Aggregator

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

1 week 5 days ago
மன்னிக்கவும் கணக்கினை தவறாக கணித்துவிட்டேன் தனி நபர் உழைக்கும் குடும்பம் 4900 அல்ல 9200 கட்ட வேண்டும், எதற்கும் கணக்கினை நிங்களாகவே சரி பார்க்கவும். 45000 உழைக்கும் குடும்ப உறுப்பினர் ஒருவர் $4287 வரி கட்டுகிறார் இருவரது வருமான வரி $8574. தனிநபர் உழைக்கும் குடும்ப உறுபினர் $17786 வருமான வரி கட்டுகிறார். மேலதிகமாக $9212 வரி கட்டுகிறார்.

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

1 week 5 days ago
நடைமுறையில் அனைத்து வியாபாரத்திலும் இந்த வெளிப்படை தன்மை இல்லை என கூறலாம், ஆனால் அவர்கள் புத்திசாலித்தனமாக சட்டத்தினை பாவித்து தப்பிக்கொள்கிறார்கள். உதாரணமாக ஒரு காப்புறுதி நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம், ஆரம்பத்தில் ஒப்பந்தத்தில் உள்ள சரத்துக்களை பின்னாளில் மாற்றி விட்டு உங்களுக்கு ஒரு கடிதம் அனுப்புவார்கள், வழமை போல வரும் குப்பைகள் என நீங்கள் கவனிக்காமல் விட்டு விட்டால் பிரச்சினை வரும் போது அவர்களை அழைத்தால் அவர்கள் கூறுவார்கள் இந்த மாதத்தில் உங்களுக்கு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பினோமே என கைவிரித்து விடுவார்கள்.

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

1 week 5 days ago
அவுஸ்ரேலியாவில் Tax bracket எனும் முறைமையின் படி, இதன் பிரகாரம் குடும்ப உறுப்பினர் ஒருவர் உதாரணத்திற்காக $90000 ஆண்டு வருமானம் பெற்றால், அவர் அண்ணளவாக $13,500 வரை வரி கட்ட வேண்டும் அதனையே கணவனும் மனைவியும் $45000 (45000+ 450000 = 90000ஆண்டு வருமானம் ஈட்டினால் கிட்டத்தட்ட $8580 வரை வருமான வரியாக கட்ட வேண்டும். https://www.ato.gov.au/tax-rates-and-codes/tax-rates-australian-residents மேலதிகமாக $4900 வரியினை தனிநபர் வேலை செய்யும் குடும்பம் வழங்க வேண்டும். வியாபாரத்தில் வெளிப்படைத்தன்மை முக்கியமானது, ஆரம்பத்தில் அதனால சில இடையுறுகள் இருக்கலாம் அனால் ஒரு பெரிய தவறுக்கு அது இட்டு செல்லாமல் சிறிய அடியுடன் உங்களை சுதாரித்து கொள்ள உதவும்.

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

1 week 5 days ago
இது எங்கே, வசீ........... ஆஸ்திரேலியாவிலா? இது மிகவும் நியாயம் அற்றது. இங்கே அமெரிக்காவில் இப்படி இல்லை. நாங்கள் ஒரு குடும்பமாகவே வரியினை செலுத்துகின்றோம். Married Filing Jointly என்ற வகையில் இது வருகின்றது. இதில் குடும்பத்தின் மொத்த வருமானத்திற்கே வரி விதிக்கப்படுகின்றது. ஒருவர் உழைக்கின்றாரா அல்லது இருவருமே உழைக்கின்றார்களா என்பது இங்கு கணக்கில் எடுக்கப்படுவதில்லை. இங்கு என் வீடு இருக்கும் தெருவிற்கு அடுத்த தெருவிலேயே 'லிட்டில் இந்தியா' என்று சொல்லப்படும் இடமும், வியாபாரங்களும் இருக்கின்றன. கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக பல கடைகளின் பெயர்கள் மட்டுமே அடிக்கடி மாறிக் கொண்டிருக்கின்றன. வேறு எந்த மாற்றமும் கிடையாது. ஆரம்பத்தில் இது என்னவென்று புரியவில்லை, பின்னர் இவர்களில் சிலர் பழக்கமானார்கள், அதன் பின்னர் இது என்னவென்று புரிந்தது. ஆனால் எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் தொடர்ந்து செய்து கொண்டேயிருக்கின்றார்கள். அவர்களின் சமூகத்தில், குடும்பத்தில் மரியாதையுடனும் பார்க்கப்படுகின்றார்கள். ஒரு தடவை என்னுடைய வீட்டில் சில மாற்றங்களை செய்ய நினைத்து, ஒரு கட்டிட நிறுவனத்திடம் முற்பணம் கட்டியிருந்தேன். அவர்கள் வங்குரோத்து அடித்தார்கள். BBB (Better Business Bureau) என்னும் அமைப்பிடம் போகலாம் என்று சொன்னார்கள். அங்கு போனால், அந்த கட்டிட நிறுவனம் ஒரு 80 வயதுள்ள ஒருவரின் பெயரிலேயே இருந்தது. மற்றவர்களை எதுவும் செய்ய முடியவில்லை. ஆபிரகாம் என்ற பெயர் மட்டும் மனதில் பதிந்தது. முதலாளி போன்று நடந்து கொண்டிருந்தவரின் பெயர் அதுதான். ஆபிரகாம் என்னும் கடவுளுக்கு கோபம் கொஞ்சம் அதிகம் என்று சொல்கின்றார்கள். அந்தக் கடவுளாகப் பார்த்து இவர்களை ஏதும் செய்தால் தான் உண்டு.

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

1 week 5 days ago
அருமை. ஆனால் யாழ் போன்ற பொதுவெளியில் கூட இது வழமையானதுதான், இதுதான் பிழைக்கும் முறை, நேர்மை என்று எழுதுபவர்கள் கையாலாகதோர் என்பதாக அல்லவா எழுதுகிறார்கள். இப்படி ஒருவர் அல்ல, பலரை வெளியிலும் காண முடிகிறது. பிள்ளைகள் படிப்பும் இல்லை, தொழிலும் ஏதும் இல்லை, ஆனால் G Wagon வாங்கி தந்தால் சந்தோசமாக, எப்படி வந்தது என கேட்காமல் வாங்கும் நிலையில் பல பெற்றார்கள் உள்ளார்கள். வியாபாரம் = களவு என்பது போல் ஆக்கி வைத்துள்ளார்கள் எமது சமூகத்தில். இது வெளி பார்வைக்கு அநியாயமாக தெரிந்தாலும், இதில் ஆழமான தத்துவம் உள்ளது. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் individuality உள்ளது. Income tax ஒரு personal tax என்பதால் அதை அப்படி அறவிடுவதே, சரியானது.

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

1 week 5 days ago
சட்டம் கூட அனைவருக்கும் சமமாக இருப்பதில்லை, ஒரே குடும்பத்தில் கனவன் மனைவி இருவரும் வேலை செய்தால் வரும் வருமான வரியினை விட குடும்பத்தில் ஒருவர் வேலை செய்யும் போது அதிக வருமான வரி கட்ட வேண்டிய நிலை உள்ளது. இதுதான் முதன்மையானது.

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

1 week 5 days ago
இது கொழும்பான் அல்ல, அமர்தியா சென்னால் கூட விளங்க முடியாத விடயம்😂. சிதம்பர ரகசியம் போல - அனுபவிக்கணும், நக்கல் அடிக்கலாம், ஆராயப்படாது. மூளை கரைந்து விடும்😂. உங்கள் எண்ணம் உன்னதமானது👍. வியாபாரத்தில் முதன்மையானது நீங்கள் உங்கள் வேலையாட்களுக்கு காட்டும் பொறுப்பு என்பது இந்த திரியில் தெளிவாக ஒலிக்கிறது என நம்புகிறேன். அடுத்த பாடம் - விடயம் பிசகும் போது, அதை போத்து மறைகாமல் (KPMG ஐ அனுப்பி விட்டு ஒரு சின்ன அமைப்பவை அமர்த்தியுள்ளனர் ) நேர்மையாக அணுகுங்கள். மூன்றாம் பாடம் ஆங்கிலத்தில் captains of industry என்பார்கள் பெரும் தொழிலதிபர்களை. டைட்டானிக் கேப்டன் போல் உங்கள் தவறோ, இல்லையோ கப்பல் மூழ்கினால் கடைசி ஆளாக வெளி ஏறுங்கள். இயலாதோரை தாள விட்டு விட்டு, கள்ளர் போல் கம்பி நீட்டாமல்.

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

1 week 5 days ago
இந்த திரியினை ஆரம்பித்து ஒரு நல்ல உரையாடலை உருவாக்கும் சந்தர்ப்பத்தினை உருவாக்கிய உங்களுக்கு நன்றி! நீங்கள் கூறும் நேர்மையற்ற நிலைதான் பெரும் வீழ்ச்சிக்கு காரணமாக அமைகிறது, இந்த தனி மனித ஒழுக்க பிறழ்வை ஒருவரும் பெரிதாக எடுத்து கொள்வதில்லை, ஆனால் அடிப்படை தவறு அங்குதான் ஆரம்பிக்கின்றது.

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

1 week 5 days ago
இல்லை பலர் வியாபாரம் ஆரம்பிப்பதே வங்குரோத்து அடித்து அதில் (உறவுகளுக்கு மாற்றிய, வெளியால் எடுத்த காசை) ஆட்டையை போடத்தான். நடிகை ஷில்பா செட்டியின் கணவர் குடும்பம் இலண்டன் ஈலிங் ரோட்டில் ஒரே நகை கடையை வைத்து, பல குடும்ப உறுப்பினர் மாறி, மாறி இப்படி செய்துள்ளனர். கடையின் பெயர் ஐந்து வருடம் ஒரு தரம் மாறும். இதில் இழப்பை சந்திப்பது திறைசேரி. அதாவது ஒவ்வொரு குடிமகனதும் வரிப்பணம். சஞ்சீவும் மனைவியிம் இப்படி நோக்கோடு ஆரம்பித்தனர் என நான் சொல்லவில்லை. ஆனால் கடந்த 3 வருடத்திலாவது இவர்கள் dishonesty யாக நடக்க ஆரம்பித்துள்ளனர். எண்ணை வழங்கியவர்கள் மீதி எண்ணையை எடுத்து கொண்டார்கள். கணவனும், மனைவியிம் கடைசி வருடத்தில் 3.5 மில்லியனை டிவிடெண்ட் எடுத்துள்ளனர். தத்தளிக்கும் ஒரு வியாபரத்தை நீங்க முயல்பவர் இப்படியா செய்வார்? பிள்ளைகள் இருவர் பேரில் டிரஸ்டில் எல்லாத்தையும் போட்டு விட்டு. மாடமாளிகையை மார்கெட்டில் போட்டு விட்டு ஓடி விட்டார்கள். ஏமாந்த சோணகிரிகள்? சம்பளம் இல்லாத தொழிலாளர்கள். திறைசேரி - அதாவது என்போன்றோரின் வரிப்பணம். உண்மையான தொழில்முனைவோர் எண்டால் இதை நாட்டில் நிண்டு டீல் பண்ணி இருப்பார்கள். முதலில் தமக்கு இலாபம் ஈட்டி கொடுத்த வேலியாட்களின் கடைசி மாத சம்பளத்தையாவது கொடுத்திருப்பர். இதை களவு எண்டு சொன்னால் ஒயில் கானோடு ஒருவர் வருகிறார், ஐநா சபையை இன்னொருவர் கூட்டி வருகிறார்😂

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

1 week 5 days ago
கொழும்பான் வெறும் கணக்காளர் மட்டுமல்ல, வணிக நிர்வாகத்தில் முதுநிலை பட்டம் பெற்றவர், வர்த்தக துறை பற்றிய சரியான புரிதல் உள்ளவர், அவருக்கே விளங்கவில்லை என்றால் எங்களின் நிலை? இந்த விவாத திரி எதிர்காலத்தில் வியாபாரத்தில் ஈடுபட விரும்புபவர்களுக்கு, ஒரு முன்மாதிரியான திரியாக அமைவதற்கான அனைத்து பண்புகளும் கொண்ட திரியாக உள்ளது, அதனால் சில விடயங்களில் உள்ள விளங்காத விடயங்களை அறிய முனைகிறேன். ஒருவரின் வியாபார தோல்வி எந்தளவிற்கு அவர்களுக்கு உளப்பாதிப்பினை உண்டாக்கும் என்பதினை ஓரளவு உணர்ந்த முறையில், தவறுகளை சுட்டிகாட்டி அதன் மூலம் எதிர்காலத்தில் மற்றவர்கள் இம்மாதிரியான இக்கட்டுக்குள் விழாமல் பேண இந்த திரி உதவும் என நம்புகிறேன்.

தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்

1 week 5 days ago
இந்த விடையம் என்ன ...இனம் சர்ந்த எந்த விடையமானலும் உங்கள் எழுத்தில் காண்பது வெள்ளிடை மலை...இத்துடன் முற்றுப்புள்ளி

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

1 week 5 days ago
வியாபாரம் ஆரம்பிக்கும் போது அனைவரும் அது சிறக்க வேண்டும் எனும் எண்ணத்துடனேயே ஆரம்பிக்கின்றார்கள், பின்னர் அவர்கள் அகல கால் பதிக்க முற்படும் போதே, இவ்வாறான சரிவினை சந்திக்கிறார்கள் என கருதுகிறேன். தோற்றுப்போனவர்கள் இறுதியாக செய்யும் வேலை, வங்குரோத்தினை பதிவு செய்வதே! பலர் தமது சொத்துக்களை சட்டத்தினால் அணுக முடியாமல் தமது குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றி விட்டு இந்த வங்குரோத்தினை பதிவு செய்கிறார்கள்.

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

1 week 5 days ago
அது பட்டயக்கணக்காளரான தனக்கே புரியவில்லை. சில jargons ஐ ஆங்காங்கே தூவி விட்டு எதுவும் விளங்காத மாதிரி இருக்கு எழுத்து என்பதுதான் கொழும்பானின் கொம்பிளைண்டே (கீழே பார்க்கவும்). நீங்க அவரை போய் விளங்கபடுத்த சொன்னா அவர் பாவம் இல்லையா😂? கொழும்பான் மைண்ட் வாய்ஸ் - கொடுமை கொடுமை எண்டு கோவில்ல வந்து முறையிட்டால் - ஐயர் என்னை மந்திரம் ஓத சொல்லுறார்😂.

இஷாராவை போல ஈஸ்டர் தாக்குதல் கொலையாளிகளை தப்பிக்கவைத்த ஆனந்தன்!

1 week 5 days ago
சட்ட விரோதமான வேலை செய்வோருக்கு கெத்து கூட, அறிவு சொற்பம். ஒருநாள் மாட்டுப்பட்டு, குட்டு வெளிவராது என்கிற அற்ப அறிவு. சேர்த்தது, தனிப்பட்ட, குடும்ப மானம் இழந்து வாழ்நாள் முழுதும் சிறை. தனக்கேற்ற வேலைசெய்து கஞ்சியோ கூழோ குடித்து நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம். இனிமேல் இவர் செய்யாததும் இவர் மேல் சுமத்தப்படும். எத்தனை பேர் வாழ்க்கையில் விளையாடியிருப்பர் தம் சொந்த பேராசையால். இவரோ? எவரோ?

தவிக்கும் தன்னறிவு

1 week 5 days ago
இதை வாசிக்கும் போது தான் 'அகம் ப்ரம்மாஸ்மி' இன் அர்த்தம் விளங்குது. எல்லா மனிசருக்கையும் இருக்கும் இந்தப் பிரம்மம் தான் வேலையைக் காட்டுது போலை. 😁

ட்ரம்ப் – புட்டின் சந்திப்பு நிறுத்தி வைப்பு!

1 week 5 days ago
ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகார நிலை நிறுத்தலுக்காக எந்த எல்லை வரை செல்லவும் ஐரோப்பிய ஒன்றியம் தயாராக உள்ளதா? இவ்வாறான நிலையில் உக்கிரேன் இரஸ்சிய போர் முடிவுக்கு வராது என கருதுகிறேன்.