Aggregator
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
லாராவின் சாதனையை முறியடிக்காத முல்டர்
இரசித்த.... புகைப்படங்கள்.
சிரிக்கவும் சிந்திக்கவும் .
லாராவின் சாதனையை முறியடிக்காத முல்டர்
சிரிக்கவும் சிந்திக்கவும் .
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதராக எரிக் மேயர்!
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதராக எரிக் மேயர்!
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதராக எரிக் மேயர்!
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் மேயரை (Eric Meyer) நியமிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிந்துரை செய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இதன்படி, ஜூலி சுங்கின் வெற்றிடத்திற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர் நியமிக்கப்படவுள்ளார்.
கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் சிரேஷ்ட பணியக அதிகாரியாக செயல்படுகிறார்.
அத்துடன் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, கஸகஸ்தான், கிர்கிஸ்தான், மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் அமெரிக்க அரசின் கொள்கை முன்னுரிமைகளை ஒருங்கிணைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகிறார்.
எரிக் மேயர், நோர்வேயில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தற்காலிக தூதராகவும், வடமேசிடோனியாவின் ஸ்கோப்பே நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தற்காலிக தூதராகவும், துணை தூதராகவும் பணியாற்றியுள்ளார்.
இதேவேளை, வொஷிங்டனில் தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் பணியகத்தில் சிறப்பு உதவியாளர் மற்றும் சிரேஷ்ட ஆலோசகராக எரிக் மேயர் பணியாற்றியுள்ளார்.
அத்துடன் கம்போடியாவில் தூதரகத் தலைமை அதிகாரியாகவும், இடைக்கால துணை தூதராகவும் செயல்பட்டுள்ளார். பின்லாந்திலுள்ள அமெரிக்க தூதராகவும் ஆர்ஜன்டீனாவின் துணை தூதராகவும், பின்னர் எகிப்தின் கெய்ரோவிலுள்ள பண்பாட்டு விவகார தூதராகவும் பணியாற்றியுள்ளார்
அவருக்கு அமெரிக்க வெளியுறவு துறையிலிருந்து பல உயரிய பாராட்டு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.