நானா இப்போது கொரியாவில் கம்பி என்னும் ஜானி சோமாலியின் பிசினஸ் மாடலை பின்பற்றி (அடுத்தவர்களை கடுப்பேற்றி,தரக்குறைவாக பேசி,மட்டம்தட்டி ) வியூஸ் ஏற்றி காசு பார்த்தவர். ஆனாலும் நானாவோட எந்த வீடியோவிலும் முக்காடு அணிந்த அவரது தீன் குல மாணிக்கங்கள் வராது. காபீர்களாக தேடி தேடி வீடியோ எடுப்பார். அவாளை விட மோசமானவர்கள் இந்த பச்சை சங்கிகள்
அவர் நெற்றி முழுக்க நீறு பூசி முதல்வாங்கில் அமர்ந்து கரிசனையாக படிக்கும் மாணவர் … நாங்கள் நோட்ஸ் எடுக்க கொப்பி கூட கொண்டுபோகாமல் பின்வாங்கில் இருந்து கலாட்டா பண்ணும் ஆட்கள். பெண்கள் கவனம் முழுக்க எம்மீது இருப்பது வழமைதானே😀. 😀 தெனாலியில் டொக்டரிண்ட எச்சிலும் மருத்துதானே எண்டு கமல் சொன்ன மாரி போகுது கதை😂
நான் எழுதிய தொனி பிழைத்து விட்டது. தமிழ் தேசியத்தில் நம்பிக்கை இல்லாத ஒருவர் அதை விமர்சிக்கலாம், கேள்வி கேட்கலாம், அது தமிழருக்கு தேவையே இல்லாத அரசியல் வழி எனவும் வாதிடலாம், தப்பே இல்லை, ஆனால் தமிழ் தேசியத்தை நம்புவோருக்க்குத்தான் அதை தொடர்ந்து என்ன மாற்றங்களோடு முன்னெடுக்க வேண்டும் என சொல்லும் உரிமை இருக்க முடியும். முற்று முழுதாக முதலாளிதுவத்தை நம்பும் ஒருவர், கம்யூனிசத்தை எப்படி காலமாற்றத்துக்கு ஏற்ப reform பண்ணலாம் என்பதை தீர்மானிக்க முடியாது - அப்படி நடந்தால் அவர் கம்யூனிசத்தை, முதலாளித்துவத்தின் இன்னொரு வடிவம் ஆக்கி விடுவார். இதைத்தான் நான் சொன்னேன். கருத்து சொல்வதை அல்ல.
உங்களிடம் நான் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்…. தொடர்ந்து எழுதுங்கள். யாழ் போன்ற களங்களில் தமிழ் தேசியத்தை ஆதரித்து எழுத பலர் வருவார்கள், ஆனால் கேள்வி கேட்டு எழுத மிக சிலரே வருவார்கள். இது ஒரு பஜனை மடம் ஆகாமல் தடுப்பவர் நீங்கள். மன உழைச்சல் உட்பட அதற்கு நீங்கள் கொடுக்கும் விலை மிக அதிகம். ஆனால் சில சமயங்களில் உங்கள் கருத்துகள் அதீத மேலோட்டமானவையாக இருப்பதும் உண்மை. துரையப்பா ஒரு நல்ல உதாரணம் - அவர் ஒரு நல்ல மேயர் மறுக்கவில்லை, அவரை தமிழரசு மூர்க்கமாக எதிர்த்தது அதையும் மறுக்கவில்லை. ஆனால் மக்கள் மத்தியில் அவர் பற்றி இருக்கும் மதிப்பீடு இதனால் மட்டும் விளைந்தது அல்ல. தனி சிங்கள சட்டத்தின் பின், தமிழராய்ச்சி மாநாட்டு கொலைகளின் பின், இன்ன பல கலவரங்கள், கொடுமைகளின் பின் அதை எதையும் ஒரு துளி கூட கேள்வி கேட்காமல் தான் சார்ந்த ஒரு கட்சிக்கும் அதன் மூலம் இனவாதத்துக்கு சுயநலமாக அடிமை சேவகம் செய்த ஒருவர்தான் துரையப்பா. துரையப்பா ஒரு நல்ல தமிழனாக மட்டும் அல்ல, ஒரு நல்ல அரசியல்வாதியாக மட்டும் அல்ல, ஒரு நல்ல மனிதனாக கூட நடந்து கொள்ளவில்லை. இதனால் அவரை கொன்றது சரி என வாதிடவில்லை. ஆனால் அவரை பற்றி எழுதும் போது இந்த பக்கத்தை நீங்கள் ஒரு போதும் எழுதுவதில்லை. அது உங்கள் இஸ்டம். ஆனால் அதற்கு எதிர்வினையாற்றுவதும் ஏனையோர் இஸ்டம். ஆனால் ஒன்று - யாழில் மிக கண்ணியமாக எழுதுபவர்களில் நீங்கள் ஒருவர். பலவாறான சீண்டல்கள் name calling இன் மத்தியிலும். என்னால் எல்லாம் அப்படி வார்த்தையை கட்டுப்படுத்த முடியாது😀. இதற்கும் இன்னொரு பக்கம் உள்ளது.
"முந்தானை முடிச்சு" திரைப் படம முருங்கைக் காய் விடயத்தை தமிழர்களிடையே பரப்பிய மாதிரி, சிறீப்பிரியா நடித்த "நீயா" படம் இந்தச் சோடிப் பாம்பு பற்றிய கதையைப் பரப்பியது. பாம்பு, பென்குயின் போல ஒரே சோடியோடுவாழ் நாளைக் கழிக்கும் உயிரினம் அல்ல. அப்படியெல்லாம் அடித்தவரைச் சோடி அடையாளம் கண்டு வருவதானால், ஒரு சோடிகளின் படையே வர வேண்டும். அந்தளவுக்குப் பல தார மணம் செய்வது பாம்பினம். அப்படியெதுவும் நிஜத்தில் நடப்பதில்லை, திரையில் பார்த்து ரசிக்க வேண்டியது தான்!
அவர் இந்தியாவில் பரோடா அணிக்காக 2021 இல் விளையாடி இருக்கிறார். இதனால் 2022 ஐபிஎல் இல் பஞ்சாப் அணியில் இந்தியா uncapped வீரராக தெரிவு செய்யப்பட்டார். ஆனால் ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. பிறகு கனடாவுக்கு புலம் பெயர்ந்து இருக்கிறார். ஐபிஎல்லில் இனிமேல் இவர் சேருவதற்கு வாய்ப்புகள் குறைவு. ஐபிஎல் ஏலத்தின் ஒரு அணி அதிக பட்சம் 8 வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்யமுடியும். அவர்களில் ஒரு போட்டியில் அதிக பட்சம் 4 வெளிநாட்டு வீரர்கள்தான் விளையாட முடியும். ஆனால் இந்தியர்கள் என்றால் ஒரு அணியில் ஏலத்தில் குறைந்தது 17 வீரர்களை தெரிவு செய்யமுடியும்.
நாளை செவ்வாய் 10 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 10) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து NAM எதிர் NED 06 பேர் நமீபியா அணி வெல்வதாகவும் மற்றைய 17 பேர் நெதர்லாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். நமீபியா செம்பாட்டான் ஈழப்பிரியன் வாதவூரான் கிருபன் கோஷான் சே நந்தன் நெதர்லாந்து ஏராளன் வசீ புலவர் சுவைப்பிரியன் அல்வாயன் நியூ பலன்ஸ் வாத்தியார் கறுப்பி வீரப் பையன்26 சுவி அஹஸ்தியன் கந்தப்பு நியாயம் எப்போதும் தமிழன் ரசோதரன் பிரபா நிலாமதி இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 11) முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம் NZ எதிர் UAE அனைவரும் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டைகள் பரிமாறப்படுமா? 12) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா PAK எதிர் USA 22 பேர் பாகிஸ்தான் அணி வெல்லும் எனவும் ஒருவர் மாத்திரம் ஐக்கிய அமெரிக்கா அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ஐக்கிய அமெரிக்கா நிலாமதி இந்தப் போட்டியில் @நிலாமதி அக்காவுக்கு அதிர்ஷ்டம் கிடைக்குமா?
இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி, ஜோர்ஜ் முன்சீயின் அதிரடியான 84 (54 பந்துகளில்) ஓட்டங்களோடும், பிரெண்டன் மக்முல்லன் ஆட்டமிழக்காமல் வேகமாக எடுத்த 41 (18 பந்துகளில்) ஓட்டங்களுடனும் 4 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இத்தாலி அணியில் பென் மனென்டியின் 52 (31 பந்துகளில்) ஓட்டங்களைத் தவிர பிறர் சோபிக்காததால் 16.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 134 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது. முடிவு: ஸ்கொட்லாந்து அணி 73 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இத்தாலி அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி, மெதுவாக ஆடியதாலும் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததாலும் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸிம்பாப்வே அணி பிரயன் பென்னிட்டின் ஆட்டமிழக்காமல் எடுத்த 48 (36 பந்துகளில்) ஓட்டங்களுடன் 13.3 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 106 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: ஸிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது ஸிம்பாப்வே அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஓமான் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி எய்டன் மார்க்ரமின் அதிரடியான 59 (32 பந்துகளில்) ஓட்டங்களுடனும், டேவிட் மில்லர் ஆட்டமிழக்காது வேகமாக எடுத்த 39 (23 பந்துகளில்) ஓட்டங்களுடனும், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆட்டமிழக்காமல் மின்னல் வேகத்தில் எடுத்த 34 (19) ஓட்டங்களுடனும் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய கனடா அணியில் நவ்னீத் தலிவால் மாத்திரமே 64 (49) ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தில் சோபித்தார். மற்றையோர் விரைவாக விக்கெட்டுகளை இழந்ததால் இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியது அனைவரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்தமையால் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: நீங்கள் மட்டும்தான் தெரிவு செய்யவில்லை. இப்போது தெரிவு செய்தாலும் சேர்த்துக்கொள்ளப்படும் 😁