1 week 4 days ago
Chandran Veerasamy · 1968 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலகத்தமிழ்மாநாட்டு கருத்தரங்கு ஒன்றில் எம்.ஜி.ஆர். பேசினார். கவிதையைப் பற்றிய நயமான விளக்கம் அளித்தார். ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை ’ என்று கூறினார். கூடியிருந்த மக்கள் கரகோஷம் எழுப்பினர். பின்னர், அண்ணா பேச வந்தார். எம்.ஜி.ஆருக்கே குருவாயிற்றே? கேட்க வேண்டுமா? கவிதை பற்றி அவர் கூறும்போது, ‘அறிந்ததனை அறிந்தோர்க்கு அறிவிக்கும் போதினிலே அறிந்ததுதான் என்றாலும் எத்துணை அழகம்மா? என்று அறிந்தோரையும் வியக்க வைக்கும் அருங்கலையே கவிதையாகும்’ ... என்று கவிதையாலேயே கவிதைக்கு விளக்கம் அளித்தார் அறிஞர் அண்ணா. மக்களின் கரகோஷம் அடங்க வெகுநேர மாயிற்று. தொடர்ந்து அண்ணா பேசும்போது, ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை என்று எம்.ஜி.ஆர். கூறினார். நீங்கள் கைதட்டினீர்கள். எதற்கு என்று யோசித்தேன். பிறகுதான் தெரிந்தது. அவர் தன்னைப் பற்றியே சொல்லியிருக்கிறார். ஆம். அழகும் உணர்ச்சியும் சேர்ந்த எம்.ஜி.ஆரே ஒரு கவிதைதானே...’ என்றார் அண்ணா. மக்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. இதயக்கனியின் ஈர்ப்பு ரகசியம் அறிந்தவர் அண்ணா ! - தி இந்து . Voir la traduction
1 week 4 days ago
1 week 4 days ago
பிரித்தானிய நடைமுறையும் அவுஸ் போலவே. இதன் பின்னால் பெண்ணுரிமை, தனிமனித உரிமை, வேலை செய்ய கூடிய அனைவரையும் வேலைக்கு அனுப்ப தூண்டுவது, இன்னும் பல வலுவான காரணங்கள் உள்ளன. அனைவருக்கும் உழைக்கும் முதல் 12500 க்கு வரி இல்லை. இதில் 1200 ஐ மணமானவகள் marriage allowance என தமக்குள் பரிமாறி கொள்ளலாம். இருவரும் 12500 க்கு மேல் உழைத்தால். எந்த வரி விலக்கும் இல்லை. ஆனால் அனைவருக்கும் கான்சர் சிகிச்சை வரை இலவசமாக அரசு தரும். இந்த வரிப்பணத்தை வைத்து.
1 week 4 days ago
மேலே கோசன் தெளிவாக குறிப்பிட்டுள்ளர். இவர்களது நோக்கம் பிழையானது
1 week 4 days ago
😂 வாப்பண்டே…. ஈஜிப்ட்ல குட்டியும், குட்டித்தனமா சட்டப்படி ஈக்கீங்க வா… ஜாலிய ஒங்களுக்கு ராஜா போல ஈக்க ஏலாம, ஒயில எடுத்து தல ல கொட்டினா, நாங்க என்ன வாப்ப செய்ய😂. சரி சரி இனி சரி ஓயில் கிட்ட போவாம அல்லாஹட காவல்ல சேப்டியா இரிங்க.
1 week 4 days ago
சொல்ல முடியாது. இவர்கள் பின்னால் இன்னும் பலர் இருக்கலாம். அண்மையில் ஒரு கம்பெனி கொவிட் நேரம் பிரித்தானிய அரசுக்கு கிளினிக்கல் சாமான் தரமற்று விற்ற வழக்கில் 120 மில்லியன் அளவு அரசுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என கோர்ட் ஆடர் இட்டது. ஆடர் வர முதல் நாள் நிறுவனம் வெறும் 600,000 சொத்துடன் திவால். கொவிட் அவரசகால விதிகளின் படி எந்த விதியையும் பின்பற்றாமல் - சில நாட்களுக்கு முன் பதியபட்ட கம்பெனியிடம் பிரித்தானிய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. கம்பெனியின் டிரெக்டரின் மனைவி அப்போதைய ஆளும் அரசில் மேல்சபை சீமாட்டி. அவர் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு கம்பெனியை அறிமுகம் செய்துள்ளார். விடயம் வெடித்தவுடனே கம்பெனியில் இருந்த பணத்தை பிள்ளைகள் இதர ஆட்களுக்கு மாற்றி விட்டார்கள். சீமாட்டி பல மில்லியன் பெறுமதியான கப்பல் மாளிகை ஒன்றையும் வாங்கினார். இது வெறும் 120 மில்லியன். 20 பில்லியனினில் (20x1000 மில்லியன்) பல மறை கரங்களும் இருக்கலாம். இன்னும் எந்த வழக்கும் போட பிந்துவது சந்தேகதை வலுக்க வைக்கிறது. பிகு பெட்டிக்கடை கணக்கு இருநூறாயிரமோ, இருபது பில்லியனொக் - வங்குரோத்து மூலம் சுத்துமாத்து பண்ணும் டகால்டி வேலையின் அடிப்படை ஒன்றேதான். இந்த பிணக்கின் பரிமாணம் எமக்கு வாழ்நாளில் பரிச்சயமில்லா தொகைதான். ஆனால் நம்மிடம் பணம்தான் இல்லை, புத்தி இருக்கிறது. என்ன நடக்கிறது என்பதை விளங்க அது போதும்.
1 week 4 days ago
நீங்கள் சொல்வது சரிதான். இது இவர்கள் மட்டும் செய்த பிழை அல்ல. கம்பெனியில் அதிகாரத்தில் இருந்த அனைவரும் சேர்ந்தே, கிடைத்தவரை இலாபம் என்ற அடிப்படையில் உருவ கூடியதை உருவி உள்ளார்கள் என்றே நான் நினைக்கிறேன். இங்கேதான் KPMG யை அனுப்பி விட்டு - இன்னொரு பிரபலமாகாத கணக்காளரை உள்ளே எடுக்கும் போதே இப்படித்தான் இதை முடிப்பது என திட்டமிட்டே இதை செய்துள்ளார்கள் என நினைக்கிறேன். நட்டத்தில் ஓடும் கம்பெனிகள் டிவிடென் கொடுப்பது வழமை என்பதையும் ஏற்கிறேன். ஆனால் கம்பனியின் இருப்பே கேள்விகுறியாகலாம் என்ற போது இப்படி எடுப்பது - சட்டப்படி சரியாகினும், இவர்கள் நோக்கம் என்ன என்பதை அப்பட்டமாக காட்டுகிறது. மீண்டும் சொல்கிறேன்…ஆரம்பத்திலேயே களவு எண்ணத்தில் தொடங்கியதாக நான் நினைக்கவில்லை. ஆனால் கடைசியில் அப்படித்தான் முடித்துள்ளார்கள்.
1 week 4 days ago
பைரூஸ் இடம் பெயர்ந்து வாழ்ந்த இடம் நுரைச்சோலை என நினைக்கிறேன். வீரகேசரியில் கவிதைகள் எழுதுவார். பண்பாண மனிதர். இப்போ எப்படி இருக்கிறார் என் அறிய ஆவல்.
1 week 4 days ago
கொழும்பில் மழை இன்று விளையாட்டு நடக்கா விட்டால் வங்கிளாதேஸ் கடசி இடத்தை பிடிக்கும்..................................................
1 week 4 days ago
Chandran Veerasamy · விருதுநகர் தெப்பக்குளம்; குளத் தைச் சுற்றிலும் கடைவீதிகள். அந்த வீதி களின் ஒன்றுக்குள்ளே பிரிந்து செல்லும் சுலோசன நாடார் வீதி என்னும் அந்தச் சின்னஞ்சிறு சந்துக்குள்ளேதான், தமிழ் நாட்டின் தவப்புதல்வர் காமராஜ் அவர் களை ஈன்றெடுத்த அன்னை சிவகாமி அம்மாள் வாழ்ந்து வருகிறார். மிகச் சாதாரணமான எளிய இல்லம். அங்குள்ள கயிற்றுக் கட்டிலில் அந்த அம் மையார் படுத்திருந்தார். சின்ன இடம். நாலு பக்கத்துச் சுவர்களிலும் பழம் பெரும் தேச பக்தர்களின் படங்கள். அவற் றுக்கிடையே வேல் முருகன் படம். அதற்குப் பக்கத்தில் சத்தியமூர்த்தியின் உருவம்! கட்டிலில் படுத்திருந்த மூதாட்டியார் எங்களைக் கண்டதும் எழுந்து உட் கார்ந்தார். மூச்சுத் திணறியது. ''வாங்கய்யா'' என்று அன்புடன் அழைத்தபடியே எழுந்து போய் மின்சார விளக்கின் 'ஸ்விச்'சைப் போட்டார். ''தங்கள் திருமகனைப் பற்றித் தாங்கள் ஏதாவது சொல்லவேண்டும்...'' ''நான் என்ன சொல்லப் போகிறேன் ஐயா! எனக்கு வயதாகிவிட்டது. அத்து டன் ரத்தக் கொதிப்பு வேறு. பேசினால் மூச்சுத் திணறுகிறது. ரெண்டு வருசம் உப்பைத் தள்ளிப் பத்தியச் சாப்பாடு சாப்பிட்டேன். இப்போது கொஞ்சம் பரவாயில்லை. சாப்பாட்டில் உப்பு சேர்ந்துக்கொள்கிறேன்.'' ''சென்னைக்குப் போய் மகனோடு இருப்பதில்லையா?'' என்று கேட்டபோது அம்மூதாட்டியார் முறுவலித்தார். ''நல்லாச் சொன்னீங்கய்யா... அவன் மந்திரியாகி ஏழெட்டு வருசம் ஆகுது. இதுவரைக்கும் நான் அங்கே அஞ்சு தடவைதான் போயிருப்பேன். போன உடனே என்னை ஊருக்குத் திருப்பிப் பயணம் பண்ணி அனுப்புவதிலேயே குறியாயிருப்பான்! 'பட்டணம் பாக்க ணும்னா சுத்திப் பாரு. திருப்பதிக்குப் போகணும்னா போயிட்டு வா. எல்லாத் தையும் பார்த்துட்டு உடனே விருதுநகர் போய்ச் சேரு'ம்பான்..!'' ''மாசச் செலவுக்கு உங்களுக்குப் பணம் அனுப்புகிறாரா?'' ''அனுப்பறான். பொடிக்கடை தனக் கோடி நாடார் மூலமாத்தான் பணம் வரும்...'' ''எவ்வளவு பணம் அனுப்பறாரு?'' ''120 ரூபாய். பத்துமாய்யா? தண்ணி வரியே பதிமூணு ரூவா கட்டறேன். மாசம் அந்த 120 ரூபாதான், அதுக்கு மேலே செலவு செய்யக்கூடாதும்பான். அவங்கவங்க உழைச்சுப் பிழைக்கணும் பான். நானும் பேசாம இருந்துடுவேன். அவன் சொல்றதும் நியாயம்தானேய்யா? ரேசன் வந்துது பாருங்க... அப்ப இங்கே வந்திருந்தான். 'என்னப்பா, இப்படிக் கேப்பையும் கம்பும் போடறாங்களே, இதை எப்படிச் சாப்பிடறது? நெல்லு வாங்கித் தரப்படாதா'ன்னு கேட்டேன். 'நெல்லு பேச்சுப் பேசாதே. ஊருக்கெல்லாம் ஒண்ணு, நமக்கு ஒண்ணானு கேட் டான். அவன் சொல்றதும் நியாயம்தானேய்யா..?'' ''இப்படியரு தவப்புதல்வனைப் பெற்றெடுத்த தாங்கள் நிஜமாகவே பாக்கியசாலிதான்'' என்றதும், அன்னை யின் கண்கள் கலங்கிவிட்டன. ''ஏன் கண் கலங்குகிறீர்கள் அம்மா?'' ''கலங்காம என்ன செய்ய? துறவியாகி விட்ட பட்டினத்தடிகளை அவன் தாய் துறந்துவிட்டதைப்போல், நானும் என் மகனை இந்த நாட்டுக்காகத் துறந்து விட்டு நிற்கிறேனே!'' - விகடன்பொக்கிஷம். Voir la traduction
1 week 4 days ago
ஐசே நான் டொஹா கட்டர விட்டுபோய் இரண்டு வருடம் வா. நிம்மதியா இலங்கைல மாஸ் ஹொல்டிங், ஹெல க்லோதிங் என பெரிய கம்பனில வெல செஞ்ச என்னை புடிச்சி ஓனர் தன்ற நோர்த் ஆப்ப்ரிகா, எகிப்து கைரோ வில உள்ள் பெக்டரில போய் கொஞ்ச நாள் வெல செய் என்ரு என்னை அனிப்பினாருவா. ஐசே பசுந்தான ஈஜிப்சியன் கிளியோபட்ராக்கள் குட்டிகளோடவா இருகேன். மார சூன் வா. இன்னைக்கு எகிப்திய நைல் நதி கிட்ட ஒக்காந்து கோப்பிய உறிஞிசிட்டு ஒங்கட, ஜஸ்டின்ட கருத்த பர்ர்த்டேன் வா ஐசே சிரிப்பு தாங்க ஏலலவா. அப்ப்புடி சிரிப்பு வா தாங்க முடியலவா. ஈஜிப்சியன் குட்டிகள் என்னையா பயிதியம் என நினக்குறாங்கவா? பாவம் என்று ஒயில் தொடைக்க போனேவா. நீங்கள் வேணா வேணா சொல்ல சொல்ல போய் தொடச்சேன் வா. ஐயோ என்ட மேல் என்லாம் ஒயில் வா. ஐசே பிசின் மாதிரி ஒட்டதுவா ஒயில். சோப் போட்டும் போவுதில்லவா. லாம்பெண்ணை ஏதாவது போட ஏலுமாவா? காப்பாத்துங்க வா...
1 week 4 days ago
அட நடிகைகளா கெல்பத்திர கிட்ட இருகிறது தானெடி என்கிட்டையும் இருக்கு. (கைப்பேசி) ஏண்டிகளா எனகொரு வீடியோ அனுப்புங்கடி இந்த காணொலிகளை நான் பார்த்தொழொலிய இந்த செய்தியையை நம்பமாட்டேன்
1 week 4 days ago
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –17 | “தி சாட்டனிக் வெர்சஸ்” நாவல் ஒரு கற்பனைக்காக எழுத்தாளரின் உயிரைக் கேட்க வைத்த நாவல் அ. குமரேசன் வேறு எந்தப் புத்தகமும் இப்படிப்பட்ட எதிர்ப்புகளையும் தடைகளையும் வன்முறைகளையும் எதிர்கொண்டதில்லை எனும் அளவுக்குத் தாக்குதல்களுக்கு உள்ளானது ஒரு நாவல். படைப்பாளி இப்போதும் பொது இடங்களுக்கு வர இயலாமல் பதுங்கி வாழ வேண்டிய நிலையை ஏற்படுத்தியிருக்கும் அந்த நாவல் “தி சாட்டனிக் வெர்சஸ்” (The Satanic Verses) (சைத்தான் வசனங்கள்). இந்தியா விடுதலையடைவதற்கு இரண்டு மாதங்கள் முன்பாக, 1947 ஜூன் 19இல், அன்றைய பம்பாய் நகரில், பிறந்தவர் அஹமது சல்மான் ருஷ்டி (Salman Rushdie). குடும்பம் பிரிட்டனில் குடியேறியபோது அங்கே கல்வி பயின்றவர். ருஷ்டி தொடக்கத்தில் ஒரு பதிப்பகத்தில் படிதிருத்துநராக வேலை செய்தார். அது அவருக்குள் இருந்த எழுத்தாளரை உசுப்பிவிட்டது போலும். அவரது முதல் நாவல் ‘க்ரிமஸ்’ புராணக் கதைக் கூறுகளுடன் அறிவியல் புனைவாக வந்தது. இந்தியா சுதந்திரமடைந்த நாளின் நள்ளிரவில் பிறந்த இரண்டு குழந்தைகளின் மூலமாக சமூக மாற்றங்கள் பற்றிப் பேசும் ‘மிட்நைட்ஸ் சில்ரன்’ (1981ஆம் ஆண்டுக்கான புக்கர் விருது பெற்ற இந்த நாவல், 1994, 2008 ஆகிய ஆண்டுகளில் ‘புக்கர் விருதுபெற்ற நாவல்களில் சிறந்த படைப்புக்கான விருதை இரண்டு முறை பெற்றது), பாகிஸ்தானின் அரசியல், சமூக நிலைமைகளை விமர்சிக்கும் ‘ஷேம்’, குழந்தைகளுக்காக எழுதிய ‘ஹாரூன் அன் தி ஸீ ஆஃப் ஸ்டோரீஸ்’, தென்னிந்தியப் பின்னணியில் பண்பாடுகள் பற்றி விவாதிக்கும் ‘தி மூர்ஸ் லாஸ்ட் சை’, கிரேக்கப் புராணக் கதைகளை இணைக்கும் ‘தி கிரவுண்ட் பினீத் ஹெர் ஃபீட்’, இந்தியப் பேராரியருக்கு நியூயார்க் நகரில் ஏற்படும் கலாச்சார அதிர்வுகளை சித்தரிக்கும் ‘ஃபியூரி’, காஷ்மீர் பின்னணியில் பயங்கரவாதத்துக்கு எதிராக அன்பின் வலிமையை முன்வைத்த ‘ஷாலிமர் தி க்ளோன்’, அக்பர்-பிளாரன்ஸ் காலக்கட்டங்களுக்குச் செல்லும் ‘தி என்சான்ட்டர்ஸ் ஆஃப் ஃபிளாரன்ஸ்’, சிறார் நாவலாகிய ‘லூகா அன் தி ஃபயர் ஆஃப் லைஃப்’, புராணக் கற்பனைகளையும் நிகழ்காலச் சிக்கல்களையும் நியூயார்க் பின்னணியில் ஆராயும் ‘டூ இயர்ஸ் அன் ட்வென்டி எய்ட் நைட்ஸ்’, டொனால்ட் டிரம்ப் காலக்கட்ட அமெரிக்கப் பின்னணியில் ஒரு மர்மமான குடும்பத்தை அறிமுகப்படுத்தும் ‘தி கோல்டன் ஹவுஸ்’, நவீன காலத்தில் அடையாளத் தேடல் பயணம் பற்றி விவரிக்கும் ‘குயிக்சோட்’, ஒரு பெண்ணின் ஆற்றல் ஓர் அரசாட்சியையே நிறுவுவதாகக் கூறும் ‘விக்டரி சிட்டி’ ஆகிய நாவல்களையும் எழுதியிருக்கிறார். பயணக் கட்டுரைத் தொகுப்பு, தன் வரலாறு, நினைவுக் குறிப்புகள் ஆகிய நூல்களும் வந்துள்ளன. பதற்றங்களும் ஃபத்வாவும் ருஷ்டியின் நாவல்கள் பெரும்பாலும் புராணக் கதைக் கூறுகளும், மதநூல்களின் கருத்துகளும் கலந்து நவீன வாழ்க்கையைப் பேசுகின்றன என்று செயற்கை நுண்ணறிவுத் துணைகள் தெரிவிக்கின்றன. இவரது நான்காவது நாவல்தான் “தி சாட்டனிக் வெர்சஸ்” (The Satanic Verses). 1988இல் லண்டனில் வெளியாகிப் பலநாடுகளுக்கும் பயணப்பட்ட இந்த நாவலுக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனங்கள் எழுந்தன. புத்தகப் படிகள் தீக்கிரையாக்கப்பட்டன. புத்தகத்தை விற்பனைக்கு வைத்திருந்த கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன பாகிஸ்தான் அரசு புத்தகத்தை இறக்குமதி செய்யவோ விற்கவோ கூடாதென்று தடை விதித்தது. அடுத்த ஆண்டிலேயே இந்தியாவிலும், ராஜீவ் காந்தி அரசு, படைப்புச் சுதந்திரத்திற்குத் துணையாக நிற்பதற்கும் கலவரங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் மாறாக, புத்தகத்திற்குத் தடை விதித்தது. மத்திய கிழக்கு நாடுகள் உட்பட பல அரசாங்கங்கள் தடை விதித்தன. ஈரான் நாட்டு அரசுத் தலைவரும் இஸ்லாம் தலைமை குருவுமான அயதுல்லா கோமெய்னி, புத்தகத்திற்கு மட்டுமல்லாமல் எழுத்தாளரின் உயிர்வாழ்க்கைக்கே தடை விதித்தார். “ஃபத்வா” எனப்படும் அந்த ஆணையின்படி உலகில் எங்கேயும் இருக்கக்கூடிய மத விசுவாசிகள், ருஷ்டியை எங்கே கண்டாலும் கொலை செய்யலாம். கொல்ல வாய்ப்பில்லாதவர்கள் அவர் இருக்குமிடம், நடமாட்டம் உள்ளிட்ட தகவல்களைக் கொல்லக்கூடியவர்களுக்கு அளிக்கலாம். ஒரு புனிதக் கடமையாக அறிவிக்கப்பட்ட இந்த ஃபத்வாவைத் தொடர்ந்து வன்முறைகள் தீவிரமடைந்தன. ஜப்பான் நாட்டில் மொழிபெயர்ப்பாளர் சுட்டுக்கொல்லப்பட்டார். இறைத்தூதரையும், மார்க்க போதனைகளையும் இழிவுபடுத்திவிட்டார் என்பதே ருஷ்டி மீதான குற்றச்சாட்டுகளின் சாரம். மார்கரெட் தாட்சர் தலைமையிலான பிரிட்டிஷ் அரசு அவருக்கு அடைக்கலமும் பாதுகாப்பும் அளித்தது. பல ஆண்டுகள் கழித்து, பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் இல்லாமல் சுதந்திரமாகச் சுற்றிவர விரும்புவதாக அவர் அறிவித்தார். ஆனால் ஒரு பொதுநிகழ்ச்சிக்கு வந்திருந்தவர் இடுப்பில் கத்திக்குத்து பட்டு காயமடைந்தார். மறுபடி பாதுகாப்பு வளையத்திற்குள் பதுங்க வேண்டியதாயிற்று. அவருக்கு ஆதரவாகக் கருத்துக் கூறிய திறனாய்வாளர்கள், நாவலில் அப்படி இழிவுபடுத்துகிற நோக்கம் எதுவும் இல்லை என்றார்கள். விமர்சிக்கப்படுகிற பகுதி இலக்கியப்பூர்வமான கற்பனைச் சித்தரிப்புதான் என்று கூறினார்கள். மார்க்கம் சார்ந்த பலர் புலம்பெயர்ந்தவர்களாகப் பல நாடுகளில் அவல வாழ்க்கை வாழ்கிறார்கள், அவர்களுக்காகக் குரல் கொடுக்கிற நாவல்தான் இது என்றார்கள். எந்த மக்களுக்காக அவர் தன் படைப்பின் மூலம் பேசுகிறாரோ அந்த மக்களைச் சேர்ந்தவர்களே அவரைக் கொலை செய்யத் துடிப்பது துயரமானது என்றும் கவலை தெரிவித்தார்கள். இவ்வாறு ருஷ்டிக்கு ஆதரவாக எழுதியவர்களில் மதம் சார்ந்தவர்களும் இருந்தது கவனத்திற்குரியது. சமூகப் பொறுப்பு படைப்பாளியின் வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு எப்போதும் தோள்கொடுக்கிறவர்களிலும் சிலர், படைப்பாளியின் வெளிப்பாட்டுச் சுதந்திரம் எவ்வளவு முக்கியமானதோ அதே அளவுக்கு சமூகப் பொறுப்பும் முக்கியமானது. நம்பிக்கைகள் சார்ந்தவற்றை விமர்சிக்கிறபோது கூட நம்புகிறவர்கள் ஏற்கத்தக்க வகையில் நுட்பமாக அந்த விமர்சனத்தை முன்வைக்க வேண்டும் என்றார்கள். படைப்புச் சுதந்திரமும் சமூகப் பொறுப்பும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையா அல்லது தோழமையானவையா என்ற விவாதம் இன்றளவும் நடந்துகொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், இந்த நாவலையும் நாவலாசிரியரையும் எதிர்த்துக் கிளம்பியவர்கள் எல்லோரும் புத்தகத்தை ஒரு தடவையாவது வாசித்திருப்பார்களா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது. தாங்கள் நேரடியாகப் படித்து ஒரு முடிவுக்கு வராமலே, சமூகத் தலைவர்கள் அல்லது இப்படிப்பட்ட பிரச்சினைகளைக் கிளப்புவதே வேலையாக இருப்பவர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதாலேயே சுயமான சிந்தனை ஏதுமின்றி வன்முறைக்குத் தயாராகிறவர்கள் எல்லா நாடுகளிலும் மதங்களிலும் சாதிகளிலும் இன்னபிற அமைப்பிகளிலும் இருக்கத்தானே செய்கிறார்கள்? இருவரின் கதை ருஷ்டியின் மாய மெய்யியல் சித்தரிப்புத் தன்மையுடன் புத்தகம் சொல்கிற கதை என்ன? இந்தியாவில் இந்தித் திரைப்பட உலகம் சார்ந்த இருவர் இதன் நாயகர்கள். கிப்ரயீல் ஃபரிஷ்டா நட்சத்திர நடிப்புக் கலைஞர். சலாவுதீன் சாம்ச்சா இங்கிலாந்தில் வேலை செய்யும் பின்னணிக் குரல் கலைஞர். ஃபரிஷ்டா பக்திப் படங்களில் இந்து தெய்வங்களாக வந்து புகழ்பெற்றிருப்பவர். சாம்ச்சா தன் தந்தையுடனும் இந்தியச் சூழலுடனும் ஒத்துப்போக மறுத்து லண்டனில் குடியேறியவர். இவர்கள் இருவரும் பயணிக்கும் விமானத்தை மற்ற பயணிகளோடு சேர்ந்து கடத்துகிறது பஞ்சாப் தனிநாடு தீவிரவாதக் குழு. பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் விமானத்தை ஆற்றின் மேல் பறக்க வைத்து வெடிக்கச் செய்கிறார்கள். மற்ற அனைவரும் மாண்டுவிட, ஃபரிஷ்டாவும் சாம்ச்சாவும் மாயமான முறையில் உயிர் பிழைக்கிறார்கள். ஃபரிஷ்டா இறைத்தூதர் கிப்ரயீல் போலவும், சாம்ச்சா ஒரு சாத்தான் போலவும் உருமாறுகிறார்கள். ஃபரிஷ்டா தலையின் பின்னால் அவ்வப்போது ஒளிவட்டம் தோன்றுகிறது, சாம்ச்சாவுக்கு ஆட்டுக் கொம்புகளும் கால்களும் முளைக்கின்றன. சம்ச்சாவை ஒரு சட்டவிரோதக் குடியேறி என்று சந்தேகிக்கப்படும் காவல்துறையினர் கைது செய்து அவமதிக்கவும் செய்கின்றனர். ஃபரிஷ்டா தனது முன்னாள் காதலியான ஆலியா என்ற மலையேற்ற வீரரைக் கண்டுபிடித்துச் சேர்கிறார். இருப்பினும், தன்னை இறைத்தூதராகக் கருதுவதன் மனச்சிதைவுக்கு உள்ளாக அவர்களது உறவில் சிக்கல் ஏற்படுகிறது. லண்டனில் மதப் பரப்புரையில் ஈடுபட முயல்கிறார் ஃபரிஷ்டா. அந்த முயற்சி தோல்வியடைகிறது. தெருவில் இறங்கி நடக்கும் ஃபரிஷ்டா மீது திரைப்படத் தயாரிப்பாளர் சிசோடியா கார் மோதுகிறது. அவர் ஆலியாவுடன் சேர்ந்து ஃபரிஷ்டாவை மனச்சிதைவு சிகிச்சைக்கு அழைத்துச் செல்கிறார். சாம்ச்சாவின் தோற்றமும் நடத்தையும் தீவிரமடைகின்றன. விமான வெடிப்பில் அவர் இறந்துவிட்டதாக நம்பும் அவரது மனைவி பமீலா, நண்பர் ஜம்பி ஜோஷி இருவரும் உறவைத் தொடங்கியிருப்பது தெரியவர மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். ஜம்பி ஒரு விடுதியை நடத்தும் குடும்பத்தினருடன் அவரைத் தங்க வைக்கிறார். கைது செய்யப்பட்ட நடவடிக்கையிலிருந்து தன்னைப் பாதுகாக்காததாலும், விமான விபத்துக்குப் பிறகு கைவிட்டதாலும் ஃபரிஷ்டா மீது அ சாம்சாச்சாவுக்குக் கோபம் ஏற்படுகிறது. அவரது சாத்தான் தோற்றம் தீவிரமடைந்து பின்னர் மனித உருவத்துக்குத் திரும்புகிறார். ஃபரிஷ்டாவின் திரையுலக வெற்றியிலும் காழ்ப்பு கொள்ளும் சாம்ச்சா அவரைப் பழிவாங்க எண்ணுகிறார். ஃபரிஷ்டாவின் மனச்சிதைவை அறியும் சாம்ச்சா, தொலைபேசி மூலம் வெவ்வேறு குரல் பதிவுகளையும், ஆலியா பற்றிய விவரங்களையும் பயன்படுத்தி , தவறான எண்ணம் வரச் செய்து. அவர்களுடைய உறவைச் சிதைக்கிறார். சாம்ச்சா, ஜம்பி, பமீலா மூவரும் கருப்பின மக்கள் நலச் செயல்பாட்டாளர் டாக்டர் உஹுரு சிம்பா ஆதரவுப் பேரணியில் பங்கேற்கிறார்கள். தொடர் கொலைகள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு காவலில் வைக்கப்படும் சிம்பா,. சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துவிடுகிறார். சமூகக் கண்காணிப்பில் ஈடுபடும் சீக்கிய இளைஞர்கள் உண்மையான கொலையாளியைக் கண்டுபிடிக்கிறார்கள் – அவன் ஒரு வெள்ளையன். ஒரு தெற்காசிய இரவு விடுதியில் காவல்துறை சோதனை நடத்துகிறது. அதனால் கலவரம் தூண்டப்படுகிறது. காவல்துறை மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் தகவல்களை விநியோகிக்க பமீலாவும் ஜம்பியும் திட்டமிடுகிறார்கள், ஆனால் முகமூடி ஆசாமிகள் கட்டடத்திற்குத் தீவைத்து, ஆதாரங்களை அழித்து இருவரையும் கொல்கிறார்கள். கலவரக்காரர்களால் எழும் தீப்பிழம்புகள் தனது அற்புத மகிமையின் விளைவு என்று நம்புகிறார் ஃபரிஷ்டா. தொலைபேசியில் வந்த தவறான தகவல்களுக்கு சாம்ச்சாவே காரணம் என்பதை அறியும் ஃபரிஷ்டா அவரைக் கொல்லும் எண்ணத்துடன் புறப்படுகிறார். தீப்பற்றி எரியும் கட்டடத்திற்குள் சிக்கியிருக்கும் விடுதிக் காப்பாளரையும் அவரது மனைவியையும் காப்பாற்ற முயல்கிறார் சாம்ச்சா. அதைக் காணும் ஃபரிஷ்டா கொலை எண்ணத்திலிருந்து பின்வாங்குகிறார். இருவரும் இந்தியா திரும்புகிறார்கள். ஃபரிஷ்டா திரைப்படங்களில் நடிக்கிறார். அந்தப் படங்கள் தோல்வியடைகின்றன. சிசோடியா-ஆலியா இருவரும் கொல்லப்படுகிறார்கள். சாம்ச்சா, மனத்தாங்கலுடன் பிரிந்திருந்த தனது தந்தையைப் பார்க்கச் செல்கிறார். சிசோடியாவையும் ஆலியாவையும் கொன்றது ஃபரிஷ்டாதான் என்று அவரிடமிருந்து தெரியவருகிறது. சாம்ச்சாவின் தந்தை இருக்கும் பண்ணைக்குச் சென்று, அவரைக் சுடப் போவது போலத் துப்பாக்கியை நீட்டுகிறார். சில நொடிகளில் துப்பாக்கியைத் தன்னை நோக்கித் திருப்பிக்கொள்கிறார். தந்தையுடன் சமாதானமாகும் சாம்ச்சா தனது இந்திய அடையாளத்திலும் இணக்கம் கொள்கிறார். கோபத்திற்குக் காரணம் இந்தக் கதையில் நம்பிக்கையை இழிவுபடுத்திவிட்டதாகக் கோபம் கொள்வதற்கு என்ன இருக்கிறது? ஃபரிஷ்டாவின் மூன்று கனவுகள் இருக்கின்றன. முதல் கனவில், ஜாஹிலியா நகரில் (மெக்கா நகர அடையாளமாக இப்படியொரு நகரம்) இறைத்தூதர் தனக்கு இறைவனால் அருளப்பட்ட வசனங்களைச் சொல்கிறபோது, பழைய தெய்வ வழிபாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார். அதே போனற வேறு சில வழிகாட்டல்களையும் கூறுகிறார். பின்னர், அவை சாத்தானின் வேலையால் தவறாகச் சொல்லப்பட்டுவிட்டன என்றும், உண்மையில் அவை இறைவனால் சொல்லப்பட்டவையல்ல என்றும் கூறுகிறார். நகரத்தைக் கைப்பற்றும் தூதருக்கு இரண்டு எதிர்ப்பாளர்கள் இருக்கிறார்கள். ஒருவர், வேற்று மதப் பூசாரி. இன்னாருவர் எதையும் சந்தேகிக்கிற பகடிப் புலவர். நகரம் கைப்பற்றப்படும்போது ஒரு பாலியல் விடுதியில் பதுங்கிக்கொள்கிறார் அங்குள்ள பெண்களுக்கு தூதரின் மனைவிகளுடைய பெயர்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன. தூதரிடமிருந்து தப்பிக்கும் ஒருவன், தனக்கு அவர் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறுகிறான். அவர் உண்மையிலேயே தனக்கு இறைவன் சொன்ன வசனங்களில் சிலவற்றை மாற்றிவிட்டார் என்றும் கூறுகிறான். இவையெல்லாம், இறைத்தூதர் மீதான நம்பிக்கையைச் சிதறடிப்பதாக இருக்கிறது என்பது குற்றச்சாட்டு. இரண்டாவது கனவில், இந்தியாவைச் சேர்ந்த கிராமத்துப் பெண்ணான ஆயிஷா, தனக்கு இறைத்தூதரின் அருள் கிடைத்ததாகக் கூறி, மக்களை அழைத்துச் செல்கிறாள். அரபிக் பெருங்கடல் குறுக்கிடுகிறது. இறையருள் இருப்பதால் கடல்நீர் மீது அவர்கள் நடக்க முடியும் என்கிறாள். அதைக் கேட்டு கடல் மீது நடக்கிறபோது, அவர்கள் நீரில் மறைகிறார்கள். அவர்கள் மூழ்கிவிட்டார்கள் என்றும், இல்லை இறையருளால் புனித நகரத்தை அடைந்துவிட்டார்கள் என்றும் இருவிதமாகப் பேசிக்கொள்ளப்படுகிறது. மூன்றாவது கனவில் மதவெறியரான இமாம் என்பவர் வருகிறார். அவர், இடைறத்தூதராகத் தன்னைக் கருதிக்கொள்ளும் ஃபரிஷ்டாவை, தன்னால் நாடுகடத்தப்பட்ட ஆயிஷா என்ற அரசியுடன் செயற்கையாகப் போரில் ஈடுபட வைக்கிறார். இத்தகைய சித்தரிப்புகள் வரம்புமீறிவிட்டன, தூதரின் சொற்களில் அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்றன என்ற விமர்சனங்கள்தான் விபரீதங்களாக உருவெடுத்தன. இறைத்தூதர், புனித நகரம் ஆகிய பெயர்களைக் கற்பனையாகப் புனைந்தவர், இவற்றையும் வேறு வகையில் கொண்டுவந்திருக்க முடியும் என்ற கரிசனக் குரல்களும் கேட்கின்றன. ஆயினும், ஃபத்வா அறிவித்து ஒருவரின் வெளியுலகை இருட்டடிப்பு செய்வது ஏற்க முடியாதது என்ற படைப்புரிமைக் குரல்களும் உரக்க எழுகின்றன. ஒரு படைப்பில் தவறான சித்தரிப்பு இருப்பதாகக் கருதப்படுமானால், அது தவறு என்று சுட்டிக்காட்டவும், சரியானது எது என்று எடுத்துக்காட்டவுமான வாய்ப்பை விமர்சிக்கிறவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமேயன்றி இப்படி ஆளை ஒழிக்கும் பாதையில் செல்வது நாகரிகக் காலத்திற்குப் பொருந்ததாதது. மேலும் அது மார்க்கத்தினர் அனைவருமே சகிப்புத்தன்மையற்றவர்கள் என்ற தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த உணர்வுகளும் மேலோங்க, அந்த “பத்வா” ஆணையை விலக்கிக்கொள்வதற்கான முயற்சி தொடங்கப்பட்டது. ஆனால் தொடரவில்லை. ஏனென்றால், மதவிதிகளின்படி ஃபத்வா ஆணையைப் பிறப்பித்தவர் யாரோ அவரேதான் விலக்கிக்கொள்ளவும் அதிகாரம் உள்ளவர். ஆனால் அயதுல்லா கோமெய்னி காலமாகிவிட்டாரே… எதிர்காலத்தில் எந்த மதம், எந்த அமைப்பானாலும் இப்படிப்பட்ட தண்டனை ஆணைகளைப் பிறப்பிக்கிற அதிகாரங்கள் இருக்கத்தான் வேண்டுமா என்ற கேள்வியை மனித நேய மத நம்பிக்கையாளர்கள் எழுப்புவது சிறந்ததொரு சேவையாக அமையும். அதற்கொரு இணக்கத் துணையாக, தி சாட்டனிக் வெர்சஸ் (The Satanic Verses) இந்த நாவல் 1988ஆம் ஆண்டுக்கான ஒயிட்பிரெட் விருது (இப்போது கோஸ்டா புத்தக விருது என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் பல பாராட்டுகளைப் பெற்றுள்ளது. புக்கர் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பெருமையையும் பெற்றது. https://bookday.in/books-beyond-obstacles-17-salman-rushdies-the-satanic-verses-novel-based-article-written-by-a-kumaresan/
1 week 4 days ago
1993 கார்த்திகை மாதம். உயர்தரம் எழுதிவிட்டு பெறுபேற்றிற்காகக் காத்திருந்த காலம். கொழும்பு தெகிவளையில் அமைந்திருந்த மயோன் கம்பியூட்டர் நிறுவனத்தில் புலமைப் பரிசிலூடாக ஒரு வருட காலம் கற்கை நெறி ஒன்றை மேற்கொள்ளும் தகுதி பெற்றிருந்தேன். எனது வகுப்பில் ஆண்களும் பெண்களுமாக சுமார் 15 அல்லது 16 மாணவர்கள் இருந்தார்கள். தமிழர்கள், முஸ்லீம்கள் என்று ஆண்களும் பெண்களும். இவர்களுள் ஒரு சிலருடன் உடனடியாகவே நட்பாகிப் போய்விட்டேன். மலர்மன்னன் (என்னுடன் உயர்தரத்தில் சில டியூஷன் வகுப்புகளுக்கு வந்ததனால் முன்னரே பழக்கமானவன்), மதியக்கா(உடுப்பிட்டி), கலா அக்க (சிலாபம்), பைரூஸ் (புத்தளம்), சிவா (காரைநகர்) என்று விரல் விட்டு எண்ணக் கூடிய சில நண்பர்கள். இவர்களுள் மலர் மன்னனும், பைரூஸும் என்னூடன் மிகவும் நெருக்கமாகிவிட்டார்கள். வகுப்புக்கள் முடிந்த நேரங்களுள் இவர்களுடன் ஊர்சுற்றுவதே வழமையாகிவிட்டது. பைரூஸ் பாணதுறையில் இருந்தே கொழும்பிற்கு வந்து போவான். மலர்மன்னன் கொட்டாஞ்சேனையில் வசித்து வந்தான். மலரும், பைரூஸும் இயல்பாகவே கவிதை எழுதுவதில் வல்லவர்கள். வைரமுத்து, கவிக்கோ எழுதிய கவிதைகளை எனக்கு அடையாளம் காட்டி கவிதைகளில் ஈடுபாட்டினை உருவாக்கித் தந்தவன் பைரூஸ். அவன் தமிழ் எழுதுவது அச்சியந்திரத்தில் எழுதப்பட்டதுபோல அழகாயிருக்கும். விரயமாகும் வேளைகளில் ஏதோவொரு தலைப்பிற்குக் கவிதை எழுதுவோம். பைரூஸ் எழுதும் கவிதைகள் இரு வரிகளில் ஹைக்கூ வடிவத்தில் பளிச்சென்று பற்றிக்கொள்ளும். மலர் மன்னனும் அப்படித்தான். இப்படிச் சென்று கொண்டிருந்த நாட்களில் நான் கொழும்பிலிருந்து வெளிவரும் சரிநிகரில் எழுதத் தொடங்கியிருந்தேன். ஒரு முறை இந்தியப்படை ஈழத்தமிழர்களுக்கு தியாகங்களைப் புரிந்தது என்று மாலன் எனும் பெயரில் வெளிவந்த கட்டுரைக்கு நான் எழுதிய எதிர்வினையினை சரிநிகர் அப்படியே பிரசுரித்திருந்தது. அதனை நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆகவே அதுபற்றி நான் பைரூஸுடனும், மலருடனும் பேசும்போது வெகுவாகவே பாராட்டியிருந்தார்கள். ஒரு நாள் தனது கதைபற்றி பைரூஸ் பேசிக்கொண்டிருக்கும்போது, தனது தகப்பனார் ஒரு தமிழ் ஆசிரியர் என்றும், மன்னாரில் அவர்கள் வசித்து வந்தார்கள் என்றும், புலிகள் வெளியேறச் சொல்லி அறிவித்ததன் பின்னர் கையில் அகப்பட்ட ஒரு சில உடைகளோடு தாம் கிளம்பி புத்தளத்திற்கு வந்ததாகக் கூறினான். தமிழரின் விடுதலைப் போராட்டம் குறித்து ஆதரவான நிலைப்பாட்டினைக் கொண்டிருந்த அவன் புலிகளின் தாக்குதல்கள் குறித்து நானும் மலரும் கிலாகித்துப் பேசும்போது தவறாமல் அவனும் கருத்துப் பகிர்வான். ஆகவே, அவன் முன்னால் எமது விடுதலைப் போராட்டம் குறித்துப் பேசுவது எமக்குச் சிரமாமாக இருந்ததில்லை. ஒருமுறை அவனது வெளியேற்றம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது முதன்முறையாக அவனது இடத்தில் இருந்து அவ்வெளியேற்றத்தினை என்னால் உணர முடிந்தது. ஆகவே அன்றிரவு வட மாகாணத்திலிருந்து முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றியதுபற்றி சரிநிகரில் எழுதுவதென்று தீர்மானித்தேன். முதன்முறையாக புலிகளுக்கெதிராக என்னால் முன்வைக்கப்பட்ட விமர்சனம் அது. முஸ்லீம்களை எதற்காக அன்று வெளியேற்றினார்கள், வெளியேறும்போது எவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றன, எத்தனை முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டார்கள் என்கிற எதுவித தெளிவும் இன்றி என்னால் அந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஏனென்றால் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட காலத்தில் நான் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை. 1988 இற்குப் பின்னர் அங்கு வாழ்ந்ததுகூடக் கிடையாது. ஆகவே வெளியேற்றம் குறித்த சரியான பார்வையின்றி என்னால் அந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே சரிநிகரும் எந்தத் தணிக்கையும் இன்றி அதனைப் பிரசுரித்தது. பைரூஸுடன் அக்கட்டுரை பற்றி பகிர்ந்துகொண்டேன். உணர்ச்சி மேலீட்டால் கண்கலங்கிய அவன், அக்கட்டுரையினை எழுதியதற்காக எனக்கு நன்றி கூறினான். பின்னர் ஒருநாள் என்னிடம் வந்து எனது கட்டுரையினை அகதி என்ற பெயரில் வெளிவந்த முஸ்லீம்களுக்கான பத்திரிக்கை ஒன்றில் மீள் பிரசுரிக்க அனுமதியளிக்கிறாயா என்று கேட்டான். நானும் ஆமென்று கூறவே, அக்கட்டுரை மீளவும் பிரசுரமானது. இதனை அறிந்தபோது மலர்மன்னன் கொதித்துப் போனான். வெளியேற்றியது பிழை என்று உன்னால் எப்படிக் கூறமுடியும்? கிழக்கில் அவர்கள் எம்மை நடத்தும் முறை பற்றி நீ அறிந்திருக்கிறாயா? கொழும்பில் இருந்துகொண்டு, நீ நினைத்தபடி இப்படி எழுதியிருக்கிறாய் என்று கடிந்துகொண்டான். கல்முனை பாண்டிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட அவனுக்கு 90 களின் ஆரம்ப காலப்பகுதியில் அங்கு இடம்பெற்ற தமிழ் மக்கள் படுகொலைகள், அவற்றில் முஸ்லீம் ஊர்காவற்படையினரின் பங்களிப்பு என்பன நன்கு தெரிந்தே இருந்தது. ஆகவே, நான் வெறுமனே புலிகளை விமர்சித்து எழுதியிருந்தது அவனுக்குக் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. எது எப்படியிருந்தபோதிலும், முஸ்லீம்களை வெளியேற்றியதில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. பேரினவாதத்தில் இருந்து விடுபட போராடும் ஒரு சிறுபான்மையினம், தன்னிலும் சிறுபான்மையான இன்னொரு இனத்தை பேரினவாதம் போன்று நடத்துவது சரியாகப் படவில்லை. அதனாலேயே அப்படி எழுத நேர்ந்தது. ஆனால் வெளியேற்றத்தின்பின்னர் அவர்களின் அரசியல்த் தலைமைகளும், ஊர்காவற்படையினரும், சாதாரண முஸ்லீம்களில் ஒருபகுதியினரும் நடந்துகொண்ட விதம் இதுபற்றித் தொடர்ந்து நான் பேசுவதை நிறுத்தி விட்டது.
1 week 4 days ago
ஏகலைவன் மூலம் : யமுனா ஹர்ஷவர்தனா தமிழாக்கம் : கார்த்திக் துரோணாச்சாரியாரின் கண்காணிப்பின் கீழ் கௌரவர்களும் பாண்டவர்களும் தீவிர பயிற்சி பெற்று வந்தனர். அப்பொழுது அர்ஜுனனுக்கு மட்டும் அவர் தனிக்கவனம் கொடுப்பதாக துரியோதனன் குற்றம் சாட்டினான். அதை பொய் என்று நிரூபிப்பதற்காகவும், அர்ஜுனனின் திறமையை மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் அவர்களுக்கு ஒரு போட்டி ஒன்றை துரோணர் ஏற்பாடு செய்தார். அங்கே இருந்த மரத்தின் உச்சி கிளையில் தொங்கிக் கொண்டிருந்த பழத்தை ஒரே கணையில் வீழ்த்த வேண்டும் என்பதே போட்டி. அங்கிருந்த அனைவரும் முயன்றும் யாராலும் அப்பழத்தை வீழ்த்த இயலவில்லை. அர்ஜுனன் அதை ஒரே அம்பில் வீழ்த்தினான். அப்பொழுது அவர்களிடம் நீங்கள் கணையை தொடுக்க குறி வாய்த்த பொழுது உங்கள் கண்ணில் பட்டது என்ன என துரோணர் கேட்டார். ஒவ்வொருவரும் , கிளை, இலை பின் பழம் என சொல்ல அர்ஜுனனோ தன் கண்களுக்கு அப்பழம் மட்டுமே தெரிந்தது எனக் கூறினான். இந்த ஒரு பதிலிலேயே அங்கிருந்தவர்களில் மிக சிறந்த வில்லாளி யாரென்று அனைவருக்கும் புரிந்தது. பிரதம சீடனை மிஞ்சிய வேடுவ இளவரசன் ஒரு நாள் இளவரசர்கள் அனைவரையும் அருகில் இருந்த வனத்திற்கு கூட்டி சென்றார் துரோணர். அவர்களுக்கு முன்பு அவர்களின் நாய் சென்றது. திடீரென்று சப்தம் வந்த திசையை நோக்கி குரைத்துக் கொண்டே சென்றது அந்த நாய். சில நிமிடங்களுக்குப் பின் அதன் குரைப்பு அடங்கிவிட, என்ன ஆனதென்று அனைவரும் அங்கு சென்றனர். அங்கே அந்த நாயின் வாய் அம்புகளால் கட்டப்பட்டிருந்தது. ஆனால் துளி இரத்தமும் சிந்தவில்லை. அந்த வித்தையை கற்றவர் யார் என்று அனைவரும் யோசிக்க அப்பொழுது அங்கே வந்த நிஷாத நாட்டு இளவரசன், துரோணரை வணங்கி “என் பெயர் ஏகலைவன்” என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவரை வணங்கினான். அப்பொழுதுதான் முன்பு நடந்த சம்பவம் அவரது நினைவிற்கு வந்தது. சில காலம் முன்பு அவரிடம் வந்த ஏகலைவன் தன்னை சிஷ்யனாக ஏற்கும்படி வேண்டினான். ஆனால் குரு வம்சதிற்கு குருவாக இருந்த காரணத்தினால் நிஷாத நாட்டு இளவரசனை அவரால் சிஷ்யனாக ஏற்க முடியாது என மறுத்துவிட்டார். “குருவே! உங்கள் உருவத்தை மண்ணால் செய்து வைத்து தினமும் உங்களை வணங்கி வில் பயிற்சி செய்துவந்தேன். உங்கள் கருணையால் நான் நன்கு கற்று வருகிறேன்” என அவன் கூறினான். அவன் கூறியதை கண்டு வியந்த துரோணர், இப்படி ஒரு வில்லாளி இருப்பது என்றும் குரு வம்சத்திற்கு ஆகாது என மனதில் நினைத்துக் கொண்டார். பின் அவனிடம் “நீ நன்கு கற்று தேறி வருவது மகிழ்ச்சியே! ஆனால் , குரு தக்ஷிணையாக என்ன தரப்போகிறாய்?” எனக் கேட்டார். ஏகலைவனும் பணிவுடன் அவர் விரும்பும் தக்ஷணையை தருவதாகக் கூறினான். “அப்படியானால் உனது வலது கை கட்டை விரலை எனக்குத் தருவாயாக” என கேட்டார். அவர் கூறியவுடன் எந்தவித கோபமோ வருத்தமோ தயக்கமோ இன்றி தனது வலது கட்டை விரலை வெட்டி அவரது காலடியில் சமர்ப்பித்தான் ஏகலைவன். தோல்வியான வெற்றி சிறு வயதிலேயே தனது சகோதர்கள் அனைவரையும் விட பெரிய உடலையும், அதிக பலத்தையும் பெற்றவனாக பீமன் இருந்தான். தன் பலத்தை தன் சகோதரகளைக் காப்பாற்ற பயன்படுத்திய அதே சமயத்தில் கௌரவர்களை துன்புறுத்தவும் உபயோகித்தான். இதனால் எரிச்சலடைந்த துரியோதனன், பீமனை கொல்ல சதி திட்டம் தீட்டினான். ஒருமுறை கங்கைக் கரையில் அனைவரும் விளையாடிக் கொண்டிருந்த தருணத்தில் , பீமனின் உணவில் விஷத்தைக் கலந்து விட்டான். அது தெரியாத பீமன் அந்த உணவை உண்டு மயங்கிவிட, மற்ற சகோதரர்களின் உதவியுடன் அவனை கயிற்றில் கட்டி, கங்கையின் ஒரு பக்கத்தில் தள்ளிவிட்டான். பீமன் வீழ்ந்த இடத்தில கொடிய நாகங்கள் வாழ்ந்து வந்தன. பீமனை அவை கடிக்க, அவற்றின் விஷம் ஏற்கனவே அவன் இரத்தத்தில் கலந்திருந்த விஷத்தின் முறியடிக்க, பீமன் புத்துயிர் பெற்று எழுந்தான். தாங்கள் கடித்தும் அவன் இறக்காதது கண்டு அதிர்ச்சியடைந்த பாம்புகள் தங்கள் தலைவனான வாசுகியிடம் சென்று முறையிட்டு பீமனை அங்கே கொண்டு வந்தன. பீமனைக் கண்டவுடன் அவன் குரு வம்ச இளவரசன் என அடையளாம் கண்டுகொண்ட வாசுகி , பீமனின் உடல் நலம் தேற அவர்களின் அபூர்வ மருந்தை அவனுக்கு கொடுத்தது. அதைக் குடித்தவுடன் பீமனுக்கு ஆயிரம் யானை பலம் வந்தது போல் உடல் புத்துணர்வு பெற்றது. அந்த மருந்து மேலும் கிடைக்குமா என அவன் கேட்க, மேலும் ஏழு குவளை மருந்து அவனுக்கு தரப்பட எட்டு குளிகை மருந்தை குடித்து புதிய பலம் பெற்றான் பீமன். அதைக் குடித்தவுடன் அவனுக்கு தூக்கம் சொக்க, ஒரு வார காலம் வாசுகியின் அரண்மனையில் தங்கி ஓய்வெடுத்தான். பின், அவனிடம் விடைபெற்று கரைக்கு திரும்பினான். இறந்துவிட்டான் என கௌரவர்கள் நினைத்த பீமன், புத்துணர்வுடனும் புதிய பலத்துடனும் வருவது கண்டு துரியோதனன் தன்னைத் தானே நொந்து கொண்டான். https://solvanam.com/2025/05/25/ஏகலைவன்/
1 week 4 days ago
நியூஸிலாந்தை வெற்றிகொண்டு மகளிர் உலகக் கிண்ண அரை இறுதிக்குள் நுழைந்தது இந்தியா Published By: Vishnu 24 Oct, 2025 | 12:20 AM (நெவில் அன்தனி) நவி மும்பை டி வை பட்டில் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்தை வெற்றிகொண்ட இந்தியா, அரை இறுதியில் விளையாட நான்காவது அணியாகத் தகுதிபெற்றது. மழையினால் தடைப்பட்ட இப் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் நியூஸிலாந்தை 53 ஓட்டங்களால் இந்தியா வெற்றிகொண்டது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 49 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 340 ஓட்டங்களைக் குவித்தது. ஸ்ம்ரித்தி மந்தனா, ப்ரத்திகா ராவல் ஆகியோர் குவித்த அபார சதங்கள், ஜெமிமா ரொட்றிகஸ் பெற்ற அரைச் சதம் என்பன இந்தியாவை வலுவான நிலையில் இட்டன. இந்தியா 48 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 329 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டதால் பிற்பகல் 6.21 மணிக்கு ஆட்டம் தடைப்பட்டது. சுமார் ஒன்றரை மணித்தியாலங்களின் பின்னர் மீண்டும் ஆட்டம் தொடர்ந்தபோது இந்தியாவுக்கு மேலும் ஒரு ஓவர் வழங்கப்பட்டது. அந்த ஓவரில் 11 ஓட்டங்கள் பெறப்பட்டதுடன் ஒரு விக்கெட்டும் வீழ்ந்தது. ப்ரத்திகா ராவல், ஸ்ம்ரித்தி மந்தனா ஆகிய இருவரும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 212 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஸ்ம்ரித்தி மந்தனா 95 பந்துகளில் 10 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 109 ஓட்டங்களைக் குவித்து முதலாவதாக ஆட்டம் இழந்தார். மொத்த எண்ணிக்கை 288 ஓட்டங்களாக இருந்தபோது ப்ரத்திகா ராவல் 122 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழந்தார். அவர் 134 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களை விளாசினார். இதனிடையே மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் வேகமாக 1000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்தவர் என்ற இணை சாதனையை லிண்ட்சே ரீலருடன் ப்ரத்திகா ராவல் பகிரந்துகொண்டார். இந்த சாதனையை லிண்ட்சே ரீலர் 37 வருடங்களுக்கு முன்னர் நிலைநாட்டி இருந்தார். அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்ட ஜெமீமா ரொட்றிகஸ் 55 பந்துகளில் 11 பவுண்டறிகள் அடங்கலாக 76 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர் 10 ஓட்டங்ளைப் பெற்றார். நியூஸிலாந்தின் துடுப்பாட்டம் சிறு மழையினால் தாமதித்ததால் அதன் வெற்றி இலக்கு டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் 44 ஓவர்களில் 325 ஓட்டங்கள் என நிர்ணயிக்கப்பட்டது. கடினமான இந்த வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 44 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 271 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்ததுடன் உலகக் கிண்ண அரை இறுதி வாய்ப்பையும் பறிகொடுத்தது. முதலாவது விக்கெட்டை ஒரு ஓட்டத்திற்கு இழந்த நியூஸிலாந்து 12ஆவது ஓவரில் 3ஆவது விக்கெட்டை இழந்தபோது 59 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முன்வரிசையில் அமேலியா கேர் 45 ஓட்டங்களையும் ஜோர்ஜியா ப்லிம்மர் 30 ஓட்டங்களையும் பெற்றனர். மத்திய வரிசையில் ப்றூக் ஹாலிடே 81 ஓட்டங்களையும் இசபெல்லா கேஸ் ஆட்டம் இழக்காமல் 65 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரேனுகா சிங் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் க்ரான்தி கௌத் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: ஸ்ம்ரித்தி மந்தனா. https://www.virakesari.lk/article/228505
1 week 4 days ago
வட மாகாண தொழில்முனைவோர் விருதுகள் - விருதுக்கு விண்ணப்பிக்குமாறு கோரிக்கை வெள்ளி, 24 அக்டோபர் 2025 06:14 AM பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் போன்றோரின் தொழில்முயற்சிகளுக்கு தேசிய ரீதியிலான அங்கீகாரங்களை பெற்றுக்கொடுக்கும் முகமாக , “வட மாகாண தொழில்முனைவோர் விருதுகள்-2025” எனும் விருது வழங்கும் நிகழ்வில் 16 பிரிவுகளில் 33 விருதுகள் வழங்கப்படவுள்ளன எனவும் , அதற்காக தொழில் முனைவோரை விண்ணப்பிக்குமாறும் , யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தினர் கோரியுள்ளனர் யாழ் . மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற , ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தின் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் முகமாக வடமாகாணத்தின் சிறந்த தொழில்முனைவோர்களை அடையாளம் கண்டு கௌரவிக்கும் “வட மாகாண தொழில்முனைவோர் விருதுகள்-2025” (Northern Entrepreneur Awards – 2025) நிகழ்வானது தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபை (National Enterprise Development Authority – NEDA) மற்றும் யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தின் (Chamber of Commerce and Industries of Yarlpanam – CCIY) ஏற்பாட்டில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது. வட மாகாணத்தின் தொழில்முனைவோருடைய திறன்கள், அவர்களின் புத்தாக்கங்கள், தலைமைத்துவம் மற்றும் பொருளாதார பங்களிப்புக்கள் போன்றவற்றை பாராட்டுவதோடு தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளித்து, சிறந்த தொழில்முனைவோரை தேசிய மட்டத்தில் அடையாளம் காணப்படுவதை உறுதி செய்வதே இவ் விருதுகளின் பிரதான நோக்கமாகும். குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் போன்றோரின் தொழில்முயற்சிகளுக்கு தேசிய ரீதியிலான அங்கீகாரங்களை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு எமக்குரியது. வடமாகாண தொழில்முனைவோர் விருதுகள்-2025 இல் பெண் தொழில்முனைவோர், இளம் தொழில்முனைவோர், வேளாண்மை, உணவு சார் உற்பத்திகள், சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா, மீன்பிடி, கல்வி, ஏற்றுமதிகள், கட்டிட நிர்மாணம் மற்றும் உட்கட்டமைப்பு, கைவினை மற்றும் படைப்புத் துறை உள்ளிட்ட 16 பிரிவுகளில் மொத்தம் 33 விருதுகள் வழங்கப்படவுள்ளன. வடமாகாண தொழில்முனைவோர் விருதுகள்-2025 ற்கான விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து எம்மிடம் உடனடியாக சமர்ப்பிக்குமாறுகேட்டுக்கொள்கின்றோம். அன்பான தொழில் முனைவோரே வடமாகாண தொழில்முனைவோர் விருதுகள் கிடைப்பதன் முலம் நீங்கள் பெறும் நன்மைகள் 1. அங்கீகாரமும் நம்பகத்தன்மையும் (Recognition & Credibility) 2. இலவச சந்தைப்படுத்தலும் (Free Publicity & Marketing) 3. வலுவான வலையமைப்பு (Stronger Networking) 4. ஊழியர்களின் மனதளவவிலான தன்னம்பிக்கை உயரும் (Employee Morale & Retention) 5. உங்கள் வியாபார வளர்ச்சியில் இன்னுமொர் அத்தியாயத்தின் வாயில் (Gateway to Business Growth) 6. உங்கள் தனிப்பட்ட மற்றும் வணிகக் குறி மதிப்பு அதிகரிப்பு (Personal & Brand Equity) விருதுகள் உங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும் படிக்கட்டுக்கள் . விருதுகளுக்காக நீங்கள் விண்ணப்பிக்கும் செயல்முறை தான் உங்கள் வியாபாரத்தை அல்லது சேவையை நீங்களே ஒருமுறை மதிப்பாய்வு செய்ய கிடைக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும் என தெரிவித்துள்ளனர். https://jaffnazone.com/news/51566
1 week 4 days ago
வட மாகாண தொழில்முனைவோர் விருதுகள் - விருதுக்கு விண்ணப்பிக்குமாறு கோரிக்கை
வெள்ளி, 24 அக்டோபர் 2025 06:14 AM

பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் போன்றோரின் தொழில்முயற்சிகளுக்கு தேசிய ரீதியிலான அங்கீகாரங்களை பெற்றுக்கொடுக்கும் முகமாக , “வட மாகாண தொழில்முனைவோர் விருதுகள்-2025” எனும் விருது வழங்கும் நிகழ்வில் 16 பிரிவுகளில் 33 விருதுகள் வழங்கப்படவுள்ளன எனவும் , அதற்காக தொழில் முனைவோரை விண்ணப்பிக்குமாறும் , யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தினர் கோரியுள்ளனர்
யாழ் . மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற , ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.
மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாணத்தின் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் முகமாக வடமாகாணத்தின் சிறந்த தொழில்முனைவோர்களை அடையாளம் கண்டு கௌரவிக்கும் “வட மாகாண தொழில்முனைவோர் விருதுகள்-2025” (Northern Entrepreneur Awards – 2025) நிகழ்வானது தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபை (National Enterprise Development Authority – NEDA) மற்றும் யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தின் (Chamber of Commerce and Industries of Yarlpanam – CCIY) ஏற்பாட்டில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது.
வட மாகாணத்தின் தொழில்முனைவோருடைய திறன்கள், அவர்களின் புத்தாக்கங்கள், தலைமைத்துவம் மற்றும் பொருளாதார பங்களிப்புக்கள் போன்றவற்றை பாராட்டுவதோடு தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளித்து, சிறந்த தொழில்முனைவோரை தேசிய மட்டத்தில் அடையாளம் காணப்படுவதை உறுதி செய்வதே இவ் விருதுகளின் பிரதான நோக்கமாகும்.
குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் போன்றோரின் தொழில்முயற்சிகளுக்கு தேசிய ரீதியிலான அங்கீகாரங்களை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு எமக்குரியது.
வடமாகாண தொழில்முனைவோர் விருதுகள்-2025 இல் பெண் தொழில்முனைவோர், இளம் தொழில்முனைவோர், வேளாண்மை, உணவு சார் உற்பத்திகள், சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா, மீன்பிடி, கல்வி, ஏற்றுமதிகள், கட்டிட நிர்மாணம் மற்றும் உட்கட்டமைப்பு, கைவினை மற்றும் படைப்புத் துறை உள்ளிட்ட 16 பிரிவுகளில் மொத்தம் 33 விருதுகள் வழங்கப்படவுள்ளன.
வடமாகாண தொழில்முனைவோர் விருதுகள்-2025 ற்கான விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து எம்மிடம் உடனடியாக சமர்ப்பிக்குமாறுகேட்டுக்கொள்கின்றோம்.
அன்பான தொழில் முனைவோரே வடமாகாண தொழில்முனைவோர் விருதுகள் கிடைப்பதன் முலம் நீங்கள் பெறும் நன்மைகள்
1. அங்கீகாரமும் நம்பகத்தன்மையும் (Recognition & Credibility)
2. இலவச சந்தைப்படுத்தலும் (Free Publicity & Marketing)
3. வலுவான வலையமைப்பு (Stronger Networking)
4. ஊழியர்களின் மனதளவவிலான தன்னம்பிக்கை உயரும் (Employee Morale & Retention)
5. உங்கள் வியாபார வளர்ச்சியில் இன்னுமொர் அத்தியாயத்தின் வாயில் (Gateway to Business Growth)
6. உங்கள் தனிப்பட்ட மற்றும் வணிகக் குறி மதிப்பு அதிகரிப்பு (Personal & Brand Equity)
விருதுகள் உங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும் படிக்கட்டுக்கள் . விருதுகளுக்காக நீங்கள் விண்ணப்பிக்கும் செயல்முறை தான் உங்கள் வியாபாரத்தை அல்லது சேவையை நீங்களே ஒருமுறை மதிப்பாய்வு செய்ய கிடைக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும் என தெரிவித்துள்ளனர்.
https://jaffnazone.com/news/51566
1 week 4 days ago
யாழில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு சொத்து குவித்த எட்டு பேருக்கு எதிராக விசாரணை ஆரம்பம் வெள்ளி, 24 அக்டோபர் 2025 06:45 AM யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் , போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள் , மீற்றர் வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 08 பேருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் , அவர்களில் ஐவருக்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் , மூவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றிலும் வழக்குகள் தொடரப்படவுள்ளன. வெளிநாடுகளில் இருந்து பெருந்தொகை பணத்தினை பெருக்கோடு யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுதல் , மீற்றர் வட்டிக்கு பணத்தினை வழங்கி , அதனை திரும்ப செலுத்த தவறுபவர்களை கடத்தி சென்று சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி ,அவற்றை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுதல் , பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்தல் , போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத செயற்பாடுகள் ஊடாக சொத்துக்களை சேர்ந்தவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் பொலிஸ் விசேட பிரிவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக யாழ்ப்பாணத்தில் எட்டு பேர் அடையாளம் காணப்பட்டு , அவர்கள் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து குறித்த நபர்களிடம் வாக்கு மூலங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்ப்பவர்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் தமக்கு கிடைக்க பெற்று வருவதாகவும் , அது தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுப்போம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் https://jaffnazone.com/news/51571
1 week 4 days ago
யாழில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு சொத்து குவித்த எட்டு பேருக்கு எதிராக விசாரணை ஆரம்பம்
வெள்ளி, 24 அக்டோபர் 2025 06:45 AM
யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் , போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள் , மீற்றர் வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முதல் கட்டமாக 08 பேருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் , அவர்களில் ஐவருக்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் , மூவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றிலும் வழக்குகள் தொடரப்படவுள்ளன.
வெளிநாடுகளில் இருந்து பெருந்தொகை பணத்தினை பெருக்கோடு யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுதல் , மீற்றர் வட்டிக்கு பணத்தினை வழங்கி , அதனை திரும்ப செலுத்த தவறுபவர்களை கடத்தி சென்று சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி ,அவற்றை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுதல் , பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்தல் , போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத செயற்பாடுகள் ஊடாக சொத்துக்களை சேர்ந்தவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் பொலிஸ் விசேட பிரிவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அதன் அடிப்படையில் முதல் கட்டமாக யாழ்ப்பாணத்தில் எட்டு பேர் அடையாளம் காணப்பட்டு , அவர்கள் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து குறித்த நபர்களிடம் வாக்கு மூலங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்ப்பவர்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் தமக்கு கிடைக்க பெற்று வருவதாகவும் , அது தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுப்போம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்
https://jaffnazone.com/news/51571