1 week 3 days ago

இது, தெரிஞ்சா... MRI ஸ்கேன் அறைக்குள் நுழையவே மாட்டீ ங்க.
கடந்த காலங்களில் மருத்துவத்துறையில் இன்று இருப்பதுப்போல நவீன கருவிகள் அன்று இல்லை. எனவே நோயாளியின் நோய்க்கான காரணத்தை கண்டறிவது ஒரு சவாலான காரியமாக இருந்து வந்தது. பின்னர் எக்ஸ் ரே, ஈசிஜி, எம்ஆர்ஐ போன்ற தொழில்நுட்ப கருவிகள் வந்த பின்னர் மருத்துவர்களுக்கு நோயாளிகளின் பிரச்சனையை கண்டறிவது மிகவும் எளிதாவிட்டது. அதிலும் எம்ஆர்ஐயின் வருகைக்கு பின்னர் நோய்களை துல்லியமாக கணித்து அதற்கு தகுந்த மருத்துவ நடைமுறைகளை எடுக்க மருத்துவர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது.
எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழையும் போது நம்முடைய அணிகலங்களை கழற்றுமாறு அங்குள்ளவர்கள் அறிவுறுத்துவார்கள். இது பலருக்கும் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தும். ஆனால் இதற்கு பின்னால் ஒரு மிக முக்கியமான பாதுகாப்பு காரணம் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? என்ன காரணம் என்பதை இங்கு பார்ப்போம்.
எம்ஆர்ஐ கருவியானது உடலின் உள்ளுருப்புகள் மற்றும் திசுக்களின் கட்டமைப்பை எக்ஸ் ரேயின் உதவியில்லாமல் பதிவு செய்வதற்கான ஒரு செயல் முறையாகும். இந்த செயல் முறையில் எம்ஆர்ஐ ஸ்கேன் உயர்தர காந்தங்களை பயன்படுத்தி மிக அதிக சக்திவாய்ந்த காந்தப்புலங்களை இந்த கருவி ஏற்படுத்துமாறு வடிவமைக்கப்படுள்ளது. இந்த காந்தப்புலங்கள் மனித உடல் உள்ளுறுப்பகளின் உயர்த்தர முப்பரிமாண படத்தை உருவாக்க பயன்படுகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் இந்த முப்பரிமாண படங்கள் உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் காயங்கள் அல்லது தேவையற்ற வளர்ச்சி இருக்கிறதா என்பதை தீர்மானிக்க மருத்துவர்கள் மிகப்பெரிய உதவியாக இருக்கிறது.
இந்த எம்ஆர்ஐ கருவி எப்படி வேலை செய்கிறது என்றால், ஒரு உளுந்த வடையை நிற்க வைத்தது போல் ஒரு உள்ள அமைப்பில் நடுவே படுக்கை ஒன்று நகரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த படுக்கையில் படுத்திருக்கும் நபர் மெதுவாக உள்ளே நகர்த்தப்படுவார். எம்ஆர்ஐ உள்ளே உள்ள சக்திவாய்ந்த காந்த புல சக்தி ஸ்கேன் செய்யப்படும் ஒவ்வொரு திசுக்களின் புரோட்டானையும் வரிசைப்படுத்துகிறது. அதே நேரத்தில் ரேடியோ அதிர்வலைகள் இந்த புரோட்டங்களில் மின்சார சமிஞ்க்கைகளை உருவாக்கி அவற்றின் வரிசையை சிதறடித்துவிடுகிறது. இப்போது எம்ஆர்ஐயின் காந்த புலங்கலையும், ரேடியோ அதிர்வலையையும் நிறுத்திவிடுவார்கள்.
இதனால் உறுப்பின் புரோட்டான்கள் காந்தத்தன்மையை இழந்து தங்களது பழைய அமைவிடத்திற்கு திரும்பும். அவ்வாறு திரும்பும்போது புரோட்டான்கள் தங்களை சிதறடித்த ரேடியோ அதிர்வலைகளை வெளியில் அனுப்பும். இதை எம்ஆர்ஐ கருவியில் பொருத்தபட்டிருக்கும் ஒரு சென்சார் கிரகித்து அதனை கணினிக்கு அனுப்பும்.
கணினியானது சென்சார் அனுப்பிய ரேடியோ அலைகளை ஒருகிணைத்து அதனை முப்பரிமாண படங்களை தயாரித்து திரையில் காண்பிக்கும்.
எம்ஆர்ஐ கருவியின் முக்கிய பாகமாக இருப்பது அதன் சக்தி வாய்ந்த காந்தங்களாகும்.
இவை ஸ்கேன் செயல் முறையின் முக்கிய அங்கமாக இருக்கிறது. இந்த காந்தங்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்றால் சுமார் 15அடி தூரத்தில் உள்ள உலோகத்தையும் ஈர்க்கவல்லது. காந்தங்கள் இந்த அதீத சக்திகொண்டதால் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யும் அறைக்குள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இப்போது புரிந்திருக்கும் ஏன் எம்ஆர்ஐ அறைக்குள் ஆபரணங்களை கழற்ற சொல்கிறார்கள் என்று. சிலர் எச்சரித்தும் அதை மதிக்காமல் இந்த ஆபரணங்களை அணிந்திருந்தால் என்னவாகும் என்றால் எல்லா ஆபரணங்களையெல்லாம் அந்த காந்தங்கள் வேகமாக இழுத்துக்கொள்ளும்.
எந்த அளவிற்கு இழுத்துக்கொள்ளும் என்றால் ஒரு வழிப்பறி கொள்ளையன் நகையை திருடுவதற்கு வேகமாக கழுத்திலிருந்து பிடுங்கிக்கொள்ளும் வேகமும் அதன் வேகமும் சமமாக இருக்கும். இதனால் காயம் ஏற்படும் சமயத்தில் மரணம் சம்பவிக்கவும் வாய்ப்புகள் உண்டு. எனவே அடுத்த முறை எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழையும் போது சென்மெட் பார்க்காமல் அணிந்திருக்கும் ஆபரணங்கள் கழற்றி வைத்துவிட்டு உள்ளே செல்லவும்.
சிந்திக்க வைக்கும் சிறுகதைகள்
1 week 3 days ago
இது, தெரிஞ்சா... MRI ஸ்கேன் அறைக்குள் நுழையவே மாட்டீ ங்க. கடந்த காலங்களில் மருத்துவத்துறையில் இன்று இருப்பதுப்போல நவீன கருவிகள் அன்று இல்லை. எனவே நோயாளியின் நோய்க்கான காரணத்தை கண்டறிவது ஒரு சவாலான காரியமாக இருந்து வந்தது. பின்னர் எக்ஸ் ரே, ஈசிஜி, எம்ஆர்ஐ போன்ற தொழில்நுட்ப கருவிகள் வந்த பின்னர் மருத்துவர்களுக்கு நோயாளிகளின் பிரச்சனையை கண்டறிவது மிகவும் எளிதாவிட்டது. அதிலும் எம்ஆர்ஐயின் வருகைக்கு பின்னர் நோய்களை துல்லியமாக கணித்து அதற்கு தகுந்த மருத்துவ நடைமுறைகளை எடுக்க மருத்துவர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழையும் போது நம்முடைய அணிகலங்களை கழற்றுமாறு அங்குள்ளவர்கள் அறிவுறுத்துவார்கள். இது பலருக்கும் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தும். ஆனால் இதற்கு பின்னால் ஒரு மிக முக்கியமான பாதுகாப்பு காரணம் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? என்ன காரணம் என்பதை இங்கு பார்ப்போம். எம்ஆர்ஐ கருவியானது உடலின் உள்ளுருப்புகள் மற்றும் திசுக்களின் கட்டமைப்பை எக்ஸ் ரேயின் உதவியில்லாமல் பதிவு செய்வதற்கான ஒரு செயல் முறையாகும். இந்த செயல் முறையில் எம்ஆர்ஐ ஸ்கேன் உயர்தர காந்தங்களை பயன்படுத்தி மிக அதிக சக்திவாய்ந்த காந்தப்புலங்களை இந்த கருவி ஏற்படுத்துமாறு வடிவமைக்கப்படுள்ளது. இந்த காந்தப்புலங்கள் மனித உடல் உள்ளுறுப்பகளின் உயர்த்தர முப்பரிமாண படத்தை உருவாக்க பயன்படுகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் இந்த முப்பரிமாண படங்கள் உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் காயங்கள் அல்லது தேவையற்ற வளர்ச்சி இருக்கிறதா என்பதை தீர்மானிக்க மருத்துவர்கள் மிகப்பெரிய உதவியாக இருக்கிறது. இந்த எம்ஆர்ஐ கருவி எப்படி வேலை செய்கிறது என்றால், ஒரு உளுந்த வடையை நிற்க வைத்தது போல் ஒரு உள்ள அமைப்பில் நடுவே படுக்கை ஒன்று நகரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த படுக்கையில் படுத்திருக்கும் நபர் மெதுவாக உள்ளே நகர்த்தப்படுவார். எம்ஆர்ஐ உள்ளே உள்ள சக்திவாய்ந்த காந்த புல சக்தி ஸ்கேன் செய்யப்படும் ஒவ்வொரு திசுக்களின் புரோட்டானையும் வரிசைப்படுத்துகிறது. அதே நேரத்தில் ரேடியோ அதிர்வலைகள் இந்த புரோட்டங்களில் மின்சார சமிஞ்க்கைகளை உருவாக்கி அவற்றின் வரிசையை சிதறடித்துவிடுகிறது. இப்போது எம்ஆர்ஐயின் காந்த புலங்கலையும், ரேடியோ அதிர்வலையையும் நிறுத்திவிடுவார்கள். இதனால் உறுப்பின் புரோட்டான்கள் காந்தத்தன்மையை இழந்து தங்களது பழைய அமைவிடத்திற்கு திரும்பும். அவ்வாறு திரும்பும்போது புரோட்டான்கள் தங்களை சிதறடித்த ரேடியோ அதிர்வலைகளை வெளியில் அனுப்பும். இதை எம்ஆர்ஐ கருவியில் பொருத்தபட்டிருக்கும் ஒரு சென்சார் கிரகித்து அதனை கணினிக்கு அனுப்பும். கணினியானது சென்சார் அனுப்பிய ரேடியோ அலைகளை ஒருகிணைத்து அதனை முப்பரிமாண படங்களை தயாரித்து திரையில் காண்பிக்கும். எம்ஆர்ஐ கருவியின் முக்கிய பாகமாக இருப்பது அதன் சக்தி வாய்ந்த காந்தங்களாகும். இவை ஸ்கேன் செயல் முறையின் முக்கிய அங்கமாக இருக்கிறது. இந்த காந்தங்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்றால் சுமார் 15அடி தூரத்தில் உள்ள உலோகத்தையும் ஈர்க்கவல்லது. காந்தங்கள் இந்த அதீத சக்திகொண்டதால் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யும் அறைக்குள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இப்போது புரிந்திருக்கும் ஏன் எம்ஆர்ஐ அறைக்குள் ஆபரணங்களை கழற்ற சொல்கிறார்கள் என்று. சிலர் எச்சரித்தும் அதை மதிக்காமல் இந்த ஆபரணங்களை அணிந்திருந்தால் என்னவாகும் என்றால் எல்லா ஆபரணங்களையெல்லாம் அந்த காந்தங்கள் வேகமாக இழுத்துக்கொள்ளும். எந்த அளவிற்கு இழுத்துக்கொள்ளும் என்றால் ஒரு வழிப்பறி கொள்ளையன் நகையை திருடுவதற்கு வேகமாக கழுத்திலிருந்து பிடுங்கிக்கொள்ளும் வேகமும் அதன் வேகமும் சமமாக இருக்கும். இதனால் காயம் ஏற்படும் சமயத்தில் மரணம் சம்பவிக்கவும் வாய்ப்புகள் உண்டு. எனவே அடுத்த முறை எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழையும் போது சென்மெட் பார்க்காமல் அணிந்திருக்கும் ஆபரணங்கள் கழற்றி வைத்துவிட்டு உள்ளே செல்லவும். சிந்திக்க வைக்கும் சிறுகதைகள்
1 week 3 days ago
ஐ.நா சபையை கடுமையாக விமர்சித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்! ஐக்கிய நாடுகள் தற்போது சரியாக செயல்படுவதில்லை என்றும் அதன் விவாதங்கள் ஒருபக்க சார்புடையதாக மாறியுள்ளன, எனவும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். டில்லியில் வெளியுறவு அமைச்சக வளாகத்தில், நேற்று இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் 80வது ஆண்டு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது, ஐக்கிய நாடுகள் சபை தற்போது சரியாக செயல்படவில்லை எனவும் அதன் முடிவெடுக்கும் நடைமுறை, அதன் உறுப்பு நாடுகளின் எண்ணங்களையும், தேவைகளையும் பிரதிபலிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அதன் விவாதங்கள் பெரும்பாலும் ஒருபக்க சார்புடையதாக மாறிவிட்டன எனவும் அதன் செயல்பாடு முடங்கி உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, சீர்திருத்தம் செய்ய முயன்றால், அதையே தடுக்கின்றனர் எனவும் தற்போது நிதி நெருக்கடியும் ஐக்கிய நாடுகளுக்கு ஒரு கூடுதல் பிரச்னையாக உருவாகியுள்ளது எனவும் ஐக்கிய நாடுகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று பயங்கரவாதம் எனவும் பஹல்காம் போன்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்ற அமைப்பை, ஒரு பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் நாடு வெளிப்படையாகப் பாதுகாக்கிறது எனவும் இந்நிலையில், ஐக்கிய நாடுகள் எவ்வாறு பல நாடுகளின் உறவின் நம்பகத்தன்மையை காப்பாற்றும எனவும் அவர் இதன்போது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கேள்வி எழுப்பினார். https://athavannews.com/2025/1451076
1 week 3 days ago
போரைச் சந்தித்த ஒரு நாடு அல்லது ஓர் அரசானது போரின் தோற்றுவாய்க்கான தீர்வை முன்வைத்து அனைத்துத்தரப்பினரையும் ஒரு நேர்கோட்டிற் கொண்டுவராதவரை எப்படியான ஆட்சியை செய்தாலும் அரசியல் வறட்சியே நிலவும்.. அதிலும் பொதுவுடமைச் சிந்தாந்த கோட்பாடுடையோரின் ஆட்சிகள் ஒருவகை மறைநிலை எதேச்சதிகார ஆட்சிகளாகவே இருந்துள்ளன. மிகமோசமான பொருண்மிய வீழ்ச்சியைச் சந்தித்த ஈழத்தீவில் முதல்முறையாக பொதுவுடமைச் சிந்தாந்தக் கோட்பாடுடையோர் ஆட்சியமைத்துள்ள அரசாக உள்ளநிலையில் அவர்கள் ஒருநிலையெடுப்பதற்குள் ஆட்சிக்காலம் முடிவடைந்துவிடலாம். மாறிமாறி ஆண்ட இருதரப்புகளும் தமிழினத்தை அழிக்கும் நோக்கிலே ஒருவகைப் படையப் பலப்பிரயோக ஆட்சியை (இராணுவ ஆட்சி)கடந்த அரைநூற்றாண்டாகச் செயற்படுத்தின. அதனையே இன்றைய அரசும் தொடர்கிறது. அங்கே பயின்ற படைகளும், சிவப்புக்கொடிக்குள் மறைந்துள்ள யே.வி.பி என்ற என்.பி.பி அரசும் தமது முன்னாள் இன்னாள் எதிரிகளை ஒடுக்க பல்வேறு தந்திரங்களைக் கடந்த ஓர் ஆண்டாகச் செயற்படுத்திவருதை காணக்கூடியதாக உள்ளது. அதிலே ஒரு வேறுபாட்டையும் காணமுடிகிறது. சிலரைக் கைது, மருத்துவவசதி என்று உயர்பிரிவிலும், சிலரை உயிர்பிரிப்புப் பிரிவிலும் என அரச நிகழ்ச்சிநிரலோடு நகர்வதாகவே தோன்றுகிறது. ஆனால், மகிந்த தரப்பைக் கைவைத்து இருப்பதையும் இழப்பான் ஏன் என்ற ஒரு அச்சநிலையோடு ஆட்சியைத் தொடர்கின்றனர். அனுர அரசும் என்னதான் சமத்துவம் சமதர்மம் என்றாலும் இனத்துவநிலையில் இருந்து சிந்திப்பதையே காணமுடிகிறது. அதற்கான அளவுகோலாக வடமாகாணத்திலுள்ள தையிட்டியில் தனியாருக்கு உரித்துடைய காணிகளை அத்துமீறி அடாத்தாகப் பிடித்து அமைக்கப்பட்டுள்ள விகாரை விடயத்தை அனுர அரசு கையாளும் தன்மையே போதுமானது. இன்னுமொருபடி மேற்சென்று சர்ச்சைக்குரிய விகாராதிபதியிடம் ஆசீர்வாதம்வேறு பெற்று அதை உறுதிப்படுத்தியது என்பன சான்றாகும். இனமோ, இனப்பிரச்சினை என்ற ஒன்றோ இல்லை. பொருண்மியப் பிரச்சினையே உள்ளது. எனவே அபிவிருத்தி அரசியலைச் செய்தால் தமிழரது பிரச்சினை தீர்ந்துவிடும் என்று பொய்களை அவிட்டுவிட்டு பொருண்மிய உதவிகளை வெளிநாடுகளிடம் பெற்றுச் சிங்களப்பகுதிகளின் மேல் அபிவிருத்திக்;குவிப்பைப் பல பத்தாண்டுகள் செய்ததுபோல் அனுர அரசும் செயற்பட்டு வருவதை காங்கேசன்துறைத் துறைமுக அபிவிருத்தி மீதான அக்கறையின்மை தெளிவுறக்காட்டுகிறது. எனவே, துணிவுடைய அரசுத்தலைமையும், நாட்டின் முதன்மைப் பிரச்சினையான இனப்பிரச்சினையைத் தற்துணிவோடு எதிர்கொள்ளும் ஆளுமையும் உள்ள ஒரு அரசுத் தலைமையால் மட்டுமே ஈழத்தீவை மீட்டெடுக்க முடியும். ஈழத்தீவை நிலையாக்கக் குறைந்தபட்சம் உள்ளக சுயநிர்ணய உரிமையைக் கொண்ட கூட்டாட்சி முறையொன்றை உளத்தூய்மையோடு நிறுவுதலே ஒட்டுமொத்த ஈழத்தீவினது மீட்சியாகவும் ஒரு திறந்தநிலைச் சட்டத்தின் ஆட்சியாகவும், தெற்காசியவட்டகையில் உயர்நிலைச் சனநாயக விழுமியங்களைக் கொண்ட சிறந்த மக்களாகவும் நாடாகவும் அமையும். அடிப்படை மாற்றங்களைச் செய்யாது தற்போதுள்ள அரசியற் சட்டம் ஒர் அரசுப்பொறியாக இல்லாது மக்களை அழிக்கும் ஆட்சிப்பொறியாகவே இருக்கும். அனாமதேயக் கொலைகளுக்கும் பஞ்சமிருக்காது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
1 week 3 days ago
கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 06 பகுதி: 06 - மிடிகம உணவுப் பண்ணை & காலி மிடிகம உணவுப் பண்ணைக்கு சென்றதும் குழந்தைகள் மகிழ்ச்சியில் துள்ளினர். அங்கே பச்சை தேங்காயில் இருந்து குடித்த இளநீர் அவர்களின் தாடையால் வழிந்தது, என்றாலும் அவர்கள் சிரித்தபடி மாமரம், வாழைமரம், பப்பாளி மரங்களைச் சுற்றி ஓடி விளையாடினர். அவர்களுக்கு அங்கே முதலில், உடனடியாக மரத்தில் இருந்து பிடுங்கி செய்த பப்பாளிப் பழச்சாறு பருக கொடுக்கப்பட்டது. குழந்தைகள் துள்ளிக் குதித்தனர். தாத்தா கல்யாண சாப்பாடுபோல் மகிழ்ந்தார். கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் ப்ரமாதம் - அந்த கௌரவப்ரசாதம் இதுவே எனக்குப் போதும் அந்தார பஜ்ஜி அங்கே சுந்தார சொஜ்ஜி இங்கே சந்தோஷ மீறிப் பொங்க ஜோரான சேனி லட்டு சுவையான சீனி புட்டு ஏராளமான தட்டு இதுவே எனக்குப் போதும் பண்ணையில் மரங்களுக்குப்பின் ஒழித்து விளையாடிக்கொண்டு இருந்த கலை கேட்டான்: “தாத்தா, நீங்களும் இப்படித்தான் முன்பு விளையாடினீர்களா?” தாத்தா சற்றே அமைதியுடன் சிரித்தார். “ஆம்… ஆனால் போரின் காலத்தில் பல பண்ணைகள் அழிந்தன. அரச சிப்பாய்கள், இளைஞர்கள், சிறுவர்கள் விளையாட வேண்டிய இடங்களில் எல்லாம் ஆக்கிரமிதார்கள். அதனால்த் தான் சாதாரண மக்கள் அமைதியை, சமாதானத்தை ஒரு பொக்கிஷமாக மதிக்கிறார்கள், அதற்காக ஏங்குகிறார்கள்.” என்றார். தாத்தா சொன்ன வார்த்தைகளின் கனத்தை உணர்ந்த குழந்தைகள் ஒரு கணம் அமைதியாகிவிட்டனர். பின்னர் ஜெயா குறும்புத்தனமாக கலையின் தலையில் சிறிது இளநீரை ஊற்றி, "பார் தாத்தா, இப்போது கலை ஒரு தென்னை மரம்!" என்று சிரித்தாள். எல்லோரும் அவளுடன் சேர்ந்து சிரித்தனர். பின் அவர்கள் மூவரும் குரங்குகள் போல நடித்து வாழைத் தோப்பின் வழியாக, வாழைக்குலையில் இருந்து வாழைப்பழம் பிடுங்க, எட்டி எட்டிப் பார்த்தனர். காலி கோட்டை காலியில், அவர்கள் பழைய போர்த்துக்கேயர்களால் கட்டப்பட்டு, டச்சுக்காரர்களால் விரிவு படுத்தப்பட்டு, பின்னர் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப் பட்ட, கோட்டையின் வழியாக நடந்து சென்றனர், அலைகள் பண்டைய சுவர்களில் மோதி, வெளிநாட்டு ஆட்சியாளர்கள் மற்றும் மறக்கப்பட்ட போர்களின், காலனித்துவக் கதைகளை கிசுகிசுத்தன. அலைகள் வெகுதூரம் கீழே மோதிய போது உப்புக் காற்று அவர்களின் முகங்களைத் துடைத்தது. இலங்கை எவ்வாறு வெளிநாட்டு ஆட்சியாளர்களை மட்டுமல்ல, சுதந்திரத்திற்குப் பிறகு அதன் சொந்தப் போராட்டங்களையும் எதிர்கொண்டது என்பதை தாத்தா விளக்கினார். ஜெயா சுவற்றை தொட்டு கேட்டாள்: “இது எத்தனை வயதான சுவர் தாத்தா?” தாத்தா சிரித்து :“16 ஆம் நூற்றாண்டளவில் முதலில் கட்டப்பட்டது. ஆனால் உங்களுக்குத் தெரியுமா? காலி என்பது வெளிநாட்டினரைப் பற்றியது மட்டுமல்ல. அது உள்நாட்டினரின் சோகத்தையும் கண்டது. 1950கள் மற்றும் 1960களில், தமிழர்களுக்கு எதிராக இங்கு கலவரங்கள் வெடித்தன. கடைகள் சூறையாடப்பட்டன, குடும்பங்கள் இடம்பெயர்ந்தன. பல தமிழர்கள் ஒன்றுமில்லாமல் தங்கள் வாழ்க்கையை மீண்டும் பாதுகாப்பான இடங்களில் தொடங்க வேண்டியிருந்தது.” குழந்தைகள் சற்று கவலையுடன் காணப்பட்டனர். பின்னர் தாத்தா அவர்களின் மனநிலையை பிரகாசமாக்கினார்: “ஆனால் வரலாறு என்பது துக்கம் மட்டுமல்ல. வாருங்கள், நான் உங்களுக்கு ஒரு மகிழ்வான ஒன்றைக் காட்டுகிறேன்.” என்றார். “இங்கே காலி மும்மொழிக் கல்வெட்டு (Galle Trilingual Inscription) இருக்கிறது. 1409-ல் சீனக் கடற்படைத்தளபதி செங் கே இத்தீவிற்கு இரண்டாம் முறை வந்ததின் நினைவாக சீன, தமிழ், பாரசீகம் ஆகிய மூன்று மொழிகளில் எழுதப்பட்ட கற்றூண் கல்வெட்டு இது ஆகும்” என்றார். உடனே ஜெயா ஆச்சரியமாகக் கேட்டாள்: “ஆனால் தாத்தா, அப்போது சிங்கள மொழியில் எழுதலையா? சிங்களர்கள் இங்கே இல்லையா?” என்று. தாத்தா (சிரித்தபடி): “கண்ணா, சிங்கள மக்கள் இருந்தார்கள். ஆனால் அட்மிரல் ஜெங் ஹீ மாத்தறைக்கு அருகிலுள்ள பழைய சிவன் கோவிலில் பிரார்த்தனை செய்தார், அங்கு தமிழ் வழிபாட்டு மொழியாக இருந்தது. கடல் தாண்டிய வர்த்தக மொழியாகவும் தமிழ் இருந்தது. ஆமாம், 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், தமிழ் முக்கிய கடலோர மற்றும் வணிக மொழியாக இன்னும் இருந்தது. வணிகர்கள், ஆட்சியாளர்கள் மற்றும் கோயில்கள் கல்வெட்டுகளுக்கு தமிழைப் பயன்படுத்தினர். குறிப்பாக தெற்கு மற்றும் கிழக்கில். அதனால்தான் ஜெங் ஹீயின் கல்வெட்டு சீன மற்றும் பாரசீக மொழிகளுடன் தமிழில் எழுதப்பட்டது. இலங்கை பரந்த உலகத்துடன் எவ்வாறு இணைக்கப்பட்டிருந்தது என்பதை இது காட்டுகிறது.” என்றார். குழந்தைகள் அதிசயத்தோடு அந்தக் கல்வெட்டைக் கண்டு களித்தனர். கலை கிசுகிசுத்தான்: (கண்களை விரித்து): “அப்போ தெற்கிலும் தமிழ் முக்கியமானதா?” “அப்போ தமிழ் ஆங்கிலம் மாதிரியா இருந்தது? எல்லாரும் அதைப் பயன்படுத்தினாங்களா?” தாத்தா தலையசைத்தார்: “ஆம். சிங்கள மன்னர்கள் கூட சில சமயங்களில் தமிழைப் பயன்படுத்தினர். நமது தீவு ஒரு காலத்தில் சீனர்கள், பாரசீகர்கள், தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் அனைவரும் சந்தித்து வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்ட இடமாக இருந்தது என்றார். கலை (சிரித்துக்கொண்டே): “அப்போ அந்தக் கல் மூன்று மொழிகள் கொண்ட பள்ளிப் புத்தகம் மாதிரி!” தாத்தா (சிரித்துக்கொண்டே அவனை அணைத்துக் கொண்டு): “சரியாக சொன்னாய் , கண்ணா. இது இன்றும் நமக்குக் கற்பிக்கும் ஒரு வரலாற்றுப் பள்ளிப் புத்தகம்.” குழந்தைகள் கண்ணுக்குத் தெரியாத உளிகளால் தங்கள் பெயர்களை காற்றில் செதுக்குவது போல் நடித்துக் ஓடி விளையாடினர். பின் அவர்கள் நடந்து செல்லும்போது, தாத்தா அவர்களுக்கு கடலை நோக்கிச் சுட்டிக்காட்டி: "இலங்கையின் கடற்கரையோரங்களில் உள்ள ஐந்து பழங்கால ஈஸ்வர கோயில்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? யாழ்ப்பாணத்தில் நாகுலேஸ்வரம், மன்னாரில் திருக்கேதீஸ்வரம், திருகோணமலையில் கோணேஸ்வரம், சிலாபத்தில் முன்னேஸ்வரம், மற்றும் "இங்கே, தேவேந்திரமுனை அல்லது தேவந்துறை [Dondra] அருகே, ஒரு காலத்தில் ஐந்து பெரிய ஈஸ்வர சிவாலயங்களில் ஒன்றான தொண்டேஸ்வரம் இருந்தது. ஆனால் அது 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்களால் அழிக்கப்பட்டது. இப்போது கடலுக்கு அடியில் கற்கள் மட்டுமே உள்ளன." என்றார். இவற்றில் ஏழாம் எட்டாம் நூற்றாண்டிலேயே தமிழ் தேவாரம் பாடப்பெற்ற தலமாக மாதோட்டம் - திருக்கேதீஸ்வரமும் திருக்கோணமலை - கோணேஸ்வரமும் இருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே என்றார் தாத்தா. ஏன் என்றால் இலங்கை பௌத்தரின் வரலாறு கூறும் புராண நூலான மகாவம்சம், அந்த காலப் பகுதியில், கி.பி 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டில் தான் முதல் முதல் அதுவும் பாளி மொழியில் தான் எழுதப்பட்டது. அந்த நேரம் வளர்ச்சிக்கால முதற்படியைச் சார்ந்த சிங்களம் [Proto-Sinhala] மட்டுமே புழக்கத்தில் இருந்தது வரலாற்று உண்மை என்று விளக்கம் கொடுத்தார். மூவர் என இருவர் என முக் கண்ணுடை மூர்த்தி மாவின் கனி தூங்கும் பொழில் மாதோட்ட நன் னகரில் பாவம் வினை அறுப்பார் பயில் பாலாவியின் கரை மேல் தேவன் எனை ஆள்வான் திருக் கேதீச்சரத் தானே! [சுந்தரமூர்த்தி நாயனார்] குற்றம் இலாதார் குரை கடல் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரை, கற்று உணர் கேள்விக் காழியர் பெருமான் கருத்து உடை ஞானசம்பந்தன் உற்ற செந்தமிழ் ஆர் மாலைஈர் ஐந்தும் உரைப்பவர், கேட்பவர், உயர்ந்தோர் சுற்றமும் ஆகித் தொல்வினை அடையார்; தோன்றுவர், வான்இடைப் பொலிந்தே. [திருஞானசம்பந்த நாயனார்] அப்பொழுது குழந்தைகள் முடிவில்லாமல் உருளும் கடல் அலைகளைப் பார்த்தார்கள். "அப்போ கடல் ஒரு கோயிலை மறைத்து வைத்திருக்கிறதா?" கலை கிசுகிசுத்தாள். "ஆம்," தாத்தா கூறினார். "ஆனால் நினைவுகள் ஒருபோதும் மூழ்காது. அவை இது போன்ற கதைகளில் வாழ்கின்றன." என்றார். குழந்தைகள் அதை, தங்கள் கண்களை விரித்து கேட்டார்கள். ஜெயா சிரிப்புடன், கிண்டலாகக் கேட்டாள்: “தாத்தா, அவர்கள் கோவில்களை அழித்துவிட்டதால், நாம் அவற்றை லெகோ கோவில்களாகக் [Lego temples] கட்டலாமே?” தாத்தா சிரித்தபடி சொன்னார்: “ஆமாம், ஒருவேளை லெகோ தான் வரலாறு காப்பாற்ற முடியாததை காப்பாற்றும்!” என்றார். பின்னர், ஐஸ்கிரீம் வாங்கும்போது, தாத்தாவின் முகம் சிந்தனையில் ஆழ்ந்து இருந்தது , “ ஒரு காலத்தில் இங்கே அருகருகே வாழ்ந்த தமிழ் சிங்கள மக்கள் பிரிந்து போனது இன்னும் நினைவில் இருக்கிறது” என்றார். குழந்தைகள் அவரது கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டனர். “ஆனால் இப்போது நாம் இங்கே ஒன்றாக நடக்கிறோம், தாத்தா. அமைதிதான் சிறந்தது, இல்லையா?” தாத்தா சிரித்தார். “ஆமாம், என் குழந்தைகளே. அதனால்த் தான் நீங்கள் இதே தெருக்களில் சுதந்திரமாக ஓடுவதைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.” என்றார். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 07 தொடரும் கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 06 https://www.facebook.com/groups/978753388866632/posts/32019348474380384/?