Aggregator

அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்

2 months ago
இளகின இரும்பை கண்டால் கொல்லர் எதையோ…தூக்கி…தூக்கி அடிப்பாராம் என்பது போல் இருக்கிறது சில முஸ்லிம் “தலைவர்களின்” அறிக்கை அக்கப்போர். எமது தலைவர்கள் போலவே அவர்களின் தலைவர்களும் தம்மக்களின் அவலத்தை வைத்து ஆதாயம் தேடுவதில் சூரர். இதில் புலிகள் கழட்ட முடியாத நகையை வெட்டி எடுத்தனர் என ஒரு புது புரளியை இவர் கிளப்பி உள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய இளைஞன் உயிர்மாய்க்க முயன்று வைத்தியசாலையில்

2 months ago
பப்ஜி விளையாட்டு தோல்வியால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் வலி கிழக்கு முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அகிப் சிவகுமார் சிகிச்சை பலனின்றி மரணமானார். நம்ம யாழ்ப்பாணம் இவன் போன்றவர்களை உறுப்பினராக்கிய மக்கள் முட்டாள்கள். Ilango Mahendra

இலங்கையின் முதியோர் தொகை 18% ஆக அதிகரிப்பு!

2 months ago
இது இலங்கையில் ஏற்படும் மூளைவறட்சியால் ஏற்பட்டதாக இருக்காதா ....? இள வயது தொழில்முனைவோர் முதல் கல்விமான்கள் வரை வெளிநாட்டிற்கு ஓடித்தப்பிக்கொண்டிருக்க வெளிநாடுகளுக்கு பிரயோசனமற்ற முதியவர்கள் தப்பிக்க வழியேதும் இன்றி நாட்டில் தேங்குவதால் இந்த நிலை ஏற்படக்கூடுமல்லவா ....? சடுதியான அதிகரிப்பு என்பது குடிமக்களின் பாரிய அளவிலான இடப்பெயர்வால் நடந்துள்ளதாகவே தெரிகிறது

இலங்கையின் முதியோர் தொகை 18% ஆக அதிகரிப்பு!

2 months ago
இலங்கையின் முதியோர் தொகை 18% ஆக அதிகரிப்பு! ஆசிய பிராந்தியத்தில் வேகமாக வளர்ந்து வரும் முதியோர் மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2012 ஆம் ஆண்டில், இலங்கையின் முதியோர் மக்கள் தொகை மொத்த மக்கள் தொகையில் 12% ஆக இருந்ததாகவும், 2024 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 18% ஆக அதிகரித்துள்ளதாகவும் ஆலோசகர் சமூக வைத்தியர் நிஷானி உபேசேகர தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் மேலும் உரையாற்றிய அவர், 2012 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மக்கள் தொகையில் 12% பேர் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள். 2024 மக்கள் தொகை கணக்கெடுப்பில், இது 18% ஆக உயர்ந்துள்ளது. 2040 ஆம் ஆண்டுக்குள், மக்கள் தொகையில் 25% – அதாவது, ஒவ்வொரு நான்கு பேரில் ஒருவர் – முதியவர்களாக இருப்பார்கள் என்று நாங்கள் கணித்துள்ளோம். ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இலங்கை அதன் முதியோர் மக்கள்தொகையில் அதிக வளர்ச்சி விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலைமை முக்கியமாக பிறக்கும் போது ஆயுட்காலம் அதிகரிப்பதாலும் பிறப்பு விகிதங்கள் குறைவதாலும் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். https://athavannews.com/2025/1451563

இலங்கையின் முதியோர் தொகை 18% ஆக அதிகரிப்பு!

2 months ago

New-Project-334.jpg?resize=750%2C375&ssl

இலங்கையின் முதியோர் தொகை 18% ஆக அதிகரிப்பு!

ஆசிய பிராந்தியத்தில் வேகமாக வளர்ந்து வரும் முதியோர் மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

2012 ஆம் ஆண்டில், இலங்கையின் முதியோர் மக்கள் தொகை மொத்த மக்கள் தொகையில் 12% ஆக இருந்ததாகவும், 2024 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 18% ஆக அதிகரித்துள்ளதாகவும் ஆலோசகர் சமூக வைத்தியர் நிஷானி உபேசேகர தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் மேலும் உரையாற்றிய அவர், 

2012 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மக்கள் தொகையில் 12% பேர் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள். 

2024 மக்கள் தொகை கணக்கெடுப்பில், இது 18% ஆக உயர்ந்துள்ளது.

2040 ஆம் ஆண்டுக்குள், மக்கள் தொகையில் 25% – அதாவது, ஒவ்வொரு நான்கு பேரில் ஒருவர் – முதியவர்களாக இருப்பார்கள் என்று நாங்கள் கணித்துள்ளோம்.

ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இலங்கை அதன் முதியோர் மக்கள்தொகையில் அதிக வளர்ச்சி விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நிலைமை முக்கியமாக பிறக்கும் போது ஆயுட்காலம் அதிகரிப்பதாலும் பிறப்பு விகிதங்கள் குறைவதாலும் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

https://athavannews.com/2025/1451563

ஜமைக்காவை தாக்கிய பின்னர் கியூபாவை நோக்கி நகரும் சூறாவளி "மெலிசா"!

2 months ago
கரீபியன் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய மெலிசா! கரீபியன் முழுவதும் மெலிசா சூறாவளி தனது பேரழிவைத் தொடர்ந்து ஏற்படுத்தியுள்ளது. இது வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளை அழித்தது, சுற்றுப்புறங்களை வெள்ளத்தில் மூழ்கடித்தது மற்றும் நூற்றுக்கணக்கான மக்களை வெளியேற்றியது. ஐந்தாவது வகை சூறாவளியால் தீவு நாடு நேரடியாக குறிவைக்கப்பட்ட பின்னர், புதன்கிழமை (29) ஜமைக்காவில் தாக்கம் தெளிவாகத் தெரிந்தது. இது பிராந்தியத்தில் இதுவரை அளவிடப்பட்ட மிக சக்திவாய்ந்த சூறாவளிகளில் ஒன்றாகும். அங்கு குறைந்தது ஐந்து பேர் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஹெயிட்டியில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 20 பேர் இறந்தனர், தற்போது இரண்டாம் வகை புயலாக இருக்கும் மெலிசா புயல் அந்தப் பகுதியைக் உருகுலைத்துள்ளது. ஜமைக்காவில், மக்கள் கூரைகள் கிளித்து ஏறியப்பட்ட வீடுகளில் சிக்கித் தவித்து வருகின்றனர். அங்கு மின்சாரம் இல்லாமல் தீவு நாடு முழுவதும் பேரழிவனை சந்தித்துள்ளதாக பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ் குறிப்பிட்டார். மருத்துவமனைகள், நூலகங்கள், காவல் நிலையங்கள், துறைமுக வீடுகள் மற்றும் பிற நகர்ப்புற உள்கட்டமைப்புகளுடன் “80-90% கூரைகள் அழிக்கப்பட்டன என்று அவர் மேலும் கூறினார். ஜமைக்காவின் அரச தலைவரான மன்னர் சார்லஸ், ஜமைக்காவிலும் கரீபியன் முழுவதும் மெலிசாவால் ஏற்பட்ட சேதத்தில் “ஆழ்ந்த கவலை” மற்றும் “மிகவும் வருத்தம்” அடைந்துள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவித்தார். புயல் மண் சரிவுகளையும் ஏற்படுத்திய ஜமைக்காவில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. பின்னர், மெலிசா வடக்கே கியூபாவிற்கு மூன்றாம் வகை புயலாக நகர்ந்து, மணிக்கு 115 மைல் வேகத்தில் காற்று மற்றும் பலத்த மழையைக் கொண்டு வந்து, தீவின் தென்கிழக்கைத் தாக்கியது. புதன்கிழமை இரவு, புயல் மத்திய பஹாமாஸிலிருந்து 105 மைல் (170 கிமீ) தொலைவில் இருந்தது, மேலும் இரவு முழுவதும் பஹாமாஸ் பகுதியை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மெலிசா சூறாவளி மணிக்கு 100 மைல் (155 கிமீ/மணி) வேகத்தில் காற்றுடன் வடகிழக்கு நோக்கி நகர்ந்தது. அது பெர்முடாவை நோக்கி மேலும் வடக்கு நோக்கி நகரும் முன் அங்கு ஆபத்தான புயல் அலை எதிர்பார்க்கப்படுகிறது. டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகளுக்கு வெப்பமண்டல புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. மேலும் மெதுவாக நகரும் சூறாவளியின் வேகம் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜமைக்காவில், மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் இறந்தது உறுதி செய்யப்பட்டது. நாட்டின் முக்கால்வாசிப் பகுதி ஒரே இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மெலிசா வட அமெரிக்காவில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை, ஆனால் வெள்ளிக்கிழமை இரவு கனடாவின் நியூஃபவுண்ட்லேண்டில் உள்ள செயிண்ட் ஜான்ஸை நெருங்கும்போது அது இன்னும் ஒரு வலிமையான வெப்பமண்டல சூறாவளியாக இருக்கும். சூறாவளியின் பின்னர் தேவையின் அளவை மதிப்பிடுவதற்காக அமெரிக்கா ஜமைக்காவிற்கு ஒரு பேரிடர் மீட்புக் குழுவை அனுப்புவதாக கூறியுள்ளது. https://athavannews.com/2025/1451566

ஒக்டோபர் 19, பிரான்ஸ்... லூவர் அருங்காட்சியகத்தில் என்ன நடந்தது!

2 months ago
ஒக்டோபர் 19, பிரான்ஸ்... லூவர் அருங்காட்சியகத்தில் என்ன நடந்தது! 2025 அக்டோபர் 19 ஆம் திகதி உலக வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத நாள். உலகம் முழுவதும் ஒரே விடயம் பேசுபொருளாக மாறியது. பிரான்சின் தலைநகர் பேரிசில் அன்று மக்கள் தொகையும் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருந்தது. இதற்கு காரணம் பேரிஸ் பிரான்சின் தலைநகரமாக இருப்பது மட்டுமல்ல அது வியாபார நகரமாகவும் சுற்றுலா தளங்கள் நிறைந்த இடமாகவும் காணப்படுவதாலாகும். அன்று மக்கள் கூட்டம் இன்னும் அதிகம், சாலையில் வாகனங்கள் ஒரு மிதமான வேகத்தில் சென்றுகொண்டிருந்தன. தூரத்தில் ஒரு பெரிய கனரக வாகனம் மாத்திரம் பாதையை விட்டு விலகி அங்கிருந்த ஒரு பெரிய கட்டிடத்தின் சுவருடன் இணைந்த வகையில் நிறுத்தப்படுகிறது. அடுத்த சில நிமிடங்களில் அந்த கட்டிடத்தில் இருந்து அலாரம் ஒலி கேக்க அங்கிருந்த மக்கள் அங்கும் இங்குமாக ஓடுகின்றனர். பொலிஸார் , தீயணைப்பு படையினர் என அந்த இடமே பரபரப்பானது. இதை அடுத்து நடந்த சம்பவம்தான் ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்தது. அப்படி அங்கு என்ன நடந்தது? அது என்ன கட்டிடம்? ஏன் இந்த விடயம் உலகம் முழுவது இவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தியது? உலகத்திலேயே மிகவும் விலை உயர்ந்த பெறுமதியான பல பொக்கிஷங்கள் வைக்கப்பட்டுள்ள அருங்கட்சியம்தான் பிரான்ஸ் தலைநகர் பேரிசில் அமைந்துள்ள லூவர் அருங்காட்சியகம். கடந்த 19 ஆம் திகதி இங்கு ஒரு கொள்ளை சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. இந்த செய்தி தீயாக உலகமெங்கும் பரவியது. லூவர் அருங்காட்சியகம் ஏன் இவ்வளவு முக்கியதத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது, கி.பி 12 ஆம் நூற்றாண்டில் 2 ஆம் பிலிப் எனும் மன்னன் எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ஒரு மிகப்பெரிய கோட்டையை உருவாக்குக்கிறார். ஆனால் அவருக்கு பின்னர் வந்த மன்னர்கள் அந்த கோட்டையை இடித்து மிகப்பெரிய மாளிகையை அந்த இடத்தில் உருவாக்குகின்றனர். அரசர்களின் உத்தியோகபூர்வ இல்லமாக காணப்பட்ட இந்த மாளிகை, சில ஆண்டுகளின் பின்னர் கைவிடப்பட்டு வெறுமையாக காணப்பட்டது. அதன் பின் பிரான்சிய புரட்சியின் பின்னர் இந்த மாளிகை மத்திய கலை அருங்காட்சியம் எனும் பெயரில் அருங்காட்சியகமாக மாற்றப்படுகிறது. அதிலிருந்து இன்றுவரை உலகிலேயே மிகப்பெரிய அருங்கட்சியாகமாக லூவர் அருங்கட்சியகம் காணப்படுகிறது. இதனை ஒரு சிறிய கிராமம் என்றும் சொல்லலாம். காரணம், இங்கு காணப்படும் பொருட்களை பார்வையிட நமக்கு 100 நாட்களுக்கும் அதிகமான காலம் தேவைப்படும். அந்தளவுக்கு அதிகமான பாரம்பரிய விலையுயர்ந்த பொருட்கள் இங்கு காணப்படுகின்றன. இங்குதான் உலக புகழ்பெற்ற மோனலிசா ஓவியம் காணப்படுகிறது. அதுமட்டுமா? 9000 வருடங்கள் பழமையான மனித சிலை, அரசர்கள் பயன்படுத்திய விலை உயர்ந்த ஆபரணங்கள் , உலகிலேயே மிக உயரமான ஒவியம் , வைர வைடூரியங்கள் இவ்வாறு விலைமதிப்பற்ற ஏராளமான பொருட்கள் இங்குதான் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான ஒரு வளமிக்க அருங்கட்சியகத்தில் ஏற்கனவே மோனலிசா ஓவியம் களவாடப்பட்டு 2 வருடங்களின் பின்னர் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் தான் தற்போது மீண்டும் அங்கு ஒரு பெரிய கொள்ளை சம்பவம் இடம்பெறுள்ளது. ஒக்டோபர் 19 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பார்வையாளர்களுக்காக லூவர் அருங்காட்சியத்தில் கதவுகள் திறக்கப்படுகின்றன. பார்வையாளர்கள் மெதுவாக உள்ளே நுழைகின்றனர். இதையடுத்து அரை மணிநேரத்தில் ஒரு பெரிய கனரக வாகனம் அந்த அருங்காட்சியத்தில் டெனோன் பிங் எனும் பகுதியில் அந்த வாகனம் நிறுத்தப்படுகிறது. அப்பகுதியில் கட்டிட வேலைப்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் அந்த வாகனத்தில் இருந்து மெதுவாக ஒரு மின் உயர்த்தி நான்கு நபர்களுடன் மேலே நகர்கிறது. அந்த நான்கு நபர்களும் கட்டிட வேலை செய்யும் நபர்கள் அணியும் சீருடைகளை அணிந்திருந்தனர். இதனால் இவர்கள் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. அதன்பின்னர் முதலாம் தளத்திற்கு சென்றவர்கள் அங்கிருந்த கண்ணாடிக்கதவினை வெட்டி மெதுவாக உள்ளே நுழைகின்றனர். மெதுமெதுவாக அடுத்தடுத்த கதவுகளை உடைத்து உள் நுழைய அங்கிருந்த அலாரம் அடிக்க ஆரம்பிக்கிறது. அங்கிருந்த பாதுகாவலர்கள் சத்தம் கேட்ட இடத்தை நோக்கி ஓடுகின்றனர். அலாரம் அடித்த அடுத்த நிமிடத்திலேயே அந்த பகுதிக்கு சென்ற பாதுகாவலர்கள் அங்கு கண்ணாடி கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதையும் அங்கு இருந்த விலைமதிப்பற்ற பொருட்கள் களவாடப்பட்டுள்ளதனையும் அவதானிக்கின்றனர். அதன்பின்னர் அவ்விடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசரணைகள் நடைபெறும்போது அங்கிருந்த கொள்ளையர்களின் கனரக வாகனம் தீப்பிடித்து எறிகின்றது. என்னதான் நடந்தது என பார்ப்பதற்கு பொலிஸார் அங்கிருந்த cctv காட்சிகளை அவதானிக்கின்றனர். அருங்காட்சியகத்தில் ஏற்கனவே கட்டிட வேலைப்பாடுகள் இடம்பெறும் நிலையில் இதனை அறிந்துகொண்டு அவர்களைப்போலவே வந்த கொள்ளையர்கள் கண்ணாடி கதவுகளை உடைத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்த அரசர்களின் விலையுயர்ந்த ஆபரணங்களை கொள்ளையிட்டு தப்பி செல்கின்றனர். அவர்கள் வந்த அந்த வாகனத்தை தீயில் எறிந்துவிட்டது, இவ்வாறிருக்க எவ்வாறு அவர்கள் தப்பி சென்றனர் என்ற கேள்வி எழுகிறது? ஆம், அவர்கள் வந்த அந்த வாகனத்திற்கு அவர்களே தீ வைத்துவிட்டு தமது ஆடைகளை மாறிவிட்ட அங்கிருந்த வேறு இரு மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றுள்ளனர். அவர்கள் அருங்காட்சியகத்தில் இருந்த 8 நகைகளை மாத்திரமே கொள்ளையிட்டு சென்றுள்ளனர். அதில் மூன்றாம் நெப்போலியன் மனைவியின் முத்து கிரீடம், முதலாம் நெப்போலியனின் மரகத ஆபரங்கள் என சுமார் 100 மில்லையன் அமெரிக்க டொலர் பெறுமதியான நகைகளேயே அவர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளனர். சுமார் 4 முதல் 7 நிமிடங்களில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வளவு பெரிய அருங்காட்சியகம் , ஆனால் அங்கு எவ்வாறு இப்படி ஒரு கொள்ள சம்பவம் இடம்பெற்றிருக்கும்? அருங்காட்சியத்தில் பார்வையாளர்கள் அதிமாக இருந்ததமையினாலும் பாதுகாவலர்கள் மிக குறைவாக இருந்தமையினாலுமே இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறித்த அருங்காட்சியக நிர்வாகம் கூறுகிறது. இந்த கொள்ளை சம்பவத்தை பார்க்கும் பொழுது இது மிகவும் துல்லியமாக திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டதாக கருதப்படுகிறது. இருப்பினும் இந்த சம்பவம் குறித்தும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பேர் 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டடுள்ளனர். இருப்பினும் கொள்ளையிடப்பட்ட ஆபரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஏற்கனவே கொள்ளையிடப்பட்ட மோனலிசாவின் ஓவியம் போல கொள்ளையிடப்பட்ட இந்த நகைகளும் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். https://athavannews.com/2025/1451534

அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்

2 months ago
யாழ் முஸ்லிம் மக்கள் வெளியேற்றம் இன்று 35, வது ஆண்டு நினைவு..! Vhg அக்டோபர் 30, 2025 யாழ்ப்பாண முஸ்லிம்மக்களை தமிழீழ விடுதலைப்புலிகள் 1990, அக்டோபர்,30, ல் பாதுகாப்பாக வெளியேற்றியது தொடர்பான 35, வது ஆண்டு நினைவு நிகழ்வுகள், கூட்டங்கள், கருத்தரங்குகள், கண் காட்சிகள் என்றுமில்லாதவகையில் 2025, அக்டோபர் மாதம் வடமாகாணத்தில் இடம்பெறுவதை காணலாம். நல்ல விடயம் கட்டாயம் அந்த நினைவுகளும் மீட்டுப்பார்க்க வேண்டியது. ஆனால் இவ்வாறான துன்பியல் சம்பவம் ஏன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.? அதற்கான காரணம் ஏன் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்டது? இந்த உண்மைகளையும் ஏற்பாட்டாளர்கள் காட்சிப்படுத்த வேண்டும் அந்த வரலாறுகளையும் இவ்வாறான நினைவுரைகளை ஆற்றும் அறிஞர்கள் கூறவேண்டும். அந்த காரணத்தை மறைத்து வெளியேற்றியது தவறு. இனசுத்திகரிப்பு, என வரைவிலக்கணம் வழங்குவது பக்கசார்பான உரைகளாகவே அமையும் ஈழவிடுதலை போராட்டம் 1977, க்கு பின்னர் இளைஞர் அமைப்புகள் 36, தோற்றம் பெற்றபோது தனியே தமிழ் இளைஞர்கள் மட்டும் ஆயுதம் ஏந்தவில்லை தமிழ்+ முஸ்லிம் இளைஞர்கள் சமய, இன, சாதி வேறுபாடுகள் இன்றி போராட்டத்தில் இணைந்தனர். இறுதிவரை போராடிய விடுதலைப்புலிகளில் 46, முஸ்லிம் மாவீரர்கள் போராடி உயிர் நீத்த வரலாறு உண்டு. தமிழ் போராளிகளுக்கு முஸ்லிம்பெயர்களும், முஸ்லிம் போராளிகளுக்கு தமிழ் பெயர்களும் இயக்க பெயர்களாக பரஸ்பரம் மாறி மாறி சூட்டிய வரலாறுகளும் உண்டு. இந்த ஒற்றுமையான விடுதலைப்பயணம் தொடர்ந்தபோதுதான் 1990, ல் அப்போதைய ஜனாதிபதி ஆர் .பிரமதாசா பதவி ஏற்ற பின்னர் தமிழ் முஸ்லிம்மக்களை பிரித்தாழும் தந்திரோபாயம் காரணமாக தனியாக முஸ்லில் ஊர்காவல்படையை நிறுவி விடுதலைப்புலிகளுக்கு எதிராக இராணுவத்துடன் இணைந்து செயல்பட வைத்தார். இதனால் விடுதலைப்புலிகளில் முஸ்லிம் இளைஞர்களை பிரித்தும், தமிழ் முஸ்லிம் உறவில் விரிசலையும் ஏற்படுத்த சதிசெய்தமையால் அம்பாறை மாவட்டம் திருக்கோயில் தொடங்கி மட்டக்களப்பு மாவட்டம் கதிரவெளி வரையும் 1990, செப்டம்பர் மாதம் பல தமிழ் கிராமங்கள் சுற்றிவளைத்து தமிழர்கள் கொலைசெய்யப்பட்டனர். அம்பாறை மாவட்டத்தில் உடும்பன்குளம், திராய்கேணி, வீரமுனை, மல்லிகைத்தீவு, மட்டக்களப்பு மாவட்டத்தில் சத்துருக்கொண்டான், புதுக்குடியிருப்பு, வந்தாறுமூலை பல்கலைக்கழகம், சித்தாண்டி, என படுகொலை பட்டியல் நீண்டது அத்தனை படுகொலைகளுக்கும் முஸ்லிம் ஊர்காவல் படையினரும் துணைபோனார்கள். இதனால் ஏற்பட்ட தமிழ் முஸ்லிம் பிழவு காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல்களில் முஸ்லிம் மக்கள் படுகொலைக்கு காரணமானது. அவ்வாறான படுகொலைகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெறாமல் தடுக்கவும், முஸ்லிம்மக்களை பாதுகாக்கவும் யாழ் முஸ்லிம் மக்கள் பாதுகாப்பாக வெளியேறுமாறு விடுதலைப்புலிகள் கூறி அவர்களை அனுப்பினர். இந்த துன்பியல் நிகழ்வு தொடர்பாக 2004 ஏப்ரல் கிளிநொச்சியில் விடுதலை புலிகளை சந்தித்த முஸ்லிம் அரசியல் பிரமுகர்களிடம் பகிரங்கமாக இது ஒரு துன்பியல் சம்பவம் என்பதை வலியுறுத்தினர். எனவே யாழ் முஸ்லிம் மக்களின் வெளியேற்றம் தனியே வடமாகாணத்துடன் மட்டும் சம்மந்தப்பட்ட விடயம் இல்லை அது கிழக்கு மாகாணத்துடன் சம்மந்தப்பட்ட விடயம் என்பதை அனைவரும் புரிவது நல்லது. -பா.அரியநேத்திரன்- https://www.battinatham.com/2025/10/35.html

பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் !

2 months ago
பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் ! By SRI October 30, 2025 பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் (WINE) தொடர்பாக கண்டுபிடிப்பாளர் விக்டர் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தி , இதன் ஊடாக ஏற்றுமதி பொருளாதாரத்தில் எவ்வாறான மாற்றத்தை உருவாக்கலாம் என்பது தொடர்பிலும் தெளிவுபடுத்தினார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், TAATAS நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர் விக்டர் ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று ஆளுநர் செயலகத்தில் நேற்று (29) நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் (WINE) தொடர்பாக ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. தாராளமாக மூலப்பொருளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளமை மற்றும் உற்பத்திச் செலவு மிகக்குறைவாக உள்ளமை ஆகியன காரணமாக உலக சந்தையில் இதற்கான கேள்வி அதிகம் உள்ளமையையும் ஆளுநருக்கு குறிப்பிட்ட கண்டுபிடிப்பாளர் விக்டர், இதன் ஊடாக ஏற்றுமதி பொருளாதாரத்தில் எவ்வாறான மாற்றத்தை உருவாக்கலாம் என்பது தொடர்பிலும் தெளிவுபடுத்தினார். பல மில்லியன் ரூபாக்களை ஈட்டக்கூடிய வாய்ப்புக்களிருந்தும் அதனை உரியமுறையில் பயன்படுத்த தவறியுள்ளமையையும் சுட்டிக்காட்டினார். தமது தொழிற்முயற்சியின் விரிவாக்கம் மற்றும் எதிர்காலத்திட்டங்களின் ஊடாக உருவாக்கப்படவுள்ள தொழில்வாய்ப்புக்கள் தொடர்பிலும் சுற்றுச்சூழல் நேயமான இந்த உற்பத்திச் செயற்பாட்டின் அவசியம் தொடர்பாகவும் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. இவ்வாறான முயற்சிகள் காலத்தின் தேவையறிந்த செயற்பாடு என வரவேற்ற ஆளுநர், மாகாண சபையூடான ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார். https://www.battinews.com/2025/10/blog-post_800.html