Aggregator

தும்பிக்கைக்குள் தவறுதலாக குத்திக்கொண்ட தந்தம் : இறக்கும் நிலைக்கு சென்ற யானை!

1 week ago
இறக்கும் நிலைக்கு சென்ற யானை : காப்பாற்றிய அறக்கட்டளையினர்! 18 Dec, 2025 | 09:58 AM கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கென்யா நாட்டின் சாவோ தேசிய பூங்காவில், ஆண் யானை ஒன்று தனது தந்தத்தை தும்பிக்கையால் வருடிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக தந்தம் தும்பிக்கைக்குள் குத்திக் கொண்டது. இதனால் அந்த யானை, சுமார் மூன்று நாட்களாக அதே நிலையில் சிக்கி, இரை எடுக்கவும், நீர் அருந்தவும், முறையாக சுவாசிக்கவும் முடியாத நிலையில் இருந்தது. பசி மற்றும் தாகம் காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையிலும் யானை இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையை அவதானித்த ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளை குழுவினர், கென்யா வனவிலங்கு சேவையுடன் இணைந்து மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர். அதன்படி, யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்ட பின்னர், தந்தத்தில் சிக்கியிருந்த தும்பிக்கை கவனமாக அகற்றப்பட்டது. மேலும், தும்பிக்கையில் ஏற்பட்டிருந்த காயங்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், யானையின் உயிர் வெற்றிகரமாக காப்பாற்றப்பட்டதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/233693

பசிபிக் கடலில் படகுகள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் - 8 பேர் பலி

1 week ago
பசிபிக் கடலில் படகுகள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் - 8 பேர் பலி 17 Dec, 2025 | 01:48 PM பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டுப் படகுகள் மீது அமெரிக்க இராணுவம் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச கடல் பகுதியில் பயணித்த மூன்று படகுகளை இலக்கு வைத்து அமெரிக்க இராணுவம் நேற்று (16) இந்தத் தாக்குதலை நடத்தியது. இந்தப் படகுகள் பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தல் பாதையில் சென்றதாகவும், கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருந்ததாகவும் உளவுத்துறை உறுதிப்படுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என இராணுவம் தெரிவித்துள்ளது. சமீபகாலமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக கடுமை காட்டி வரும் நிலையில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட படகுகள் இதேபோல் தாக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை போதைப்பொருள் படகுகள் இல்லை என்றும் இந்தத் தாக்குதல்கள் சட்டத்திற்குப் புறம்பானவை என்றும் விமர்சனம் எழுந்தது. ஆனால், சர்வதேச சட்டங்களின்படியே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக பென்டகன் விளக்கம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/233627

பசிபிக் கடலில் படகுகள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் - 8 பேர் பலி

1 week ago

பசிபிக் கடலில் படகுகள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் - 8 பேர் பலி

17 Dec, 2025 | 01:48 PM

image

பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டுப் படகுகள் மீது அமெரிக்க இராணுவம் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதேச கடல் பகுதியில் பயணித்த மூன்று படகுகளை இலக்கு வைத்து அமெரிக்க இராணுவம் நேற்று (16) இந்தத் தாக்குதலை நடத்தியது.

இந்தப் படகுகள் பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தல் பாதையில் சென்றதாகவும், கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருந்ததாகவும் உளவுத்துறை உறுதிப்படுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என இராணுவம் தெரிவித்துள்ளது.

சமீபகாலமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக கடுமை காட்டி வரும் நிலையில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட படகுகள் இதேபோல் தாக்கப்பட்டுள்ளன.

ஆனால் அவை போதைப்பொருள் படகுகள் இல்லை என்றும் இந்தத் தாக்குதல்கள் சட்டத்திற்குப் புறம்பானவை என்றும் விமர்சனம் எழுந்தது.

ஆனால், சர்வதேச சட்டங்களின்படியே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக பென்டகன் விளக்கம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/233627

19இன் கீழ் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர்

1 week ago
19இன் கீழ் ஆசிய கிண்ணம்: ஆப்கானிஸ்தானுக்கு ஆறுதல் வெற்றி 17 Dec, 2025 | 06:02 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் ஆறுதல் வெற்றி ஒன்றை பெற்றுக்கொண்டது. 19 வயதுக்குட்பட்ட நேபாள அணிக்கு எதிராக துபாய், தி செவன்ஸ் மைதானத்தில் புதன்கிழமை (17) நடைபெற்ற பி குழு போட்டியில் 6 விக்கெட்களால் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றது. பங்களாதேஷ், இலங்கை அணிகளிடம் தோல்வி அடைந்த ஆப்கானிஸ்தான் இன்றைய ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்பவுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட நேபாள அணி 46.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 124 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. துடுப்பாட்டத்தில் தில்சாத் அலி 32 ஓட்டங்களையும் சாந்தன் ராம் 27 ஓட்டங்களையும் அபிஷேக் திவாரி 20 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஸய்துல்லா ஷஹீன் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அப்துல் அஸிஸ் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நூரிஸ்தானி ஓமர்ஸாய் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வாஹிதுல்லா ஸத்ரான் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட ஆப்கானிஸ்தான் அணி 26.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. உஸைருல்லா நியாஸாய் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 61 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை இலகுவாக்கினார். ஒஸ்மான் சதாத் 28 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் அபிஷேக் திவாரி 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். https://www.virakesari.lk/article/233682

டித்வா சூறாவளி சவால்களைத் தோற்கடித்து இலங்கை விரைவில் மீண்டெழும் – சீன தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர்

1 week ago
பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படச் சீனா தயார் - பிரதமர் ஹரிணியிடம் சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் நிரந்தரக் குழுவின் உப தலைவர் உறுதி 17 Dec, 2025 | 06:06 PM சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் (NPC) நிரந்தரக் குழுவின் உப தலைவர் வெங் டொங்மின் (Wang Dongming) மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கிடையில் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு புதன்கிழமை (17) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்டகால இருதரப்பு உறவுகள் மற்றும் எதிர்காலத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டிய துறைகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இலங்கை அண்மையில் எதிர்கொண்ட இயற்கை அனர்த்தத்தின் போது சீன அரசாங்கம் வழங்கிய துரித உதவிகளுக்காகப் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்ததோடு, அனர்த்தத்தின் பின்னர் இலங்கை தற்போது இயல்பு நிலைக்குத் திரும்புதல் மற்றும் மீளக்கட்டியெழுப்பும் கட்டத்திற்குள் பிரவேசித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்ட வெங் டொங்மின், எதிர்வரும் மறுசீரமைப்புப் பணிகளுக்கும் சீனாவின் முழுமையான ஆதரவு வழங்கப்படும் என உறுதியளித்தார். பிரதமரின் அண்மைய சீன விஜயத்தின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் இச்சந்திப்பின்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, பாடசாலை சீருடை, உர மானியம், டிஜிட்டல் கல்விச் செயற்பாடுகளுக்கான தொழில்நுட்ப உதவி, வீதி அபிவிருத்தி, சுகாதாரம் மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் அத்துறைகளில் நட்புறவை மேலும் பலப்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது. பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படச் சீனா தயாராக இருப்பதாகத் தெரிவித்த வெங், இந்நாட்டின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காகத் தொடர்ச்சியாகப் பங்களிப்பு செய்வதாக உறுதி அளித்தார். பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வின் அடிப்படையில் இந்த உறவை மேலும் பலப்படுத்துவதற்கு இரு தரப்பினரும் இதன்போது இணக்கம் தெரிவித்தனர். இந்நிகழ்வில் சீனத் தூதுவர் ஷி ஷென்ஹொங் (Qi Zhenhong), பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் பிரதமர் அலுவலகத்தினதும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினதும் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/233681

நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை

1 week ago
"Rebuilding Sri Lanka" நிதியத்திற்கு Indra Traders 100 மில்லியன் ரூபா நன்கொடை Dec 17, 2025 - 10:33 PM டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, அரசாங்கத்தின் "Rebuilding Sri Lanka" நிதியத்திற்கு Indra Traders (Pvt) Ltd 100 மில்லியன் ரூபா நிதி நன்கொடையை வழங்கியுள்ளது. இதற்கான காசோலையை Indra Traders (Pvt) Ltd ஸ்தாபகர்/தலைவர் இந்திரா சில்வா, இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார். Indra Traders (Pvt) Ltd பணிப்பாளர் சபை உறுப்பினர்களான ருஷங்க சில்வா, ஹசீந்திர சில்வா மற்றும் பொது முகாமையாளர் சசினி சில்வா ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். https://adaderanatamil.lk/news/cmja9fldh02upo29nqp2497pl

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

1 week 1 day ago
இரன்டாம் உலக யுத்தத்தின் பின்னர் உலக முன்னேற்றம், அமைதி நோக்கி நல்ல முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன, இன்று மீண்டும் அதே நிலையில் உலகு வந்து நிற்கிறது. இந்த பிரச்சினைகளுக்கு பெரும்பாலும் அடிப்படையாக இருப்பது சுயநலம் கொண்ட முதலாளிகள்தான் (பல தடவை அதனை விரிவாக பேசிய விடயம் என்பதால் மீண்டும் இங்கு பதிவதனை தவிர்க்கிறேன்), ஆனால் அதன் உண்மை நிலை உணரும் நிலையில் சாதாரண மக்கள் இல்லை. இரஸ்சியா மட்டுமல்ல எந்த நாடாக இருந்தாலும் அந்த நாட்டின் வளங்கள் மீது அந்த நாட்டு மக்களுக்கு உரிமை இல்லாத நிலை காணப்படுகிறது, 1972 அவுஸ்ரேலியாவில் விட்லம், ஆட்சிகவிழ்ப்பின் பின்னணியில் நேட்டோ நாட்டு அங்கத்துவம் வகிக்கும் இரண்டு பெரிய நாடுகளின் உளவு அமைப்பினை குற்றம் சாட்டுகிறார்கள், பின்னர் 2008 கெவிட் ராட் 40% சுரங்க வரி விதிக்க போவதாக மட்டுமே கூறியிருந்தார் அவரது ஆட்சியும் கவிழ்க்கப்பட்டது. ஒரு இறைமையுள்ள நாட்டின் மீதான ஆக்கிரமிப்பாக இதனை கருதலாம்.

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

1 week 1 day ago
இரஸ்சிய ஆக்கிரமிப்பினை பலர் ஏற்றுக்கொள்ளும் நிலை உள்ளது, ஆனால் இதனை அமெரிக்க ஆக்கிரமிப்பின் தொடர்ச்சியாகவே இது இருகின்றது என நியாயப்படுத்தும் நிலை உள்ளது, மறுவளமாக அமெரிக்க ஆக்கிரமிப்பினை ஒரு ஆக்கிரமிப்பாகவே பார்க்கும் நிலை இல்லாமல் இருக்கின்றது அதற்கு காரணமாக கூறப்படும் இந்த rule based world order மாறினால் ஒரு பலமான ஐ நா போன்ற அமைப்பு அல்லது உலக ஒப்பந்தம் மூலம் இதற்கு முடிவு எட்டலாம். ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய ஐரோப்பாவினை பார்த்து அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் பயந்துவிட்டார்கள் என நினைக்கிறேன்.🤣

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

1 week 1 day ago
உக்ரைனில் மக்கள்தொகை நெருக்கடி: அளவு, காரணங்கள் மற்றும் முன்னறிவிப்புகள். 06.12.2025 பகிர்: பொருளடக்கம்: 1. உக்ரைனின் மக்கள் தொகை: மெதுவான சரிவிலிருந்து கூர்மையான வீழ்ச்சி வரை 2. மக்கள்தொகை குறைப்புக்கான மூன்று முக்கிய காரணிகள் 3. மக்கள்தொகை முதுமை: ஒரு நேர வெடிகுண்டு 4. நிலைமையை என்ன மாற்ற முடியும்? 5. அடுத்து என்ன நடக்கும்: மூன்று காட்சிகள் 6. முடிவுரை உக்ரைன் அதன் நவீன வரலாற்றில் மிக முக்கியமான மக்கள்தொகை நெருக்கடியை சந்தித்து வருகிறது. பல ஆண்டுகளாக வளர்ந்து வரும் செயல்முறைகளை - விரைவான மக்கள்தொகை சரிவு, பிறப்பு விகிதங்கள் வீழ்ச்சி, பெருமளவிலான இடம்பெயர்வு மற்றும் நாட்டின் வயதானது - இந்தப் போர் துரிதப்படுத்தியுள்ளது. இந்தப் போக்கு நிறுத்தப்படாவிட்டால், வரும் பல தசாப்தங்களுக்கு நாடு அதன் வளர்ச்சித் திறனை இழக்கும் அபாயம் உள்ளது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உக்ரைனின் மக்கள் தொகை: மெதுவான சரிவிலிருந்து கூர்மையான வீழ்ச்சி வரை 2022 ஆம் ஆண்டு வாக்கில், உக்ரைனின் மக்கள் தொகை சுமார் 41-42 மில்லியனாக இருந்தது. பல்வேறு மதிப்பீடுகளின்படி, இன்று அந்த எண்ணிக்கை 35-36 மில்லியனாகக் குறைந்துள்ளது. 1990களின் மிகவும் கடினமான காலங்களில் கூட, அத்தகைய சரிவு ஏற்படவில்லை. பொருளாதார வல்லுநரும் மக்கள்தொகை ஆய்வாளருமான எல்லா லிபனோவா, போருக்கு முன்பே சரிவு நடந்து கொண்டிருந்தது என்பதை வலியுறுத்துகிறார், ஆனால் முழு அளவிலான படையெடுப்பு அதை வியத்தகு முறையில் ஆக்கியது: மக்கள்தொகை ஆய்வாளர் எல்லா லிபனோவா / நஸாரி மசிலுக் மக்கள்தொகை ஆய்வாளர்களின் மதிப்பீடுகளின்படி, 2050 வாக்கில் மக்கள் தொகை 27-29 மில்லியனாகக் குறையக்கூடும், மேலும் அவநம்பிக்கையான சூழ்நிலையில் - 25 மில்லியனாகக் கூட சுருங்கக்கூடும். மக்கள்தொகை குறைப்புக்கு மூன்று முக்கிய காரணிகள் இடம்பெயர்வு: வெளிநாடுகளில் மில்லியன் கணக்கான உக்ரேனியர்கள். போர் தொடங்கியதிலிருந்து, 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளனர். சிலர் திரும்பி வருகின்றனர், ஆனால் கணிசமான எண்ணிக்கையிலானவர்கள் வெளிநாடுகளில் ஒன்றிணைந்து, வேலை தேடி, தங்கள் குழந்தைகளை உள்ளூர் பள்ளிகளில் சேர்க்கின்றனர். போரினால், உக்ரைனில் 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது / TSN.ua மக்கள்தொகை ஆய்வாளர் ஒலெக்சாண்டர் கிளாடுன் விளக்குகிறார்: பல உக்ரேனியர்கள், குறிப்பாக குழந்தைகளைக் கொண்ட இளம் பெண்கள், நிரந்தரமாக வெளிநாட்டில் தங்கக்கூடும் என்பதை EU ஏற்கனவே அங்கீகரித்துள்ளது. ஒலெக்சாண்டர் கிளாடுன் / ஆர்பிசி-உக்ரைன் / விட்டலி நோசாச் பதிவு செய்யப்படாத குறைந்த பிறப்பு விகிதம் போருக்கு முன்பு, உக்ரைனில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 270,000-300,000 குழந்தைகள் பிறந்தன. 2023-2024 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை வரலாற்று ரீதியாக மிகக் குறைந்த அளவாக சுமார் 180,000 ஆகக் குறைந்தது. இது இரண்டாம் உலகப் போரின் போது உக்ரைன் பெற்றதை விடக் குறைவு. இன்று ஐரோப்பாவிலேயே மிகக் குறைந்த பிறப்பு விகிதங்களைக் கொண்ட நாடுகளில் உக்ரைனும் ஒன்றாகும். நிச்சயமற்ற தன்மை, பொருளாதார உறுதியற்ற தன்மை மற்றும் போர் அச்சுறுத்தல் காரணமாக இளைஞர்கள் குழந்தைகளைப் பெறத் திட்டமிடுவதில்லை. அதே நேரத்தில், COVID-19 முடிவுக்கு வந்து, சமீபத்திய ஆண்டுகளில் ஆயுட்காலம் பொதுவாக அதிகரித்த போதிலும், இறப்பு விகிதம் பிறப்பு விகிதத்தை விட 2-3 மடங்கு அதிகமாக உள்ளது. உக்ரைனின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் பிறப்புகளை விட அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளன / ராய்ட்டர்ஸ் இராணுவ இழப்புகள் மற்றும் பாலின அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் இந்தப் போர் மற்றொரு முக்கியமான மக்கள்தொகைப் பிரச்சினையை உருவாக்கியுள்ளது: இனப்பெருக்க வயதுடைய ஆண்களின் பற்றாக்குறை. அணிதிரட்டல், இழப்புகள், காயங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஆண்கள் இடம்பெயர்தல் - இந்த காரணிகள் அனைத்தும் வரும் ஆண்டுகளில் குழந்தைகளைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சமூகக் கொள்கை நிபுணரும் பொருளாதார மருத்துவருமான ஆண்ட்ரி ரெவென்கோ குறிப்பிடுகிறார்: ஆண்ட்ரி ரெவென்கோ / ZN.UA மக்கள்தொகை முதுமை: ஒரு நேர வெடிகுண்டு உக்ரேனியர்களின் சராசரி வயது ஏற்கனவே 41 ஆண்டுகளைத் தாண்டிவிட்டது. 2050 வாக்கில், இது 46-47 ஆண்டுகளாக உயரக்கூடும். இதன் பொருள்: - சுகாதார அமைப்பில் அதிகரித்த அழுத்தம்; - ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு; - தொழிலாளர் பற்றாக்குறை; - பொருளாதார நடவடிக்கைகளில் சரிவு. பொருளாதார உத்தி மையத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் மரியா ரெப்கோ விளக்குகிறார்: மரியா ரெப்கோ / செர்ஹி நுஷ்னென்கோ நிலைமையை என்ன மாற்ற முடியும்? ஆய்வாளர்கள் பல மூலோபாய திசைகளை அடையாளம் காண்கின்றனர். உக்ரேனியர்கள் திரும்பி வர ஊக்குவித்தல் புலம்பெயர்ந்தோருக்கான திட்டங்கள், உக்ரேனிய நிறுவனங்களுக்கு தொலைதூர வேலை வாய்ப்பு, முதலீட்டு ஊக்கத்தொகைகள் மற்றும் சலுகைகள் - இவை அனைத்தும் சில குடிமக்களை மீண்டும் கொண்டு வரக்கூடும். பிறப்பு விகிதத்தை ஆதரித்தல் பணம் மட்டுமே மக்களை குழந்தைகளைப் பெற ஊக்குவிக்காது என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். தேவைப்படுவது: - மலிவு விலை வீடுகள், - உயர்தர மழலையர் பள்ளிகள், - வேலை செய்யும் பெற்றோருக்கு உதவி, - பாதுகாப்பு உத்தரவாதங்கள். எல்லா லிபனோவா மேலும் கூறுகிறார்: எல்லா லிபனோவா / ஆண்ட்ரி டுப்சாக் / RadioSvoboda.org (RFE/RL) இடம்பெயர்வு குறித்து கவனம் செலுத்துதல் சில உக்ரேனியர்கள் திரும்பி வர விரும்புகிறார்கள் - ஆனால் பாதுகாப்பு, வேலைகள், அரசாங்க சீர்திருத்தம் மற்றும் உள்கட்டமைப்பு மறுசீரமைப்பு இருந்தால் மட்டுமே. அடுத்து என்ன நடக்கும்: மூன்று காட்சிகள் நம்பிக்கையான வெளிநாடுகளில் உள்ள உக்ரேனியர்களில் பாதி பேர் திரும்பி வருகிறார்கள், பிறப்பு விகிதம் அதிகரிக்கிறது, போர் முடிவடைகிறது. 2050 வாக்கில், மக்கள் தொகை 33-35 மில்லியனாக நிலைபெறுகிறது. யதார்த்தமானது 20-25% திரும்பப் பெறுதல், பிறப்பு விகிதம் சற்று அதிகரிக்கிறது. 2050 வாக்கில் - 28-30 மில்லியன். அவநம்பிக்கை போர் நீண்ட காலமாக தொடர்கிறது, இடம்பெயர்வு அதிகரிக்கிறது, பிறப்பு விகிதம் குறைகிறது. 2050 வாக்கில் - 24-26 மில்லியன். முடிவுரை மக்கள்தொகை நெருக்கடி என்பது வெறும் புள்ளிவிவரங்களின் விஷயம் மட்டுமல்ல, உக்ரைனின் எதிர்காலத்திற்கு ஒரு அடிப்படை அச்சுறுத்தலாகும். பல ஆண்டுகளாக உருவாகி வரும் போக்குகளைப் போர் அம்பலப்படுத்தியுள்ளது மற்றும் துரிதப்படுத்தியுள்ளது. இருப்பினும், சரியான அரசாங்கக் கொள்கை, புலம்பெயர்ந்தோரின் திரும்புதல், இளம் குடும்பங்களுக்கான ஆதரவு மற்றும் பொருளாதார மீட்சி ஆகியவற்றுடன், நாடு இந்தப் போக்கை மாற்றியமைக்கும் திறன் கொண்டது என்று நிபுணர்கள் உறுதியாக நம்புகிறார்கள். The Ukrainian ReviewDemographic crisis in Ukraine: scale, causes, and forecastsUkraine is experiencing the most significant demographic crisis in its modern history. The war has only accelerated processes that have been developing for yearhttps://global.espreso.tv/ukraine-faces-population-crisis-as-numbers-could-drop-to-25-million-by-2050#:~:text=Opposition%20lawmaker%20Mykola%20Kniazhytskyi%20argues,for%20soldiers%20and%20their%20families.&text=Prime%20Minister%20Denys%20Shmyhal%20has,thirties%20are%20in%20short%20supply. EUobserverBorn into war: How Ukraine's demographic crisis became a...Ukraine had a demographic problem even before Russia's full-scale invasion — but the war is turning a crisis into a catastrophe.. . மேற்குறித்த கட்டுரையின் கீழ் மேலும் இரண்டு இணைப்பு உள்ளது, இது உக்கிரேன் தரப்பு செய்திகள்தான் ஆனால் பெருமளவில் மேற்கு நாடுகளின் ஊடகங்களில் வராமையால் இந்த பிரச்சினை வெளித்தோன்றாமல் இருக்கலாம். போரில் ஏற்படும் இழப்புக்கள் சம்பந்தப்பட்ட இரு தரப்புக்களுக்கு மட்டுமே, மற்றவர்களுக்கு அதனால் வரும் இலாபங்களிலேயே கவனம் இருப்பதால் அதனை பற்றி பேச விரும்பமாட்டார்கள்.

“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!

1 week 1 day ago
இலங்கையை எடுத்துக்கொண்டால் அது பெளத்தர்களின் நாடாக ஆட்சியாளர்களினால் அடையாளப்படுத்தப்படுகின்றது. மதம், இனவாரியாக இலங்கையை அடையாளப்படுத்தாதவிடத்து இலங்கையில் உள்நாட்டுப்போர், பிரிவினைவாதம் இவற்றுக்கான வாய்ப்புக்கள் ஏற்படுமா?

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

1 week 1 day ago
வடக்கு கிழக்கில் வேலையில்லாத்திண்டாட்டம். சிகை அலங்காரம் முதல் பெரிய வியாபாரதலம், கடற்தொழில் சிங்களம் செய்கிறது. இந்தியா சூறையாடுகிறது. அயலவனை தன் காணி வீடு சுத்தமாகும் வரை குடியிருக்க விடுவார்கள் புலம்பெயர்ந்தோர், பின் அவர்கள் தங்கள் நிலத்தை, காணியை உரிமையாக்கி விடுவார்கள் என்று பலாத்காரமாக வெளியேற்றுவார்கள். மொத்தத்தில் தம் காணி துப்பரவாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் வரை பேச்சு பெரிய வள்ளல்கள் போலிருக்கும், அவர்கள் வெளிநாடுகளில் உழைப்பு, கொலிடே வீடு இங்கே சுகமாக கழிப்பதற்கு. இதற்குத்தான் மிகையாக மக்கள் மேல் முதலைக்கண்ணீர். அவர்களையும் வெளிநாடுகளுக்கு எடுத்து வாழ வழி காட்டுங்கள், அல்லது ஓரிரண்டு குடும்பத்தை பொறுப்பெடுத்து கல்வி வசதி தொழில் வசதியை ஏற்படுத்தி முன்னுதாரணமாக செய்து காட்டுங்கள். அதன் பின் மற்றையோர் தொடர்வர். வடக்கிலேயே எத்தனையோ குடும்பங்கள் அயலில் ஏழ்மையிலும் குடிலிலும் வெள்ளத்திலும் வாழ்கிறார்கள், அவர்களை கவனிக்க யாருமில்லை. சுமந்திரன் ஏதோ உணர்ச்சியை வைத்து அரசியல் செய்ய உளறியவுடன் அவரின் அபிமானிகள் வந்து விடுவர். அவர் சொல்வது சரியாயின் நீங்கள் அதை செயற்படுத்தி காட்டலாமே? மற்றவரை குறை சொல்லிக்கொண்டு. மலையக மக்களின் வாக்குகளிலேயே சுகபோகம் அனுபவிப்பவர்கள் அந்த மக்களின் வாழ்க்கையை மாற்ற என்ன செய்தார்கள்? இப்போ வடக்கு கிழக்கில் குடியேற்றப்போகிறார்களாம். அதை சொல்வதற்கு இவர்கள் தேவையா? இதற்கா அவர்கள் இவரை தமது பிரதிநிதியாக தெரிந்தெடுத்தார்கள்? யார் அதை செய்வது? அவர்களே வந்து குடியேறுவதா? அதற்கான ஆயத்தங்களை செய்தபின் அவர்களை அழைக்கவேண்டும் இல்லையேல் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டும். இல்லை, கிழக்கில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.