Aggregator
1949 – 1968: ஈழத்தமிழரின் தேசிய அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் – பகுதி 4
1949 – 1968: ஈழத்தமிழரின் தேசிய அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் – பகுதி 4
September 3, 2025 | Ezhuna
1833 முதல் 1921 வரை நீடித்த ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் முதலாவது காலகட்டத்தில், தமிழர்கள் அரசியல்ரீதியில் ‘இலங்கையர்’ என்றும், பண்பாட்டுரீதியில் ‘தமிழர்’ என்றும் அடையாளம் கொண்டிருந்தனர். 1921 ஆகஸ்ட் 15 அன்று சேர்.பொன். அருணாசலம் தேசிய காங்கிரஸில் இருந்து விலகி தமிழர் மகாசபையைத் தொடங்கியதுடன், இரண்டாவது காலகட்டம் ஆரம்பமானது. இது 1949 டிசம்பரில் தந்தை செல்வா அகில இலங்கை தமிழரசுக் கட்சியைத் தொடங்கும் வரை நீடித்தது. 1949 முதல் 1968 வரை நீடித்த மூன்றாவது காலகட்டத்தில், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என வரையறுக்கப்பட்டு, சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1968 இல் ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்துடன் தொடங்கி, 2009 இல் ஆயுதப்போர் முடிவடையும் வரை நீடித்த நான்காவது காலகட்டத்தில், தனிநாட்டுக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. ‘ஈழத்தமிழர் அரசியல் வரலாறு’ எனும் இத்தொடர், இந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த முக்கிய நகர்வுகளைத் தொகுத்து வழங்குகிறது; அதன்மூலம், இன்னும் முழுமையடையாத ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றுக்கு ஓர் அடித்தளம் அமைக்க முயற்சிக்கின்றது
தமிழரசுக்கட்சி தடை செய்யப்படுதலும் அதன் தலைவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படலும்
தமிழரசுக்கட்சி தடை செய்யப்பட்டதுடன் கே.எம்.பி. ராஜரட்னாவின் இயக்கமும் தடை செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் பிரசார ஏடான ‘சுதந்திரன்’ பத்திரிகையும் தடை செய்யப்பட்டது. 1958 யூன் 05 ஆம் திகதி கட்சியின் தலைவர்களும் மத்திய குழு உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர். பெரும்பாலானோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட, அமிர்தலிங்கம், வன்னியசிங்கம், இராசவரோதயம், செ. இராசதுரை, வி.என். நவரத்தினம், வி. நவரத்தினம், செனட்டர் நடராசா என்போர் கொழும்பில் ஒரு வீட்டில் காவலில் வைக்கப்பட்டனர். மூன்று மாதங்களின் பின்னர் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் சுதந்திரன் பத்திரிகைக்கான தடை நீங்க மேலும் பல மாதங்கள் சென்றன. தடை நீங்கிய பின் செயற்குழுக் கூட்டம் 02.11.1958 இல் நடைபெற்றது. இதில், தொடர்ச்சியாக சாத்வீக வழியில் போராடுதல் என முடிவெடுக்கப்பட்டதுடன் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்
யாழ் நகரத்திலுள்ள தேனீர்க் கடைகளில் சாதி அடிப்படையில் பாரபட்சம் காட்டப்படுவதை ஒழிக்கும் பொருட்டு யாழ் நகரத் தேநீர்ச் சாலை உரிமையாளர்களின் மாநாடொன்றை நடாத்துவதென்றும், 24.11.58 தொடக்கம் ஒரு வாரம் தீண்டாமை ஒழிப்பு வாரமாக அனுஷ்டிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அ. அமிர்தலிங்கம், கு. வன்னியசிங்கம், சு. நடராசா என்போர் இவ்வேலைக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டனர். வன்னியசிங்கத்தின் அழைப்பின் பேரில் கூட்டப்பட்ட தேநீர்ச்சாலை உரிமையாளர்களின் மாநாட்டில் யாழ் நகர உணவு விடுதிகளில் சாதி பேதம் பார்க்கப்படுவதில்லை என ஏகமானதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரசாரம், சமபந்திப் போசனம் என்பனவும் மேற்கொள்ளப்பட்டது.
மலைநாட்டுக் குழந்தைகளின் கல்வி
உயர்கல்விக்கு வசதியற்ற மலைநாட்டுத் தமிழ்ப் பிள்ளைகள் 25 பேருக்கு உபகாரச் சம்பளம் பெற்றுக்கொடுக்கப்பட்டு, யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் சேர்க்கப்பட்டனர். விடுதி வசதி, இலவசப் புத்தகங்கள் என்பன அவர்களுக்கு வழங்கப்பட்டன. இப்பணிகளில் கட்சியின் சார்பில் கு. வன்னியசிங்கம் ஈடுபட்டார். 1959 செப்டெம்பர் 17 இல் கு. வன்னியசிங்கம் மரணமடைந்தார். இதே மாதம் பண்டாரநாயக்காவும் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆளும் கட்சிக்குள் ஏற்பட்ட குழப்ப நிலையால் பொதுத் தேர்தல் ஏற்படும் சூழ்நிலையும் உருவாகியது.
1960 மார்ச் தேர்தலும் சிம்மாசனப் பிரசங்கத்தில் அரசாங்கம் தோற்கடிக்கப்படலும்
1959 புதிய தேர்தல் தொகுதிகள் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 101 இலிருந்து 157 ஆக அதிகரிக்கப்பட்டது. இதன் கீழ் 1960 மார்ச் இல் தேர்தல் நடைபெற்றது. அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கு – கிழக்கில் 19 தொகுதிகளில் போட்டியிட்டு 176, 492 வாக்குகளைப் பெற்று 15 தொகுதிகளில் வெற்றியீட்டியது.
இதைவிட கட்சியின் ஆதரவினைப் பெற்ற இரு சுயேட்சை வேட்பாளர்கள் நிந்தவூர், பொத்துவில் தொகுதிகளில் வெற்றி பெற்றனர். ஐக்கிய தேசிய கட்சியும் 50 இடங்களையும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 46 இடங்களையும் கைப்பற்றியது. டட்லி ஆட்சியை அமைத்ததும் பாராளுமன்றத்தில் ஆதரவை நாடினார். தமிழரசுக்கட்சி இரு பெரும் கட்சிகளிடமும் நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தது. அவையாவன:
பண்டா – செல்வா உடன்படிக்கையில் கூறப்பட்டதன் பிரகாரம் பிரதேச சபைகள் நிறுவப்படல் வேண்டும். அதற்கிடையில் தமிழ்ப்பிரதேசத்தில் அத்துமீறிய குடியேற்றம் நிறுத்தப்படல் வேண்டும்.
பண்டா – செல்வா ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உரிமைகள் யாவும் தமிழ்மொழிக்குச் சட்டபூர்வமாக வழங்கப்பட வேண்டும்.
இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டத்தில் குறிப்பிட்ட திகதி என்பது நீக்கப்பட்டு இரண்டு தலைமுறைக்கு இந்நாட்டில் பிறந்தோர் அனைவருக்கும் குடியுரிமை வழங்குவதன் மூலம் ‘நாடற்ற தமிழர்’ என்ற நிலை நாளடைவில் மாற வேண்டும்.
குடியுரிமைப் பிரச்சினை தீரும் வரை 06 நியமனப் பிரதிநிதிகளில் 04 பேர் மலைநாட்டுத் தமிழ்மக்களின் பிரதிநிதித்துவம் வாய்ந்த ஸ்தாபனமான இலங்கை ஜனநாயக காங்கிரசினால் நியமிக்கப்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
இதையொட்டிய விபரங்கள் ஆளும் கட்சிக்கும் தமிழரசுக்கட்சிக்கும் இடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படல் வேண்டும். அத்துடன் ஏற்றுக்கொண்ட விடயங்கள் சிம்மாசனப் பிரசங்கத்தில் இடம்பெற வேண்டும் எனக் கூறப்பட்டது. இக்கோரிக்கைகளை எழுத்தில் பெற்ற டட்லி அதனை நிராகரித்தார். அதேவேளை சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட சீ.பி.டி. சில்வா, ஏ.பி. ஜெயசூரிய, மைத்திரிபால சேனநாயக்க, பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க என்போர், கோரிக்கைகள் பண்டாரநாயக்காவின் கொள்கைகளுக்கு ஏற்ப இருப்பதால் அதனைத் தாம் ஏற்பதாகக் கூறினர். சிறீலங்கா சுதந்திரக் கட்சி உடனான உடன்பாட்டின்படி 1960 ஏப்ரல் 22 ஆம் திகதி சிம்மாசனப் பிரசங்க வாக்கெடுப்பில் தமிழரசுக்கட்சி எதிர்த்து வாக்களித்தமையினால் அரசாங்கம் பதவி விலகியது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க முற்பட்ட போது தமிழரசுக்கட்சியும் அதற்கு ஆதரவை வழங்கியது.
இது தொடர்பான கடிதம் செல்வநாயகம், என்.எம். பெரேரா, எஸ்.ஏ. விக்கிரமசிங்க, சி.பி.டி. சில்வா என்போர் சார்பில் கையொப்பமிட்டு மகாதேசாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் மகாதேசாதிபதி இதனைக் கருத்திற் கொள்ளாமல் மரபை மீறி பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலுக்கு ஏற்பாடு செய்தார்.
1960 யூலை தேர்தலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வாக்குறுதிகளை மீறுதலும்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையினை சிறிமாவோ பண்டாரநாயக்கா ஏற்றார். இருப்பினும் 1960 யூலை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தமிழர்கள் தம்மைத் தோற்கடித்தார்கள் என இனவாதப் பிரசாரத்தினை மேற்கொண்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை ஸ்ரீலங்கா சமஷ்டிக் கட்சி எனக் கேலி செய்தது. எனினும் ஐக்கிய தேசியக் கட்சி 30 ஆசனங்களை மட்டும் பெற்றுத் தோல்வியடைந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 75 ஆசனங்களைப் பெற்று தனியாக ஆட்சி பெறக்கூடிய நிலையை எய்தியது. தமிழரசுக் கட்சி 21 தொகுதிகளில் போட்டியிட்டு 218, 753 வாக்குகளைப் பெற்று 16 இடங்களைக் கைப்பற்றியது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியை அமைத்துக்கொண்டு தமிழரசுக் கட்சியுடனான உடன்பாட்டை நிறைவேற்றப்போவதாகக் காட்டிக்கொண்டது.
1957 ஆம் ஆண்டு தனிச் சிங்களத்தில் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிம்மாசனப் பிரசங்கத்தை பகிஷ்கரித்து வந்த தமிழரசுக்கட்சி இத்தடவை தமிழ் மொழிபெயர்ப்பும் உடன் வாசிக்கப்பட்டதால் பிரசங்கத்தில் கலந்துகொண்டது. எனினும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது நடுநிலை வகித்தது. தொண்டமான் நியமனப் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டார். உடன்பட்ட விடயங்களை அமுல்படுத்துவது பற்றி பிரதமர் தலைமையில் அமைச்சர் குழுவுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையே அலரி மாளிகையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே எவ்வித முன்னறிவிப்புமின்றி சிங்களத்தை நாடு முழுவதும் நீதிமன்ற மொழியாக்கும் சட்டத்தை நீதியமைச்சர் சாம்.பி.சி. பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதனால் அரசிற்கும் தமிழரசுக் கட்சியிற்கும் இடையிலான உறவு சிதைவடைந்தது. சட்டமூலத்திற்கு தமிழரசுக்கட்சி பலமான எதிர்ப்பைத் தெரிவித்த போதும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதே சமயம் தமிழ்மொழி உபயோகச் சட்டத்தின் கீழ் மிகக்குறைந்த உரிமைகள் வழங்கும் சட்டத்தையும் நீதிமந்திரி சமர்ப்பித்தார். இருப்பினும் தமிழரசுக்கட்சியின் எதிர்ப்பினால் அது கைவிடப்பட்டது. இரண்டாவது தடவையும் சிங்களத் தலைமைகள் வாக்குறுதிகளை கைவிட்டமையால் தமிழரசுக்கட்சி போராட்டத்திற்குத் தயாராகியது. 1961 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி தொடக்கம் வடக்கு – கிழக்கு உட்பட நாடு முழுவதும் தனிச் சிங்களச்சட்டம் பூரணமாக அமுல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. இதனால் சிங்கள உத்தியோகத்தர்களும் தமிழ்ப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். தமிழரசுக்கட்சி நடாத்த இருந்த போராட்டத்தின் முதற்படியாக செல்வநாயகம் தலைமையில் மக்கள் ஊர்வலமாக யாழ் கச்சேரிக்குச் சென்று தமிழில் நிர்வாகம் நடாத்தப்படல் வேண்டும் என்று மனுச் சமர்ப்பித்தனர்.
தமிழரசுக்கட்சியின் ஏழாவது மாநில மாநாடு (1961 ஜனவரி, யாழ்ப்பாணம்)
1961 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வன்னியசிங்கம் அரங்கில் மாநாடு நடைபெற்றது. பட்டிருப்புத் தொகுதியைச் சேர்ந்த சி.மு. இராசமாணிக்கம் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்து நேரடி நடவடிக்கைகளில் இறங்குவது என்றும், பெப்ரவரி 20 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் போராட்டத்தை ஆரம்பிப்பது என்றும், தொடர்ந்து மற்றைய மாவட்டங்களுக்கு விஸ்தரிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
சத்தியாக்கிரகப் போராட்டம் (1961)
சத்தியாக்கிரகத்தை ஒரு நாளைக்கு ஒரு தொகுதியின் மக்களினால் அத்தொகுதி உறுப்பினர் தலைமையில் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது (பொலிசார் கைது செய்யலாம் எனக் கருதியே இவ்வாறு ஒழுங்கு செய்யப்பட்டது). 1961 பெப்ரவரி 20 ஆம் திகதி செல்வநாயகம் தலைமையில் காங்கேசன்துறை தொகுதி மக்கள் சத்தியாக்கிரகத்தில் பங்குபற்றினர். ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களும் வெளியில் உதவிக்கு நின்றனர். முதலாம் நாள் திட்டமிட்டபடி யாழ் அரசாங்கச் செயலக வாசலில் எவரும் உள்ளே செல்லவிடாது தடுத்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர். பொலிஸார் பிரதான வாயில் ஊடாக அலுவலர்கள் உள்ளே செல்வதற்கு பாதை அமைக்க முற்பட்ட போது எல்லாப் பாராளுமன்ற உறுப்பினர்களும், மக்களும் அவ்விடத்துக்குச் சென்று பாதைக்குக் குறுக்கே படுத்துக்கொண்டனர். பொலிஸார் பலாத்காரமாக சத்தியாக்கிரகிகளை தூக்கி அப்புறப்படுத்த முற்பட்டு மிருகத்தனமாகத் தூக்கி வீசினர். இதனைப் பார்த்துக்கொண்டு வெளியில் நின்ற மக்களும் நூற்றுக்கணக்கில் சத்தியாக்கிரகிகளோடு சேர்ந்தமையினால் பொலிஸாரின் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
அன்று பகல் 11 மணிக்கு மேல் நீதிமன்றத் திறப்புவிழா இடம்பெற்றது. அதற்குரிய ஆணையை அரசாங்கத்தின் சார்பில் அரசாங்க அதிபர் நீதியரசரிடம் கொடுப்பதற்குச் செல்ல வேண்டியிருந்தது. இதனால் அரசாங்க அதிபரின் வாசஸ்தலம் அமைந்திருந்த பழைய பூங்கா வாயிலிலும் சத்தியாக்கிரகவாசிகளினால் மறியல் போராட்டம் செய்யப்பட்டது. குண்டாந்தடிகளினால் சத்தியாக்கிரகிகளைத் தாக்கி அவர்களுக்கு ஊடாக அரசாங்க அதிபரின் வண்டியைக் கொண்டு செல்ல பொலிஸார் முற்பட்டனர். ஈ.எம்.வி. நாகநாதன் உட்பட பல சத்தியாக்கிரகிகள் காயங்களுக்கு உட்பட்டனர். 2 ஆம் நாள் சத்தியாக்கிரகம் வட்டுக்கோட்டைத் தொகுதி மக்களால் அ. அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
முதலாம் நாள் பொலிஸாரின் அட்டூழியத்திற்குப் பலத்த கண்டனம் ஏற்பட்டதால் அவர்களின் அட்டூழியம் சற்றுக் குறைவடைந்தது. எனினும் அரச ஊழியர்களை சத்தியாக்கிரகிகளுக்கூடாக அழைத்துச் செல்ல முற்பட்டனர். இதற்கு அரச ஊழியர்களும் மறுப்புத் தெரிவித்தனர்.
3 ஆம் நாள் வி.ஏ. கந்தையா தலைமையில் ஊர்காவற்துறை மக்களும், 4 ஆவது நாள் என். நவரத்தினம் தலைமையில் சாவகச்சேரி மக்களும் கலந்துகொண்டனர். இவ்வாறு தொடர்ந்து 50 நாட்கள் நடைபெற்றமையினால் யாழ் மாவட்ட அரச நிர்வாகம் முழுமையாக ஸ்தம்பிதமடைந்தது.
1961 பெப்ரவரி 27 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சத்தியாக்கிரகம் விஸ்தரிக்கப்படல்
1961 பெப்ரவரி 27 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டமெங்கும் யாழ்ப்பாணத் தாக்குதலுக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் முகமாக ஹர்த்தால் நடைபெற்றது. 1961 பெப்ரவரி 28 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்கச் செயலகத்தின் முன்னாலும் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப்பட்டது. 1961 மார்ச் 4 ஆம் திகதி திருகோணமலையில் அரசாங்கச் செயலகத்தின் முன்னால் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப்பட்டது. பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் 10 பேர் காயமடைந்ததுடன் மூதூரின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் ஏகாம்பரம் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். மார்ச் 22 ஆம் திகதி படுகாயமுற்ற ஏகாம்பரம் மரணமடைந்தார். தொடர்ந்து மன்னார், வவுனியா அரசாங்கச் செயலகங்களுக்கு முன்னாலும் சத்தியாக்கிரகம் விஸ்தரிக்கப்பட்டது.
“இரண்டு மாகாணங்களிலும் அரசாங்கமே இல்லை” என பிரதமர் செனற் சபையில் கூறினார். சத்தியாக்கிரகத்தை நிறுத்துவது தொடர்பாக அரசு பேச்சுவார்த்தைக்குத் தயாராகியது. அரசின் சார்பில் நீதி அமைச்சர் பி.எல். பெர்ணான்டோ பங்குபற்றினார். மு. திருச்செல்வத்தின் கொழும்பு இல்லத்தில் 1961 ஏப்ரல் 05 ஆம் திகதி இரவு பேச்சுவார்த்தை நடைபெற்றது. மொழியுரிமை தொடர்பாக மிகக்குறைந்த கோரிக்கைகளில் கூட உடன்பாடு ஏற்படாததால் போராட்டத்தைத் தொடருவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
தமிழ் அரசு தபால் சேவை
போராட்டத்தின் தீவிரத்தினால் அரசாங்கம் பங்கீட்டு உணவு வழங்காது மக்களைப் பணியவைக்க முற்பட்டது. இதனால் போராட்டத்தை வேறு துறைகளிலும் விரிவாக்கும் நோக்கத்துடன், அரச தபால் சேவை சட்டத்தை மீறி, தமிழரசு தபால் சேவை ஆரம்பிக்கப்பட்டது. 1961 ஏப்ரல் 14 ஆம் திகதி பகல் 12 மணிக்கு செல்வநாயகம் இதனை ஆரம்பித்து வைத்தார். 10,000 பேர் வரிசையில் நின்று தமிழரசு தபால் தலைகளைப் பெற்றுக்கொண்டனர். தமிழரசு தபால் சேவையின் தபால் மா அதிபராக செனட்டர் நடராசா நியமிக்கப்பட்டார். தமிழரசு தபால் பெட்டிகள் பல இடங்களிலும் வைக்கப்பட்டது.
அவசரகால, ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படலும், இராணுவம் தாக்குதல்களை மேற்கொள்ளுதலும்
1961 ஏப்ரல் 17 ஆம் திகதி 12 மணிக்கு அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட அதேவேளை 48 மணிநேர ஊரடங்குச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டது. கச்சேரியின் முன் அமைதியாக இருந்த சத்தியாக்கிரகிகள் இராணுவத்தினால் தாக்கப்பட்டனர். பழனியப்பன் என்ற இளைஞரினது தொடை துளைக்கப்பட, அவர் மயக்க நிலையை எய்தினார். பெண் சத்தியாக்கிரகிகள் இராணுவத்தினால் வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்டு பல மைல்களுக்கு அப்பால் தனிமையான இடத்தில் விடப்பட்டனர். தலைவர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் – இராணுவ முகாம்களுக்கும் கொண்டு செல்லப்பட்டனர். வடக்கு – கிழக்கு இராணுவ ஆட்சியின் கீழ் விடப்பட்டது. திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் உட்பட தலைவர்களும் பிரதான தொண்டர்களுமாக 74 பேர் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு பனாகொடை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர். தமிழரசுக்கட்சி, சுதந்திரன் பத்திரிகை என்பன தடை செய்யப்பட்டதோடு சுதந்திரன் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. பத்திரிகைத் தணிக்கை அமுலுக்கு வந்தது.
இரகசிய ஏடுகள் பிரசுரமாதல்
‘சத்தியாக்கிரக’ என்ற ஆங்கில ஏடு மாதம் இருமுறை தட்டச்சில் வெளியாகியது. ‘தமிழன் கண்ணீர்’ என்ற தமிழ் ஏடும் வெளியாகியது. கோவில் பிரார்த்தனைகளை கட்சி ஒழுங்கு செய்தலும், எஞ்சியிருந்த தலைவர்கள் அதில் பேசுதலும் (கூட்டம் நடாத்துவது தடை செய்யப்பட்டிருந்தமையால்) இடம்பெற்றது.
சத்தியாக்கிரகிகள் தாக்குதல் தொடர்பில் மலையகத்தில் எழுச்சி
சத்தியாக்கிரகம் நடைபெற்ற போது தொண்டமான் நேரடியாகச் சென்று உற்சாகப்படுத்தினார். வவுனியா, மன்னார் பகுதிகளில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் நேரடியாகவே பங்குபற்றினர். வவுனியா இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதி நடேசபிள்ளையும் தலைவர்களுடன் கைது செய்யப்பட்டார். சத்தியாக்கிரகம் நசுக்கப்பட்டதற்கு முதல் நாள், 1961 ஏப்ரல் 24 ஆம் திகதி தோட்டத்தொழிலை அத்தியாவசிய சேவையாக்கும் சட்டவிதிகளை அரசாங்கம் பிரகடனம் செய்தது. எனினும் 1961 ஏப்ரல் 25 ஆம் திகதி 5 லட்சம் தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். அன்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தமிழரசுக் கட்சியின் நான்கு அம்சக் கோரிக்கைகளை அரசுக்குச் சமர்ப்பித்தது. இதேவேளை தோட்டப்பகுதிக்கும் இராணுவம் அனுப்பப்பட்டது. 1961 ஐப்பசியில் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். கட்சியின் தடை நீங்க மேலும் சில மாதங்கள் சென்றன.
மீண்டும் சிங்கள ‘ஸ்ரீ’ பஸ்வண்டி
1958 ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து ஸ்ரீ பொறித்த பஸ் வண்டிகள் தமிழ்ப் பிரதேசத்தில் ஓடவிடப்படவில்லை. ஆனாலும் 1961 ஐப்பசியில் சிங்கள ஸ்ரீ பொறித்த பஸ் வண்டிகள் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டது. பஸ்வண்டி வந்து சேர்ந்த மறுநாளே இளைஞர்கள் சிலர் பஸ் நிலையத்திற்குள் நுழைந்து காவலாளிகளையும் சுட்டுக்காயப்படுத்தி பஸ் வண்டியையும் தீக்கிரையாக்கினர். அடுத்த நாள் எஞ்சிய ஸ்ரீ பொறித்த பஸ் வண்டிகள் மீளப் பெறப்பட்டன.
தமிழரசுக் கட்சியின் 8 ஆவது மாநில மாநாடு – மன்னார் (1961 ஓகஸ்ட் 31, செப்டெம்பர் 1, 2)
தமிழரசுக் கட்சியின் 8 ஆவது மாநில மாநாடானது மன்னாரில் 1961 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 31 மற்றும் செப்டெம்பர் மாதம் 1, 2 ஆம் திகதிகளில் இடம்பெற்றது. சி.மு. இராசமாணிக்கம் கட்சியின் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். 1963 ஏப்ரல் 17 ஆம் திகதிக்குப் பிந்தாமல் போராட்டத்தை ஆரம்பித்தனர். தோட்டத்தொழிலாளர்களுக்கு என கட்சியின் சார்பில் தொழிற்சங்கம் ஒன்றை அமைப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது. இதன்மூலம் இரண்டு சமூகங்களுக்கிடையேயும் அமைப்பு ரீதியான ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சித்தனர். இதன்படி ‘இலங்கைத் தொழிலாளர் கழகம்’ ஹட்டனில் 22.12.1962 (சனி) அன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைவராக அ. தங்கதுரை தெரிவு செய்யப்பட்டார்.
இந்தியாவின் மீதான சீனாவின் படையெடுப்பில் இந்தியாவுக்கு ஆதரவு
1961 இறுதியில் சீனா இந்தியாவின் மீது படையெடுத்தது. இவ்விடயத்தில் சீனாவைக் கண்டித்து தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு 18.11.1961 இல் தீர்மானம் நிறைவேற்றியது.
தீர்மானத்தின் விபரம்:
சர்வதேசக் கண்ணியத்தையும் கௌரவமான நடத்தையை மீறியும் உலகத்திற்குத் தானும் பிரகடனப்படுத்திய பஞ்சசீலக் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டும் கம்யூனிஸ்ட் சீனா, இந்தியா மீது நடத்தும் ஆக்கிரமிப்பை இலங்கைத் தமிழரசுக்கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் கம்யூனிஸ்ட் சீன ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஆசியாக்கண்டத்தில் ஜனநாயகம் நிலைபெறவும், தனது நாட்டையும் தேசிய கௌரவத்தையும் காப்பாற்றவும் நடாத்தப்படும் இப்போரில், இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்களின் சார்பில் இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய மக்களுக்கும் தனது ஆதரவை அளிப்பதுடன் இந்திய மக்களுடன் இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கிருக்கும் ஐக்கியத்தையும் காட்ட, கட்சி விரும்புகின்றது.
ஏகாதிபத்தியச் சீனாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்தும் தனது சுதந்திரத்திற்காகவும், ஜனநாயகத்திற்காகவும் போராடும் இந்தியாவிற்கு ஆதரவு நல்க வேண்டுமென்றும் இலங்கை அரசாங்கத்தை இக்கட்சி கேட்டுக்கொள்கிறது.
தனது பாதுகாப்பிற்குப் போதிய ஆட்பலம் இந்தியாவிடம் இருப்பினும், மாண்புமிக்க கொள்கைகளுக்காகவே இந்தியா போரிடுவதால், மனித சுதந்திரத்திற்காக நடத்தப்படும் இப் புனிதப்போரில் ஒரு சிறிதளவேனும் பங்கெடுக்க விரும்புவதனால், இப்போரில் பங்கெடுப்பதற்காக இலங்கைவாழ் தமிழ்பேசும் இளைஞர்களைத் தொண்டர்களாகச் சேரும்படி இக்கட்சி அழைக்கின்றது.
மந்திரிமார் வருகைக்கு மீண்டும் எதிர்ப்பு
தமிழரசுக்கட்சியை மீண்டும் போராட்டத்திற்கு தயார்ப்படுத்தும் வகையில், 24.02.1963 இல் கட்சிச் செயற்குழு மந்திரிகள், அரச பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு – கிழக்கிற்கு வரும்போது, வருகையை எதிர்ப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது. அவர்கள் வடக்கு – கிழக்கிற்கு கோலாகல விஜயங்கள் செய்யின் கட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடாத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி யாழ்ப்பாணத்திற்கும் பருத்தித்துறைக்கும் அமைச்சர் ரி.பி. இலங்கரத்தின வருகைதந்த போது கறுப்புக்கொடி காட்டினர். நூற்றுக்கணக்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பருத்தித்துறை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத் திறப்புவிழாவிலும் அணிவகுத்து நின்று கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தினை நடாத்தினர். இவ்வார்ப்பாட்டத்தின் போது ஊர்காவற்துறை பாராளுமன்ற உறுப்பினர் வி.ஏ. கந்தையா உட்பட பல ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரால் தாக்கப்பட்டனர். தாக்குதலினால் பாதிக்கப்பட்ட வி.ஏ. கந்தையா 4.06.1963 இல் மரணமடைந்தார். தொடர்ந்து வ. நவரத்தினம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
‘எல்லாம் தமிழ் இயக்கம்’ உருவாதல்
சிங்களத் திணிப்பை எதிர்ப்பதற்கும், தமிழ் மக்களை அரசுடனான தம் கருமங்களைத் தமிழில் ஆற்றத் தூண்டுவதற்குமாக எல்லாம் தமிழ் இயக்கத்தை 1963 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 8 ஆம் திகதியில் உருவாக்கினர். இதன்படி தமிழ்ப் பிரதேசங்களில் உள்ள தபால் நிலையங்கள், வேறு அரசாங்க அலுவலகங்கள் ஆகியவற்றின் முன் போராட்டக்காரர்கள் விண்ணப்பங்கள், தந்திகள், முகவரிகள் என்பவற்றை தமிழில் எழுதுமாறு தூண்டினர். தேவையானவர்களுக்கு தாமே எழுதிக்கொடுத்தனர்.
அரசாங்கம் 1964 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி சத்தியாக்கிரகத்தால் கைவிடப்பட்ட தனிச்சிங்கள சட்டத்தை வடக்கு – கிழக்கில் அமுல்படுத்தப்போவதாக அறிவித்தது. தமிழரசுக் கட்சி முழுச் சக்தியையும் திரட்டி இதனை எதிர்ப்பது என 30.6.1963 இல் கொழும்பில் தீர்மானித்தது. அரசாங்கம் தீர்மானித்தபடியே சிங்கள அரசாங்க ஊழியர்களை வடக்குக்கு அனுப்ப முயற்சி செய்யப்பட்டது. அதேவேளை தமிழ்ப் பாடசாலைகளில் சிங்களத்தைத் திணிக்கும் நோக்கில் 2000 சிங்கள ஆசிரியர்களையும் வடக்கு – கிழக்கிற்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டது.
தமிழரசுக் கட்சி இதனைப் பகிஷ்கரிப்பது என்றும் இப்போராட்டத்தில் மாணவர்கள், பெற்றோர்களை இணைப்பது என்றும் தீர்மானித்தது. தமிழரசுக் கட்சியின் போராட்ட அச்சத்தினால் சிங்கள ஊழியர்கள், ஆசிரியர்கள் வடக்கு – கிழக்குக்குச் செல்ல மறுத்தனர். இதனையொட்டி, அரசு 01.01.1964 அன்று அறிவித்தமைக்கு எதிரான மாபெரும் கண்டன ஊர்வலங்களை யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், வவுனியா என்பவற்றில் நடாத்தியது. அவ்வவ் மாவட்டக் கச்சேரிகளுக்கு முன்னால் தனிச்சிங்களச் சட்டப்பிரதிகளையும் எரித்தது.
பாதயாத்திரை
சாதி பேதத்தை ஒழிக்கவும் கட்சியின் இலட்சியங்களை மக்கள் முன் பிரசாரம் செய்யவும் என பாதயாத்திரை நடாத்தப்பட்டது. செல்வநாயகம் தலைமையில் காங்கேசன்துறை தொகுதியிலிருந்து பாதயாத்திரை ஆரம்பமானது. பலவாரங்களாக நடைபெற்ற பாதயாத்திரையின் போது தங்கிநிற்கின்ற இடங்களில் தீண்டாமை ஒழிப்பின் அவசியம் பற்றியும், தமிழ் மக்களின் அரசியல் நிலை பற்றியும் கருத்தரங்குகளை நடாத்தினர்.
அரசு மீண்டும் சமரசப்பேச்சுக்கு வருதல்
இடதுசாரி ஐக்கிய முன்னணியின் தலைமையில் தொழிற்சங்கங்கள் 21 கோரிக்கைகளை சமர்ப்பித்து பெரிய போராட்டத்துக்கு ஆயத்தங்களைச் செய்தன. இந்நேரம் தமிழரசுக்கட்சியின் ஆதரவை அரசாங்கம் வேண்டி பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. சிறீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கம் இடதுசாரி ஐக்கிய முன்னணியின் பிரதான அமைப்பான லங்கா சமசமாஜக் கட்சியை தன்னுடன் இணைப்பதில் வெற்றி கண்டது. இதன்பின்னர் தொழிற்சங்கப் போராட்டமும் நின்றுபோனது. தமிழரசுக் கட்சியுடனான பேச்சுவார்த்தையும் நின்றுபோனது.
தமிழரசுக் கட்சியின் ஒன்பதாவது மாநில மாநாடு
தமிழரசுக் கட்சியின் ஒன்பதாவது மாநில மாநாடு 1964 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 21, 22, 23 ஆம் திகதிகளில் திருகோணமலை இடம்பெற்றது. இம்மாநாட்டில் செல்வநாயகம் கட்சியின் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். இதன்போது தொடர் போராட்டம் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம்
சிறீமா – சாஸ்திரி ஒப்பந்தம் 1964 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 30 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. இலங்கையின் சார்பில் அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவும், இந்தியாவின் சார்பில் அப்போதைய இந்தியப் பிரதமர் லாவ்பகதூர் சாஸ்திரியும் கையொப்பமிட்டனர். இலங்கையில் வாழ்ந்த மலையகத் தமிழர்கள் 975,000 பேரில் 525,000 பேரை இந்தியா ஏற்றுக்கொள்வதென்றும் 300,000 பேரை இலங்கை ஏற்றுக்கொள்வதென்றும் முடிவிற்கு வந்தனர். மீதி 15,000 பேர் பற்றி பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் உடன்பாட்டிற்கு வந்தனர்.
1967 இல் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்த அமுலாக்கச் சட்டத்தின் மூலம் இது நடைமுறைக்கு வந்தது. திருப்பி அனுப்பப்படும் செயன்முறை 15 வருட காலத்திற்குள் இடம்பெற வேண்டும் எனத் தீமானிக்கப்பட்டது. மலையக மக்கள் மத்தியில் பலம் வாய்ந்த அமைப்பாக விளங்கிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடன் எந்தவிதக் கலந்தாலோசனையும் மேற்கொள்ளாமலே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதன் தலைவர் தொண்டமான் நியமன உறுப்பினராக இருந்தபோதும் அவருடன் எந்தக் கலந்துரையாடலையும் மேற்கொள்ளாது விட்டனர். தமிழரசுக் கட்சி இதனைக் காரசாரமாக எதிர்த்தது. இந்தியா தன்னுடைய நலன்களுக்காக மலையக மக்களை விலையாகக் கொடுத்த நிகழ்வாக இது இருந்தது. மலையக மக்களின் அரசியல் பலம் பலவீனமடைந்தது. இது பற்றி மனோகணேசன் கூறும் போது “இந்தியா முழு மலையக மக்களையும் இந்தியாவிற்கு அழைத்திருக்க வேண்டும் அல்லது முழுப்பேரையும் இலங்கையில் விட்டிருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
அரசாங்கம் கவிழ்தல்
அரசாங்கம் ஏரிக்கரை பத்திரிகையை தேசியமயமாக்கும் மசோதாவைக் கொண்டுவந்தது. அரசாங்கக் கட்சியின் சபை முதல்வர் சி.பி.டி. சில்வா தலைமையில் பல உறுப்பினர்கள் இதனை எதிர்த்து எதிர்க்கட்சிக்கு மாறினர். இந்நிலையில் அமைச்சர்கள் பலர் தமிழரசுக்கட்சியின் உதவியை நாடினர். ஆனால் முன்னைய அனுபவத்தினால் அதனை கட்சி நிராகரித்தது. மசோதா வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது தமிழரசுக்கட்சி எதிர்த்து வாக்களித்தது. இதனால் அரசாங்கம் கவிழ்ந்தது.
1965 மார்ச் பொதுத்தேர்தல்
இத்தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டு 217,986 வாக்குகளைப் பெற்று 14 ஆசனங்களைக் கைப்பற்றினர். ஐக்கிய தேசியக் கட்சி 66 இடங்களையும் சிறீலங்கா சுதந்திரக்கட்சி 41 இடங்களையும் கைப்பற்றியது. ஐக்கிய தேசிய கட்சியினர் தமிழரசுக்கட்சியின் ஆதரவை நாடினர். இதனைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சி அரசில் சேர்ந்தது.
டட்லி – செல்வா ஒப்பந்தம்
1965 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி டட்லி – செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தமிழ்மொழியில் நிர்வாகம் நடத்துவதற்கும், தமிழிலேயே பதிவதற்கும், தமிழ் பேசும் மக்கள் நாடு முழுவதிலும் அரச கருமங்கள் விடயத்தில் தமிழில் தொடர்பு கொள்வதற்கும், வடக்கு – கிழக்கிலுள்ள நீதிமன்ற அலுவல்களைத் தமிழில் நடாத்தவும் ஏற்றவகையில் தமிழ்மொழி உபயோகச் சட்டத்தைக் கொண்டு வந்தனர்.
அதிகாரப் பகிர்வை வழங்கும் வகையில் மாவட்ட சபைகளை உருவாக்குதல், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் குடியேற்றத்திட்டங்கள் உருவாக்கப்படும் போது; முதலில் வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள காணியற்றவர்களுக்கு வழங்குதல், இரண்டாவதாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்பேசும் மக்களுக்கு வழங்குதல், மூன்றாவதாக இலங்கையின் ஏனைய பகுதிகளிலுள்ள தமிழ்பேசும் இனத்தவர்களுக்கு முதலிடம் கொடுத்த பின்னர் ஏனையவர்களுக்கு வழங்குதல் என்பன ஒப்பந்தத்தில் உள்ளடங்கியிருந்தன. இவ் ஒப்பந்தத்தின் பின்னர் தமிழரசுக்கட்சி அரசாங்கத்தில் சேந்தது. இதில் திரு.மு. திருச்செல்வம் உள்ளூராட்சி அமைச்சராகப் பொறுப்பேற்றார். தமிழரசுக்கட்சியின் போராட்டங்கள் முடிவுக்கு வந்தன. அதன் வரலாற்றுப் பாத்திரமும் முடிவு பெற்றது.
தமிழரசுக்கட்சி அரசில் சேர்ந்ததினால் அரச ஊழியர்களில் பழையவர்களுக்கு சிங்களத் தேர்ச்சியின்றி, சம்பள உயர்வு, பதவி உயர்வு என்பன வழங்கப்பட்டன. புதிய ஊழியரின் சிங்களத் தேர்ச்சி 8 ஆம் தரமாக்கப்பட்டது. ஆனால் திறைசேரி அதிகாரிகள் 9 ஆம் தரச் சோதனையை 8 ஆம் தரம் என நடத்திச் சலுகையை முறியடித்தனர். நிதியமைச்சர் வன்னி நாயக்கா, பிரதமரோடு தமிழரசுக் கட்சி நடாத்திய மாநாட்டில் இதனை ஒத்துக்கொண்டார்.
தமிழ்மொழி உபயோகச் சட்டவிதிகள் மசோதா – 1966 ஜனவரி 08
1958 இல் பண்டாரநாயக்காவினால் கொண்டுவரப்பட்ட தமிழ்மொழி உபயோகச்சட்டத்தின் கீழ் அதன் இயங்கு விதிகள் தொடர்பான சட்ட மூலம் தமிழரசுக்கட்சியின் நிர்ப்பந்தத்தின் கீழ் 1966 ஜனவரி 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன்படி வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழையும் நிர்வாக மொழியாகவும், நாடு முழுவதிலும் தமிழ்பேசும் மக்கள் தமிழில் அரசாங்கத்தோடு கருமமாற்றவும் ஒழுங்கு செய்யப்பட்டது. இதனை சிறீலங்கா சுதந்திரக்கட்சி, இடதுசாரிக் கட்சிகள் உட்பட சிங்கள எதிர்க்கட்சிகள் யாவும் காரசாரமாக எதிர்த்தன. இச்சட்டவிதிகள் மூலச்சட்டத்தின் எல்லையை மீறியுள்ளன எனக் கூறப்பட்டது. அரச தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதோடு எதிர்க்கட்சிகள், கொழும்பு விகாரமாதேவி பூங்காவிலிருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலத்தையும் நடத்தியது.
ஊர்வலம் கட்டுக்கடங்காமல் சென்றதால் பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். ரத்தினசாரதேரோ என்ற பௌத்தபிக்கு சூடுபட்டு மரணமடைந்தார். எனினும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் நடைமுறையில் பெரிதாகச் செயற்படவில்லை. இடதுசாரிக் கட்சிகள் இதன்மூலம் தமது இனவாதப் போக்கினை வெளிக்காட்டின.
மாவட்ட சபை தொடர்பான வெள்ளை அறிக்கை
தமிழ்ப் பிரதேசங்களுக்கு ஓரளவு அதிகாரம் பகிரக்கூடிய சட்டமூலத்திற்காக வெள்ளை அறிக்கை மு. திருச்செல்வத்தினால் தயாரிக்கப்பட்டது. பல மாதங்கள் பிரதமரினாலும் அமைச்சர்களினாலும் கட்சித் தலைவர்களினாலும் ஆராயப்பட்ட வெள்ளை அறிக்கை பராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டது. அரசாங்கக் கட்சி உறுப்பினர்கள், பௌத்த பிக்குகள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தனர். இவ்வெதிர்ப்புக்கு அஞ்சிய பிரதமர் டட்லி சேனநாயக்க “மாவட்ட சபை மசோதவை தாம் பராளுமன்றத்தில் நிறைவேற்ற மாட்டோம்” எனக் கூறினார்.
தமிழரசுக்கட்சியின் பத்தாவது மாநில மாநாடு (1966 யூன் 23, 24, 25 – கல்முனை)
தமிழரசுக் கட்சியின் 10 ஆவது மாநில மாநாடானது 1966 ஆம் ஆண்டு யூன் மாதம் 23, 24, 25 ஆம் திகதிகளில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கட்சியின் தலைவராக ஈ.எம்.வி. நாகநாதன் தெரிவு செய்யப்பட்டார். முதன்முறையாக பிரதமர் டட்லி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். “இலகுவில் வாக்குக்கொடுக்க மாட்டேன், கொடுத்தால் நிறைவேற்றத் தவறமாட்டேன்” என டட்லி மாநாட்டில் உறுதிமொழி அளித்தார்.
சிறிமா – சாஸ்திரி ஒப்பந்த அமுலாக்கச் சட்டம்
சிறிமா – சாஸ்திரி ஒப்பந்த அமுலாக்கச் சட்டத்தை அரசாங்கம் இயற்ற முற்பட்ட போது தமிழரசுக் கட்சியினதும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசினதும் முயற்சியினால் ஆட்சேபத்திற்குரிய அம்சங்கள் நீக்கப்பட்டது. விருப்பத்திற்கு மாறாக யாரையும் இந்தியப் பிரஜையாகப் பதிவு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தியா திரும்பியோரின் வீதத்திற்கே இலங்கைப் பிரஜையாகப் பதிவு செய்யும் திட்டம், இலங்கைப் பிரஜைகளாகப் பதிவு செய்தோரை தனிவாக்காளர் இடாப்பில் அடக்கும் அம்சம் என்பனவே நீக்கப்பட்டன. ஆட்களைப் பதிவு செய்து அடையாள அட்டை வழங்குவதற்கான சட்டமும் மாற்றப்பட்டது. பிரஜை, நாடற்றவர் என்ற பேதமின்றி இந்நாட்டில் சட்டபூர்வமாக வாழும் 18 வயதிற்கு மேற்பட்டோர் எல்லோரையும் பதிந்து அடையாள அட்டை வழங்குவதற்கு சட்டமியற்றப்பட்டது.
இச்சட்டங்களை தமிழரசுக்கட்சியின் ஊர்காவற்துறை பாராளுமன்ற உறுப்பினர்கள் வ. நவரத்தினம் ஏற்றுக்கொள்ளவில்லை; எதிர்த்து வாக்களித்தார். இதனால் 24.04.1968 இல் கூடிய கட்சியின் பொதுச்சபை வ. நவரத்தினம் அவர்களைக் கட்சியிலிருந்து ஏகமனதாக வெளியேற்றியது. இதன்பின்னர் வ. நவரத்தினம் ‘தமிழர் சுயாட்சிக் கழகம்’ எனும் புதிய கட்சியை உருவாக்கினார்.
மு. திருச்செல்வம் அமைச்சர் பதவியைத் துறத்தல்
திருகோணமலை கோணேசர் கோவிலைச் சார்ந்த பிரதேசத்தை புனித பிரதேசமாக்க மு. திருச்செல்வம் முயற்சித்தார். இதற்காக தமிழர், சிங்களவர், பறங்கியர் என மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. சேருவல பௌத்த ஆலயத் தலைமைப் பிக்கு இதை எதிர்த்தார். பிரதமர் டட்லி சேனநாயக்க மு. திருச்செல்வத்துடன் கலந்தாலோசிக்கமாலே குழுவை நிறுத்தி வைத்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 1968 புரட்டாதி மாதம் 16 ஆம் திகதி மு. திருச்செல்வம் அமைச்சர் பதவியை இராஜனாமாச் செய்தார். இதன் பின்னரும் தமிழரசுக் கட்சி சில மாதங்கள் அரசாங்கத்தில் நீடித்தது. 1968 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தமிழரசுக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகியது.
யாழ். ஆடியபாதம் வீதியில் டிப்பர், பாரவூர்தி வாகனங்களுக்கு போக்குவரத்துத் தடை
நெடுந்தீவு – கச்சத்தீவு ஒன்றிணைக்கும் வகையிலான சுற்றுலா மேம்பாட்டு திட்டம் ஆராயப்படுகின்றது ; அமைச்சர் சந்திரசேகர்
யாழ். ஆடியபாதம் வீதியில் டிப்பர், பாரவூர்தி வாகனங்களுக்கு போக்குவரத்துத் தடை
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
சர்வதேச ரி20 பந்துவீச்சில் ராஷித் கான் உலக சாதனை
சர்வதேச ரி20 பந்துவீச்சில் ராஷித் கான் உலக சாதனை
03 Sep, 2025 | 05:07 PM
(நெவில் அன்தனி)
சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற உலக சாதனையை ஆப்கானிஸ்தானின் நட்சத்திர சுழல்பந்துவீச்சாளர் ராஷித் கான் படைத்துள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் சர்வதேச ரி20 மும்முனை கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிராக திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் தனது மொத்த விக்கெட் எண்ணிக்கையை 165ஆக உயர்த்திக்கொண்டார்.
இதன் மூலம் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற உலக சாதனையை ராஷித் கான் நிலைநாட்டினார்.
ஒட்டுமொத்த ரி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற உலக சாதனையை கடந்த சில மாதங்களாக தன்னகத்தே கொண்டிருந்த ராஷித் கான், இப்போது சர்வதேச ரி20 போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற மற்றொரு உலக சாதனையை தனதாக்கிக்கொண்டுள்ளார்.
சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் 164 விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்தில் இருந்த நியூஸிலாந்தின் ஓய்வுநிலை வீரர் டிம் சௌதியை சில மாதங்களுக்கு முன்னர் சமப்படுத்திய ராஷித் கான் தனது 98ஆவது போட்டியில் 165ஆவது விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் புதிய உலக சாதனை நாயகனானார்.
நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுடனான போட்டி வரை 99 சர்வதேச ரி20 போட்டிகளில் விளையாடியுள்ள ராஷித் கான் இதுவரை மொத்தமாக 167 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.
இதேவேளை, சகலவிதமான ரி20 கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற உலக சாதனையை கடந்த பெப்ரவரி மாதம் ராஷித் கான் நிலைநாட்டியிருந்தார்.
490 ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள ராஷித் கான் 666 விக்கெட்களை மொத்தமாக கைப்பற்றி முதலிடத்தில் இருக்கிறார்.
மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் சகலதுறை வீரர் ட்வேன் ப்ராவோ 631 விக்கெட்களைக் கைப்பற்றி இரண்டாம் இடத்திலுள்ளார்.
எனக்கு பிடித்த சில வரிகள்.
'தெருநாய் மட்டுமல்ல, வளர்ப்பு நாய்களாலும் பிரச்னைதான்' - தவறு எங்கே நடக்கிறது?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தமிழ்நாட்டில் வளர்ப்பு நாய்கள் கடிப்பதாலும் ரேபிஸ் மரணங்கள் பதிவாகியுள்ளன (கோப்புப் படம்)
கட்டுரை தகவல்
க. சுபகுணம்
பிபிசி தமிழ்
3 செப்டெம்பர் 2025, 02:54 GMT
உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவைத் தொடர்ந்து தெருநாய் பிரச்னை பற்றி விவாதம் இந்தியா முழுவதும் சூடுபிடித்துள்ளது.
ஆனால், பிரச்னைக்குக் காரணம் தெருநாய்கள் மட்டுமல்ல, வளர்ப்பு நாய்களும்தான் என்கிறார் பொது சுகாதாரத் துறையின் முன்னாள் இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமி.
ஒருமுறை அதிகாலை வேளையில் மருந்தகம் ஒன்றுக்குச் சென்றிருந்த போது, தனது வளர்ப்பு நாயுடன் வந்திருந்த நபர் ஒருவர், அதனுடனேயே மருந்து வாங்கச் சென்றார்.
குழந்தையை அழைத்து வந்திருந்த வாடிக்கையாளர் ஒருவர், சற்று எரிச்சலடைந்து, அதைத் தனியாக வேறு இடத்தில் கட்டி வைத்துவிட்டு வருமாறு சற்று கடினமான குரலில் வலியுறுத்தினார்.
இதேபோல, கிழக்கு கடற்கரை சாலையில் மற்றுமொரு சம்பவத்தைக் கண்டேன். பிரபல உணவகம் ஒன்றுக்கு பார்சல் உணவு வாங்க வந்திருந்த ஒருவர், வாகனங்கள் நிறுத்துமிடத்தில் மக்கள் கூட்டமும் வாகன நெரிசலும் நிறைந்திருந்த இடத்தில், தான் உடன் அழைத்து வந்திருந்த வளர்ப்பு நாயைக் கட்டி வைத்துவிட்டு, உணவகத்தின் உள்ளே சென்றார்.
வாசலில் இருந்த மக்கள் கூட்டத்தில் ஒரு தரப்பினர் அதைக் கொண்டு கொள்ளவில்லை. ஆனால், சிலர் அந்த நாய் அங்கிருப்பதை ஓர் அபாயமாகக் கருதி, முன்னெச்சரிக்கையாக விலகி நிற்பதையும், இன்னும் சிலர் அருகில் இருந்த தனது வாகனத்தைக் கூட எடுக்க முடியாமல் சிரமப்பட்டதையும் கண்டேன்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அதிகம் பாயும் பண்புகளைக் கொண்ட நாய்களுக்கு முகக்கவசம் அணிந்து அழைத்து வர வேண்டுமென்று சென்னை மாநகராட்சி விதிமுறை கூறுகிறது
இந்த இரு சம்பவங்களில் மட்டுமின்றி, சென்னை நகரில் வெளியே அழைத்து வரப்படும் பெரும்பாலான வளர்ப்பு நாய்களுக்கு வாயில் மஸ்ஸில் என்று அழைக்கப்படும் முகக்கவசம் போடப்படுவது இல்லை என்பதைக் காண முடிந்தது.
அதேவேளையில், இப்படியாக நாய்களை வீட்டிலிருந்து வெளியில் அழைத்து வருவோரில் பலரும் சுற்றத்தில் இருக்கும் பிறரின் அசௌகரியம் குறித்துச் சிந்திப்பதில்லை என்கிறார் நாய் நடத்தையியல் நிபுணர் ஸ்ரீதேவி.
'தடுப்பூசி பற்றிய அக்கறையற்ற நிலைமை'
"தெருநாய்கள் மட்டுமின்றி நல்ல பராமரிப்பில் வளர்க்கப்படும் நாய்கள் கடிப்பதாலும் ரேபிஸ் நோய் பரவி வருவதைக் காணும் போதே, இந்தப் பிரச்னையின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளலாம்" என்கிறார் மருத்துவர் குழந்தைசாமி.
கடந்த 2024 ஜனவரி முதல் 2025 ஆகஸ்ட் மாதம் வரையிலான பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகத்தின் தரவுகள்படி, தமிழ்நாட்டில் 64 ரேபிஸ் மரணங்கள் பதிவாகி இருப்பதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் செய்தி கூறுகிறது.
அதில், வளர்ப்பு நாய்கள் கடித்ததால் சுமார் 15 மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அந்தத் தரவுகளின்படி, இருவர் தடுப்பூசி போடப்பட்ட நாய்கள் கடித்து மரணித்து இருந்தாலும், பிற மரணங்களுக்குக் காரணமாக இருந்த நாய்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
இத்தகைய நிலைமை, "தடுப்பூசிகளைச் சரியாகப் போட வேண்டும் என்பது குறித்து பொறுப்புகூட இல்லாமல் பல நாய் உரிமையாளர்கள் இருப்பதைக் காட்டுவதாக" கூறுகிறார் குழந்தைசாமி.
அவரது கூற்றுப்படி, வளர்ப்பு நாய்களுக்கு முதல் தவணை ரேபிஸ் தடுப்பூசியை மூன்று மாதத்திலும், இரண்டாவது தவணையை 4 மாதம் முடிந்தவுடனும் போட வேண்டும்.
"இவற்றோடு, ஒவ்வோர் ஆண்டும் தொடர்ச்சியாக அதற்கான பூஸ்டர் தடுப்பூசியைப் போட வேண்டும். இதுதான் வளர்ப்புப் பிராணிகளை வைத்திருப்பதற்கான சட்டம் கூறும் விதிமுறை. ஆனால், அதை அனைவரும் முறையாகப் பின்பற்றுவதில்லை. இதனால், அபாயம் மேலும் அதிகரிக்கிறது," என்கிறார் அவர்.
படக்குறிப்பு, பொது சுகாதாரத் துறையின் முன்னாள் இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமி
வளர்ப்பு நாய்கள் குறித்த சட்ட விதிகள் யாவை?
வளர்ப்புப் பிராணிகளின் உரிமையாளர்கள் கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன. குறிப்பாக, கடந்த ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, சென்னை மாநகராட்சியில் வளர்க்கப்படும் நாய்களுக்கு உரிமம் வாங்கியிருக்க வேண்டியது அவசியம்.
ஆனால், அது நடைமுறையில் சரிவர கடைபிடிக்கப்படுவது இல்லை என்கிறார் குழந்தைசாமி. "முன்பெல்லாம் வளர்ப்பு நாய்களின் கழுத்தில் வட்ட வடிவிலான இரும்பு டாலர் ஒன்று தொங்குவதைப் பார்த்திருப்போம். அந்த டாலரில் ஒரு குறியீட்டு எண் இருக்கும்.
அந்த எண்ணை வைத்து, எந்தப் பஞ்சாயத்தின் கீழ், எந்த உரிமையாளரின் பேரில் அந்த நாய் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், அத்தகைய முறையான பதிவுகளை நாய் வளர்ப்பவர்கள் இப்போது கடைபிடிப்பதில்லை."
கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட விதிமுறைகளின்படி, வெளிநபர்களிடம் அச்சமூட்டும் வகையில், திடீரென பாயும் பண்புகளைக் கொண்ட நாயாக இருந்தால், அவற்றைக் கட்டுப்படுத்த உதவும் கயிறு அல்லது செயின் இல்லாமலோ, மஸ்ஸில் எனப்படும் முகக்கவசம் இல்லாமலோ அழைத்து வரக்கூடாது.
ஆனால், பெரும்பாலும் முகக்கவசம் இல்லாமல்தான் வளர்ப்பு நாய்கள் வெளியில் அழைத்து வரப்படுகின்றன என்று கூறும் நாய் நடத்தையியல் நிபுணர் ஸ்ரீதேவி, அதற்கு முற்றிலுமாக உரிமையாளர்களையே குற்றஞ்சாட்டிவிட முடியாது என்றும் கூறுகிறார்.
பட மூலாதாரம், A.R.Praveen Kumar
படக்குறிப்பு, நாய் நடத்தையியல் நிபுணர் ஸ்ரீதேவி
"நாய் மூலமாகப் பிரச்னை ஏற்பட்ட பிறகுதான் இத்தகைய விதிமுறைகளே கொண்டு வரப்பட்டன. அவற்றை முன்னமே கொண்டு வந்திருந்தால் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டு இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த விதிமுறைகள் உரிய வகையில் பின்பற்றப்படுகின்றனவா என்பது கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை," என்று அவர் விமர்சிக்கிறார்.
அரசாங்கம் விதிமுறைகளை வகுப்பதோடு நிற்காமல், அவற்றை அனைவருக்கும் கொண்டு சேர்க்கத் தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், அதைப் பின்பற்றத் தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டுமென வலியுறுத்துகிறார் நாய் நடத்தையியல் நிபுணர் ஸ்ரீதேவி.
'பிரச்னை நாய்களிடம் அல்ல; உரிமையாளர்களிடமே'
நாய்களை குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசும் ஸ்ரீதேவி, "குழந்தைகள் குதூகலிக்கும் போது எப்படி தன்னிலை மறந்து ஓடி விளையாடுகிறார்களோ, அப்படித்தான் நாய்களும் செய்கின்றன. ஆனால், அவை அப்படி முன்பின் தெரியாத நபர் மீது தாவுவதால் எதுவும் ஆகாது என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருக்க முடியாது" என்றார்.
எனவே, அப்படியான நடத்தைகளைக் கொண்ட நாய்களைக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டியது உரிமையாளரின் பொறுப்பு என்று அவர் வலியுறுத்துகிறார். "இந்தப் பொறுப்புணர்வு இல்லாமல் செயல்படுவோர்தான் அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் பொறுப்பாக வேண்டும், நாய்கள் அல்ல.
ஏனெனில், பிற உயிரினங்களைப் போலவே அவையும் கோபம், மகிழ்ச்சி என அனைத்தையும் சிந்திக்காமல் காட்டக்கூடிய விலங்குதான். அவற்றைக் கட்டுப்படுத்தும் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டிருக்க வேண்டியது உரிமையாளரின் கடமை" என்று விளக்கினார்.
பட மூலாதாரம், Getty Images
சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேலாக நாய் வளர்த்து வரும் கவிதா, ஸ்ரீதேவியின் கருத்துடன் உடன்படுகிறார்.
"எனது செல்லப்பிராணி ஆபத்தற்றது என்று நான் நம்பலாம். அதனுடன் பழகிய அனுபவமற்ற, முன்பின் தெரியாத நபர் ஒருவரும் அப்படியே நம்ப வேண்டுமென்று நான் எதிர்பார்க்க முடியாது," என்பதை வலியுறுத்துகிறார்.
அதே நேரம், "அரசாங்கமும் விதிமுறைகளை அறிவிப்பதோடு நிற்காமல் அவற்றை அனைவருக்கும் தெரியப்படுத்தவும், பின்பற்றத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கவும் வழி செய்ய வேண்டும்" என்று கோருகிறார் கவிதா.
வளர்ப்பு நாயை வெளியே அழைத்து வரும்போது, அவை பிறருக்கு ஆபத்து விளைவிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென்ற கருத்துடன் உடன்படும் நாய் உரிமையாளரான கவிதா, நாய்களை செயின் போட்டு, வாயை முகமூடியால் மறைத்து அழைத்து வர வேண்டும் என்பதோடு மற்றுமொரு கூற்றை வலியுறுத்துகிறார்.
நாய்களைப் பொறுத்தவரை, பெரும்பாலும் சிறுநீர் மற்றும் மலம் கழிக்கவே வெளியே அழைத்து வரப்படுகின்றன. அப்படியிருக்கும் சூழலில், அவற்றை அப்புறப்படுத்தத் தேவையான உபகரணங்களையும் கொண்டு வர வேண்டுமென்று விதிமுறை உள்ளதாகக் குறிப்பிட்டார் மருத்துவர் குழந்தைசாமி.
அதை வலியுறுத்திப் பேசிய கவிதா, "தனது நாயாகவே இருந்தாலும், அதன் கழிவை மிதிப்பதற்கு ஒருவர் தயாராக இருப்பாரா? அதேபோலத்தான் அனைவருக்கும் இருக்கும் என்பதைப் புரிந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும்" என்கிறார் அவர்.
இதுமட்டுமின்றி, நாய்களின் மலத்தில் உள்ள டேப்வோர்ம் கிருமிகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்துள்ளதை விவரிக்கும் மருத்துவர் குழந்தைசாமி, "ரேபிஸ் மட்டுமின்றி இதுவும் ஆபத்தானது. ஆகவே, நாய்களை வெளியே அழைத்து வரும் உரிமையாளர்கள் அவற்றின் மலத்தை அப்புறப்படுத்தவும் தயாராக வர வேண்டும்," என்று அறிவுறுத்தினார்.
உரிமையாளர்கள் விதிகளைப் பின்பற்றுவது முறையாகக் கண்காணிக்கப்படுகிறதா என்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த தமிழ்நாடு விலங்குநல வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி மருத்துவர் சொக்கலிங்கம், "வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகள் வகுக்கப்பட்ட பிறகு, அவை கடைபிடிக்கப்படுவதை நகராட்சி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்" என்றார்.
அதோடு, "இந்த விஷயத்தில், வளர்ப்பு நாய்கள் விற்பனை, அவற்றை நடத்தும் முறை உள்பட பலவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிகள் பின்பற்றப்படவில்லை என்றால் என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பவை உள்பட பல வழிகாட்டுதல்கள் அடங்கிய விரிவான அறிக்கை உருவாக்கப்பட்டு வருகிறது" என்று அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
'தெருநாய் மட்டுமல்ல, வளர்ப்பு நாய்களாலும் பிரச்னைதான்' - தவறு எங்கே நடக்கிறது?
சீனாவில் பிரமாண்ட இராணுவ அணிவகுப்பு
காட்டுப்பள்ளி கலவரம் : வடமாநிலத் தொழிலாளர்கள் 29 பேருக்கு சிறை- போலீஸ் அதிரடி!
பாகிஸ்தானில் மூன்று வெவ்வேறு இடங்களில் குண்டு தாக்குதல் ; 22 பேர் உயிரிழப்பு
நெடுந்தீவு – கச்சத்தீவு ஒன்றிணைக்கும் வகையிலான சுற்றுலா மேம்பாட்டு திட்டம் ஆராயப்படுகின்றது ; அமைச்சர் சந்திரசேகர்
இலங்கையில் HIV தாண்டவம்
அஸ்கிரிய பீட மகாநாயக்கா்கள் மற்றும் அணுநாயக்கர்களை சந்தித்தார் நாமல் ராஜபக்ஷ
அஸ்கிரிய பீட மகாநாயக்கா்கள் மற்றும் அணுநாயக்கர்களை சந்தித்தார் நாமல் ராஜபக்ஷ
03 Sep, 2025 | 12:03 PM
பொது ஜன பெரமுன தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச மற்றும் குழுவினர் மல்வத்தை, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கா்களையும் அணுநாயக்கர்களையும் சந்தித்தனர்.
அவர்கள் தமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக நல்லாசிகள் பெற்றுக் கொண்டனர்.
கண்டி ஶ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், சியம் மகா நிக்காயாவின் அஸ்கிரிய பிரிவின் மகாநாயக்கர் வண.வரகாகொட ஞானரதன தேரர், மற்றும் அனுநாயக்கத் தேரர் வண.வேண்டறுவே உபாலி, வண. நாரம்பனாவே ஆணந்த தேரர் ஆகியோரைச் சந்தித்து நல்லாசிகள் பெற்றுக் கொண்டனர்.
பின்னர் சியம் மகா நிக்காயாவின் மல்வத்தை பிரிவின் மகா நாயக்கத் தேரர் வண. திப்பட்டுவாவே சித்தார்த்தி ஶ்ரீ சுமங்கல அவர்களை சந்தித்தனர். அப்பொழுது நாமல் ராஜபக்ச அவர்களுக்கு வண. தேரரினால் புத்தரின் புனித உருவச் சிலை ஒன்றையும்அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நாமல் ராஜபக்சவிற்கு முடிந்த வரை பொறுமையுடன் பணியாற்றும்படி வண. தேரர் நல்லாசி வழங்கினார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சாகர காரியவசம், சஞ்ஜீவ எதிரிமான, சீ.பீ.ரத்நாயக்கா, முன்னால் மத்திய மாகாண சபையின் அவைத் தலைவர் மகிந்த அபேகோன் உட்பட பலர் இதன் போது கலந்து கொண்டனர்.
மனித உரிமைகள் உள்ளிட்ட விவகாரங்களில் இலங்கையின் முன்னேற்றத்தை அங்கீகரியுங்கள் - சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளிடம் வெளிவிவகார அமைச்சர் வேண்டுகோள்
மனித உரிமைகள் உள்ளிட்ட விவகாரங்களில் இலங்கையின் முன்னேற்றத்தை அங்கீகரியுங்கள் - சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளிடம் வெளிவிவகார அமைச்சர் வேண்டுகோள்
03 Sep, 2025 | 11:45 AM
(நா.தனுஜா)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (02) கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்த அமைச்சர் விஜித்த ஹேரத், நாட்டின் சமகால நிலைவரங்கள் மற்றும் குறிப்பாக மனித உரிமைகள்சார் நகர்வுகள் தொடர்பில் விரிவாக விளக்கமளித்தார்.
இதன்போது இலங்கையினால் இதுவரை அடையப்பட்டிருக்கும் முன்னேற்றங்களை அங்கீகரிக்குமாறும், ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபடுமாறும் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளிடம் அமைச்சர் விஜித்த ஹேரத் கேட்டுக்கொண்டார்.
அதேபோன்று மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதை முன்னிறுத்தி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும், பயங்கரவாதத்தடைச்சட்ட நீக்கம் மற்றும் புதிய சட்ட உருவாக்கம் உள்ளடங்கலாக எதிர்வருங்காலங்களில் மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவர் இராஜதந்திரிகளுக்குத் தெளிவுபடுத்தினார்.