Aggregator
உக்ரைனில் மேலும் நிலப்பரப்பு கைப்பற்றப்படும்: புடின் எச்சரிக்கை
உக்ரைனில் மேலும் நிலப்பரப்பு கைப்பற்றப்படும்: புடின் எச்சரிக்கை
Nishanthan SubramaniyamDecember 18, 2025 11:55 am 0

உக்ரைன் அமைதிப் பேச்சு தோல்வி அடைந்தால், உக்ரைனில் மேலும் கூடுதலான நிலப்பரப்பை ரஷ்யா கைப்பற்றும் என ஜனாதிபதி புடின் எச்சரித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
ஆனால் தீர்வு இல்லாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது. எனவே, ‘நேட்டோ’ கூட்டமைப்பில் உக்ரைனை இணைக்க வேண்டும் என்ற தங்கள் நீண்டகால கோரிக்கையை கைவிட தயாராக இருப்பதாக, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறியிருந்தார்.
இந்த சூழலில், வருடாந்திர கூட்டத்தில் இராணுவ தளபதிகள் மத்தியில் புடின் நேற்று உரையாற்றிய போது,
அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்க தவறினால், உக்ரைனில் தனது பிராந்தியக் கட்டுப்பாட்டை விரிவுபடுத்த ரஷ்யா நடவடிக்கை எடுக்கக்கூடும். மேலும் கூடுதலான நிலப்பரப்பை கைப்பற்றுவோம்.
ராஜதந்திர முயற்சிகள் தடைபட்டால், ரஷ்யா ராணுவ பலத்தை நம்ப தயாராக உள்ளது.
பேச்சுவார்த்தைகள் மூலம் மோதலை தீர்ப்பதை ரஷ்யா விரும்புகிறது. ராஜதந்திரம் வாயிலாக போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா பாடுபடும் என குறிப்பிட்டுள்ளார்.
https://oruvan.com/more-territory-will-be-seized-in-ukraine-putin-warns/
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி மாயம்
மக்களின் செயற்பாட்டில் அதிருப்தி : 8 மாவட்டங்களில் டெங்கு பரவும் அபாயம் !
மக்களின் செயற்பாட்டில் அதிருப்தி : 8 மாவட்டங்களில் டெங்கு பரவும் அபாயம் !
மக்களின் செயற்பாட்டில் அதிருப்தி : 8 மாவட்டங்களில் டெங்கு பரவும் அபாயம் !
18 Dec, 2025 | 11:17 AM
![]()
நாட்டில் 8 மாவட்டங்களில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகமாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
டெங்கு பரவலைக் குறைப்பதற்கான பொதுமக்களின் ஒத்துழைப்பு குறைவாக இருப்பதே நோய் அதிகரிப்பதற்கு காரணமென சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித சுமனசேன தெரிவித்துள்ளார்.
பல மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் டெங்குவை உருவாக்கும் நுளம்பு குடம்பிகளின் பரவல் அதிகரித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றி சுத்தம் செய்வதில் பொதுமக்களின் ஆர்வம் குறைந்துள்ளதாகவும் சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித சுமனசேன குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் டெங்கு நுளம்புகளின் அபாயம் அதிகரித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சில மாவட்டங்களில், நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை சுத்தம் செய்யுமாறு குடியிருப்பாளர்களுக்கு
அறிவிக்கப்பட்டதாகவும், இதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் போது, சுமார் 25-30 சதவீதம் பேர் இதில் ஆர்வம் காட்டவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், டெங்கு நோயை கட்டுப்படுத்த மக்களிடையே ஆர்வம் இல்லாத காரணத்தினால், ஜனவரி முதல் வாரத்தில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் சுகாதார மருத்துவ அதிகாரிகள் , சுகாதார ஊழியர்கள் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதற்கு பொது மக்களின் பங்களிப்பு வேண்டும் எனவும் சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித சுமனசேன மேலும் தெரிவித்துள்ளார்.
டியாகோ கார்சியா தீவில் இலங்கை தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதம் - பிரித்தானிய நீதிமன்றம் மீண்டும் அதிரடி!
டியாகோ கார்சியா தீவில் இலங்கை தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதம் - பிரித்தானிய நீதிமன்றம் மீண்டும் அதிரடி!
டியாகோ கார்சியா தீவில் இலங்கை தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதம் - பிரித்தானிய நீதிமன்றம் மீண்டும் அதிரடி!
18 December 2025

இந்திய பெருங்கடலின் டியாகோ கார்சியா (Diego Garcia) தீவில் இலங்கைத் தமிழர்களை இங்கிலாந்து, சில ஆண்டுகளுக்கு முன்னர் சட்டவிரோதமாக தடுத்து வைத்தமை தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை ஆட்சேபித்து, பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஆணையாளரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு, லண்டன் நீதிபதிகளால் நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆணையாளரின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டத்தை வரவேற்பதாக பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணிகள் வரவேற்றுள்ளனர்.
குறித்த தீவில் தமிழர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டமையால், இங்கிலாந்தில் வரி செலுத்துவோருக்கான செலவு கணிசமாக அதிகரித்துள்ளமையையும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.
முன்னதாக உலகின் மிகத் தொலைதூரத் தீவுகளில் ஒன்றில், அதிகளவான புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டனர் என்பதை நீதிமன்ற நீதிபதிகள் உறுதி செய்தனர்.
எனினும், குறித்த தீர்ப்பை ஆட்சேபித்து, தீவுக்கான ஆணையாளரால் மேன்முறையீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், அவரது மேன்முறையீட்டின் நான்கு காரணங்களும் நீதிபதிகளால் நிராகரிக்கப்பட்டன.
அதன்படி, கடந்த ஆண்டு வழங்கப்பட்ட சட்டவிரோத தடுப்புக்காவல் என்ற தீர்ப்பு தற்போது உறுதி செய்யப்பட்ட நிலையில், 60இற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களை நீண்ட காலத்திற்கு சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமைக்காக, பிரித்தானிய அரசாங்கம் மில்லியன் கணக்கான பவுண்டுகளை இழப்பீடாக செலுத்த நேரிடும் என, பிரித்தானிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
யாழ். பழைய பூங்காவில் கட்டுமானங்களுக்கு தடை - மாநகர சபையில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றம்
யாழ். பழைய பூங்காவில் கட்டுமானங்களுக்கு தடை - மாநகர சபையில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றம்
யாழ். பழைய பூங்காவில் கட்டுமானங்களுக்கு தடை - மாநகர சபையில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றம்
18 December 2025

யாழ்ப்பாணம் பழைய பூங்கா அமைந்துள்ள பகுதியில் எந்தவிதமான கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என யாழ்ப்பாணம் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு மாநகரசபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பிரதி முதல்வர் இ.தயாளனால் குறித்த பிரேரணை முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த பிரேரணைக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ தாங்கள் செயற்படப்போவதில்லை என்ற கருத்தை முன்வைத்து, தேசிய மக்கள் சக்தியின் 10 உறுப்பினர்களும் சபையிலிருந்து வெளியேறியிருந்தனர்.
தொடர்ந்து சபையில் உரையாற்றிய பிரதி முதல்வர், சிங்கள மகாவித்தியாலயத்தில் உள்ள இராணுவத்தை வெளியேற்றி அதில் உள்ளக விளையாட்டு அரங்கை அமைக்கலாம் என யோசனை ஒன்றையும் முன்வைத்தார்.
குறித்த யோசனையை சபையிலிருந்த அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.
பிள்ளையானின் நெருங்கிய சகா கைது
பிள்ளையானின் நெருங்கிய சகா கைது
பிள்ளையானின் நெருங்கிய சகா கைது

கனகராசா சரவணன்
சி ஐ டி யினரால் தேடப்பட்டு வந்த போது குவைத் நாட்டிற்கு தப்பி ஓடி தலைமறைவாகி இருந்துவிட்டு மீண்டும் நாட்டிற்கு திரும்பி வந்து நான்கு நாட்களின் பின்னர் பிள்ளையானின் சகாவான அஜித் என்பவரை மட்டக்களப்பு கொண்டையங்கேணியில் உள்ள அவரது வீட்டில் வைத்து புதன்கிழமை (17) கொழும்பில் இருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் (சிஜடி) கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ம் திகதி கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு (சிஜடி) யினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கடந்த ஏப்ரல் 8ம் திகதி (4-8-2025) கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டிருக்கும் பிள்ளையானிடம் மேற்கொண்டுவரும் விசாரணையின் அடிப்படையில் அந்த கட்சியை சார்ந்தவர்கள் மற்றும் பிள்ளையானின் சகாக்கள் பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணை இடம்பெற்று வருகின்றது.
இதனடிப்படையில் பிள்ளையான் சகாவான அஜித் என அழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை சுமன் என்பவரை சிஜடி யினர் தேடி வந்துள்ள நிலையில் அவர் குவைத் நாட்டிற்கு தப்பி ஓடி தலைமறைவாகி இருந்து வந்துள்ள அவர் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மீண்டும் திரும்பி நாட்டிற்கு வந்துள்ள நிலையில் சம்பவ தினமான புதன்கிழமை காலையில் அவரது வீட்டிற்கு கொழும்பில் இருந்து சென்ற சிஐடியினர் அவரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
https://www.tamilmirror.lk/செய்திகள்/பிள்ளையானின்-நெருங்கிய-சகா-கைது/175-369698
உடைந்த நாயாறு பாலம் புனரமைப்பு
உடைந்த நாயாறு பாலம் புனரமைப்பு
உடைந்த நாயாறு பாலம் புனரமைப்பு



சமீபத்தில் ஏற்பட்ட டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் முற்றாக உடைந்த முல்லைத்தீவு நாயாறு பிரதான பாலத்தை, இராணுவ பொறியாளர்கள் புனரமைத்து, பிரதேசத்தின் அத்தியாவசிய போக்குவரத்து இணைப்பை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளனர்.
பாலம் இடிந்து விழுந்ததையடுத்து முல்லைத்தீவு-வெலியோயா, முல்லைத்தீவு-திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு-கொக்கிலாய் உள்ளிட்ட முக்கிய பாதைகளில் வாகனப் போக்குவரத்து தடைபட்டு, பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டதுடன், பல கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து அவசர நடவடிக்கையாக, கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் இராணுவ பொறியாளர் படையினர் உடனடி பழுதுபார்ப்பு மற்றும் பாலம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.
120 அடி நீளமுடைய, 12 பேகள் கொண்ட, இரு வழி போக்குவரத்திற்கான ‘Compact 100’ கனரக பாலம் அமைக்கப்பட்டு, மக்களின் பாதுகாப்பான போக்குவரத்திற்காக பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் துரிதமான பங்களிப்பினால், நாட்டின் வட பிராந்தியத்திலுள்ள இந்தப் பகுதியில் மீண்டும் போக்குவரத்து இயல்புநிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.tamilmirror.lk/செய்திகள்/உடைந்த-நாயாறு-பாலம்-புனரமைப்பு/175-369735
எவ்வேளையிலும் தலைமைப் பதவியிலிருந்து விலகத் தயார்! - ரணில் விக்ரமசிங்க
எவ்வேளையிலும் தலைமைப் பதவியிலிருந்து விலகத் தயார்! - ரணில் விக்ரமசிங்க
எவ்வேளையிலும் தலைமைப் பதவியிலிருந்து விலகத் தயார்!
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் இணைப்புக்கு தடையாக மாறினால், எந்த நேரத்திலும் தாம் கட்சித் தலைமையிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக கொழும்பு தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க . நேற்று (17) இடம்பெற்ற கட்சி செயற்குழு கூட்டத்தில் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு நேற்று பிற்பகல் பிட்டகோட்டேயில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் கூடியது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஒத்துழைப்பு பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதற்காக பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, பொதுச் செயலாளர் தலதா அதுகோரல மற்றும் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க ஆகியோர் அடங்கிய குழுவை ஐக்கிய தேசியக் கட்சி நியமித்துள்ளது, அதே நேரம் ஐக்கிய மக்கள் சக்தி விவகாரங்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கையாண்டு வருகிறார்.
அந்தக் கலந்துரையாடல்களின் முன்னேற்றம் குறித்த அதிகாரபூர்வ அறிக்கை இன்னும் தனக்கு கிடைக்கவில்லை என்றும், தொடர்புடைய கலந்துரையாடல்களை மிக விரைவில் முடிக்க வேண்டும் என்றும், இனி அவற்றை இழுத்தடிக்க நேரமில்லை என்றும் ரணில் விக்ரமசிங்க செயற்குழுவிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அடுத்த ஆண்டு முதல் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு எதிராக ஒரு வலுவான மக்கள் சக்தியைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதால் மேற்கண்ட விடயங்களை விரைவுபடுத்த வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அந்த விவாதங்களின் போது ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைய வேண்டும் என்று ஒரு உடன்பாடு எட்டப்பட்டால், அதனை ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு விரும்பினால், அது தனக்கு ஒரு பிரச்சினையாக இருக்காது என்று இங்கு குறிப்பிட்ட ரணில் , ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைய வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் ரணில் தலைமைப் பதவியில் இருந்து விலகி சஜித் அல்லது வேறு ஒருவருக்கு தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என்ற முன்மொழிவு முன்வைக்கப்பட்டால், எந்த நேரத்திலும் கட்சித் தலைமைப் பதவியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் இங்கு கூறினார். “நான் நீண்ட காலமாக கட்சித் தலைவராக இருந்து வருகிறேன்.
நாட்டின் ஜனாதிபதியானேன். நான் மிக உயர்ந்த நிலையை அடைந்துவிட்டேன். மேலும், நாடு ஒரு கடினமான தருணத்தில் இருந்தபோது, நான் பொறுப்பேற்றுக் கொண்டு நாட்டை முன்னேற்ற நடவடிக்கை எடுத்தேன்.
எனவே, இந்த இராஜினாமாவில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் இது விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.