Aggregator
எல்லை நிர்ணயத்தை காரணம் காட்டி மாகாண சபைத்தேர்தலை இழுத்தடிக்கக் கூடாது; சுரேஸ் வலியுறுத்து
எல்லை நிர்ணயத்தை காரணம் காட்டி மாகாண சபைத்தேர்தலை இழுத்தடிக்கக் கூடாது; சுரேஸ் வலியுறுத்து

மாகாணத்தின் அதிகாரங்கள் பயன்படுத்தபடப் வேண்டும் என்றால் மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும். எல்லை நிர்ணய விடயத்தினைக் காண்பித்து இழுத்தடிப்பு செய்யக்கூடாதென ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகபேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரச தரப்பால் மாறுபட்ட கருத்துகள் தெரிவிக்கப்பட்டுவருவது தொடர்பில் வினவியபோதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாகாண சபைத்தேர்தல் தொடர்பாக அரசாங்கம் மாறுபட்ட கருத்துக்களை கூறிவருகின்றது. மாகாணசபைத்தேர்தல் அடுத்தவருடம் வைக்கவுள்ளதாக ஒருபக்கம் கூறுகிறது. மறுபக்கத்தில் எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கை இறுதியாக்கப்பட்டு புதிய முறையில் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக கூறுகின்றது.
பாராளுமன்றில் எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது தற்போதைய ஆட்சியாளர்களும் சேர்ந்து தான் அன்று எதிர்த்தார்கள். தற்போது தேர்தலை வைப்பதாயின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முன்வைத்துள்ள தனிநபர் பிரேரணையை நிறைவேற்றுவதன் ஊடாக பழைய முறையில் தேர்தலை நடத்தலாம்.
ஆனால் ஆட்சியில் உள்ள அரசாங்கம் அதனை நிறைவேற்றுவதற்கு தயாராக இல்லை. அடுத்த வருடம் தேர்தலை வைப்பதாக இருந்தால், பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கான பாராளுமன்ற அனுமதி தேவையாக உள்ளது.
அவ்வாறு இல்லாமல் எல்லைகளை மீள்நிர்ணயம் செய்யவேண்டுமென்றால் அதற்கு பல வருடங்களாகும். ஆகவே தேர்தலுக்கு உடனடியான சத்தியமில்லை. அந்த வகையில் அரசாங்கம் உண்மையாக என்ன செய்ய போகிறது என்பதை கூறவேண்டும்.
கடந்த காலத்தில் எல்லைகளை நிர்ணயம் செய்யவதற்கு முற்பட்டபோதுதான் தென் பகுதியில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாது போகிறது, மலையகத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாது போகிறது என்ற பிரச்சினை தோற்றம்பெற்றது.
ஆகவே எல்லைகளை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு காலஅவகாசம் வேண்டும். அதற்கு ஒருவருடம் போதாது. எனவே அரசாங்கம் உண்மையாகவே தேர்தலை வைக்கப்போகின்றார்களா என்பது பெரும் கேள்வியாகவுள்ளது.
ஐனாதிபதி அநுர மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. அவர் மௌனமாக இருக்கிறார். அமைச்சர்கள் தான் மாறிமாறி பலவிதமாக கருத்துகளை கூறிவருகிறார்கள்.
ஆனால் பொதுமக்களும், எதிர்க்கட்சியினரும் அடுத்தவருடம் தேர்தல் நடைபெறுமென எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்தவருடம் என்றால் எந்த மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்பதே கேள்வியகவுள்ளது.
ஆகவே அரசாங்கம் தேர்தல் சட்ட திருத்தத்தை கொண்டு வந்தால் தான் தேர்தல்கள் ஆணையாளர் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பதை தெளிவாக அறிவிப்பார்.
தற்போது, இப்போது மாகாணங்கள் ஆளுநர்களின் கைகளில் உள்ளன. ஆளுநர்கள் ஐனாதிபதி, அரசாங்கம் சொல்வதை செய்து கொண்டு இருக்கிறார்கள் அவர்கள் அதனைத்தான் செய்ய முடியும் இதனை விட வேறு எதனையும் செய்ய முடியாது.
எனவே மாகாண சபையில் மக்கள் ஆட்சி தேவை என்பதை தமிழ் மக்கள் கிளர்தேழுந்து அரசாங்கத்திற்கு அழத்தமாக கூறவேண்டும். அவ்வாறான முயற்சி செய்யாவிட்டால் அரசு மாகாண சபை தேவையில்லை என்பதை கூற முன்வந்துவிடும்.
கிடைத்த அதிகாரம் மக்களால் பயன்படுத்தப்பட வேண்டும் எனவே தேர்தல் நடாத்தப்படவேண்டும். அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பார்த்தால் தேர்தலை வைக்காது இழுதடிக்கின்ற செயற்பாட்டை செய்து வருகின்ற என்றார்.
இரசித்த.... புகைப்படங்கள்.
இனித்திடும் இனிய தமிழே....!
பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுவதில் தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை காரணிகள் — வீரகத்தி தனபாலசிங்கம் —
யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து
ஈழப்போர் காலத்தில் மறக்கமுடியாத அக்டோபர் மாதம்..! : பா. அரியநேத்திரன்
ஈழப்போர் காலத்தில் மறக்கமுடியாத அக்டோபர் மாதம்..! : பா. அரியநேத்திரன்
ஈழப்போர் காலத்தில் மறக்கமுடியாத அக்டோபர் மாதம்..! : பா. அரியநேத்திரன்
October 27, 2025
ஈழவிடுதலைப்போராட்ட காலத்தில் அக்டோ பர் மாதம் யாழில் வெவ்வேறு ஆண்டுகளில் மூன்று சம்பவங்கள் என்றுமே மறக்கமுடியாத வரலாற்றில் இடம்பெற்றுள்ளன.
1. 1987 அக்டோபர் 21ல், யாழ்போதனாவைத் தியசாலை நோயாளர்கள்மீது இந்திய கொலைப்படை நடத்திய படுகொலைத் தாக் குதலில் 70 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்.
2. 1990 அக்டோபர் 30ல் விடுதலைப் புலிக ளால் யாழ் முஸ்லீம்மக்களை வெளியேறு மாறு கூறியதால் வெளியேற்றப்பட்ட சம்ப வம்.
3. 1995 அக்டோபர் 30ல் இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் ஏற்பட்ட ஆயுத மோதலால் ஐந்து இலட்சம் மக்கள் யாழ் குடாநாட்டை விட்டு வெளியேறிய மறக்க முடியாத சம்பவம்.
இந்த மூன்று சம்பவங்களும் அக்டோபர் மாதத்தில் இடம்பெற்றவை. யாழ்ப்பாண நகரம் 1980, தொடக்கம் 1995 வரை 15, ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன்மையான கோட்டையாக இரு ந்து வந்தது. ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்தன ஆட்சிக்காலத்தில் 1987 யூலை29, இலங்கை ஒப் பந்தம், 1987ஆகஷ்ட் 04ல் தலைவர் பிரபாகரனின் சுதுமலை பிரகடனம் எல்லாம் இடம்பெற்றது. 1987 அக்டோபர் 10ல் இந்தியப்படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் போர் ஆரம்பித்த பின்னர் சரியாக 11, தினங்களால் 1987 அக்டோபர் 21ல் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பொதுமக்கள் மீது இந்திய இராணுவம் மேற்கொண்ட மிலேச்சத்தன மான படுகொலையால் 70 தமிழர்கள் கொன்றழி க்கப்பட்டு 2025-10-21ம் திகதியுடன் 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
1990, செப்டம்பரில் ஜனாதிபதி பிரேமதாஸ ஆட்சிக்காலத்தில் கிழக்கு மாகாணம் அம் பாறை மாவட்டம் திருக்கோயில் தொடங்கி மட்டக் களப்பு மாவட்டம் கதிரவெளிவரையும் முஸ்லீம் ஊர்காவல்படையினர் இலங்கை இராணு வத்துடன் இணைந்து பல தமிழ் கிராமங்களில் இனப்படுகொலைகளை மேற்கொண்டனர் அத னால் முஸ்லீம் கிராமங்களான காத்தான்குடி, ஏறா வூர் பகுதிகளிலும் முஸ்லீம்மக்கள் கொல்லப்பட்டனர்.
இவ்வாறான சம்பவம் யாழ்ப்பாணம் முஸ்லீம்மக்களுக்கு ஏற்படக்கூடாது என்ற ஒரே காரணத்தால் விடுதலைப்புலிகள் 1990, அக்டோபர், 30ல் யாழ்ப்பாண முஸ்லீம்மக்கள் பாதுகாப்பாக ஒரே நாளில் வெளியேறிய சம்பவம் வருகின்ற 2025-10-30 ம் திகதியுடன் 35ஆவது ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது.
1995 ஜனாதிபதி சந்திரிகா ஆட்சிக்காலத்தில் அக்டோபர் 17 இல், இலங்கை இராணுவத்தி னர் 10,000 பேர் யாழ்ப்பாண நகரத்திற்கு 25 மைல் தொலைவில் போரை தொடரத் துவங்கினர்.
அது தொடர்ந்ததமையால் யாழ் குடா நாட்டில் இருந்து ஐந்து இலட்சம் தமிழ் மக்கள் 1995, அக்டோபர் 30ல் இடம்பெயர்ந்தனர். அது இடம்பெற்று 2025, அக்டோபர் 30ல் 30ம் ஆண்டு நினைவாகும்.இந்தத் தாக்குதல் 1995, திசம்பர் 05, வரை நீடித்தது. இந்த 50 நாள் போரில் 300 வரையிலான இலங்கை இராணுவ வீரர்களும், 550இற்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டதாக அப் போது கூறப்பட்டது.
இறுதியில் இராணுவம் புலிகளிடமிருந்து நகரத்தையும் குடாநாட்டையும் கைப்பற்றியது. இதனால் விடுதலைப்புலிகள் வன்னியில் சென்று தமது படைத்தளத்தை முழு மையாக பலப்படுத்தினர்.
1995 அக்டோபரில் யுத்த முனையில் இராணுவத்தினரின் கைகள் ஓங்கியிருப்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் விடுதலைப்புலிக ளின் இராணுவ நகர்வுகள் பற்றி யாருக்கும் எதிர்வு கூற முடியாத நிலையில் எந்த ஒரு யாழ்ப்பாண குடிமகனும் தானும் உறவும் ஒட்டுமொத்தமாய் இந்த நிலத்தை விட்டுப் பிரிவோம் என்று அப் போது நினைத்திருக்க வில்லை.
இலங்கைப் படையினரின் ‘ஒப்பரேசன் ரிவிரச’ இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெற்றது. இச்சண்டையைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணு வத்திற்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. இதன் விளைவாக, வலிகாமம் பகுதி முழுமை யாகப் படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தின் மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்தனர்.
யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பகுதி முழு வதும் படையினரால் கைப்பற்றப்பட்டு, மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்தனர்.
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நோக் கோடு 1995 அக்டோபர் 17ம் திகதி இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஒப்ப ரேசன் ரிவிரச, சூரியக்கதிர் என்னும் இராணுவ நடவடிக்கையை அடுத்து இலங்கை இராணுவத் திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலையடுத்தே இந்த இடப்பெயர்வு இடம்பெற்றது.
அந்த இராணுவ நடவடிக்கை கந்தசஷ்டி விரத காலம் ஆலயங்களில் எல்லாம் விசேட பூசை வழிபாடுகள் நடந்த வேளையில் பலாலி இராணுவ முகாமிலிருந்து யாழ்ப்பாணத்தினை கைப்பற்ற இராணுவத்தினர் தாக்குதலை நடாத்தி வருவதும், அன்றைக்கு சில நாட்கள் முன்பாக அந்த நடவடிக்கையை முறியடிக்க புலிகள் மேற்கொண்ட நடவடிக்கை வெற்றியைத் தராமல் போனதும் அப்போது பேசும் பொருளாக வடக்கு கிழக்கு முழுவதும் ஆச்சரியத்தை தந்திருந்தது.
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி பாரிய இன அழிப்பு நடவடிக்கையை இராணுவம் மேற்கொள்ள இருக்கின்றதனால் உடனடியாக பாதுகாப்பான பிரதேசங்களான தென்மராட்சி வடமராட்சி வன்னிப் பகுதிகளுக்கு மக்களை இடம்பெயருமாறு விடுதலைப்புலிகள் ஒலிபெரு க்கி மூலமாக அறிவிப்பு விடுத்தனர்.
யாழ்ப்பாண குடாநாட்டில் அப்போதிருந்த அண்ணளவான மக்கள் தொகை 5 லட்சம். யாழ் குடாநாட்டினை வடபகுதியின் மற்றைய பிரதேசங்களுடன் இணைத்திருந்த வெறும் இரண்டு வீதிகளினூடாக 5 லட்சம் மக்கள் ஓர் இரவு விடிவதற்குள் கடந்து செல்ல வேண்டும் என்பதனை கற்பனை செய்தும் பார்க்க முடியாது.
ஆனால் மக்களுக்கு அதற்கெல்லாம் நேரமிருக்க வில்லை. மூட்டை முடிச்சுக்களை கட்டி எல் லோரும் வீதிகளில் இறங்க இறுகிப்போனது வீதி.
அந்த இடப்பெயர்வு முடிந்து அடுத்த இரண்டு மாதங்கள் வரை யாழ்ப்பாணம் புலிக ளின் கைகளில் தான் மீண்டும் இருந்தது. இடப் பெயர்வின் பின்னர் ஒரு பத்து பதினைந்து நாட்கள் வரை இடம் பெயர்ந்தவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சென்று பொருட்கள் எடுத்துவர அனுமதிக்கப்பட்டிருந்தார்கள் விடுதலைப்புலிகள்.
மீண்டு இராணுவம் யாழில் விடுதலைப் புலிகளுடன் ஆங்காங்கே மோதல் சம்பவங்களில் ஈடுபட்டதால் விடுதலைப்புலிகள் யாழ் குடா நாட்டில் இருந்த படைமுகாங்களை வன்னிக்கு நகர்த்தினர்.
இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத் துக்கான யுத்தம் ஈழப்போரை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாகவும், புலிகளால் மீண்டும் ஒருபோதும் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய யுத்தங்களை மேற்கொள்ள முடியாது எனவும் இராணுவம் அறிவித்தது. கிளர்ச்சி முடிவுக்கு வந்த தாக மக்களாலும்நம்பப்பட்டது.
1995 திசம்பர் 23ல், மட்டக்களப்பு மாவட் டத்தில் இராணுவப் பிரிவு ஒன்றின் மீது விடு தலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் 33 படையினர் கொல்லப்பட்ட போது போர் முடிவு க்கு வரவில்லை என்பது உறுதியானது. அடுத்த ஏழு மாதங்களில் புலிகள் இயக்கத்தை மறுசீரமைத்து மீண்டும் ஒருங்கிணைத்தனர்.
யாழ்குடா நாட்டில் இருந்து வன்னி காட்டுக் குள் தமது படைகளை மீளவும் மறுசீரமைத்த விடுதலைப்புலிகள் தாம் யாழ் குடா நாட்டில் கற்றுக்கொண்ட பாடத்தை மீள் பரிசீலனை செய்து 1996 ஜனவரி 22ல் இலங்கை வான் படையினரின் M.J:17 உலங்குவானூர்தி பருத்தித்துறைக் கடலில் 39, படையினருடன் வீழ்ந்தசம்பவம், 1996, யூலை18ல், முல்லைத்தீவில் உள்ள படைத்தளத்தின் மீது ஓயாத அலைகள் நடவடிக்கை என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கினர். இந்த தாக்குதலில் 1,200க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் கொல் லப்பட்டதுடன் இராணுவ தளமும் அழிக்கப்பட் டது.
2000, மார்ச், 26ல் ஆனையிறவு இராணுவ முகாம் கைப்பற்றியது, இவ்வாறு இன்னும் பல வெற்றிகரமான தாக்குதல்கள் இடம்பெற்றன. ஒரு கரந்தடி தாக்குதல் அணியாக தோற்றம் பெற்ற விடுதலைப்புலிகள் மரபுப்படையணியாக வளர்ச்சிபெற்று 2009 மே 18, வரையும் போராடி மௌனித்தனர். இலங்கை இராணுவத்தால் அவர் களை தோற்கடிக்காதபோதுதான் உலகநாடுகள் 32க்கு மேல் இலங்கைக்கு உதவியதன் நிமிர்த்தம் இறுதியில் முள்ளிவாய்க்காலில் போர் மௌனித் தது என்பதே வரலாறு.
ஈழப்போர் வரலாற்றில் 1987, 1990, 1995, ஆகிய மூன்று வருடமும் அக்டோபர் மாதமும் மறக்க முடியாத மாதமாகும்..
யாழில் 11 பேரின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை…
யாழில் 11 பேரின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை…
யாழில் 11 பேரின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை…
October 27, 2025
யாழில் வாள்வெட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் என்பவற்றுடன் தொடர்புபட்டு, சட்டவிரோதமாகவும், முறைகேடாகவும் சொத்துச் சேர்த்த சந்தேகத்தில் இதுவரை 11 பேருக்கு எதிராக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக யாழ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.பி.எஸ்.ஜெயமஹா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான கருத்துகளை ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது, “போதைப்பொருள் கடத்தல், வன்முறைகள், வட்டிக்கு விடுதல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுச் சொத்துச் சேர்த்தவர்களுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் அண்மைக்காலமாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
அவ் வகையில் யாழ் மாவட்டத்தில் இதுவரை 11 பேர் இந்த விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர் எனவும் கூறினார்.
மேலும் இச் சந்தேகநபர்களுக்குச் சொந்தமான சொகுசுக் கார்கள், ஆடம்பர விடுதிகள், இறால் பண்ணைகள், உள்ளூரிலும் வெளிமாவட்டங்களிலும் காணப்படும் பல்பொருள் அடங்காடிகள் என்பன தொடர்பிலும், அந்தச் சொத்துக்கள் தொடர்பிலான முழுமையான விபரங்கள் தொடர்பிலும் புலன் விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.
அவை சட்டவிரோதமாகப் பெறப்பட்டவை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் அந்தச் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
https://www.ilakku.org/action-to-freeze-the-assets-of-11-people-in-jaffna-2/
சீன கம்யூனிஸ்ட் கட்சி – ஜேவிபி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து, அமைச்சர் பிமல் தகவல்
சீன கம்யூனிஸ்ட் கட்சி – ஜேவிபி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து, அமைச்சர் பிமல் தகவல்
சீன கம்யூனிஸ்ட் கட்சி – ஜேவிபி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து, அமைச்சர் பிமல் தகவல்

அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், சீனாவுடன் அரசியல் உறவை மிக ஆழமாகவும் சோசலிச கொள்கைக்கு ஏற்ப மேம்படுத்தவும் எடுத்துள்ள செயற்பாடுகளின் ஒரு பகுதியாக, ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் பிரதான அங்கமான ஜேவிபி, சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் (CPC) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளது.
ஜேபிவியின் தேசிய சபை உறுப்பினரான, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் உரையாடினார்.
குறிப்பாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத் துறைத் தலைவர் லியு ஹைக்சிங் (Liu Haixing) உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமைச்சர் ரத்நாயக்க தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
சீனாவை மீண்டும் கட்டியெழுப்ப, ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவது, மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது, முற்போக்கான சீர்திருத்தங்கள் மூலம் வளர்ச்சியை உந்துதல், வலுவான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துதல் மற்றும் கட்சி ஒழுக்கத்தை பேணுதல் ஆகியவற்றில் CPC இன் அர்ப்பணிப்பு குறித்து சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் விரிவாக பேசியுள்ளதாக அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக நலன் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சீன கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது எனவும் தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில் கட்சியின் சர்வதேசத் துறையின் தலைவராக இருந்த 61 வயதான லியு ஜியான்சாவோவுக்குப் பதிலாக, லியு புதிய பதவியில் பொறுப்பேற்றார். லியு ஹைக்சிங் முன்னர் தேசிய பாதுகாப்பை மேற்பார்வையிடும் சக்திவாய்ந்த கட்சியின் மூத்த செயற்பாட்டாளராக பணியாற்றினார். அவர் 1980 களில் பாரிஸில் படித்தார். அவர் ஐரோப்பிய விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர்.
ஐக்கிய தேசியக் கட்சி,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இலங்கையின் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளுடனும் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறவை பேணுகிறது.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்த வருட ஆரம்பத்தில் பீஜிங்கிற்கு பயணம் செய்தார். பிமல் ரத்நாயக்கவின் பயணத்தில், அப்போது கலந்துரையாடப்பட்ட பகுதிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. பிமல் ரத்நாயக்காவுக்கு முன்னதாக, ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா சீனாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
https://oruvan.com/communist-party-of-china-jvp-memorandum-of-understanding/
யாழ்.பல்கலை ஊழியர் பிரச்சினை நேரடித் தலையீட்டில் தீர்க்கப்படும்! - துணைவேந்தர் உறுதியளிப்பு
யாழ்.பல்கலை ஊழியர் பிரச்சினை நேரடித் தலையீட்டில் தீர்க்கப்படும்! - துணைவேந்தர் உறுதியளிப்பு
யாழ்.பல்கலை ஊழியர் பிரச்சினை நேரடித் தலையீட்டில் தீர்க்கப்படும்!

துணைவேந்தர் உறுதியளிப்பு
யாழ். பல்கலைக்கழகப் போதனைசாரா ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிறப்புக் கவனம்செலுத்தி, தாமே நேரடியாகக் கையாண்டு, ஓரிரு வாரங்களுக்குள் தீர்வுகளை வழங்குவதாக துணைவேந்தர் உறுதியளித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் போதனைசாரா ஊழியர்கள், துணைவேந்தரை அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர்
இதனைத் தெரிவித்தார்.
கலந்துரையாடலில் ஊழியர்கள், தரப்பில் முன்வைக்கப்பட்ட நியாயங்களையும் பிரச்சினைகளையும் துணைவேந்தர் ஏற்றுக்கொண்டதுடன், பல்கலைக்கழக நிர்வாகத்தினால் வெளியிடப்பட்ட பத்திரிகைச் செய்தி உட்பட சில விடயங்கள் தனக்கு தெரியாதவை எனவும் உண்மை நிலைமையை அறிய எடுத்த முயற்சிகள் பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தார்.
https://newuthayan.com/article/யாழ்.பல்கலை_ஊழியர்_பிரச்சினை_நேரடித்_தலையீட்டில்_தீர்க்கப்படும்!
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்களை தாக்கிய சவுதி பயணி கைது!
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்களை தாக்கிய சவுதி பயணி கைது!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்களை தாக்கிய சவுதி பயணி கைது!
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இரண்டு பெண் விமானப் பணிப்பெண்களைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் சவுதி அரேபிய நாட்டவர் ஒருவர் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர் ரியாத்தில் இருந்து கொழும்புக்குச் செல்லும் போது விமானப் பணிப்பெண்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
சந்தேக நபர் 28 வயதான சவுதி நாட்டவர், அவர் மலேசியாவிற்கு தனது பயணத்தைத் தொடர திட்டமிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.
விமானம் தரையிறங்கத் தயாராகும் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்த நேரத்தில், அனைத்து பயணிகளும் சீட் பெல்ட்களை கட்டிக்கொண்டு இருக்க வேண்டும். இருப்பினும், சந்தேக நபர் இந்த விதிமுறையை மீறி கழிப்பறைக்குள் செல்ல முயன்றார், இது வாக்குவாதத்திற்கு வழிவகுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரும் சுற்றுலா பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர் இன்று (27) கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.