Aggregator

இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி

1 week 5 days ago
இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி. 2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதிக்கு முன் உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை தமிழர்கள் இனி சட்டவிரோத குடியேறிகள் அல்ல எனவும், சமீபத்தில் அமுல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் உள்ள தண்டனை விதிகளிலிருந்தும் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டு வெளியேறி இந்தியாவின் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் சுதந்திரமாக இந்தியாவில் தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1446093

இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி

1 week 5 days ago

693690.jpg?resize=605%2C358&ssl=1

இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி.

2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதிக்கு முன் உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை தமிழர்கள் இனி சட்டவிரோத குடியேறிகள் அல்ல எனவும், சமீபத்தில் அமுல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் உள்ள தண்டனை விதிகளிலிருந்தும் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டு வெளியேறி இந்தியாவின் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள்  சுதந்திரமாக இந்தியாவில் தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1446093

பி.எச்.டேனியல் (தமிழில்: இரா. முருகவேள்) எழுதிய *எரியும் பனிக்காடு (Red Tea)* – நூல் அறிமுகம்

1 week 5 days ago
இரா.முருகவேள் என்பவரது படமும் மேலுள்ள இணைப்பில் இருக்கிறது பாருங்கள்.👆 இணைப்பிற்கு நன்றி தம்பி.🖐

வடக்கில் பெண் நாய்களுக்கு கருத்தடை!

1 week 5 days ago
நாங்க என்ன செய்யுறது.? புரட்டாசி மாசம் இதுகளை தேடி, ஊரிலை உள்ள நாய்கள் வளவுக்குள்ளையும், வேலிகளுக்கு இடையிலும் செருகுப் பட்டுக் கொண்டு நிற்குதுகள். சரி... அதுகள் சந்தோசமாக இருந்திட்டுப் போகட்டுமன் என்று பார்த்தால், 4 மாதம் கழித்து அதுகள்... வத வத என்று பத்து, பன்னிரண்டு என்று குட்டியளை பெத்து தள்ளுது. இதுகளாலை மனுஷர் ஊருக்குள்ளை நடமாட முடியாமல் கிடக்கு. 😂

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

1 week 5 days ago
இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பூ போலே உன் புன்னகையில் பொன் உலகினை கண்டேனம்மா பூ போலே உன் புன்னகையில் பொன் உலகினை கண்டேனம்மா என் கண்ணே கண்ணின் மணியே என் உயிரே உயிரின் ஒளி நீயே ஆண் : பூங்காற்றிலே சிறு பூங்கொடி போல் நீ நடப்பது நாட்டியமே மூங்கிலிலே வரும் சங்கீதம் போல் நீ சிரிப்பது காவியமே அன்புக்கு நூறு ஆசைக்கு நூறு முத்துக்கள் சூட்டி நான் காணுவேன் வா மகளே எனை பார் மகளே என் உயிரின் ஒளி நீயே ஆண் : அம்மாவென்று வரும் கன்றுக் குட்டி அது தாய்மையை கொண்டாடுது குக்கூவென்று வரும் சின்னக் குயில் தன் குழந்தைக்கு சோறூட்டுது நெஞ்சோடு பாசம் வந்தாடும் போது கண்ணோடு நேசம் ஆறாகுமே நீயின்றி என்றும் நானில்லையே என் உயிரின் ஒளி நீயே ஆண் : பெத்த மனம் இன்று பித்தாகியே ஒரு சோகத்தில் பண் பாடுது பிள்ளை மனம் பெரும் கல்லாகியே ஒரு கோபத்தில் நின்றாடுது எண்ணங்கள் நூறு இன்னல்கள் நூறு நெஞ்சுக்குள் ஓட நான் வாழ்கின்றேன் வா மகளே எனை பார் மகளே என் உயிரின் ஒளி நீயே ....... ! --- பூ போலே உன் புன்னகையில் ---

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 150 ஆண்டுகள் வாழலாம் ; புதின் – ஷி ஜின்பிங் பேசிக்கொண்ட உரையாடல் கசிவு

1 week 5 days ago
அதாவது வாகனங்களை மீண்டும் புதிய பாகங்களை பொருத்தி புனர்நிர்மாணம் செய்வது போல ........ அப்பாடா எனக்கு இன்னொரு 70 வருடங்கள் இருக்கு . ......... ! 😂

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 150 ஆண்டுகள் வாழலாம் ; புதின் – ஷி ஜின்பிங் பேசிக்கொண்ட உரையாடல் கசிவு

1 week 6 days ago
இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் உடலுறுப்புகளை அதிகமாக திருடுகின்றார்கள்.அதைப்பற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.சில தினங்களுக்கு முன் வந்த உடலுறுப்பு திருட்டு பற்றி வந்த செய்தியின் ஈரம் கூட இன்னும் காயவில்லை. அமெரிக்காவில் வசிக்கும் பிரபல்யங்களுக்கு வயதுக்கு வராதவர்களின் இள இரத்தம் பிடிக்குமாம்.😂 சட்டபூர்வமாக உள்ள கிட்னி மாற்றம்,கண் மாற்றம்,இரத்த மாற்றம்,ஈரல் மாற்றம்,இருதய மாற்றம் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?😎