Aggregator
இலங்கைக்கு பரிசாக வழங்கிய யானைகளை மீண்டும் திரும்பப் பெற தாய்லாந்து நடவடிக்கை!

இலங்கைக்கு பரிசாக வழங்கிய யானைகளை மீண்டும் திரும்பப் பெற தாய்லாந்து நடவடிக்கை!
தாய்லாந்து பரிசாக வழங்கிய இரண்டு யானைகளை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதற்காக தாய்லாந்து அரசாங்கம் இலங்கையுடன் எதிர்வரும் 28 ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
இலங்கையில் குறித்த யானைகள் மேசமாக பராமறிக்கப்படுவதாகவும், தவறாக நடத்தப்படுவதாகவும் வெளியான செய்திகளைத் தொடர்ந்து அவற்றை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வர தாய்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது.
தாய்லாந்து யானைகளான Plai Pratu Pha மற்றும் Plai Srinarong ஆகியவற்றின் நலன் குறித்து அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், தாய்லாந்தின் பிரதிப் பிரதமரும் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சருமான Suchart Chomklin வியாழக்கிழமை (23) தனது முகநூல் பக்கத்தில் அவசரமாக இலங்கைக்கு விமானத்தில் செல்ல திட்டமிட்டுள்ளதாக பதிவிட்டார்.
கடந்த ஆண்டு தாய் யானை மீட்புக் குழுவால் இந்த கவலைகள் முதலில் வெளிப்படுத்தப்பட்டன.
தாய்லாந்தால் இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்ட யானைகள், அதிகமாக வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டு, சரியான வாழ்க்கைத் தரங்கள் இல்லாமல் உள்ளன என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது.
விலங்குகள் எல்லா நேரங்களிலும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
எனவே, சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதற்காக அவை உடனடியாக தாய்லாந்திற்குத் திரும்ப வேண்டும் என்று அந்தக் குழு வலியுறுத்தியது.

இந்த நிலையில் இது தொடர்பான நேற்றைய முகநூல் பதிவில் தாய்லாந்தின் பிரதிப் பிரதமர், யானைகளின் நிலைமையினை பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மற்றும் பிற தாய்லாந்து அரசு நிறுவனங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இந்தப் பிரச்சினையைப் புறக்கணிக்கவில்லை என்றும் விளக்கினார்.
யானைகளை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு அனைத்து தொடர்புடைய நிறுவனங்களுடனும் ஒருங்கிணைக்க இராஜதந்திர முயற்சிகளுக்கு ஒப்புதல் அளித்த பிரதமர் அனுடினுடன் இந்த விடயத்தைப் பற்றி விவாதித்ததாகவும் கூறினார்.
எனினும், இந்த செயல்முறைக்கு சிறிது நேரம் ஆகலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்களுடன் இணைந்து யானைகளின் உடல்நலம் குறித்து மதிப்பிடுவதற்காக இலங்கைக்கு செல்லவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
யானைகளை நாட்டுக்கு கொண்டுவருவதற்கான இராஜதந்திர விவாதங்கள் தொடரும் வரை, உள்ளூர் பராமரிப்பாளர்கள் அவற்றுக்கு முறையான பராமரிப்பை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பிரதமர் Suchart Chomklin தெளிவுபடுத்தினார்.
நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களை வரவேற்கத் தயார் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்
நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களை வரவேற்கத் தயார் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களை வரவேற்கத் தயார் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்
இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியாவில் இருக்கும் மக்கள் மீண்டும் தாயகம் திரும்பினால் அரசாங்கம் வரவேற்கத் தயாராகவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் நடைபெறும் நிகழ்வொன்றுக்காக தமிழ்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதி அமைச்சர், அங்கு ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,
இலங்கை அரசு பொருளாதாரத்தில் சிக்கலான சூழலில் இருந்த போது இந்தியா பல்வேறு உதவிகளை செய்துள்ளது.
மலையக தமிழர்களுக்கு இந்தியா சார்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
புதிய ஜனாதிபதி பதவியேற்றதும் இலங்கை வந்த இந்திய பிரதமர் பல்வேறு நிதி உதவிகள் உள்ளிட்ட உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.
தற்போது பொருளாதார சிக்கலில் இருந்து இலங்கை வேகமாக மீண்டு வருகிறது.
நாட்டில் இலஞ்சம் முழுவதும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு பிரதிநிதிகளின் செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டு வீண் விரையம் தவிர்க்கப்பட்டுள்ளது.
அரசியல் தலைவர்கள் சாதாரண மக்களை போல் செயல்படுகின்றனர்.
இலங்கையில் இருந்த இரட்டை சட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கடந்த கால ஆட்சியாளர்கள் ரணில் விக்ரமசிங்க போன்றவர்கள் தவறு செய்ததால் அவர்களை சிறையில் அடைக்கப்பட்டதன் பின் அனைவருக்கும் நீதி சமம் என்பதை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
தற்போதய ஒதுக்கீட்டில் வடமாகாணத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, அங்கு ஏராளமான பணிகள் நடந்து வருகிறது, சர்வதேச விளையாட்டு மையம் யாழ்ப்பாணம் பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது.
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சனையை ஒதுக்கி வைத்து மீன்வளம் கடல் வளம் குறித்து அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மீன்வளத்தை பாதிக்கும் வகையிலான திட்டங்களை தடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியா – இலங்கை என இரு நாடுகளும் அரசியல் ரீதியாக ஒற்றுமையாக உள்ளது.
இரண்டு நாட்டு அரசும் மீனவர் பிரச்சனையை பேசி முடிக்க நடவடிக்கைகள் எடுக்க இருக்கிறோம்.
இந்திய இலங்கை மீனவர்கள் இடையேயான பிரச்சனை
சகோதரர்களுக்குள் இருக்கும் பிரச்சனை தான் உள்ளது. பேசி சுமுகமான முடிவை எட்ட முடியும்.
இலங்கை – இந்தியா என இருநாட்டு மக்கள் உறவுகாரர்கள். ஏன் மீனவர் பிரச்சனையை மட்டும் வைத்து பகைமை உண்டாக்க வேண்டும்.
இலங்கை அனைத்து நாடுகளுடனும் நட்புடன் உள்ளது.
இலங்கையை சீனா ஆக்கிரமித்துள்ளதாக சொல்வது அனைத்தும் பொய்
சுயாதீனமான நாடாக இலங்கை உள்ளது.
மற்ற அனைத்து நாடுகளும் முதலீடுகளும் உதவிகளையும் செய்வதை வைத்து அந்த நாடுகள் இலங்கையை ஆக்கிரமிப்பு செய்துள்ளது என சொல்லக்கூடாது.
இலங்கை அகதிகளுக்கு இந்திய மற்றும் தமிழக அரசு பெரு உதவிகள் செய்து வருகிறது.
இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியாவில் இருக்கும் மக்கள் மீண்டும் தாயகம் திரும்பினால் இலங்கை அரசாங்கம் வரவேற்கத் தயாராக உள்ளது.
இலங்கை மக்களின் கோரிக்கை குறித்து இரு நாட்டு அரசும் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
Lemon வால் நட்சத்திரத்தை இலங்கையர்களும் காணும் வாய்ப்பு!

Lemon வால் நட்சத்திரத்தை இலங்கையர்களும் காணும் வாய்ப்பு!
‘Lemon’ என்றும் அழைக்கப்படும் ‘C/2025 A6’ வால் நட்சத்திரத்தை தற்போது மாலை வானில் இலங்கையர்களும் காண முடியும் என்று விண்வெளி விஞ்ஞானியும் பொறியியலாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.
சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர், மாலை 6.30 மணி முதல் சுமார் 30 தொடக்கம் 45 நிமிடங்கள் வரை இந்த வால் நட்சத்திரம் அடிவானத்திற்கு அருகில் தெரியும்.
மழை இல்லாத தெளிவான மாலை நேரங்களில் இலங்கையின் மேற்கு கடற்கரையிலிருந்து இந்த வால் நட்சத்திரத்தை எளிதாகக் காணலாம் என்றும் அவர் மேலும் கூறினார்.
2025 ஜனவரி மாதம் அமெரிக்காவில் உள்ள மவுண்ட் லெமன் ஆய்வகத்தில் இந்த இந்த வால் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டமையினால் அதற்கு Lemon என்று பெயரிடப்பட்டுள்ளது.
இது சுமார் 90 மில்லியன் கிலோ மீட்டர்கள் அல்லது பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்தில் சுமார் 60% தூரத்திற்குள் உள்ளது.
இது தற்போது அதன் முதன்மையான பார்வைத் திறனில் உள்ளது.
நாசாவின் கூற்றுப்படி, Lemon வால் நட்சத்திரம் சுமார் 1,350 ஆண்டுகளுக்குப் பின்னர் நமது சூரிய மண்டலத்திற்குள் திரும்பி வருகிறது.
இது நவம்பர் 8 ஆம் திகதி சூரியனுக்கு மிக அருகில், சுமார் 80 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் வரும்.
பொதுவாக, வால் நட்சத்திரங்கள் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும்போது பிரகாசமாக பிரகாசிக்கும்.
இருப்பினும், Lemon வால் நட்சத்திரம் அதற்கு முன்பே பூமியை நெருங்கும் என்பதால், அது இரவு வானத்தைக் கடக்கும்போது அதன் பிரகாசத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.