Aggregator
இது NPP க்கு சொம்பு தூக்கும் பதிவல்ல!
இது NPP க்கு சொம்பு தூக்கும் பதிவல்ல!
இது NPP க்கு சொம்பு தூக்கும் பதிவல்ல!
அண்மையில் இளங்குமரன் பற்றி பதிவு போட்டதும் திடீரென NPP யிட்ட காசு வாங்கிட்டார் என்று கொஞ்சபேர் பேச தொடங்கிட்டினம். நான் முகநூலில் எழுதுவதை குறைக்க நினைப்பதற்கான காரணம் இதுதான். இங்கே இருக்கும் அநேகமான வாசிப்பாளர்களுக்கு யதார்த்தத்தை புரிந்துகொள்ளும் ஆர்வமில்லை .
தங்களுக்கு தேவையான பொய்களையும், புரட்டுகளையும் மட்டுமே எதிர்பார்ப்பவர்களாக பெரும்பாலானோர் மாறிவிட்ட சமூகமாகிவிட்டோம். இளங்குமரன் பற்றி நான் அவதானிப்பை வெளியிட்டேன். கட்சி அவரை பயிற்சி கொடுத்து வளர்த்து எடுக்கிறது என்று அவரது நடவடிக்கைகளை பார்த்து கூறி இருந்தேன்.
அதற்குப்பிறகு நடந்த ஒரு நேர்காணலில் இளங்குமரனே அதை ஒத்துக்கொண்டு உள்ளார். பாராளுமன்ற நாட்களில் இரவு 11 மணிவரை கூட வகுப்பு வைத்து கட்சி அவர்களுக்கு பயிற்சி வழங்குவதாக சொல்லி உள்ளார். அந்த நேர்காணலில் கட்சி எப்படி வடகிழக்கில் கால் ஊன்றுகிறது என்று தெளிவாக சொல்லி இருந்தார்.
அது கூட நான் பல தடவை சொன்னதுதான். ஒவ்வொரு பிரதேச மட்டத்திலும் இணைப்பாளர்கள் உள்ளார்கள். அரசியலுக்கு அப்பால் கட்சியை வளர்ப்பதில் கபிலன் போன்றோர் கடுமையாக உழைக்கிறார்கள்.
இளங்குமரன் அந்த பேட்டியில், "கபிலன் இங்கே இருந்து செயற்படுவதால் தான் எங்களால் ஓரளவு நிம்மதியாக கொழும்பிலே சென்று பாராளுமன்றத்தில் கலந்துகொள்ள முடிகிறது" என்று சொல்லியிருந்தார்.
தமிழ் எந்திரன் என்ற யூ டியூப் தளத்தில் அந்த பேட்டி உள்ளது. பாருங்கள், ஆச்சரியப்படுவீர்கள், சில மாதங்களுக்கு முன் வாய் தடுமாறி உளறிக்கொட்டி ஊரெல்லாம் மீம்ஸ் ஆன ஒருத்தர் குறுகிய காலத்திற்குள் எப்படி இப்படி ஒரு பேட்டி கொடுக்க கூடிய ஆளாக மாற முடிந்தது?
நான் ஒரு ஊகத்தில்தான் எழுதினேன். ஆனால், சத்தியமாக பாராளுமன்றத்தினுள்ளேயே எக்ஸ்ரா கிளாஸ் வச்சு வகுப்பு எடுக்கும் அளவுக்கு யோசிக்கவில்லை. ஏதோ நான் எழுதுவதெல்லாம் உண்மை என்று சொல்வதற்காக இதை எழுதவில்லை.
எச்சரிக்கை மணிகளை புரிந்து கொள்ளுங்கள்.
சுமந்திரன் மாகாண சபை தேர்தலில் நின்றால் படு கேவலமாகத் தோற்பார்.
சைக்கிள் கட்சி தனித்து நின்றாலும் படு கேவலமாக தோற்கும்.
கஜேந்திரகுமார் மற்றும் மற்றைய கட்சிகள், (மறைமுகமாக) சிறீதரனின் ஆதரவுடன் முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் போன்ற ஒருவரை முன்நிறுத்தினால் மட்டுமே மாகாண சபை தேர்தலில் வடக்கில் NPP நிறுத்துபவர் முதலமைச்சர் ஆவதை தடுக்க முடியும் என்று நான் எழுதியது போன வருசம்.
இளம்செழியனுக்கு கருத்து கணிப்பு நடத்தி ஆறு மாதம் ஆகிவிட்டது.
ஆனால், மாகாண சபை தேர்தலை எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்று தமிழ் தலைவர்கள் யோசிக்கத் தொடங்க முன்னமே NPP ஒரு பல்கலைக்கழக விரிவுரைளாளரை மாகாண சபை முதல்வர் வேட்பாளராக முன்நிறுத்தி மக்கள் மத்தியில் நன்கு தெரியப்பட்ட ஆளாக வளர்த்து எடுத்துள்ளது.
இப்போதைய நிலைமையில் வடமாகாண சபை தேர்தலில் NPP யை தோற்கடிப்பது கடினமாகிவிட்டது.
கடைசி நேரத்தில் விக்னேஸ்வரன் போன்று ஒருத்தரை திடீரென ஃபேமஸ் ஆக்கி கைகாட்டினால் சனம் வாக்கு போடும் என்று சினிமா தன அரசியலையே நம்மட ஆட்கள் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால், NPP நேர்த்தியாக திட்டமிட்டு தன்னை வளர்த்தெடுத்து அரசியல் சித்தாந்த வகுப்பெடுக்கிறது.
ஜே.வி.பி. என்ற சிங்கள கட்சி யாழ்ப்பாணத்தில் அலுவலகம் திறந்து அங்கே தமிழ் நூலகம் வச்சு இங்கே எந்தநாளும் எவரும் வந்து புத்தகத்தை எடுத்து போகலாம். இங்கே வேறு எந்த பாதுகாப்பும் இல்லை என்று சொல்லுகிறது என்பதைவிட அந்தக் கட்சியின் அரசியல் திட்டமிடலை விபரிக்க வேறு என்ன தேவை?
இப்போதைய நிலையில் NPP முன் நிறுத்தும் ஆள்தான் வட மாகாண முதலமைச்சர்.
கபிலனை விட இன்னும் அதிக தகுதியானவரை முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்து நாங்கள் பதவிக்காக அரசியல் செய்பவர்கள் இல்லை என்று அதிரடி காட்டுவது பற்றியும் அந்த கட்சி யோசிக்கிறது.
தமிழ் தேசிய கட்சிகளுக்கு இருக்கும் ஒரே வழி கூட்டணி வச்சு பொது வேட்பாளரை நிறுத்தி, கணிசமான அளவு புதிய வேட்பாளர்களை நிறுத்துவது மட்டும்தான். அதுவும் இப்போதே செய்யவேண்டும். கடைசி நேரம் வரை காத்திருந்தால் அரோகரா தான்தான்.
சினிமா பாணியில் கடைசி நேரத்தில் திடீர் கூட்டணி அமைச்சு அதிரடி காட்டி, புதுசா ஒருத்தரை வேட்பாளராக காட்டி திடீர் முதல்வர் ஆக்கலாம் என்ற தேய்ந்து போன மக்களை முட்டாளாக்கும் அரசியல் இனி சரி வராது.
ஏனென்றால் உங்களுக்கு போட்டியாக இருப்பது சாதாரண ஆள் அல்ல!
NPP என்ற, வெளியே காட்டிக்கொள்ளாத அறிவுஜீவிகளால் நடத்தப்படும் பெரிய அமைப்பு!
திரும்பவும் சொல்லுறன், இது NPP யிற்கு சொம்பு தூக்கும் பதிவல்ல, தமிழ் அரசியலின் தற்போதைய நிலையை விளக்கும் பதிவு.
ஆறு மாதங்களுக்கு முன் நீதிபதி இளம்செழியனை முன்நிறுத்தி கருத்து கணிப்பு நடத்தியபோது பலர் திட்டி இருந்தார்கள். அப்போது அதை நான் செய்ய காரணம் இப்படி நிலை வரக்கூடாது என்பதற்காகத்தான்.
இன்னும் ஆறு மாதம் கழித்து இந்த பதிவை காட்டி நான் இதை அப்போதே சொல்லி விட்டேன் கேட்டீர்களா என்று எழுதும் நிலை வந்தால், வடமாகாணத்தில் NPP யின் முதலமைச்சரே இருப்பார்.
குறித்து வைத்துக்கொள்ளுங்கள்!
சிவச்சந்திரன் சிவஞானத்தின் முகநூல் பக்கத்தில் இருந்து...
குட்டிக் கதைகள்.
அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்
யாழ்.பல்கலை நூலகத்தில் இருந்து மகசீன்கள் மீட்பு ; சோதனை நடவடிக்கைக்கு பொலிஸ் முஸ்தீபு
இரசித்த.... புகைப்படங்கள்.
"உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
சிரிக்கலாம் வாங்க
நமீபியாவில், பாலைவனச் சிங்கங்கள் கடற்கரையில் காத்திருப்பது ஏன்?
நமீபியாவில், பாலைவனச் சிங்கங்கள் கடற்கரையில் காத்திருப்பது ஏன்?
நமீபியாவில், பாலைவனச் சிங்கங்கள் கடற்கரையில் காத்திருப்பது ஏன்?
இந்தச் சிங்கங்கள் கடற்கரையில் காத்திருப்பது ஏன்?

பட மூலாதாரம், Griet Van Malderen
கட்டுரை தகவல்
இசபெல் கெர்ரெட்சன்
5 மணி நேரங்களுக்கு முன்னர்
நமீபியாவில், ஒரு பாலைவனச் சிங்கக் குழு தங்கள் பாரம்பரிய வேட்டையாடும் இடங்களை விட்டு வெளியேறி, அட்லாண்டிக் கடற்கரைக்குச் சென்று, உலகின் ஒரே 'கடல்சார் சிங்கங்களாக' மாறியுள்ளன. இந்த வியத்தகு நடத்தையை ஒரு புகைப்படக் கலைஞர் படம் பிடித்துள்ளார்.
அது உண்மையிலேயே பிரமிக்க வைக்கும் புகைப்படம்: நமீபியாவின் கூழாங்கற்கள் நிறைந்த கடற்கரையில் ஒரு பெண் சிங்கம் தூரத்தில் பார்வை பதிந்திருக்க, பின்னணியில் சீற்றமான அலைகள் கரையில் வந்து மோதிச் சிதறுகின்றன.
நமீபியாவின் ஸ்கெலிட்டன் கடற்கரையின் கடினமான சூழலில் உயிர்வாழ கடல்நாய்களை வேட்டையாடக் கற்றுக் கொண்ட பாலைவனச் சிங்கங்களில் காமாவும் ஒன்று.
அந்த சிங்கத்தைப் பெல்ஜிய புகைப்படக் கலைஞர் கிரீட் வான் மால்டரென் வியத்தகு முறையில் படம் பிடித்துள்ளார். லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தால் நடத்தப்படும் மதிப்புமிக்க 'ஆண்டின் சிறந்த வன உயிர் புகைப்படக் கலைஞர்' போட்டியில் அவரது புகைப்படம் மிகவும் பாராட்டப்பட்டது.
"அது நாள் முழுவதும் அந்த கடல்நாயைக் கவனித்துக் கொண்டிருந்தது," என்று வான் மால்டரென் கூறுகிறார். அவர் காரில் இருந்தபடியே காமாவைப் பார்த்துக் கொண்டே, அந்தப் படத்தைப் பிடிக்க பல நாட்கள் காத்திருந்தார்.
மொத்தம் 80 சிங்கங்களைக் கொண்ட நமீபியாவில், ஸ்கெலிட்டன் கடற்கரையில் 12 பாலைவனச் சிங்கங்கள் மட்டுமே வாழ்கின்றன.
அவை வறண்ட நமீபிய பாலைவனத்திலிருந்து அட்லாண்டிக் பெருங்கடலுக்கு உணவைத் தேடி இடம்பெயர்ந்து, இந்த புதிய வாழ்விடத்திற்கு ஏற்ப 2017-ஆம் ஆண்டில் தங்கள் உணவு மற்றும் நடத்தையை கடுமையாக மாற்றிக் கொண்டன. மேலும், இந்த மாற்றத்தால் அவை செழித்து வளர்வதாகவும் தெரிகிறது.
'எல்லாமே ஒரு போராட்டம்தான்'
"இந்த விலங்குகள் எவ்வளவு மீள்தன்மை கொண்டவை என்பதைப் புகைப்படம் காட்டுகிறது... அவை உயிர்வாழத் தங்கள் வாழ்விடத்தை மாற்றிக் கொள்கின்றன," என்கிறார் வான் மால்டரென்.
"இந்தச் சிங்கங்கள் கடினமானவை. வாழ்க்கை என்பது உயிர்வாழ்வதைப் பற்றியது, இங்கு எல்லாமே ஒரு போராட்டம்தான்."
காமாவுக்கு மூன்று மாத வயதானதிலிருந்தே அதை வான் மால்டரென் கவனித்து வருகிறார். அதற்கு இப்போது மூன்றரை வயது. "கிட்டத்தட்ட அது வயது வந்த சிங்கமாகிவிட்டது," என்று அவர் கூறுகிறார்.
மேலும், அந்தப் பெண் சிங்கம் ஒரே இரவில் 40 கடல்நாய்களைக் கொல்லக்கூடிய அச்சமூட்டும் வேட்டைக்காரியாக மாறிவிட்டதாகவும் அவர் கூறினார்.
நமீபியாவின் பாலைவனச் சிங்கங்களை 1980 முதல் கண்காணித்து வரும் வனவிலங்கு பாதுகாப்பு நிபுணர் பிலிப் ஸ்டாண்டர், ''காமா, ஸ்கெலிட்டன் கடற்கரையில் வளர்ந்த முதல் தலைமுறை சிங்கங்களில் ஒன்று. வான் மால்டரெனின் புகைப்படம் உண்மையிலேயே முக்கியமானது. ஏனெனில் அது காமா, கடற்கரையில் தனியாக இருந்த முதல் நாளைக் காட்டுகிறது" என்று கூறுகிறார்.
நமீபியாவின் பாலைவனச் சிங்கங்கள் 1980களில் ஸ்கெலிட்டன் கடற்கரையில் வாழ்ந்தன, ஆனால் ஒரு வறட்சி மற்றும் விவசாயிகளுடனான மோதல் காரணமாகப் பெரும்பாலான சிங்கங்கள் அழிந்த பிறகு அவை பாலைவனத்திற்குத் திரும்பின என்று ஸ்டாண்டர் கூறுகிறார். 30 ஆண்டுகளுக்கு பிறகு, அந்த விலங்குகள் "மீண்டும் கடற்கரைக்குத் திரும்பும் வழியைக் கண்டுபிடித்துள்ளன," என்று அவர் கூறுகிறார்.
'நம்பமுடியாத அளவிற்குத் தனித்துவமானவை'
இந்த விலங்குகள் "மிகவும் வாழத் தகுதியற்ற நிலப்பரப்பில், தாவரங்கள் இல்லாத பெரிய மணல் குன்றுகளின் பரப்பில்" வாழப் பழகியுள்ளன என்று 1997 இல் 'பாலைவனச் சிங்கப் பாதுகாப்பு அறக்கட்டளையை' (Desert Lion Conservation Trust) நிறுவிய ஸ்டாண்டர் கூறுகிறார்.
"பாலைவனச் சிங்கங்கள் நம்பமுடியாத அளவிற்குத் தனித்துவமானவை," என்கிறார் ஸ்டாண்டர். அவை எந்தச் சிங்கத்தை விடவும் மிகப்பெரிய வாழ்விடத்தைக் கொண்டுள்ளன என்று அவர் கூறுகிறார்.
மேலும் "அவை மிகவும் ஆரோக்கியமான, சிறந்த விளையாட்டு வீரர்கள். ஒரு பாலைவனச் சிங்கத்தின் சராசரி வாழ்விட எல்லை சுமார் 12,000 சதுர கிமீ (4,600 சதுர மைல்கள்)'' என்று அவர் கூறுகிறார்.
அதேசமயம் செரெங்கேட்டியில் உள்ள ஒரு சிங்கத்தின் வாழ்விட எல்லை பொதுவாக சுமார் 100 சதுர கிமீ (39 சதுர மைல்கள்) இருக்கும் என்று அவர் மேலும் கூறினார். அவை தண்ணீர் இல்லாமலும் உயிர்வாழப் பழகிவிட்டன. "அவை உண்ணும் இறைச்சியிலிருந்து நீர் தேவையின் பெரும்பகுதியை பூர்த்தி செய்கின்றன," என்று ஸ்டாண்டர் கூறுகிறார்.
லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் உயிர் அறிவியல் துறையில் ஒரு மூத்த ஆராய்ச்சியாளரான நடாஷா கூப்பர் கூறுகையில், "சவன்னா வனப்பகுதியில் அல்லது 'லயன் கிங்' படத்தில் வருவது போல ஒரு பெரிய பாறையின் மீது சிங்கங்களைப் பார்த்து நாம் பழகிவிட்டோம், எனவே கடற்கரையில் ஒன்றைப் பார்ப்பது உண்மையிலேயே வித்தியாசமாக இருக்கிறது. இது மிகவும் விந்தையாகவும் அசாதாரணமானதாகவும் உணர்கிறோம்."
பாலைவனச் சிங்கங்கள் சவன்னா சிங்கங்களை விடச் சிறிய குழுக்களாகப் பயணிக்கின்றன என்று கூப்பர் கூறுகிறார். "பொதுவாக, அதிக இரைகள் இருக்கும் பகுதிகளில், குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் சிங்கங்கள் வசிக்கின்றன," என்று அவர் கூறுகிறார்.
"இந்த பகுதியில், போதுமான உணவைப் பெறுவதற்காகச் சிறிய குழுக்களாக அதிக தொலைவுக்குச் சுற்றித் திரிகின்றன."
இது சிங்கங்களைப் படம் பிடிக்கும் பணியை இன்னும் சவாலானதாக ஆக்குகிறது.
"ஒரு புகைப்படக் கலைஞராக இது அருமையாக உள்ளது, ஏனெனில் இந்தச் சிங்கங்கள் எப்போதும் நகர்ந்து கொண்டே இருக்கின்றன," என்று வான் மால்டரென் கூறுகிறார். "அவை சும்மா படுத்துத் தூங்காமல், உயிர்வாழ எப்போதும் வேட்டையாடுகின்றன."

பட மூலாதாரம், Griet Van Malderen
படக்குறிப்பு, நமீபியாவின் பாலைவனச் சிங்கங்கள் மட்டுமே கடல்வாழ் இரைகளை வேட்டையாடத் தெரிந்த சிங்கங்களாக உள்ளன
மீண்டும் கடற்கரைக்கு பயணம்
2015 இல், வறட்சி காரணமாகச் சாதாரணமாக அவை வேட்டையாடும் தீக்கோழிகள், ஓரிக்ஸ் மற்றும் ஸ்ப்ரிங்பாக் போன்ற உள்நாட்டு இரைகள் குறைந்த பிறகு, சிங்கங்கள் மீண்டும் கடலைக் கண்டறிந்து கடற்கரையில் கடலோர இரைகளை வேட்டையாடத் தொடங்கின.
"கடல்நாய்கள் ஒரு வரப்பிரசாதமாக இருந்தன," என்று வான் மால்டரென் கூறுகிறார். "காலநிலை மாற்றம் இந்த பாலைவனச் சிங்கங்களை விளிம்பிற்குத் தள்ளியுள்ளது. இது, அட்லாண்டிக் கடற்கரையில் உயிர்வாழ அசாதாரண வழிகளில் அவற்றைப் பழக்கப்படுத்தியுள்ளது."
பல தலைமுறைகளாகச் சிங்கங்களின் நடத்தை மாறுவதைப் பார்ப்பது "ஆச்சரியமாக இருக்கிறது," என்று அவர் கூறுகிறார். 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வு செய்யப்பட்ட முதல் பாலைவன பெண் சிங்கம் "ஒட்டகச் சிவிங்கிகளை வேட்டையாடுவதில் சிறப்புப் பெற்றிருந்தது," என்று அவர் கூறுகிறார். "இப்போது இந்த கடல்நாய் சிங்கங்களுக்கு ஒரு சிறிய ஓய்வு இடைவெளியைக் கொடுக்கிறது."
2025 மார்ச்சில் கடற்கரையில் இரண்டு குட்டிகள் பிறந்தன என்று வான் மால்டரென் மேலும் கூறுகிறார். "இந்த பரிணாம வளர்ச்சியைக் கண்காணிப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்."
நமீபியாவின் பாலைவனச் சிங்கங்கள் மட்டுமே கடல்வாழ் இரைகளை வேட்டையாடத் தெரிந்த சிங்கங்களாக இருக்கின்றன. "நாங்கள் அவற்றை கடல்சார் சிங்கங்கள் என்று குறிப்பிடுகிறோம், ஏனெனில் அவை கடல் சுற்றுச்சூழலைப் புரிந்துகொள்ளவும் கடலில் இருந்து உணவை உட்கொள்ளவும் கற்றுக் கொண்டுள்ளன," என்று ஸ்டாண்டர் கூறுகிறார்.
ஸ்டாண்டர் நடத்திய ஒரு ஆய்வில், மூன்று இளம் பெண் சிங்கங்கள் 18 மாத காலப்பகுதியில் உட்கொண்ட உயிரிப்பொருட்களில் (biomass) 86% நீர்க்காகங்கள் (cormorants), ஃபிளமிங்கோக்கள் மற்றும் கடல்நாய்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது என்று கண்டறியப்பட்டது.
"இது ஒரு சிறிய சிங்கங்களின் எண்ணிக்கையாக இருந்தாலும், கடலைப் பற்றிய அறிவை பயன்படுத்தி அவை இப்போது மீண்டு வரும் என்று நம்புகிறோம். ஆனால் நாம் அவற்றைப் பாதுகாக்க வேண்டும்," என்கிறார் ஸ்டாண்டர்.
இதற்கு ஸ்கெலிட்டன் கடற்கரையில் வசிக்கும் மனிதர்களுடனான மோதலைக் குறைக்க வேண்டும். சிங்கங்கள் மனிதக் குடியிருப்புகளுக்கு மிக அருகில் வரும்போது அவற்றைப் பயமுறுத்தச் சிங்கங்களை பாதுகாக்கும் காவலர்கள் பட்டாசுகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று ஸ்டாண்டர் கூறுகிறார். மேலும், அப்பகுதியில் வசிக்கும் மக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் பாதுகாக்க, சிங்கங்கள் கடக்கும்போது ஒரு எச்சரிக்கையை அனுப்பும் மெய்நிகர் வேலி அமைப்பையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர் என்று அவர் கூறுகிறார்.
சிங்கங்களைப் பாதுகாப்பதைப் பொறுத்தவரைப் புகைப்படக் கலையும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.
தான் புகைப்படம் எடுக்கும் உயிரினங்களைப் பாதுகாப்பதை ஊக்குவிப்பதே தனது வேலையின் முக்கிய நோக்கம் என்று வான் மால்டரென் கூறுகிறார். "[எனது புகைப்படங்கள்] இந்த விலங்குகளின் அழகையும் அவற்றின் பலவீன நிலையையும் எடுத்துக்காட்டுகின்றன. அவற்றின் மீள்தன்மை நமக்கெல்லாம் ஒரு பாடம். மாற்றத்தை எதிர்கொள்ள, தகவமைத்துக் கொள்ள மற்றும் காலம் கடப்பதற்கு முன் செயல்பட வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.
"விலங்குகள் மீண்டு வரும், அவை, அவற்றின் அறியப்பட்ட அழகு மற்றும் வலிமையைப் மீண்டும் பெறும் திறன் கொண்டவை. நாம் அவற்றிற்கு ஒரு வாய்ப்பு மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற அழகான பாடத்தை அந்தப் புகைப்படம் நமக்குக் கடத்துகிறது" என்று ஸ்டாண்டர் ஒப்புக்கொள்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
🌿 "Looking back on my birthday" / "பிறந்தநாளில் திரும்பிப் பார்க்கிறேன்" [01 / 11 / 2025]
தெற்காசிய தடகள செம்பியன்ஷிப் - இலங்கைக்கு இரண்டாம் இடம்
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025
🌿 "Looking back on my birthday" / "பிறந்தநாளில் திரும்பிப் பார்க்கிறேன்" [01 / 11 / 2025]
அமெரிக்க அணு ஆயுதங்களை ‘உடனடியாக’ சோதனை செய்ய டிரம்ப் உத்தரவு
கார்த்திகையில் மரநடுகை தேசத்தை மாத்திரமல்ல, தமிழ்த் தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும் - ஐங்கரநேசன்
கார்த்திகையில் மரநடுகை தேசத்தை மாத்திரமல்ல, தமிழ்த் தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும் - ஐங்கரநேசன்
31 Oct, 2025 | 06:35 PM
![]()
வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுதுண்டாலும் இயற்கையைப் போற்றி வழிபடுகின்ற தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப்பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. அதேபோன்று, வருடத்தில் எல்லா நாட்களிலும் மரங்களை நடுகை செய்ய இயலுமெனினும் கார்த்திகை மாத மரநடுகையே தமிழர்களின் தேசிய அடையாளத்துடன் கூடியதாகும். கார்த்திகையில் மரங்களை நடுகைசெய்தல் தேசத்தைக் குளிரச்செய்யும் சூழலியற்செயல் மாத்திரமல்ல; அது தமிழ்த் தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும் ஒரு தேசியச் செயற்பாடும் ஆகும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் தீர்மானத்துக்கு அமைவாக 2014ஆம் ஆண்டு முதல் கார்த்திகை மாதம் வட மாகாண மரநடுகை மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பூமி விரைந்து சூடேறி வருவதால் காலநிலையில் படுபாதகமான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. அதிவேகத்துடன் நீண்ட நேரம் நின்று தாக்கும் சூறாவளிகள், காலம் தப்பிக் கொட்டித் தீர்க்கும் அடைமழை, காடுகளில் தீ மூட்டும் கடும் வறட்சி, உயர்ந்து செல்லும் கடல் மட்டம், உயிரினங்களின் பேரழிவு என்று காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நாம் தற்போது அனுபவிக்கத் தொடங்கியுள்ளோம். இதனால், வெப்பநிலை அதிகரிப்புக்குக் காரணமான கரியமிலவாயுவை உறிஞ்சி அகற்றுவதற்கு மரங்களின் நடுகையை ஒரு பேரியக்கமாக முன்னெடுக்கவேண்டிய கட்டாய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
மரநடுகையைப் பெருமளவில் மேற்கொள்வதற்கு கூடுதலான மழைவீழ்ச்சியைப் பெறும் கார்த்திகை மிகப் பொருத்தமான மாதமாகும். ஈழத்தமிழர்களின் வாழ்வியலிலும் கார்த்திகை மாதம் தனித்துவமான இன்னுமொரு சிறப்பினைக் கொண்டுள்ளது. இம்மாதத்திலேயே மண்ணுக்காக மரணித்த மறவர்களைக் கூட்டாக நினைவில் கொள்ளும் நாள் அடங்குகிறது. மரவழிபாட்டைத் தமது ஆதி வழிபாட்டு முறையாகக் கொண்ட தமிழர்கள், இறந்தவர்களின் நினைவாக மரங்களை நடுகைசெய்து, அவற்றை உயிருள்ள நினைவுச்சின்னங்களாகப் போற்றிய பண்பாட்டு மரபைக் கொண்டிருக்கின்றனர்.
தேசியம் என்பது வெறுமனே தட்டையான ஓர் அரசியல் சொல்லாடல் அல்ல. இது ஓர் இனத்தின் வாழ்புலம், மொழி, வரலாறு, பண்பாடு, மத நம்பிக்கைகள் ஆகிய கூறுகளின் திரட்சியான ஒரு வாழ்க்கை முறையாகும்.
அந்த வகையில், கார்த்திகை மாத மரநடுகை என்பது தமிழ்த் தேசிய நோக்கிலும் மிகவும் பொருத்தப்பாடான ஒன்றாகும்.
எனவே தமிழ் மக்கள் கார்த்திகை மரநடுகையை ஒரு சூழல்பேண் நடவடிக்கையாக மாத்திரமல்லாது உணர்வெழுச்சியுடன் கூடிய ஒரு தமிழ்த் தேசியச் செயற்பாடாகவும் கொண்டாட வேண்டியது அவசியமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.