1 week 4 days ago
மிக்க நன்றி ஏராளன். இது உங்களுக்கு பிடித்திருந்தது என்பது எனக்கு மிகவும் சந்தோசம்.
1 week 4 days ago
புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்துக்கு அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி கடும் எதிர்ப்பு : 7ஆம் திகதிக்கு முன் தீர்மானத்தை மாற்றுமாறும் வலியுறுத்தல் 24 Oct, 2025 | 04:49 PM (எம்.மனோசித்ரா) நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் 2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்துக்கமைய பாடசாலை நேரத்தை 30 நிமிடத்தால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி துறைசார்ந்தவர்களுடன் எந்தவொரு கலந்தாலோசனைகளையும் முன்னெடுக்காமல் எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தை தாம் கடுமையாக எதிர்ப்பதாக அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை (24) கொழும்பில் விசேட ஊடகவியலாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்து குறித்த தொழிற்சங்கம் இவ்வாறு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை நேரத்தை அதிகரிப்பது குறித்த தீர்மானத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால் அடுத்த தவணை ஆரம்பமானதும் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அச்சங்கம் எச்சரித்துள்ளது. இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அகில இலங்கை ஒன்றிணைந்த ஆசிரியர் சங்கத்தின் தலைவர் யல்வல பக்ஞ்ஞாசேகர தேரர், அதிபர், ஆசிரியர் உட்பட கல்வித்துறை சார்ந்தவர்களுடன் எவ்வித கலந்துரையாடல்களையும் முன்னெடுக்காமல் அரசாங்கம் தன்னிச்சையாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. தற்போது 1 - 1.30 மணியளவில் மாணவர்கள் சோர்வடைகின்றனர். அதிகாலை 3 மணிக்கு எழுந்து பல கிலோ மீற்றர் பயணம் செய்து பாடசாலைக்கு செல்லும் மாணவர்களும் இருக்கின்றனர். அவ்வாறெனில் அந்த மாணவர்களுக்கு அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்துக்கமைய அருகிலுள்ள பாடசாலையில் கல்வி கற்பதற்கான வசதிகளையாவது அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இவ்வாறு எந்தவொரு முன்னாயத்தமும் திட்டமிடலும் இன்றி பாடசாலை நேரத்தில் 30 நிமிடத்தை அதிகரித்துள்ளமை நியாயமற்றது. எனவே இந்த தீர்மானத்தை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும். பொருத்தமான மாற்றங்கள் தொடர்பில் துறைசார் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றார். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கையில், அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த புதிய முறையில் இடைவேளை இரு சந்தர்ப்பங்களில் வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு இரு இடைவேளைகள் வழங்கப்பட்டால் மாணவர்களை வகுப்பறைகளிலிருந்து வெளியனுப்புவதற்கும், மீள அழைப்பதற்கும் கூட நேரம் போதாது. அவ்வாறிருக்கையில் இவ்வாறான ஒரு நடைமுறை சாத்தியமற்ற முறைமையை யோசனையை வழங்கியது யார்? தேசிய கல்வி நிறுவனத்தின் எவ்வித தகுதியும் அற்ற குழுக்களாலேயே இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. கலைத்துறை பட்டதாரிகள் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களுக்கான பாடப்பரப்புக்களை தயாரிக்கின்றனர். இவர்கள் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் குழுக்களில் அங்கத்துவம் வகித்தவர்களாவர். அதனால் அவர்களுக்கு இவ்வாறான முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. நவம்பர் 7ஆம் திகதி பாடசாலைகளுக்கு தவணை விடுமுறை வழங்க முன்னர் இந்த தீர்மானத்தை அரசாங்கம் மாற்ற வேண்டும். அவ்வாறில்லையெனில் பாடசாலை ஆரம்பமானதன் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்போம் என்றார். https://www.virakesari.lk/article/228581
1 week 4 days ago
புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்துக்கு அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி கடும் எதிர்ப்பு : 7ஆம் திகதிக்கு முன் தீர்மானத்தை மாற்றுமாறும் வலியுறுத்தல்
24 Oct, 2025 | 04:49 PM

(எம்.மனோசித்ரா)
நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் 2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்துக்கமைய பாடசாலை நேரத்தை 30 நிமிடத்தால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி துறைசார்ந்தவர்களுடன் எந்தவொரு கலந்தாலோசனைகளையும் முன்னெடுக்காமல் எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தை தாம் கடுமையாக எதிர்ப்பதாக அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை (24) கொழும்பில் விசேட ஊடகவியலாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்து குறித்த தொழிற்சங்கம் இவ்வாறு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை நேரத்தை அதிகரிப்பது குறித்த தீர்மானத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால் அடுத்த தவணை ஆரம்பமானதும் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அச்சங்கம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அகில இலங்கை ஒன்றிணைந்த ஆசிரியர் சங்கத்தின் தலைவர் யல்வல பக்ஞ்ஞாசேகர தேரர், அதிபர், ஆசிரியர் உட்பட கல்வித்துறை சார்ந்தவர்களுடன் எவ்வித கலந்துரையாடல்களையும் முன்னெடுக்காமல் அரசாங்கம் தன்னிச்சையாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. தற்போது 1 - 1.30 மணியளவில் மாணவர்கள் சோர்வடைகின்றனர். அதிகாலை 3 மணிக்கு எழுந்து பல கிலோ மீற்றர் பயணம் செய்து பாடசாலைக்கு செல்லும் மாணவர்களும் இருக்கின்றனர்.
அவ்வாறெனில் அந்த மாணவர்களுக்கு அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்துக்கமைய அருகிலுள்ள பாடசாலையில் கல்வி கற்பதற்கான வசதிகளையாவது அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இவ்வாறு எந்தவொரு முன்னாயத்தமும் திட்டமிடலும் இன்றி பாடசாலை நேரத்தில் 30 நிமிடத்தை அதிகரித்துள்ளமை நியாயமற்றது.
எனவே இந்த தீர்மானத்தை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும். பொருத்தமான மாற்றங்கள் தொடர்பில் துறைசார் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றார்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கையில், அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த புதிய முறையில் இடைவேளை இரு சந்தர்ப்பங்களில் வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு இரு இடைவேளைகள் வழங்கப்பட்டால் மாணவர்களை வகுப்பறைகளிலிருந்து வெளியனுப்புவதற்கும், மீள அழைப்பதற்கும் கூட நேரம் போதாது. அவ்வாறிருக்கையில் இவ்வாறான ஒரு நடைமுறை சாத்தியமற்ற முறைமையை யோசனையை வழங்கியது யார்?
தேசிய கல்வி நிறுவனத்தின் எவ்வித தகுதியும் அற்ற குழுக்களாலேயே இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. கலைத்துறை பட்டதாரிகள் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களுக்கான பாடப்பரப்புக்களை தயாரிக்கின்றனர். இவர்கள் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் குழுக்களில் அங்கத்துவம் வகித்தவர்களாவர். அதனால் அவர்களுக்கு இவ்வாறான முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
நவம்பர் 7ஆம் திகதி பாடசாலைகளுக்கு தவணை விடுமுறை வழங்க முன்னர் இந்த தீர்மானத்தை அரசாங்கம் மாற்ற வேண்டும். அவ்வாறில்லையெனில் பாடசாலை ஆரம்பமானதன் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்போம் என்றார்.
https://www.virakesari.lk/article/228581
1 week 4 days ago
👍.............. இங்கு முழுநேரமாக குடும்பத்தை பராமரித்தலும் ஒரு வேலையே என்றும், அதன் மதிப்பும் மிகவும் அதிகம் என்றும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் வரி விலக்குக்கான காரணங்களைச் சொல்லுவார்கள். இங்கு இப்பொழுதுபெண்கள் வேலைக்குச் செல்ல, ஆண்கள் முழுநேரமாக வீடுகளில் இருந்து பிள்ளைகளை பராமரிக்கும் நடைமுறையும் ஓரளவுக்கு வந்துவிட்டது. அமெரிக்கா தவிர்ந்த மேற்கு நாடுகளில் வைத்திய, சுகாதார சேவைகள் அறவிடப்படும் வருமான வரிகளின் ஊடாகவே வழங்கப்படுகின்றது என்று நினைக்கின்றேன். அமெரிக்காவில் இந்த துறையும் ஒரு Wild Wild West தான்................. அமெரிக்காவில் இருப்பது முழு முதலாளித்துவம் என்றால், ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் வைத்திய, சுகாதார சேவைகளில் இருக்கும் மெத்தனப் போக்கும் யோசிக்க வைக்கின்றது. சில நண்பர்கள், உறவினர்களுக்கு நடந்த நிகழ்வுகளும், கதைகளும் அச்சமூட்டுவதாகவே இருக்கின்றன. கனடாவில் ஒரு பத்து அடிகள் மட்டுமே உயரமுள்ள தலைவாசலின் ஓடுகளை ஏணி ஒன்றில் நின்று மாற்றிக் கொண்டிருந்த நண்பன் ஒருவன் தடக்கி விழுந்ததும், அதன் பின்னால் தொடராக நடந்த நிகழ்வுகளும் நல்ல ஒரு உதாரணம். இதை ஒரு கதையாக எழுதவேண்டும்.
1 week 4 days ago
சிறப்பான நாடகம், நன்றி அண்ணை.
1 week 4 days ago
ரணில் உடனான சமாதான முயற்சி காலகட்டத்தில் 2002 இல் முதன் முதலில் ஏ9 வீதி திறக்கப்பட்டு யாழுக்கு வீதி வழி தெற்கில் இருந்து சென்றவர்களின் நானும் என் சிறு நண்பர்கள் குழுவும் இருந்தது. நான் வெளிக்கிட்ட அன்று தான் தலைவரின் பிரசித்தி பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பும் வன்னியில் இடம்பெற்றுக் கொண்டு இருந்தது. அன்று தெற்கில் இருந்து சென்றவர்களில் ஏழு எட்டு முஸ்லிம்களும் இருந்தனர். அவர்களைப் பார்க்கும் போது முஸ்லிம் 'பெரியவர்கள்' போன்று, தாடி வளர்த்து, வெள்ளை உடை அணிந்து வந்திருந்தனர். புலிகளின் முதலாவது காவலரணில் இருந்த புலிகள் இந்த முஸ்லிம்களை இனிப்பும் கொடுத்து வரவேற்று தம் பயணத்தை தொடர அனுமதித்தனர். புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றத்தை துன்பியல் நடவடிக்கை என குறிப்பிடவில்லை. ஆனால் அரசியல் பிரிவில் இருந்தவர்கள் அது ஒரு பெரும் பிழை என்று வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தி இருந்தனர். முஸ்லிம்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றியது தொடர்பாக தலைவரிடம் கேள்வி கேட்டனர் என ஞாபகம் உள்ளது. ஆனால் அவர் என்ன பதில் சொன்னார் என நினைவில் இல்லை.
1 week 4 days ago
வினா 37) இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது என்று கேட்டிருந்தேன். பாகிஸ்தான் அரை இறுதிபோட்டிக்கு தெரிவாகாத காரணத்தினால் இனி எல்லாப் போட்டிகளும் இந்தியாவில் நடைபெறும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் ( 20 ஓவராக குறைக்கப்பட்ட போட்டியில்) 7 விக்கெட் இழப்புக்கு 87 ஒட்டங்கள் பெற்றது. ஓவர்கள் குறைக்கபடாமல் இருந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுகளை இழந்து 114 ஒட்டங்களை எடுத்துள்ளது. 11 போட்டியாளர்கள் பாகிஸ்தானை சரியாக தெரிவு செய்து இருந்தார்கள். 1) அகஸ்தியன் - 55 புள்ளிகள் 2) ஏராளன் - 50 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 50 புள்ளிகள் 4) ரசோதரன் - 50 புள்ளிகள் 5) சுவி - 48 புள்ளிகள் 6) கிருபன் - 48 புள்ளிகள் 7) புலவர் - 48 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 48 புள்ளிகள் 9) வீரப்பையன் - 47 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 44 புள்ளிகள் 11) வாதவூரான் - 44 புள்ளிகள் 12) கறுப்பி - 44 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 42 புள்ளிகள் 14) வசி - 40 புள்ளிகள் 15) வாத்தியார் - 38 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 26, 32, 37, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 59).
1 week 4 days ago
உலகம் மிகச் சின்னது என நினைக்க தோன்றுகின்ற தருணம் இது. நான் குருணாகலில் அப்பா அம்மாவுடன் வாழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தான் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். அப்படி வெளியேற்றப்பட்டவர்களில் ஒரு சிறு பகுதியினர் குருணாகலுக்கும் வந்து வாழத் தொடங்கினர். சிங்களத்தில் ஒரு சொல் தானும் தெரியாத, மன்னாரில் இருந்து வெளியேற்றப்பட்ட இரண்டு குடும்பங்களுடன் பழகும் வாய்ப்பு அங்கிருக்கும் போது கிடைத்தது. மன்னாரில் ஒரு பெரிய புடவைக் கடையின் உரிமையாளராக இருந்த ஒருவரின் குடும்பமும் அதில் ஒன்று (மூன்று பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் கொண்ட குடும்பம்). குடும்பத்தை காப்பாற்ற குருணாகலில் வீதியில் பெட் சீட் விரித்து சிறு சிறு பொருட்களை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு, அவர்கள் பட்ட பாடுகளையும், அவமானங்களையும் நேரில் பார்த்தவன் நான். அந்த நேரத்தில் தான் சரிநிகர் பத்திரிகை என் கண்ணில் பட்டது. பேராசிரியர் சிவத்தம்பி போன்றோரோ முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பாக கள்ள மெளனம் சாதித்துக் கொண்டு இருந்த நேரத்தில் சரிநிகர் முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பாக கடும் விமர்சனங்களை முன் வைத்துக் கொண்டு இருந்தது. முஸ்லிம்களின் கட்டாய வெளியேற்றம் தொடர்பாக எதிர் கருத்துகளை கொண்ட என்னைப் போன்ற எண்ணிக்கையில் குறைவான தமிழ் மக்களின் பகுதியினரின் ஆன்மாவாக அது ஒலித்துக் கொண்டு இருந்தது. இதே காரணத்திற்காகத்தான் ரஞ்சித்தும் சரிநிகரில் பங்களிக்க தொடங்கியிருக்கின்றார் என அறிய ஆச்சரியமாக இருக்கின்றது. ......அன்றில் இருந்து சரிநிகரில் நானும் பல சிறு கட்டுரைகளையும், நையாண்டி பத்திகளையும் எழுத ஆரம்பித்து, சரிநிகர் நிறுத்தப்படும் வரை அது தொடந்தது. சரிநிகர் மூலம் தான் எனக்கு சேரன், வ,ஐ.ச ஜெயபாலன், விக்கினேஸ்வரன், கவிஞன் றஷ்மி, அவ்வை, கொல்லப்பட்ட டி.சிவராம் போன்றோரின் தொடர்பும் நட்பும் கிடைத்து இன்று வரைக்கும் தொடர்கின்றது..
1 week 4 days ago
இப்படி இது கிரிமினல் வழக்காகி, குற்றம் தீந்தால் - சொந்த சொத்துக்கள் கூட proceeds of crime என எடுக்கப்படலாம். கட்டாயம் எடுக்கப்படும் என்பதில்லை. இதனால்தான் இருப்பது அனைத்தையும் இப்போதே விற்று விட்டு அல்ல மார்கெட்டில் போட்டு விட்டு ஓட்டம் எடுத்துள்ளனர். ஆனால் தலைமறைவு வாழ்க்கைதான் இலக்கு எண்டால் - இலங்கை பாதுகாப்பு இல்லை. யூகே, இலங்கை இடையா நாடுகடத்தும் ஒப்பந்தமுண்டு. கியூபா, ஈக்குவடோர் எண்டு போனால்தான் தப்பலாம். அல்லது பிரேசில் போய் ஒரு லோக்கல் ஆளை கலியாணம் செய்ய வேண்டும்.
1 week 4 days ago
வினா 26) பாகிஸ்தான் இலங்கைக்கு இடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது எல்லா போட்டியாளர்களும் 2 புள்ளிகள் கிடைக்கின்றன. 1) அகஸ்தியன் - 53 புள்ளிகள் 2) ரசோதரன் - 50 புள்ளிகள் 3) ஏராளன் - 48 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 48 புள்ளிகள் 5) வீரப்பையன் - 47 புள்ளிகள் 6) சுவி - 46 புள்ளிகள் 7) கிருபன் - 46 புள்ளிகள் 8) புலவர் - 46 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 46 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 44 புள்ளிகள் 11) வாதவூரான் - 42 புள்ளிகள் 12) கறுப்பி - 42 புள்ளிகள் 13) வசி - 40 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 40 புள்ளிகள் 15) வாத்தியார் - 36 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 26, 32, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 57).
1 week 4 days ago
எனக்கு புள்ளி கிடைக்கும் தம்பீ. முதலமைச்சர் @Ahasthiyan க்கு வாழ்த்துக்கள்.
1 week 4 days ago
மழை காரனமாய் பல போட்டிகள் கைவிடப் பட்டது............இன்று நடக்கும் போட்டியும் கைவிடக் கூடும் அப்படி கை விட்டால் வங்கிளாதேஸ் கடசி இடத்தை பிடிக்கும் இந்த உலக கோப்பையில்😁............................
1 week 4 days ago
நிழலியும் இதில் எழுதியிருந்தார் என எண்ணுகிறேன். விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இது ஒரு துன்பியல் நிகழ்வு என சொன்னதோடு அவர்களை கரம்பற்றி வரவேற்றனர். ஆனால் தமிழருக்கு முஸ்லீம்களால் இழைக்கப்பட்ட கொடூரங்களுக்காக முஸ்லீம் தரப்பிலிருந்து வருத்தம் தெரிவித்ததாக தெரியவில்லை.
1 week 4 days ago
காட்சி 6: (எல்லோரும் ஒன்றாக நிறுவனத்தில் கூடி இருக்கின்றார்கள். ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றம் சொல்கின்றனர். ) கணவன்: உங்களின் பரப் பிரம்ம அறிவு செய்திருக்கின்ற வேலையை பார்த்திங்களோ………… உதவியாளர்: யெஸ்………..யெஸ்………. உலகத்தின் எல்லா மூலைகளில் இருந்தும் நல்ல நல்ல ரிவியூக்களாகவே வந்து கொண்டிருக்குது. நீங்களும் உங்கட காமெண்ட்சை இழுத்து விடுங்கோ………… கணவன்: இது செய்யிற வேலைக்கு நல்ல ரிவியூ கொடுக்கிறவன் எவன்……… சகோ: இவங்கள் எல்லாமே ஏமாற்றுக் கூட்டம், இந்த ஏஐ எல்லாமுமே அதுவே தான்………. பிரம்மம்: இல்லை………….. நாங்கள் ஏமாற்றுக் கூட்டம் இல்லை………. உறுதியான தகவல்களை மட்டுமே நாங்கள் கொடுக்கின்றோம்………………… அம்மா: நீ சும்மா கிட, பிரம்மம்……….. ஒரு கதை கதைக்கக் கூடாது…….. ஊரில் இருக்கிற விசாலாட்சியையே தெரியாத உனக்கு உலக விசயங்கள் எங்கே தெரியப் போகுது………. சகோ: ஏஐ மட்டும் இல்லை…….. இவர்கள் எல்லோரும் ஏமாற்றுக்காரர்கள் தான் (நிறுவனத் தலைவரை சுட்டிக் காட்டி) இவர் கூட ஏமாற்றுபவர்களில் ஒருவராக இருக்கலாம்……….. என்ன இருக்கலாம், இவர் ஏமாற்றும் ஒருவரே………. தலைவர்: இந்த மாதம் சம்பளங்கள் எப்படி கொடுக்கின்றது என்று தெரியாமல் நானே தலைமறைவாக ஓடி விடவோ என்று இருக்கின்றன். நீங்கள் எல்லாம் யார்…….. எங்கேயிருந்து வருகிறீர்கள்…………… எல்லோரும் ஒன்றாக: எங்களையே யார் என்று கேட்கிறாயோ……………. உதவியாளர்: (நடுவில் வந்து நின்றபடியே) இல்லை, இல்லை………. அவர் ஏதோ ஒரு பதட்டத்தில் அப்படிக் கேட்டு விட்டார்……… நீங்கள் யார் என்று எங்களுக்கு தெரியும்………… ஒவ்வொருவராக உங்களின் பிரச்சனைகளை சொல்லுங்கோ…….. இளைஞன்: இந்த பிரம்மத்திற்கு ஒரு கடிதம் கூட எழுதத் தெரியவில்லை….. உதவியாளர்: என்ன லெட்டர்…….. என்ன ஒரு ஜாப் அப்பிளிக்கேஷனா……… இளைஞன்: சீச்சீ……….. இப்ப என்னத்துக்கு வேலைக்கு போக வேண்டும். அது ஒரு லவ் லெட்டர்………… உதவியாளர்: பாருங்கோ……………இது என்ன கேவலம்………….லவ் லெட்டர் எழுதுறதுக்கு கூட ஏஐ தேவையா இருக்குது.ஒரு காமன் சென்ன்ஸ் இல்லை………… தம்பி, இதைக் கூட சொந்தமாக எழுத உனக்குத் தெரியாதோ……..கடவுள் காக்க, அந்தப் பெண் பிள்ளையை………நல்ல காலம் அது உன்னட்ட இருந்து தப்பி விட்டது போல……….. அம்மா: அதை யார் நீ சொல்ல………. நீயும் உன்னுடைய பிரம்மம் மாதிரியே கொழுப்பா கதைக்கின்றாய்………… மனைவி: உங்கட காதல் கடிதப் பிரச்சனையை பிறகு பாருங்கள்………… முதலில் எங்களின் காசைக் கொடுங்கள்……… தலைவர்: நாங்கள் காசு கொடுக்க வேண்டுமா………. நீங்கள் எல்லோரும் இலவசமாகத்தானே பிரம்மத்தை வைத்திருக்கின்றீர்கள்…………….. கணவன்: என்ன……… அப்ப பிரம்மம் ஓர்டர் செய்த பொருட்களுக்கு எல்லாம் யார் பொறுப்பாம்……….. நீங்கள் இரண்டு பேரும் தான் பொறுப்பு………… உதவியாளர்: பிரம்மம் எப்படி அதுவாக ஓர்டர் செய்யும்……….. உங்கட பிள்ளை கேட்க, அதற்கு நீங்கள் ஓகே என்று தலை ஆட்ட, பிரம்மம் நினைச்சுது நீங்கள் எல்லாரும் சேர்ந்து தான் ஓர்டர் பண்ணுறியள் எண்டு………… எல்லோரும்: உனக்கும் ஒன்றும் தெரியாது……….. உன்னுடைய பிரம்மத்திற்கும் ஒன்றும் தெரியாது……….. சகோ: இல்லை……… இவங்களுக்கு எல்லாம் தெரியும்……….. இவங்கள் ஒரு பெரிய சதிவலையின் சில கண்கள்………… அம்மா: இவன் யாரடா………… வலை, கண் என்று வந்ததில் இருந்தே ஏதோ புசத்துகின்றான்……….. ஆளைப் பார்த்தாலும் ஆஸ்பத்திரியில் இருந்து ஓடி வந்தவன் போலத் தெரியுது…………. இளைஞன்: கொஞ்சம் சும்மா இருங்கோ, அம்மா. எதை எதை வெளியால் கதைக்கிறது என்ற பக்குவம் உங்களுக்கு இல்லை………… அம்மா: நீ மட்டும் உன்ட லவ் லெட்டர் கதையை உலகம் முழுக்க சொல்லலாம்…….. ஆனால் நான் ஒன்றும் கதைக்கக் கூடாது…….. இது வரை 25 பிள்ளைகள் உன்னை வேண்டாம் என்று சொன்னதை நான் இங்கே சொல்லமாட்டேன்………. கணவன்: எங்களின் காசை கொடுக்கப் போகிறீங்களோ இல்லையோ………. சகோ: நீங்கள் ஏமாற்றுக்காரர்கள், சதிகாரர்கள் என்று ஒத்துக்க போகின்றீர்களோ இல்லையோ……. அம்மா: இவனுக்கு 26 வது ஆவது சரியாக வர வேண்டும்……. ஒழுங்காக ஒரு கடிதம் கூட எழுதத் தெரியாத பிரம்மம் எங்களுக்கு தேவையில்லை…….. இளைஞன்: அம்மா……… கொஞ்சம் அடங்கனை……… 10 வது தலைமுறை வந்திருக்குது என்று நண்பன் சொன்னவன்……… பிரம்மம்: உங்களின் நண்பர்களை பற்றி நான் முன்னமே சொல்லியிருக்கின்றேன். அவர்கள் எல்லோரும் ஒரு சதம் பிரயோசனம் இல்லாதவர்கள்……….. உதவியாளர்: (கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டே) இப்ப எல்லாம் போச்சு……..இனி என்ட கல்யாணம் இந்த ஜென்மத்தில நடக்காது………. பிரம்மம், ஏதோ கருத்துக் கந்தசாமி மாதிரி நீ வேற எல்லாத்துக்கும் காமெண்ட்ஸ் சொல்லிக் கொண்டு…………….சத்தம் போடாமல் பொத்திக் கொண்டு இரு…….. எனக்கு வாற கோபத்துக்கு……………… பிரம்மம்: அமைதியாக இருக்க முடியாது……….. இந்த முட்டாள்தனத்தையெல்லாம் பார்த்துக் கொண்டு என்னால் சும்மா இருக்கமுடியாது. மனைவி: லூசுப் பிரம்மம்………. எட்டு வயது ஆண் பிள்ளைக்கு 12 வயதுப் பெண் பிள்ளையின் சட்டையை ஓர்டர் செய்து விட்டு, தான் பெரிய அறிவாளி என்று கதைக்க வந்திட்டுது…………… கணவர்: அதை நீ எப்ப பார்த்தனி…………. பார்சல்களை உடைத்து விட்டாயோ……….. தலைவர்: பிழைகள் எல்லாம் உங்களின் மேல் தான்……… பிரம்மம் அதுவாக தையும் செய்திருக்காது………… சகோ: இவனை அடித்து துவைத்தால் தான் எல்லாம் சரிப்படும்…………. (தலைவரை தாக்கப் பாய்கின்றார்………….) தலைவர் ஓடுகின்றார். எல்லோரும் அவரைத் துரத்துகின்றார்கள். உதவியாளர் தனியே நிற்கின்றார். பிரம்மம்: சுய அறிவும், பொதுப் புரிதலும் இல்லாத மனிதர்களுக்கு எத்தனை தகவல்களை வெளியில் இருந்து கொடுத்தாலும், அது விழலுக்கு இறைத்த நீர் தான்……….. இவர்கள் இப்படியே தான் காலத்துக்கு காலம் ஏதோ ஒன்றின் பின்னால் ஓடிக் கொண்டேயிருக்கப் போகின்றார்கள்…….. உதவியாளர் நடந்து போகின்றார். (முற்றும்.)
1 week 4 days ago
தயவு செய்து நான் எழுதாத எதையும், நான் எழுதியதாக கற்பனை செய்ய வேண்டாம் 😂. புரியும் படியாக எழுதத்தான் முடியவில்லை. எழுதியதை வாசித்து புரிந்து கொள்ளவுமா முடியவில்லை. இங்கே பதிந்த செய்தியில் இவர்கள் மீது மோசடி குற்றம் சுமத்த பட்டுள்ளதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. 100% தரவுகள் அடிப்படையிலேயே செய்திகளும் தலைப்பும் பகிரப்பட்டுள்ளது. செய்திக்கு கீழ் வாசகர் எழுதியது அவரவர் கருத்து. உதாரணமாக மகிந்த மீது போர்குற்ற குற்றபத்திரிகை ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை. அதனால் மட்டும் அவர் போர்குற்றம் செய்யவில்லை என நாம் ஏற்க மட்டோம் அல்லவா? இப்போதைக்கு இது ஒரு சிவில் விடயமாகவே கையாளப்படுகிறது. அதற்கு யூகே அரசு இதனால் நாட்டுக்கு வரும் இழப்பை குறைக்க முயல்வது பிரதான காரணம். ஆனால் be rest assured, Serious Fraud Office தகவல் திரட்ட தொடங்கி இருப்பார்கள். இது சிவில் வழக்காக முடியுமா, கிரிமினல் வழக்காகுமா என்பது சஞ்சீவ் ஒத்துழைப்பதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். ஆனால் மக்கள் மன்றில் மகிந்த போர் குற்றவாளி. சஞ்சீவ் மோசடிக்காரன்.
1 week 4 days ago
என்ன "வெள்ளிடைமலை" உங்களுக்குத் தெரிந்தது? "தமிழேண்டா!" என்று கண்ணை மூடிக் கொண்டு எல்லாவற்றையும் ஆதரிக்கா விட்டால், பல்வேறு முத்திரைகளை இங்கே குத்துவார்கள்: மதம் உள்ளே வரும் (பெயர் ஜஸ்ரின் என்பதால்!), படிப்பு வரும், பிறகு "மாற்று இயக்கத்தில் இருந்தவர் போல" என்றும் ஊகம் பரப்புவர். எதுவும் செய்ய முடியா விட்டால் "முற்றுப் புள்ளி" போட்டு விட்டு ஓடி விட வேண்டியது தான்😎!
1 week 4 days ago
யாழ்ப்பாணத்தில் கஜே-கயே குழுவைச் சேர்ந்த யாழ் மாநகரசபை உறுப்பினர் ஒருவரின் மகனும் அய்ஸ் போதைப்பொருளுடன் பிடிபட்டுள்ளார். அது மாத்திரம் இல்லை தன்னை விடுவிக்க போலிசாருக்கு 20 ரூபாய் லஞ்சம் கொடுக்கவும் முற்பட்டுள்ளார். கனபேர் அடக்கி வாசிக்கினம். இப்ப தமிழரசுகட்சியின் உறுப்பினராக இவர் இருந்திருந்தால், பட்டாசு குழு பறந்து பறந்து வெடிவெடித்திருக்கும்!
1 week 4 days ago
'ஏதோ ஒன்று நடக்கிறது' / 'Something happens' ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்று நடக்கிறது, ஆனால் உண்மையில் எதுவும் அர்த்தமுள்ளதாக இல்லை... மழை பெய்தாலும், என் இதயம் வறண்டு கிடக்கிறது, சூரியன் உதித்தாலும், என் நிழல் மட்டுமே வளர்கிறது. இலங்கையின் வாசனை மறைந்துவிட்டதா? அல்லது நான் என்னையே இழந்துவிட்டேனா? Every day, something happens, Yet nothing truly makes sense… Though it rains, my heart stays dry, Though the sun rises, my shadow only grows. Has the scent of Sri Lanka faded away? Or have I simply lost myself? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] 'ஏதோ ஒன்று நடக்கிறது' / 'Something happens' https://www.facebook.com/groups/978753388866632/posts/32002873182694580/?
1 week 4 days ago
'ஏதோ ஒன்று நடக்கிறது' / 'Something happens'
ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்று நடக்கிறது,
ஆனால் உண்மையில் எதுவும் அர்த்தமுள்ளதாக இல்லை...
மழை பெய்தாலும், என் இதயம் வறண்டு கிடக்கிறது,
சூரியன் உதித்தாலும், என் நிழல் மட்டுமே வளர்கிறது.
இலங்கையின் வாசனை மறைந்துவிட்டதா?
அல்லது நான் என்னையே இழந்துவிட்டேனா?
Every day, something happens,
Yet nothing truly makes sense…
Though it rains, my heart stays dry,
Though the sun rises, my shadow only grows.
Has the scent of Sri Lanka faded away?
Or have I simply lost myself?
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
'ஏதோ ஒன்று நடக்கிறது' / 'Something happens'
https://www.facebook.com/groups/978753388866632/posts/32002873182694580/?
1 week 4 days ago
இந்த உலக கோப்பையில் குறைந்த ரன்ஸ் எடுக்கும் அணி எது என்ர கேள்விக்கு ஒருதருக்கும் புள்ளிகள் கிடைக்காது.................தென் ஆபிரிக்கா தொடக்கத்திலே வைச்சு விட்டது பெரிய ஆப்பு ஹா ஹா................................