Aggregator

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்

1 month 3 weeks ago
கிந்தியா என்று எழுத்து பிழை என்று முதலில் நினைத்துவிட்டேன் 😂 காரணம் பின்பு இரண்டாம் தடவை இலங்கை தமிழர்கள் இந்தியாவின் என்று வந்தது பின்பு கிந்தியா என்று எழுத்து பிழை கிழவி 🤣 ஈழ தமிழர்களில் கிழவிகளே இல்லை தலைக்கு டை அடிச்ச அல்லது புர்க்காவால் மூடிய மார்க்கண்டேயரின் தங்கைகள் மட்டுமே உள்ளனர்.

கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / [பத்து பகுதிகள்]

1 month 3 weeks ago
கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 3 ✈️ பாகம் 03 – விமான நிலைய சாகசம் அன்று காலையிலே வீடு உற்சாகத்தில் மூழ்கி இருந்தது. நிலன், தன் சிறிய தோள் பையை இறுகப் பிடித்துக் கொண்டு, அங்கும் இங்கும் ஓடி துள்ளிக் கொண்டு இருந்தான். திரேன், பெரியவன் என்பதால், தன் பாஸ்போர்ட் [Passport] மற்றும் போர்டிங் பாஸ் (Boarding Pass) இரண்டையும் அடிக்கடி மீண்டும் மீண்டும் சரிபார்த்துக் கொண்டு இருந்தான். எதையும் புரியாத வயது கொண்ட ஒரு வயது ஆரின் — சுற்றியுள்ள உற்சாகத்தை உணர்ந்து மகிழ்ச்சியாக “கூ கூ” என ஒலித்தான். “நாம் உண்மையிலேயே இன்று விமானத்தில் போகிறோமா, தாத்தா?” என்று நிலன் கண்கள் அகலமாக, எதிர்பார்ப்புடன் மின்னின. தாத்தா புன்னகையுடன், "ஆமாம், சின்ன பைலட் [விமானி]," தாத்தா புன்னகையுடன் கூறினார். "இன்று, நாம் மேகங்களுக்கு மேலே பறந்து உலகை உயரத்திலிருந்து பார்க்கப் போகிறோம்." என்றார். விமான நிலையத்திற்குச் செல்லும் பயணம் சிரிப்பாலும், அரட்டையடிப்பதாலும் நிறைந்திருந்தது. தாத்தா விமான நிலையம் போகிற வழியில், வெவ்வேறு வாகனங்களைச் சுட்டிக்காட்டினார் - ஒரு பெரிய சிவப்பு பேருந்து, ஒரு கருப்பு டாக்ஸி [taxi], மற்றும் ஒரு பளபளப்பான டெலிவரி வேன் [delivery van] . “ஒவ்வொரு வாகனத்துக்கும் அவை அவற்றுக்காக ஒரு பிரத்தியேக வேலையுண்டு?” என்று அவர் கூறினார். “ஒரு நாள், ஒருவேளை நீங்கள் உங்கள் சொந்த விமானத்தை ஓட்டுவீர்கள்!” என்றார். விமான நிலையத்தை அடைந்ததும், அதன் பிரம்மாண்டமான அளவு குழந்தைகளை மூச்சுத் திணறச் செய்தது. விமான நிலைய முனையம் [terminal] பளபளப்பான தரைகள் மற்றும் கண்ணாடிச் சுவர்களால் மின்னியது, அதனூடாக உள்ளே பாய்ந்த சூரிய ஒளி அங்கு பிரதிபலித்தது. மக்கள் சூட்கேஸ்களை [suitcases] இழுத்துக் கொண்டும், தொலைபேசிகளில் பேசிக் கொண்டும் அல்லது சிலர் குழந்தைகளுடன் நெரிசலில் ஸ்ட்ரோலர்களை [strollers] உருட்டிக் கொண்டும் வேகமாக கடந்து சென்று கொண்டு இருந்தனர். “அட! இது கட்டிடத்துக்குள்ளே ஒரு நகரம் மாதிரி இருக்கே!” என்று திரேன் அதிசயித்தான். தாத்தா அவர்களை பாதுகாப்புப் பாதை வழியாக அழைத்துச் சென்று, ஒவ்வொரு அடியையும் பொறுமையாக விளக்கினார். “காலணியை கழற்றுங்க, பெல்ட்டை [belt] கழற்றுங்க, உங்கள் ஒவ்வொருவரின் தோள் பையையும் [backpacks] அந்த மெஷினில் வையுங்கள் … பீப் சத்தம் [beep] வந்தாலும் கவலைப்படாதீங்க — இதெல்லாம் சாகசத்தின் ஒரு பாகம் தான்!” என்று சிரித்தபடி சொன்னார். கன்வேயர் பெல்ட்கள் [conveyor belts] ஸ்கேனர்கள் [scanners] வழியாக தங்கள் தங்கள் பொருட்களை எடுத்துச் செல்வதை நிலன் வியப்புடன் பார்த்து மூச்சே விட்டான். பாதுகாப்பைக் [security] கடந்ததும், சாகசம் உண்மையிலேயே தொடங்கியது. அவர்கள் புறப்படும் லவுஞ்சிற்குள் [departure lounge] நுழைந்தனர், அங்கு காணப்பட்ட பெரிய ஜன்னல்கள் வழியாக, ஓடு பாதையில் நிறுத்தப்பட்டுள்ள விமானங்களின் பரந்த காட்சியைப் பார்த்தனர். நிலன் தனது மூக்கை கண்ணாடியில் அழுத்தி - அங்கே ஒரு பெரிய விமானத்தின் இயந்திரங்கள் சத்தமாக ஒலித்துக் கொண்டு, ஓடுபாதையில் நகரத் தொடங்கி, புறப்படத் தயாராகிக் கொண்டிருப்பதைப் பார்த்தான் - இயந்திரங்களின் சத்தம், தரையின் அதிர்வு, ஒளிரும் விளக்குகள் நிலனுக்கு மேலும் ஆர்வத்தை தூண்டியது. "தாத்தா! நாம அதுக்குள்ள போகலாமா?" என்று ஆவலாகக் கேட்டான். தாத்தா சிரித்தார். “சீக்கிரம், என் சின்னஞ்சிறு சாகசக்காரர்களே. சீக்கிரம் நாம் போகிறோம்.” என்றார் காத்திருக்கும் நேரத்தை வேடிக்கையாக்க, ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சிறிய நோட்டுப் புத்தகத்தையும் வண்ண பென்சில்களையும் கொடுத்தார். “நீங்கள் காணும் விமானங்களை வரையுங்கள்,” என்று அவர் பரிந்துரைத்தார். வானவில் இறக்கைகள் கொண்ட ஒரு விமானத்தை நிலன் ஆவலுடன் வரைந்தான், அதே நேரத்தில் திரேன், இரவு வானில் பறக்கும் ஒரு விமானத்தை, அது வெளிவிடும் புகை அல்லது நீராவிக்குப் பதிலாக, மின்னும் நட்சத்திரங்களை வெளியே தள்ளி விட்டுக் கொண்டு போவது போல - ஒரு மாயாஜால விமானம் அல்லது ஒரு நட்சத்திரம் போல - கற்பனை செய்து வரைந்தான். குட்டி ஆரின் கூட கைகளைக் காற்றில் ஆட்டி ஆட்டி, விமானம் பறக்கிற மாதிரி நடித்தான். அவசர அறிவிப்பு ஒலித்தது — அவர்களின் விமானம் தயாராகி விட்டது என்று! எனவே அவர்கள் ஜெட் பாலத்தின் [Jet bridge or jetway or passenger boarding bridge (PBB)] ஊடாக விமானத்துக்குச் சென்றார்கள். நிலன் உற்சாகம் மற்றும் மகிழ்ச்சி அடைந்து அதனுள்ளாக ஓடிப் போனான். விமானத்தின் அறை [கேபின்] விசாலமாக இருந்தது, வரிசையாக இருக்கைகள் அழகாக இருந்தன. பொதிகள் வைக்க தலைக்கு மேல் மூடக்கூடிய பெட்டிகள் [மேல்நிலை பெட்டிகள் / overhead compartments] இருந்தன. மற்றும் குழந்தைகளைப் அன்பாகப் பார்த்து பழகும் நட்பு விமானப் பணிப்பெண்கள் ["Airhostess"] அங்கு இருந்தனர். தாத்தா அவர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் இருக்கைகளில் பாதுகாப்பாக இருக்கைப் பட்டை [seat belt] போட்டு அமர உதவினார். விமானம் நகரத் தொடங்கியதும், நிலன் தனது கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு, அவனின் கண்கள் வியப்புடன் விரிந்தன. தரை வேகமாகவும் வேகமாகவும் கடந்து செல்வது போல் அவனுக்குத் தோன்றியது, திடீரென்று, மெல்ல உயர்ந்து, அது காற்றில் பறந்தது. "நாங்கள் பறக்கிறோம்! நாங்கள் பறக்கிறோம்!" என்று அவன் சிரித்துக் கொண்டே, கீழே உள்ள சிறிய கார்களையும் கட்டிடங்களையும் சுட்டிக்காட்டினான். அவை மங்கியபடி, சிறிதாகத் தெரிந்தன. விமானத்தில் பயணம் செய்த அனுபவம் மூன்று பேரனுக்கும் மாயாஜாலம் போல் இருந்தது. தாத்தா அவர்களுக்கு சீட் பெல்ட்களை எப்படி கட்டுவது, ஜன்னலுக்கு வெளியே எப்படி பாதுகாப்பாகப் பார்ப்பது போன்றவற்றைக் கூறி, ஆனால், சிறிய தட்டு மேசைகளை [மேசைத் தாம்பாளம் / little tray tables] அவர்களே சரிபார்த்து பொருத்த அனுமதித்தார். குழந்தைகள் சிற்றுண்டிகளால் மகிழ்ச்சியடைந்தனர் - ஒரு சிறிய பொட்டலம் பிஸ்கட் மற்றும் ஜூஸ் - மேகங்கள் சோம்பேறித்தனமாக ஜன்னலைக் கடந்து சென்றன, சில பஞ்சுபோன்ற யானைகள் மற்றும் பெரிய அரண்மனைகள் போல இருந்தன. விமானப் பயணத்தின் நடுவில், தாத்தா தான் கொண்டுவந்த ஒரு சிறிய போட்டி விளையாட்டு ஒன்றை வெளியே எடுத்தார் - 'வானத்தில் புதையல் வேட்டை'. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சரிபார்ப்புப் பட்டியல் இருந்தது: ஒரு டிராகன் போன்ற வடிவிலான மேகத்தைக் கண்டுபிடி, தூரத்தில் ஒரு விமானத்தைக் கண்டுபிடி, அல்லது கீழே நிலத்தில் வளைந்து செல்லும் ஒரு சிறிய நதியைக் கண்டுபிடி என பல கேள்விகள் அங்கு இருந்தன. நிலன் ஒரு பொருளைத் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு முறையும் அவனது கண்கள் பெருமையில் பூரித்தன. திரேன், வழமைபோல் ஆர்வத்துடன், கவனத்துடன் போட்டியிட்டான். ஆரின் கூட எதோ ஒரு புரிதலுடன் எதையெதையோ "சுட்டிக் காட்டி, என்னென்னெவோ சத்தம் போட்டான். விமானம் துபாயை நோக்கி தரை இறங்கும் போது, குழந்தைகள் தங்கள் முகங்களை மீண்டும் ஜன்னல்களில் அழுத்திக் கொண்டனர். அவர்களுக்குக் கீழே நகரம் ஒரு மின்னும் புதையல் பெட்டியைப் போல விரிந்தது: மின்னும் வானளாவிய கட்டிடங்கள், வளைந்து செல்லும் நீர்வழிகள், மற்றும் அடிவானம் வரை நீண்டு கிடக்கும் சிறிய சிறிய மணல் மேடுகள். நிலன் மூச்சுத் திணறினான். "இது மாயாஜாலம் போன்றது!" என்று நிலன் பெரு மூச்சு விட்டான். விமானம் இறுதியாக தரையிறங்கியதும், விமான நிலையத்தின் பரபரப்போடு சாகசம் தொடர்ந்தது: நீண்ட தாழ்வாரங்கள் [long corridors] வழியாக நடந்து, சாமான்களை [luggage] சேகரித்து மற்றும் ஆங்கிலம் மற்றும் அரபியில் வேடிக்கையான பலகைகளையும் கண்டனர். தாத்தா அவர்களின் கைகளை இறுக்கமாகப் பிடித்து, கூட்டத்தின் வழியாக அவர்களை கவனமாக பாதுகாப்பாக வழிநடத்தினார். அப்பொழுது சுவாரஸ்யமான காட்சிகளைச் சுட்டிக்காட்டிட தவறவில்லை - நகரும் நடைபாதை [moving walkway, also known as a travelator], வண்ணமயமான நினைவுப் பொருட்களின் காட்சி, மற்றும் சிறிய மீன்கள் நீந்தும் நீரூற்று [fountain] போன்றவை. அவர்கள் வெளியே வந்த நேரத்தில், சூடான துபாய் சூரியன் அவர்களை ஒரு பழைய நண்பரைப் போல வரவேற்றது. குழந்தைகள் புதிய நகரத்தை சுவாசித்தனர், வரவிருக்கும் ஆச்சரியங்களை எதிர்பார்த்து உற்சாகமாக இருந்தனர். அவர்களின் கண்கள் ஆச்சரியத்தால் பிரகாசிப்பதைக் கண்டு தாத்தா சிரித்தார். "துபாய்க்கு வருக, என் சிறிய ஆய்வாளர்களே," என்று அவர் செல்லமாக அவர்களின் முதுகில் தட்டிக் கொடுத்து கூறினார். "ஆனால் இது வெறும் ஆரம்பம் தான்." என்றார் 🌍✈️ நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பாகம்: 04 தொடரும் துளி/DROP: 1991 [கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 3 https://www.facebook.com/groups/978753388866632/posts/33261397920175427/?

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்

1 month 3 weeks ago
இங்கு விவாதங்கள் எல்லாமே எந்த கோணத்தில் நடத்தப்படுகின்றதென்றால், நமது பக்கதிலே எல்லோருமே சுத்தமான சூசைப்பிள்ளைகள், அடுத்தவர்கள் எல்லோருமே முழுமையான குற்றவாளிகள். சாகும் மட்டும் இந்த கோணத்தில் விவாதிப்பதால் ஐந்து சதத்துக்கும் பிரயோசனம் இல்லை. அந்த இடத்திலே நின்று புலம்பிக்கொண்டிருக்க வேண்டியது தான். அடுத்தவனை குற்றம் சாட்டி விவாதிப்பதில் எடுத்துக்கொள்ளும் நேரத்தில் பத்து வீதததையேனும் நம்மை நாமே சுயவிமர்சனம் செய்து கொள்ள எடுத்து கொண்டிருந்தாலே நாம் எதிர் கொள்ளும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிருக்கலாம். கண்ணதாசன் வரிகளில் கூறினால்… மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து உங்கள் முதுகைப் பாருங்கள்…! முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு அதனைக் கழுவுங்கள்….!

கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!

1 month 3 weeks ago
சென்ற முறை... "மலிபன் பிஸ்கற்" சாப்பிட்டு உண்ணாவிரதம் இருந்த போது... கோத்த பாயா... தவண்டு வந்து, ஆறுதல் சொல்லிய காட்சி. 😂

கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!

1 month 3 weeks ago
கண்கள் செருகிக் கொண்டு வருகின்றது. ஆள்… தப்புவது கடினம். தேசியக் கொடியை... அரைக் கம்பத்தில் பறக்க விடுங்கப்பா.

கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!

1 month 3 weeks ago
இரவு, பகல் போராட்டம் என கூறி... நள்ளிரவில் வீட்டிற்கு சென்று திரும்பிய விமல் வீரவன்ச. 😂

6 ஆண்டுகளில் 390 கோடி ரூபாய் இழப்பு : மத்தள விமான நிலையத்தை மீட்க புதிய திட்டம்

1 month 3 weeks ago
6 ஆண்டுகளில் 390 கோடி ரூபாய் இழப்பு : மத்தள விமான நிலையத்தை மீட்க புதிய திட்டம் 13 January 2026 இலங்கையின் மத்தள சர்வதேச விமான நிலையம் கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் 39.3 பில்லியன் ரூபாய் நிகர இழப்பைச் சந்தித்துள்ளதாக அண்மைய கணக்காய்வு அறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த நிதி நெருக்கடியைச் சமாளிக்க, விமான நிலையத்தின் நிர்வாகத்தை தனியார் மற்றும் அரச பங்களிப்புடன் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் புதிய தீர்மானத்தை எடுத்துள்ளது. "வெள்ளை யானை" என விமர்சிக்கப்படும் மத்தள விமான நிலையம், 2024 ஆம் நிதியாண்டில் மட்டும் 3.36 பில்லியன் ரூபாய் இயக்க இழப்பைப் பதிவு செய்துள்ளது. இங்கு வருமானத்தை விட செலவு 15 மடங்கு அதிகமாக உள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 2024 இல் விமான நிலையத்தின் வருமானம் வெறும் 242.2 மில்லியன் ரூபாயாகும். ஆனால், அதன் இயக்கச் செலவு 3.6 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு 10 இலட்சம் பயணிகளைக் கையாளத் திட்டமிடப்பட்ட போதிலும், கடந்த 6 ஆண்டுகளில் மொத்தம் 321,577 பயணிகள் மட்டுமே இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தியுள்ளனர். கட்டுமானத்திற்காகப் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன்களுக்காக ஆண்டுதோறும் சுமார் 2.05 பில்லியன் ரூபாய் வட்டிச் செலவு கணக்கிடப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் இந்திய - ரஷ்ய கூட்டு நிறுவனம் ஒன்றிடம் விமான நிலையத்தை ஒப்படைக்க எடுக்கப்பட்டிருந்த தீர்மானத்தை தற்போதைய அரசாங்கம் இரத்து செய்துள்ளது. அதற்குப் பதிலாக, புதிய விருப்பக் கோரல் மூலம் தனியார் பங்களிப்புடன் வணிக நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு போன்ற முக்கிய பிரிவுகள் அரசாங்கத்தின் கீழேயே இருக்கும். அதேவேளை, சரக்கு கையாளுதல், விமானப் பராமரிப்பு மற்றும் விருந்தோம்பல் போன்ற துறைகள் தனியார் முதலீடுகளுக்குத் திறந்துவிடப்படவுள்ளன. தற்போதைய 2025/2026 குளிர்கால பருவத்தில் ரஷ்யாவின் ரெட் விங்ஸ், பெலாரஸின் பெலாவியா மற்றும் உக்ரைனின் ஸ்கை அப் போன்ற விமான நிறுவனங்கள் மத்தளத்திற்குச் சேவைகளை ஆரம்பித்துள்ளன. இது விமான நிலையத்திற்குச் சற்று புத்துயிர் அளித்திருந்தாலும், பாரிய கடன் சுமைகளை ஈடுகட்ட இந்த வருமானம் போதுமானதாக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://hirunews.lk/tm/440408/loss-of-rs-390-crore-in-6-years-new-plan-to-revive-mattala-airport

6 ஆண்டுகளில் 390 கோடி ரூபாய் இழப்பு : மத்தள விமான நிலையத்தை மீட்க புதிய திட்டம்

1 month 3 weeks ago

6 ஆண்டுகளில் 390 கோடி ரூபாய் இழப்பு : மத்தள விமான நிலையத்தை மீட்க புதிய திட்டம்

13 January 2026

1768283769_9255122_hirunews.jpg

இலங்கையின் மத்தள சர்வதேச விமான நிலையம் கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் 39.3 பில்லியன் ரூபாய் நிகர இழப்பைச் சந்தித்துள்ளதாக அண்மைய கணக்காய்வு அறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. 

இந்த நிதி நெருக்கடியைச் சமாளிக்க, விமான நிலையத்தின் நிர்வாகத்தை தனியார் மற்றும் அரச பங்களிப்புடன் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் புதிய தீர்மானத்தை எடுத்துள்ளது. 

"வெள்ளை யானை" என விமர்சிக்கப்படும் மத்தள விமான நிலையம், 2024 ஆம் நிதியாண்டில் மட்டும் 3.36 பில்லியன் ரூபாய் இயக்க இழப்பைப் பதிவு செய்துள்ளது. 

இங்கு வருமானத்தை விட செலவு 15 மடங்கு அதிகமாக உள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 

2024 இல் விமான நிலையத்தின் வருமானம் வெறும் 242.2 மில்லியன் ரூபாயாகும். ஆனால், அதன் இயக்கச் செலவு 3.6 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. 

ஆண்டுக்கு 10 இலட்சம் பயணிகளைக் கையாளத் திட்டமிடப்பட்ட போதிலும், கடந்த 6 ஆண்டுகளில் மொத்தம் 321,577 பயணிகள் மட்டுமே இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தியுள்ளனர். 

கட்டுமானத்திற்காகப் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன்களுக்காக ஆண்டுதோறும் சுமார் 2.05 பில்லியன் ரூபாய் வட்டிச் செலவு கணக்கிடப்பட்டு வருகிறது. 

இதற்கு முன்னர் இந்திய - ரஷ்ய கூட்டு நிறுவனம் ஒன்றிடம் விமான நிலையத்தை ஒப்படைக்க எடுக்கப்பட்டிருந்த தீர்மானத்தை தற்போதைய அரசாங்கம் இரத்து செய்துள்ளது. 

அதற்குப் பதிலாக, புதிய விருப்பக் கோரல் மூலம் தனியார் பங்களிப்புடன் வணிக நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இதன்படி, விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு போன்ற முக்கிய பிரிவுகள் அரசாங்கத்தின் கீழேயே இருக்கும். 

அதேவேளை, சரக்கு கையாளுதல், விமானப் பராமரிப்பு மற்றும் விருந்தோம்பல் போன்ற துறைகள் தனியார் முதலீடுகளுக்குத் திறந்துவிடப்படவுள்ளன. 

தற்போதைய 2025/2026 குளிர்கால பருவத்தில் ரஷ்யாவின் ரெட் விங்ஸ், பெலாரஸின் பெலாவியா மற்றும் உக்ரைனின் ஸ்கை அப் போன்ற விமான நிறுவனங்கள் மத்தளத்திற்குச் சேவைகளை ஆரம்பித்துள்ளன. 

இது விமான நிலையத்திற்குச் சற்று புத்துயிர் அளித்திருந்தாலும், பாரிய கடன் சுமைகளை ஈடுகட்ட இந்த வருமானம் போதுமானதாக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://hirunews.lk/tm/440408/loss-of-rs-390-crore-in-6-years-new-plan-to-revive-mattala-airport

அக்கரைப்பற்று வைத்தியசாலையின் வைத்தியர்கள் வேலைநிறுத்தம்

1 month 3 weeks ago
அக்கரைப்பற்று வைத்தியசாலையின் வைத்தியர்கள் வேலைநிறுத்தம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA) இன்று (13) கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வைத்தியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மீது சுமத்தப்பட்டுள்ள நிர்வாக மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக, அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு புதிய பணிப்பாளர் ஒருவரை நியமிக்குமாறு கோரி இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கிழக்கு மாகாணத்திலுள்ள 02 பொது வைத்தியசாலைகள், ஒரு போதனா வைத்தியசாலை, 17 ஆதார வைத்தியசாலைகள், 52 பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் 113 ஆரம்ப சுகாதார மத்திய நிலையங்களில் இந்த வேலைநிறுத்தம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளையும் சேர்ந்த வைத்தியர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான வைத்தியர் ஜனித் பேதுருஆரச்சி தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmkc6hsg303ulo29ncanq1074

அக்கரைப்பற்று வைத்தியசாலையின் வைத்தியர்கள் வேலைநிறுத்தம்

1 month 3 weeks ago

அக்கரைப்பற்று வைத்தியசாலையின் வைத்தியர்கள் வேலைநிறுத்தம்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA) இன்று (13) கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வைத்தியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மீது சுமத்தப்பட்டுள்ள நிர்வாக மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக, அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு புதிய பணிப்பாளர் ஒருவரை நியமிக்குமாறு கோரி இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, கிழக்கு மாகாணத்திலுள்ள 02 பொது வைத்தியசாலைகள், ஒரு போதனா வைத்தியசாலை, 17 ஆதார வைத்தியசாலைகள், 52 பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் 113 ஆரம்ப சுகாதார மத்திய நிலையங்களில் இந்த வேலைநிறுத்தம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளையும் சேர்ந்த வைத்தியர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான வைத்தியர் ஜனித் பேதுருஆரச்சி தெரிவித்துள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmkc6hsg303ulo29ncanq1074

பாலியல் காட்சிகள் மூலம் பணம் பறிக்கும் கும்பல் அதிகரித்து வருகிறது

1 month 3 weeks ago
பாலியல் காட்சிகள் மூலம் பணம் பறிக்கும் கும்பல் அதிகரித்து வருகிறது திருமணமான பெண்கள் மற்றும் அவர்களது காதலர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் பாலியல் உறவுகளை வீடியோவாக பதிவு செய்து, வீடியோக்களை இணையதளங்களில் பகிர்வதாக மிரட்டி பணம் பறிப்பது தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். காலி தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுத் துறையின் பொறுப்பதிகாரி கே.கே.ஆர். அல்விஸ் கூறுகையில், குற்றவாளிகள் ரகசியமாக வீடியோக்களை பதிவு செய்ய மேம்பட்ட தொழில்நுட்ப கேமராக்களைப் பயன்படுத்துகின்றனர். “இந்த கேமராக்கள் சட்டை காலர்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன, பாக்கெட்டில் பேனா அல்லது லாட்ஜ்களில் படுக்கைகளுக்குள் உள்ளன. தனிநபர்கள் தங்கள் எஜமானிகள் மற்றும் இளம் காதலர்களுடனான பாலியல் உறவுகள் ரகசியமாக பதிவு செய்யப்பட்டு வலைத்தளங்களில் வெளியிடப்படுகின்றன. பெரும்பாலும், தாங்கள் காதலிக்கும் பெண்களை லாட்ஜ்களுக்கு அழைத்துச் சென்று, அந்த இளம் பெண்ணின் நிர்வாணக் காட்சிகளை வீடியோவாகப் பதிவு செய்து, அவர்களை மிரட்டி பணம் பறிக்கப் பயன்படுத்துகின்றனர்.” “சமீபத்தில், வெளிநாட்டில் பணிபுரியும் 45 வயதுடைய ஒரு பெண், ஒரு பேக்கரியில் பணிபுரியும் ஒரு ஊழியரை காதலித்தார். அவர் அவர்களின் பாலியல் உறவுகளை ரகசியமாக வீடியோவாக பதிவு செய்திருந்தார். அந்த காட்சிகளை இணையதளங்களில் பகிர்வதாக மிரட்டி இப்போது தன்னிடம் பணம் பறிப்பதாக அவர் பொலிஸில் புகார் அளித்துள்ளார்.” "இதேபோன்ற ஒரு சம்பவத்தில், நோய்வாய்ப்பட்ட குழந்தையை மந்திரங்கள் மூலம் குணப்படுத்துவதற்காக வீட்டில் தங்கியிருந்த ஒரு பேய் விரட்டுபவர், அந்தப் பெண்ணை அவள் கிரகத்தின் தீய செல்வாக்கின் கீழ் இருப்பதாகவும், அதை அகற்ற சடங்குகளைச் செய்வதாகவும் கூறி, தன்னுடன் உடலுறவு கொள்ளும்படி கவர்ந்தார். அவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். புலன்களை ரகசியமாக வீடியோ பதிவு செய்த பேய் விரட்டுபவர் இப்போது மிரட்டி பணம் பறிக்கின்றார். இது தொடர்பிலான முறைப்பாடும் கிடைத்துள்ளது," என்று காவல்துறை அதிகாரி கூறினார். இளம் பெண்கள் தங்கள் காதலர்களுடன் பழகும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், திருமணமான பெண்கள் தங்கள் கள்ளக்காதலர்களுடன் ரகசிய உறவு வைத்திருப்பதால் அவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்து குறித்தும் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/பாலியல்-காட்சிகள்-மூலம்-பணம்-பறிக்கும்-கும்பல்-அதிகரித்து-வருகிறது/175-370959

யாழ்ப்பாணத்திற்கு இந்த ஆண்டு முதல் கட்டமாக 500 வீடுகள்

1 month 3 weeks ago
யாழ்ப்பாணத்திற்கு இந்த ஆண்டு முதல் கட்டமாக 500 வீடுகள். யாழ்ப்பாணத்தில் இந்த ஆண்டு 500 வீடுகளை நிர்மாணிப்பதற்கு வீடமைப்பு , நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக யாழ். மாவட்ட செயலர் ம பிரதீபன் தெரிவித்துள்ளார். இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீட்டுத்திட்டம் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் நடைபெறாது. குறித்த கலந்துரையாடலின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் முதற்கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 500 வீடுகள் நிர்மாணிப்பதற்கான ஒதுக்கீடுகள் கிடைத்துள்ளது என்றார். வீட்டுத்திட்ட பயனாளிகள் பட்டியல்களை சுற்றுநிருபத்திற்கு அமைய தெரிவு செய்யுங்கள் எனவும், வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு கொடுப்பனவுகள் கிடைக்கப் பெறாத நபர்கள் மற்றும் கொடுப்பனவு தேவைப்படுபவர்கள் தொடர்பிலான விபரங்களை கையளியுங்கள் என பிரதேச செயலர்களிடம் கோரினார். இக் கலந்துரையாடலில் மேலதிக செயலர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், பிரதி உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக விடய உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். https://athavannews.com/2026/1459705

யாழ்ப்பாணத்திற்கு இந்த ஆண்டு முதல் கட்டமாக 500 வீடுகள்

1 month 3 weeks ago

download-32.jpg?resize=750%2C375&ssl=1

யாழ்ப்பாணத்திற்கு இந்த ஆண்டு முதல் கட்டமாக 500 வீடுகள்.

யாழ்ப்பாணத்தில் இந்த ஆண்டு 500 வீடுகளை நிர்மாணிப்பதற்கு வீடமைப்பு , நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக யாழ். மாவட்ட செயலர் ம பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீட்டுத்திட்டம் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல்   யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம்  நடைபெறாது.

குறித்த கலந்துரையாடலின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் முதற்கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 500 வீடுகள் நிர்மாணிப்பதற்கான ஒதுக்கீடுகள் கிடைத்துள்ளது என்றார்.

வீட்டுத்திட்ட பயனாளிகள்  பட்டியல்களை  சுற்றுநிருபத்திற்கு அமைய தெரிவு செய்யுங்கள் எனவும், வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு கொடுப்பனவுகள் கிடைக்கப் பெறாத நபர்கள் மற்றும்  கொடுப்பனவு தேவைப்படுபவர்கள் தொடர்பிலான விபரங்களை கையளியுங்கள் என பிரதேச செயலர்களிடம் கோரினார்.

இக் கலந்துரையாடலில் மேலதிக செயலர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், பிரதி உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக விடய உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

download-31.jpg?resize=600%2C400&ssl=1

https://athavannews.com/2026/1459705

10 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா செல்கிறார் டொனால்ட் ட்ரம்ப்: சர்வதேச அரசியலில் புதிய திருப்பம்

1 month 3 weeks ago
10 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா செல்கிறார் டொனால்ட் ட்ரம்ப்: சர்வதேச அரசியலில் புதிய திருப்பம். வாஷிங்டனுக்கான அவுஸ்திரேலிய தூதர் கெவின் ரூட் (Kevin Rudd) தனது பதவியிலிருந்து விலகிய சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சீனாவுக்குத் தனது முதல் அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொள்ள உள்ளார். ஏறக்குறைய 10 ஆண்டுகளில் சீனாவுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பதால், சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தற்போதைய ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ், குறிப்பாகச் சமீபத்திய மாதங்களில், சீனா அமெரிக்காவின் நேரடி கவனத்திலிருந்து விலகியிருந்ததாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளில் சீனாவுடனான மோதல்கள் அல்லது பேச்சுவார்த்தைகள் முன்னுரிமை பெறாத சூழலில், இந்தத் திடீர் பயண அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. கெவின் ரூட் போன்ற அனுபவம் வாய்ந்த தூதர்கள் வாஷிங்டனை விட்டு வெளியேறும் வேளையில், இந்த மாற்றம் ஆசிய-பசிபிக் பிராந்திய அரசியலில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் சீனாவுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்த ட்ரம்ப், தற்போது இந்தப் பயணத்தின் மூலம் எத்தகைய உறவை முன்னெடுக்கப் போகிறார் என்பது உலக நாடுகளின் கேள்வியாக உள்ளது. https://athavannews.com/2026/1459694

10 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா செல்கிறார் டொனால்ட் ட்ரம்ப்: சர்வதேச அரசியலில் புதிய திருப்பம்

1 month 3 weeks ago

jjjj.jpg?resize=582%2C285&ssl=1

10 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா செல்கிறார் டொனால்ட் ட்ரம்ப்: சர்வதேச அரசியலில் புதிய திருப்பம்.

வாஷிங்டனுக்கான அவுஸ்திரேலிய தூதர் கெவின் ரூட் (Kevin Rudd) தனது பதவியிலிருந்து விலகிய சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சீனாவுக்குத் தனது முதல் அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொள்ள உள்ளார். ஏறக்குறைய 10 ஆண்டுகளில் சீனாவுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பதால், சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தற்போதைய ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ், குறிப்பாகச் சமீபத்திய மாதங்களில், சீனா அமெரிக்காவின் நேரடி கவனத்திலிருந்து  விலகியிருந்ததாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளில் சீனாவுடனான மோதல்கள் அல்லது பேச்சுவார்த்தைகள் முன்னுரிமை பெறாத சூழலில், இந்தத் திடீர் பயண அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. கெவின் ரூட் போன்ற அனுபவம் வாய்ந்த தூதர்கள் வாஷிங்டனை விட்டு வெளியேறும் வேளையில், இந்த மாற்றம் ஆசிய-பசிபிக் பிராந்திய அரசியலில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த காலங்களில் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் சீனாவுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்த ட்ரம்ப், தற்போது இந்தப் பயணத்தின் மூலம் எத்தகைய உறவை முன்னெடுக்கப் போகிறார் என்பது உலக நாடுகளின் கேள்வியாக உள்ளது.

https://athavannews.com/2026/1459694

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி – தெஹ்ரானுக்கான ட்ரம்பின் புதிய அழுத்தம்!

1 month 3 weeks ago
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி – தெஹ்ரானுக்கான ட்ரம்பின் புதிய அழுத்தம்! ஈரானுடன் வணிக உறவுகளைக் கொண்ட நாடுகளின் பொருட்களுக்கு 25% வரி விதித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (12) தெரிவித்தார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையிலான இந்த உத்தரவு ஈரான் இஸ்லாமிய குடியரசுடன் வணிகம் செய்யும் எந்தவொரு நாடும் அமெரிக்காவுடன் செய்யப்படும் எந்தவொரு மற்றும் அனைத்து வணிகத்திற்கும் 25% வரியை செலுத்தும் என்று ட்ரம்ப் சமூக ஊடகத்தளமான ட்ரூத் சோஷியலில் கூறினார். எந்த நாடுகளின் இறக்குமதிகள் கடுமையாக பாதிக்கப்படும் என்பது உள்ளிட்ட வரிகள் பற்றிய கூடுதல் தகவல்களை வெள்ளை மாளிகை பகிர்ந்து கொள்ளவில்லை. ஈரானில் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் மூன்றாவது வாரத்தில் நுழையும் போது, இந்த நடவடிக்கை தெஹ்ரானுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கக்கூடும். சீனா ஈரானின் மிகப்பெரிய வர்த்தக பங்காளி, அதைத் தொடர்ந்து ஈராக், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி மற்றும் இந்தியா உள்ளன. தெஹ்ரான் போராட்டக்காரர்களைக் கொன்றால் இராணுவ ரீதியாக தலையிடுவதாக ட்ரம்ப் அச்சுறுத்தியதைத் தொடர்ந்து புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்கள் உள்ளிட்ட இராணுவ விருப்பங்கள் இன்னும் பேசுபொருளாக இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் திங்களன்று தெரிவித்தார். ஈரானிய நாணயமான ரியாலின் மதிப்பு சரிந்து வருவதால் ஏற்பட்ட கோபம் டிசம்பர் மாத இறுதியில் போராட்டங்களைத் தூண்டியது. இது ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு சட்டபூர்வமான நெருக்கடியாக வளர்ந்துள்ளது. வன்முறையின் விளைாவக ஈரானில் கிட்டத்தட்ட 500 போராட்டக்காரர்கள் மற்றும் 48 பாதுகாப்புப் பணியாளர்களின் இறப்புகளை சரிபார்த்துள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர் செய்தி நிறுவனம் (HRANA) தெரிவித்துள்ளது. அதேநேரம், ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதாகவும் அது கூறுகின்றது. ஈரானின் அணுசக்தித் திட்டம் மீதான சர்வதேசத் தடைகள் நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இது அரசாங்கத்தின் தவறான மேலாண்மை மற்றும் ஊழலால் பலவீனமடைந்துள்ளது. டிசம்பர் 28 அன்று, திறந்த சந்தையில் அமெரிக்க டொலருக்கு எதிராக ரியாலின் மதிப்பு மீண்டும் கடுமையாக வீழ்ச்சியடைந்ததைக் கண்டு தங்கள் கோபத்தை வெளிப்படுத்த கடைக்காரர்கள் தெஹ்ரானின் வீதிகளில் இறங்கினர். பணவீக்கம் கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவிற்கு சரிந்துள்ளது. அதே நேரத்தில் பணவீக்கம் 40% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக சமையல் எண்ணெய் மற்றும் இறைச்சி போன்ற அன்றாடப் பொருட்களுக்கான கூர்மையான விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1459678

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி – தெஹ்ரானுக்கான ட்ரம்பின் புதிய அழுத்தம்!

1 month 3 weeks ago

Donald-Trump.jpg?resize=750%2C375&ssl=1

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி – தெஹ்ரானுக்கான ட்ரம்பின் புதிய அழுத்தம்!

ஈரானுடன் வணிக உறவுகளைக் கொண்ட நாடுகளின் பொருட்களுக்கு 25% வரி விதித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (12) தெரிவித்தார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையிலான இந்த உத்தரவு ஈரான் இஸ்லாமிய குடியரசுடன் வணிகம் செய்யும் எந்தவொரு நாடும் அமெரிக்காவுடன் செய்யப்படும் எந்தவொரு மற்றும் அனைத்து வணிகத்திற்கும் 25% வரியை செலுத்தும் என்று ட்ரம்ப் சமூக ஊடகத்தளமான ட்ரூத் சோஷியலில் கூறினார்.

எந்த நாடுகளின் இறக்குமதிகள் கடுமையாக பாதிக்கப்படும் என்பது உள்ளிட்ட வரிகள் பற்றிய கூடுதல் தகவல்களை வெள்ளை மாளிகை பகிர்ந்து கொள்ளவில்லை.

ஈரானில் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் மூன்றாவது வாரத்தில் நுழையும் போது, இந்த நடவடிக்கை தெஹ்ரானுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கக்கூடும்.

சீனா ஈரானின் மிகப்பெரிய வர்த்தக பங்காளி, அதைத் தொடர்ந்து ஈராக், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி மற்றும் இந்தியா உள்ளன.

தெஹ்ரான் போராட்டக்காரர்களைக் கொன்றால் இராணுவ ரீதியாக தலையிடுவதாக ட்ரம்ப் அச்சுறுத்தியதைத் தொடர்ந்து புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது. 

ஈரானுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்கள் உள்ளிட்ட இராணுவ விருப்பங்கள் இன்னும் பேசுபொருளாக இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் திங்களன்று தெரிவித்தார்.

ஈரானிய நாணயமான ரியாலின் மதிப்பு சரிந்து வருவதால் ஏற்பட்ட கோபம் டிசம்பர் மாத இறுதியில் போராட்டங்களைத் தூண்டியது.

இது ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு சட்டபூர்வமான நெருக்கடியாக வளர்ந்துள்ளது.

வன்முறையின் விளைாவக ஈரானில் கிட்டத்தட்ட 500 போராட்டக்காரர்கள் மற்றும் 48 பாதுகாப்புப் பணியாளர்களின் இறப்புகளை சரிபார்த்துள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர் செய்தி நிறுவனம் (HRANA) தெரிவித்துள்ளது. 

அதேநேரம், ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதாகவும் அது கூறுகின்றது.

ஈரானின் அணுசக்தித் திட்டம் மீதான சர்வதேசத் தடைகள் நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

இது அரசாங்கத்தின் தவறான மேலாண்மை மற்றும் ஊழலால் பலவீனமடைந்துள்ளது.

டிசம்பர் 28 அன்று, திறந்த சந்தையில் அமெரிக்க டொலருக்கு எதிராக ரியாலின் மதிப்பு மீண்டும் கடுமையாக வீழ்ச்சியடைந்ததைக் கண்டு தங்கள் கோபத்தை வெளிப்படுத்த கடைக்காரர்கள் தெஹ்ரானின் வீதிகளில் இறங்கினர்.

பணவீக்கம் கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவிற்கு சரிந்துள்ளது.

அதே நேரத்தில் பணவீக்கம் 40% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இதன் விளைவாக சமையல் எண்ணெய் மற்றும் இறைச்சி போன்ற அன்றாடப் பொருட்களுக்கான கூர்மையான விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

https://athavannews.com/2026/1459678

கிரீன்லாந்து தனது கோரிக்கைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்

1 month 3 weeks ago
கிரீன்லாந்து தனது கோரிக்கைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். சீனா அல்லது ரஷ்யாவால் கைப்பற்றப்படுவதற்கு முன்பு கிரீன்லாந்து தனது கோரிக்கைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். நட்பு நாடுகளின் எச்சரிக்கைகளை புறக்கணித்த அவர், கிரீன்லாந்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற தனது கோரிக்கையை இரட்டிப்பாக்கி, ஆர்க்டிக் பிரதேசத்தை கையகப்படுத்துவது நேட்டோவை வருத்தப்படுத்தினாலும் தனக்கு கவலையில்லை என்று கூறியுள்ளார். வொஷிங்டனுக்குத் திரும்பும் போது எயார்போர்ஸ் வன் (Air Force One) கப்பலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது செய்தியாளர்கள், கிரீன்லாந்தை ஆக்கிரமிப்பதால் நேட்டோ கூட்டணி உடையுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த அவர், நேட்டோவை இந்த விடயம் பாதிக்கும் என்பதையும் ஒப்புக்கொண்டார். இருப்பினும் நேட்டோ ஏனையவர்களை விட அமெரிக்காவிற்கு அதிகம் தேவை என்றும் கூறியுள்ளார். ‘நாம் கிரீன்லாந்தை எடுத்துக் கொள்ளாவிட்டால், ரஷ்யா அல்லது சீனா எடுக்கும். நான் அதை நடக்க விடப் போவதில்லை… எப்படியிருந்தாலும், நமக்கு கிரீன்லாந்து கிடைக்கும்,’ என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். https://athavannews.com/2026/1459615