Aggregator

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்: செஞ்சிலுவை சங்கத்தின் பங்கேற்பை இலங்கை கோரியிருப்பதாகத் தகவல்

1 week 2 days ago
07 Sep, 2025 | 11:08 AM (நா.தனுஜா) செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் அகழ்வு மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகளில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் நிபுணத்துவத்தைக்கோரி அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அழைப்புவிடுத்திருப்பதாகவும், அதற்கமைய இச்செயன்முறையில் செஞ்சிலுவை சங்கம் வெகுவிரைவில் பங்கேற்கும் எனவும் அறியமுடிகிறது. செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியின் அகழ்வுப்பணிகள் தொடர்ந்து 45 ஆவது நாளாக சனிக்கிழமையும் முன்னெடுக்கப்பட்டன. அதன்படி இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 240 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன், அவற்றில் 239 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தைப் பொறுத்தமட்டில் அகழ்வுப்பணிகளை முன்னெடுப்பதற்கு அவசியமான நிதியைப் பெற்றுக்கொடுத்தல், கண்காணிப்பு மற்றும் ஆவணப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் உள்ளிட்ட விடயங்களில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அதன் பங்களிப்பினை வழங்கிவருகிறது. அதுமாத்திரமன்றி செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் அண்மையில் முக்கிய வெளிப்படுத்தல்களைச் செய்திருந்த மரணதண்டனைக்கைதி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை சிறைச்சாலைக்கு சென்று சந்தித்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின், அவரிடம் விடயங்களைக் கேட்டறிந்துகொண்டனர். இவ்வாறானதொரு பின்னணியில் மனிதப்புதைகுழிகள் விவகாரத்தைக் கையாள்வதில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துக்கு நீண்டகால அனுபவமும், முறையான நிபுணத்துவமும் உள்ள போதிலும், அரசாங்கம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கட்டமைப்புக்களால் உத்தியோகபூர்வமாக அழைப்புவிடுக்கப்படாததன் காரணமாக குறிப்பாக செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் செஞ்சிலுவை சங்கம் பங்கேற்கவில்லை. இந்நிலையில் அண்மையில் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் அகழ்வு மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகளில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் நிபுணத்துவத்தைக்கோரி காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக நீதியமைச்சினால் உத்தியோகபூர்வமாக அழைப்புவிடுக்கப்பட்டிருப்பதாக அறியமுடிகிறது. அதுமாத்திரமன்றி மேற்படி வேண்டுகோளுக்கு இணங்க, இச்செயன்முறையில் வெகுவிரைவில் செஞ்சிலுவை சங்கம் பங்கேற்கும் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/224426

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்: செஞ்சிலுவை சங்கத்தின் பங்கேற்பை இலங்கை கோரியிருப்பதாகத் தகவல்

1 week 2 days ago

07 Sep, 2025 | 11:08 AM

image

(நா.தனுஜா)

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் அகழ்வு மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகளில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் நிபுணத்துவத்தைக்கோரி அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அழைப்புவிடுத்திருப்பதாகவும், அதற்கமைய இச்செயன்முறையில் செஞ்சிலுவை சங்கம் வெகுவிரைவில் பங்கேற்கும் எனவும் அறியமுடிகிறது.

செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியின் அகழ்வுப்பணிகள் தொடர்ந்து 45 ஆவது நாளாக சனிக்கிழமையும் முன்னெடுக்கப்பட்டன. அதன்படி இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 240 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன், அவற்றில் 239 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தைப் பொறுத்தமட்டில் அகழ்வுப்பணிகளை முன்னெடுப்பதற்கு அவசியமான நிதியைப் பெற்றுக்கொடுத்தல், கண்காணிப்பு மற்றும் ஆவணப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் உள்ளிட்ட விடயங்களில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அதன் பங்களிப்பினை வழங்கிவருகிறது.

அதுமாத்திரமன்றி செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் அண்மையில் முக்கிய வெளிப்படுத்தல்களைச் செய்திருந்த மரணதண்டனைக்கைதி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை சிறைச்சாலைக்கு சென்று சந்தித்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின், அவரிடம் விடயங்களைக் கேட்டறிந்துகொண்டனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் மனிதப்புதைகுழிகள் விவகாரத்தைக் கையாள்வதில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துக்கு நீண்டகால அனுபவமும், முறையான நிபுணத்துவமும் உள்ள போதிலும், அரசாங்கம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கட்டமைப்புக்களால் உத்தியோகபூர்வமாக அழைப்புவிடுக்கப்படாததன் காரணமாக குறிப்பாக செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் செஞ்சிலுவை சங்கம் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் அண்மையில் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் அகழ்வு மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகளில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் நிபுணத்துவத்தைக்கோரி காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக நீதியமைச்சினால் உத்தியோகபூர்வமாக அழைப்புவிடுக்கப்பட்டிருப்பதாக அறியமுடிகிறது. அதுமாத்திரமன்றி மேற்படி வேண்டுகோளுக்கு இணங்க, இச்செயன்முறையில் வெகுவிரைவில் செஞ்சிலுவை சங்கம் பங்கேற்கும் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

https://www.virakesari.lk/article/224426

சிறிதரன் எம்.பியின் கருத்து:முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் இல்லையா?

1 week 2 days ago
இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் இஸ்லாமியர்களா, மூர்களா, சுன்னியா அல்லது சியா இனத்தவர்களா. அரேபிய குடியேறிகளின் வழித்தோன்றலா, தமிழரா அல்லது சிங்களவர்களா? இல்லை இந்திய கண்டத்திலிருந்து வந்த குடியேறிகளா? இவர்கள் தனி தனியான தமக்குள் ஒன்றுசேரமுடியாத குழுக்கள் என்றால் எப்படி ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்வது? எப்படி இவர்களை அடையாளப்படுத்துவது?

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம் - விஜித ஹேரத்

1 week 2 days ago
இந அடக்குமுறைகளும் அச்சுறுத்தல்களும் அழிப்புகளும் பறிப்புகளும் காணாமல் ஆக்குதல் கொக்கரிப்புகளும் கொலைகள் எல்லாம் பொருளாதாரம் என மூட்டை கட்டி மூடி மறைத்துவிட முயற்சிக்கிறார்கள். எடுபடுமா இருந்து பாப்போம். ஏன் நாட்டில் வடக்கு கிழக்கில் மட்டுந்தான் பொருளாதாரப்பிரச்சனையுண்டா?

சிறிதரன் எம்.பியின் கருத்து:முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் இல்லையா?

1 week 2 days ago
மொழியை மையமாக வைத்து தமிழரும் முஸ்லீம்களும் ஒன றிணைந்த காலம் ஒன று இருந்தது. அதை வளர்தெடுக்க தவறி விட்டோம். அதை கெடுத்தத்தில் தமிழ் தரப்புக்கும் முஸலீம் தரப்புக்கும் சம பங்கு உள்ளது.

யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.

1 week 2 days ago
ஈழத்தின் மிகச் சிறந்த பல்துறைக் கலைஞர், சிந்தனையாளரை இழந்துள்ளோம். சிங்கப்பூரில் தனது வேலையை உதறிவிட்டு ஈழப்போராட்டத்தில் ஒரு போராளியாக இணைந்த இவர் காலப்போக்கில் போராட்டத்தின் கசப்பான அனுபவங்களால் நாட்டில் இருந்து வெளியேறி ஐரோப்பாவில் குடியேறி கலைத்துறையில் தனது பங்களிப்பை தொடர்ந்தார். அவர் வாழ்ந்த சுவிற்சர்லான்ட் நாட்டை போல் பல் மொழி, பல் கலாச்சார நாடாக அனைத்து இனங்களும் மகிழ்வுடன் வாழும் நாடக தனது தாய்நாடும் விளங்க வேண்டும் என்பதே இறுதிக் காலங்களில் அவரது கனவாக இருந்தது. அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.

1 week 2 days ago
காலங்கள் ஓட ஓட தொட்டுவிடும் தூரத்தில்தான் நான் நீ நாம் உட்பட எவரையும் விட்டு வைக்காத மரணம். யாழ்கள மூத்த கருத்தாளர் அஜீவன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

செம்மணியும் ஆன்மீகவாதி

1 week 2 days ago
செம்மணியும் ஆன்மீகவாதி --------- ------------------ *அரசியல் சாராத செல்வாக்குள்ள ஒருவரை முன்நிறுத்தி பின்னால் நகர்த்தப்படும் கொழும்பின் சதி அரசியல் *சித்துப்பாத்தி மனித புதைக்குழி மூடி மறைக்கப்படலாம்! *வலிகிழக்கு பிரதேச எல்லைக்குள் வெள்ள அபாயம் ஏற்படும் நிலை... *கூட்டுரிமை விவகாரங்களில், செல்வாக்கு மிக்கவர் - கல்வியாளர் என்பது தவிர்க்கப்படல் வேண்டும்... *நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் அமைதிப்பது ஏன்? ---------- ----- ------ -------- யாழ்ப்பாணம் செம்மணி பிரதேசம் தற்போது தமிழ் இன அழிப்பின் பிரதான அடையாளமாக விளங்குகிறது. இப்பின்னணியில், முடிந்தவரை இலங்கை அரசாங்கம் 1996 ஆம் ஆண்டு செம்மணியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்கள் பற்றிய அடையாளங்களை மூடி மறைக்கும் முயற்சிகளை திரைமறைவில் அரங்கேற்றுகிறது. ஆனாலும், ஈழத்தமிழ் தரப்பில் உள்ள சட்டத்தரணிகள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் செய்தியாளர்கள், செம்மணி விவகாரத்தை திசை திரும்ப விடாமல் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். 2009 மே மாதம் போரின் பின்னரான சூழலில் 2010 ஆம் ஆண்டில் இருந்து வடக்கு கிழக்கு பகுதிகளில் கூடுதலாக வடக்கு மாகாணத்தில் மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. ஏறத்தாள முன்னூறுக்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள், மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இதுவரை உரிய விசாரணைகள் நடத்தப்படவில்லை. மன்னார் திருக்கேதீஸ்வரம் வளாகத்தில் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் எக்காலத்திற்குரியது என்பதை கண்டறிவதற்கான காபன் பரிசோதனை மேற்கொள்வதற்கான (கதிரியக்க கார்பன் காலக்கணிப்பு -C-14 Carbon Dating Test) மாதிரிகள் பெறப்பட்டு தயார் நிலையில் உள்ளன. அதற்கான நிதியை கோரி, ஓஎம்பி எனப்படும் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய விவரங்கள் கண்டறியும் அலுவலகத்திடம் விலை மனு கோரப்பட்டு இருந்தது. ஆனால், அதற்கான பதில் வழங்கப்படாமல் கால தாமதம் ஏற்படுகிறது. அதேநேரம் --- மன்னார் சதொச கட்டிடத்தின் கீழ் பகுதியில் 2018 ஆம் ஆண்டு 28 சிறுவர்களின் எலும்புகள் உட்பட 376 க்கும் அதிகமான எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டிருத்தன. ஒரு பகுதியை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவிற்கு அனுப்ப ஓகஸ்ட் மாதம் 2022 ஆம் ஆண்டு மன்னார் நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டது. எனினும், அமெரிக்காவின் மியாமி பீட்டா அனலிட்டிக்ஸ் நிறுவனம், (Beta Analytic Inc.) அவை கி.பி.1404 -1635ற்கும் இடைப்பட்ட நூற்றாண்டுகளை சேர்ந்தது என ஆய்வு அறிக்கையில் தெரிவித்திருந்தது. ஆனால், அந்த எலும்புகள் போர்க்காலத்துக்குரியவை என அகழ்வில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் ஏற்கனவே சந்தேகம் வெளியிட்டிருந்தனர். இங்கு அகழ்ந்து எடுக்கப்பட்ட சில மனித எச்சங்கள் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜ் சோமதேவிடம் சமீபத்தில் தான் ஆய்வுக்காக கை யளிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இன அழிப்பு என்பதை மூடி மறைக்கும் முயற்சிகள் 2009 மே மாதம் போர் இல்லாதொழிக்கப்பட்ட நாளில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக உணர முடிகிறது. இவ்வாறான பின்னணியில் செம்மணி மனித புதைகுழி விவகாரமும் மூடி மறைக்கப்படக் கூடிய ஆபத்துகள் இல்லாமலில்லை. இப் பின்புலத்தில்தான் செம்மணியில் உள்ள அரசாங்க காணி என கருதப்படும் சுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபலமான அதுவும் செல்வாக்குப் பெற்ற ஒரு ஆன்மீகவாதி ஒருவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவர் ஒரு ஆன்மீக சொற்பொழிவாளர்.மத அறக்கட்டளை நிறுவனங்களையும் நடத்தி வருபவர். இதற்கு ------ 1) காரண - காரியத்தோடு கொழும்பு நிர்வாக அரசியல் செல்வாக்கு செலுத்தியுள்ளது... 2) காணியில் சங்கிலியன் சிலை ஒன்றும் ஆன்மிகத் தலம் ஒன்றும் அமைக்கப்படுவதற்கான யோசனைகள் இருப்பதாகவும் அறிய முடிகிறது. ஆனால் ----- குறித்த மூன்று ஏக்கர் காணி 1996 ஆம் ஆண்டு கிரிசாந்தி குமாரசுவாமி இராணுவத்தினர் ஒன்பது பேரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடமாகும். அத்துடன் கிரிசாந்தியை தேடிச் சென்ற தாயாரும் அயல் வீட்டாரும் அந்த இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு அப் பகுதியில் புதைக்கப்பட்டிருக்கின்றனர். இது தொடர்பான வழக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று, 1999 ஆம் ஆண்டு வழக்கின் தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில், முதலாம் எதிரியான சோமரட்ன ராஜபக்ச தனது இறுதி விருப்பத்தை நீதிபதியிடம் வெளிப்படுத்தினார். அப்போது செம்மணியில் சுமார் 600 இற்கும் அதிகமான இளைஞர்கள் - யுவதிகள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகளை தன்னால் அடையாளம் காண்பிக்க முடியும் எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு விசாரணைகள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டன. இந்த சாட்சியத்தின் பிரகாரம், சோமரட்ணவுடன் செம்மணிக்கு சென்றிருந்த மன்னார் மாவட்ட அப்போதைய நீதிபதி இளஞ்செழியன், மனிதப் புதைகுழிகள் இருப்பதாக காண்பித்த இடங்களை அடையாளப்படுத்தினார். இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டிருந்த காணியின் ஒரு பகுதியைத் தான் ஆன்மீகவாதி ஒருவருக்கு கொழும்பு அரச அதிகாரிகள் வழங்கியிருக்கின்றனர். நகர்த்தல் பிரேரணை ---- கிரிசாந்தி உள்ளிட்ட 600 பேர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் குறித்த மூன்று ஏக்கர் காணிக்குள் விசாரணை முடிவடையும் வரை கட்டிடங்களை கட்ட வேண்டாம் என கோரி சட்டத்தரணி சண்முகநாதன் வைஷ்ணவி யாழ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நகர்த்தல் பிரேரணை ஒன்றை கடந்த ஜூலை மாதம் 29 ஆம் திகதி தாக்கல் செய்திருந்தார். சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பை மையமாகக் கொண்டும் இப் பிரேரணை தாக்கல் செய்யப்பட்டது. ஆன்மீகவாதி பெற்றுள்ள காணியில் கட்டடங்கள் கட்டப்படும் போது, அதனால் எழும் விளைவுகள் அங்குள்ள மனித புதைகுழி பற்றிய விசாரணைக்குத் தடையாக இருக்கும் எனவும் நகர்த்தல் பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அதேநேரம், காணிக்கு 500 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர்க்கால மனிதபுதை குழி அகழ்வு நடவடிக்கைகளிலும் இடையூறு ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த நகர்த்தல் பிரேரணையை விசாரணை செய்யும் நியாயாதிக்கம் (Jurisdiction) மஜிஸ்ரேட் நீதிமன்றத்துக்கு இல்லை என்பதால், இதனை யாழ் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதிபதி அறிவுறுத்தினார். இது பற்றி சட்டத்தரணி வைஷ்ணவியிடம் நான் வினவியபோது, நகர்த்தல் பிரேரணையை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முறைப்பாட்டாளர்கள் எவரும் முன்வர தயங்குவதாக கவலை வெளியிட்டார். நகர்த்தல் பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சுற்றுப் புறச்சூழல் பாதுகாப்பு என்பது செம்மணியை அண்மித்த பிரதேசங்களில் ஏற்படவுள்ள வெள்ள அபாயம் பற்றியது. அதாவது ---- இருபாலை, கல்வியங்காடு வலிகாமம் கிழக்கின் ஒரு பகுதி, நல்லூர் பிரேத சபையின் ஒரு பகுதி, அரியாலை போன்ற மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் மழை காலத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உண்டு. இது வலி கிழக்கு பிரதேச எல்லைக்குள் அமைந்துள்ளதால், கோப்பாய் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷிடம் நான் வினவினேன். முதலில் வெள்ள அபாயம் ஏற்படும் என்பதை உறுதிப்படுத்தினார். அத்துடன் ஆன்மீகவாதி அரசாங்கத்திடமிருந்து பெற்ற காணியில் கட்டிடங்களை கட்டுவதற்குரிய அனுமதிக்கு கோப்பாய் பிரதேச சபையிடம் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். சித்துப்பாத்தி மயானத்தில் போர்க்கால மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், கிரிசாந்தி உள்ளிட்ட 600 பேர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக அடையாளம் இடப்பட்டுள்ள செம்மணி காணிக்குள் கட்டிடங்கள் அமைப்பதை தற்காலிகமாக பிற்போடுங்கள் என தொலைபேசியில் தாழ்மையாக தான் கேட்டுக் கொண்டதாகவும் என்னிடம் எடுத்துச் சொன்னார். இந்த விவகாரத்தில் குறித்த ஆன்மீகவாதியிடம் இருந்து மாற்றம் வரும் என தான் நம்புவதாகவும் நிரோஷ் என்னிடம் மேலும் தெரிவித்தார். அதேவேளை ---- யாழ்ப்பாணத்தில் மழையினால் பெறப்படும் வெள்ள நீரை கடலுக்குச் செல்ல விடாமல் தொண்டமானாறு, செம்மணி போன்ற இரண்டு பிரதேசங்களை தெரிவு செய்து பாரிய அபிவிருத்தி திட்டம் ஒன்றை வடமாகாண நீர்ப்பாசன திணைக்களம் செயல்படுத்தி வருகிறது. உலக வங்கியின் 400 மில்லியன் ரூபாய் செலவில் செய்யப்பட்ட தொண்டமானாறு உவர் நீர் தடுப்பணை வேலைத்திட்டம் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவடைந்துள்ளது. ஆனால், செம்மணி திட்டம் இன்னும் செய்யப்படவில்லை. விளக்க குறிப்புகள் --- A) இவ்வாறான ஒரு நிலையில் குறித்த ஆன்மீகவாதி, செம்மணியில் தான் பெற்றுக் கொண்ட காணியில் எந்தவொரு கட்டிடத்தையும் அமைக்கும் விடயத்தில் பொருத்தமான ஆலோசனைகள் பெறப்பட வேண்டும். B) இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சைவ மதத் தலைவர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலரும் பொருத்தமான முறையில் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். C) குறித்த ஆன்மீகத் தலைவர் செல்வாக்கு மிக்கவர் என்பதால் அமைதி காப்பது ஆரோக்கியமானதல்ல. அதேவேளை, தமிழர்களின் கூட்டுரிமை சார்ந்த விவகாரங்களில் --- 1) செல்வாக்கு மிக்கவர் 2) கல்வியாளர் 3) புத்திஜீவி என்ற நோக்கு நிலை தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் ----- 13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் ஏற்கவில்லை என்ற காரண - காரியத்தோடு மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்கள் ஒரு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இலங்கை ஒற்றையாட்சி அரசு மீளவும் பெறுகிறது. மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்ற வினா தொடர்ந்து தொக்கி நிற்கிறது. இப்பின்னணியில், கொழும்பு நிர்வாக அரசியல் செல்வாக்கு என்ற அடிப்படையில் அரச காணிகளை பெற, தமிழ் தரப்பில் யார் ஈடுபட்டாலும் அது கூட்டுரிமை மீறலாகும். இவ்வாறான செல்வாக்குடன் தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் செயற்படுவதையும் மறுக்க முடியாது. 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச வெளியிட்டிருந்த ஒரு வர்த்தமானி அறிவித்தல் மூலம் யாழ் மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகள் அனைத்தும் கொழும்பை மையமாகக் கொண்ட நகர அபிவிருத்தி அதிகார சபையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆகவே -- இந்த ஆபத்துகள் பற்றி கொழும்பு நிர்வாக அரசியல் செல்வாக்கு உள்ள தமிழர்கள் உணர தலைப்பட வேண்டும். அதேநேரம் -- செம்மணியில் மாத்திரமல்ல, வேறெந்த இடங்களிலும் காணிகளை பெறும் முறைமை அல்லது காணிகளை இழப்பது போன்ற விவகாரங்களுக்கு இலங்கை ஒற்றையாட்சி நீதிமன்றங்களில் தமிழர்கள் நீதியை எதிர்பார்க்கவும் முடியாது. ஏனெனில், அது அரசியல் பிரச்சினை. அதை சட்டங்களினால் தீர்க்க முடியாது. உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதாலேயே இன அழிப்புக்கு சர்வதேச நீதி கோரப்படுகின்றது. ஜெனீவா ஆணையாளர் கூட தனது அறிக்கையில் இலங்கை நீதித்துறையின் நம்பகத்தன்மை அற்ற பின்னணியை சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆகவே, சிங்கள உறுப்பினர்கள் பெரும்பான்மையாக அங்கம் வகிக்கும் இலங்கை நாடாளுமன்றத்தின் ஊடாகவோ, ஒற்றையாட்சி நீதிமன்றத்தின் மூலமாகவோ தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்பது பட்டறிவு. இந்த அடிப்படையில் எழுந்ததுதான் ”தமிழ்த் தேசியம்” என்ற கோட்பாடு. இதை புரிந்து கொண்டு 2009 இற்கு பின்னரான தமிழர் அரசியல் விவகாரத்தை மேலும் சிக்கலாக்க கூடிய பிரித்தாளும் தந்திரங்களுக்கு இடமளிக்க கூடாது. மக்களிடம் செல்வாக்கு பெற்ற அரசியல் சாராத ஒருவரை முன்நிறுத்தி பின்னால் நகர்த்தப்படும் கொழும்பின் சதி அரசியலுக்குள் (Conspiracy Politics) பலியாகாமல், ஈழத்தமிழர்களின் கூட்டுரிமை என்ற வியூகத்தில் உத்திகள் வகுக்கப்பட வேண்டும். குறிப்பாக இலங்கை நீதிமன்றங்களுக்கு சென்று, தமிழர்கள் தமக்குள் வாக்குவாதப்படும் அவலங்கள் ஏற்படுவதையும் தவிர்க்க வேண்டும். யாழ்ப்பாணம் கைதடியில் அமைக்கப்பட்டுள்ள சிவபூமி மற்றும் சிவபூமி அருங்காட்சியகம் ஆகியவை மரபுரிமை - பண்பாட்டு அடையாளங்களை பேணும் முறை. இவ்வாறு தமிழர்களின் மரபுரிமை மற்றும் சைவ சமய மாண்புகளை, இன ஒதுக்கல் சவால்களுக்கு மத்தியில் பேணி வரும் ஒரு ஆன்மிகவாதி, சமூகப் பொறுப்புடன் செயற்படுவதற்கு யாரும் வகுப்பெடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற ஆரோக்கியமான புரிதல் உருவாக வேண்டும். அ.நிக்ஸன்- பத்திரிகையாளர் https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0RRkj82ywfozotwZ3NMazQang75E19TBfQDyRvDHTqYkmwhTdnjJJzvGtpZdd4NFyl&id=1457391262

செம்மணியும் ஆன்மீகவாதி

1 week 2 days ago

செம்மணியும் ஆன்மீகவாதி

--------- ------------------

*அரசியல் சாராத செல்வாக்குள்ள ஒருவரை முன்நிறுத்தி பின்னால் நகர்த்தப்படும் கொழும்பின் சதி அரசியல்

*சித்துப்பாத்தி மனித புதைக்குழி மூடி மறைக்கப்படலாம்!

*வலிகிழக்கு பிரதேச எல்லைக்குள் வெள்ள அபாயம் ஏற்படும் நிலை...

*கூட்டுரிமை விவகாரங்களில், செல்வாக்கு மிக்கவர் - கல்வியாளர் என்பது தவிர்க்கப்படல் வேண்டும்...

*நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் அமைதிப்பது ஏன்?

---------- ----- ------ --------

யாழ்ப்பாணம் செம்மணி பிரதேசம் தற்போது தமிழ் இன அழிப்பின் பிரதான அடையாளமாக விளங்குகிறது. இப்பின்னணியில், முடிந்தவரை இலங்கை அரசாங்கம் 1996 ஆம் ஆண்டு செம்மணியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்கள் பற்றிய அடையாளங்களை மூடி மறைக்கும் முயற்சிகளை திரைமறைவில் அரங்கேற்றுகிறது.

ஆனாலும், ஈழத்தமிழ் தரப்பில் உள்ள சட்டத்தரணிகள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் செய்தியாளர்கள், செம்மணி விவகாரத்தை திசை திரும்ப விடாமல் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்.

2009 மே மாதம் போரின் பின்னரான சூழலில் 2010 ஆம் ஆண்டில் இருந்து வடக்கு கிழக்கு பகுதிகளில் கூடுதலாக வடக்கு மாகாணத்தில் மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. ஏறத்தாள முன்னூறுக்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள், மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இதுவரை உரிய விசாரணைகள் நடத்தப்படவில்லை.

மன்னார் திருக்கேதீஸ்வரம் வளாகத்தில் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் எக்காலத்திற்குரியது என்பதை கண்டறிவதற்கான காபன் பரிசோதனை மேற்கொள்வதற்கான (கதிரியக்க கார்பன் காலக்கணிப்பு -C-14 Carbon Dating Test) மாதிரிகள் பெறப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

அதற்கான நிதியை கோரி, ஓஎம்பி எனப்படும் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய விவரங்கள் கண்டறியும் அலுவலகத்திடம் விலை மனு கோரப்பட்டு இருந்தது.

ஆனால், அதற்கான பதில் வழங்கப்படாமல் கால தாமதம் ஏற்படுகிறது.

அதேநேரம் ---

மன்னார் சதொச கட்டிடத்தின் கீழ் பகுதியில் 2018 ஆம் ஆண்டு 28 சிறுவர்களின் எலும்புகள் உட்பட 376 க்கும் அதிகமான எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டிருத்தன.

ஒரு பகுதியை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவிற்கு அனுப்ப ஓகஸ்ட் மாதம் 2022 ஆம் ஆண்டு மன்னார் நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டது.

எனினும், அமெரிக்காவின் மியாமி பீட்டா அனலிட்டிக்ஸ் நிறுவனம், (Beta Analytic Inc.) அவை கி.பி.1404 -1635ற்கும் இடைப்பட்ட நூற்றாண்டுகளை சேர்ந்தது என ஆய்வு அறிக்கையில் தெரிவித்திருந்தது.

ஆனால், அந்த எலும்புகள் போர்க்காலத்துக்குரியவை என அகழ்வில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் ஏற்கனவே சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

இங்கு அகழ்ந்து எடுக்கப்பட்ட சில மனித எச்சங்கள் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜ் சோமதேவிடம் சமீபத்தில் தான் ஆய்வுக்காக கை யளிக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே, இன அழிப்பு என்பதை மூடி மறைக்கும் முயற்சிகள் 2009 மே மாதம் போர் இல்லாதொழிக்கப்பட்ட நாளில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக உணர முடிகிறது.

இவ்வாறான பின்னணியில் செம்மணி மனித புதைகுழி விவகாரமும் மூடி மறைக்கப்படக் கூடிய ஆபத்துகள் இல்லாமலில்லை.

இப் பின்புலத்தில்தான் செம்மணியில் உள்ள அரசாங்க காணி என கருதப்படும் சுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபலமான அதுவும் செல்வாக்குப் பெற்ற ஒரு ஆன்மீகவாதி ஒருவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இவர் ஒரு ஆன்மீக சொற்பொழிவாளர்.மத அறக்கட்டளை நிறுவனங்களையும் நடத்தி வருபவர்.

இதற்கு ------

1) காரண - காரியத்தோடு கொழும்பு நிர்வாக அரசியல் செல்வாக்கு செலுத்தியுள்ளது...

2) காணியில் சங்கிலியன் சிலை ஒன்றும் ஆன்மிகத் தலம் ஒன்றும் அமைக்கப்படுவதற்கான யோசனைகள் இருப்பதாகவும் அறிய முடிகிறது.

ஆனால் -----

குறித்த மூன்று ஏக்கர் காணி 1996 ஆம் ஆண்டு கிரிசாந்தி குமாரசுவாமி இராணுவத்தினர் ஒன்பது பேரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடமாகும்.

அத்துடன் கிரிசாந்தியை தேடிச் சென்ற தாயாரும் அயல் வீட்டாரும் அந்த இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு அப் பகுதியில் புதைக்கப்பட்டிருக்கின்றனர்.

இது தொடர்பான வழக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று, 1999 ஆம் ஆண்டு வழக்கின் தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில், முதலாம் எதிரியான சோமரட்ன ராஜபக்ச தனது இறுதி விருப்பத்தை நீதிபதியிடம் வெளிப்படுத்தினார்.

அப்போது செம்மணியில் சுமார் 600 இற்கும் அதிகமான இளைஞர்கள் - யுவதிகள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகளை தன்னால் அடையாளம் காண்பிக்க முடியும் எனவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு விசாரணைகள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டன. இந்த சாட்சியத்தின் பிரகாரம், சோமரட்ணவுடன் செம்மணிக்கு சென்றிருந்த மன்னார் மாவட்ட அப்போதைய நீதிபதி இளஞ்செழியன், மனிதப் புதைகுழிகள் இருப்பதாக காண்பித்த இடங்களை அடையாளப்படுத்தினார்.

இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டிருந்த காணியின் ஒரு பகுதியைத் தான் ஆன்மீகவாதி ஒருவருக்கு கொழும்பு அரச அதிகாரிகள் வழங்கியிருக்கின்றனர்.

நகர்த்தல் பிரேரணை ----

கிரிசாந்தி உள்ளிட்ட 600 பேர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் குறித்த மூன்று ஏக்கர் காணிக்குள் விசாரணை முடிவடையும் வரை கட்டிடங்களை கட்ட வேண்டாம் என கோரி சட்டத்தரணி சண்முகநாதன் வைஷ்ணவி யாழ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நகர்த்தல் பிரேரணை ஒன்றை கடந்த ஜூலை மாதம் 29 ஆம் திகதி தாக்கல் செய்திருந்தார்.

சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பை மையமாகக் கொண்டும் இப் பிரேரணை தாக்கல் செய்யப்பட்டது.

ஆன்மீகவாதி பெற்றுள்ள காணியில் கட்டடங்கள் கட்டப்படும் போது, அதனால் எழும் விளைவுகள் அங்குள்ள மனித புதைகுழி பற்றிய விசாரணைக்குத் தடையாக இருக்கும் எனவும் நகர்த்தல் பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அதேநேரம், காணிக்கு 500 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர்க்கால மனிதபுதை குழி அகழ்வு நடவடிக்கைகளிலும் இடையூறு ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த நகர்த்தல் பிரேரணையை விசாரணை செய்யும் நியாயாதிக்கம் (Jurisdiction) மஜிஸ்ரேட் நீதிமன்றத்துக்கு இல்லை என்பதால், இதனை யாழ் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதிபதி அறிவுறுத்தினார்.

இது பற்றி சட்டத்தரணி வைஷ்ணவியிடம் நான் வினவியபோது, நகர்த்தல் பிரேரணையை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முறைப்பாட்டாளர்கள் எவரும் முன்வர தயங்குவதாக கவலை வெளியிட்டார்.

நகர்த்தல் பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சுற்றுப் புறச்சூழல் பாதுகாப்பு என்பது செம்மணியை அண்மித்த பிரதேசங்களில் ஏற்படவுள்ள வெள்ள அபாயம் பற்றியது.

அதாவது ----

இருபாலை, கல்வியங்காடு வலிகாமம் கிழக்கின் ஒரு பகுதி, நல்லூர் பிரேத சபையின் ஒரு பகுதி, அரியாலை போன்ற மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் மழை காலத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உண்டு.

இது வலி கிழக்கு பிரதேச எல்லைக்குள் அமைந்துள்ளதால், கோப்பாய் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷிடம் நான் வினவினேன்.

முதலில் வெள்ள அபாயம் ஏற்படும் என்பதை உறுதிப்படுத்தினார்.

அத்துடன் ஆன்மீகவாதி அரசாங்கத்திடமிருந்து பெற்ற காணியில் கட்டிடங்களை கட்டுவதற்குரிய அனுமதிக்கு கோப்பாய் பிரதேச சபையிடம் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

சித்துப்பாத்தி மயானத்தில் போர்க்கால மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், கிரிசாந்தி உள்ளிட்ட 600 பேர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக அடையாளம் இடப்பட்டுள்ள செம்மணி காணிக்குள் கட்டிடங்கள் அமைப்பதை தற்காலிகமாக பிற்போடுங்கள் என தொலைபேசியில் தாழ்மையாக தான் கேட்டுக் கொண்டதாகவும் என்னிடம் எடுத்துச் சொன்னார்.

இந்த விவகாரத்தில் குறித்த ஆன்மீகவாதியிடம் இருந்து மாற்றம் வரும் என தான் நம்புவதாகவும் நிரோஷ் என்னிடம் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை ----

யாழ்ப்பாணத்தில் மழையினால் பெறப்படும் வெள்ள நீரை கடலுக்குச் செல்ல விடாமல் தொண்டமானாறு, செம்மணி போன்ற இரண்டு பிரதேசங்களை தெரிவு செய்து பாரிய அபிவிருத்தி திட்டம் ஒன்றை வடமாகாண நீர்ப்பாசன திணைக்களம் செயல்படுத்தி வருகிறது.

உலக வங்கியின் 400 மில்லியன் ரூபாய் செலவில் செய்யப்பட்ட தொண்டமானாறு உவர் நீர் தடுப்பணை வேலைத்திட்டம் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவடைந்துள்ளது.

ஆனால், செம்மணி திட்டம் இன்னும் செய்யப்படவில்லை.

விளக்க குறிப்புகள் ---

A) இவ்வாறான ஒரு நிலையில் குறித்த ஆன்மீகவாதி, செம்மணியில் தான் பெற்றுக் கொண்ட காணியில் எந்தவொரு கட்டிடத்தையும் அமைக்கும் விடயத்தில் பொருத்தமான ஆலோசனைகள் பெறப்பட வேண்டும்.

B) இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சைவ மதத் தலைவர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலரும் பொருத்தமான முறையில் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

C) குறித்த ஆன்மீகத் தலைவர் செல்வாக்கு மிக்கவர் என்பதால் அமைதி காப்பது ஆரோக்கியமானதல்ல.

அதேவேளை, தமிழர்களின் கூட்டுரிமை சார்ந்த விவகாரங்களில் ---

1) செல்வாக்கு மிக்கவர்

2) கல்வியாளர்

3) புத்திஜீவி

என்ற நோக்கு நிலை தவிர்க்கப்பட வேண்டும்.

ஏனெனில் -----

13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் ஏற்கவில்லை என்ற காரண - காரியத்தோடு மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்கள் ஒரு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இலங்கை ஒற்றையாட்சி அரசு மீளவும் பெறுகிறது.

மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்ற வினா தொடர்ந்து தொக்கி நிற்கிறது.

இப்பின்னணியில், கொழும்பு நிர்வாக அரசியல் செல்வாக்கு என்ற அடிப்படையில் அரச காணிகளை பெற, தமிழ் தரப்பில் யார் ஈடுபட்டாலும் அது கூட்டுரிமை மீறலாகும்.

இவ்வாறான செல்வாக்குடன் தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் செயற்படுவதையும் மறுக்க முடியாது.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச வெளியிட்டிருந்த ஒரு வர்த்தமானி அறிவித்தல் மூலம் யாழ் மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகள் அனைத்தும் கொழும்பை மையமாகக் கொண்ட நகர அபிவிருத்தி அதிகார சபையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஆகவே --

இந்த ஆபத்துகள் பற்றி கொழும்பு நிர்வாக அரசியல் செல்வாக்கு உள்ள தமிழர்கள் உணர தலைப்பட வேண்டும்.

அதேநேரம் --

செம்மணியில் மாத்திரமல்ல, வேறெந்த இடங்களிலும் காணிகளை பெறும் முறைமை அல்லது காணிகளை இழப்பது போன்ற விவகாரங்களுக்கு இலங்கை ஒற்றையாட்சி நீதிமன்றங்களில் தமிழர்கள் நீதியை எதிர்பார்க்கவும் முடியாது.

ஏனெனில், அது அரசியல் பிரச்சினை. அதை சட்டங்களினால் தீர்க்க முடியாது. உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதாலேயே இன அழிப்புக்கு சர்வதேச நீதி கோரப்படுகின்றது.

ஜெனீவா ஆணையாளர் கூட தனது அறிக்கையில் இலங்கை நீதித்துறையின் நம்பகத்தன்மை அற்ற பின்னணியை சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஆகவே, சிங்கள உறுப்பினர்கள் பெரும்பான்மையாக அங்கம் வகிக்கும் இலங்கை நாடாளுமன்றத்தின் ஊடாகவோ, ஒற்றையாட்சி நீதிமன்றத்தின் மூலமாகவோ தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்பது பட்டறிவு.

இந்த அடிப்படையில் எழுந்ததுதான் ”தமிழ்த் தேசியம்” என்ற கோட்பாடு.

இதை புரிந்து கொண்டு 2009 இற்கு பின்னரான தமிழர் அரசியல் விவகாரத்தை மேலும் சிக்கலாக்க கூடிய பிரித்தாளும் தந்திரங்களுக்கு இடமளிக்க கூடாது.

மக்களிடம் செல்வாக்கு பெற்ற அரசியல் சாராத ஒருவரை முன்நிறுத்தி பின்னால் நகர்த்தப்படும் கொழும்பின் சதி அரசியலுக்குள் (Conspiracy Politics) பலியாகாமல், ஈழத்தமிழர்களின் கூட்டுரிமை என்ற வியூகத்தில் உத்திகள் வகுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக இலங்கை நீதிமன்றங்களுக்கு சென்று, தமிழர்கள் தமக்குள் வாக்குவாதப்படும் அவலங்கள் ஏற்படுவதையும் தவிர்க்க வேண்டும்.

யாழ்ப்பாணம் கைதடியில் அமைக்கப்பட்டுள்ள சிவபூமி மற்றும் சிவபூமி அருங்காட்சியகம் ஆகியவை மரபுரிமை - பண்பாட்டு அடையாளங்களை பேணும் முறை.

இவ்வாறு தமிழர்களின் மரபுரிமை மற்றும் சைவ சமய மாண்புகளை, இன ஒதுக்கல் சவால்களுக்கு மத்தியில் பேணி வரும் ஒரு ஆன்மிகவாதி, சமூகப் பொறுப்புடன் செயற்படுவதற்கு யாரும் வகுப்பெடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற ஆரோக்கியமான புரிதல் உருவாக வேண்டும்.

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0RRkj82ywfozotwZ3NMazQang75E19TBfQDyRvDHTqYkmwhTdnjJJzvGtpZdd4NFyl&id=1457391262

The Shawshank Redemption

1 week 2 days ago
The Shawshank Redemption, திரையிடப்பட்ட போது படம் பிரபலம் அடையவில்லை. தோல்வி அடைந்தது என்றே கருதப்பட்டது. ஆனால், பல ஹொலிவூட் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. பின்பு, வாய்மொழியால் பிரபலம் அடைந்தது.