Aggregator

தொப்பி அணிந்து தாடி வளர்த்தால் பயங்கரவாதி, மொட்டை அடித்து தாடியை எடுத்தால் அகிம்சைவாதியா!

2 months ago

தொப்பி அணிந்து தாடி வளர்த்தால் பயங்கரவாதி, மொட்டை அடித்து தாடியை எடுத்தால் அகிம்சைவாதியா!

Jul 12, 2025 - 20:21

தொப்பி அணிந்து தாடி வளர்த்தால் பயங்கரவாதி, மொட்டை அடித்து தாடியை எடுத்தால் அகிம்சைவாதியா!

தொப்பி அணிந்து தாடிவளர்த்தால் பயங்கரவாதி, மொட்டை அடித்து தாடியை எடுத்தால் அவர்கள் அகிம்சைவாதி இதுவே இந்த நாட்டின் நிலைமையாக காணப்படுகின்றது என சமவுரிமை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர் தென்தே ஞானானந்த தேரர் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பில் இன்று கையெழுத்து மற்றும் துண்டுப் பிரசுரப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சமவுரிமை இயக்கம் மற்றும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆகியன இணைந்து மட்டக்களப்பில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையத்தில் சமவுரிமை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர் தென்தே ஞானானந்த தேரர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தலைவர் இராஜேந்திரா, சமவுரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர் எஸ்.கிருபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கவும், வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவும் அனைத்து இன மக்களின் உரிமையினை உறுதி செய்யும் சமவுரிமையுடைய அரசியலமைப்பினை உருவாக்கு ஆகிய கோரிக்கைகளை அடங்கியதாக இந்த கையெழுத்து போராட்டம் துண்டுப் பிரசுரப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேரர்,

பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்க கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. வட கிழக்கில் இலக்குவைத்து முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளே இந்த சட்டமாகும். 

இந்த சட்டத்தின் மூலம் இன்று வடகிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.இன்றுவரையில் அதில் எந்த மாற்றமும் இல்லாமல் முன்னெடுக்கப்படுகின்றன. 

பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கடந்த காலத்தில் பல வழிகளிலும் பல செயற்பாடுகளை முன்னெடுத்த அமைப்பு ஜேவிபியாகும். ஆனால் அந்த பயங்கரவாத சட்டத்தினை பயன்படுத்தி இன்று 12பேரை இந்த தேசிய மக்கள் சக்தி அரசு கைது செய்துள்ளது. இந்த அரசாங்கமும் பழைய அரசுகளின் அடி பாதையிலேயே செல்கின்றது. 

தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்களுக்கு விரோதமாக செயற்படுகின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்த செயற்பாடுகளை கைவிடுமாறு அவர்களுக்கு வாக்களித்த மக்கள் சார்பில் கோருகின்றேன். 

கடந்த தேர்தல் காலத்தில் யாழில் வைத்து வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களிடம் காணாமல்ஆக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதியைப் பெற்றுத்தருவதற்கு நாங்களும் செயற்படுவோம் என்று கூறியவர்கள் இன்று வரையில் அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை. 

பயங்கரவாத தடை பழைய சட்டத்தினை திருத்தப்போகின்றோம், நீக்கப்போகின்றோம் என்று கூறியவர்கள் இன்று புதிய பயங்கரவாத சட்டத்தினை கொண்டு வருகின்றார்கள். 

கடந்த காலத்தில் ரணில், கோத்தபாய ராஜபக்ஸவின் பாதையிலேயே இந்த அரசாங்கமும் செயற்படுகின்றது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிரான குரல்கொடுக்கவேண்டும். 

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியதற்காக பழைய பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தி முஸ்லிம் இளைஞர் கைது செய்யப்பட்டார். நானும் இஸ்ரேலுக்கு எதிராக முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளோம். 

ஆனால் இந்த செயற்பாடு இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தமிழ்-முஸ்லிம் இளைஞர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. மக்கள் இதற்காக இவர்களுக்கு வாக்களிக்கவில்லை. 

30 வருட காலமாக வடகிழக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும், அவர்களின் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள், காணி பிரச்சினையென பல்வேறு பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படவில்லை. 

இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படவில்லையென்றால் கோத்தபாயவுக்கு நடைபெற்றதே உங்களுக்கும் நடக்கும்" என்றார்.

-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-
https://adaderanatamil.lk/news/cmd0d5cn5012nqp4knsg67frg

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

2 months ago
கபில்தேவை முந்திய பும்ரா: வழக்கமான பலவீனம் மீண்டும் வெளிப்பட்டதால் நெருக்கடியில் இந்தியா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பும்ரா கட்டுரை தகவல் தினேஷ் குமார். எஸ் கிரிக்கெட் விமர்சகர் 12 ஜூலை 2025, 03:47 GMT பிரிட்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணியினருக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியின் இரண்டாம் நாளான நேற்று நடந்தது என்ன? இந்த போட்டியில் வெற்றியை நோக்கிச் செல்கிறதா இந்திய அணி! ஒரு அலசல். கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பிய ஜோப்ரா ஆர்ச்சர், தன்னுடைய மூன்றாவது பந்திலேயே அபாயகரமான பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை எடுத்து லார்ட்ஸ் மைதானத்தையே அதிரவைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்துவதை பார்ப்பதை விட மகிழ்ச்சியான விஷயம் வேறு ஒன்றுமில்லை. ஸ்விங் பந்துவீச்சுக்கு பெயர் போன பிரிட்டன் மண்ணில், ஆர்ச்சர் போன்ற முழுமையான வேகப்பந்து வீச்சாளரை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடுவது கண்கொள்ளா காட்சி. மெதுவான வேகம் கொண்ட மைதானம் என்பதால் லார்ட்ஸ் டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டமும் மந்தமாக தொடங்கி மந்தமாகவே முடிந்தது. கீழ்வரிசை பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை எடுக்க முடியாமல் தடுமாறுவது இந்தியாவுக்கு ஒன்றும் புதிதல்ல. நல்ல டெக்னிக் தெரிந்த பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க வைக்கத் தெரிந்த இந்திய பந்துவீச்சாளர்கள் கடைசிக்கட்ட விக்கெட்டுகளை கைப்பற்ற முடியாமல் தவிப்பது ஆச்சர்யம்தான். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சதம் அடித்த ஜோ ரூட் கபில் தேவ் சாதனையை தகர்த்த பும்ரா ஸ்டோக்ஸ், ரூட், வோக்ஸ் என மூன்று முக்கிய விக்கெட்களை பும்ரா கைப்பற்றிய பிறகு, ஒருகட்டத்தில் 271 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் இழந்து இக்கட்டான நிலையில் இங்கிலாந்து அணி இருந்தது. எட்டாவது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜேமி ஸ்மித்–கார்ஸ் இணைந்து 84 ரன்கள் சேர்த்து இந்திய பந்துவீச்சாளர்களுக்கு தலைவலியை உண்டாக்கினர். சிராஜ் பந்துவீச்சில் ஜேமி ஸ்மித் கொடுத்த சுலபமான கேட்ச்சை ராகுல் தவறிவிட்டது ஆட்டத்தின் போக்கை மாற்றியது எனலாம். 387 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை இங்கிலாந்து பதிவு செய்ததற்கு ராகுல் செய்த தவறவிட்ட வாய்ப்புதான் முக்கிய காரணம். முதல் நாளில் புரூக் விக்கெட்டை கைப்பற்றிய பும்ரா, நேற்று ஆட்டம் தொடங்கிய மூன்றாவது ஓவரிலேயே ஸ்டோக்ஸ் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பும்ரா பந்தில் ஜோ ரூட் கிளீன் போல்டான காட்சி பும்ராவின் வியூகங்கள், பொறி வைப்பு முறைகள் மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் வார்னை நினைவுட்டுகின்றன. ஸ்டோக்ஸ் பவுண்டரி அடிப்பார் என்று தெரிந்தும் ஷார்ட் & வைடாக முந்தைய பந்தை வீசி செட் செய்த பும்ரா, அடுத்த பந்தை அரவுண்ட் த விக்கெட்டில் இருந்து உள்ளே கொண்டு வந்து இங்கிலாந்து கேப்டனின் ஆஃப் ஸ்டம்ப் தலையை பதம்பார்த்தார். அடுத்த ஓவரில் சதமடித்து பெரிய இன்னிங்ஸ் ஒன்றுக்கு தயாராகி கொண்டிருந்த ரூட்டின் மிடில் ஸ்டம்ப்பை தகர்த்தார். அடுத்த பந்திலேயே வோக்ஸ் விக்கெட்டையும் காவு வாங்கினார். 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய பும்ரா lord's honours board இல் தன் பெயரை பதிவுசெய்தார். அயல் மண்ணில் அதிகமுறை 5 அல்லது அதற்கு மேல் விக்கெட்டுகள் (Five wicket haul) கைப்பற்றிய இந்திய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக இருந்த கபில்தேவை(12) பும்ரா முந்தினார். பும்ரா இதுவரை 13 முறை வெளிநாட்டு மண்ணில் 5 அல்லது அதற்கும் மேல் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பும்ரா போட்டுக் கொடுத்த அடித்தளத்தை பிற வேகப்பந்து வீச்சாளர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பும்ராவின் வியூகங்கள், பொறி வைப்பு முறைகள் மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் வார்னை நினைவுட்டுகின்றன கருண் நாயர் - ராகுல் அமைத்துக் கொடுத்த நல்ல 'ஓப்பனிங்' முதல் நாள் போலவே ஆகாஷ் தீப்பின் லைன் & லென்த் நேற்றும் சரியாக இல்லை. சிராஜ் ஒருபக்கம் கட்டுக்கோப்பாக பந்து வீசினாலும் அவருக்கு நேற்றும் அதிர்ஷ்டம் இல்லை என்றே சொல்ல வேண்டும். கடைசியாக ஜேமி ஸ்மித்–கார்ஸ் விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியது ஆறுதலாக அமைந்தது. இந்திய அணி இங்கிலாந்து இன்னிங்ஸில் ஒட்டுமொத்தமாக 5 பந்துகளை பயன்படுத்தியது. Bazball யுகத்தில் Dukes பந்தின் தரம் குறித்து விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், புதிய பந்துக்காக அம்பயர்களிடம் கேப்டன் கில் போராடியது கவனம் பெற்றுள்ளது. 10 ஓவர்களில் பஞ்சு போல மாறிவிடும் Dukes பந்துகளில் Swing & Seam செய்து விக்கெட் வீழ்த்துவது சாதாரண விஷயமல்ல. நாசர் ஹுசைன், ஹார்மிசன் போன்றவர்கள் அடிக்கடி பந்தை மாற்றும் இந்திய அணியின் அணுகுமுறையை விமர்சித்த நிலையில், இங்கிலாந்து ஜாம்பவான் ஸ்டூவர்ட் பிராட், Dukes பந்துகளின் தரம் குறித்து வெளிப்படையாக விமர்சித்திருப்பது பாராட்டுக்குரியது. கருண் நாயர், தனது மறுவருகையில் நம்பிக்கை அளிக்கும்விதமாக விளையாடினாலும் பெரிய இன்னிங்ஸ் எதையும் பதிவுசெய்யவில்லை. ஆஃப் ஸ்டம்ப் லைனில் வெளியே செல்லும் பந்துகளுக்கு அவருக்கு இருக்கும் பலவீனம் நேற்றும் வெளிப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆர்ச்சரின் பந்தை எதிர்கொள்ளும் கருண் நாயர் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்த பிறகு மூன்றாவது விக்கெட்டுக்கு ராகுலுடன் இணைந்த கருண், பிரமாதமான டைமிங்குடன் (Timing) விளையாடி தனது அனுபவத்தையும் திறமையையும் வெளிப்படுத்தினார். அலாதியான கால்பாடம் (Footwork) இல்லையென்ற போதும், எடையை முன்னும் பின்னும் இலகுவாக மடைமாற்றி சில அழகான டிரைவ்களை கவர், ஸ்கொயர் திசைகளில் அடித்தார். கர்நாடக மண்ணின் மைந்தர்களான ராகுல், கருண் இருவரின் நேர்த்தியான ஆட்டமும் அழகிய லார்ட்ஸ் மைதானத்தில் கண்களுக்கு விருந்தளித்தது. முதலிரு டெஸ்ட்களை போலவே நல்லபடியாக செட் ஆனபிறகு, விக்கெட்டை தாரைவார்த்தது அவருக்கு நிச்சயம் வருத்தம் ஏற்படுத்திருக்கும். சாதனை படைத்த ரூட் கருண் நாயர் கேட்ச்சின் மூலம், டெஸ்டில் அதிக கேட்ச்கள் பிடித்தவர் (210) என்ற சாதனையை ரூட் படைத்தார். உலகின் தலைசிறந்த ஸ்லிப் பீல்டர்கள் அனைவரும் Ball sense கொண்டவர்களாக இருப்பார்கள். கேட்ச்சிங்கின் போது மட்டுமில்லாமல் அவர்களுடைய பேட்டிங்கிலும் அந்த ball sense எதிரொலிக்கும். மார்க் வாஹ், டிராவிட், ஜெயவர்த்தனே என நிறைய பேரை உதாரணமாக சொல்லலாம். இந்திய அணியினர் தொடர்ச்சியாக ஸ்லிப் பிராந்தியத்தில் கேட்ச்களை கோட்டைவிடும் நிலையில், எப்படி ஸ்லிப்பில் செயல்பட வேண்டுமென ரூட் பாடமெடுத்தது போல அந்தக் கேட்ச் அமைந்தது. ஸ்டோக்ஸ் முழு உடற்தகுதியுடன் திரும்பி வந்து, முக்கிய விக்கெட்டான கருண் நாயர் விக்கெட்டை எடுத்துள்ளது இங்கிலாந்துக்கு சாதகமான விஷயம். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்காத வோக்ஸ், தன்னுடைய டிரேட் மார்க் wobble seam பந்தின் மூலம் கில் விக்கெட்டை கைப்பற்றி, கடைசி நேரத்தில் ஆட்டத்தை இங்கிலாந்தின் பக்கம் திருப்பியுள்ளார். உள்ளே வரும் பந்துகளுக்கு கவனத்தை குவித்த கில், பிட்ச் ஆகி எந்தப் பக்கம் செல்லும் என்று பந்துவீச்சாளருக்கு கூட தெரியாத, wobble seam பந்தில் விக்கெட் கீப்பர் ஸ்மித்திடம் எட்ஜ் கொடுத்து ஆட்டமிழந்தார். கடந்த 5 ஆண்டுகளில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களின் பேட்டிங் சராசரி அடிவாங்கியதில் wobble seam பாணி பந்துவீச்சுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. இந்தியாவின் சிராஜ் இதே பாணியில் பந்துவீசியும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாததற்கு ஆடுகளத்தின் மெதுவான தன்மையும் ஒரு காரணம். மெதுவான வேகம் கொண்ட மைதானத்தில் வோக்ஸ் போல வேகத்தை குறைத்து வீசுவதும் பலனளிக்கும். இந்த தொடரின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது ராகுல்தான். கில் அளவுக்கு ரன்கள் குவிக்கவில்லை என்றாலும் தொழில்நுட்ப ரீதியாக ராகுலின் பேட்டிங் உச்சத்தில் இருக்கிறது. கடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் ராகுல் ரோஹித்துடன் சேர்ந்து பிரமாதமான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்ததை மறக்க முடியாது. 145 கிமீ வேகத்துக்கு மேல் வீசப்படும் பந்துகளையும் முன்னங்காலுக்கு சென்று ராகுல் நேர்த்தியாக தற்காப்பு ஆட்டம் விளையாடுகிறார். இந்திய அணி கில் விக்கெட்டை விரைவாக இழந்த நிலையில், இன்று பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டிய பொறுப்பு ராகுலுக்கு உள்ளது. முதல் நாளில் விரலில் காயமடைந்த பந்த், கடுமையான சிரமத்துடன் பேட்டிங் செய்து வருகிறார். இந்திய அணி 242 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், ராகுலுடன் சேர்ந்து மூன்றாம் நாளில் பந்த் எப்படி இன்னிங்ஸை தொடங்குகிறார் என்பது ஆட்டத்தின் முடிவை தீர்மானிக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராகுலுடன் சேர்ந்து மூன்றாம் நாளில் பந்த் எப்படி இன்னிங்ஸை தொடங்குகிறார் என்பது ஆட்டத்தின் முடிவை தீர்மானிக்கும். விரலில் காயமடைந்துள்ள பந்த்துக்கு சவால் அளிக்கும் விதமாக இங்கிலாந்து அணி ஆர்ச்சரை கொண்டு வந்து தாக்குதல் பாணி ஆட்டம் ஆடாதது ஏன் என புரியவில்லை. பந்துவீச்சில் 50-60 ரன்களை கூடுதலாக இந்தியா விட்டுக்கொடுத்த நிலையில், மூன்றாம் நாள் முழுவதும் பேட் செய்து ரன் சேர்க்க வேண்டிய நெருக்கடியில் இந்தியா உள்ளது. முதல் நாளில் இரு அணிகளுக்கும் சம பலத்தில் முடிந்த ஆட்டம், இரண்டாம் நாளில் இங்கிலாந்தின் கைகளுக்கு சென்றுள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwyexdpn0jvo

நான்கு வயதுடைய மகனுக்கு வைத்தியசாலையில் வைத்து இறுதி அஞ்சலி

2 months ago
மன்னார் - நானாட்டான் பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து Published By: VISHNU 11 JUL, 2025 | 11:44 PM மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் பகுதியில் வியாழக்கிழமை (10) மாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த சிறுவனின் உடலை குறித்த விபத்தில் படுகாயம் அடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குறித்த சிறுவனின் தந்தை இறுதியாக பார்க்கும் புகைப்படம் வெளியாகி பலரையும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தந்தை, தாய், மகன் மற்றும் மகள் ஆகிய நான்கு பேரும் வியாழக்கிழமை (10) மாலை நானாட்டான் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது நானாட்டான் பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை, தாய், மகன் மற்றும் மகள் ஆகிய நான்கு பேரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டனர். எனினும் பலத்த காயங்களுக்கு உள்ளான 4 வயதுடைய சிறுவன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். மேலும் பலத்த காயமடைந்த தந்தை, தாய் மற்றும் 12 வயதுடைய சிறுமி ஆகிய மூவரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த 12 வயதுடைய சிறுமி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில் குறித்த 4 வயதுடைய சிறுவன் உயிரிழந்த சம்பவம் தந்தைக்கு தெரியாத நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(11) மகன் இறந்த செய்தியை தந்தையிடம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் தந்தை எழுந்து நடக்க முடியாத நிலையில் தனது நான்கு வயதுடைய மகனுக்கு வைத்தியசாலையில் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. உயிரிழந்த சிறுவனின் சடலம் இறுதிக் கிரியைகளுக்காக உறவினர்களிடம் கையளிக்கும் முன்னர் வைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் தந்தைக்கு காண்பிக்கப்பட்ட நிலையில், தனது மகனின் உடலை தடவி தந்தை அஞ்சலி செலுத்தினார். குறித்த புகைப்படம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. https://www.virakesari.lk/article/219774

நான்கு வயதுடைய மகனுக்கு வைத்தியசாலையில் வைத்து இறுதி அஞ்சலி

2 months ago

மன்னார் - நானாட்டான் பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து

Published By: VISHNU

11 JUL, 2025 | 11:44 PM

image

மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் பகுதியில் வியாழக்கிழமை (10) மாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த சிறுவனின் உடலை குறித்த விபத்தில் படுகாயம் அடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குறித்த சிறுவனின் தந்தை இறுதியாக பார்க்கும் புகைப்படம் வெளியாகி பலரையும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

குறித்த சம்பவம் குறித்து  மேலும் தெரிய வருகையில்,

மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தந்தை, தாய், மகன் மற்றும் மகள் ஆகிய நான்கு பேரும் வியாழக்கிழமை (10)  மாலை நானாட்டான் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது நானாட்டான் பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி   விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை, தாய், மகன் மற்றும் மகள் ஆகிய நான்கு பேரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டனர்.

எனினும் பலத்த காயங்களுக்கு உள்ளான 4 வயதுடைய சிறுவன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

மேலும் பலத்த காயமடைந்த தந்தை, தாய் மற்றும் 12 வயதுடைய சிறுமி ஆகிய மூவரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று  வந்த நிலையில் குறித்த 12 வயதுடைய சிறுமி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த 4 வயதுடைய சிறுவன் உயிரிழந்த சம்பவம் தந்தைக்கு தெரியாத நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(11) மகன் இறந்த செய்தியை தந்தையிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் தந்தை எழுந்து நடக்க முடியாத நிலையில் தனது நான்கு வயதுடைய மகனுக்கு வைத்தியசாலையில் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

உயிரிழந்த சிறுவனின் சடலம் இறுதிக் கிரியைகளுக்காக உறவினர்களிடம் கையளிக்கும் முன்னர் வைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் தந்தைக்கு காண்பிக்கப்பட்ட நிலையில், தனது மகனின் உடலை தடவி தந்தை அஞ்சலி செலுத்தினார்.

குறித்த புகைப்படம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/219774

எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது !

2 months ago
விமானிகளின் உரையாடல் ஏர் இந்தியா விமான விபத்தின் மர்மத்தை இன்னும் அதிகரிப்பது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் சௌதிக் பிஸ்வாஸ் பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஜூன் மாதம் ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான முதல் கட்ட விசாரணையில் புலனாய்வாளர்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர். விமானம் புறப்பட்ட சில வினாடிகளில், 12 ஆண்டு வயதுடைய போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தின் இரண்டு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளும் திடீரென "கட்-ஆஃப்" நிலைக்கு மாறியதால், என்ஜின்களுக்கு எரிபொருள் செல்வது நின்று, முழுமையாக செயலிழந்தது. "கட்-ஆஃப்" செய்வது பொதுவாக விமானம் தரையிறங்கிய பிறகு மட்டுமே நடக்கும் செயல். காக்பிட் குரல் பதிவில், ஒரு விமானி மற்றவரிடம், "நீ ஏன் கட்-ஆஃப் செய்தாய்?" என்று கேட்க, அதற்கு அவர், "நான் செய்யவில்லை," என்று பதிலளிக்கிறார். இந்த குரல் பதிவு யார் கேள்வி கேட்டது, யார் பதிலளித்தது என்பதை தெளிவுபடுத்தவில்லை. விமானம் புறப்படும் நேரத்தில், துணை விமானி விமானத்தை இயக்க, கேப்டன் கண்காணித்துக் கொண்டிருந்தார். எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் மீண்டும் விமானத்தின் இயல்பான நிலைக்குத் திரும்பியதால், தானாகவே என்ஜின் மீண்டும் செயல்பட முயற்சி செய்தது. ஆனால், விபத்து நிகழ்ந்தபோது ஒரு எஞ்சின் உந்துதலை மீட்டெடுத்து வந்தது, மற்றொரு எஞ்சின் இயங்க தொடங்கியிருந்தாலும், அதன் முழு சக்தியையும் மீட்டெடுக்கவில்லை. ஏர் இந்தியா விமானம் 171, புறப்பட்ட 40 வினாடிகளுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இது இந்தியாவில் ஏற்பட்ட மிகவும் குழப்பமான விமான விபத்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. விமானம் புறப்பட்டவுடன் என்ன தவறு நடந்தது என்பதை அறிய, புலனாய்வாளர்கள் இடிபாடுகளையும் காக்பிட் பதிவுகளையும் ஆய்வு செய்தனர். ஃபிளைட்ராடார்24 தரவுகளின்படி, தெளிவான வானிலையில் விமானம் 625 அடி உயரத்தை எட்டியது, ஆனால் 50 வினாடிகளில் தொடர்பை இழந்தது. சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள 15 பக்க அறிக்கை இந்த விபத்து குறித்த ஆரம்பத் தகவல்களை வழங்குகிறது. இந்திய அதிகாரிகள் தலைமையில், போயிங், ஜிஇ (General Electric), ஏர் இந்தியா, இந்திய ஒழுங்குமுறை அமைப்புகள், அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மற்றும் பிரிட்டன் நிபுணர்களுடன் இணைந்து நடத்தப்பட்ட விசாரணை, இந்த விமான விபத்து குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. புலனாய்வாளர்களின் கூற்றுப்படி இந்த லிவர் லாக் எரிபொருள் சுவிட்சுகள் தவறுதலாக இயக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சுவிட்சுகளின் இயக்கத்தை மாற்றுவதற்கு முன்பாக இதன் பாதுகாப்பு லிவரை மேல் நோக்கி இயக்கி அன்லாக் செய்ய வேண்டும். இந்த பாதுகாப்பு அம்சங்கள் 1950 முதல் பயன்பாட்டில் உள்ளன. துல்லியமான தரநிலைகளைக் கொண்ட இந்த சுவிட்சுகள் நம்பகத்தன்மை வாய்ந்தவை. பாதுகாப்பு காப்பான்கள் (Protective guard brackets) இந்த சுவிட்சுகள் தவறுதலாக இயக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பு அளிக்கின்றன. "ஒரு கையால் ஒரே இயக்கத்தில் இரண்டு சுவிட்சுகளையும் இழுப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. எனவே, இது தற்செயலாக நடந்திருக்க வாய்ப்பில்லை," என்று பெயர் வெளியிட விரும்பாத கனடாவைச் சேர்ந்த விமான விபத்து விசாரணையாளர் பிபிசியிடம் தெரிவித்தார். இதனால் தான் ஏர் இந்தியா விபத்து மிகவும் தனித்துவமானதாகவும், மர்மமானதாகவும் உள்ளது. விமானிகளில் ஒருவர், வேண்டுமென்றோ அல்லது தவறுதலாகவோ, எரிபொருள் சுவிட்சுகளை அணைத்திருந்தால், "ஏன் சுவிட்சுகளை ஆஃப் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது," என்று ஓஹியோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் முன்னாள் விமான விபத்து ஆய்வாளரும், விமான நிபுணருமான ஷான் ப்ருச்னிக்கி பிபிசியிடம் கூறுகிறார். "இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா அல்லது குழப்பத்தால் ஏற்பட்டதா? ஆனால் விமானிகள் அசாதாரணமான எதையும் தெரிவிக்கவில்லை என்பதால் அதற்கு சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. காக்பிட் அவசர சூழல்களில், விமானிகள் தவறான சுவிட்சுகளை அழுத்துவது அல்லது தவறானவற்றை தேர்வு செய்வது போன்ற சம்பவங்கள் நடக்கலாம். ஆனால், இங்கு அப்படியான எந்த அறிகுறியும் இல்லை. எரிபொருள் சுவிட்சுகள் தவறுதலாக அணைக்கப்பட்டதாகவும் எந்த விவாதமும் இல்லை. இத்தகைய பிழை, ஏதேனும் வெளிப்படையான பிரச்னை இல்லாமல் பொதுவாக நடக்காது," என்றும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆமதாபாத்தில் நெரிசலான பகுதியில் ஏர் இந்தியா விமானம் 171 மோதியது. "விமானம் பறந்த சில வினாடிகளில் எரிபொருள் சுவிட்சை ஒரு விமானி அணைத்துவிட்டார் என்பது மிகவும் கவலையளிக்கிறது" என்கிறார் அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரான பீட்டர் கோயல்ஸ். "காக்பிட் குரல் பதிவில் இதுவரை வெளியானவற்றை விட அதிக தகவல்கள் இருக்கலாம். 'ஏன் சுவிட்சுகளை அணைத்தாய்?' என்ற ஒற்றை வார்த்தை மட்டும் போதாது," என்று கோயல்ஸ் கூறினார். "காக்பிட்டில் யாரோ ஒருவர் எரிபொருள் வால்வுகளை மூடியிருக்கிறார் என்பதை புதிய தகவல்களின்படி அறியமுடிகிறது. ஆனால், யார் மூடியது? ஏன் மூடினார்கள்? என்பதுதான் கேள்வி. இரண்டு சுவிட்சுகளும் அணைக்கப்பட்டு, சில வினாடிகளில் மீண்டும் இயக்கப்பட்டன. எஞ்சினை மீண்டும் இயக்க முயன்றது விமானத்தை இயக்கிய விமானியா அல்லது கண்காணித்த விமானியா? என்பது குறித்த விவரங்களை குரல் பதிவு வெளிப்படுத்தும்" என்றும் அவர் குறிப்பிட்டார். ஏர் இந்தியா விமானம் 171 விபத்து குறித்த விசாரணையில், காக்பிட் குரல் பதிவு முக்கிய திறவுகோலாக உள்ளதாக புலனாய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த பதிவில் விமானிகளின் மைக்குகள், ரேடியோ அழைப்புகள் மற்றும் காக்பிட் சுற்றுப்புற ஒலிகள் உள்ளன, இவை விபத்தைச் சுற்றியுள்ள மர்மத்தை அவிழ்க்க உதவும். "அவர்கள் குரல்களை இன்னும் அடையாளம் காணவில்லை, இது மிகவும் முக்கியமானது. பொதுவாக, குரல் பதிவை ஆய்வு செய்யும்போது, விமானிகளை நன்கு அறிந்தவர்கள் உடன் இருந்து அதில் கேட்கும் குரல்களை,விமானிகளின் குரல்களோடு பொருத்துவார்கள். ஆனால், இப்போது வரை, எந்த விமானி எரிபொருள் சுவிட்சுகளை அணைத்து மீண்டும் இயக்கினார் என்பது தெரியவில்லை," என்று பீட்டர் கோயல்ஸ் கூறினார். தெளிவான குரல் அடையாளம், பேசியவர்களின் பெயர்களுடன் முழு காக்பிட் உரையாடல் பதிவு, மற்றும் விமானம் வாயிலில் இருந்து புறப்பட்டு விபத்துக்குள்ளாகும் வரையிலான அனைத்து தகவல்களையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் பரிந்துரைத்தபடி, காக்பிட் வீடியோ பதிவு கருவிகள் தேவை என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். காக்பிட்டில் உள்ள விமானிகளின் செயல்பாடுகளை, அவர்களின் தோள்பட்டைக்கு மேலிருந்து பதிவு செய்யப்பட்ட காட்சிகள், கட்-ஆஃப் சுவிட்சை யார் இயக்கினார் என்பதை காட்டியிருக்கக்கூடும். விமானம் 171-ஐ பறக்கத் தொடங்குவதற்கு முன், விமானிகளும் பணியாளர்களும் சுவாச பரிசோதனையில் (மது அருந்தியுள்ளார்களா என்ற சோதனை) தேர்ச்சி பெற்று, பறக்கத் தகுதியானவர்களாக இருந்ததாக அறிக்கை கூறுகிறது. மும்பையைச் சேர்ந்த விமானிகள், விமானம் புறப்படுவதற்கு முந்தைய நாள் ஆமதாபாத்துக்கு வந்து, போதுமான ஓய்வு எடுத்திருந்தனர். ஆனால், அறிக்கையில் ஒரு முக்கிய விவரத்தையும் புலனாய்வாளர்கள் ஆராய்கின்றனர். 2018 டிசம்பரில், அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (FAA) ஒரு சிறப்பு விமானத் தகுதி அறிக்கை (SAIB) வெளியிட்டது. இதில், சில போயிங் 737 விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளில், லாக் செய்யும் அம்சம் இல்லாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டது. ஆனால் இந்தப் பிரச்னை உள்ளது எனக் குறிப்பிடப்பட்டாலும், இது பாதுகாப்பற்ற நிலையாகக் கருதப்படவில்லை. போயிங் 787-8 விமானங்களிலும் இதே சுவிட்ச் வடிவமைப்பு பயன்படுத்தப்படுகிறது, இதில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியாவின் VT-ANB விமானமும் அடங்கும். SAIB-ன் அறிக்கை ஒரு ஆலோசனை மட்டுமே என்பதால், ஏர் இந்தியா பரிந்துரைக்கப்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை. பட மூலாதாரம்,BLOOMBERG VIA GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியாவில் நடந்த விமான கண்காட்சியில் ஏர் இந்தியாவால் இயக்கப்படும் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தின் காக்பிட். எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளில் ஏதேனும் சிக்கல் உள்ளதா என்று யோசிப்பதாகக் கூறுகிறார் ப்ருச்னிக்கி . இதுகுறித்து பேசிய அவர், "அறிக்கையில் உள்ள இந்த பகுதி சரியாக என்ன சொல்கிறது? ஒரு முறை சுவிட்சை அணைத்தால், இயந்திரம் அணைந்து எரிபொருள் விநியோகம் தடைபடுமா? லாக் அம்சம் துண்டிக்கப்படும்போது, என்ன நடக்கும்? சுவிட்ச் தானாகவே 'ஆஃப்' ஆகி இயந்திரத்தை நிறுத்த முடியுமா? இது உண்மையாக இருந்தால், இது மிகவும் தீவிரமான பிரச்னை. இல்லையெனில், இதை தெளிவாக விளக்க வேண்டும்"என்கிறார். ஆனால், மற்றவர்கள் இது ஒரு இது முக்கிய பிரச்னையாக இருக்க வாய்ப்பில்லை என்று கருதுகின்றனர். "இது FAA வெளியிட்ட ஒரு சிறிய அறிவிப்பு என்று தோன்றுகிறது, இதைப் பற்றி நான் கேள்விப்படவில்லை. விமானிகள், பொதுவாக விரைவாக புகார் கூறுபவர்கள், இந்த சுவிட்சுகள் குறித்து எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. இது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் ஆராய்வது நல்லதுதான் , ஆனால் இது ஒரு கவனச்சிதறலாகவும் இருக்கலாம்," என்று கோயல்ஸ் கூறுகிறார். இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் (AAIB) முன்னாள் புலனாய்வாளர் கேப்டன் கிஷோர் சிந்தா, விமானத்தின் மின்னணு கட்டுப்பாட்டு அலகில் ஏற்பட்ட (Electronic Control Unit) பிரச்னையால் எரிபொருள் சுவிட்சுகள் செயலிழந்திருக்கலாமா என்ற கோணத்தில் சிந்திக்கிறார் . "விமானியின் ஈடுபாடு இல்லாமல், மின்னணு கட்டுப்பாட்டு அலகு மூலம் எரிபொருள் கட்-ஆஃப் சுவிட்சுகளை மின்னணு முறையில் இயக்க முடியுமா? அப்படி மின்னணு முறையில் சுவிட்சுகள் செயலிழந்தால், அது மிகவும் கவலைக்குரியது," என்று அவர் பிபிசியிடம் கூறினார். அறிக்கையின்படி, எரிபொருள் நிரப்பும் டேங்கில் இருந்து எடுக்கப்பட்ட எரிபொருள் மாதிரிகள் "திருப்திகரமானவை" என்று கண்டறியப்பட்டன. முன்னதாக, இரட்டை இயந்திர செயலிழப்புக்கு எரிபொருள் மாசுபாடு காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதியிருந்தனர். மேலும், முழுமையான விசாரணை நிலுவையில் உள்ளதால், இயந்திரக் கோளாறு தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது. "இப்போதெல்லாம், நான் 787 விமானத்தில் பறக்கும்போது, தரையிறங்கும் கியர் பின்வாங்கும் செயல்முறையை உன்னிப்பாகக் கவனிக்கிறேன். கியர் கைப்பிடியை இழுக்கும்போது, நாங்கள் ஏறக்குறைய 200 அடி (60.9 மீட்டர்) உயரத்தில் இருப்போம். முழு கியர் பின்வாங்கும் செயல்முறை சுமார் 400 அடி உயரத்தில், மொத்தம் எட்டு வினாடிகளில் முடிவடைகிறது. இது விமானத்தின் உயர் அழுத்த ஹைட்ராலிக் அமைப்பு காரணமாக சாத்தியமாகிறது."என்கிறார் ப்ருச்னிக்கி . விமானத்தை இயக்கியவர் சிந்திக்க நேரமே இல்லாமல் இருந்திருக்கலாம் என அந்த விமானி கருதுகிறார். "இரண்டு என்ஜின்களும் செயலிழந்து, விமானம் கீழே செல்லத் தொடங்கும்போது, நீங்கள் வெறுமனே அதிர்ச்சியடையவில்லை, மரத்துப் போய்விடுவீர்கள். அந்த நொடியில், தரையிறங்கும் கருவி உங்கள் கவனத்தில் இருப்பதில்லை. உங்கள் மனம் ஒரே விஷயத்தில் நிலைத்து இருக்கும். அதாவது, இந்த விமானத்தை எங்கு பாதுகாப்பாக இறக்க முடியும்? என விமானப் பாதையின் மீது தான் உங்களது கவனம் இருக்கும். ஆனால், இந்த விபத்தில், அதற்கு போதுமான உயரம் இல்லை," என்றும் அவர் விளக்கினார். விமானக் குழு நிலைமையை சரி செய்ய முயன்றது, ஆனால் எல்லாம் மிக விரைவாக நடந்துவிட்டது என்று கூறுகின்றனர் புலனாய்வாளர்கள் . "என்ஜின்கள் அணைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் இயக்கப்பட்டன. இயந்திரங்கள் உந்துதலை இழப்பதை விமானிகள் உணர்ந்தனர். முதலில் இடது என்ஜினை மீண்டும் ஆன் செய்து, பின்னர் வலது என்ஜினிலும் முயன்றிருக்கலாம்," என்று ஷான் ப்ருச்னிக்கி கூறினார். "ஆனால், வலது என்ஜின் மீண்டும் இயங்க போதுமான நேரம் கிடைக்கவில்லை, உந்துதலும் போதுமானதாக இல்லை. இறுதியில் இரண்டு என்ஜின்களும் "இயங்கும் நிலைக்கு" மாற்றப்பட்டன. ஆனால், இடது என்ஜின் முதலில் அணைக்கப்பட்டு, வலது என்ஜின் மீட்கப்படுவதற்கு மிகவும் தாமதமாகிவிட்டதால், சூழலை சரி செய்யும் முயற்சி பயனளிக்கவில்லை." என்பது ப்ருச்னிக்கியின் கூற்றாக உள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy0w1rvzz11o

நெடுந்தீவுக் கடலில் விபத்து - 15 பேர் மயிரிழையில் உயிர்பிழைப்பு

2 months ago
12 JUL, 2025 | 05:40 PM நெடுந்தீவைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான சுற்றுப்பயணிகளை ஏற்றும் சிறிரக படகில் நெடுந்தீவுக்கு சென்று திரும்பும் போது படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு மூழ்கியுள்ளதுடன் சுற்றுலாப் பயணிகள் 12 பேரும் 02 பணியாளர்களும் என 14 பேர் உயிராபத்து இன்றி மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருகையில், தென்னிலங்கையைச் சேர்ந்த 12 சுற்றுலாப் பயணிகளுடன் நெடுந்தீவுக்கு சென்று குறிகாட்டுவான் திரும்பும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இடைக்கடலில் குறித்த சுற்றுலா படகில் இருந்து வெள்ளைக்கொடி காட்டுவதனை அவ்வழியே சென்ற நெடுந்தீவு தனியார் படகான சபரிஷ் படகு பணியாளர்கள் அவதானித்த விரைந்து செயற்பட்டு சேசமடைந்த படகில் இருந்து சகல சுற்றுலாப் பயணிகளையும் பத்திரமாக தமது படகிற்கு மாற்றி ஓரிரு நிமிடங்களில் குறித்த சுற்றுலாவிகள் படகு முழுமையாக நீரில் முழ்கிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் பின்னர் கடற்படையினரது படகு குறித்த இடத்திற்கு வந்து மிட்கப்பட்ட பயணிகளை தங்களது படகில் ஏற்றிக்கொண்டு குறிகாட்டுவானை சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/219822

நெடுந்தீவுக் கடலில் விபத்து - 15 பேர் மயிரிழையில் உயிர்பிழைப்பு

2 months ago

12 JUL, 2025 | 05:40 PM

image

நெடுந்தீவைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான சுற்றுப்பயணிகளை ஏற்றும் சிறிரக படகில் நெடுந்தீவுக்கு சென்று திரும்பும் போது படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு மூழ்கியுள்ளதுடன் சுற்றுலாப் பயணிகள் 12 பேரும் 02 பணியாளர்களும் என 14 பேர் உயிராபத்து இன்றி மீட்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பில் தெரியவருகையில், 

தென்னிலங்கையைச் சேர்ந்த 12 சுற்றுலாப் பயணிகளுடன் நெடுந்தீவுக்கு சென்று குறிகாட்டுவான் திரும்பும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

இடைக்கடலில் குறித்த சுற்றுலா படகில் இருந்து வெள்ளைக்கொடி காட்டுவதனை அவ்வழியே சென்ற  நெடுந்தீவு தனியார் படகான சபரிஷ் படகு பணியாளர்கள் அவதானித்த விரைந்து செயற்பட்டு சேசமடைந்த படகில் இருந்து சகல சுற்றுலாப் பயணிகளையும் பத்திரமாக தமது படகிற்கு மாற்றி ஓரிரு நிமிடங்களில் குறித்த சுற்றுலாவிகள் படகு முழுமையாக நீரில் முழ்கிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன் பின்னர் கடற்படையினரது படகு குறித்த இடத்திற்கு வந்து மிட்கப்பட்ட பயணிகளை தங்களது படகில் ஏற்றிக்கொண்டு குறிகாட்டுவானை சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://www.virakesari.lk/article/219822

யாழில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

2 months ago
யாழில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு! written by admin July 12, 2025 பிள்ளைகளுக்கு உணவு வாங்கி சென்றவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை காப்பாளரான , நயினாதீவை சேர்ந்த பாலேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி, பலாலி வீதியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்தில் உணவருந்திய பின்னர் பிள்ளைகளுக்கும் உணவு வாங்கிக்கொண்டு பலாலி வீதியில் துவிச்சக்கர வண்டியில் ஏற முற்பட்டவேளை , வீதியில் மிக வேகமாக வந்த ஹயஸ் ரக வாகனம் மோதியுள்ளது. அதில் படுகாயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் கோப்பாய் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை இவரது இரு பிள்ளைகள் பேராதனை மற்றும் ஶ்ரீஜெயவர்த்தன புர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் நிலையில், இளைய மகள் அண்மையில் வெளியான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A பெறுபேறுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/217784/

யாழில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

2 months ago

யாழில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

written by admin July 12, 2025

acci.jpeg?fit=950%2C949&ssl=1

பிள்ளைகளுக்கு உணவு வாங்கி சென்றவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை காப்பாளரான , நயினாதீவை சேர்ந்த பாலேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

திருநெல்வேலி, பலாலி வீதியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்தில் உணவருந்திய பின்னர் பிள்ளைகளுக்கும் உணவு வாங்கிக்கொண்டு பலாலி வீதியில் துவிச்சக்கர வண்டியில் ஏற முற்பட்டவேளை , வீதியில் மிக வேகமாக வந்த ஹயஸ் ரக வாகனம் மோதியுள்ளது. அதில் படுகாயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் கோப்பாய் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை இவரது இரு பிள்ளைகள் பேராதனை மற்றும் ஶ்ரீஜெயவர்த்தன புர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் நிலையில், இளைய மகள் அண்மையில் வெளியான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A பெறுபேறுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


https://globaltamilnews.net/2025/217784/

எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது !

2 months ago
முற்றுப்புள்ளியா? விமான ஓட்டிகளில் ஒருவர்தான் திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தினார் என ஒரு கருத்து பரவுகின்றது. இன்னும் சரியான காரணம் அறியப்படவில்லை.

செம்மணி : அதிர்ச்சி தரும் அத்தாட்சிகள்!

2 months ago
சம்மந்துரை...வீரமுனைபடுகொல்லை உங்கள் கணக்கில் இல்லையோ...அல்லது சண்கிளாஸ் போட்டிருக்கிறியாளோ... கடந்த 5 வருடத்தில் உங்கடை ஆட்கள் அமச்ச்சுப்பதவி வகித்தவையே,,, அதிவிட கிழக்கில் ஆட்ட்சியும் செலுத்தினவை....அப்ப எங்கை போனது இந்த குரலற்றவை அமைப்பு... செம்மணி தோண்டி உண்மைகள் வெளிவர உங்களுக்கு கடி தொடங்கியிட்டுது...

செம்மணி : அதிர்ச்சி தரும் அத்தாட்சிகள்!

2 months ago
குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம் குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, இன்று (11) வெள்ளிக்கிழமை மீண்டும் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் மூலம் அழைக்கப்பட்டுள்ளது. இதன்போது சட்டமா அதிபருக்கும், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கும், களுவாஞ்சிக்குடி பொலிசாருக்கும் அடுத்த தவணையில் மன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 5 வருடங்களாக இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டிருந்துள்ளது. குரல்கள் இயக்க அமைப்பின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் இதன்போது சென்றிருந்தனர். Jaffna Muslimகுருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்...