Aggregator

பந்துவீச்சில் ஆகாஷ் தொடர்ச்சியாக பிரகாசிப்பு, இளையோர் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது இலங்கை

1 week 4 days ago

Published By: Digital Desk 3

05 Sep, 2025 | 02:33 PM

image

(நெவில் அன்தனி)

மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விக்னேஸ்வரன் ஆகாஷ் தொடர்ச்சியாக பந்துவீச்சில் பிரகாசிக்க, மேற்கிந்தியத் தீவுகளுடனான 3ஆவது போட்டியில் 8 விக்கெட்களால் இலங்கை அபார வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 7 போட்டிகளைக் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை முன்னிலை அடைந்துள்ளது.

இந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளில் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஆகாஷ், இந்தப் போட்டியில் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றி இலங்கையின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

அவருக்கு பக்கபலமாக பந்துவீசிய சாமிக்க சமுதித்த 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

அன்டிகுவா கூலிஜ் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (04) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 39.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 138 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இயர்சின்ஹோ ஃபொன்டெய்ன் 51 ஓட்டங்களையும் ஜொஷுவா டோர்ன் 29 ஓட்டங்களையும் டைரிக் ப்றயன் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 22 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

விரான் சமுதித்த ஆட்டம் இழக்காமல் 64 ஓட்டங்களையும் கவிஜ கமகே ஆட்டம் இழக்காமல் 28 ஓட்டங்களையும் புலிஷ திலக்கரத்ன 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஆர்'ஜாய் கிட்டன்ஸ் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/224283

51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை!

1 week 4 days ago
51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை! முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட 51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்து அவற்றை பொருளாதார செயற்பாடுகளுக்கு பயன்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கறுவாத்தோட்டம் புதிய பொலிஸ் நிலைய கட்டிட திறப்புவிழாவில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார் இதேவேளை நாட்டில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்திச் செல்வதற்காக இரண்டு பாக்கிஸ்தானியர்கள் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். இது குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவிக்கையில் ”இந்த நாட்டில் மிக நீண்டகாலமாக குற்றச் செயல்களுடனான கலாச்சாரம் காணப்பட்டது. அந்த கலாச்சாரத்தால் தோற்றம் பெற்ற செயற்பாட்டாளர்களையே அண்மையில் கைது செய்தோம். நாட்டில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்திச் செல்வதற்காக இரண்டு பாக்கிஸ்தானியர்கள் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளின் போது வெளிவந்துள்ளது. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் மேலும் தீவிரமாக ஆராயப்பட்டு அதற்குரிய நடவடிக்கைகள் சட்டத்தின் ஊடாக எடுக்கப்படும். நாட்டில் சட்டவாட்சியை உறுதிப்படுத்துவதற்காக பொலிஸாருக்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட 51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்து அவற்றை பொருளாதார செயற்பாடுகளுக்கு பயன்படுத்த எதிர்ப்பார்த்துள்ளோம். இவற்றை பொருளாதார தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ஏற்கனவே தெரிவித்திருந்தார். அரச நிறுவனங்களை நடத்திச் செல்வதற்கும் பொருத்தமான இடங்கள் தேவைப்படுகின்றன” இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1446194

51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை!

1 week 4 days ago

FB_IMG_1739693299367.jpg?resize=750%2C37

51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை!

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட 51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்து அவற்றை பொருளாதார செயற்பாடுகளுக்கு பயன்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

கறுவாத்தோட்டம் புதிய பொலிஸ் நிலைய கட்டிட திறப்புவிழாவில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார்

இதேவேளை நாட்டில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்திச் செல்வதற்காக இரண்டு பாக்கிஸ்தானியர்கள் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவிக்கையில் ”இந்த நாட்டில் மிக நீண்டகாலமாக குற்றச் செயல்களுடனான கலாச்சாரம் காணப்பட்டது. அந்த கலாச்சாரத்தால் தோற்றம் பெற்ற செயற்பாட்டாளர்களையே அண்மையில் கைது செய்தோம்.

நாட்டில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்திச் செல்வதற்காக இரண்டு பாக்கிஸ்தானியர்கள் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளின் போது வெளிவந்துள்ளது.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் மேலும் தீவிரமாக ஆராயப்பட்டு அதற்குரிய நடவடிக்கைகள் சட்டத்தின் ஊடாக எடுக்கப்படும். நாட்டில் சட்டவாட்சியை உறுதிப்படுத்துவதற்காக பொலிஸாருக்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட 51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்து அவற்றை பொருளாதார செயற்பாடுகளுக்கு பயன்படுத்த எதிர்ப்பார்த்துள்ளோம்.

இவற்றை பொருளாதார தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ஏற்கனவே தெரிவித்திருந்தார். அரச நிறுவனங்களை நடத்திச் செல்வதற்கும் பொருத்தமான இடங்கள் தேவைப்படுகின்றன” இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1446194

நாட்டை உலுக்கிய எல்ல விபத்து - ஒருவர் கைது!

1 week 4 days ago
எல்ல பேருந்து விபத்து; உயிர் பிழைத்த பயணியின் திகில் அனுபவம்! எல்ல பேருந்து விபத்தில் உயிர் பிழைத்த பயணி ஒருவர், சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சாரதி பிரேக் செயலிழந்ததாகக் கூறியதாகத் தெரிவித்துள்ளார். குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனருடன் உரையாடலில் ஈடுபட்டதாகவும், அப்போது ஒரு வளைவில் செல்லும்போது பிரேக் செயலிழந்ததாக சாரதி தெரிவித்ததாகவும் பாதிக்கப்பட்ட நபர் கூறியுள்ளார். சாரதியின் கூற்றைக் கேட்டு பேருந்து நடத்துனரும், ஏனைய சில பயணிகளும் சிரித்ததாகவும், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர் மேலும் கூறினார். எனினும், இரண்டாவது வளைவு ஒன்றில் பேருந்து பயணித்த போது பிரேக் செயலிழந்துள்ளதை உண்மையில் நாங்கள் உணர்ந்தோம். பின்னர் பேருந்து எதிர் திசையில் வந்த ஒரு வாகனத்துடன் மோதியது, அதன் பின்னர் அது பள்ளத்தாக்கில் கவிழந்து விபத்துக்குள்ளானது. சுமார் ஒரு மணி நேரம் மயக்கமடைந்திருந்த நான், ஒரு குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு விழித்தேன். என்னால் நகர முடியவில்லை. பின்னர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் வந்து எங்களை மீட்டனர் என்று குறித்த பயணி கூறினார். பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பெற்று வரும் பதுளை வைத்தியசாலையில் இருந்து ஊடகங்களுக்கு அளித்த செவ்வியின் போது இந்த தகவலை தெரிவித்தார். நேற்று இரவு வெல்லவாய நோக்கிச் சென்ற பேருந்து ஜீப் மீது மோதி 1000 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர், 18 பேர் காயமடைந்தனர். விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் சுமார் 30 பேர் இருந்தனர். 06 ஆண்கள் மற்றும் 09 பெண்கள் சம்பவத்தில் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் 6 ஆண்கள், 5 பெண்கள், 3 ஆண் குழந்தைகள் மற்றும் 2 பெண் குழந்தைகள் அடங்குவர். தங்காலையிலிருந்து எல்லவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. முப்படையினர் பொது மக்களின் உதவியுடன் மீட்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1446202

அரச வைத்திய சாலையில் எலி கடித்ததில் 2 குழந்தைகள் உயிரிழப்பு: ராகுல் காந்தி கண்டனம்

1 week 4 days ago
அரச வைத்திய சாலையில் எலி கடித்ததில் 2 குழந்தைகள் உயிரிழப்பு: ராகுல் காந்தி கண்டனம். மத்திய பிரதேசத்தில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் அரச வைத்திய சாலையில் எலி கடித்ததில் இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது குறித்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “மத்தியப் பிரதேசத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையில் எலி கடித்து இரண்டு பிறந்த குழந்தைகள் இறந்தனர். இது தற்செயல் நிகழ்வு அல்ல, இது முழுமையான கொலை. இந்த சம்பவம் மிகவும் கொடூரமானது, மனிதாபிமானமற்றது மற்றும் அர்த்தமற்றது. இதைப் பற்றிக் கேள்விப்பட்டாலே முதுகுத்தண்டில் நடுக்கம் ஏற்படுகிறது. சுகாதாரத் துறை வேண்டுமென்றே தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்போது சிகிச்சை பணக்காரர்களுக்கு மட்டுமே. ஏழைகளுக்கு, அரசு மருத்துவமனைகள் இனி உயிர் காக்கும் இடங்களாக இல்லை, ஆனால் மரணக் குகைகளாக மாறிவிட்டன. பிரதமர் மோடியும் மத்தியப் பிரதேச முதல்வரும் வெட்கித் தலைகுனிய வேண்டும். உங்கள் அரசாங்கம் நாட்டின் மில்லியன் கணக்கான ஏழைகளின் சுகாதார உரிமையைப் பறித்துவிட்டது. இப்போது குழந்தைகள் அவர்களின் தாய்மார்களின் மடியில் இருந்து பறிக்கப்படுகிறார்கள்” என்று ராகுல் கடுமையாக சாடினார். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க இந்தூர் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். https://athavannews.com/2025/1446178

கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி

1 week 4 days ago
கச்சைதீவின் கண்ணீர்.😢 இந்தியாவில் கிடைக்காத இலங்கைப் பொருட்களையும், இலங்கையில் கிடைக்காத இந்தியப் பொருட்களையும், தீர்வின்றிப் பாதுகாப்பாக பண்டமாற்று செய்யப் பேருதவி புரிந்து வந்தேனே. மீனைக்காட்டி, கச்சையை உருவி என் மானத்தை வாங்குகிறார்களே பாவிகள்.😭

ஜூலை மாதத்தில் இந்தியா உக்ரைனின் முன்னணி டீசல் சப்ளையராக மாறியது

1 week 4 days ago
ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதி தொடர்பாக டெல்லி மீது டிரம்ப் தண்டனை வரிகளை விதித்ததால், ஜூலை மாதத்தில் இந்தியா உக்ரைனின் முன்னணி டீசல் சப்ளையராக மாறியது. இந்திய வம்சாவளி டீசல் பல வழிகள் வழியாக உக்ரைனை அடைகிறது. கணிசமான பகுதி ருமேனியாவிலிருந்து டானூப் நதியில் டேங்கர் டெலிவரி மூலம் வருகிறது. சுத்தந்த பத்ரா எழுதியது புதுப்பிக்கப்பட்டது:ஆகஸ்ட் 30, 2025 11:39 IST எங்களை பின்தொடரவும் ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதி தொடர்பாக டெல்லி மீது டிரம்ப் தண்டனை வரிகளை விதித்ததால், ஜூலை மாதத்தில் இந்தியா உக்ரைனின் முன்னணி டீசல் சப்ளையராக மாறியது. ஜூலை 2025 இல், இந்தியா மற்ற சப்ளையர்களை முந்தி உக்ரைனின் மிகப்பெரிய டீசல் மூலமாக மாறியுள்ளது , இது இறக்குமதியில் 15.5 சதவீதமாகும். உக்ரைனிய எண்ணெய் சந்தை பகுப்பாய்வு நிறுவனமான நாஃப்டோரினோக்கின் கூற்றுப்படி, தினசரி ஏற்றுமதி சராசரியாக 2,700 டன்கள் ஆகும், இது இந்த ஆண்டு இந்தியாவின் அதிகபட்ச மாதாந்திர ஏற்றுமதி புள்ளிவிவரங்களில் ஒன்றாகும். இந்த கூர்மையான உயர்வு ஜூலை 2024 இல் இருந்து ஒரு வியத்தகு மாற்றத்தைக் குறிக்கிறது, அப்போது இந்தியா உக்ரைனின் டீசல் தேவைகளில் 1.9 சதவீதத்தை மட்டுமே வழங்கியது. அமெரிக்க வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில் முரண்பாடு அரசியல் ரீதியாக பரபரப்பான தருணத்தில் இந்த நிகழ்வு நிகழ்ந்துள்ளது. புது தில்லி ரஷ்ய எண்ணெயை தொடர்ந்து வாங்குவதை மேற்கோள் காட்டி, வாஷிங்டன் சமீபத்தில் இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரிகளை விதித்தது . இதில் உள்ள முரண்பாடு வியக்கத்தக்கது. மாஸ்கோவுடனான எரிசக்தி உறவுகளுக்காக அமெரிக்கா இந்தியாவைத் தண்டிக்கும் அதே வேளையில், இந்திய எரிபொருள் கியேவின் போர்க்கால பொருளாதாரத்தைத் தக்கவைக்க உதவுகிறது. மேலும் படிக்கவும் அமெரிக்காவின் வரி அழுத்தத்தை மீறி, செப்டம்பரில் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா 20% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விநியோக வழிகள் இந்திய வம்சாவளி டீசல் பல வழிகள் வழியாக உக்ரைனை அடைகிறது. ஒரு குறிப்பிடத்தக்க பகுதி ருமேனியாவிலிருந்து டானூப் வழியாக டேங்கர் டெலிவரி மூலம் வருகிறது. கூடுதலாக, துருக்கியின் மர்மாரா எரெக்லிசி துறைமுகத்தில் உள்ள OPET முனையம் வழியாக சரக்குகள் கொண்டு செல்லப்படுகின்றன, இது பகுதி தடைகள் இருந்தபோதிலும் தொடர்ந்து இயங்கும் பாதையாகும். சிக்கலான புவிசார் அரசியல் நிலைமைகளின் கீழ் கூட இந்தியா தன்னை நம்பகமான சப்ளையராக நிலைநிறுத்திக் கொள்ள இந்த வழிகள் உதவியுள்ளன. 2025 ஆம் ஆண்டில் உயரும் பங்கு ஜனவரி முதல் ஜூலை 2025 வரை, உக்ரைனின் டீசல் இறக்குமதியில் இந்தியா 10.2 சதவீதத்தை வழங்கியது, இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1.9 சதவீதத்திலிருந்து ஐந்து மடங்கு அதிகமாகும். இந்தியாவின் பங்கு இப்போது பல ஐரோப்பிய கூட்டாளிகளை விட அதிகமாக இருந்தாலும், அதன் இயற்பியல் ஏற்றுமதி அளவுகள் கிரீஸ் மற்றும் துருக்கியை விட இன்னும் பின்தங்கியுள்ளன. இருப்பினும், ஜூலை மாத புள்ளிவிவரங்கள் விகிதாசார அடிப்படையில் இந்தியாவை அனைத்து போட்டியாளர்களையும் விட முன்னணியில் வைக்கின்றன. மேலும் படிக்கவும் மலிவான ரஷ்ய எண்ணெயிலிருந்து இந்தியாவின் 17 பில்லியன் டாலர் எண்ணெய் சேமிப்பை அமெரிக்க கட்டணங்கள் அழிக்க அச்சுறுத்துகின்றன. ஜூலை மாத இறக்குமதி அமைப்பு ஜூலை மாதத்தில் இந்தியா முதலிடத்தில் இருந்தபோதிலும், மற்ற சப்ளையர்கள் முக்கியமானவர்களாகவே உள்ளனர். கிரீஸ் மற்றும் துருக்கியிலிருந்து டீசல் கணிசமாக இருந்தது, இருப்பினும் ஸ்லோவாக்கியாவின் விநியோகங்கள் இரண்டையும் விட அதிகமாக இருந்தன. போலந்து மற்றும் லிதுவேனியாவின் ஆர்லன் குழுமத்தின் விநியோகங்கள் மொத்த இறக்குமதியில் சுமார் 20 சதவீதத்தைக் கொண்டிருந்தன. இதற்கிடையில், போலந்து மற்றும் டென்மார்க் வழியாக அனுப்பப்பட்ட பிரீமின் வசதிகளிலிருந்து ஸ்வீடிஷ் ஏற்றுமதிகள், ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து சாதனை அளவை எட்டின, ஜூலை மாத இறக்குமதியில் 4 சதவீத பங்களிப்பை அளித்தன. https://www.financialexpress.com/world-news/india-becomes-ukraines-top-diesel-supplier-in-july-as-trump-slaps-punitive-tariffs-on-delhi-over-russian-oil-imports/3961937/

ஜூலை மாதத்தில் இந்தியா உக்ரைனின் முன்னணி டீசல் சப்ளையராக மாறியது

1 week 4 days ago

ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதி தொடர்பாக டெல்லி மீது டிரம்ப் தண்டனை வரிகளை விதித்ததால், ஜூலை மாதத்தில் இந்தியா உக்ரைனின் முன்னணி டீசல் சப்ளையராக மாறியது.

இந்திய வம்சாவளி டீசல் பல வழிகள் வழியாக உக்ரைனை அடைகிறது. கணிசமான பகுதி ருமேனியாவிலிருந்து டானூப் நதியில் டேங்கர் டெலிவரி மூலம் வருகிறது.

சுத்தந்த பத்ரா எழுதியது

புதுப்பிக்கப்பட்டது:ஆகஸ்ட் 30, 2025 11:39 IST

எங்களை பின்தொடரவும்

ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதி தொடர்பாக டெல்லி மீது டிரம்ப் தண்டனை வரிகளை விதித்ததால், ஜூலை மாதத்தில் இந்தியா உக்ரைனின் முன்னணி டீசல் சப்ளையராக மாறியது.

ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதி தொடர்பாக டெல்லி மீது டிரம்ப் தண்டனை வரிகளை விதித்ததால், ஜூலை மாதத்தில் இந்தியா உக்ரைனின் முன்னணி டீசல் சப்ளையராக மாறியது.

ஜூலை 2025 இல், இந்தியா மற்ற சப்ளையர்களை முந்தி உக்ரைனின் மிகப்பெரிய டீசல் மூலமாக மாறியுள்ளது , இது இறக்குமதியில் 15.5 சதவீதமாகும். உக்ரைனிய எண்ணெய் சந்தை பகுப்பாய்வு நிறுவனமான நாஃப்டோரினோக்கின் கூற்றுப்படி, தினசரி ஏற்றுமதி சராசரியாக 2,700 டன்கள் ஆகும், இது இந்த ஆண்டு இந்தியாவின் அதிகபட்ச மாதாந்திர ஏற்றுமதி புள்ளிவிவரங்களில் ஒன்றாகும். இந்த கூர்மையான உயர்வு ஜூலை 2024 இல் இருந்து ஒரு வியத்தகு மாற்றத்தைக் குறிக்கிறது, அப்போது இந்தியா உக்ரைனின் டீசல் தேவைகளில் 1.9 சதவீதத்தை மட்டுமே வழங்கியது.

அமெரிக்க வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில் முரண்பாடு

அரசியல் ரீதியாக பரபரப்பான தருணத்தில் இந்த நிகழ்வு நிகழ்ந்துள்ளது. புது தில்லி ரஷ்ய எண்ணெயை தொடர்ந்து வாங்குவதை மேற்கோள் காட்டி, வாஷிங்டன் சமீபத்தில் இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரிகளை விதித்தது . இதில் உள்ள முரண்பாடு வியக்கத்தக்கது. மாஸ்கோவுடனான எரிசக்தி உறவுகளுக்காக அமெரிக்கா இந்தியாவைத் தண்டிக்கும் அதே வேளையில், இந்திய எரிபொருள் கியேவின் போர்க்கால பொருளாதாரத்தைத் தக்கவைக்க உதவுகிறது.

மேலும் படிக்கவும்

அமெரிக்காவின் வரி அழுத்தத்தை மீறி, செப்டம்பரில் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா 20% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விநியோக வழிகள்

இந்திய வம்சாவளி டீசல் பல வழிகள் வழியாக உக்ரைனை அடைகிறது. ஒரு குறிப்பிடத்தக்க பகுதி ருமேனியாவிலிருந்து டானூப் வழியாக டேங்கர் டெலிவரி மூலம் வருகிறது. கூடுதலாக, துருக்கியின் மர்மாரா எரெக்லிசி துறைமுகத்தில் உள்ள OPET முனையம் வழியாக சரக்குகள் கொண்டு செல்லப்படுகின்றன, இது பகுதி தடைகள் இருந்தபோதிலும் தொடர்ந்து இயங்கும் பாதையாகும். சிக்கலான புவிசார் அரசியல் நிலைமைகளின் கீழ் கூட இந்தியா தன்னை நம்பகமான சப்ளையராக நிலைநிறுத்திக் கொள்ள இந்த வழிகள் உதவியுள்ளன.

2025 ஆம் ஆண்டில் உயரும் பங்கு

ஜனவரி முதல் ஜூலை 2025 வரை, உக்ரைனின் டீசல் இறக்குமதியில் இந்தியா 10.2 சதவீதத்தை வழங்கியது, இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1.9 சதவீதத்திலிருந்து ஐந்து மடங்கு அதிகமாகும். இந்தியாவின் பங்கு இப்போது பல ஐரோப்பிய கூட்டாளிகளை விட அதிகமாக இருந்தாலும், அதன் இயற்பியல் ஏற்றுமதி அளவுகள் கிரீஸ் மற்றும் துருக்கியை விட இன்னும் பின்தங்கியுள்ளன. இருப்பினும், ஜூலை மாத புள்ளிவிவரங்கள் விகிதாசார அடிப்படையில் இந்தியாவை அனைத்து போட்டியாளர்களையும் விட முன்னணியில் வைக்கின்றன.

மேலும் படிக்கவும்

மலிவான ரஷ்ய எண்ணெயிலிருந்து இந்தியாவின் 17 பில்லியன் டாலர் எண்ணெய் சேமிப்பை அமெரிக்க கட்டணங்கள் அழிக்க அச்சுறுத்துகின்றன.

ஜூலை மாத இறக்குமதி அமைப்பு

ஜூலை மாதத்தில் இந்தியா முதலிடத்தில் இருந்தபோதிலும், மற்ற சப்ளையர்கள் முக்கியமானவர்களாகவே உள்ளனர். கிரீஸ் மற்றும் துருக்கியிலிருந்து டீசல் கணிசமாக இருந்தது, இருப்பினும் ஸ்லோவாக்கியாவின் விநியோகங்கள் இரண்டையும் விட அதிகமாக இருந்தன. போலந்து மற்றும் லிதுவேனியாவின் ஆர்லன் குழுமத்தின் விநியோகங்கள் மொத்த இறக்குமதியில் சுமார் 20 சதவீதத்தைக் கொண்டிருந்தன. இதற்கிடையில், போலந்து மற்றும் டென்மார்க் வழியாக அனுப்பப்பட்ட பிரீமின் வசதிகளிலிருந்து ஸ்வீடிஷ் ஏற்றுமதிகள், ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து சாதனை அளவை எட்டின, ஜூலை மாத இறக்குமதியில் 4 சதவீத பங்களிப்பை அளித்தன.

https://www.financialexpress.com/world-news/india-becomes-ukraines-top-diesel-supplier-in-july-as-trump-slaps-punitive-tariffs-on-delhi-over-russian-oil-imports/3961937/

இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி

1 week 4 days ago
இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் வாழ்க்கை மிகவும் சிக்கலானதும், கடினமானதுமான ஒன்று. இந்த செய்தியை பார்த்துவிட்டு அங்கு அகதி முகாமில் வாழும் ஒருவருடன் உரையாடினேன். அவர்கள் 1990 காலங்களில் இலங்கை இராணுவம் புலிகள் இடையிலான போர் மீண்டும் தொடங்கியதும் படகில் சென்றவர்கள். தம்முடன் அடிக்கடி வழக்கறிஞர்கள் வந்து உரையாடுவதாகவும், தமக்கு வதிவுடமை வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள், மற்றும் வழக்கு சம்மந்தமான தகவல்கள் அவ்வப்போது பகிரப்படும் என கூறினார். எனக்கு விளங்கிய அளவில் வழக்கில் கிடைக்கக்கூடிய சாதகமான முடிவு அவர் தமக்கு இந்திய குடியுரிமைக்கு நிகரான வதிவுடமை கிடைக்கும் என கூறுகின்றார். அதேசமயம், இந்திய குடியுரிமை இலகுவாக பெறப்படக்கூடிய ஒன்று அல்ல என இவ்விடயம் பற்றி சிலருடன் உரையாடியபோது கூறினார்கள். இந்தியாவில் பிறந்த அகதிகளாக சென்ற இலங்கை தமிழர்களின் பிள்ளைகள் பாடு பெரும் திண்டாட்டமாகி உள்ளது. காரணம் இவர்கள் இந்தியாவில் பிறந்தாலும் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன.

களைத்த மனசு களிப்புற ......!

1 week 4 days ago
Timeless Indian Melodies oeosrpntSd7f06rc,2067005p: 1t1s3a9h6h2ebehetuh13ci1 5m7ftf35 · Hema Malini, Saira Banu Khan, and Rekha — three timeless legends of Indian cinema — came together in a rare and radiant frame during the wedding reception of Aamir Khan’s daughter, Ira Khan, and son-in-law, Nupur Shikhare, in Mumbai on January 13, 2024. Each of them, icons in their own right, graced the occasion with unmatched elegance: Hema Malini in her classic white saree, Saira Banu in a regal blue ensemble, and Rekha in her signature rich silk saree. Their presence reflected not just glamour, but also decades of artistry, grace, and cultural legacy they have bestowed upon Indian cinema. The sight of these extraordinary women together evoked nostalgia, admiration, and respect, reminding everyone of an era where talent, beauty, and dignity seamlessly blended on screen. This gathering was more than a celebration — it was a living reminder of the golden charm of Indian cinema, carried gracefully into the present. #HemaMalini #SairaBanu #Rekha #fblifestyle......... !

'தெருநாய் மட்டுமல்ல, வளர்ப்பு நாய்களாலும் பிரச்னைதான்' - தவறு எங்கே நடக்கிறது?

1 week 4 days ago
திருத்திக் கொள்ளுங்கள் ஏராளன் . ............. பணமுள்ள என்று வரவேண்டும் . ....... வீரம் , நீதி , நேர்மை எல்லாம் கலாவதியாகி கனகாலம் ஆயிற்று . ......... ! உபயம் : தினசரி செய்திகள் , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் , அன்றாட வாழ்வில் காண்பவை கேட்பவை .........! 😇

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 

1 week 4 days ago
Naga Logendralingam npSeosdorti19 42tf97f07ht19a8h10000776ci7a66hl1ga1871t0ma072 · இவ்வாறான அரசியல்வாதிகளை இலங்கை வரலாற்றில் நாம் க ண்டிருக்கின்றோமா? எமது தமிழ் அரசியல்வாதிகள் இவ்வாறு மனந்திறந்து பேசியிருக்கின்றார்களா? ......... !

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை; விசாரணைகள் தீவிரம்!

1 week 4 days ago
ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் நடத்த பாக்கிஸ்தானியர்கள் அழைக்கப்பட்டுள்ளது; விசாரணைகளில் தெரியவந்துள்ளது - அமைச்சர் ஆனந்த விஜேபால Published By: Vishnu 05 Sep, 2025 | 03:41 AM (இராஜதுரை ஹஷான்) இந்நாட்டில் ஐஸ் உற்பத்தி போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்துவதற்காக இரண்டு பாக்கிஸ்தானியர்கள் நாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கறுவாத்தோட்டம் புதிய பொலிஸ் நிலைய கட்டிடத்தை வியாழக்கிழமை (4) திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்த நாட்டில் மிக நீண்டகாலமாக குற்றச் செயல்களுடனான கலாச்சாரம் காணப்பட்டது. அந்த கலாச்சாரத்தால் தோற்றம் பெற்ற செயற்பாட்டாளர்களையே அண்மையில் கைது செய்தோம். நாட்டில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்திச் செல்வதற்காக இரண்டு பாக்கிஸ்தானியர்கள் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளின் போது வெளிவந்துள்ளது. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் மேலும் தீவிரமாக ஆராயப்பட்டு அதற்குரிய நடவடிக்கைகள் சட்டத்தின் ஊடாக எடுக்கப்படும். நாட்டில் சட்டவாட்சியை உறுதிப்படுத்துவதற்காக பொலிஸாருக்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். 159 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு பொலிஸ் நிலையங்களுக்கு உரிய வசதிகள் வழங்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/224245

ஐ.ஓ.எம் அனுசரணையுடன் விசேட செயற்திட்டத்தை வடிவமைக்கிறது ஐ.நா

1 week 4 days ago
விசேட செயற்திட்டத்தை வடிவமைக்கிறது ஐ.நா Published By: Vishnu 05 Sep, 2025 | 03:30 AM (நா.தனுஜா) நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் நிலவும் காணிப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கிலான விசேட செயற்திட்டமொன்று சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் சபையினால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் நிலங்களுக்கான எல்லை நிர்ணயம், படையினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் தனியார் காணிகள், அரச கட்டமைப்புக்கள் உள்ளிட்ட ஏனைய தரப்பினரால் பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் காணி சுவீகரிப்புக்கள் என்பன உள்ளடங்கலாக காணி சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் சமகாலத்தில் இன்னமும் தீர்க்கப்படாமல் உள்ளன. இப்பிரச்சினைகளுக்கு சுமுகமானதும், நியாயமானதுமான முறையில் தீர்வுகாணும் நோக்கில் சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் (ஐ.ஓ.எம்.) அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் சபையினால் விசேட செயற்திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகிறது. அத்தோடு இச்செயற்திட்டத்தின்கீழ் அரச கட்டமைப்புக்கள், பாதுகாப்புத்தரப்பினர், சிவில் சமூக அமைப்புக்கள், படையினர் வசமுள்ள தனியார் காணிகளின் உரிமையாளர்கள் உள்ளடங்கலாக இவ்விவகாரத்துடன் தொடர்புடைய சகல தரப்பினரும் உள்வாங்கப்படுவர் எனவும் தெரியவருகிறது. மேலும் இச்செயற்திட்டத்தின் ஊடாக வட, கிழக்கில் காணிப்பிரச்சினைகளுடன் தொடர்புடைய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தல், படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல், எல்லைகளை உரியவாறு மீள்நிர்ணயிப்பதற்கு அவசியமான தொழில்நுட்ப ஒத்துழைப்புக்களை உள்ளகக் கட்டமைப்புக்களுக்கு வழங்கல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/224244

ஐ.ஓ.எம் அனுசரணையுடன் விசேட செயற்திட்டத்தை வடிவமைக்கிறது ஐ.நா

1 week 4 days ago

விசேட செயற்திட்டத்தை வடிவமைக்கிறது ஐ.நா

Published By: Vishnu

05 Sep, 2025 | 03:30 AM

image

(நா.தனுஜா)

நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் நிலவும் காணிப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கிலான விசேட செயற்திட்டமொன்று சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் சபையினால் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் நிலங்களுக்கான எல்லை நிர்ணயம், படையினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் தனியார் காணிகள், அரச கட்டமைப்புக்கள் உள்ளிட்ட ஏனைய தரப்பினரால் பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் காணி சுவீகரிப்புக்கள் என்பன உள்ளடங்கலாக காணி சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் சமகாலத்தில் இன்னமும் தீர்க்கப்படாமல் உள்ளன.

இப்பிரச்சினைகளுக்கு சுமுகமானதும், நியாயமானதுமான முறையில் தீர்வுகாணும் நோக்கில் சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் (ஐ.ஓ.எம்.) அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் சபையினால் விசேட செயற்திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகிறது.

அத்தோடு இச்செயற்திட்டத்தின்கீழ் அரச கட்டமைப்புக்கள், பாதுகாப்புத்தரப்பினர், சிவில் சமூக அமைப்புக்கள், படையினர் வசமுள்ள தனியார் காணிகளின் உரிமையாளர்கள் உள்ளடங்கலாக இவ்விவகாரத்துடன் தொடர்புடைய சகல தரப்பினரும் உள்வாங்கப்படுவர் எனவும் தெரியவருகிறது.

மேலும் இச்செயற்திட்டத்தின் ஊடாக வட, கிழக்கில் காணிப்பிரச்சினைகளுடன் தொடர்புடைய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தல்,  படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல், எல்லைகளை உரியவாறு மீள்நிர்ணயிப்பதற்கு அவசியமான தொழில்நுட்ப ஒத்துழைப்புக்களை உள்ளகக் கட்டமைப்புக்களுக்கு வழங்கல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/224244