Aggregator

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடையும் சாத்தியம்!

1 week 3 days ago

25 Oct, 2025 | 03:07 PM

image

வங்காள விரிகுடா கடல் பகுதி மற்றும் நாட்டின் கிழக்கு ஆழமற்ற கடல் பகுதிகளில் பலத்த காற்று, கனமழை மற்றும் கடல் கொந்தளிப்பானதாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்த எச்சரிக்கை  12.00 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு இது செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது. 

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (26)  க்குள் ஒரு ஆழமான காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, ஞாயிற்றுக்கிழமை (27) காலை தென்மேற்கு மற்றும் அதை அண்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் ஒரு சூறாவளி புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு, அடுத்த 48 மணி நேரத்தில் ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது.

இதன் காணரமாக 05N-15N மற்றும் 80E-95E எல்லைக்குட்பட்ட ஆழ்கடல் பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரும் வரை கடற்படையினர் மற்றும் மீனவர்கள்  செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடல் பகுதிகளில் செயல்படும் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு  செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதேவேளை, காங்கேசன்துறை முதல் திருகோணமலை வழியாக மட்டக்களப்பு வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள ஆழமற்ற கடல் பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரும் வரை செல்ல வேண்டாம் என்றும் கடற்படையினர் மற்றும் மீனவர்களுக்கு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள ஆழமற்ற கடல் பகுதிகளில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்படையினர்  மற்றும் மீனவர்கள்  இந்த விடயம் தொடர்பில்  விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Sea-advisory.jpg

sea-advsiory-2.jpg

https://www.virakesari.lk/article/228638

புலர் அறக்கட்டளையின் செயற்பாடுகள் தொடர்பான காணொளிகள்

1 week 3 days ago
செல்லத்துரை தவமணி அம்மையாரின் 31ஆம் நாள் ஞாபகார்த்தமாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது 25/10/25. சங்கானையை பிறப்பிடமாகவும் சுழிபுரம் கிழக்கு மற்றும் பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் செல்லத்துரை தவமணி அம்மையாரின் 31 ஆம் நாள் ஞாபகார்த்தமாக மகன் திரு செல்லத்துரை செல்வநேசன் அவர்கள் 30000 ரூபாவிற்கு இயலாமையுடைய 14 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேருக்கு அரிசி, பருப்பு, சோயாமீற் என்பவற்றை வழங்கி உதவியுள்ளார். திரு செல்லத்துரை செல்வநேசன் அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் எமது புலர் அறக்கட்டளை சார்பாகவும் விசேடதேவையுடைய பிள்ளைகளின் குடும்பங்கள் சார்பாகவும் எமது உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கிறோம். இப்பணிகளைச் செய்ய இணைப்பாளராக செயற்பட்ட திருமதி நவறஞ்சினி குமார்(பிள்ளை அக்கா) அவர்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம். பொருட்களை வழங்கிய முதியோர் சங்கத் தலைவர் திரு சிவரஞ்சன் அவர்களுக்கும் முதியோர் சங்க கட்டடத்தை பயன்படுத்த அனுமதி வழங்கிய முதியோர் சங்க நிர்வாகிகளுக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம். கலந்து கொண்ட நிர்வாகிகள் பொருட்களை வாங்கித் தந்த மதிகிருஸ்ணா லாண்ட்மாஸ்ரரில் எடுத்து வந்து உதவிய யது ஆகியோருக்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும். நன்றி வணக்கம். ஒளிப்பதிவு திரு இ.பரணீதரன்.

நா,வா – வின் புரட்டுகளும் அருந்ததியர் வரலாறும்

1 week 3 days ago
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே…. யாரும் பேசத் துணியாத விஷயத்தை முதலில் பேசத் துணிந்தவர் மதிவண்ணன் என்றுதான் சொல்லவேண்டும். . தமிழகத்தில் ஒடுக்கப்பட்டோரிலேயே ஒடுக்கப்பட்டோராய் இருக்கிற அருந்ததிய மக்களுக்கான உள் ஒதுக்கீடு இன்றைக்கு நடைமுறைக்கு வந்திருக்கிறது என்று சொன்னால் அதில் எழுத்தாளர் மதிவண்ணன் அவர்களது பங்களிப்பும் மிக முக்கியமான ஒன்று. . ”ஒரு சின்ன நூல் வெளியீடு…. ஈரோடு வரமுடியுமா?” எனக் கேட்டதும் உடனே சரியென்று தலையாட்டினேன். . ஆனால் அச்சிறு நூலைப் பார்த்ததும் எனக்கு ஏனோ அடிவயிற்றைப் புரட்டியது. அதில் மதிவண்ணன் சாடோ சாடென்று சாடியிருந்த மனிதரோ தமிழகத்தின் ஆகப் பெரிய ஆளுமை. ஆய்வுத்தளத்தில் அவருக்கென்று ஒரு தனி இடமுண்டு. . அவர்தான் : பேராசிரியர் நா. வானமாமலை. . அவரது “தமிழர் நாட்டுப் பாடல்கள்” என்கிற நூலில் அருந்ததிய மக்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக எந்தெந்த இடங்களில் எல்லாம் எழுதியிருக்கிறார் என்று துல்லியமாக கோடிட்டுக் காட்டி குமுறி இருந்தார் மதிவண்ணன். எல்லாமே ஆணித்தரமான தரவுகள். . ஆங்கிலேயருக்கு எதிரான போரில் கட்டபொம்மனுக்கு துணை நின்றவர்களில் அருந்ததியர் சமூகத்துக்கும் மள்ளர் சமூகத்துக்கும் பெரும் பங்கு உண்டு. . ஆனால் பேராசிரியர் நா.வானமாமலை தொகுத்த கட்டபொம்மன் கதைப் பாடல்களில் அவர்களது வீரஞ்செறிந்த போராட்டம் குறித்தும், தியாகம் குறித்தும் ஒரு வரிகூட முன்னுரையில் குறிப்பிடாது தவிர்த்தது எந்த வகையில் நியாயம்? என ஆதங்கம் மிக்க கேள்விகளையும் எழுப்பி இருந்தார் மதிவண்ணன். . இக்கேள்விகளையும் குமுறல்களையும் உள்ளடக்கி மதிவண்ணன் எழுதிய அச்சிறு புத்தகம்தான் “நா,வா – வின் புரட்டுகளும் அருந்ததியர் வரலாறும்”. . போதாக்குறைக்கு ஏன் இந்த இடதுசாரி சிந்தனையாளர்களுக்கு சில விஷயங்களில் மண்டையில் மசாலாவே இருப்பதில்லை என்கிற கோபமும் வேறு. . நான் அறிஞனுமில்லை. ஆய்வாளனுமில்லை. எதிலும் நுனிப்புல் மேயும் ரகம். . ஆனால் ”கூட்டணி தர்மம்” மாதிரி… கூட்ட ”தர்மம்” என்று ஒன்றிருக்கிறதே…. . அதற்காக…. ஏற்கெனவே அறிந்தது கொஞ்சம்…. இதற்கென தேடி வாசித்தது கொஞ்சம்… சித்தானை போன்ற சில ஆய்வாள நண்பர்களிடம் விவாதித்து தெரிந்து கொண்டது கொஞ்சம்…. என ஒப்பேத்திக் கொண்டு நிகழ்ச்சிக்குக் கிளம்பியபோதுதான் ஒன்று உறைத்தது…… . அட…. இந்த இந்திய இடதுசாரிகளுக்கு சில அல்ல… பல விஷயங்களிலும் மண்டையில் மசாலா கிடையாதே என்பதுதான் அது. . பேராசிரியர் நா.வா தொடங்கி அவரது தொண்டரடிப் பொடியாழ்வார்கள் வரைக்கும் இருந்த / இருக்கும் ஒரே பெருவியாதி திராவிட இயக்க ஒவ்வாமைதான். . பேராசிரியரோ…. அவரை ஒட்டி அடுத்து வந்த ஆய்வாளர்களோ பெரியார் எனும் அந்த அசாத்திய ஆளுமையைப் புரிந்து கொள்வதற்குள் அநேகருடைய ஆயுள்காலம் முடிந்து போயிற்று என்பதுதான் உண்மை. . இவ்வறியாமை இந்திய ஆய்வாளர்களோடு மட்டும் முற்றுப் பெற்று விடவில்லை. ஈழத்து கைலாசபதி, கா.சிவத்தம்பி வரையிலும் தொடர்ந்தது. . ஈழத்தில் ஏறக்குறைய ”பெரியார்” என்கிற வார்த்தையே இருட்டடிப்பு செய்யப்பட்டது அங்குள்ள அறிவுசீவிகளாலும் இடதுசாரிகளாலும்.. . நமது வரலாறே மறக்கப்பட்டதும் மறைக்கப்பட்டதுமான வரலாறுதானே? . ஆனால் நாமே மறந்த தடயங்கள்…. அதன்பொருட்டு இன்றும் நம்மைச் சூழ்ந்திருக்கும் அவலங்கள் ஏராளம். (அதை வேறொரு தருணத்தில் விரிவாகப் பேசுவோம்.) . மறைக்கப்பட்ட அந்தத் தடயங்களைத் தேடும் முயற்சிகளில் ஒன்றுதான் இந்தக் கட்டுரையும். சரி… நாம் மீண்டும் பேராசிரியர் நா. வானமாமலைக்கே வருவோம். . அவரது எண்ணற்ற நூல்களில் ஒன்றுதான் “தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்.” . சித்தர்கள் காலம் தொடங்கி சேர சோழ பாண்டியர் காலம் வரை தமிழகத்தில் சாதியத்துக்கு எதிரான சமர்கள் எத்தனையெத்தனை நடந்துள்ளன என்பதை விரிவாகவும் விரைவாகவும் சொல்லுகிறது 1980 வெளியிடப்பட்ட இந்த நூல். . புராண காலங்கள் தொடங்கி மன்னர் காலம் வரை படுவேகம் பிடிக்கும் வானமாமலையின் வாகனம் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்…. சுயமரியாதை இயக்கம்…. தோன்றிய காலம் தொடங்கியதும் பிரேக் டவுன் ஆகி நின்று விடுகிறது. . ஆயோ ஆய் என்று ஆயப்பட்ட இந்த ஐம்பது பக்க நூலில் நாலே நாலு எழுத்துதான் மிஸ்ஸிங். . அது: பெ ரி யா ர். . நூலின் தலைப்பைப் பார்த்தால் ஆர்.எஸ்.எஸ்.காரனுக்குக்கூட நினைவுக்கு வரக் கூடிய ஒரே பெயர் பெரியாராகத்தான் இருக்க முடியும். . ஆனால் அதுவெல்லாம் நம் இடதுசாரி ஆய்வாளர்கள் முன்பு செல்லுபடியாகுமோ.? ஆகாது. ஆகவே ஆகாது. அம்புட்டு ஆச்சாரம். . நம் மரியாதைக்குரிய ஆய்வாளர் பேராசிரியர் வானமாமலையின் மற்றொரு நூல் : “இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்” . 1978 இல் நியூ செஞ்சுரி புக் ஹவுஸால் வெளியிடப்பட்ட இந்நூலில் உலக அளவிலும் இந்திய அளவிலும் அன்றைய காலம் தொடங்கி இன்று வரை நாத்திகக் கருத்துக்கள் உருப்பெற்ற வரலாறுகள்…. . கடவுள் இன்மைக் கொள்கைதான் தற்கால நாத்திகமாகக் கருதப்படுகையில்…. வேதங்களை நம்பாதவர்களே நாத்திகர்கள் என அன்றைக்கு அழைக்கப்பட்டார்கள்….. என விரிவாகச் சொல்கிறார் நா.வா. . அத்தோடு ஆத்திகர்களின் புரட்டு வாதம், கடவுள் கருத்தின் துவக்கம், நாத்திகம் பற்றிய மார்க்சியவாதிகளின் விமர்சனங்கள் என அநேக விஷயங்களைத் தொட்டுச் செல்கிறது நூல். . நாத்திகம் குறித்து பேராசான் மார்க்ஸ் சொல்லுவதென்ன? மார்க்சியத்தை நடைமுறைப்படுத்திக் காட்டிய தோழர் லெனின் சொல்லுவதென்ன? என விரிவாக விளக்கும் பேராசிரியர் பெரியாருக்கு வரும்போது மட்டும் கொஞ்சம் ஜர்க் ஆகிறார். . முற்றாக மறுக்கவும் முடியாமல் முற்றாக நிராகரிக்கவும் முடியாமல் தடுமாறும் கோலம் எழுத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது. . இதை அவரது ஆய்வுப்புலத்தின் போதாமை என்று கொள்ளலாமே தவிர அவர் ஆச்சாரமான வைணவ குலத்தின் தோன்றல் என்பதனால்தான் என்று எவரும் கொள்ளக்கூடாது. . அவரது வார்த்தைகளிலேயெ சொல்வதானால்….. . “ பெரியார் முரணற்ற நாத்திகர். பெரியார் கடவுள் எதிர்ப்போடு, மூட நம்பிக்கைகளை எதிர்த்தும் பிரச்சாரம் செய்தார். . அவருடைய நாத்திகம் பொது அறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. அதில் விஞ்ஞானக் கொள்கைகளை அவர் பயன்படுத்தவில்லை. …………….. ………….. ஆனால் வளர்ந்து வரும் அறிவியல் உண்மைகள், அவற்றின் அடிப்படையில் உருவாகும் அறிவியல் கொள்கைகள், இவ்வறிவியல் கொள்கைகளை கிரகித்துக் கொண்டு வளர்ச்சி பெற்று வரும் மார்க்சீய தத்துவம், இவற்றினின்று அவருடைய நாத்திகம் விலகியே நிற்கிறது. இதுவே அதனுடைய பலவீனம்.” . இதைப் படித்ததும் பேரதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனேன் என்று எழுதினால் அது அப்பட்டமான பொய். . குறிப்பாக இந்திய இடதுசாரிகளிடம் அதிலும் சிறப்பாக தமிழக இடதுசாரிகளிடம் அத்தகைய மூடநம்பிக்கைகள் எல்லாம் கிடையாது எனக்கு. இப்படி ஏதாவது எழுதாவிட்டால்தான் அதிர்ச்சி அடைவேன். . 1958 லேயே நான்காவது பதிப்பு கண்ட நூல் : ”இனி வரும் உலகம்”. . ”அறிவியல் அறிவற்ற”…. ”அறிவியல் உண்மைகளை அறியாத”…. ”அதன் அடிப்படையில் உருவாகும் அறிவியல் கொள்கைகளை கிரகிக்கத் துப்புக் கெட்ட” ஈ.வெ.ரா எழுதியது அது. . ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதுகிறார் : . ”இனிவரும் உலகத்தில் கம்பியில்லா தந்திச் சாதனம் ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும்… . உருவத்தைத் தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக்கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்…. . மேற்கண்ட சாதனங்களால் ஒரு இடத்திலிருந்து கொண்டே பல இடங்களில் உள்ள மக்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கச் சாத்தியப்படும்….” . இதுதானய்யா அந்த ”அறிவற்ற” கிழவன் அறுபதாண்டுகளுக்கு முன்னர் எழுதியது. . பூப்பு நன்னீராட்டு விழாவுக்குக்கூட தங்களது நாளிதழில் விளம்பரம் போடும் ”விஞ்ஞான” ”மார்க்சீயவாதிகள்” மத்தியில் இப்படியொன்றையும் சொல்லித் தொலைத்தது பெருசு : . “பிள்ளைப்பேறுக்கு ஆண் பெண் சேர்க்கை என்பதுகூட நீக்கப்படலாம். . நல்ல திரேகத்துடனும், புத்தி நுட்பமும், அழகும் காத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாகப் பொலிகாளைகளைப் போல் தெரிந்தெடுத்த மணி போன்ற பொலிமக்கள் வளர்க்கப்பட்டு அவர்களது வீரியத்தை இன்செக்ஷன் மூலம் பெண்கள் கருப்பைகளுக்குள் செலுத்தி நல்ல குழந்தைகளைப் பிறக்கச் செய்யப்படும். . ஆண் பெண் சேர்க்கைக்கும் குழந்தை பெறுவதற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப்பட்டுவிடும்.” . கர்ப்பத்தடையே கண்டனத்துக்கு உள்ளான காலங்களில் செயற்கை முறை கருத்தரிப்பைப் பற்றிப் பேசியவர் நிச்சயம் அறிவியல் அறிவற்ற ஆசாமியாகத்தானே இருக்க முடியும்? . அடுத்த ஒரே ஒரு சேதியோடு நமது கதாகாலட்சேபத்தை நிறுத்திக் கொள்வது நல்லது என்றே தோன்றுகிறது. . அது 1970 ஆம் ஆண்டு. . கிண்டியிலுள்ள பொறியியல் கல்லூரிக்குப் பேசச் செல்கிறார் பெரியார். (இப்போது அதுதான் அண்ணா பல்கலைக் கழகமாக பரிணாமம் அடைந்திருக்கிறது) . அங்குள்ள மாடி அறை ஒன்றில் கம்ப்யூட்டர் என்கிற ஒரு புதிய கருவி வந்திருக்கிறது என்று சொல்கிறார்கள். . அங்கு வைக்கப்பட்டிருந்த அந்தக் கம்ப்யூட்டர் இன்றுள்ளது போல அல்ல. அதுவே ஒரு பெரிய அறை அளவுக்கு இருக்கக் கூடியது. . அது 1959 ஆண்டு உருவாக்கப்பட்ட ஐ.பி.எம் 1620 ரகக் கம்ப்யூட்டர். . அதைப் பார்த்தே தீரவேண்டும் என அடம் பிடித்த பெரியாரை முதல் மாடிக்குத் தூக்கிச் சென்று காட்டுகிறார்கள். . இது என்னவெல்லாம் செய்யும் என தன் சந்தேகங்களைக் கேட்கிறார் பெரியார். . இது வினாடிக்கு 333 எழுத்துக்களைப் படிக்கும் 10 எழுத்துக்களை அச்சடிக்கும் என விளக்குகிறார்கள். . வருடத்தையும் நாளையும் சொன்னால் கிழமையைச் சரியாகக் குறிப்பிடும் என்கிறார்கள். . 17.9.1879 என்ன தேதி? என்கிறார் பெரியார். ”புதன்கிழமை” என்கிறது கம்ப்யூட்டர். . மேலும் பல கேள்விகளைக் கேட்டு அது அளித்த விடைகளைக் கண்டு பெருமகிழ்வோடு கிளம்பிச் செல்கிறார் பெரியார். . இதனை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்த வா.செ.குழந்தைசாமி தனது நூலில் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார். . அதனைவிடவும் அக்கல்லூரியில் இருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களே பார்க்கத் துடித்துக் கொண்டிருந்த தமிழகத்தின் முதல் கம்ப்யூட்டரை நேரில் கண்டு அறிந்து தெளிந்து விடைபெற்ற பெரியாரைத்தான் விஞ்ஞானம் தெரியாதவர் என்கிறார் நா.வானமாமலை. . இதற்கூடே வறட்டு நாத்திகரான பெரியாருக்கு வர்க்கபார்வை கிடையாது என்கிற சலிப்பில் இருந்த ப.ஜீவானந்தம் பிர்லா மாளிகையில் ஒலித்த பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கான அசரீரி கேட்டு காங்கிரஸில் ஐக்கியமான கதைகளும்…. . பெரியாரைக் கொச்சைப்படுத்துவதற்கென்றே மார்க்ஸிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தியால் தப்பும் தவறுமாக எழுதப்பட்ட ”ஆரிய மாயையா? திராவிட மாயையா?” என்கிற நூலுக்குக் கிடைத்த நெத்தியடிக் கதைகளும்…. . 1924 வைக்கத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பெரியார் நடத்திய தெரு நுழைவுப் போராட்டத்தை கோயில் நுழைவுப் போராட்டமாக மார்க்சிஸ்ட் ராமமூர்த்தி குழப்பியடித்த கதைகளையும்…. . எழுதிக் கொண்டே போகலாம்தான்…. . ஆனால்…. . அட…. அதெல்லாம் அந்தக் காலம். . ஆய்வாளர் நா.வானமாமலை, மார்க்ஸிஸ்ட் இராமமூர்த்தி எல்லாம் மறைந்தே எண்ணற்ற ஆண்டுகள் ஆயிற்று. . இன்னும் எதற்கு இந்தப் பழைய கதை?. . இப்போதெல்லாம் இடதுசாரிகள் அப்படிக் கிடையாது என அடித்துச் சத்தியம் செய்பவர்கள் யாரேனும் இருந்தால்…. . அவர்கள்….. . அங்கிள் டி.கெ.ரங்கராஜன் பத்து பர்சண்ட் ”பரம ஏழைகளுக்காக” பாராளுமன்றத்தில் முழங்கிய சமீபத்திய கதையையும் நினைவில் கொள்வது மார்க்சீயத்துக்கும் நல்லது. மக்களுக்கும் நல்லது. . பின்குறிப்பு : . அதெல்லாம் சரி….. இந்தத் தலைப்புக்கும் கட்டுரைக்கும் என்னய்யா சம்பந்தம் என்கிறீர்களா? . பாஸ்….! கட்டுரைதான் இவ்வளவு சீரியஸ் தொனில இருக்குதே…. தலைப்பாவது கொஞ்சம் ரொமான்ஸ் மூடுல இருக்கட்டுமேங்கிற ஒரு அல்ப ஆசைதான்…. . வேறென்ன? . நன்றி : “காமன் சென்ஸ்” (Common Sense) மாத இதழ். பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் அமெரிக்கா. https://tinyurl.com/4y9dkr4w

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025

1 week 3 days ago
தென் ஆபிரிக்காவை 97 ஓட்டங்களுக்கு சுருட்டி ஆஸி.யை வெற்றி அடையச் செய்த அலனாவின் உலகக் கிண்ண சாதனை பந்துவீச்சு 25 Oct, 2025 | 06:59 PM (நெவில் அன்தனி) இந்தூர், ஹொல்கார் விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை (25) நடைபெற்ற தென் ஆபிரிக்காவுக்கு எதிரான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அலனா மரியா கிங், பந்துவீச்சில் உலகக் கிண்ண சாதனையை நிலைநாட்டி அவுஸ்திரேலியாவை 7 விக்கெட்களால் இலகுவாக வெற்றி அடையச் செய்தார். இந்த வெற்றியை அடுத்து இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இந்தியாவை அவுஸ்திரேலியாவும் முதலாவது அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை தென் ஆபிரிக்காவும் எதிர்த்தாடும். அலான கிங்கின் சுழல்பந்துவீச்சை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட தென் ஆபிரிக்கா 24 ஓவர்களில் 97 ஓட்டங்களுக்கு சுருண்டது. தென் ஆபிரிக்க துடுப்பாட்டத்தில் அணித் தலைவி லோரா வுல்வார்ட் (31), சினாலோ ஜப்டா (29), நாடின் டி க்ளார்க் (14) ஆகிய மூவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். அலனா மரியா கிங் 2 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 7 ஓவர்களில் 18 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை வீழ்த்தி மகளிர் உலகக் கிண்ணத்தில் அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்தார். இந்தியாவுக்கு எதிராக 1982 மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் நியூஸிலாந்து வீராங்கனை ஜெக்குலின் லோர்ட் பதிவுசெய்த 10 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்கள் என்பதே மகளிர் உலகக் கிண்ணத்தில் முந்தைய அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாக இருந்தது. 43 வருடங்கள் நீடித்த மகளிர் உலகக் கிண்ண சாதனையை இன்றைய தினம் அலனா மரியா கிங் முறியடித்து புதிய சாதனையை படைத்தார். 98 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, 16.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 98 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. முதல் 6 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்ததால் அவுஸ்திரேலியா நெருக்கடியை எதிர்கொண்டது. ஆனால், ஜோர்ஜியா வொல், பெத் மூனி ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 76 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு வெற்றியை அண்மிக்க உதவினர். பெத் மூனி 42 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ஜோர்ஜியா வொல் 38 ஓட்டங்களுடனும் அனாபெல் சதர்லண்ட் 10 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்து அவுஸ்திரேலியாவை வெற்றி அடையச் செய்தனர். ஆட்டநாயகி: அலனா மரியா கிங் https://www.virakesari.lk/article/228669

தொழில்நுட்பக் கோளாறு: அமெரிக்காவில் 40 விமான சேவைகள் இரத்து

1 week 3 days ago
25 Oct, 2025 | 10:40 AM அமெரிக்காவின் பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான அலாஸ்கா ஏர்லைன்ஸ் (Alaska Airlines) நிறுவனத்தின் இணையத்தளத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்த நிறுவனத்தின் சுமார் 40 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன. மேலும், 240க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன. சியாட்டிலை தளமாகக் கொண்டு இயங்கும் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வலைத்தளத்தில் (website) எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் விளைவாக, பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக உடனடியாக முடிவுகள் எடுக்கப்பட்டன. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அலாஸ்கா ஏர்லைன்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனமான ஹாரிசன் ஏர் (Horizon Air) ஆகியவற்றின் விமானங்களும் உடனடியாக தரையிறங்க அறிவுறுத்தப்பட்டன. இந்தச் சம்பவத்தால், மொத்தமாக சுமார் 40 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன. மேலும், 240க்கும் அதிகமான விமானங்கள் குறிப்பிட்ட நேரத்தைவிடத் தாமதமாகப் புறப்பட்டதால், விமானப் பயணங்களில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும், கோளாறு சரிசெய்யப்பட்டுச் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/228619

தொழில்நுட்பக் கோளாறு: அமெரிக்காவில் 40 விமான சேவைகள் இரத்து

1 week 3 days ago

25 Oct, 2025 | 10:40 AM

image

அமெரிக்காவின் பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான அலாஸ்கா ஏர்லைன்ஸ் (Alaska Airlines) நிறுவனத்தின் இணையத்தளத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்த நிறுவனத்தின் சுமார் 40 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன. மேலும், 240க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன.

சியாட்டிலை தளமாகக் கொண்டு இயங்கும் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வலைத்தளத்தில் (website) எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் விளைவாக, பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக உடனடியாக முடிவுகள் எடுக்கப்பட்டன.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அலாஸ்கா ஏர்லைன்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனமான ஹாரிசன் ஏர் (Horizon Air) ஆகியவற்றின் விமானங்களும் உடனடியாக தரையிறங்க அறிவுறுத்தப்பட்டன.

இந்தச் சம்பவத்தால், மொத்தமாக சுமார் 40 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன. மேலும், 240க்கும் அதிகமான விமானங்கள் குறிப்பிட்ட நேரத்தைவிடத் தாமதமாகப் புறப்பட்டதால், விமானப் பயணங்களில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

சம்பவம் குறித்து விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும், கோளாறு சரிசெய்யப்பட்டுச் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://www.virakesari.lk/article/228619

80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் - சட்டத்தரணி பிரதிபா மஹானாமஹேவ

1 week 3 days ago
நாட்டில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் - சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ 25 Oct, 2025 | 04:22 PM நாட்டில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ தெரிவித்துள்ளார். பிரஜா சக்தி அபிவிருத்தி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் கொழும்பில் உள்ள கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை முறையான சட்ட கட்டமைப்பின் கீழ் பதிவு செய்வது அவசியமாகும். அத்துடன், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு அடிப்படை மனித உரிமைகளும் சமூக அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும். பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை ஒதுக்கி வைப்பதால் அவர்கள் மேலும் பாதிக்கப்படுகின்றனர். இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கு அடிப்படைப் பாலியல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி முறைமையை விரிவாக்குவது அவசியமாகும். 95 சதவீதமான பாலியல் தொழிலாளர்கள் தற்போது ஆணுறை உள்ளிட்ட பாதுகாப்பான முறைகளைப் பயன்படுத்தி வருவதால் பாலியல் ரீதியாகப் பரவும் நோய்களும் கணிசமாக குறைவடையும் என சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/228647

80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் - சட்டத்தரணி பிரதிபா மஹானாமஹேவ

1 week 3 days ago

நாட்டில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் - சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ

25 Oct, 2025 | 04:22 PM

image

நாட்டில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ தெரிவித்துள்ளார்.  

பிரஜா சக்தி அபிவிருத்தி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் கொழும்பில் உள்ள கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  

சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை முறையான சட்ட கட்டமைப்பின் கீழ் பதிவு செய்வது அவசியமாகும்.

அத்துடன், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு அடிப்படை மனித உரிமைகளும் சமூக அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும்.

பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை ஒதுக்கி வைப்பதால் அவர்கள் மேலும் பாதிக்கப்படுகின்றனர்.

இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கு அடிப்படைப் பாலியல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி முறைமையை விரிவாக்குவது அவசியமாகும்.

95 சதவீதமான பாலியல் தொழிலாளர்கள் தற்போது ஆணுறை உள்ளிட்ட பாதுகாப்பான முறைகளைப் பயன்படுத்தி வருவதால் பாலியல் ரீதியாகப் பரவும் நோய்களும் கணிசமாக குறைவடையும் என சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/228647

இலங்கைக்கு பரிசாக வழங்கிய யானைகளை மீண்டும் திரும்பப் பெற தாய்லாந்து நடவடிக்கை!

1 week 3 days ago
தாய்லாந்து யானைகள் குறித்து ஆராய குழுவொன்று நியமனம் Oct 25, 2025 - 08:39 PM - தாய்லாந்து அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிக்கப்பட்ட இரண்டு யானைகள் குறித்து ஆராய்வதற்காக கால்நடை வைத்தியக் குழுவொன்று நியமிக்கப்படும் என சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி தெரிவித்துள்ளார். தாய்லாந்து அரசாங்கத்தினால் அன்பளிக்கப்பட்ட 'தாய் ராஜா' மற்றும் 'கண்டுல' (Kandula) ஆகிய இரண்டு யானைகளையும் மீண்டும் தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக வெளியான செய்திகளை அடுத்து, தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களத்தின் கால்நடை வைத்தியர்கள் மற்றும் சுற்றாடல் அமைச்சின் கால்நடை வைத்தியர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தாய் ராஜா என்ற யானை தலதா மாளிகையின் யானைகள் கொட்டிலிலும், கண்டுல என்ற யானை களனி ராஜ மகா விகாரையின் கீழும் உள்ளன. இந்த இரண்டு யானைகளுக்கும் துன்புறுத்தல் இழைக்கப்படுவதாகக் கூறி தாய்லாந்து அரசாங்கம் அவற்றை மீண்டும் நாட்டிற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, எதிர்வரும் 28ஆம் திகதி இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தாய்லாந்து தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னர், அலுத்கம விகாரையில் இருந்த 'முத்து ராஜா' என்ற யானைக்கும் துன்புறுத்தல் இழைக்கப்பட்டதால் தாய்லாந்து அரசாங்கம் அதனை மீளப் பெற்றிருந்தது. எவ்வாறாயினும், குறித்த இரண்டு யானைகள் தொடர்பிலும் ஆராய்வதற்காக இந்தக் கால்நடை வைத்தியக் குழு நியமிக்கப்படும் என சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி 'அத தெரண' செய்திகளுக்கு தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmh6f163a017hqplp3lw1awm9

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 3 days ago
வழமையாக முதலாவதாகவரும் நாட்டுக்கும் 4 வதாகவரும் நாட்டுக்கும் இடையில் நடக்கும் அரை இறுதிப் போட்டி, முதலாவதாக நடைபெறும். இம்முறை முதலாவது போட்டி இங்கிலாந்துக்கு எதிராக தென்னாபிரிக்காவின் போட்டி. இரண்டாவது போட்டி இந்தியா அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான போட்டி. நல்லகாலம் நான் முதலாவது, இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் நாடுகள் எவை என்று தனித்தனி கேள்விகள் கேட்கவில்லை. இறுதி போட்டிக்கு தெரிவாகும் நாடுகள் எவை என்று கேட்டிருந்தேன். வழமைபோல இந்தியா அணிக்கு சார்பாகவே இம்முறையும் போட்டிகள் நடைபெறுகிறது. மும்பையில் இம்முறை 5 போட்டிகள். முதலாவது போட்டி இலங்கை எதிர் வங்காளதேசம். அடுத்த 4 போட்டிகளும் இந்தியா அணி விளையாடுவதற்கு ஏற்ப அமைத்து இருக்கிறார்கள். இந்தியாவின் சூழல் பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் மும்பாய் மைதானம். நேற்று ஐசிசி இணையத்தில் மும்பை மைதான அரை இறுதி போட்டியில் ஆரம்ப சுற்று போட்டியில் இரண்டாவது, மூன்றாவதாக வரும் அணிக்கு இடையிலான போட்டி என்று இருப்பதை பார்த்தேன். இன்று அவுஸ்திரேலியா எதிர் இந்தியா என்று இருக்கிறது. பலம் பொருந்திய அவுஸ்திரேலியாவை மும்பையில்தான் வெல்ல முடியும் என சில நாட்களுக்கு முன்பு சில இந்தியா ஊடகங்களில் செய்தி வாசித்திருந்தேன்.

Naval vessels of the Sea Tigers of Liberation Tigers of Tamil Eelam (LTTE) | Documentary

1 week 3 days ago
Conclusion The Sea Tigers were more than just a rebel movement's naval wing; they were an example of how resourcefulness, self-control, and willpower can transform the battlefield—even at sea. From their improvised origins as the Sea Pigeons to a fleet that could compete with state navies, they personified the LTTE's determination to overcome insurmountable obstacles. Sea Tigers' strategies—whether they involved underwater sabotage, bomb-laden craft attacks, or lightning-fast attacks—had a profound impact on contemporary naval warfare. Even though Mullivaikkal's collapse in 2009 marked the end of the Sea Tigers, their legacy still captivates historians and analysts, serving as a reminder that nation-states are not the only ones capable of innovating in warfare. Note: This article did not include the count on the Sea Tigers' ocean-going fleet 💬 Author’s Note Thank you for reading to the end. I would appreciate hearing your thoughts and comments on this work in English. ✍️ Research and Analysis: Nane Chozhan 📷 Image Credits: All images belong to their respective owners. No copyright is claimed. *****

வங்கக் கடலில் புயல் உருவாகிறதா? - எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை?

1 week 3 days ago
வங்கக்கடலில் உருவாகும் புயல் எங்கு நோக்கி நகரும்? வானிலை மையம் கணிப்பு பட மூலாதாரம், IMD website படக்குறிப்பு, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருப்பதை காட்டும் வரைபடம். (இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் இருந்து) 25 அக்டோபர் 2025, 02:02 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 990 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (அக்.26) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மறுநாள் (அக்.27) காலை மத்திய மேற்கு வங்கக்கடலில் புயலாக உருவெடுக்கும். அதன்பிறகு அடுத்த 48 மணி நேரங்களில் வடமேற்காக ஆந்திர பிரதேச கடற்கரையை நோக்கி நகரலாம். எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, நாகப்பட்டினம், கடலூர், சென்னை ஆகிய 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்? பட மூலாதாரம், IMD website படக்குறிப்பு, இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி & கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் அக்டோபர் 25 தமிழ்நாட்டின் செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மற்ற மாவட்டங்களில் லேசான மழை இருக்கலாம். அக்டோபர் 26 திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் லேசான மழை இருக்கலாம். அக்டோபர் 27 திருவள்ளூர், சென்னை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை முதல் மிகவும் கனமான மழை பெய்யலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. வேலூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் கன மழை பெய்யலாம். மற்ற மாவட்டங்களில் லேசான மழை இருக்கலாம். அக்டோபர் 28 திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை இருக்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மீனவர்களுக்கு எச்சரிக்கை தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலான பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஆகவே அக்டோபர் 25 முதல் 28 வரை அப்பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை எவ்வளவு மழை பெய்திருக்கிறது? அக்டோபர் 1 முதல் 22 வரையிலான காலகட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 296.8 மில்லிமீட்டர் மழை பெய்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அடுத்ததாக ராணிப்பேட்டை 292.8 மில்லிமீட்டர் மழை பெற்றிருக்கிறது. சென்னையில் 238.3 மில்லிமீட்டர் மழை இந்தக் காலகட்டத்தில் பதிவாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக சென்னை, கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நீலகிரி, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, திருநெல்வேலி, திருவள்ளூர், திருவாரூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியிருக்கிறது. குறைந்தபட்சமாக கரூர் மாவட்டத்தில் 120.4 மில்லிமீட்டர் மழை பதிவாகியிருக்கிறது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் தமிழ்நாட்டை விடவும் அதிகம் மழை பதிவாகியிருக்கிறது. புதுச்சேரியில் 353.9 மில்லிமீட்டர் மழையும், காரைக்காலில் 312.1 மில்லிமீட்டர் மழையும் பெய்திருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crl2j3g171go

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 3 days ago
ஆஸ்திரேலியா முதல் சுற்றில் முதலாவதாக வர மாட்டாது என்று வேறு அணிகளைத் தெரிவு செய்த அறுவரும் மைதானத்தை சுற்றி ஆறு சுற்றுக்கள் ஓட வேண்டும்..................🤣.

இனித்திடும் இனிய தமிழே....!

1 week 3 days ago
💐💐💐பிரியாத உறவு நம் நட்பு🥰❤🥰 Best Friends For Ever💐💐💐 #அலமாரி 25-10-25 உண்டோ குரங்கேற்றுக்கேற்றுக் கொள்ளாத கொம்பு...? அந்த குரங்கு மரத்திற்கு மரம் தாவித் திரிந்தது நான் உன்னை ஏற்கமாட்டேன் என ஒரு மரம் அதனை விரட்டியது. நீ என்னைப் புகழ்ந்து பாடினால் ஒழிய நான் உன்னை ஏற்க மாட்டேன் என்று தீர்க்கமாக கூறியது அந்த மரம். மரம் என்பது இங்கே சோழ நாட்டு மன்னன் . குரங்கென்பது கம்பன் கடவுளைப் பற்றிப் பாடிய இவ் வாயால் நரனைப் பாட மாட்டேன். என்றான் சோழ மன்னனிடம் கம்பன். " மன்னவனும் நீயோ....? வள நாடும் நின்னதுவோ...? உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன். என்னை விரைந் தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ....? உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு ...? என்று பாடி அவை அகன்றான் கம்பன். அதன் பிறகுதான் பாண்டிய நாட்டிற்கு பிரவேசம் ஆனான் கம்பன். அது கம்பன் வரலாறு. அது தலைமை ஆசிரியர் அறை. அந்த ஆசியை அதிகமாகப் பேசுகிறார். அவரிடம் சொல்லி வையுங்கள். எனகிறது நிர்வாகம். நிர்வாகம் கூறியதை த. ஆ அந்த ஆசிரியையிடம் சென்னார்.. அதற்கு அந்த ஆசிரியை , " பெரிதே உலகம் பேனுனர் பலரே...." எனக் கூறி அறையை விட்டு அகன்றார் அந்த ஆசிரியை.. சில நாட்களிலேயே அவருக்கு அரசு பள்ளியில் பணி கிடைத்து,. கம்பனையம் , அந்த ஆசிரியை யும் ஒர நேர் கோட்டில் வைத்துப் பார்த்து வியந்தேன். Voir la traduction

யாழ்தேவி ரயிலின் தலைமை கட்டுப்பாட்டாளர் கைது

1 week 3 days ago
கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், 'யாழ்தேவி' ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால் இன்று (25) பிற்பகல் அனுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த இந்த ரயில், பிற்பகல் 2.40 மணியளவில் அனுராதபுரம் ரயில் நிலையத்தை அடைந்துள்ளது. இதன்போது அவர் மது அருந்தியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் அவர் நீதிமன்றில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். யாழ்தேவி ரயிலுக்கு வேறொரு கட்டுப்பாட்டாளர் நியமிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு கோட்டையை நோக்கிப் புறப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmh66cbsr017cqplp06gyyxes

யாழ்தேவி ரயிலின் தலைமை கட்டுப்பாட்டாளர் கைது

1 week 3 days ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், 'யாழ்தேவி' ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால் இன்று (25) பிற்பகல் அனுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த இந்த ரயில், பிற்பகல் 2.40 மணியளவில் அனுராதபுரம் ரயில் நிலையத்தை அடைந்துள்ளது.

இதன்போது அவர் மது அருந்தியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் அவர் நீதிமன்றில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

யாழ்தேவி ரயிலுக்கு வேறொரு கட்டுப்பாட்டாளர் நியமிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு கோட்டையை நோக்கிப் புறப்பட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmh66cbsr017cqplp06gyyxes

விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர்கள் பட்டியலில் இரண்டாமிடம் - சங்காவை முந்தினார்

1 week 3 days ago
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர்கள் பட்டியலில் சங்காவை முந்தினார் விராட் கோலி 25 Oct, 2025 | 06:42 PM ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர்கள் பட்டியலில் குமார் சங்ககராவை முந்தினார் இந்திய அணியின் விராட் கோலி. அவுஸ்திரேலியா- இந்தியா இடையிலான 3ஆவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்றது. முதலில் துடுப்படுத்தாடிய அவுஸ்திரேலியா 236 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் 237 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. சுப்மன் கில் 24 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். முதல் இரண்டு போட்டிகளில் டக்அவுட் ஆன விராட் கோலி, முதல் பந்திலேயே ஓட்டத்தைப்பெற்று கையை காட்டினார். ரோகித் சர்மா 63 பந்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். இது அவருடைய 60ஆவது அரைசதம் ஆகும். மறுமுனையில் விராட் கோலி, 56 பந்தில் 4 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி 100 ஓட்டங்களைக் கடந்தது. இதன் மூலம் ரோகித் சர்மா- விராட் கோலி ஜோடி கடந்த 5 ஆண்டுகளில் முதன்முறையாக 100 ஓட்டங்களைப் பகிர்ந்து இணைப்பாட்டத்தை ஏற்படுத்தியது. விராட் கோலி 54 ஓட்டங்களை எட்டியபோது, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்களைப்பெற்றவரகள் பட்டியலில் 2ஆவது இடத்தை பிடித்திருந்த குமார் சங்கக்கராவை பின்னுக்கு தள்ளினார். சங்கக்கரா 14,234 ஓட்டங்களை எடுத்து 2ஆவது இடத்தில் இருந்தார். சச்சின் டெண்டுல்கர் 18426 ஓட்டங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். https://www.virakesari.lk/article/228668

விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர்கள் பட்டியலில் இரண்டாமிடம் - சங்காவை முந்தினார்

1 week 3 days ago

ஒருநாள்  கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர்கள் பட்டியலில் சங்காவை முந்தினார் விராட் கோலி

25 Oct, 2025 | 06:42 PM

image

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர்கள் பட்டியலில் குமார் சங்ககராவை முந்தினார் இந்திய அணியின் விராட் கோலி.

அவுஸ்திரேலியா- இந்தியா இடையிலான 3ஆவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்றது.

முதலில் துடுப்படுத்தாடிய அவுஸ்திரேலியா 236 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் 237 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

சுப்மன் கில் 24 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். முதல் இரண்டு போட்டிகளில் டக்அவுட் ஆன விராட் கோலி, முதல் பந்திலேயே ஓட்டத்தைப்பெற்று கையை காட்டினார்.

ரோகித் சர்மா 63 பந்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். இது அவருடைய 60ஆவது அரைசதம் ஆகும். மறுமுனையில் விராட் கோலி, 56 பந்தில் 4 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.

இந்த ஜோடி 100 ஓட்டங்களைக் கடந்தது. இதன் மூலம் ரோகித் சர்மா- விராட் கோலி ஜோடி கடந்த 5 ஆண்டுகளில் முதன்முறையாக 100 ஓட்டங்களைப் பகிர்ந்து இணைப்பாட்டத்தை ஏற்படுத்தியது. 

விராட் கோலி 54 ஓட்டங்களை எட்டியபோது, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்களைப்பெற்றவரகள் பட்டியலில் 2ஆவது இடத்தை பிடித்திருந்த குமார் சங்கக்கராவை பின்னுக்கு தள்ளினார். 

சங்கக்கரா 14,234 ஓட்டங்களை எடுத்து 2ஆவது இடத்தில் இருந்தார். சச்சின் டெண்டுல்கர் 18426 ஓட்டங்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

https://www.virakesari.lk/article/228668