்த கடைசி நேர எதிர்ப்பும் இந்த முடிவுக்கு காரணமாக அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக பிரஸல்ஸில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் உழவு இயந்திரத்துடன் வீதிகளை மறித்து பட்டாசுகள் மற்றும் டயர்களை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈயூ–மெர்கோசூர் வர்த்தக ஒப்பந்தம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் தான் கையெழுத்தாகும் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைமை பேச்சாளர் பவுலா பின்யோ வியாழக்கிழமை (18) உறுதிப்படுத்தினார். சுமார் 25 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த இந்த ஒப்பந்தம் மீண்டும் தாமதமடைந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் பிரேசிலுக்கு பயணம் செய்யவிருந்தார். ஆனால், ஈயூ உறுப்புநாடுகளில் பெரும்பான்மையான ஆதரவு கிடைக்காததால் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. பிரஸல்ஸில் நடைபெற்ற ஈயூ உச்சி மாநாட்டின் போது, வான் டெர் லெயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோருக்கு இடையில் ஜனவரி மாதம் ஒப்பந்தத்திற்கு ஆதரவு அளிக்கும் நிபந்தனையுடன் ஒத்திவைப்புக்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன், விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி, மேலும் சலுகைகள் மற்றும் கூடுதல் பேச்சுவார்த்தைகள் தேவை எனக் கூறி ஒப்பந்தத்தை தள்ளிவைக்க வலியுறுத்தினார். இத்தாலி, போலந்து, பெல்ஜியம், ஆஸ்திரியா, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளுடன் இது தொடர்பாக ஆலோசித்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் உலகின் மிகப்பெரிய சுதந்திர வர்த்தக மண்டலத்தை உருவாக்கும் என்பதுடன், வாகனங்கள், இயந்திரங்கள், மதுபானங்கள் உள்ளிட்ட ஈயூ தயாரிப்புகளின் லத்தீன் அமெரிக்க ஏற்றுமதியை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/233796