1 week 4 days ago
ஓம்…இதை நான் இலங்கையில் இருக்கும் வரை உணரவில்லை. ஐரோப்பாவிடம் ஒப்பிடும் போது அமெரிக்கா பாரம்பரிய விடயங்களுக்கு (இதை சிலர் பழமைவாதம் என்பார்கள்) அதிகம் முன்னுரிமை கொடுக்கும் நாடு. இந்த family values என்பதும் அதுவே என நினைக்கிறேன். எந்த நிறத்தவரானாலும் ஒரு காங்கிரஸ் உறுப்பினராக வரக்கூட மனைவியை மேடை ஏற்றி நான் ஒரு நல்ல குடும்பஸ்தன் என அங்கே சொல்ல வேண்டும். ஐரோப்பாவிலோ, யூகேயிலோ அப்படி அல்ல. பதவி ஏற்பு, விலகல், அரிதாக நில பிரச்சார மேடைகளில் தோற்றம் அவ்வளவுதான். இதுவேதான் வரியிலும் எதிரொலிக்கிறது என நினைக்கிறேன். யூகேயை பொறுத்தவரை வருமானம் தனிநபரின் உழைப்புக்கு எனும் போது, வரியும் அதற்கே என்பதுதான் நிலைப்பாடு. இந்த வரி விடயத்தில் பெண்கள் விடயத்தை மட்டும் எடுத்து கொள்வோம். Equal pay, gender pay gap என இரு விடயங்கள் உள்ளன. சட்டம் பல ஆண்டுகளாகவே ஒரே வேலைக்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே ஊதியம் என்பதை equal pay உறுதி செய்து விட்டது. ஆனால் gender pay gap என்பது ஒரு நிறுவனத்தில் ஒட்டு மொத்த ஆண், பெண் தொழிலாளர் இடையே இருக்கும் சராசரி ஊதியத்தின் வேறுபாடு. இன்றும் கிட்டதட்ட அனைத்து துறை, நிறுவனங்களிலும் பெண்கள் இதில் பல விழுக்காடு பின்னால்தான் நிற்கிறார்கள். ஏன்? நான் மேலே சொன்ன traditional family values என்ற போர்வையில் அவர்கள் தலையில் வேலைக்கு அப்பாலான பல சுமைகள் இறக்கி விடபடுகிறன. குழந்தை பிறக்கும் வரை தனது career இல் சமவேகத்தில் முன்னேறி வரும் பெண், அதன் பின் மிகவும் பிந்தங்கி போகிறாள். இந்த நிலையில் மனைவிக்கு அவர் உழைத்தால் கிடைக்கும் tax allowance ஐ அப்படியே தூக்கி கணவருக்கும் கொடுத்தால். மனைவி வீட்டில் இருந்து குழந்தைகளோடு லோல் பட, கணவருக்கோ - tax allowance இரெட்டிப்பாகும். “நீ வேலைக்கு போய் கொண்டு வரும் 20,00 ஐ விட நீ வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்தால் எனது 50,000 ற்கு வரும் வரி பாதியாகும். எனவே நீ வீட்டிலே இரு” என சொல்வது இலகுவாக போகும். வேலை என்பது தனியே உழைப்பு மட்டும் அல்ல. அது ஒரு அங்கிகாரம். ஒவ்வொருவரினதும் சுய மரியாதை (self esteem) சம்பந்தபட்டது. அதனால்தான் இந்த குடும்ப-நலன், family value பத்தாம் பசலிதனத்தை எல்லாம் காலால் நெட்டிதள்ளி விட்டு வேலைக்கு போ என் பெண்களை பார்த்து பல தசாப்தங்கள் முன்னே சொன்னார் பெரியார். இது ஒரு கோணம் மட்டுமே, இப்படி இந்த தனி மனிதருக்கான வரி விதிப்பில் பல நியாயங்கள் உள்ளன. ஆணாதிக்கத்தை இன்னொரு வகையில் திணிக்கும் குடும்பம்-சார் கருத்தியலால் அதை வெல்ல முடியாது என்பது எண் கருத்து. ஆண்கள் கூட வீட்டில் இருக்க பெண்கள் வேலைக்கு போகிறார்கள் என்பது விதி விலக்கு. அதை விதி என மாற்றவே இப்படியான வரி-கொள்கைகள் அவசியமாகிறன. மருத்துவம் - கடந்த 2010-2022 இல் இருந்த அரசு அமெரிக்கா போல் ஒரு காப்புறுதி அடிப்படியிலான தனியார் மருத்துவமாக மாற்ற மறைமுகமாக விரும்பினர். ஆனால் மக்கள் ஆதரவு இல்லை. அதை கொள்கை என அறிவித்தால் கூட தேர்தலில் தோல்வி நிச்சயம். ஆகவே அதை கொஞ்சம், கொஞ்சமாக உள்ளிருந்து அழித்தார்கள். அதன் விழைவுதான் நீங்கள் சொல்லுவது. ஆனால் எனக்கே 2022 இன் பின் நல்ல முன்னேற்றத்தை காண முடிகிறது. விரைவில் 2009 இல் இருந்த நிலைக்க்கு சேவை மீளும். ஆனால் இன்சூரண்ஸ் இல்லையா ரத்தம் கக்கி சாவு என இங்கே ஒரு நாளும் விடமாட்டார்கள். சில டோக்குமெண்டரிகள் பார்த்தேன். ரத்தம் உறையவைக்கும் அளவுக்கு மனிதாபிமானம் இல்லாத முறை அமெரிக்கன் மருத்துவ முறை. என்னை பொறுத்தவரை சொல்கிறேன் ஒரு ஏழையாக, விளிம்புநிலை மனிதராக அமெரிக்காவில் இருப்பதை விட இலங்கையில் இருக்கலாம்.
1 week 4 days ago
24 Oct, 2025 | 04:52 PM

(எம்.மனோசித்ரா)
மஹிந்த ஜயசிங்கவுக்கு கனவிலும் ராஜபக்ஷர்கள் தான் தோன்றுகின்றனர். அதனால் அதனால் தான் அவர் அதிகளவில் ராஜபக்ஷர்கள் குறித்து பேசுகின்றார். செவ்வந்தி தனது தொலைபேசியில் பதிவு செய்திருப்பது எந்த நாமலுடைய இலக்கம் என்பதை அதனை பரிசோதித்தவர்களே கூற வேண்டும். ஆனால் அரசாங்கத்திலும் நாமல் கருணாரத்ன என்ற ஒருவர் இருக்கின்றார் என்பதை நினைவுபடுத்துகின்றேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை (24) பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மஹிந்த ஜயசிங்கவுக்கு கனவிலும் ராஜபக்ஷர்கள் தான் தோன்றுகின்றனர். அதனால் அதனால் தான் அவர் அதிகளவில் ராஜபக்ஷர்கள் குறித்து பேசுகின்றார். ஆனால் அரசாங்கத்திலும் நாமல் கருணாரத்ன என்ற ஒருவர் இருக்கின்றார் என்பதை நினைவுபடுத்துகின்றேன்.
எவ்வாறிருப்பினும் நாமல் எனக் கூறும் போது தமது அரசாங்கத்திலுள்ள நாமலை மறந்து அவர்களுக்கு எனது நினைவு வருகின்றமை மகிழ்ச்சிக்குரியது.
செவ்வந்தி தனது தொலைபேசியில் பதிவு செய்திருப்பது எந்த நாமலுடைய இலக்கம் என்பதை அதனை பரிசோதித்தவர்களே கூற வேண்டும்.
நாட்டு பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு நாட்டு தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் காணப்படுகிறது.
ஜனாதிபதி நடை பயிற்சியின் போது பாதுகாப்புடனேயே செல்கின்றார். அது சிறந்த விடயம். அதேபோன்று அவர் ஏனையோரது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெலிகம பிரதேசசபை தலைவர் எழுத்து மூலம் தனக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபரிடம் இரு மாதங்களுக்கு முன்னரே கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
ஆனால் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒரு நபருக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் அவர் மீது முறைப்பாடுகள் உள்ளனவா, குற்றச்சாட்டுக்கள் உள்ளனவா என்பதை ஆராய முன்னர் முதலில் அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் கூட இந்த காரணத்தை அடிப்படையாகக் கொண்டே மிகுந்த பாதுகாப்புடன் அழைத்து வரப்படுகின்றனர்.
அவ்வாறிருக்கையில் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதியொருவருக்கு காணப்பட்ட உயிர் அச்சுறுத்தலை பொலிஸ் மா அதிபர் எவ்வாறு உதாசீனப்படுத்த முடியும்? ஏன் அவருக்கான பதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் போது கிடைக்கப் பெற்ற புலனாய்வுத் தகவலும் இவ்வாறு தான் உதாசீனப்படுத்தப்பட்டது. தமக்கு தேவையற்றவர்களின் பாதுகாப்பை ஸ்திரமற்றதாக்குவதற்கான நடவடிக்கைகளையே அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
அந்த கோணத்தில் அவதானிக்கும் போது அரசாங்கத்தின் அனுசரனையுடன் திட்டமிட்ட குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறான கொலைகள் இடம்பெறும் போது அரசாங்கம் பதற்றமடைகிறது.
323 கொள்கலன்கள் தொடர்பில் முதலாவதாக குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடளித்த டான் பிரியசாத் கொல்லப்பட்ட போதும் அரசாங்கம் இவ்வாறு தான் செயற்பட்டது.
மரண விசாரணை அறிக்கை கிடைக்க முன்னரே, அமைச்சரொருவர் அவரது கொலை தொடர்பில் கருத்து வெளியிட்டார். அதேபோன்று தற்போது லசந்த கொலையை திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புபடுத்தி திசைதிருப்ப முயற்சிக்கின்றனர் என்றார்.
https://www.virakesari.lk/article/228587
@goshan_che அண்ணையின் கவனத்திற்கு!
1 week 4 days ago
Published By: Digital Desk 3 24 Oct, 2025 | 03:32 PM (இணையத்தள செய்திப் பிரிவு) இது கோழைத்தனம் அல்லது பின்வாங்குவதற்கான நேரமல்ல. இப்போது, முன்பை விட அதிகமாக, எந்த ஒரு நாடும் தனியாகத் தீர்க்க முடியாத பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உலகம் மீண்டும் உறுதிபூண வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் தினத்தை முன்னிட்டு, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவு பெறுவது மற்றும் இலங்கையுடனான அதன் கூட்டாண்மைக்கு 70 ஆண்டுகள் நிறைவுபெறும் நிலையில், உலகளாவிய சவால்களின் காலத்தில் கூட்டு நடவடிக்கையின் விதமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் 2025 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் தினத்திற்காக இந்தச் செய்தியைப் பகிர்ந்துள்ளார். நாம் ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்.., இவை ஐக்கிய நாடுகள் சாசனத்தின் தொடக்க வரிகள் மட்டுமல்ல, அவை நாம் யார் என்பதை வரையறுக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை ஒரு நிறுவனம் என்பதை விடவும் மேலானதாகும். இது ஒரு வாழும் வாக்குறுதியாக, எல்லைகளைத் தாண்டி, கண்டங்களை இணைத்து, தலைமுறைகளுக்கு எழுச்சியூட்டுகிறது. எண்பது ஆண்டுகளாக, அமைதியைக் கட்டியெழுப்ப, வறுமை மற்றும் பசியைக் கையாள, மனித உரிமைகளை மேம்படுத்த, மற்றும் மிகவும் நிலைத்தன்மை வாய்ந்த உலகை உருவாக்க ஒன்றுபட்டு நாங்கள் உழைத்துள்ளோம். நாம் முன்னோக்கிச் செல்லும்போது, மோதல்கள் அதிகரித்தல், காலநிலைச் சீர்குலைவு, கட்டுப்பாடற்ற தொழில்நுட்பங்கள் மற்றும் நமது நிறுவனத்தின் இருப்புக்கான அச்சுறுத்தல்கள் போன்ற மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்கிறோம். இது கோழைத்தனம் அல்லது பின்வாங்குவதற்கான நேரமல்ல. இப்போது, முன்பை விட அதிகமாக, எந்த ஒரு நாடும் தனியாகத் தீர்க்க முடியாத பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உலகம் மீண்டும் உறுதிபூண வேண்டும்.இந்த ஐக்கிய நாடுகள் தினத்தில், நாம் ஒன்றாக நின்று, உங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அசாதாரணமான வாக்குறுதியை நிறைவேற்றுவோம். “ மக்களாகிய நாம்”ஒன்றுபட்டுச் செயற்படுவதைத் தேர்ந்தெடுக்கும் போது சாத்தியமானது என்ன என்பதை உலகிற்குக் காண்பிப்போம் எந்த அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/228574
1 week 4 days ago
Published By: Digital Desk 3
24 Oct, 2025 | 03:32 PM

(இணையத்தள செய்திப் பிரிவு)
இது கோழைத்தனம் அல்லது பின்வாங்குவதற்கான நேரமல்ல. இப்போது, முன்பை விட அதிகமாக, எந்த ஒரு நாடும் தனியாகத் தீர்க்க முடியாத பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உலகம் மீண்டும் உறுதிபூண வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் தினத்தை முன்னிட்டு, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவு பெறுவது மற்றும் இலங்கையுடனான அதன் கூட்டாண்மைக்கு 70 ஆண்டுகள் நிறைவுபெறும் நிலையில், உலகளாவிய சவால்களின் காலத்தில் கூட்டு நடவடிக்கையின் விதமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் 2025 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் தினத்திற்காக இந்தச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
நாம் ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்.., இவை ஐக்கிய நாடுகள் சாசனத்தின் தொடக்க வரிகள் மட்டுமல்ல, அவை நாம் யார் என்பதை வரையறுக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை ஒரு நிறுவனம் என்பதை விடவும் மேலானதாகும். இது ஒரு வாழும் வாக்குறுதியாக, எல்லைகளைத் தாண்டி, கண்டங்களை இணைத்து, தலைமுறைகளுக்கு எழுச்சியூட்டுகிறது.
எண்பது ஆண்டுகளாக, அமைதியைக் கட்டியெழுப்ப, வறுமை மற்றும் பசியைக் கையாள, மனித உரிமைகளை மேம்படுத்த, மற்றும் மிகவும் நிலைத்தன்மை வாய்ந்த உலகை உருவாக்க ஒன்றுபட்டு நாங்கள் உழைத்துள்ளோம்.
நாம் முன்னோக்கிச் செல்லும்போது, மோதல்கள் அதிகரித்தல், காலநிலைச் சீர்குலைவு, கட்டுப்பாடற்ற தொழில்நுட்பங்கள் மற்றும் நமது நிறுவனத்தின் இருப்புக்கான அச்சுறுத்தல்கள் போன்ற மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்கிறோம்.
இது கோழைத்தனம் அல்லது பின்வாங்குவதற்கான நேரமல்ல. இப்போது, முன்பை விட அதிகமாக, எந்த ஒரு நாடும் தனியாகத் தீர்க்க முடியாத பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உலகம் மீண்டும் உறுதிபூண வேண்டும்.இந்த ஐக்கிய நாடுகள் தினத்தில், நாம் ஒன்றாக நின்று, உங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அசாதாரணமான வாக்குறுதியை நிறைவேற்றுவோம். “ மக்களாகிய நாம்”ஒன்றுபட்டுச் செயற்படுவதைத் தேர்ந்தெடுக்கும் போது சாத்தியமானது என்ன என்பதை உலகிற்குக் காண்பிப்போம் எந்த அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
https://www.virakesari.lk/article/228574
1 week 4 days ago
பட மூலாதாரம், Anadolu via Getty Images படக்குறிப்பு, சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ, செயற்கை நுண்ணறிவில் (AI) தனது முதலீட்டில் இருந்து வருமானம் ஈட்டவும், அதேசமயம் வேகமாக வளர்ந்து வரும் தன்னுடைய பயனர் தளத்தை பயன்படுத்தவும் புதிய வழிகளைத் தேடி வருகிறது. 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் மிகவும் பிரபலமான பிரவுசரான கூகுள் குரோமைப் போன்ற போட்டியாளர்களுக்கு சவால் விடும் வகையில், செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் புதிய 'அட்லஸ்' எனும் வெப் பிரவுசரை ஓபன்ஏஐ செவ்வாயன்று அறிமுகப்படுத்தியுள்ளது. சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ, செயற்கை நுண்ணறிவில் (AI) தனது முதலீட்டில் இருந்து வருமானம் ஈட்டவும், அதேசமயம் வேகமாக வளர்ந்து வரும் தன்னுடைய பயனர் தளத்தை பயன்படுத்தவும் புதிய வழிகளைத் தேடி வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது அட்லஸ் அறிமுகமாகியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், ஓபன்ஏஐ தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன் இதுகுறித்து பேசுகையில், சாட்ஜிபிடியின் வாராந்திர ஆக்டிவ் பயனர்கள் 800 மில்லியனாக உயர்ந்துள்ளதாகவும், இது பிப்ரவரியில் 400 மில்லியனாக இருந்ததாகவும் கூறினார். அட்லஸ் மூலம், பயனர்கள் இணையத்தில் எவற்றையெல்லாம் தேடுகிறார்கள் என்பது குறித்த தரவுகளைச் சேகரித்து, அவர்களின் இணைய வாழ்க்கையில் மேலும் பல பகுதிகளில் ஓபன்ஏஐ விரிவடைய உள்ளது. பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, ஓபன்ஏஐ தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன் இதன் முக்கிய அம்சங்கள் என்ன? அட்லஸ் பிரவுசர், இணைய பயன்பாட்டில் செயற்கை நுண்ணறிவை (AI) இணைக்க முயல்கிறது. வழக்கமான அட்ரஸ் பாரை (address bar) நீக்கி, "சாட்ஜிபிடியை மையமாகக் கொண்டு" அட்லஸ் உருவாக்கப்பட்டுள்ளதாக சாம் ஆல்ட்மேன் தெரிவித்தார். பயனர்கள் எந்த வலைப்பக்கத்திலும் சாட்ஜிபிடி சைட்பாரைத் திறந்து, உள்ளடக்கத்தை சுருக்கமாக அறியலாம், பொருட்களை ஒப்பிடலாம் அல்லது தரவை பகுப்பாய்வு செய்யலாம். கட்டணம் செலுத்தி பயன்படுத்தப்படும் "முகவர் பயன்முறை(Agent Mode)" வசதி மூலம், சாட்ஜிபிடியால் பயனர்களுக்காக இணையத்தில் தேடவும், வலைத்தளங்களுடன் தொடர்பு கொள்ளவும் முடியும். இதன் மூலம், பயணத்தைத் திட்டமிடுவது, ஆன்லைன் ஷாப்பிங் போன்ற வேலைகளை சாட்ஜிபிடி செய்யும். இதனை விளக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு நிகழ்வில், அட்லஸ் ஒரு சமையல் குறிப்பைக் கண்டுபிடித்து, இன்ஸ்டாகார்ட் (Instacart) மூலம் மளிகைப் பொருட்களை வாங்குவதை ஓபன்ஏஐ டெவலப்பர்கள் காட்டினர். அதேபோல் எட்சி (Etsy), ஷாபிஃபை (Shopify) போன்ற மின்வணிக தளங்களுடனும், எக்ஸ்பீடியா (Expedia), புக்கிங்.காம் (Booking.com) போன்ற சேவைகளுடனும் இணைந்து செயல்பட உள்ளதாக ஓபன்ஏஐ அறிவித்துள்ளது. "அட்லஸ் போன்ற ஏஐ பிரவுசர்கள் மிகவும் வசதியானவை. பல இணைப்புகளைத் தேடி, எது பொருத்தமானது என்று பார்க்க வேண்டியதில்லை. இப்போது வலைப்பக்கங்களின் சுருக்கத்தை எளிதாகப் பெறலாம்," என்கிறார் லண்டன் கிங்ஸ் கல்லூரியின் செயற்கை நுண்ணறிவு நிறுவனத் தலைவர் பேராசிரியர் எலெனா சிம்பர்ல். ஆனால், அவை எந்தளவுக்கு துல்லியமானவை என்பது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் "இந்த புதிய வகை ஏஐ பிரவுசர்கள், நம்பகமான வலைத்தளத்திலிருந்து வந்த தகவலையும் நம்பத்தகாத மூலத்திலிருந்து வந்த தகவலையும் வேறுபடுத்த முடியாதது ஒரு முக்கிய சிக்கலாக அமையும்" என்பதையும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம், PA Wire/PA Images இதில் ஆபத்துகள் உள்ளதா? ஓபன்ஏஐ, அட்லஸில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களைச் சேர்த்துள்ளதாகக் கூறுகிறது. ஆனால், பயனர்களுக்காக இணையத்தில் செயல்படும் முகவர் (Agent) அம்சம் இன்னும் சில அபாயங்களைக் கொண்டிருப்பதாக ஒப்புக்கொள்கிறது. இந்த பாதுகாப்பு அம்சங்களின்படி, அட்லஸ் பிரவுசர் குறியீடுகளை இயக்கவோ, கோப்புகளைப் பதிவிறக்கவோ, பிற செயலிகளை அணுகவோ முடியாது. மேலும், வங்கிகள் போன்ற முக்கியமான வலைத்தளங்களில் தானாக இடைநிறுத்தப்படும். பயனர்கள் முகவரை லாக்-அவுட் முறையில் (logged-out mode) இயக்கிக்கொள்ளலாம். இதன் மூலம் அதன் செயல்பாடு வரையறுக்கப்படும் ஆனால், வலைப்பக்கங்கள் அல்லது மின்னஞ்சல்களில் மறைந்து இருக்கக்கூடிய தவறான அல்லது தீங்கு விளைவிக்கும் வழிமுறைகள் காரணமாக அபாயங்கள் உள்ளதாக ஓபன்ஏஐ எச்சரிக்கிறது. இவை எதிர்பாராத செயல்கள் அல்லது தரவு திருட்டுக்கு வழிவகுக்கலாம். விரிவான சோதனைகள் செய்து, பாதுகாப்புக் குறைபாடுகளை தொடர்ந்து சரிசெய்து வருவதாக ஓபன்ஏஐ கூறுகிறது. ஆனால், அதே சமயம் பயனர்கள் தங்கள் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், தகவல்களைப் பகிரும்போது எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்துகிறது. "நாம் நமது தனிப்பட்ட தகவல்களையும், பிரவுசிங் வரலாற்றையும், பயனர்களின் தனியுரிமையை மதிப்பதையும் அல்லது தரவை பாதுகாப்பதையும் இன்னும் நிரூபிக்காத ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கிறோம். இதனால், இதை முயற்சிக்கும்போது நான் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கிறேன்" என்கிறார் பேராசிரியர் எலெனா சிம்பர்ல். அட்லஸில் பிரவுசிங் மெமரி (Browser Memories) என்ற அம்சமும் உள்ளது. இது பயனர்களின் பிரவுசிங் வரலாற்றை நினைவில் வைத்துக்கொண்டு, கேட்டால் முந்தைய தேடல் விவரங்களை மீட்டெடுக்கும். ஆனால், ஓபன்ஏஐ இதை முற்றிலும் தேர்வின் அடிப்படையில் செயல்படும் என்றும், பயனர்களுக்கு முழு கட்டுப்பாடு உள்ளதாகவும் கூறுகிறது. பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, உலகின் மிகவும் பிரபலமான பிரௌசரான கூகுள் குரோம் போன்ற போட்டியாளர்களுடன் போட்டியிடும் வகையில் அட்லஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது அட்லஸ் கூகுளுக்கு மாற்றாக இருக்குமா? இணையத்தில் பதில்கள் மற்றும் பரிந்துரைகளைத் தேடும் பயனர்கள், சாட்ஜிபிடி போன்ற பெரிய மொழி மாதிரிகளை (LLMs) பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. அட்லஸ் இந்தப் போக்கை மேலும் வேகப்படுத்தக்கூடும், ஏனெனில் பயனர்கள் கூகுளின் பாரம்பரிய முறையிலான தேடல்களை விட, தகவல்களை ஒருங்கிணைத்து வழங்கும் உரையாடல் கருவிகளையே விரும்புகின்றனர். ஆராய்ச்சி நிறுவனமான டாட்டோஸ் வெளியிட்ட தகவலின்படி, ஜூலை 2025 நிலவரப்படி டெஸ்க்டாப் பிரவுசர்களில் நடைபெறும் தேடல்களில் 5.99% பெரிய மொழி மாதிரிகளுக்குச் சென்றுள்ளது. இது கடந்த வருடத்திலிருந்து இருமடங்கு அதிகம். ஆனால் கூகுளும் செயற்கை நுண்ணறிவில் தீவிரமாக முதலீடு செய்து வருகிறது. கடந்த ஒரு வருடமாக, அதன் தேடல் முடிவுகளில் ஏஐ உருவாக்கிய பதில்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. கடந்த மாதம், கூகுள் தனது ஜெமினி (Gemini) என்ற ஏஐ மாதிரியை அமெரிக்க பயனர்களுக்கான கிரோம் பிரவுசருடன் ஒருங்கிணைத்தது. விரைவில் ஐஓஎஸ் கிரோம் பயன்பாட்டிலும் அதைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. "புதிய ஓபன்ஏஐ பிரவுசரை ஆரம்பத்திலேயே பலர் முயற்சித்துப் பார்க்கப் போகிறார்கள் என்று நான் நம்புகிறேன்," என்கிறார் மூர் இன்சைட்ஸ் & ஸ்ட்ராட்டஜியின் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாட் மூர்ஹெட். ''ஆனால், அட்லஸ், கிரோம் அல்லது மைக்ரோசாஃப்ட் எட்ஜுக்கு பெரிய சவாலாக அமையும் என்று நான் நினைக்கவில்லை, ஏனெனில் பெரும்பாலான பொதுப் பயனர்கள் மற்றும் நிறுவனப் பயனர்கள் தங்களுக்குப் பிடித்த பிரவுசர்களில் இதே அம்சங்கள் வரும் வரை காத்திருப்பார்கள்" என குறிப்பிட்டார். மைக்ரோசாஃப்ட் எட்ஜ் ஏற்கனவே இதேபோன்ற பல அம்சங்களை வழங்குவதாகவும் மூர்ஹெட் குறிப்பிடுகிறார். போட்டி அதிகரித்து வந்தாலும், ஸ்டேட்கவுன்டர் தரவுகளின்படி, கூகுள் குரோம் இன்னும் உலகளாவிய பிரவுசர் சந்தையில் 71.9% பங்குடன் தனது முன்னிலைப் பதவியைத் தக்க வைத்துள்ளது. ஆனால், ஓபன்ஏஐயின் புதிய பிரவுசர் விளம்பர வருவாய் சந்தையில் புதிய போட்டியை உருவாக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். "ஒரு பிரவுசரில் உரையாடல் அம்சத்தை சேர்ப்பது ஓபன்ஏஐ விளம்பரங்களை விற்பனை செய்வதற்காக எடுத்த முதல் படியாகும். இதுவரை ஓபன்ஏஐ விளம்பரங்களை விற்கவில்லை. ஆனால் அது தொடங்கியவுடன், தேடல் விளம்பரங்களில் சுமார் 90% பங்கை வைத்திருக்கும் கூகுளின் சந்தையில் பெரும் பங்கைக் குறைக்கக்கூடும்," என்று டி.ஏ டேவிட்ஸன் நிறுவனத்தின் ஆய்வாளர் கில் லூரியா விளக்கினார். அட்லஸ் எப்போது பயன்பாட்டுக்கு வர உள்ளது? சாட்ஜிபிடி அட்லஸ் இப்போது ஆப்பிள் MacOS இயங்கு முறையில் Free, Plus, Pro, மற்றும் Go பயனாளர்களுக்கு கிடைக்கிறது. மேலும், இது தற்போது வணிக (Business) பயன்பாட்டிற்கான பீட்டா பதிப்பிலும் கிடைக்கிறது. மேலும் அவர்களின் பிளான் நிர்வாகி அனுமதித்தால், என்டர்பிரைஸ் மற்றும் எட்யூ பயனாளர்களுக்கும் கிடைக்கும். விண்டோஸ், ஐஓஎஸ், மற்றும் ஆன்ட்ராய்டு பயனர்களுக்கான புதிய அம்சங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று ஓபன்ஏஐ தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly9q529yv0o