Aggregator

செம்மணியின் பின்னணியில் ஐநா கூட்டத் தொடர் – நிலாந்தன்.

1 week 2 days ago
செம்மணியின் பின்னணியில் ஐநா கூட்டத் தொடர் – நிலாந்தன். ஐநாவின் அறுபதாவது கூட்டத்தொடர் இம்மாதம் எட்டாம் தேதி அதாவது நாளை ஆரம்பமாகிறது. இக்கூட்டத் தொடரில் அதிசயங்கள் அற்புதங்கள் நிகழ்வதற்கு இடமில்லை.ஏனென்றால் ஈழத் தமிழர்களின் நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் ஐநா அதிசயங்களும் அற்புதங்களும் நிகழ்வதற்குரிய ஒரு களம் அல்ல.போராடும் மக்கள் மத்தியில்தான் அதிசயங்களும் அற்புதங்களும் நிகழும். எனினும், எல்லாவிதமான வரையறைகளோடும், தமிழ் மக்களுக்கு என்று கடந்த 16 ஆண்டுகளாக திறந்து வைக்கப்பட்டிருக்கும் ஒரே அனைத்துலக அரங்கு மனித உரிமைகள் பேரவைதான். அந்த மனித உரிமைகள் பேரவைக்குள் காலை ஊன்றிக் கொண்டுதான் தமிழ் மக்கள் அடுத்த கட்டத்திற்கு பாயலாம். ஐநாவுக்கு கூட்டுக் கடிதம் எழுதும் ஒரு சந்திப்பின்போது சிவாஜிலிங்கம் அதை ஓர் உவமையோடு சுட்டிக்காட்டியிருந்தார். மனித உரிமைகள் பேரவையை முற்றாக நிராகரிக்க முடியாது. ஏனென்றால் நாங்கள் பாயப் போகிறோம் என்று சொன்னால் எங்கேயாவது ஒரு காலை ஊன்ற வேண்டும்.ஒரு காலை ஊன்றினால்தான் பாயலாம்.இப்போதைக்கு மனித உரிமைகள் பேரவைதான் எங்களுக்குத் தளம். எனவே அதில் ஊன்றியிருக்கும் காலையும் எடுத்து விட்டால் நாங்கள் விழுந்து விடுவோம் என்று சிவாஜி சொன்னார். மனித உரிமைகள் பேரவையில் கடந்த நான்கு ஆண்டுகளாக சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகம் ஒன்று இயங்கி வருகிறது. அது தொடர்பாக தமிழ் மக்களுக்கு விமர்சனங்கள் உண்டு.எனினும் அந்த அலுவலகத்தின் அடுத்த கட்டம் தொடர்பாக இந்தமுறை கூட்டத் தொடரில் தீர்மானிக்கப்படும்.ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வந்து சென்றிருக்கும் ஒரு பின்னணியில்,அவர் இங்கு அவதானித்தவற்றின் தொகுப்பாகவும் ஐநாவின் நடவடிக்கைகள் அமையும். அனுர அரசுத் தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டு ஓராண்டு முடியும் ஒரு மாதத்தில் ஐநாவின் 60ஆவது கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்த அரசாங்கம் தனக்கு தமிழ் மக்களின் ஆணையும் இருப்பதாகக் கூறிக் கொள்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனக்குக் கிடைத்த ஏழு ஆசனங்களையும் அது தமிழ் மக்கள் தனக்கு வழங்கிய ஆணை என்று ஐநாவிலும் உலக அளவிலும் புதுடில்லியிலும் கூறி வருகிறது. ஐநாவும் புதிய அரசாங்கத்தின் கழுத்தை நெரிப்பதற்குப் பதிலாக அதற்க ஒரு சந்தர்ப்பத்தை வழங்கலாம் என்று சிந்திப்பதாகத் தெரிகிறது. இலங்கை வருகையின் பின் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவிக்கும் கருத்துக்கள் அவ்வாறு கருதத்தக்கவையாக உள்ளன. இவ்வாறு ஐநா இலங்கைக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கலாம் என்று சிந்திக்கும் ஒரு காலகட்டத்தில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது கடந்த ஓராண்டு காலப்பகுதிக்குள் பொறுப்புக் கூறல் தொடர்பில் என்னென்ன செய்திருக்கிறது ? முதலாவதாக, அவர்கள் செம்மணிப் புதை குழியும் உட்பட எல்லாப் புதைகுழிகளின் விசாரணைகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்கள். இந்த விடயத்தில் அரசாங்கம் உள்நாட்டு நீதியின் நம்பகத்தன்மையை நிரூபிப்பதற்கான ஒரு வாய்ப்பாக செம்மணியைப் பார்க்கின்றது. இரண்டாவதாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இந்த மாதம் நீக்கப்போவதாக ஒரு தகவல் வெளிவந்திருக்கிறது.எனினும் இக்கட்டுரை எழுதப்படும் நாள்வரையிலும் அதுதொடர்பாக உத்தியோகபூர்வமான அறிவிப்புகள் எவையும் வெளி வந்திருக்கவில்லை. மூன்றாவதாக,ஊழலுக்கு எதிரான கைது நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.இதுவரை 70 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் அவர்களுக்குள் முன்னாள் ஜனாதிபதி ரணிலும் உட்பட முன்னாள் அமைச்சர்கள்,பிரபல அரசியல்வாதிகள்,படைத்துறைப் பிரதானிகள்,காவல்துறைப் பிரதானிகள்,உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளோடு தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படுகின்ற பாதாள உலகத் தலைவர்கள் போன்ற பலரும்அடங்குவர். இக்கைது நடவடிக்கைகளின் மூலம் நாடு ஊழலுக்கு எதிராகத் துணிச்சலாக முன்னேறி வருகிறது என்ற ஒரு தோற்றத்தை அரசாங்கம் கட்டி எழுப்பி வருகிறது.இதுவும் ஐநாவில் அரசாங்கம் காட்டக்கூடிய ஒரு வீட்டு வேலையாக இருக்கும். நாலாவதாக,அரசாங்கம் அதன் ஓராண்டு நிறைவை முன்னிட்டு வடக்கில் பல அபிவிருத்தி திட்டங்களையும் தொடங்கியிருக்கிறது.இவ்வாறு தொடங்கப்பட்டிருக்கும் அபிவிருத்தித் திட்டங்களில் சர்வதேச விளையாட்டு மைதானம், வட்டுவாகல் பாலத்தைப் புதிதாகக் கட்டுவது, தெங்கு முக்கோணத் திட்டம், வவுனியா,மத்திய பொருளாதாரம் மையத்தைத் திறந்து வைத்தமை, யாழ்ப்பாணத்தில் ஒரு கடவுச்சீட்டு அலுவலகத்தைத் திறந்தமை, மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம்கட்ட அபிவிருத்தியைத் தொடக்கி வைத்தமை,யாழ் பொதுசன நூலகத்தை டிஜிட்டல் தளத்தில் நுகர்வதற்குரிய ஏற்பாடுகளைத் தொடக்கி வைத்தமை ….போன்ற பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களும் அடங்கும். இந்த அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் அரசாங்கம் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகப் பாரபட்சமின்றி உழைக்கிறது என்ற ஒரு தோற்றத்தை வெளியே காட்ட முடியும். அனுர ஜனாதிபதியாகத் தெரிவு தெரிவு செய்யப்பட்ட ஓராண்டுக்குள் அவர் தமிழ் மக்களுக்குச் செய்தவற்றின் பட்டியல் ஒன்றை அரசாங்கம் ஐநாவில் காட்ட முடியும். மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அரசாங்கத்துக்கு வாய்ப்புகளை வழங்கலாம் என்று சிந்திக்கின்ற ஒரு ராஜதந்திரச் சூழலில் அரசாங்கம் மேற்கண்டவாறு ஐநாவை நோக்கி ஒரு தொகுதி வீட்டு வேலைகளைச் செய்து வருகிறது. இதுவரையிலுமான கைது நடவடிக்கைகளில் போர்க் குற்றங்கள் அல்லது தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களோடு தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் அநேகமாக இல்லை. ஒரு கடற்படை பிரதானி கைது செய்யப்பட்டிருக்கிறார். அதுவும் தென்னிலங்கையில் இடம்பெற்ற ஒரு கடத்தல் சம்பவத்தோடு தொடர்புடையது என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர் மீதான குற்றச்சாட்டுகளில் நேரடியாகப் போர் குற்றங்கள் சம்பந்தப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. தவிர,ரணில் விக்கிரமசிங்கவின் கைது நடவடிக்கையின்போது அவரை 40 ஆண்டுகளுக்கு முன்னரே கைது செய்து இருந்திருக்க வேண்டும் என்ற பொருள்பட அமைச்சர் விஜித ஹேரத் யாழ்ப்பாணத்தில் வைத்துச் சொன்னார். அதன் பொருள் என்னவென்றால், 40 ஆண்டுகளுக்கு முன்பு போர்க்காலத்தில் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் எதிராக அவர் அங்கம் வகித்த அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்திருக்க வேண்டும் என்பதாகும். ஆனால் ரணில் அண்மையில் கைது செய்யப்பட்டது அவ்வாறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அல்ல. பொதுச் சொத்தைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில்தான். எனவே தொகுத்துப் பார்த்தால் இதுவரை கைது செய்யப்பட்ட 70க்கும் அதிகமானவர்களில் யாருமே போர்க் களத்தில் இடம்பெற்ற தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே இப்பொழுது நடக்கும் கைது நடவடிக்கைகள் நாட்டின் ஒட்டுமொத்த ஊழல் கட்டமைப்புக்கு எதிரானவைகளாகத்தான் காணப்படுகின்றன. ஐநாவில் ஏற்கனவே இயங்கி வருகின்ற சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிக்கும் கட்டமைப்பினால் இனங்காடப்பட்ட படைப்பிரதானிகளுக்கு எதிரானவைகள்கூட அல்ல.அவ்வாறு அடையாளம் காணப்பட்ட சில படைப் பிரதானிகளுக்கு எதிராக ஏற்கனவே கனடா,அமெரிக்கா,பிரித்தானியா போன்றன பயணத் தடைகளை விதித்து, நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன. ஆனால் அரசாங்கமோ அவர்களுக்குப் பொறுப்புகளை வழங்கி வருகிறது. எனவே நாட்டில் தற்பொழுது இடம்பெறும் பெரும்பாலான கைது நடவடிக்கைகள் தமிழ் நோக்கு நிலையில் ஐநாவின் பொறுப்புக்கூறும் செய்முறைகளின் பிரதான பகுதிக்குள் வரவில்லை.அதை ஒரு வீட்டு வேலையாக அரசாங்கம் ஐநாவில் காட்ட முடியாது.ஆனால் உள்நாட்டு நீதியின் அந்தஸ்தை உயர்த்துவதற்கு அவை அரசாங்கத்திற்கு உதவும். எனவே கடந்த ஓராண்டு காலப் பகுதிக்குள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வரும் திருப்பகரமான மாற்றங்களில் ஐநாவில் காட்டக்கூடிய மாற்றங்கள் ஒப்பீட்டளவில் குறைவுதான்.தமிழ் நோக்கு நிலையில் இருந்து உள்நாட்டு நீதியின் நம்பகத்தன்மையை பலப்படுத்துவதற்கு அரசாங்கம் இன்னும் நீண்ட தூரம் போக வேண்டியிருக்கும். “அரசாங்கம் போர் வீரர்களை வேட்டையாடுகிறது” என்ற பொருள்பட நாமல் அண்மையில் எச்சரித்திருந்தார்.இந்த எச்சரிக்கையானது அரசாங்கம் அதன் கைது நடவடிக்கைகளில் எதுவரை போகலாம் என்பதை உணர்த்தும் நோக்கிலானது. எது எவ்வாறு இருப்பினும்,ஜெனிவா கூட்டத்தொடரில் இம்முறை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பலவீனமாக இல்லை என்பதனை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால் தமிழ்த் தரப்பு? இதுவரை நான்குக்கும் குறையாத கடிதங்கள் ஐநாவுக்கு போயிருக்கின்றன. ஒரு கடிதம், தமிழ் தேசிய பேரவையும் சிவில் சமூகங்களும் இணைத்து அனுப்பியது. இரண்டாவது கடிதம், தமிழரசுக் கட்சி அனுப்பியது. மூன்றாவது கடிதம் தமிழ்த் தேசியப் பேரவையின் கடிதத்தில் போதாமைகள் உண்டு என்று கூறி புலம்பெயர்ந்த தமிழ்ச் செயற்பாட்டாளர் ஒருவரும் தாயகத்தில் உள்ள அவருடைய சிவில் சமூக நண்பர்களும் இணைந்து தமிழ்ப் பொது வேட்பாளர் உட்பட சில அரசியல்வாதிகளையும் ஒருங்கிணைத்துக் கொண்டு அனுப்பிய ஒரு கடிதம். நாலாவது கடிதம் பிரித்தானியத் தமிழர் பேரவை அனுப்பியது. இப்படியாக நான்குக்கும் குறையாத கடிதங்கள் ஐநாவை நோக்கிப் போயிருக்கின்றன.அரசில்லாத சிறிய தேசிய இனமாகிய தமிழ் மக்கள் தங்களுக்குள் ஐக்கியப்படாமல் கட்சிக்கொரு கடிதம் சிவில் சமூகத்துக்கு ஒரு கடிதம் என்று “ஈகோ”க்களாகப் பிரிந்து போய் நிற்கிறார்கள். செம்மணி எதிர்பாராத புதிய வாய்ப்புகளைத் தமிழ் மக்களுக்குத் திறந்து விட்டுள்ளது.அதேசமயம் அரசாங்கத்திற்கு அது எதிர்பாராத ஒரு சோதனைக் களம்.ஆனால் அந்தச் சோதனைக் களத்தை அரசாங்கம் ஒருமுகமாக எதிர்கொள்கிறது அந்த விடயத்தில் அரசாங்கம் உள்நாட்டு நீதியின் நம்பகத் தன்மையைப் பலப்படுத்துகிறது என்ற ஒரு தோற்றத்தைக் கட்டியெழுப்பப் பயன்படுத்தி வருகிறது. ஆனால் செம்மணி திறந்து வைத்திருக்கும் புதிய வாய்ப்புகளைத் தமிழ்த் தரப்பு எவ்வாறு கையாளப் போகின்றது? அதுவும் ஜெனிவா கூட்டத் தொடர் நாளை தொடங்கும் பொழுது? செம்மணிக்கு நீதி கேட்டும் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தில் அனைத்துலக விசாரணையைக் கேட்டும் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து கையெழுத்துப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றன. அது வரவேற்கத்தக்கது. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த விடயத்தை முன்னெடுத்து வருகிறது. அதில் கட்சி பேதமின்றி தமிழரசுக் கட்சியும் உட்பட அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒன்றிணைந்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.அது வரவேற்கத்தக்க விடயம். ஐநா கூட்டத் தொடருக்கு சில கிழமைகளுக்கு முன்னராவது அப்படி ஒரு ஞானம் உதித்ததைப் பாராட்ட வேண்டும்.ஐநா கூட்டத் தொடர்களில் தேசிய மக்கள் சக்திக்கு அனுகூலமான நிலைமைகள் அதிகமிருக்கும் ஒரு ராஜதந்திரச் சூழலில் தமிழ்த் தரப்பு அவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுவதுதான் பலமானது பொருத்தமானது. Athavan Newsசெம்மணியின் பின்னணியில் ஐநா கூட்டத் தொடர் - நிலாந்தன்.ஐநாவின் அறுபதாவது கூட்டத்தொடர் இம்மாதம் எட்டாம் தேதி அதாவது நாளை ஆரம்பமாகிறது. இக்கூட்டத் தொடரில் அதிசயங்கள் அற்புதங்கள் நிகழ்வதற்கு இடமில்லை.ஏனென்றால் ஈழத் தமிழர்களின் நோக்கு நிலையில் இருந்து பார்த்த

செம்மணியின் பின்னணியில் ஐநா கூட்டத் தொடர் – நிலாந்தன்.

1 week 2 days ago

semmani950-800x450-1.jpg?resize=750%2C37

செம்மணியின் பின்னணியில் ஐநா கூட்டத் தொடர் – நிலாந்தன்.

ஐநாவின் அறுபதாவது கூட்டத்தொடர் இம்மாதம் எட்டாம் தேதி அதாவது நாளை ஆரம்பமாகிறது. இக்கூட்டத் தொடரில் அதிசயங்கள் அற்புதங்கள் நிகழ்வதற்கு இடமில்லை.ஏனென்றால் ஈழத் தமிழர்களின் நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் ஐநா அதிசயங்களும் அற்புதங்களும் நிகழ்வதற்குரிய ஒரு களம் அல்ல.போராடும் மக்கள் மத்தியில்தான் அதிசயங்களும் அற்புதங்களும் நிகழும்.

எனினும், எல்லாவிதமான வரையறைகளோடும், தமிழ் மக்களுக்கு என்று கடந்த 16 ஆண்டுகளாக திறந்து வைக்கப்பட்டிருக்கும் ஒரே அனைத்துலக அரங்கு மனித உரிமைகள் பேரவைதான். அந்த மனித உரிமைகள் பேரவைக்குள் காலை ஊன்றிக் கொண்டுதான் தமிழ் மக்கள் அடுத்த கட்டத்திற்கு பாயலாம். ஐநாவுக்கு கூட்டுக் கடிதம் எழுதும் ஒரு சந்திப்பின்போது சிவாஜிலிங்கம் அதை ஓர் உவமையோடு சுட்டிக்காட்டியிருந்தார். மனித உரிமைகள் பேரவையை முற்றாக நிராகரிக்க முடியாது. ஏனென்றால் நாங்கள் பாயப் போகிறோம் என்று சொன்னால் எங்கேயாவது ஒரு காலை ஊன்ற வேண்டும்.ஒரு காலை ஊன்றினால்தான் பாயலாம்.இப்போதைக்கு மனித உரிமைகள் பேரவைதான் எங்களுக்குத் தளம். எனவே அதில் ஊன்றியிருக்கும் காலையும் எடுத்து விட்டால் நாங்கள் விழுந்து விடுவோம் என்று சிவாஜி சொன்னார்.

மனித உரிமைகள் பேரவையில் கடந்த நான்கு ஆண்டுகளாக சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகம் ஒன்று இயங்கி வருகிறது. அது தொடர்பாக தமிழ் மக்களுக்கு விமர்சனங்கள் உண்டு.எனினும் அந்த அலுவலகத்தின் அடுத்த கட்டம் தொடர்பாக இந்தமுறை கூட்டத் தொடரில் தீர்மானிக்கப்படும்.ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வந்து சென்றிருக்கும் ஒரு பின்னணியில்,அவர் இங்கு அவதானித்தவற்றின் தொகுப்பாகவும் ஐநாவின் நடவடிக்கைகள் அமையும்.

அனுர அரசுத் தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டு ஓராண்டு முடியும் ஒரு மாதத்தில் ஐநாவின் 60ஆவது கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்த அரசாங்கம் தனக்கு தமிழ் மக்களின் ஆணையும் இருப்பதாகக் கூறிக் கொள்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனக்குக் கிடைத்த ஏழு ஆசனங்களையும் அது தமிழ் மக்கள் தனக்கு வழங்கிய ஆணை என்று ஐநாவிலும் உலக அளவிலும் புதுடில்லியிலும் கூறி வருகிறது. ஐநாவும் புதிய அரசாங்கத்தின் கழுத்தை நெரிப்பதற்குப் பதிலாக அதற்க ஒரு சந்தர்ப்பத்தை வழங்கலாம் என்று சிந்திப்பதாகத் தெரிகிறது. இலங்கை வருகையின் பின் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவிக்கும் கருத்துக்கள் அவ்வாறு கருதத்தக்கவையாக உள்ளன.

இவ்வாறு ஐநா இலங்கைக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கலாம் என்று சிந்திக்கும் ஒரு காலகட்டத்தில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது கடந்த ஓராண்டு காலப்பகுதிக்குள் பொறுப்புக் கூறல் தொடர்பில் என்னென்ன செய்திருக்கிறது ?

முதலாவதாக, அவர்கள் செம்மணிப் புதை குழியும் உட்பட எல்லாப் புதைகுழிகளின் விசாரணைகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்கள். இந்த விடயத்தில் அரசாங்கம் உள்நாட்டு நீதியின் நம்பகத்தன்மையை நிரூபிப்பதற்கான ஒரு வாய்ப்பாக செம்மணியைப் பார்க்கின்றது.

இரண்டாவதாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இந்த மாதம் நீக்கப்போவதாக ஒரு தகவல் வெளிவந்திருக்கிறது.எனினும் இக்கட்டுரை எழுதப்படும் நாள்வரையிலும் அதுதொடர்பாக உத்தியோகபூர்வமான அறிவிப்புகள் எவையும் வெளி வந்திருக்கவில்லை.

மூன்றாவதாக,ஊழலுக்கு எதிரான கைது நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.இதுவரை 70 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் அவர்களுக்குள் முன்னாள் ஜனாதிபதி ரணிலும் உட்பட முன்னாள் அமைச்சர்கள்,பிரபல அரசியல்வாதிகள்,படைத்துறைப் பிரதானிகள்,காவல்துறைப் பிரதானிகள்,உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளோடு தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படுகின்ற பாதாள உலகத் தலைவர்கள் போன்ற பலரும்அடங்குவர்.

இக்கைது நடவடிக்கைகளின் மூலம் நாடு ஊழலுக்கு எதிராகத் துணிச்சலாக முன்னேறி வருகிறது என்ற ஒரு தோற்றத்தை அரசாங்கம் கட்டி எழுப்பி வருகிறது.இதுவும் ஐநாவில் அரசாங்கம் காட்டக்கூடிய ஒரு வீட்டு வேலையாக இருக்கும்.

நாலாவதாக,அரசாங்கம் அதன் ஓராண்டு நிறைவை முன்னிட்டு வடக்கில் பல அபிவிருத்தி திட்டங்களையும் தொடங்கியிருக்கிறது.இவ்வாறு தொடங்கப்பட்டிருக்கும் அபிவிருத்தித் திட்டங்களில் சர்வதேச விளையாட்டு மைதானம், வட்டுவாகல் பாலத்தைப் புதிதாகக் கட்டுவது, தெங்கு முக்கோணத் திட்டம், வவுனியா,மத்திய பொருளாதாரம் மையத்தைத் திறந்து வைத்தமை, யாழ்ப்பாணத்தில் ஒரு கடவுச்சீட்டு அலுவலகத்தைத் திறந்தமை, மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம்கட்ட அபிவிருத்தியைத் தொடக்கி வைத்தமை,யாழ் பொதுசன நூலகத்தை டிஜிட்டல் தளத்தில் நுகர்வதற்குரிய ஏற்பாடுகளைத் தொடக்கி வைத்தமை ….போன்ற பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களும் அடங்கும். இந்த அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் அரசாங்கம் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகப் பாரபட்சமின்றி உழைக்கிறது என்ற ஒரு தோற்றத்தை வெளியே காட்ட முடியும்.

அனுர ஜனாதிபதியாகத் தெரிவு தெரிவு செய்யப்பட்ட ஓராண்டுக்குள் அவர் தமிழ் மக்களுக்குச் செய்தவற்றின் பட்டியல் ஒன்றை அரசாங்கம் ஐநாவில் காட்ட முடியும். மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அரசாங்கத்துக்கு வாய்ப்புகளை வழங்கலாம் என்று சிந்திக்கின்ற ஒரு ராஜதந்திரச் சூழலில் அரசாங்கம் மேற்கண்டவாறு ஐநாவை நோக்கி ஒரு தொகுதி வீட்டு வேலைகளைச் செய்து வருகிறது.

இதுவரையிலுமான கைது நடவடிக்கைகளில் போர்க் குற்றங்கள் அல்லது தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களோடு தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் அநேகமாக இல்லை. ஒரு கடற்படை பிரதானி கைது செய்யப்பட்டிருக்கிறார். அதுவும் தென்னிலங்கையில் இடம்பெற்ற ஒரு கடத்தல் சம்பவத்தோடு தொடர்புடையது என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர் மீதான குற்றச்சாட்டுகளில் நேரடியாகப் போர் குற்றங்கள் சம்பந்தப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

தவிர,ரணில் விக்கிரமசிங்கவின் கைது நடவடிக்கையின்போது அவரை 40 ஆண்டுகளுக்கு முன்னரே கைது செய்து இருந்திருக்க வேண்டும் என்ற பொருள்பட அமைச்சர் விஜித ஹேரத் யாழ்ப்பாணத்தில் வைத்துச் சொன்னார். அதன் பொருள் என்னவென்றால், 40 ஆண்டுகளுக்கு முன்பு போர்க்காலத்தில் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் எதிராக அவர் அங்கம் வகித்த அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்திருக்க வேண்டும் என்பதாகும்.

ஆனால் ரணில் அண்மையில் கைது செய்யப்பட்டது அவ்வாறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அல்ல. பொதுச் சொத்தைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில்தான்.

எனவே தொகுத்துப் பார்த்தால் இதுவரை கைது செய்யப்பட்ட 70க்கும் அதிகமானவர்களில் யாருமே போர்க் களத்தில் இடம்பெற்ற தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

எனவே இப்பொழுது நடக்கும் கைது நடவடிக்கைகள் நாட்டின் ஒட்டுமொத்த ஊழல் கட்டமைப்புக்கு எதிரானவைகளாகத்தான் காணப்படுகின்றன. ஐநாவில் ஏற்கனவே இயங்கி வருகின்ற சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிக்கும் கட்டமைப்பினால் இனங்காடப்பட்ட படைப்பிரதானிகளுக்கு எதிரானவைகள்கூட அல்ல.அவ்வாறு அடையாளம் காணப்பட்ட சில படைப் பிரதானிகளுக்கு எதிராக ஏற்கனவே கனடா,அமெரிக்கா,பிரித்தானியா போன்றன பயணத் தடைகளை விதித்து, நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன. ஆனால் அரசாங்கமோ அவர்களுக்குப் பொறுப்புகளை வழங்கி வருகிறது.

எனவே நாட்டில் தற்பொழுது இடம்பெறும் பெரும்பாலான கைது நடவடிக்கைகள் தமிழ் நோக்கு நிலையில் ஐநாவின் பொறுப்புக்கூறும் செய்முறைகளின் பிரதான பகுதிக்குள் வரவில்லை.அதை ஒரு வீட்டு வேலையாக அரசாங்கம் ஐநாவில் காட்ட முடியாது.ஆனால் உள்நாட்டு நீதியின் அந்தஸ்தை உயர்த்துவதற்கு அவை அரசாங்கத்திற்கு உதவும்.

எனவே கடந்த ஓராண்டு காலப் பகுதிக்குள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வரும் திருப்பகரமான மாற்றங்களில் ஐநாவில் காட்டக்கூடிய மாற்றங்கள் ஒப்பீட்டளவில் குறைவுதான்.தமிழ் நோக்கு நிலையில் இருந்து உள்நாட்டு நீதியின் நம்பகத்தன்மையை பலப்படுத்துவதற்கு அரசாங்கம் இன்னும் நீண்ட தூரம் போக வேண்டியிருக்கும்.

“அரசாங்கம் போர் வீரர்களை வேட்டையாடுகிறது” என்ற பொருள்பட நாமல் அண்மையில் எச்சரித்திருந்தார்.இந்த எச்சரிக்கையானது அரசாங்கம் அதன் கைது நடவடிக்கைகளில் எதுவரை போகலாம் என்பதை உணர்த்தும் நோக்கிலானது. எது எவ்வாறு இருப்பினும்,ஜெனிவா கூட்டத்தொடரில் இம்முறை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பலவீனமாக இல்லை என்பதனை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால் தமிழ்த் தரப்பு?

இதுவரை நான்குக்கும் குறையாத கடிதங்கள் ஐநாவுக்கு போயிருக்கின்றன. ஒரு கடிதம், தமிழ் தேசிய பேரவையும் சிவில் சமூகங்களும் இணைத்து அனுப்பியது. இரண்டாவது கடிதம், தமிழரசுக் கட்சி அனுப்பியது. மூன்றாவது கடிதம் தமிழ்த் தேசியப் பேரவையின் கடிதத்தில் போதாமைகள் உண்டு என்று கூறி புலம்பெயர்ந்த தமிழ்ச் செயற்பாட்டாளர் ஒருவரும் தாயகத்தில் உள்ள அவருடைய சிவில் சமூக நண்பர்களும் இணைந்து தமிழ்ப் பொது வேட்பாளர் உட்பட சில அரசியல்வாதிகளையும் ஒருங்கிணைத்துக் கொண்டு அனுப்பிய ஒரு கடிதம். நாலாவது கடிதம் பிரித்தானியத் தமிழர் பேரவை அனுப்பியது.

இப்படியாக நான்குக்கும் குறையாத கடிதங்கள் ஐநாவை நோக்கிப் போயிருக்கின்றன.அரசில்லாத சிறிய தேசிய இனமாகிய தமிழ் மக்கள் தங்களுக்குள் ஐக்கியப்படாமல் கட்சிக்கொரு கடிதம் சிவில் சமூகத்துக்கு ஒரு கடிதம் என்று “ஈகோ”க்களாகப் பிரிந்து போய் நிற்கிறார்கள்.

செம்மணி எதிர்பாராத புதிய வாய்ப்புகளைத் தமிழ் மக்களுக்குத் திறந்து விட்டுள்ளது.அதேசமயம் அரசாங்கத்திற்கு அது எதிர்பாராத ஒரு சோதனைக் களம்.ஆனால் அந்தச் சோதனைக் களத்தை அரசாங்கம் ஒருமுகமாக எதிர்கொள்கிறது அந்த விடயத்தில் அரசாங்கம் உள்நாட்டு நீதியின் நம்பகத் தன்மையைப் பலப்படுத்துகிறது என்ற ஒரு தோற்றத்தைக் கட்டியெழுப்பப் பயன்படுத்தி வருகிறது. ஆனால் செம்மணி திறந்து வைத்திருக்கும் புதிய வாய்ப்புகளைத் தமிழ்த் தரப்பு எவ்வாறு கையாளப் போகின்றது? அதுவும் ஜெனிவா கூட்டத் தொடர் நாளை தொடங்கும் பொழுது?

செம்மணிக்கு நீதி கேட்டும் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தில் அனைத்துலக விசாரணையைக் கேட்டும் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து கையெழுத்துப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றன. அது வரவேற்கத்தக்கது. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த விடயத்தை முன்னெடுத்து வருகிறது. அதில் கட்சி பேதமின்றி தமிழரசுக் கட்சியும் உட்பட அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒன்றிணைந்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.அது வரவேற்கத்தக்க விடயம். ஐநா கூட்டத் தொடருக்கு சில கிழமைகளுக்கு முன்னராவது அப்படி ஒரு ஞானம் உதித்ததைப் பாராட்ட வேண்டும்.ஐநா கூட்டத் தொடர்களில் தேசிய மக்கள் சக்திக்கு அனுகூலமான நிலைமைகள் அதிகமிருக்கும் ஒரு ராஜதந்திரச் சூழலில் தமிழ்த் தரப்பு அவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுவதுதான் பலமானது பொருத்தமானது.

Athavan News
No image previewசெம்மணியின் பின்னணியில் ஐநா கூட்டத் தொடர் - நிலாந்தன்.
ஐநாவின் அறுபதாவது கூட்டத்தொடர் இம்மாதம் எட்டாம் தேதி அதாவது நாளை ஆரம்பமாகிறது. இக்கூட்டத் தொடரில் அதிசயங்கள் அற்புதங்கள் நிகழ்வதற்கு இடமில்லை.ஏனென்றால் ஈழத் தமிழர்களின் நோக்கு நிலையில் இருந்து பார்த்த

ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய வல்லரசுகளை எதிர்த்து நின்ற வியட்நாம் போராளி 'ஹோ சி மின்'

1 week 2 days ago
ஹோசி மின்னுக்கும் / வியட்னாமுக்கும் , சேலன்ஸ்கிக்கும் / உக்ரைனுக்கும் இடையில் எவ்வளவு பெரிய இடைவெளி. வியட்னாம் ஐ எந்த கூட்டோடும் இணைப்பதற்கு ஹோசி மின் ஓ அவருக்கு பின் வியட்நாமோ முற்படவில்லை. அது தன வியட்நாமின் போராட்டம் சுதந்திர போராட்டமாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சேலன்ஸ்கி நேட்டோவில் இணையும் போராட்டமாக உக்கிரைன் இன் ரசிய எதிர்ப்பை வழிநடத்துகிறார். இதனால் தான் மேற்கு அல்லாத அநேகமான எல்லா நாடுகளும் உக்கிரேனுக்கு ஆதரவு இல்லை.

சமூகங்களை துருவமயப்படுத்தும் சர்வதேச பொறிமுறைகளை ஏற்கோம்; ஐ.நா மனித உரிமை பேரவைக்கு அறிவித்தது இலங்கை

1 week 2 days ago
07 Sep, 2025 | 09:59 AM (நா.தனுஜா) எந்தவொரு வெளியக பொறிமுறையும் தற்போது தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க முயற்சிகளுக்கு இடையூறாக அமைவதுடன், அவை சமூகங்களை துருவமயப்படுத்தும். எனவே சர்வதேச பொறிமுறைகள் தொடர்பான உயர்ஸ்தானிகரின் பரிந்துரைகளை ஒருபோது ஏற்க முடியாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் அண்மையில் வெளியிடப்பட்ட எழுத்துமூல அறிக்கையில் இலங்கையில் ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் சர்வதேச மனித உரிமைகள் நியமனங்களுக்கு அமைவான சுயாதீனமானதும், நியாயமானதுமான பொறுப்புக்கூறல் செயன்முறையை ஸ்தாபிப்பதற்கு தவறியிருக்கின்றன. இந்நிலையில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்திவதற்கு ஏதுவாக பாதிக்கப்பட்ட மற்றும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுக்க ஆக்கப்பூர்வமான செயன்முறையை நோக்கி அரசாங்கம் நகர வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் உள்வாங்கப்பட்டிருந்த கரிசணைகளுக்கு பதிலளித்து, ஜெனீவாவில் உள்ள ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட அலுவலகத்தினால் அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு, நாட்டின் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதில் அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாடு, நல்லிணக்க செயன்முறையை வலுப்படுத்துதல், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம், ஊழல் ஒழிப்பு, நிகழ்நிலை காப்புச் சட்டம் திருத்தம் போன்ற விடயங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கடந்த ஜுன் மாதம் நாட்டுக்கு வருகைதந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு விளக்கப்பட்டது. அதேபோன்று காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் போன்ற கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்துவதன் ஊடாகவும் அவற்றுக்கு அவசியமான நிதி மற்றும் மனித வளங்களை ஒதுக்கீடு செய்வதன் ஊடாகவும் உள்ளக நல்லிணக்க பொறிமுறைகள் வலுப்படுத்தப்படுகின்றன. அத்தோடு தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் சகல தரப்பினருடனான கலந்துரையாடல்கள் மற்றும் சட்ட உருவாக்கத்தை தொடர்ந்து உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும். பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையில் சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகமும் நிறுவப்படும். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இம்மாதம் அளவில் வர்த்தமானியில் வெளியிடுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் இலங்கை நிலைமாற்றத்துக்கு வழிவகுக்க கூடிய மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான வாய்ப்பை பயன்படுத்துவதற்குரிய சந்தர்ப்பத்தை வழங்குமாறும் இலங்கையர்களின் உரிமைகள் மற்றும் நலன்களை மேம்படுத்துவதற்கு இடமளிக்குமாறும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடமும் மனித உரிமைகள் பேரவையிடமும் கோருகிறோம். எந்தவொரு வெளியக பொறிமுறைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய முயற்சிகளுக்கு இடையூறாகவே அமையும் என்பதையும் அவை சமூகங்களை துருவமயப்படுத்தும் என்பதையும் அவதானித்துள்ளோம். எனவே உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் சர்வதேச நடவடிக்கைகள் தொடர்பில் உள்வாங்கப்பட்டுள்ள முடிவுரையையும் பரிந்துரையையும் இலங்கையினால் ஏற்றுக்கொள்ள முடியாது. இன, மத, வர்க்க பேதங்களின் அடிப்படையிலான பிளவுகளோ அல்லது ஒடுக்குமுறைகளோ அற்ற, பல்லினத்தன்மையை கொண்டாடக்கூடிய நாட்டை கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்புடன் கூடிய கடப்பாட்டையும் மக்கள் ஆணையையும் அரசாங்கம் கொண்டிருக்கிறது. இலங்கையில் இனவாதமோ, தீவிரவாதமோ தலைத்தூக்குவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/224416

சமூகங்களை துருவமயப்படுத்தும் சர்வதேச பொறிமுறைகளை ஏற்கோம்; ஐ.நா மனித உரிமை பேரவைக்கு அறிவித்தது இலங்கை

1 week 2 days ago

07 Sep, 2025 | 09:59 AM

image

(நா.தனுஜா)

எந்தவொரு வெளியக பொறிமுறையும் தற்போது தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க முயற்சிகளுக்கு இடையூறாக அமைவதுடன், அவை சமூகங்களை துருவமயப்படுத்தும். எனவே  சர்வதேச பொறிமுறைகள் தொடர்பான உயர்ஸ்தானிகரின் பரிந்துரைகளை ஒருபோது ஏற்க முடியாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் அண்மையில் வெளியிடப்பட்ட எழுத்துமூல அறிக்கையில் இலங்கையில் ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் சர்வதேச மனித உரிமைகள் நியமனங்களுக்கு அமைவான சுயாதீனமானதும், நியாயமானதுமான பொறுப்புக்கூறல் செயன்முறையை ஸ்தாபிப்பதற்கு தவறியிருக்கின்றன.

இந்நிலையில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்திவதற்கு ஏதுவாக பாதிக்கப்பட்ட மற்றும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுக்க ஆக்கப்பூர்வமான செயன்முறையை நோக்கி அரசாங்கம் நகர வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் உள்வாங்கப்பட்டிருந்த கரிசணைகளுக்கு பதிலளித்து, ஜெனீவாவில் உள்ள ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட அலுவலகத்தினால் அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,

நாட்டின் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதில் அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாடு, நல்லிணக்க செயன்முறையை வலுப்படுத்துதல், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம், ஊழல் ஒழிப்பு, நிகழ்நிலை காப்புச் சட்டம் திருத்தம் போன்ற விடயங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து  கடந்த ஜுன் மாதம் நாட்டுக்கு வருகைதந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு விளக்கப்பட்டது.

அதேபோன்று காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் போன்ற கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்துவதன் ஊடாகவும் அவற்றுக்கு அவசியமான நிதி மற்றும் மனித வளங்களை ஒதுக்கீடு செய்வதன் ஊடாகவும் உள்ளக நல்லிணக்க பொறிமுறைகள் வலுப்படுத்தப்படுகின்றன.

அத்தோடு தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் சகல தரப்பினருடனான கலந்துரையாடல்கள் மற்றும் சட்ட உருவாக்கத்தை தொடர்ந்து உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும். பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையில் சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகமும் நிறுவப்படும். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இம்மாதம் அளவில் வர்த்தமானியில் வெளியிடுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் இலங்கை நிலைமாற்றத்துக்கு வழிவகுக்க கூடிய மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான வாய்ப்பை பயன்படுத்துவதற்குரிய சந்தர்ப்பத்தை வழங்குமாறும் இலங்கையர்களின் உரிமைகள் மற்றும் நலன்களை மேம்படுத்துவதற்கு இடமளிக்குமாறும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடமும் மனித உரிமைகள் பேரவையிடமும் கோருகிறோம். 

எந்தவொரு வெளியக பொறிமுறைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய முயற்சிகளுக்கு இடையூறாகவே அமையும் என்பதையும் அவை சமூகங்களை துருவமயப்படுத்தும் என்பதையும் அவதானித்துள்ளோம். எனவே உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் சர்வதேச நடவடிக்கைகள் தொடர்பில் உள்வாங்கப்பட்டுள்ள முடிவுரையையும் பரிந்துரையையும் இலங்கையினால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இன, மத, வர்க்க பேதங்களின் அடிப்படையிலான பிளவுகளோ அல்லது ஒடுக்குமுறைகளோ அற்ற, பல்லினத்தன்மையை கொண்டாடக்கூடிய நாட்டை கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்புடன் கூடிய கடப்பாட்டையும் மக்கள் ஆணையையும் அரசாங்கம் கொண்டிருக்கிறது. இலங்கையில் இனவாதமோ, தீவிரவாதமோ தலைத்தூக்குவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/224416

இலங்கையின் பாதாள உலகக் குழுத் தலைவர் ஓமானில் கைது!

1 week 2 days ago
இலங்கையின் பாதாள உலகக் குழுத் தலைவர் ஓமானில் கைது! இலங்கையைச் சேர்ந்த பாதாள உலகக் குழுத் தலைவரான ‘மிதிகம சூட்டி’ என அழைக்கப்படும் பிரபாத் மதுஷங்க ஓமானில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தென்னிலங்கையில் செயற்படுகின்ற பாதாள உலகக் குழுவின் தலைவர் எனவும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் உறுப்பினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர், தற்போது பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டாவுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்ததாகவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. முதலில் டுபாய்க்கு தப்பிச்சென்று அதன் பின்னர் ஓமானில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்த மதுஷங்கவை ஓமான் பொலிஸார் கைது செய்துள்ளனர். https://athavannews.com/2025/1446294

இலங்கையின் பாதாள உலகக் குழுத் தலைவர் ஓமானில் கைது!

1 week 2 days ago

Arrested-Heroin.jpg?resize=750%2C375&ssl

இலங்கையின் பாதாள உலகக் குழுத் தலைவர் ஓமானில் கைது!

இலங்கையைச் சேர்ந்த பாதாள உலகக் குழுத் தலைவரான ‘மிதிகம சூட்டி’ என அழைக்கப்படும் பிரபாத் மதுஷங்க ஓமானில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்னிலங்கையில் செயற்படுகின்ற பாதாள உலகக் குழுவின் தலைவர் எனவும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் உறுப்பினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவர், தற்போது பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டாவுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்ததாகவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

முதலில் டுபாய்க்கு தப்பிச்சென்று அதன் பின்னர் ஓமானில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்த மதுஷங்கவை ஓமான் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

https://athavannews.com/2025/1446294

சிறிதரன் எம்.பியின் கருத்து:முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் இல்லையா?

1 week 2 days ago
இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் இனமே அல்ல, இனம் என்பதன் வரைவிலக்கணத்தை தளர்த்த்தினால் கூட. சுன்னி, மற்றும் ஷியா என்பவை மதங்கள். அதனால் தான் அரபு, மற்றும் பெர்சியன் (ஈரான்) என்ற இனக்குழுமங்களை தாண்டி வேறு பல இனங்களுக்கும் இஸ்லாம் பரவ்வி உள்ளது, கிறிஸ்தவம் போல. பாகிஸ்தானில் முஸ்லீம் என்ற இனம் இல்லை, புஞ்சபி என்பதே பெரும்பான்மை இனம், அடுத்து பாஸ்துன் இனம். இப்படியே, இஸ்லாம் மதத்தை தழுவிய நாடுகளில் எல்லாம். மிகப்பெரிய முஸ்லீம் நாடான இந்தோனேசியாவில் கூட முஸ்லீம் என்ற இனம் இல்லை, ஜவனீஸ் என்பதே வீதாசாரத்தில் மிகப் பெரிய இனம் இந்தோனேசியாவில். இலங்கை முஸ்லிம்கலில் மிகச்சிறிதளவு அரபு கலப்பு இருக்கிறது. இலங்கையில் உள்ள முஸ்லிம்களின் அரபு கலப்பை விட கூடியளவு கலப்பு பாகிஸ்தானில், இந்தியாவில் உள்ள முஸ்லிம்களில் இருகிறது . குறிப்பாக கேரளாவில் மாப்பிளை முஸ்லிம்கள் என்ற (அரபு கலப்பு தோற்றப் ) பிரிவு கேரளா முஸ்லிம்களில் இருக்கிறது. இவர்கள் எல்லோருமே (தாய் வழி) இனத்தையே அவர்களின் இனமாக அடையாளப்படுத்துவது. ஆகவே, இலங்கை முஸ்லிம்களை அரேபியர் என்ற இனக்குழுமமாக அடையாளப்படுத்தாது. இலங்கையில் மலேயே வழித்தோன்றல் முஸ்லிகளும் இருக்கிறார்கள், அப்போது ஏன் இலங்கை முஸ்லிம்களை மலேயர் என்ற இனக்குழுமமாக அடையாளப்டுத்த முடியாது என்ற கேள்வியும் எழுகிறது. இலங்கை முஸ்லிம்கள் சொல்வது போல அடையாளப்டுத்தினால், சிங்களவர் ஐரோப்பியர் என்ற அடையாளம் வரும். மலையாகத் தமிழர் என்ற அடையாளம் சமூக அடையாளமே தவிர, இன அடையாளம் அல்ல. இலங்கை முஸ்லிம்களின் புரட்டு வாதம் எந்தவொரு தர்க்கம், விஞ்ஞான, மற்றும் மானிட, தொல்லியல், வரலாற்று அடிப்படைகளில் நின்று பிடிக்காது.

போதைப்பொருள் வியாபாரத்தை ராஜபக்ஷக்கள் மீது சுமத்த இடமளிக்க போவதில்லை - நாமல்

1 week 2 days ago
07 Sep, 2025 | 11:07 AM (இராஜதுரை ஹஷான்) எமது கரங்களில் இரத்தக்கறை படியவில்லை. சட்டவிரோத செயற்பாடுகளுக்கு துணைபோகவில்லை. போதைப்பொருள் வியாபாரத்தை ராஜபக்ஷர்கள் மீது சுமத்த இடமளிக்க போவதில்லை. உண்மையை வெளிப்படுத்தும் வரை அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்போம்.நுவரெலியாவில் நடத்திச் செல்லப்பட்ட ஐஸ் போதைப்பொருள் நிலையத்தின் இடம் யாருக்கு சொந்தமானது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். சமூக வலைத்தளங்களில் முன்வைக்கும் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிக்கிறோம் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் சனிக்கிழமை (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் தொடர்பில் பொலிஸார் மாறுப்பட்ட விடயங்களை குறிப்பிட்டுள்ளனர்.முறையான விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்ள வேண்டும். கட்சி மட்டத்தில் அந்த உறுப்பினரின் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளது. அரசியல் பழிவாங்கலில்லாமல் நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். ஒழுக்கமாகவே நாங்கள் செயற்படுகிறோம்.கட்சியின் எவரேனும் உறுப்பினர் ஒழுக்கமற்ற வகையில் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது அரசியல் நிலைப்பாட்டுக்கு இந்த சம்பவத்தை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள கூடாது. நடுநிலையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும்,நியாயம் கிடைக்கும். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் தமது பொறுப்பை சரிவர செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அரசாங்கத்தின் உயர் பதவிகளில் உள்ளார்கள். பொறுப்பற்ற வகையில் செயற்பட்டதற்கான பொறுப்பினை அவர்கள் ஏற்காமல் அதனையும் பிறிதொரு தரப்பினர் மீது சுமத்துகிறார்கள். சுங்கத்தில் இருந்து எவ்வித பரிசோதனைகளுமின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் பொலிஸாருக்கு மூன்கூட்டியதாகவே தகவல்கள் கிடைத்திருந்ததா, வெளிநாட்டு புலனாய்வு பிரிவு இந்த கொள்கலன்கள் தொடர்பில் ஏதேனும் அறிவித்திருந்ததா, நுவரெலியா பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் நடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தற்போது குறிப்பிடப்படுகிறது. இந்த இடம் யாருக்கு சொந்தமானது என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். இலங்கையை போதைப்பொருள் மையமாக மாற்றியமைக்க வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். எமது கரங்களில் இரத்தக்கறை படியவில்லை.சட்டவிரோத செயற்பாடுகளுக்கு நாங்கள் ஒருபோதும் துணைபோகவில்லை.ஆகவே நாங்கள் திணறபோவதில்லை என்று அரசாங்கத்திடம் குறிப்பிட்டுக்கொள்கிறோம்.முறையான மற்றும் நடுநிலையான விசாரணைகளை மேற்கொண்டு உண்மையை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு உண்டு. போதைப்பொருள் வியாபாரத்தை ராஜபக்ஷர்கள் மீது சுமத்த இடமளிக்க போவதில்லை. உண்மையை வெளிப்படுத்தும் வரை அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்போம் என்றார். https://www.virakesari.lk/article/224424

போதைப்பொருள் வியாபாரத்தை ராஜபக்ஷக்கள் மீது சுமத்த இடமளிக்க போவதில்லை - நாமல்

1 week 2 days ago

07 Sep, 2025 | 11:07 AM

image

(இராஜதுரை ஹஷான்)

எமது கரங்களில் இரத்தக்கறை படியவில்லை. சட்டவிரோத செயற்பாடுகளுக்கு துணைபோகவில்லை. போதைப்பொருள் வியாபாரத்தை ராஜபக்ஷர்கள் மீது சுமத்த இடமளிக்க போவதில்லை. உண்மையை வெளிப்படுத்தும் வரை அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்போம்.நுவரெலியாவில் நடத்திச் செல்லப்பட்ட ஐஸ் போதைப்பொருள் நிலையத்தின் இடம் யாருக்கு சொந்தமானது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். சமூக வலைத்தளங்களில் முன்வைக்கும் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிக்கிறோம் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில்  சனிக்கிழமை (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் தொடர்பில்  பொலிஸார் மாறுப்பட்ட விடயங்களை குறிப்பிட்டுள்ளனர்.முறையான விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்ள வேண்டும். கட்சி மட்டத்தில் அந்த உறுப்பினரின் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளது. அரசியல் பழிவாங்கலில்லாமல் நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஒழுக்கமாகவே நாங்கள் செயற்படுகிறோம்.கட்சியின் எவரேனும் உறுப்பினர் ஒழுக்கமற்ற வகையில் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது அரசியல் நிலைப்பாட்டுக்கு இந்த சம்பவத்தை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள கூடாது. நடுநிலையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும்,நியாயம் கிடைக்கும்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் தமது பொறுப்பை சரிவர செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அரசாங்கத்தின் உயர் பதவிகளில் உள்ளார்கள். பொறுப்பற்ற வகையில் செயற்பட்டதற்கான பொறுப்பினை அவர்கள் ஏற்காமல் அதனையும் பிறிதொரு தரப்பினர் மீது சுமத்துகிறார்கள்.

சுங்கத்தில் இருந்து எவ்வித பரிசோதனைகளுமின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் பொலிஸாருக்கு மூன்கூட்டியதாகவே தகவல்கள் கிடைத்திருந்ததா, வெளிநாட்டு புலனாய்வு பிரிவு இந்த கொள்கலன்கள் தொடர்பில் ஏதேனும் அறிவித்திருந்ததா, நுவரெலியா பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் நடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தற்போது குறிப்பிடப்படுகிறது. இந்த இடம் யாருக்கு சொந்தமானது என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். இலங்கையை போதைப்பொருள் மையமாக மாற்றியமைக்க வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். 

எமது கரங்களில் இரத்தக்கறை படியவில்லை.சட்டவிரோத செயற்பாடுகளுக்கு நாங்கள் ஒருபோதும் துணைபோகவில்லை.ஆகவே நாங்கள் திணறபோவதில்லை என்று அரசாங்கத்திடம் குறிப்பிட்டுக்கொள்கிறோம்.முறையான மற்றும் நடுநிலையான விசாரணைகளை மேற்கொண்டு உண்மையை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு உண்டு. போதைப்பொருள் வியாபாரத்தை ராஜபக்ஷர்கள் மீது சுமத்த இடமளிக்க போவதில்லை. உண்மையை வெளிப்படுத்தும் வரை அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/224424

உள்ளக விசாரணைகளின் பொறுப்பாளராக சர்வதேசம் இருக்க முடியாது : வெள்ளைக்கொடி மாத்திரமல்ல அனைத்தும் விசாரிக்கப்படும் - பிரதமர் ஹரிணி

1 week 2 days ago
07 Sep, 2025 | 12:05 PM (லியோ நிரோஷ தர்ஷன்) பொறுப்புக்கூறல் விசாரணகளை முன்னெடுப்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை திருப்திப்படுத்துவதற்காகவோ அல்லது மகிழ்விப்பதற்காகவோ அல்ல. எமக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கே கடமைப்பட்டுள்ளோம். செம்மணி மனித புதைக்குழி மாத்திரம் அல்ல வேறு பல மனித புதைக்குழிகள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன. இந்த விசாரணைகள் ஊடாக பக்கச்சார்பின்றி நேர்மையாக அரசாங்கத்தினால் செயல்பட முடியும் என்பதனை உலகிற்க வெளிப்படுத்தியுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மேலும் இந்த விசாரணைகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை தேவைக்கு ஏற்ப சர்வதேசத்திடமிருந்து பெற்றுக்கொள்ளவும், விசாரணை பொறிமுறைக்கு பொறுப்பானவர்களாக இலங்கை இருக்க வேண்டுமே தவிர அந்த பொறுப்பில் சர்வதேசம் இருக்க முடியாது. முதலில் ஜெனிவா சக்கரத்தில் இருந்து விடுப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே பிரதமர் ஹரிணி அமரசூரிய மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில், உண்மையிலேயே உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமையினால் தான் ஜெனிவா குற்றச்சாட்டுக்களும் நெருக்கடிகளும் வலுப்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு சென்று, வெறும் அறிக்கைகளை சமர்பித்து வந்துள்ளார்களே தவிர அங்கு வழங்கும் உறுதிமொழிகளை உள்நாட்டில் நிறைவேற்றுவதில் ஆர்வம் செலுத்தவில்லை. ஜெனிவாவில் மனித உரிமைகள் அமர்வுகள் நடக்கும் போது இலங்கையிலிருந்து செல்லும் தரப்பு அறிக்கையை சமர்பித்து விட்டு நாடு திரும்பியதும் அதனை மறந்து விடுகின்றனர். மறுபடியும் ஜெனிவா அமர்வுகள் ஆரம்பிக்கும் போது தான் வழங்கிய உறுதிமொழிகளும் அறிக்கையும் அவர்களின் நினைவுக்கு வருகிறது. இதுவரை காலமும் இவ்வாறானதொரு நிலைமையே நாட்டில் இருந்துள்ளது. சர்வதேசத்துடன் தொடர்புப்பட்ட விடயங்களாக இவற்கை கருதும் போது இதுவொரு தவறான அணுகுமுறையாகும். ஜெனிவா மனித உரிமைகள் விடயத்தில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவது, கொள்கை ரீதியாக செயல்படுவது என்பது தொடர்பில் அரசாங்கம் ஏற்கனவே தீர்மானங்களை எடுத்துள்ளது. உதாரணமாக செம்மணி மனித புதைக்குழி உட்பட பல சம்பவங்கள் குறித்து விசாhரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஊடகங்களை அழைத்து சென்று அந்த விசாரணைகளை பிரசாரம் செய்ய வேண்டிய தேவை இல்லை. மறுபுறம் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எந்தவொரு விசாரணைக்கும் அரசாங்கம் தடையாக இருக்க வில்லை என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். மனித உரிமைகள் சார்ந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆதாரங்கள் இருப்பின் முறைப்பாடு செய்யலாம். சுயாதீனமான விசாரணைகள் முன்னெடுக்கப்படும். ஆகவே யாரையும் பாதுகாப்பதற்காக அரசாங்கம் கடமைப்பட்டில்லை. அது மாத்திரமன்றி ஜெனிவா குற்றச்சாட்டுகளுக்கு அப்பால் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் முதன்மையான கடமையாக உள்ளது. எனவே ஜெனிவா சக்கரத்தில் இருந்து முதலில் வெளிவர வேண்டும். பொறுப்புக்கூறல் விசாரணகளை முன்னெடுப்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை திருப்திப்படுத்துவதற்காகவோ அல்லது மகிழ்விப்பதற்காகவோ அல்ல. மாறாக எமக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கே கடமைப்பட்டுள்ளோம். விசேடமாக இந்த அரசாங்கம் அவர்களுக்கு உரியது என்பதை பாதிக்கப்பட்ட மக்கள் உணர வேண்டும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் அனைத்து விசாரணைகளும் முன்னெடுக்கப்படும். இதுவே எமது நிலைப்பாடாகும். ஆனால் இதுவரைக் காலமும் அந்த விசாரணைகள் இடம்பெறவில்லை என்பது வேறு ஒரு விடயமாகும். செம்மணி மனித புதைக்குழி மாத்திரம் அல்ல வேறு பல மனித புதைக்குழிகள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன. இந்த விசாரணைகள் ஊடாக பக்கச்சார்பின்றி நேர்மையாக அரசாங்கத்தினால் செயல்பட முடியும் என்பதனையும் , எந்தவொரு விசாரணையையும் முன்னெடுக்க முடியும் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளோம். இந்த விசாரணைகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை தேவைக்கு ஏற்ப சர்வதேசத்திடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் விசாரணை பொறிமுறைக்கு பொறுப்பானவர்களாக இலங்கை இருக்க வேண்டும். மாறாக அந்த பொறுப்பில் சர்வதேசம் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை நாங்கள் நிராகரிக்கின்றோம். எனவே ஜெனிவா குற்றச்சாட்டுக்களில் நிபுணத்துவ ஒத்துழைப்புகளை சர்வதேசத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளவும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படவும் தயராகவே உள்ளோம். ஆனால் விசாரணைகளின் பொறுப்பாளர்களாக இலங்கை இருக்கும். வெள்ளைக்கொடி மாத்திரமல்ல முன்னெடுக்கப்பட வேண்டிய எந்தவொரு விசாரணைகளுக்கும் அரசாங்கம் தடையாக இருக்காது என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/224415

உள்ளக விசாரணைகளின் பொறுப்பாளராக சர்வதேசம் இருக்க முடியாது : வெள்ளைக்கொடி மாத்திரமல்ல அனைத்தும் விசாரிக்கப்படும் - பிரதமர் ஹரிணி

1 week 2 days ago

07 Sep, 2025 | 12:05 PM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

பொறுப்புக்கூறல் விசாரணகளை முன்னெடுப்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை திருப்திப்படுத்துவதற்காகவோ அல்லது மகிழ்விப்பதற்காகவோ அல்ல. எமக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கே கடமைப்பட்டுள்ளோம். செம்மணி மனித புதைக்குழி மாத்திரம் அல்ல வேறு பல மனித புதைக்குழிகள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன. இந்த விசாரணைகள் ஊடாக பக்கச்சார்பின்றி நேர்மையாக அரசாங்கத்தினால் செயல்பட முடியும் என்பதனை உலகிற்க வெளிப்படுத்தியுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மேலும் இந்த விசாரணைகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை தேவைக்கு ஏற்ப சர்வதேசத்திடமிருந்து பெற்றுக்கொள்ளவும், விசாரணை பொறிமுறைக்கு பொறுப்பானவர்களாக இலங்கை இருக்க வேண்டுமே தவிர அந்த பொறுப்பில் சர்வதேசம் இருக்க முடியாது. முதலில் ஜெனிவா சக்கரத்தில் இருந்து விடுப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே பிரதமர் ஹரிணி அமரசூரிய மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உண்மையிலேயே உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமையினால் தான் ஜெனிவா குற்றச்சாட்டுக்களும் நெருக்கடிகளும் வலுப்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு சென்று, வெறும் அறிக்கைகளை சமர்பித்து வந்துள்ளார்களே தவிர அங்கு வழங்கும் உறுதிமொழிகளை உள்நாட்டில் நிறைவேற்றுவதில் ஆர்வம் செலுத்தவில்லை.

ஜெனிவாவில் மனித உரிமைகள் அமர்வுகள் நடக்கும் போது இலங்கையிலிருந்து செல்லும் தரப்பு அறிக்கையை சமர்பித்து விட்டு நாடு திரும்பியதும் அதனை மறந்து விடுகின்றனர். மறுபடியும் ஜெனிவா அமர்வுகள் ஆரம்பிக்கும் போது தான் வழங்கிய உறுதிமொழிகளும் அறிக்கையும் அவர்களின் நினைவுக்கு வருகிறது.  இதுவரை காலமும்  இவ்வாறானதொரு நிலைமையே நாட்டில் இருந்துள்ளது.

சர்வதேசத்துடன் தொடர்புப்பட்ட விடயங்களாக இவற்கை கருதும் போது இதுவொரு தவறான அணுகுமுறையாகும். ஜெனிவா மனித உரிமைகள் விடயத்தில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவது, கொள்கை ரீதியாக செயல்படுவது என்பது தொடர்பில் அரசாங்கம் ஏற்கனவே தீர்மானங்களை எடுத்துள்ளது. உதாரணமாக செம்மணி மனித புதைக்குழி உட்பட பல சம்பவங்கள் குறித்து விசாhரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஊடகங்களை அழைத்து சென்று அந்த விசாரணைகளை பிரசாரம் செய்ய வேண்டிய தேவை இல்லை.

மறுபுறம் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எந்தவொரு விசாரணைக்கும் அரசாங்கம் தடையாக இருக்க வில்லை என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். மனித உரிமைகள் சார்ந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆதாரங்கள் இருப்பின் முறைப்பாடு செய்யலாம். சுயாதீனமான விசாரணைகள் முன்னெடுக்கப்படும். ஆகவே யாரையும் பாதுகாப்பதற்காக அரசாங்கம் கடமைப்பட்டில்லை.

அது மாத்திரமன்றி ஜெனிவா குற்றச்சாட்டுகளுக்கு அப்பால் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் முதன்மையான கடமையாக உள்ளது. எனவே ஜெனிவா சக்கரத்தில் இருந்து முதலில் வெளிவர வேண்டும்.  பொறுப்புக்கூறல் விசாரணகளை முன்னெடுப்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை திருப்திப்படுத்துவதற்காகவோ அல்லது மகிழ்விப்பதற்காகவோ அல்ல. மாறாக எமக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கே கடமைப்பட்டுள்ளோம். விசேடமாக இந்த அரசாங்கம் அவர்களுக்கு உரியது என்பதை பாதிக்கப்பட்ட மக்கள் உணர வேண்டும். 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் அனைத்து விசாரணைகளும் முன்னெடுக்கப்படும். இதுவே எமது நிலைப்பாடாகும். ஆனால் இதுவரைக் காலமும்  அந்த விசாரணைகள் இடம்பெறவில்லை என்பது வேறு ஒரு விடயமாகும். செம்மணி மனித புதைக்குழி மாத்திரம் அல்ல வேறு பல மனித புதைக்குழிகள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.

இந்த விசாரணைகள் ஊடாக பக்கச்சார்பின்றி நேர்மையாக அரசாங்கத்தினால் செயல்பட முடியும் என்பதனையும் , எந்தவொரு விசாரணையையும் முன்னெடுக்க முடியும் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளோம்.  இந்த விசாரணைகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை தேவைக்கு ஏற்ப சர்வதேசத்திடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் விசாரணை பொறிமுறைக்கு பொறுப்பானவர்களாக இலங்கை இருக்க வேண்டும். மாறாக அந்த பொறுப்பில் சர்வதேசம் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை நாங்கள் நிராகரிக்கின்றோம். 

எனவே ஜெனிவா குற்றச்சாட்டுக்களில் நிபுணத்துவ ஒத்துழைப்புகளை சர்வதேசத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளவும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படவும் தயராகவே உள்ளோம். ஆனால் விசாரணைகளின் பொறுப்பாளர்களாக இலங்கை இருக்கும். வெள்ளைக்கொடி மாத்திரமல்ல  முன்னெடுக்கப்பட வேண்டிய எந்தவொரு விசாரணைகளுக்கும் அரசாங்கம் தடையாக இருக்காது என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/224415

ஐ.நா. வில் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் இலங்கைக்கு ஆதரவாக செயல்படுங்கள் - பன்னாடுகளிடம் அரசாங்கம் கோரிக்கை

1 week 2 days ago
07 Sep, 2025 | 08:26 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படுமாயின், அதற்க எதிராக அனைத்துலக நாடுகளும் செயல்பட வேண்டும். குறிப்பாக ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள சாதகமான சூழலை கருத்தில் கொண்டு இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து நட்பு நாடுகள் அறிக்கை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அரசாங்கம், இம்முறை ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்று முன்வைக்கப்படும் என்றோ வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றோ நம்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது மீளாய்வு கூட்டத்தொடர் நாளை திங்கட்கிழமை (07) ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழு இன்று ஞாயிற்றுக்கிழமை ஜெனிவா சென்றுள்ளது. அத்துடன் பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ, மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இலங்கைக்கான கேந்திரியக் குழு (Core Group on Sri Lanka) ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செப்டம்பர் அமர்வில் ஒரு புதிய தீர்மானத்தை முன்வைக்கவுள்ளது. இந்த புதிய தீர்மானம், ஏற்கனவே உள்ள தீர்மானங்களை விட, மென்மையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 51/1 தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் (Sri Lanka Accountability Project) என்ற பொறிமுறையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதே இதன் பிரதான நோக்கமாக இருக்கும். இருப்பினும் ஜெனிவா விடயத்தை மையப்படுத்தி இலங்கையின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும் வகையில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கொழும்பில் பன்னாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து கலந்துரையாடி இருந்தார். இதன் போது அனைத்து இன மக்கள் வாழும் பகுதிகளிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெற்றிப்பெற்றுள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் என அனைத்து சிறுபான்மை இன மக்களின் நம்பிக்கையை வெற்றிக்கொண்ட அரசாங்கமாகவே இலங்கையின் தற்போதைய ஆட்சி உள்ளது. அனைத்து இன மக்களின் பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் என்பவற்றை உறுதி செய்வதில் முழுவதுமாக ஈடுப்பாட்டுடன் தீர்மானங்களை எடுத்து வருகின்றோம். இதன் பிரகாரம் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் நிழ்நிலை பாதுகாப்பு சட்டம் என்பவற்றை இரத்து செய்வதற்கும் தீர்மானம் எடுத்துள்ளதாக குறிப்பிட்டார். அதேபோன்னு நாட்டில் மக்கள் ஆணையை உறுதி செய்வதற்காக உரிய நேரத்தில் தேர்தல்களை நடத்தி வருகிறோம். மாகாண சபை தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்படும். வன்முறைகள் அற்ற தேர்தல்கள் இடம்பெறுவதற்கு தேவையான சட்ட ஒழுங்குகளை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். கடந்த 11 மாதங்களாக எவ்வித பாரதூரமான மனித உரிமைகள் மீறல்களும் நாட்டில் இடம்பெறவில்லை. காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகிய வற்றின் செயல்பாடுகளை வலுப்படுத்தியுள்ளோம். எனவே இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படுமாயின், அதற்க எதிராக நட்புகள் செயல்பட வேண்டும். குறிப்பாக இலங்கையின் ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள சாதகமான சூழலை கருத்தில் கொண்டு இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து நட்பு நாடுகள் அறிக்கை வெளியிட வேண்டும். எவ்வாறாயினும் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்று முன்வைக்கப்படும் என்றோ வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றோ நம்பவில்லை. அவ்வாறானதொரு சூழல் வந்தால் ஆதரவாக இருக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/224407

ஐ.நா. வில் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் இலங்கைக்கு ஆதரவாக செயல்படுங்கள் - பன்னாடுகளிடம் அரசாங்கம் கோரிக்கை

1 week 2 days ago

07 Sep, 2025 | 08:26 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படுமாயின், அதற்க எதிராக அனைத்துலக நாடுகளும் செயல்பட வேண்டும். குறிப்பாக ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள சாதகமான சூழலை கருத்தில் கொண்டு இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து நட்பு நாடுகள் அறிக்கை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அரசாங்கம், இம்முறை ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்று முன்வைக்கப்படும் என்றோ வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றோ நம்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது மீளாய்வு கூட்டத்தொடர் நாளை திங்கட்கிழமை (07) ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழு இன்று ஞாயிற்றுக்கிழமை ஜெனிவா சென்றுள்ளது.

அத்துடன் பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ, மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இலங்கைக்கான கேந்திரியக் குழு  (Core Group on Sri Lanka)   ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செப்டம்பர் அமர்வில் ஒரு புதிய தீர்மானத்தை முன்வைக்கவுள்ளது.

இந்த புதிய தீர்மானம், ஏற்கனவே உள்ள தீர்மானங்களை விட, மென்மையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 51/1 தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டம்  (Sri Lanka Accountability Project) என்ற பொறிமுறையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதே இதன் பிரதான நோக்கமாக இருக்கும்.

இருப்பினும் ஜெனிவா விடயத்தை மையப்படுத்தி இலங்கையின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும் வகையில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கொழும்பில் பன்னாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.

இதன் போது அனைத்து இன மக்கள் வாழும் பகுதிகளிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெற்றிப்பெற்றுள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் என அனைத்து சிறுபான்மை இன மக்களின் நம்பிக்கையை வெற்றிக்கொண்ட அரசாங்கமாகவே இலங்கையின் தற்போதைய ஆட்சி உள்ளது.

அனைத்து இன மக்களின் பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் என்பவற்றை உறுதி செய்வதில் முழுவதுமாக ஈடுப்பாட்டுடன் தீர்மானங்களை எடுத்து வருகின்றோம். இதன் பிரகாரம் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் நிழ்நிலை பாதுகாப்பு சட்டம் என்பவற்றை இரத்து செய்வதற்கும் தீர்மானம் எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

அதேபோன்னு நாட்டில் மக்கள் ஆணையை உறுதி செய்வதற்காக உரிய நேரத்தில் தேர்தல்களை நடத்தி வருகிறோம். மாகாண சபை தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்படும். வன்முறைகள் அற்ற தேர்தல்கள் இடம்பெறுவதற்கு தேவையான சட்ட ஒழுங்குகளை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

கடந்த 11 மாதங்களாக எவ்வித பாரதூரமான மனித உரிமைகள் மீறல்களும் நாட்டில் இடம்பெறவில்லை. காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகிய வற்றின் செயல்பாடுகளை வலுப்படுத்தியுள்ளோம்.

எனவே இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படுமாயின், அதற்க எதிராக நட்புகள் செயல்பட வேண்டும். குறிப்பாக இலங்கையின் ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள சாதகமான சூழலை கருத்தில் கொண்டு இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து நட்பு நாடுகள் அறிக்கை வெளியிட வேண்டும்.

எவ்வாறாயினும் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்று முன்வைக்கப்படும் என்றோ வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றோ நம்பவில்லை. அவ்வாறானதொரு சூழல் வந்தால் ஆதரவாக இருக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/224407

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் செப்டெம்பர் 8 ஆம் திகதி ஆரம்பம்

1 week 2 days ago
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நாளை ஆரம்பம் 07 Sep, 2025 | 08:27 AM ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நாளைய திங்கட்கிழமை (8) ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், நாளைய தினமே ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான எழுத்துமூல அறிக்கை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஜெனீவாவில் நாளைய தினம் ஜெனீவா நேரப்படி காலை 10.00 மணிக்கு (இலங்கை நேரப்படி பி.ப 1.30) ஆரம்பமாகவிருக்கும் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின் முதலாம் நாள் அமர்வில் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் உரையாற்றுவார். அதனைத்தொடர்ந்து மியன்மார் தொடர்பான உயர்ஸ்தானிகரின் அறிக்கை மற்றும் சுயாதீன விசாரணைப்பொறிமுறை குறித்த விவாதம் நடைபெறும். அதன் பின்னர் ஜெனீவா நேரப்படி நண்பகல் 12.15 மணிக்கு (இலங்கை நேரப்படி பி.ப 3.45) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான விவாதம் இடம்பெறும். 'இலங்கையில் ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறு அமையக்கூடிய சுயாதீனமானதும், நியாயமானதும், செயற்திறன்மிக்கதுமான பொறுப்புக்கூறல் செயன்முறையை ஸ்தாபிப்பதற்குத் தற்போதுவரை தவறியிருக்கின்றன. இந்நிலையில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு பாதிக்கப்பட்ட தரப்பினரதும், சர்வதேச சமூகத்தினதும் நம்பிக்கையை வென்றெடுத்த முன்னேற்றகரமானதொரு செயன்முறையை நோக்கி அரசாங்கம் நகரவேண்டும்' என உயர்ஸ்தானிகர் அலுவலக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வறிக்கை தொடர்பில் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள் தமது கருத்துக்களை முன்வைத்து உரையாற்றியதன் பின்னர், இலங்கை சார்பில் கூட்டத்தொடரில் பங்கேற்றவுள்ள வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும், தாம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளையும் தெளிவுபடுத்திப் பதிலளிப்பார். இது இவ்வாறிருக்க இம்முறை இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான உறுப்புநாடுகளினால் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய பிரேரணை குறித்த உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடல்கள் இம்மாதம் 15 ஆம் திகதியின் பின்னர் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளன. https://www.virakesari.lk/article/224408

கிருஷாந்தி நினைவேந்தல்

1 week 2 days ago
மாணவி கிருஷாந்தி படுகொலையின் 29ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று 07 Sep, 2025 | 08:13 AM 1996 ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மகளீர் உயர்தரப் பாடசாலை மாணவி கிருசாந்தி குமாரசுவாமியின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9மணிக்கு செம்மணி அணையா விளக்குத்திடலில் நடைபெறவுள்ளது. நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்நிகழ்வில் காலை 9மணிக்கு நினைவுச் சுடரேற்றல் மற்றும் மலர்வணக்கம் நடைபெற்று 9.30க்கு நினைவுப் பகிர்வு முன்னெடுக்கப்படவுள்ளது. 10மணிக்கு “வாசலிலே கிருசாந்தி” என்ற கவிதைத் தொகுப்பு வெளியீடு செய்யப்படவுள்ளதோடு 10.30க்கு ஆவண காட்சிப்படுத்தல் நடைபெறவுள்ளது. https://www.virakesari.lk/article/224406