2 months ago
🤣............. அப்படி நடந்தால் சந்தோசமே, அண்ணா............. ஆனால் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு கப்பை கண்டாலே வயிற்றைக் கலக்கி, தலையைச் சுற்றி, வாந்தி எடுத்து, மயக்கம் வந்து............ இது எதுவும் அவர்களுக்கு வராவிட்டால், ஒரு மழையாவது வந்து அவர்களின் வெற்றியை தடுத்து விடுமாமே..................😜.
2 months ago
ஓமோம் ஐயனே, இங்கு கவனிக்க வேண்டியது, அவர்களை தனி இனக்குழுவாக (ethnicity/ethnic group) புலிகள் அங்கீகரித்துள்ளனர் என்பதுவே. இங்கு தமிழர்களும் முஸ்லிம்களும் - சிங்களவரும் தமிழரும் போன்று - தனித் தனியான இனக்குழுக்களாக பிரிந்திருப்பதை தாம் ஏற்பதாகவே தவிபு கூறியுள்ளனர். எனவே அவர்களை தமிழர்களோடு சேருமாறு வற்புறுத்துவது என்பது எப்படி சரியென்று எனக்கு தெரியவில்லை. மேலும் இவ்விரு தமிழ் பேசும் இனக்குழுக்களும் "தமிழ் தேசிய மொத்தத்தின்" (Totality of Tamil nationality) கீழ் அடங்குகின்றனர். (பேரினம் என்னும் சொல் தமிழில் Genus என்பதைக் குறிக்க பாவிக்கிறார்கள், ஆகையாலே மாற்றுச் சொல்லை பரிந்துரைத்தேன்) ஆம், புலிகளே ஏற்ற பின்னர் நானும் அதை எதிர்க்க போவதில்லை.
2 months ago
அலிஸாவைப் பற்றிய அபிப்பிராயங்கள் வேடிக்கையாக இருக்கு. இந்தத் தொடரில் ஜந்து போட்டிகள் விளையாடி, 299 ஓட்டங்கள் அடித்திருக்கிறா. இரண்டு தரம் நூறு. அவா ஒரு பிடிய விட்ட உடன், இப்படிக் கதைப்பது, வேடிக்கையாக இருக்கிறது. அதோட அவ ஒரு விக்கட் காப்பாளர். அணித்தலைவி. இவ்வளவுக்குப் பிறகும். விளையாட்டு வினோதங்கள்!
2 months ago
கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 07 பகுதி: 07 - பின்னவலை யானைகள் புகலகம் (Pinnawala Elephant Orphanage) & கொழும்பு இலங்கை பயணத்தின் கடைசி சுற்றுலாவாக பின்னவலை யானைகள் புகலகம் இருந்தது. அவர்கள் ஆற்றங்கரையில் நின்று, பெரிய யானைகள் தண்ணீரில் குளிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஜெயா சத்தமிட்டார்: “பெரிய குட்டிகள் குளிக்கின்றன!” கலை ஒரு தண்ணீர் பாட்டிலை [bottle] எடுத்து, தண்ணீர் தெளிக்கும் யானையைப் போல நடித்து, தனது குட்டி சகோதரன் மீது தெளித்தார். குழந்தைகள் சிரித்தபடி உருண்டு உருண்டு சிரித்தனர். ஒரு யானைப் பாகன் (mahout) அவர்களை அணுகிச் சொன்னான்: “சில யானைகள் தங்கள் குடும்பத்தை இழந்துவிட்டன. ஆனால் இங்கே நாம் அவற்றைப் பாதுகாக்கிறோம். அன்பைக் கொடுக்கிறோம்.” என்றார். அப்பொழுது தாத்தா கண்களில் நெகிழ்ச்சி பொங்க, பேரன்களை நோக்கிச் சொன்னார்: “இது தான் இலங்கையின் பாடம். துன்பத்திற்குப் பிறகும், போருக்குப் பிறகும் கூட நாமும் ஒருவருக்கொருவர் அன்புடன் காப்பாற்ற வேண்டும். ஒரு குடும்பம்போல.” என்றார். உடனே இசை தன்னுடைய சிறிய குரலில் சொன்னான்: “அப்படியென்றால் தாத்தா நீங்கள்தான் எங்களுடைய யானைப் பாகன். நாங்க எல்லாம் உங்க யானைகள்!” அனைவரும் சிரித்தார்கள். தாத்தா அவனைத் தழுவிக்கொண்டார். பெரிய தோற்றத்தில் நடக்கும் யானையே உன் அறிவும் உனக்குப் பெரிதோ? சிலவேளை மதம் பிடித்து அலைந்தாலும் உன்னிடம் மதம் [சமயம்] இல்லாதது எனோ? பரிவாக உன்னைக் கவனிக்கும் பாகன் உன் நிழலிலேயே இளைப்பாறுவது தெரியாதோ? வேடிக்கைப் பார்க்கும் மக்களை எல்லாம் தள்ளி நிற்க பயப்படுத்துவது எனோ? பாசத்தின் அருமை உனக்குத் தெரியுது வேசமிடும் மனிதனுக்கு அன்பு தெரியாதோ? மோசமான இலங்கை அரசியல் உலகில் மனிதம் வளராது இறந்தது எனோ? குழந்தைகள் அமைதியாகி தாத்தாவின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டனர். அப்பொழுது ஜெயா கூறினார்: “தாத்தா, ஒரு நாள் இந்தக் கதையை மற்றவர்களுக்குச் சொல்வோம். கடற்கரைகள், யானைகள் மற்றும் நம்பிக்கை பற்றி.” என்றாள். தாத்தா அன்புடன் சிரித்தார். “ஆம், என் சிறிய ஆய்வாளர்களே. நீங்கள்தான் இந்தத் தீவின் எதிர்காலம்.” என்று முதுகில் தட்டிக்கொடுத்தார். மீண்டும் கொழும்பு கொழும்பில் சத்தமாய் ஓடும் பஸ்கள், பளபளக்கும் கடைகள், கடற் காற்றின் வாசம்—அனைத்தும் கலந்த ஒரு பரபரப்பு காணப்பட்டது. அவர்கள் கால்ஃபேஸ் கிரீன் [Gall Face Green] சென்றனர். குழந்தைகள் வண்ணமயமான பட்டங்களை பறக்க விட்டனர். சுவை மிக்க இறால் வடை [Isso Vadai], ஐஸ்கிரீம் - எதையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. ஜெயா சிரித்தபடி சொன்னாள்: “தாத்தா, கொழும்பு தினமும் திருவிழாவைப் போல இருக்கிறது!” தாத்தா சிரித்தார். அவரின் உள்ளம் பழைய காயங்களை நினைத்தது. 1983 கறுப்பு ஜூலை - வீதிகள் எரிந்தன, தமிழர்கள் வேட்டையாடப்பட்டார்கள், நூலகம் சாம்பலானது. சில நிமிடங்கள் அமைதியாகக் கண்ணீர் வழிந்தது. ஜெயா கவனித்தாள்: “தாத்தா, ஏன் அழுகிறீர்கள்?” தாத்தா அவள் நெற்றியில் முத்தமிட்டு சொன்னார்: “சில நினைவுகள் ஒருபோதும் மறையாது. ஆனால் நீங்கள்… நீங்கள் என் புதிய நினைவுகள். பழையதைவிட பிரகாசமாக.” ஜெயா விரைவாகச் சொன்னார், “அப்படியானால், தாத்தா, உங்களுக்காக இன்னும் மகிழ்ச்சியான நினைவுகளை நாம் உருவாக்குவோம். இனி சோகமான நினைவுகள் உங்களுக்கு வேண்டாம்!” என்றாள். தாத்தாவின் கண்கள் பெருமையால் பிரகாசித்தன. “ஆம், என் குட்டி நட்சத்திரங்கள். அதனால் தான் நான் உங்களை இங்கு அழைத்து வந்தேன். இந்த இலங்கை நிலத்தை அறியவும், அதை நேசிக்கவும், அதன் கதையை முன்னோக்கி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும்.” என்றார். காலி முகத்திடலில் அலைகள் முழங்கியது, சத்தமிட்டபடி அடித்தன, ஆனால் அந்தக் கணத்திலும் தாத்தாவின் உள்ளம் அமைதியாக இருந்தது. அவருக்கு கடந்த காலத்தின் காயங்கள் இருந்தாலும், அவரது பேரக்குழந்தைகள் அந்தக் காயங்களுக்கு மருந்தாக இருந்தனர். யாழின் தென்றலில் நல்லூர் வளாகத்தில் நடந்து சென்றோம் கைகள் கோர்த்தே! புனித நிலத்தில் ஞானம் சேர மனம் நிறைந்து ஆனந்தம் பெருகியதே! நல்லூர் மேளமும் கடல் ஓசையும் மனதில் நிலைத்து என்றும் வாழுமே! கடல் சறுக்கல் டால்பின் பாய்தல் ஈழ சுற்றுலாவை பறை சாற்றுமே! தெற்கும் மேற்கும் மனிதம் நிலைத்தால் வடக்கும் கிழக்கும் மீண்டும் தளிருமே! ஒற்றுமை கீதம் உள்ளத்தில் பாடினால் வேற்றுமை நீங்கி சொர்க்கம் ஆகுமே! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] முற்றிற்று கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 07 https://www.facebook.com/groups/978753388866632/posts/32130663769915520/?
2 months ago
நானும் இதனைத்தான் நினைத்திருந்தேன். அவரிரண்டு ஆட்டங்கள் விளையாடததினாலோ அல்லது வேறு காரணத்தினாலோ அவர் துடுப்பாட்டம் போர்மில் இல்லாதிருந்தது, முக்கியமாக அவர் போட்டியினை தக்க வைக்கும் நிலையில் எந்த ஒரு நிலையிலும் காணப்படவில்லை. அவர்கள் பெரிய எண்ணிக்கையான ஓட்டத்தினை எடுத்திருந்த நிலையில்; அவர்கள் எதிரணியின் மீது இலகுவாக பெரிய ஓட்டத்தின் அழுத்தத்தினை பிரயோகித்திருக்க முடியும், குறிப்பாக களத்தடுப்பின் மூலம் எதிரணியினை ஓட்டத்தினை கட்டுப்படுத்துவதன் மூலம் அழுத்தத்தினை பிரயோகிக்கும் முறையினையே பயன்படுத்தினார், இந்தியணி ஆட்டத்தினை தக்க வைக்க தனது விக்கட்டுக்களை பேணியது, ஆடுகளத்தின் தன்மையிற்கேற்ப பந்து வீசவோ அல்லது வழமையாக அவுஸ்ரேலிய அணி பயன்படுத்தும் அடித்தாட தூண்டில் போடும் (விக்கெட்டுக்களை எடுப்பதற்காக) களத்தடுப்பு முறையினை பயன்படுத்தவில்லை (முழுமையாக போட்டியினை பார்க்கவில்லை வேலை இடைவேளைகளில் பார்த்ததனால் இது சரியான பார்வையாக இருக்குமா என தெரியவில்லை). விக்கெட்டுக்கள் எடுத்திருந்தால் இந்தியா திடீர் சரிவினை சந்திருக்கும், தென்னாபிரிக்கா இந்த தவறிலிருந்து பாடம் கற்க வேண்டும், இந்தியணியினை இறுதி போட்டியில் வென்று கோப்பையினை தமதாக்க வேண்டும்🤣. அவுஸ்ரேலிய அணியில் லிச்பீல்டும், இந்தியணியில் ஜெமைமாவின் துணிச்சலான விளையாட்டும் இந்த போட்டியின் முக்கிய திருப்பங்கள், அதிலும் லிச்பீல்ட் ஆட்டம் ஒரு மிக சிறந்த பிசிர் தட்டாத ஆட்டம், இந்த போட்டியின் பேசப்படாத சிறந்த ஆட்டக்காரராக எனக்கு தோன்றுகிறது. இந்தியணியின் வெற்றி குறித்து ஒரு பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கூறினார் " இந்திய பெண்கள் அணி இந்த வெற்றியின் மூலம் வயதிற்கு வந்துவிட்டது என (நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு), இறுதிப்போட்டியில் தோற்றால் என்ன கூறுவாரோ? இந்தியா வெல்ல வாய்ப்பில்லை.🤣