1 week 3 days ago
அஜீவன், தென்னிந்தியத் திரைப்படத்துறையில் இருந்தவர். மறைந்த நடிகர் முரளியின் நண்பன். யாழ் இணையத்தில்தான் அவருடனான தொடர்பு எனக்கு ஏற்பட்டது. சஞ்சீவ்காந்துடன் (இளைஞன்) என்னையும் என் மனைவியையும் சந்திப்பதற்காக ஒருதடவை யேர்மனிக்கு வந்திருந்தார். பழகுவதற்கு இனியவர். குறும்படங்கள் வெளிவரத் தொடங்கிய நேரம். ஐரோப்பாவில், ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ், லண்டன் போன்ற நாடுகளில் எம்மவர்கள் குறும்படங்களைத் தயாரித்து வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தத் தயாரிப்புகளில் அஜீவனின் குறும்படங்கள் தனித்துவமானவை. அவை புலம்பெயர் வாழ்க்கையை அழகாக வடிவமைத்ததும், திரைப்படக் கலைஞராக அவரது திறமையை வெளிப்படுத்தியதும் உண்மை. அஜீவனின் திறமையும், திரைத்துறையில் அவர் பெற்ற அனுபவங்களும், அவர் எளிதில் ஈழத்துக்கான சினிமாவில் ஒரு உயர்ந்த நிலையை அடையக் கூடியவையாக இருந்தன. ஆனால், அதற்காக அஜீவன் மிகுந்த முயற்சி எடுக்கவில்லை. அவரின் அரசியல் தொடர்புகள், தனிமை, பொருளாதாரச் சிக்கல்கள், ஊக்கம் தராத நண்பர்கள் போன்றவை அதற்கான காரணங்களாக இருந்திருக்க வேண்டும். ஒரு திறமையான கலைஞனை இழந்திருக்கின்றோம். வாழும் போதெல்லாம் அவரின் திறமையை ப் பெரிதும் பாராட்டாமலும், மதிக்காமலும் இருந்துள்ளோம். அது தான் ஒரு கலைஞரின் வாழ்க்கையில் அவமானமாக இருக்கக்கூடிய ஒரு நிலை. அஜீவனின் எச்சில் போர்வை குறும்படத்துக்கு நான் எழுதிய விமர்சனம் (யாழ் இணையம் 27.09.2003) சப்பாத்தை அநாயசமாகக் கழட்டிவிட்டு சோர்வுடன் நடக்கும் கால்களுடன் வீட்டுக்குள் கமரா நுளைகிறது, கூடவே நாங்களும் நுளைவது போன்ற பிரமை. ஜக்கற்றை கழட்டி கட்டிலில் போடுவது, கடித உறையைக் கிழித்து கிழித்த துண்டைக் கீழே போடுவது போன்ற சிறு சிறு விசயங்களில் கூட நிறைய கவனம் செலுத்தப்பட்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. ஒரு வார்த்தை பேச வேண்டிய அவசியமே நாயகனுக்கில்லை. கமராவும் ஒளியமைப்பும் அவனுக்காகப் பேசுகின்றன. கதையை நகர்த்த பின்னணியில் குரல்கள் பேசுகின்றன. லுயிஸை சுவிசிற்கு அனுப்பிவிட்டு, ஒரு கடிதம் மூலமும், தொலைபேசி அழைப்பின் மூலமும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பை சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார் இதை ஆக்கியவன். ஒரு இலட்சம் அனுப்பு என்ற கடித வாசகத்தைப் பார்த்து (கேட்டு) லுயிஸ் பெருமூச்சு விடுவதும், இன்னும் இரண்டு கிழமைக்குள் பணம் அனுப்பு என்று சொல்லி துண்டிக்கப்படும் தொலைபேசியின் பின்னணிச் சத்தமும், இருளையே பார்த்து நிற்கும் லுயிஸின் இலயாமையும் நன்றாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அதேபோல் லுயிஸிற்கு தொலைபேசி வந்திருப்பதாகச் சொல்ல வருபவரைக் காட்டாது அவரின் நிழலை லுயிஸின் முதுகில் காட்டி மறையவிடுவது தேர்ந்த கலைஞனின் ஒளியமைப்பினூடான கமராப் பார்வை. கலாச்சாரம், சினிமா என்ற வெட்டிப் பேச்சுக்களின் பின்னணியில் லுயிஸ் லிப்றில் 10வது மாடிக்குப் போவதும், பின்னணியில் நண்பனின் அறிவுரை ஒலிக்க மீண்டும் லிப்றில் கீழே பயணிப்பதும் நல்ல சேர்க்கை. யாழ்ப்பாண நிலமைகள், தங்கையின் கடிதம், தொலைபேசியில் ஒலிக்கும் தந்தையின் குரல், வெட்டிப்பேச்சு பேசும் குரல்கள் எல்லாம் மாறிமாறி ஒலிக்கும்போது, லுயிஸ் தனது வலது கைப் பெருவிரலை அசைப்பது சொல்ல வேண்டியதைச் சொல்லி நிற்கின்றது. முற்பகுதியில் இயற்கையான ஒலியுடனும் பிற்பகுதியில் வாத்திய இசையுடனும் பின்னணி சேர்த்திருப்பது அருமை. கதையின் நாயகனை விட்டு நாங்கள் அகலாத வண்ணம் எங்களை வைத்திருப்பதற்காக வேறு பாத்திரங்களை காட்டாதது உங்கள் எண்ணமானால், அறிவுரை தரும் நண்பனின் காலைக் காட்டுவதையும் தவிர்த்திருக்கலாமே. புலம்பெயர் தமிழ் இளைஞனே உன் தோளில் இத்தனை சுமைகளா? அழகாகச் சொல்லியிருக்கிறார் ஆக்கியவன் அஜீவன்.
1 week 3 days ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 25 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 25 A / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'எல்லாளனுக்கு முந்திய மன்னர்கள், எல்லாளன் உட்பட, கற்பனைப் கதாபாத்திரங்களா?' சந்தமுக சிவாவுக்கு அடுத்தபடியாக யசலாலக்க தீசன் (Yassalalaka Tissa) தீபவம்சத்தின்படி எட்டு வருடங்களும் ஏழு மாதங்களும் மகாவம்சத்தின்படி ஏழு வருடங்களும் எட்டு மாதங்களும் ஆட்சி செய்தார்; வருடங்கள் மற்றும் மாதங்களின் எண்ணிக்கை, தீபவம்சத்தில் இருந்து மகாவம்சத்துக்கு போகும் பொழுது, ஆண்டு மாதமாகவும், மாதம் ஆண்டாகவும் ஒன்றுக்கொன்று மாற்றப் பட்டுள்ளது. திஸ்ஸ [Tissa] தனது சகோதரன் சந்தமுக சிவாவை ஒரு திருவிழா விளையாட்டில் கொன்றதாக மகாவம்சம் கூறுகிறது. பின்னர் சபா [மகாவம்சத்தில் சுபகராஜா / Sabah (Subharajah in the Mahavamsa)] ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவர் ஒரு கதவுக் காவலாளியின் மகன். மகாவம்சத்தில் உள்ள இந்தக் கதவுக்காவலரைச் சுற்றிய ஒரு கதை, அரசனைப் பற்றியும் அதே ஒற்றுமையைக் கொண்ட ஒரு வேலைக்காரனைப் பற்றியும் பழங்காலத்தில் நிலவிய ஒரு கதையுடன் ஒத்துப் போகிறது. மகாவம்சம் 35-58 இன் படி சுபகராஜா ஒரு வள்ளி - விகாரை கட்டினார். மேலும் வள்ளி என்பது மிகவும் பொதுவான தமிழ்ப் பெண் பெயர். அதன் பின் வசபா [முதலாம் இலம்பகர்ண வம்ச மன்னனான வசபன் / Vasabha] என்ற அரசன் நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தான். தீபவம்சம் அவரது வம்சாவளியைப் பற்றிப் பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் மகாவம்சம் அவர் வடக்கு மாகாணத்திலிருந்தும் இலம்பகர்ண அரச குலத்திலிருந்தும் வந்தவர் என்று கூறுகிறது. வட மாகாணத்தை சேர்ந்தவர் என்பதால் அவரும் தமிழராக இருக்கலாம்? அவர் தனது மாமாவின் மனைவியை ராணியாகக் ஏற்றுக்கொண்டார். இவனுடைய ஆட்சி எல்லாளனுக்குப் பிறகு மிக நீண்டது ஆகும்; இருவருமே ஒரே கால ஆட்சியைக் கொண்ட தமிழர்களாகக் காணப்படுகிறது. என்றாலும், முன்பு நாம் பல சந்தேகங்களைக் சுட்டிக்காட்டியவாறு, எல்லாளனுக்குப் முந்தைய மன்னர்கள் எல்லோரும், எல்லாளன் உட்பட, கற்பனையான பாத்திரங்கள் போல்த் தெரிகிறது. மகாவம்சத்தின் படி, வசபா இன்னும் பன்னிரண்டு ஆண்டுகள் மட்டுமே வாழ்வார் என்று ஒரு சோதிடரால் கூறப்பட்டதால், வசபா ஒரு பக்தியுள்ள பௌத்தரானார் என்றும் [அப்படி என்றால் முன்பு அவர் அல்லது இலம்பகர்ண வம்சம் அப்படி அல்ல என்று பொருள் படுகிறது, ஏனென்றால், இவருடன் தான் ஒரு புதிய வம்சம் ஆட்சிக்கு இலங்கைக்கு வந்தது என்பதால்] மற்றும் அவரது ஆயுளை நீட்டிக்கும் முயற்சியில் பல புண்ணிய செயல்களைச் செய்தார் என்றும் அங்கு கூறியிருப்பதால், இந்த மன்னனின் கதையில் உள்ள உண்மை சந்தேகத்திற்குரியது போல்த் தெரிகிறது? இவன் இலம்பகர்ண வம்சத்தைக் சேர்ந்தவன் என்றும் இலங்கையில் வட பகுதியில் இராணுவத் தளபதியாக இருந்த தனது மாமனாரின் கீழ் வேலை செய்து வந்தான் என்றும் கூறப்பட்டுள்ளது. சோதிடரின் கணிப்பின்படி அரசனின் ஆட்சிக்காலத்தை பன்னிரெண்டு வருடங்களில் இருந்து நாற்பத்து நான்கு வருடங்களாக நீட்டிக்கும் அல்லது வாழ்நாளை நீட்டிக்கும் தீர்க்கதரிசனங்களும் அதை ஒட்டிய செயல்களும் உண்மையான வரலாறு அல்ல. எனவே மன்னனைப் பற்றி மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ள கதைகள் கற்பனையானவை அல்லது அரசனே ஒரு கற்பனைக் கதாபாத்திரமாகக் கூட இருக்கலாம்? என்றாலும் மகாவம்சம் விவரிக்கும் இந்தக் கதைகளை தீபவம்சம் கொடுக்கவில்லை. எனவே மகாநாம தேரர் நிச்சயமாக ஒரு இலக்கியக் கலைஞர் அல்லது இன்றைய பேச்சுவழக்கில் ஒரு சொற்பொழிவாளர். வசபாவின் பெயரை வெஹெப் [Vehep] என்று இராசவலிய கூறுகிறது. வட்டகாமினி முதல் வசபா வரை பெரும்பாலும் தமிழ் மன்னர்கள் அல்லது அவர்களின் வம்சத்தில் வந்தவர்கள் என்று அறிய முடிகிறது. அனுராதபுரத்தில் 44 ஆண்டுகள் ஆட்சி செய்த எல்லாளனை அடைவதற்கு 31 மன்னர்களை வென்று அதன் பின் தான் 32 ஆவதாக எல்லாளனை, துட்ட கைமுனு வென்றதாக மகாவம்சம் விவரிக்கிறது. அது மட்டும் அல்ல அவன் தனது போரில் இலட்ச்சக் கணக்கானவர்களை கொன்றதாக கூறுகிறான். இந்த தரவை வைத்து பார்க்கும் பொழுது அனுராத புரத்தையும் அதை சுற்றியும் பெரும் அளவான தமிழ் கிராமங்களும் தமிழர்களும் வாழ்ந்தது அத்தாட்சி படுத்தப் படுகிறது. அவர்கள் சிவனை வழிபட்டார்கள் என்பதும் தெரிகிறது. கி மு 200 ஆண்டு அளவில் அல்லது அதற்குப் பின்பு, பாளி மொழி இறந்த மொழியாக மாறிக் கொண்டிருந்தது. எனவே இதற்கு பிரதி யீடாக ஹெள மொழி [Eḷu, also Hela or Helu, is a Middle Indo-Aryan language or Prakrit of the 3rd century BC] முக்கியத்துவம் பெற்றது. அதன் பின் கி பி ஆறாம் நூற்றாண்டில் அல்லது அதற்குப் பின், பிராகிருதம், பாளி, தமிழ் போன்ற மொழிகளையும் உள்வாங்கி சிங்கள மொழியாக முதல் முதல் வளர்ச்சி அடைந்தது. ஆகவே அதற்கு முன்பு சிங்கள மொழி என்று ஒன்றும் இல்லை என்பதே உண்மை ஆகும். அது மட்டும் அல்ல, வரலாற்று ரீதியாக, அனுராத புரத்தில் தமிழர்கள் பெரும் அளவில் வாழ்ந்தார்கள் என்பதை உறுதிப்படுத்துவதாக, அதன் தொடர்ச்சியை. பதினேழாம் நூற்றாண்டின் இறுதி பகுதியிலும் வர்த்தகரான ரொபெர்ட் நொக்ஸ் [Robert Knox ] என்ற ஆங்கிலேயனின் "Historical Relation of Ceylon" என்ற அவரின் நூலிலும் காண்கிறோம். Part: 25 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Are the kings earlier to Elara, including Elara, fictional characters? Next to Candamukha Siva, Yasalala Tissa reigned for eight years and seven months as per the Dipavamsa and seven years and eight months as per the Mahavamsa; the numbers of years and months are interchanged. The Mahavamsa says that Tissa killed his brother Candamukha Siva in a festival sport. He is also the brother, as per the Mahavamsa, of Candamukha Siva, a Tamil. Then Sabah (Subharajah in the Mahavamsa) ruled for six years. He was the son of a doorkeeper. A story around this doorkeeper in the Mahavamsa is a very common thread in the olden times about king and a servant of same resemblance. Subharajah built a Valli-vihara as per the Mahavamsa 35-58, and Valli is a very common Tamil female name. Then a king by the name Vasabha ruled for forty-four years. The Dipavamsa is silent on his lineage, but the Mahavamsa says that he came from the Northern Province and of Lambakanna clan. He could also be a Tamil as he is from the Northern Province. He took his uncle’s wife as his queen. His reign is the longest after Elara; both could be Tamils with the same length of reigns. The kings earlier to Elara, including Elara, are fictional characters, and the king Vasabha is the king with the longest reign so far. However, the bona fide of this king is also in doubt, as there is a prophecy in the Mahavamsa about him. There are acts to lengthen the king’s length of reign from twelve years to forty-four years in accordance with the soothsayer’s prediction. Prophecies and acts to lengthen the lifetime are not real history. Either the tales given in the Mahavamsa about the king are fictional or the king himself is a fictional character. The Dipavamsa does not give this tales, which the Mahavamsa narrates. Mahanama is certainly a literary artist or a wordsmith in the present day parlance. The Rajavaliya gives the name of Vasabha as Vehep. After Vattagamani to Vasabha are mostly Tamil kings. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 25 B தொடரும் / Will follow https://www.facebook.com/groups/978753388866632/posts/31192237513758155/?
1 week 3 days ago
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம் September 6, 2025 8:00 pm பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்பில் எடுத்துரைத்துள்ள வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அவற்றுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதிலும், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளின் ஊடாக நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதிலும் தாம் உறுதியாக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (2) கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளை சந்தித்த அமைச்சர் விஜித ஹேரத் மனித உரிமைகள்சார் விடயங்களில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள சமகால நகர்வுகள் குறித்தும், அவற்றில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் விளக்கமளித்தார். அதன்படி புதிய அரசாங்கம் என்ற ரீதியில் நாட்டின் மனித உரிமைகள் நிலவரத்தை மேம்படுத்தும் நோக்கில் மாறுபட்ட பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றின் மூலம் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றங்கள் அடையப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அவற்றுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதிலும், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளின் ஊடாக நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதிலும் தாம் உறுதியாக இருப்பதாகவும் அவர் எடுத்துரைத்தார். அதேபோன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை மறுசீரமைப்பதற்கான நகர்வுகள், ஊழல் ஒழிப்பு செயற்றிட்டம், கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டம், காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் என்பன உள்ளடங்கலாக உள்ளகக் கட்டமைப்புக்களின் சமகால முன்னேற்றங்கள், சுயாதீன வழக்குத்தொடுனர் அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான தீர்மானம் உள்ளிட்ட நகர்வுகள் பற்றியும் அமைச்சர் விஜித ஹேரத் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்தார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம்! https://oruvan.com/we-will-provide-solutions-to-the-problems-of-the-tamil-people-and-build-reconciliation/
1 week 3 days ago
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம்
September 6, 2025 8:00 pm

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்பில் எடுத்துரைத்துள்ள வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அவற்றுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதிலும், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளின் ஊடாக நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதிலும் தாம் உறுதியாக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (2) கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளை சந்தித்த அமைச்சர் விஜித ஹேரத் மனித உரிமைகள்சார் விடயங்களில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள சமகால நகர்வுகள் குறித்தும், அவற்றில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.
அதன்படி புதிய அரசாங்கம் என்ற ரீதியில் நாட்டின் மனித உரிமைகள் நிலவரத்தை மேம்படுத்தும் நோக்கில் மாறுபட்ட பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றின் மூலம் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றங்கள் அடையப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அவற்றுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதிலும், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளின் ஊடாக நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதிலும் தாம் உறுதியாக இருப்பதாகவும் அவர் எடுத்துரைத்தார்.
அதேபோன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை மறுசீரமைப்பதற்கான நகர்வுகள், ஊழல் ஒழிப்பு செயற்றிட்டம், கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டம், காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் என்பன உள்ளடங்கலாக உள்ளகக் கட்டமைப்புக்களின் சமகால முன்னேற்றங்கள், சுயாதீன வழக்குத்தொடுனர் அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான தீர்மானம் உள்ளிட்ட நகர்வுகள் பற்றியும் அமைச்சர் விஜித ஹேரத் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்தார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம்!
https://oruvan.com/we-will-provide-solutions-to-the-problems-of-the-tamil-people-and-build-reconciliation/
1 week 3 days ago
மன்னாரில் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் சகோதரர்கள் இருவருக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை 06 Sep, 2025 | 05:19 PM மன்னாரில் 16 வயதுக்கு குறைந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி கடந்த வியாழக்கிழமை (04) தீர்ப்பளித்தார். குற்றத்தின் பாரதூர தன்மை, பாதிக்கப்பட சிறுமியின் நிலை, மேலும் இவ்வாறான குற்றங்கள் இடம் பெறாமல் இருக்க வேண்டும் என்ற தன் அடிப்படையில் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 7 வருட கடூழிய சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக தண்டப்பணமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் நஷ்ட ஈட்டு தொகையும் வழங்க தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் சகோதரர் குறித்த வயது குறைந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய உதவி புரிந்தமைக்காக இரண்டாம் எதிரிக்கு அதே தண்டனை அதாவது 7 ஆண்டு கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வழக்கு தொடுனர் தரப்பில் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன் மற்றும் சிவஸ்கந்தஶ்ரீ ஆகியோர் வழக்கை நெறிப்படுத்தி இருந்தனர். வழக்கு தொடுநர் தரப்பில் வழக்கு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிகளுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/224391
1 week 3 days ago
மன்னாரில் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் சகோதரர்கள் இருவருக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை
06 Sep, 2025 | 05:19 PM

மன்னாரில் 16 வயதுக்கு குறைந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி கடந்த வியாழக்கிழமை (04) தீர்ப்பளித்தார்.
குற்றத்தின் பாரதூர தன்மை, பாதிக்கப்பட சிறுமியின் நிலை, மேலும் இவ்வாறான குற்றங்கள் இடம் பெறாமல் இருக்க வேண்டும் என்ற தன் அடிப்படையில் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
7 வருட கடூழிய சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக தண்டப்பணமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் நஷ்ட ஈட்டு தொகையும் வழங்க தீர்ப்பளிக்கப்பட்டது.
இதில் சகோதரர் குறித்த வயது குறைந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய உதவி புரிந்தமைக்காக இரண்டாம் எதிரிக்கு அதே தண்டனை அதாவது 7 ஆண்டு கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வழக்கு தொடுனர் தரப்பில் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன் மற்றும் சிவஸ்கந்தஶ்ரீ ஆகியோர் வழக்கை நெறிப்படுத்தி இருந்தனர்.
வழக்கு தொடுநர் தரப்பில் வழக்கு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிகளுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
https://www.virakesari.lk/article/224391
1 week 3 days ago
ஜெனீவா மனித உரிமைகள் அறிக்கைக்கு இலங்கையின் பதில்! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் இலங்கைக்கு எதிராக வெளியிடப்பட்ட 57 இன் கீழ் 1 தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் இலங்கை தொடர்பாக மனித உரிமை பேரவையின் ஆணையளரினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த மனித உரிமை பேரவையின் ஆணையாளரின் அறிக்கைக்கு, ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் பதிலளித்துள்ளது. குறிப்பாக மனித உரிமைகள் பேரவையின் 57 இன் கீழ் 1 தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இந்த தீர்மானத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை இலங்கை தொடர்ந்து எதிர்ப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது. மனித உரிமைகள் பேரவையின் 57 இன் கீழ் 1 தீர்மானம், வெளிப்புறத் திட்டங்கள், குறிப்பாக உள்நாட்டு நல்லிணக்க முயற்சிகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. மனித உரிமை பேரவையின் ஆணையாளர் அலுவலகத்துடனும், அதன் நிரந்தர மனித உரிமைகள் பொறிமுறைகளுடனும் இலங்கை நெருக்கமான ஒத்துழைப்பைப் பேணி வருவதாகவும் ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. எனவே இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் இறுதி அறிக்கை துல்லியமாகவும், சமநிலையுடனும், நிலைமையைப் பிரதிபலிக்கும் வகையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் மனித உரிமைகள் நிலைமையை மேம்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து, ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் விவரித்துள்ளது. https://athavannews.com/2025/1446291
1 week 3 days ago

ஜெனீவா மனித உரிமைகள் அறிக்கைக்கு இலங்கையின் பதில்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் இலங்கைக்கு எதிராக வெளியிடப்பட்ட 57 இன் கீழ் 1 தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் இலங்கை தொடர்பாக மனித உரிமை பேரவையின் ஆணையளரினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனித உரிமை பேரவையின் ஆணையாளரின் அறிக்கைக்கு, ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் பதிலளித்துள்ளது.
குறிப்பாக மனித உரிமைகள் பேரவையின் 57 இன் கீழ் 1 தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், இந்த தீர்மானத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை இலங்கை தொடர்ந்து எதிர்ப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் 57 இன் கீழ் 1 தீர்மானம், வெளிப்புறத் திட்டங்கள், குறிப்பாக உள்நாட்டு நல்லிணக்க முயற்சிகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மனித உரிமை பேரவையின் ஆணையாளர் அலுவலகத்துடனும், அதன் நிரந்தர மனித உரிமைகள் பொறிமுறைகளுடனும் இலங்கை நெருக்கமான ஒத்துழைப்பைப்
பேணி வருவதாகவும் ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
எனவே இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் இறுதி அறிக்கை துல்லியமாகவும், சமநிலையுடனும், நிலைமையைப் பிரதிபலிக்கும் வகையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் மனித உரிமைகள் நிலைமையை மேம்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து, ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் விவரித்துள்ளது.
https://athavannews.com/2025/1446291