Aggregator

முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்

1 month ago
இல்லை என்று கூறுபவர்களிடம் எப்படி ஆதாரத்தை எதிர்பார்க்கலாம் இருக்கு என்பவர்கள் தானே இல்லை என்பதற்கு எதிராக தங்களது ஆதாரங்களை வெளியிட வேண்டும்.

முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்

1 month ago
"சிம்ம சொப்பனமாக" பிரபாகரனைத் தவிர யாரும் இருக்கவில்லை. குறைந்த பட்சம் தகவல் கேட்டு வருவோரிடம் பேசுவதற்காகவாவது ஒருவர் தேவையல்லவா? இப்போது யார் இருக்கிறார்கள்? யாரையாவது சுமந்திரன் போல சென்று சந்திக்க, பேச முனையும் பா.உ தற்போது யார் இருக்கிறார்கள்? உங்களைப் போல "துடிப்பான" யாராவது இனி முன்வந்தால் தான் தமிழர்களுக்கு மீட்சி🤐!

முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்

1 month ago
சுமத்திரன் கடைசி சண்டையின் பின் தமிழர்களுக்காக அல்லும் பகலும் பாடு பட்டவர் சிங்களவர்களுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கியவர் என்று அவரின் அடிவருடிகளுக்கு சொன்னால் தான் நிம்மதியாய் இருக்கும்கள் . இங்கு வடகிழக்கு தமிழர்களுக்கு தீர்வு முக்கியமல்ல சுமத்திரன் தலைவராகனும் அதுதான் சுமத்திர விசுவாசிகளுக்கு முக்கியம் .

நிவாரணங்களுடன் வந்தது ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் விமானம்

1 month ago
ஐக்கிய அரபு அமீரகத்தின் அனர்த்த நிவாரண சேவை விமானம் கட்டுநாயக்கவை வந்தடைந்தது! 09 Dec, 2025 | 04:23 PM ஐக்கிய அரபு அமீரகத்தின் மற்றுமொரு அனர்த்த நிவாரண சேவை விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று செவ்வாய்க்கிழமை (09) பிற்பகல் வந்தடைந்துள்ளது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு பொருட்கள் மற்றும் அனர்த்த நிவாரண பொருட்கள் இந்த விமானத்தில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விமானத்தில் உள்ள பொருட்களின் மொத்த நிறை 27 டொன் என தெரிவிக்கப்படுகிறது. இந்த விமானத்தில் 8 பேர் உள்ள நிலையில் எதிர்வரும் 14 நாட்களுக்கு இந்த விமானம் இலங்கையில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசாங்கத்தினால் இந்த அனர்த்த நிவாரண சேவை விமானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/232885

முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்

1 month ago
பதிலுக்கு நன்றி வாத்தியார். சுமந்திரன் மக்களால் நிராகரிக்கப் பட்டவர், சுமந்திரனால் தமிழ் மக்களுக்கு அதிசயம் எதுவும் நிகழவில்லை. இவையிரண்டும் உண்மைகள். கேள்வி அதுவல்ல! சுமந்திரன் தமிழ் மக்களின் துன்பங்களைப் பற்றிப் பேசவில்லை என்பது எவ்வளவு தூரம் உண்மை? எவ்வளவு ஆதாரங்கள் இருக்கின்றன இந்தக் கூற்றுக்கு? இது தான் கேள்வி. "சுமந்திரனும் வேறு சில கூட்டமைப்பு அரசியல்வாதிகளும் யாழ் நூலகத்தில் இருந்து தப்பியோடினர்" என்று எழுதிய உங்கள் கருத்திற்கு படங்களை இணைத்து ஆதாரம் தந்திருந்தேன். அங்கேயும் சரி, வேறு இரு இடங்களிலும் சரி பேசாமல் போய் விட்டு, பின்னர் சுமந்திரனின் படத்தை இங்கே கண்டால் மீண்டும் வருவீர்கள். இது தான் உங்கள் கருத்துப் போக்கு. இந்த ஆண்டில் ஒரு கூடுதல் போக்கு, அப்படி வரும் போது அனுர காவடியோடு வருவீர்கள்😂! இத்தகைய, தரவுகளைத் தரும் போது "மெள்ள மாறி" விடுதல் தான் பெட்டிக் கடையைப் பூட்டுதல் எனப்படுகிறது. இப்போது கூட, ஆதாரங்களும் இல்லை, தரவுகளும் இல்லை, வெறும் அலட்டல் பாரதம் மட்டும் தான் கொண்டு வந்திருக்கிறீர்கள்!

வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் - நிலாந்தன்

1 month ago
சோசியல் மீடியாக்களின் குப்பை மேட்டுத் தனத்தினால், அதன் வழியாகப் பரவக் கூடிய உயிர்காக்கும் தகவல்களும் மறைக்கப் படுகின்றன என்பதை நிலாந்தன் சுட்டிக் காட்டியிருக்கிறார். நான் இங்கே பல தடவைகள் சுட்டிக் காட்டியிருப்பது போல, எந்த மூலத்தில் இருந்து தகவலை எடுத்தாலும், அந்த தகவலைச் சொல்பவருக்கு அடிப்படையான அறிவு நிலைத் தகுதியிருக்கிறதா எனச் சீர் தூக்கிப் பார்க்கும் பழக்கத்தை பார்வையாளர்கள் ("வியூவர்ஸ்" என்று அழகாகச் சொல்லியிருக்கிறார் நிலாந்தன்😎!) ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தகுதியில்லாத பதிவர்களின் பின்னால் செல்லும் நிலை, உடல் ஆரோக்கியம் பற்றிய விடயங்களில் பல ஆண்டுகளாக நிலவுகிறது. ஒரு உதாரணம்: "நியாண்டர் செல்வன்" என்ற முகநூல் பதிவர் கணணித் துறை சார்ந்தவர். ஆனால், அவரது ஆர்வம் காரணமாக பேலியோ உணவு முறை என்ற விஞ்ஞான அடிப்படையற்ற ஒரு உணவு முறை பற்றிப் பதிவுகளை இட்டு வருகிறார். ஒரு புத்தகம் கூட இதைப் பற்றி எழுதியிருக்கிறார் என்று அறிந்தேன். இவரது நிபுணத்துவம் என்ன என்று சீர்தூக்கிப் பார்த்தால், இவரது உணவு ஆலோசனைகளைப் பின் தொடர்வதா இல்லையா என்று இலகுவாகத் தீர்மானிக்கலாம். இதை எப்படிச் செய்யலாம்? குறுக்கு வழியெதுவும் இல்லை! தேடி அறிந்து கொள்வது தான் ஒரே வழி.

வெள்ளத்தில் மூழ்கிய Sri Lanka; தமிழர்களின் நிலை என்ன? | Ditwah Cyclone

1 month ago
'டாடா காப்பாத்துங்க' : மண்சரிவில் சிக்கிய வீட்டிற்குள் கேட்ட குழந்தையின் குரல் | Srilanka Srilanka-ல் நிலச்சரிவுகளால் பலர் உயிரிழந்திருக்கும் நிலையில், பதுளை மாவட்டத்தில் மார்பளவு மண்ணில் புதைந்த பலர் துணிச்சலான சிலரது முயற்சியால் உயிரோடு மீட்கப்பட்டிருக்கிறார்கள். என்ன நடந்தது? #Srilanka #Ditwah #SrilankaLandslide Reporter - Muralitharan Kasiviswanathan Shoot and Edit - Sam Daniel இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

இலங்கையில் உயிர் தப்பிய மாற்றுத்திறனாளி - தற்போது நிலைகுலைந்து போய் உள்ளது ஏன்?

1 month ago
இலங்கையில் உயிர் தப்பிய மாற்றுத்திறனாளி - தற்போது நிலைகுலைந்து போய் உள்ளது ஏன்? படக்குறிப்பு,ரமேஷ் கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் திட்வா புயலின் தாக்கம், இலங்கையில் ஒவ்வொரு நபரையும் ஒவ்வொரு விதமாக பாதித்துள்ளது இவ்வாறு பாதிப்புக்குள்ளானவர்களின் பட்டியலில் ரமேஷ், நவமணிதேவி தம்பதிகளும் அடங்குகின்றனர். கண்டி - போபிட்டிய - பௌலான தோட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் கூலித் தொழிலை தனது வாழ்வாதார தொழிலாக கொண்டிருந்தார். ஒரு நாள் மரமொன்றை வெட்டுவதற்காக சென்ற போது, அவர் வெட்டிய மரமே அவர் மீது வீழ்ந்துள்ளது. இதனால் ரமேஷ் மாற்றுத்திறனாளியானார். மரம் வீழ்ந்தமையினால் முதுகெலும்பு பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், அவரால் எழுந்து நடக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. கடந்த சில வருடங்களாகவே ரமேஷ் இவ்வாறு ஓரிடத்திலேயே இருந்து வருகின்றார். அரசாங்கத்தினால் வழங்கப்படும் அஸ்வெசும நலத்திட்டத்தின் (சமூக நலத்திட்டம்) ஊடாக 10000 ரூபாயும், மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவின் ஊடாக 10000 ரூபாயும் மாத்திரமே இவருக்கு மாத வருமானமாக கிடைக்கின்றது. ரமேஷின் மனைவி நவமணிதேவிக்கு வேலைக்கு செல்வதற்கான இயலுமை இருக்கின்ற போதிலும், தனது கணவருக்கு உதவிகளை செய்வதற்காக அவருடனேயே இருந்து வருகின்றார். ரமேஷுக்கு 6 வயதான ஒரு மகன் இருக்கின்றார். ரமேஷுக்கு கிடைக்கும் நலத்திட்ட கொடுப்பனவுகளே அவரது மகனின் படிப்புக்கும் செலவிடப்படுகின்றது. வாரத்திற்கு ஒரு முறை மருத்துவமனைக்கு கட்டாயம் செல்ல வேண்டிய நிலைமையையும் ரமேஷ் எதிர்நோக்கியுள்ளார். நடக்க முடியாத காரணத்தினால் தனிவாகனத்தை வாடகைக்கு எடுத்தே மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலைமை உள்ளதாகவும், ஒரு தடவை மருத்துவமனைக்கு சென்று மீண்டும் வீட்டுக்கு வருவதற்கு 5000 ரூபாய் செலவிட வேண்டும் எனவும் ரமேஷ் கூறுகிறார். படக்குறிப்பு,ரமேஷின் மனைவி நவமணிதேவி 'நள்ளிரவில் சரிந்த சுவர்' பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள ரமேஷின் குடும்பத்திற்கு, திட்வா புயல் மீண்டும் அடியை கொடுத்துள்ளது. 27ம் தேதி பெய்த கடும் மழையின் போது, ரமேஷின் குடிசை வீட்டு சுவர் நள்ளிரவில் சரிந்து வீழ்ந்துள்ளது. உடனே ரமேஷின் மனைவி, தனது கணவரை சக்கர நாற்காலியில் தூக்கி வைத்து, தனது பிள்ளையையும் சுமந்துகொண்டு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார் ''கடும் மழைக்கு மத்தியில் விடிய விடிய செல்ல இடமில்லாமல், ஒரு குன்றின் மீதுள்ள இடத்தில் குளிருக்கு மத்தியில் தங்கியிருந்தோம்'' என்கிறார் ரமேஷ் விடிந்த பின்னர் பிரதேச மக்களின் உதவியுடன் வேறொரு இடத்திற்கு ரமேஷின் குடும்பம் அழைத்து செல்லப்பட்டுள்ளது. இன்று அந்த பிரதேசத்திலுள்ள ஒருவரின் வீட்டில் தற்காலிகமாக இவர்கள் தங்கியுள்ளனர். படக்குறிப்பு,ரமேஷின் வீடு ரமேஷின் வீடு, மண்சுவர்களில் செய்யப்பட்ட ஒரு சிறிய குடிசை. நான்கு குச்சிகளை நான்கு புறத்திலும் வைத்து, அதற்கு துணியை சுற்றி மறைத்ததே அவர்களது கழிப்பறை. ''எனக்கு தொழில் எதுவும் செய்ய முடியாது. மனைவிதான் என்னை பார்த்துக்கொண்டிருக்கின்றார். மண்சரிவால் இருந்த வீடும் உடைந்தது. நான் தற்காலிக இடத்திலேயே இருக்கின்றேன். சொந்தக்காரரின் இடத்தில் இருக்கின்றேன். என்னை பார்த்துக்கொள்ள ஒருவரும் இல்லாமை காரணமாக மனைவியும் வீட்டில்தான் இருக்கின்றார்.'' என்றார் ரமேஷ். ''மண்சரிவின் போது என்னுடைய வீட்டில் தான் இருந்தோம். சுவர் ஒரு பக்கம் உடைந்து. மறுபக்கம் சுவர் வெடித்திருக்கின்றது. எந்த நேரத்திலும் முழுமையாக வீழ்ந்து விடலாம். எனக்கு எழுந்து போக முடியாது என்பதனால், குடும்பத்தோடு இங்கு வந்து இருக்கின்றோம்.'' என அவர் கூறினார். தனக்கு சுயதொழில் ஒன்றை ஏற்படுத்திக் கொடுக்க யாரேனும் முன்வந்தால், அதனூடாக தனது வாழ்க்கையை முன்னேற்றிக் கொள்ள முடியும் என ரமேஷ் நம்பிக்கை தெரிவிக்கின்றார். ''சுயதொழில் ஒன்று செய்தால், அதில் வரும் வருமானத்தைக் கொண்டு மகனின் படிப்பை பார்த்துக்கொள்வேன். மனைவியால் வேலைக்கு போக முடியாது. எனக்கு கழிப்பறை செல்வது, எனக்கு ஆடை மாற்றி விடுவது. எல்லாவற்றையும் அவரே பார்க்கின்றார். தண்ணீர் எடுத்துக் கொடுப்பது என்றாலும் அவரின் உதவி வேண்டும்.'' என அவர் தெரிவித்தார். தமது குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்துகொடுத்தால், ஏதோ ஒரு வகையில் தமது வாழ்க்கையை கொண்டு செல்ல முடியும் என ரமேஷின் மனைவி நவமணிதேவி கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62nzg72798o

இலங்கையில் உயிர் தப்பிய மாற்றுத்திறனாளி - தற்போது நிலைகுலைந்து போய் உள்ளது ஏன்?

1 month ago

இலங்கையில் உயிர் தப்பிய மாற்றுத்திறனாளி - தற்போது நிலைகுலைந்து போய் உள்ளது ஏன்?

இலங்கை வெள்ளம், இலங்கை கனமழை, இலங்கை திட்வா புயல்

படக்குறிப்பு,ரமேஷ்

கட்டுரை தகவல்

  • ரஞ்சன் அருண் பிரசாத்

  • பிபிசி தமிழுக்காக

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

திட்வா புயலின் தாக்கம், இலங்கையில் ஒவ்வொரு நபரையும் ஒவ்வொரு விதமாக பாதித்துள்ளது

இவ்வாறு பாதிப்புக்குள்ளானவர்களின் பட்டியலில் ரமேஷ், நவமணிதேவி தம்பதிகளும் அடங்குகின்றனர்.

கண்டி - போபிட்டிய - பௌலான தோட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் கூலித் தொழிலை தனது வாழ்வாதார தொழிலாக கொண்டிருந்தார்.

ஒரு நாள் மரமொன்றை வெட்டுவதற்காக சென்ற போது, அவர் வெட்டிய மரமே அவர் மீது வீழ்ந்துள்ளது. இதனால் ரமேஷ் மாற்றுத்திறனாளியானார்.

மரம் வீழ்ந்தமையினால் முதுகெலும்பு பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், அவரால் எழுந்து நடக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. கடந்த சில வருடங்களாகவே ரமேஷ் இவ்வாறு ஓரிடத்திலேயே இருந்து வருகின்றார்.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் அஸ்வெசும நலத்திட்டத்தின் (சமூக நலத்திட்டம்) ஊடாக 10000 ரூபாயும், மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவின் ஊடாக 10000 ரூபாயும் மாத்திரமே இவருக்கு மாத வருமானமாக கிடைக்கின்றது.

ரமேஷின் மனைவி நவமணிதேவிக்கு வேலைக்கு செல்வதற்கான இயலுமை இருக்கின்ற போதிலும், தனது கணவருக்கு உதவிகளை செய்வதற்காக அவருடனேயே இருந்து வருகின்றார்.

ரமேஷுக்கு 6 வயதான ஒரு மகன் இருக்கின்றார். ரமேஷுக்கு கிடைக்கும் நலத்திட்ட கொடுப்பனவுகளே அவரது மகனின் படிப்புக்கும் செலவிடப்படுகின்றது.

வாரத்திற்கு ஒரு முறை மருத்துவமனைக்கு கட்டாயம் செல்ல வேண்டிய நிலைமையையும் ரமேஷ் எதிர்நோக்கியுள்ளார்.

நடக்க முடியாத காரணத்தினால் தனிவாகனத்தை வாடகைக்கு எடுத்தே மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலைமை உள்ளதாகவும், ஒரு தடவை மருத்துவமனைக்கு சென்று மீண்டும் வீட்டுக்கு வருவதற்கு 5000 ரூபாய் செலவிட வேண்டும் எனவும் ரமேஷ் கூறுகிறார்.

இலங்கை வெள்ளம், இலங்கை கனமழை, இலங்கை திட்வா புயல்

படக்குறிப்பு,ரமேஷின் மனைவி நவமணிதேவி

'நள்ளிரவில் சரிந்த சுவர்'

பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள ரமேஷின் குடும்பத்திற்கு, திட்வா புயல் மீண்டும் அடியை கொடுத்துள்ளது.

27ம் தேதி பெய்த கடும் மழையின் போது, ரமேஷின் குடிசை வீட்டு சுவர் நள்ளிரவில் சரிந்து வீழ்ந்துள்ளது.

உடனே ரமேஷின் மனைவி, தனது கணவரை சக்கர நாற்காலியில் தூக்கி வைத்து, தனது பிள்ளையையும் சுமந்துகொண்டு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்

''கடும் மழைக்கு மத்தியில் விடிய விடிய செல்ல இடமில்லாமல், ஒரு குன்றின் மீதுள்ள இடத்தில் குளிருக்கு மத்தியில் தங்கியிருந்தோம்'' என்கிறார் ரமேஷ்

விடிந்த பின்னர் பிரதேச மக்களின் உதவியுடன் வேறொரு இடத்திற்கு ரமேஷின் குடும்பம் அழைத்து செல்லப்பட்டுள்ளது.

இன்று அந்த பிரதேசத்திலுள்ள ஒருவரின் வீட்டில் தற்காலிகமாக இவர்கள் தங்கியுள்ளனர்.

இலங்கை வெள்ளம், இலங்கை கனமழை, இலங்கை திட்வா புயல்

படக்குறிப்பு,ரமேஷின் வீடு

ரமேஷின் வீடு, மண்சுவர்களில் செய்யப்பட்ட ஒரு சிறிய குடிசை. நான்கு குச்சிகளை நான்கு புறத்திலும் வைத்து, அதற்கு துணியை சுற்றி மறைத்ததே அவர்களது கழிப்பறை.

''எனக்கு தொழில் எதுவும் செய்ய முடியாது. மனைவிதான் என்னை பார்த்துக்கொண்டிருக்கின்றார். மண்சரிவால் இருந்த வீடும் உடைந்தது. நான் தற்காலிக இடத்திலேயே இருக்கின்றேன். சொந்தக்காரரின் இடத்தில் இருக்கின்றேன். என்னை பார்த்துக்கொள்ள ஒருவரும் இல்லாமை காரணமாக மனைவியும் வீட்டில்தான் இருக்கின்றார்.'' என்றார் ரமேஷ்.

''மண்சரிவின் போது என்னுடைய வீட்டில் தான் இருந்தோம். சுவர் ஒரு பக்கம் உடைந்து. மறுபக்கம் சுவர் வெடித்திருக்கின்றது. எந்த நேரத்திலும் முழுமையாக வீழ்ந்து விடலாம். எனக்கு எழுந்து போக முடியாது என்பதனால், குடும்பத்தோடு இங்கு வந்து இருக்கின்றோம்.'' என அவர் கூறினார்.

தனக்கு சுயதொழில் ஒன்றை ஏற்படுத்திக் கொடுக்க யாரேனும் முன்வந்தால், அதனூடாக தனது வாழ்க்கையை முன்னேற்றிக் கொள்ள முடியும் என ரமேஷ் நம்பிக்கை தெரிவிக்கின்றார்.

இலங்கையில் திட்வா புயலால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி

''சுயதொழில் ஒன்று செய்தால், அதில் வரும் வருமானத்தைக் கொண்டு மகனின் படிப்பை பார்த்துக்கொள்வேன். மனைவியால் வேலைக்கு போக முடியாது. எனக்கு கழிப்பறை செல்வது, எனக்கு ஆடை மாற்றி விடுவது. எல்லாவற்றையும் அவரே பார்க்கின்றார். தண்ணீர் எடுத்துக் கொடுப்பது என்றாலும் அவரின் உதவி வேண்டும்.'' என அவர் தெரிவித்தார்.

தமது குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்துகொடுத்தால், ஏதோ ஒரு வகையில் தமது வாழ்க்கையை கொண்டு செல்ல முடியும் என ரமேஷின் மனைவி நவமணிதேவி கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c62nzg72798o

'ஆளும் கட்சியை விமர்சிக்காமல்' ஆட்சியை பிடிப்போம் என கூறும் விஜய் - புதுச்சேரி திட்டம் என்ன?

1 month ago

'ஆளும் கட்சியை விமர்சிக்காமல்' ஆட்சியை பிடிப்போம் என கூறும் விஜய் - புதுச்சேரி திட்டம் என்ன?

விஜய்யின் புதுச்சேரி பேச்சு: என்ன திட்டமிடுகிறார்?

பட மூலாதாரம்,X

கட்டுரை தகவல்

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்

  • பிபிசி தமிழ்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கரூர் சம்பவத்திற்குப் பிறகு முதல் முறையாக புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்திய விஜய், புதுச்சேரி அரசை பெரிதாக விமர்சனம் செய்யாமல், பொதுவான பிரச்னைகளைப் பேசிச் சென்றிருக்கிறார். புதுச்சேரியில் விஜய்யின் திட்டம் என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் கூட்டம் புதுச்சேரியில் இன்று (டிச. 09) நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து கடுமையான திமுக எதிர்ப்பு நிலையை மேற்கொண்டுவரும் நிலையில், அக்கட்சியின் கூட்டங்களில் விஜய்யும் இரண்டாம் கட்டத் தலைவர்களும் திமுகவைக் கடுமையான விமர்சித்து வந்தனர்.

ஆனால், இந்தக் கூட்டம் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரியில் என்பதால் இங்கே விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

சுமார் 11 மணியளவில் கூட்டம் துவங்கியதும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேச ஆரம்பித்தார்.

புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், "தமிழ்நாட்டில் எங்கேயும் நம்மை விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். 2026ல் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் நம்முடைய கட்சி ஆட்சியைப் பிடிக்கும்" என்று குறிப்பிட்டார்.

விஜய், தமிழக வெற்றிக்கழகம், புதுச்சேரி, தவெக

பட மூலாதாரம்,TVK Party HQ/x

படக்குறிப்பு,புதுச்சேரியில் விஜய் பேசிய போது

இதற்குப் பிறகு பேச வந்த அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தி.மு.கவை விமர்சிப்பதில் துவங்கி, புதுச்சேரிக்கென பல திட்டங்களை வைத்திருப்பதாகக் கூறி முடித்தார்.

அவர் பேசுகையில், "இங்கிருக்கும் முதலமைச்சருக்கும் காவல்துறைக்கும் நன்றி. இதுபோன்ற பாதுகாப்பை தமிழகத்தில் கொடுத்ததில்லை. சி.எம். சார் (மு.க. ஸ்டாலின்), உங்கள் அரசியலைத் தூக்கிப்போட்டுவிட்டு, தைரியம் இருந்தால் தேர்தலில் மோதுங்கள். காவல்துறையை வைத்து எங்களை நிறுத்துவதை விடுங்கள்" என்றார்.

மேலும், புதுச்சேரியில் தவெக கூட்டம் நடத்துவது ஏன் என்பது குறித்தும் அவர் பேசினார்.

"ஏன் புதுச்சேரியில் கூட்டம் எனக் கேள்வியிருக்கிறது. இது போலத்தான் எம்.ஜி.ஆரிடம் கேட்டார்கள். புதுச்சேரி மக்கள் ஒரு நல்ல ஆட்சி, கல்வி, போக்குவரத்து வசதி ஆகியவற்றுக்காக ஏங்குகிறார்கள். எங்கள் தலைவர் தமிழகத்திற்கு மட்டுமல்ல, புதுச்சேரிக்கும் திட்டம் வைத்திருக்கிறார். அடுத்த 50 வருடத்திற்கான புதுச்சேரியின் வரலாற்றை நாங்கள் எழுதுவோம்" என்றார் அவர்.

விஜய் பேசியது என்ன?

இந்தக் கூட்டத்தில் விஜய்யின் பேச்சு மிகச் சுருக்கமாகவே அமைந்திருந்தது. எல்லா ஊர்களிலும் பேசுவதைப் போலவே முதலில் அந்த ஊரைப் பற்றிப் பேசினார். அதற்குப் பிறகு அ.தி.மு.க. முதலில் புதுச்சேரியில் ஆட்சியைப் பிடித்ததைப் பற்றிப் பேசினார்.

"1977ல்தான் எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டில் ஆட்சியமைத்தார். அதற்கு முன்பாக, 1974லேயே புதுச்சேரியில் அ.தி.மு.கவின் ஆட்சி அமைந்தது. அவரை 'மிஸ்' பண்ணிவிடக்கூடாது என 'அலர்ட்' செய்ததே புதுச்சேரிதான்" என்றார் விஜய்.

விஜய், தமிழக வெற்றிக்கழகம், புதுச்சேரி, தவெக

பட மூலாதாரம்,TVK Party HQ/x

மத்திய அரசு பற்றி என்ன சொன்னார்?

அடுத்ததாக, தங்கள் கூட்டத்திற்கு காவல்துறை சிறப்பான பாதுகாப்பை அளித்ததாக என்.ஆர். காங்கிரஸ் அரசைப் பாராட்டினார் விஜய்.

"இங்கிருக்கும் அரசைப் பொறுத்தவரை, தமிழகத்தில் உள்ள தி.மு.க. அரசைப் போல இல்லை. வேறொரு கட்சி நடத்தும் நிகழ்ச்சிக்கு பாரபட்சமில்லாமல் பாதுகாப்பு அளித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட புதுச்சேரி அரசுக்கும் முதலமைச்சருக்கும் நன்றி. இதைப் பார்த்தாவது தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க. அரசு கற்றுக்கொண்டால் நன்றாக இருக்கும்" என்றார்.

அடுத்ததாக, புதுச்சேரியை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை எனக் குற்றம்சாட்டினார்.

"கூட்டணியில் இருந்தாலும் புதுச்சேரியை ஒன்றிய அரசு எதிலும் கண்டுகொள்வதில்லை. மாநில அந்தஸ்து கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை. வளர்ச்சி ஏற்படவும் துணை நிற்கவில்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டுமென சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அனுப்பிய தீர்மானம், அப்படி அனுப்பப்பட்ட 16வது தீர்மானம்." என்றார்.

மேலும், புதுச்சேரியில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்தும் விஜய் பேசினார்.

"புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மூடப்பட்ட ஐந்து மில்கள் மற்றும் பல தொழிற்சாலைகளைத் திறக்க துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. இங்கே ஒரு ஐ.டி நிறுவனம் வர வேண்டுமென்ற எண்ணமே இல்லை. காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் முன்னேற்றமே இல்லை." என்றார்.

காவிரியின் கடைமடைப் பகுதியான காரைக்கால் கைவிடப்பட்ட பகுதியாக உள்ளது என குறிப்பிட்ட விஜய், புதுச்சேரிக்கு கடலூர் மார்க்கமாக ரயில் வேண்டும் என்பது நீண்ட காலக் கோரிக்கை என்றார்.

புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி

படக்குறிப்பு,புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி

சுமார் 20 லட்சம் பேர் வாழும் புதுச்சேரி, மத்திய நிதிக் குழுவில் இடம்பெற்றவில்லை என பேசிய விஜய், இதனால் போதுமான நிதி ஒதுக்கப்படுவதில்லை, தோராயமான நிதியே ஒதுக்கப்படுகிறது என்றார்.

அப்போது, "அந்த நிதி சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றுக்கே சென்றுவிடுகிறது. அதனால் பிற செலவுகளுக்கு புதுவை கடன் வாங்குகிறது. இந்த நிலைமை மாற மாநில அந்தஸ்து தேவை." என்றார்.

மீன் பிடிக்கச் செல்லும் காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்வதாக கூறிய அவர், மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் படகுகள் கிடைக்காததால் மோசமான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்றார்.

இந்தப் பேச்சின் நடுவிலேயே யார் பெயரையும், எந்த அரசையும் சுட்டிக்காட்டாமல் சில விமர்சனங்களை அவர் முன்வைத்தார்.

"இங்கே ஒரு அமைச்சர் ஊழல் குற்றச்சாட்டில் நீக்கப்பட்டு, புதிய அமைச்சரை நியமித்தார்கள். அந்த அமைச்சருக்கு இலாகாவே தரவில்லை. இந்தச் செயல் சிறுபான்மையினரை அவமானப்படுத்தும் செயல் என மக்களே சொல்கிறார்கள். சுற்றுலா நகரமான புதுச்சேரியில் போதுமான அளவு பார்க்கிங், கழிப்பறை வசதி இல்லை. இந்தியாவில் ரேஷன் கடைகளே இல்லாத பகுதியாக புதுச்சேரி உள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு வாழ்வாதாரமே ரேஷன் கடைகள்தான். மற்ற மாநிலங்களில் இருப்பதைப் போலவே இங்கேயும் அந்த முறை சீராக்கப்பட வேண்டும்" என்றதோடு தனது பேச்சை முடித்துக் கொண்டார்.

எனினும், பாஜகவை சேர்ந்த புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், ரேஷன் கடைகள் குறித்த விமர்சனத்திற்கு எதிர்வினையாற்றியுள்ளார். அதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள நமச்சிவாயம், "புதுச்சேரியில் உள்ள ரேஷன் கடைகள், மாநில அரசின் நிர்வாகத்தின் கீழ் தான் செயல்படுகின்றன. அவற்றின் மூலமாகத்தான் இலவச அரிசி விநியோகம் செய்யப்படுகிறது. அதுகூடத் தெரியாமல் விஜய் பேசியுள்ளார்." என தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர்

பட மூலாதாரம்,MGR FAN CLUB

படக்குறிப்பு,"1977ல்தான் எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டில் ஆட்சியமைத்தார். அதற்கு முன்பாக, 1974லேயே புதுச்சேரியில் அ.தி.மு.கவின் ஆட்சி அமைந்தது." என விஜய் பேசினார்

விஜய் பேச்சு எத்தகையது?

''புதுச்சேரியில் தற்போது முதலமைச்சர் என். ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 2026ல் புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடிக்கும் எனக் குறிப்பிட்ட விஜய், தற்போதுள்ள ஆட்சி குறித்து எந்தக் கடுமையான விமர்சனத்தையும் வைக்கவில்லை. இதுபோன்ற நிலைப்பாடு அக்கட்சிக்கு பலனளிப்பது கடினம்'' என்கிறார், புதுச்சேரியின் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் ம. இளங்கோ.

"தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க விரும்பும் த.வெ.க. அங்கே ஆளும் தி.மு.கவைக் கடுமையாக எதிர்க்கிறது. ஏன் தி.மு.கவை மட்டும் எதிர்க்கிறீர்கள் எனக் கேட்டால், ஆட்சியில் இல்லாத அ.தி.மு.கவையா எதிர்க்க முடியும் என்கிறார்கள். ஆனால், புதுச்சேரியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பவர்கள், என்.ஆர். காங்கிரஸை விமர்சிக்காமல் பேசுகிறார்கள். இங்கே ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்றால் புதுச்சேரிக்கென தனியான அரசியல் தேவை." என்கிறார் ம. இளங்கோ.

புதுச்சேரி குறித்து விஜய் பேசிய விஷயங்கள் பல ஆண்டுகளாக இருப்பவைதான் என்று கூறும் ம. இளங்கோ, சமீபத்தில் வெடித்த போலி மருந்து விவகாரம் குறித்து எதுவும் சொல்லாமல் கடந்து சென்றது ஏன் எனக் கேள்வியெழுப்புகிறார்.

சில நாட்களுக்கு முன்பாக, பிரபலமான மருந்து நிறுவனங்களின் தயாரிப்புகளை போலியாக தயாரித்து விற்றதாக இரண்டு மருந்து நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டன. புதுச்சேரி அரசு போலி மருந்து தயாரிப்பாளர்களையும் உடந்தையாக இருந்தவர்களையும் காப்பாற்றுகிறது எனக் கூறி காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்திவருகின்றன. இந்த விவகாரம் குறித்து விஜய் எதையும் பேசாததையே ம. இளங்கோ சுட்டிக்காட்டுகிறார்.

விஜய், அம்மாநில முதலமைச்சர் என். ரங்கசாமியுடனான தனிப்பட்ட நல்லுறவை அரசியல் உறவாகக் கருதுகிறார் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர். மணி.

"ஆனால், அரசியலில் இதுபோன்ற தனிப்பட்ட உறவுகளுக்கு பெரிய இடம் இல்லை. புதுச்சேரி அரசைப் பாராட்டுகிறார் என்றால் அது என். ரங்கசாமியுடன் மட்டும் முடிவதில்லை. அங்கிருப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு. பா.ஜ.கவைக் கொள்கை எதிரி எனக் கூறுபவர், எப்படி இதுபோலச் செய்ய முடியும்?" என்கிறார் ஆர். மணி.

புதுச்சேரியில் 2021ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகியவை இணைந்து போட்டியிட்டன. என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்தது.

ஆனால், இந்தக் கூட்டணிக்குள் தொடர்ந்து சலசலப்புகள் எழுந்தபடியே இருந்தன. இதன் காரணமாக, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், தே.ஜ.கூட்டணியிலிருந்து விலகி, த.வெ.கவுடன் கூட்டணி அமைக்கும் எனக் கருதுகிறாரா விஜய்? "அப்படி ஒரு ஆசை விஜய்க்கு இருக்கலாம். ஆனால், அது போன்ற ஒரு முடிவை என்.ஆர். காங்கிரஸ் எடுக்காது" என்கிறார் ம. இளங்கோ.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cjdr1pl03g3o

'ஆளும் கட்சியை விமர்சிக்காமல்' ஆட்சியை பிடிப்போம் என கூறும் விஜய் - புதுச்சேரி திட்டம் என்ன?

1 month ago
'ஆளும் கட்சியை விமர்சிக்காமல்' ஆட்சியை பிடிப்போம் என கூறும் விஜய் - புதுச்சேரி திட்டம் என்ன? பட மூலாதாரம்,X கட்டுரை தகவல் முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கரூர் சம்பவத்திற்குப் பிறகு முதல் முறையாக புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்திய விஜய், புதுச்சேரி அரசை பெரிதாக விமர்சனம் செய்யாமல், பொதுவான பிரச்னைகளைப் பேசிச் சென்றிருக்கிறார். புதுச்சேரியில் விஜய்யின் திட்டம் என்ன? தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் கூட்டம் புதுச்சேரியில் இன்று (டிச. 09) நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து கடுமையான திமுக எதிர்ப்பு நிலையை மேற்கொண்டுவரும் நிலையில், அக்கட்சியின் கூட்டங்களில் விஜய்யும் இரண்டாம் கட்டத் தலைவர்களும் திமுகவைக் கடுமையான விமர்சித்து வந்தனர். ஆனால், இந்தக் கூட்டம் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரியில் என்பதால் இங்கே விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. சுமார் 11 மணியளவில் கூட்டம் துவங்கியதும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேச ஆரம்பித்தார். புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், "தமிழ்நாட்டில் எங்கேயும் நம்மை விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். 2026ல் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் நம்முடைய கட்சி ஆட்சியைப் பிடிக்கும்" என்று குறிப்பிட்டார். பட மூலாதாரம்,TVK Party HQ/x படக்குறிப்பு,புதுச்சேரியில் விஜய் பேசிய போது இதற்குப் பிறகு பேச வந்த அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தி.மு.கவை விமர்சிப்பதில் துவங்கி, புதுச்சேரிக்கென பல திட்டங்களை வைத்திருப்பதாகக் கூறி முடித்தார். அவர் பேசுகையில், "இங்கிருக்கும் முதலமைச்சருக்கும் காவல்துறைக்கும் நன்றி. இதுபோன்ற பாதுகாப்பை தமிழகத்தில் கொடுத்ததில்லை. சி.எம். சார் (மு.க. ஸ்டாலின்), உங்கள் அரசியலைத் தூக்கிப்போட்டுவிட்டு, தைரியம் இருந்தால் தேர்தலில் மோதுங்கள். காவல்துறையை வைத்து எங்களை நிறுத்துவதை விடுங்கள்" என்றார். மேலும், புதுச்சேரியில் தவெக கூட்டம் நடத்துவது ஏன் என்பது குறித்தும் அவர் பேசினார். "ஏன் புதுச்சேரியில் கூட்டம் எனக் கேள்வியிருக்கிறது. இது போலத்தான் எம்.ஜி.ஆரிடம் கேட்டார்கள். புதுச்சேரி மக்கள் ஒரு நல்ல ஆட்சி, கல்வி, போக்குவரத்து வசதி ஆகியவற்றுக்காக ஏங்குகிறார்கள். எங்கள் தலைவர் தமிழகத்திற்கு மட்டுமல்ல, புதுச்சேரிக்கும் திட்டம் வைத்திருக்கிறார். அடுத்த 50 வருடத்திற்கான புதுச்சேரியின் வரலாற்றை நாங்கள் எழுதுவோம்" என்றார் அவர். விஜய் பேசியது என்ன? இந்தக் கூட்டத்தில் விஜய்யின் பேச்சு மிகச் சுருக்கமாகவே அமைந்திருந்தது. எல்லா ஊர்களிலும் பேசுவதைப் போலவே முதலில் அந்த ஊரைப் பற்றிப் பேசினார். அதற்குப் பிறகு அ.தி.மு.க. முதலில் புதுச்சேரியில் ஆட்சியைப் பிடித்ததைப் பற்றிப் பேசினார். "1977ல்தான் எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டில் ஆட்சியமைத்தார். அதற்கு முன்பாக, 1974லேயே புதுச்சேரியில் அ.தி.மு.கவின் ஆட்சி அமைந்தது. அவரை 'மிஸ்' பண்ணிவிடக்கூடாது என 'அலர்ட்' செய்ததே புதுச்சேரிதான்" என்றார் விஜய். பட மூலாதாரம்,TVK Party HQ/x மத்திய அரசு பற்றி என்ன சொன்னார்? அடுத்ததாக, தங்கள் கூட்டத்திற்கு காவல்துறை சிறப்பான பாதுகாப்பை அளித்ததாக என்.ஆர். காங்கிரஸ் அரசைப் பாராட்டினார் விஜய். "இங்கிருக்கும் அரசைப் பொறுத்தவரை, தமிழகத்தில் உள்ள தி.மு.க. அரசைப் போல இல்லை. வேறொரு கட்சி நடத்தும் நிகழ்ச்சிக்கு பாரபட்சமில்லாமல் பாதுகாப்பு அளித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட புதுச்சேரி அரசுக்கும் முதலமைச்சருக்கும் நன்றி. இதைப் பார்த்தாவது தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க. அரசு கற்றுக்கொண்டால் நன்றாக இருக்கும்" என்றார். அடுத்ததாக, புதுச்சேரியை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை எனக் குற்றம்சாட்டினார். "கூட்டணியில் இருந்தாலும் புதுச்சேரியை ஒன்றிய அரசு எதிலும் கண்டுகொள்வதில்லை. மாநில அந்தஸ்து கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை. வளர்ச்சி ஏற்படவும் துணை நிற்கவில்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டுமென சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அனுப்பிய தீர்மானம், அப்படி அனுப்பப்பட்ட 16வது தீர்மானம்." என்றார். மேலும், புதுச்சேரியில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்தும் விஜய் பேசினார். "புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மூடப்பட்ட ஐந்து மில்கள் மற்றும் பல தொழிற்சாலைகளைத் திறக்க துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. இங்கே ஒரு ஐ.டி நிறுவனம் வர வேண்டுமென்ற எண்ணமே இல்லை. காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் முன்னேற்றமே இல்லை." என்றார். காவிரியின் கடைமடைப் பகுதியான காரைக்கால் கைவிடப்பட்ட பகுதியாக உள்ளது என குறிப்பிட்ட விஜய், புதுச்சேரிக்கு கடலூர் மார்க்கமாக ரயில் வேண்டும் என்பது நீண்ட காலக் கோரிக்கை என்றார். படக்குறிப்பு,புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி சுமார் 20 லட்சம் பேர் வாழும் புதுச்சேரி, மத்திய நிதிக் குழுவில் இடம்பெற்றவில்லை என பேசிய விஜய், இதனால் போதுமான நிதி ஒதுக்கப்படுவதில்லை, தோராயமான நிதியே ஒதுக்கப்படுகிறது என்றார். அப்போது, "அந்த நிதி சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றுக்கே சென்றுவிடுகிறது. அதனால் பிற செலவுகளுக்கு புதுவை கடன் வாங்குகிறது. இந்த நிலைமை மாற மாநில அந்தஸ்து தேவை." என்றார். மீன் பிடிக்கச் செல்லும் காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்வதாக கூறிய அவர், மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் படகுகள் கிடைக்காததால் மோசமான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்றார். இந்தப் பேச்சின் நடுவிலேயே யார் பெயரையும், எந்த அரசையும் சுட்டிக்காட்டாமல் சில விமர்சனங்களை அவர் முன்வைத்தார். "இங்கே ஒரு அமைச்சர் ஊழல் குற்றச்சாட்டில் நீக்கப்பட்டு, புதிய அமைச்சரை நியமித்தார்கள். அந்த அமைச்சருக்கு இலாகாவே தரவில்லை. இந்தச் செயல் சிறுபான்மையினரை அவமானப்படுத்தும் செயல் என மக்களே சொல்கிறார்கள். சுற்றுலா நகரமான புதுச்சேரியில் போதுமான அளவு பார்க்கிங், கழிப்பறை வசதி இல்லை. இந்தியாவில் ரேஷன் கடைகளே இல்லாத பகுதியாக புதுச்சேரி உள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு வாழ்வாதாரமே ரேஷன் கடைகள்தான். மற்ற மாநிலங்களில் இருப்பதைப் போலவே இங்கேயும் அந்த முறை சீராக்கப்பட வேண்டும்" என்றதோடு தனது பேச்சை முடித்துக் கொண்டார். எனினும், பாஜகவை சேர்ந்த புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், ரேஷன் கடைகள் குறித்த விமர்சனத்திற்கு எதிர்வினையாற்றியுள்ளார். அதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள நமச்சிவாயம், "புதுச்சேரியில் உள்ள ரேஷன் கடைகள், மாநில அரசின் நிர்வாகத்தின் கீழ் தான் செயல்படுகின்றன. அவற்றின் மூலமாகத்தான் இலவச அரிசி விநியோகம் செய்யப்படுகிறது. அதுகூடத் தெரியாமல் விஜய் பேசியுள்ளார்." என தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,MGR FAN CLUB படக்குறிப்பு,"1977ல்தான் எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டில் ஆட்சியமைத்தார். அதற்கு முன்பாக, 1974லேயே புதுச்சேரியில் அ.தி.மு.கவின் ஆட்சி அமைந்தது." என விஜய் பேசினார் விஜய் பேச்சு எத்தகையது? ''புதுச்சேரியில் தற்போது முதலமைச்சர் என். ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 2026ல் புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடிக்கும் எனக் குறிப்பிட்ட விஜய், தற்போதுள்ள ஆட்சி குறித்து எந்தக் கடுமையான விமர்சனத்தையும் வைக்கவில்லை. இதுபோன்ற நிலைப்பாடு அக்கட்சிக்கு பலனளிப்பது கடினம்'' என்கிறார், புதுச்சேரியின் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் ம. இளங்கோ. "தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க விரும்பும் த.வெ.க. அங்கே ஆளும் தி.மு.கவைக் கடுமையாக எதிர்க்கிறது. ஏன் தி.மு.கவை மட்டும் எதிர்க்கிறீர்கள் எனக் கேட்டால், ஆட்சியில் இல்லாத அ.தி.மு.கவையா எதிர்க்க முடியும் என்கிறார்கள். ஆனால், புதுச்சேரியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பவர்கள், என்.ஆர். காங்கிரஸை விமர்சிக்காமல் பேசுகிறார்கள். இங்கே ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்றால் புதுச்சேரிக்கென தனியான அரசியல் தேவை." என்கிறார் ம. இளங்கோ. புதுச்சேரி குறித்து விஜய் பேசிய விஷயங்கள் பல ஆண்டுகளாக இருப்பவைதான் என்று கூறும் ம. இளங்கோ, சமீபத்தில் வெடித்த போலி மருந்து விவகாரம் குறித்து எதுவும் சொல்லாமல் கடந்து சென்றது ஏன் எனக் கேள்வியெழுப்புகிறார். சில நாட்களுக்கு முன்பாக, பிரபலமான மருந்து நிறுவனங்களின் தயாரிப்புகளை போலியாக தயாரித்து விற்றதாக இரண்டு மருந்து நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டன. புதுச்சேரி அரசு போலி மருந்து தயாரிப்பாளர்களையும் உடந்தையாக இருந்தவர்களையும் காப்பாற்றுகிறது எனக் கூறி காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்திவருகின்றன. இந்த விவகாரம் குறித்து விஜய் எதையும் பேசாததையே ம. இளங்கோ சுட்டிக்காட்டுகிறார். விஜய், அம்மாநில முதலமைச்சர் என். ரங்கசாமியுடனான தனிப்பட்ட நல்லுறவை அரசியல் உறவாகக் கருதுகிறார் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர். மணி. "ஆனால், அரசியலில் இதுபோன்ற தனிப்பட்ட உறவுகளுக்கு பெரிய இடம் இல்லை. புதுச்சேரி அரசைப் பாராட்டுகிறார் என்றால் அது என். ரங்கசாமியுடன் மட்டும் முடிவதில்லை. அங்கிருப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு. பா.ஜ.கவைக் கொள்கை எதிரி எனக் கூறுபவர், எப்படி இதுபோலச் செய்ய முடியும்?" என்கிறார் ஆர். மணி. புதுச்சேரியில் 2021ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகியவை இணைந்து போட்டியிட்டன. என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்தது. ஆனால், இந்தக் கூட்டணிக்குள் தொடர்ந்து சலசலப்புகள் எழுந்தபடியே இருந்தன. இதன் காரணமாக, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், தே.ஜ.கூட்டணியிலிருந்து விலகி, த.வெ.கவுடன் கூட்டணி அமைக்கும் எனக் கருதுகிறாரா விஜய்? "அப்படி ஒரு ஆசை விஜய்க்கு இருக்கலாம். ஆனால், அது போன்ற ஒரு முடிவை என்.ஆர். காங்கிரஸ் எடுக்காது" என்கிறார் ம. இளங்கோ. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjdr1pl03g3o

'கற்பனையை விஞ்சிய நிஜம்': இறுதிச்சடங்கு செய்த 12 ஆண்டுக்குப் பிறகு சுமார் 50 வயதில் உயிரோடு வந்த சகோதரன்

1 month ago
'கற்பனையை விஞ்சிய நிஜம்': இறுதிச்சடங்கு செய்த 12 ஆண்டுக்குப் பிறகு சுமார் 50 வயதில் உயிரோடு வந்த சகோதரன் பட மூலாதாரம்,Rohini Bhosale படக்குறிப்பு,மருத்துவமனை ஊழியர்களுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் 'சிவம்' கட்டுரை தகவல் துஷார் குல்கர்னி, பிபிசி மராத்தி, பிராச்சி குல்கர்னி, பிபிசி மராத்திக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் "உண்மை கற்பனையை விட வியப்பானது" என்ற சொற்றொடரை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், அதை நாமே அனுபவிக்கும் வரை அது வெறும் சொல்லாகத்தான் இருக்கும். ஆனால் சிவம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நடந்த சம்பவம், அதை விட வியப்பானது. தாங்களே இறுதிச்சடங்கு செய்த அந்த சகோதரனை, சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திப்போம் என்று அவர்கள் ஒருபோதும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இது புனேவில் உள்ள பிராந்திய மனநல மருத்துவமனை ஊழியர்களின் முயற்சியாலும், காவல் துறையினரின் ஒத்துழைப்பாலும் நிஜமாக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டு கேதார்நாத் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்ட அந்த நபர், இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளைச் செய்துவிட்டனர். அதன் பிறகு அவர் மகாராஷ்டிராவில் உயிரோடு இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு, சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தின் வைஜாபூர் தாலுகாவில் உள்ள ஒரு கோவிலில் திருட்டில் ஈடுபட்டபோது சிலர் பிடிபட்டனர். அப்போது அந்த திருடர்கள், 'இங்கு வாழும் ஒருவரின் கூட்டாளி தான் திருடியது' என்று கிராமத்தினரிடம் கூறினர். அந்தக் கோவிலில் ஒரு நடுத்தர வயதுடைய ஆண் வாழ்ந்து வந்தார். அவர் திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அந்த நபரின் மனநலம் சரியில்லை என்று நீதிமன்றத்துக்கு பின்னர் தெரிய வந்தது. அந்த நபர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், போலியோவால் பாதிக்கப்பட்டு இரு கால்களும் பலவீனம் இருந்ததால் நடக்க முடியவில்லை என்றும் நீதிபதிக்கு தெரிய வந்தது. அந்த நபர் சில வார்த்தைகளை முணுமுணுப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, சிகிச்சைக்காக அனுமதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றம் எந்த கேள்வி கேட்டாலும், அவர் 'ஓம் நம சிவாய' என்றுதான் பதிலளித்துள்ளார். அதன் பிறகு புனேயில் உள்ள எரவாடா சிறைச்சாலையின் மனநலப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கிருந்த ஊழியர்கள் அவரை 'சிவம்' என்று அழைக்கத் தொடங்கினர். இது அவரது உண்மையான பெயர் அல்ல, அங்குள்ள ஊழியர்கள் வழங்கிய பெயர். அவரின் வயது சுமார் 50–52 இருக்கும் என்று அந்த மருத்துவமனையின் சமூக சேவைத் துறையின் கண்காணிப்பாளர் ரோஹினி போஸாலே பிபிசி மராத்திக்கு தெரிவித்தார். சிவம் யாரிடமும் அதிகமாகப் பேசமாட்டார். ஊழியர்கள் சொல்வதையெல்லாம் அமைதியாகக் கேட்டு, செய்துவிடுவார். 2023-ல், ரோஹினி போஸாலே அந்தப் பிரிவின் சமூக சேவை கண்காணிப்பாளராக வந்தார். சிவம் எனும் நபருடைய கோப்பைப் பார்த்த ரோஹினி, அவரிடம் பேச முயன்றுள்ளார். அந்த நபருக்கு மராத்தி தெரியாது. ஆனால் அவர் இந்தியில் பேச முயற்சிப்பதை ரோகிணி கவனித்ததும், அவரிடம் இந்தியில் பேசத் தொடங்கியுள்ளார். அப்போதுதான் சிவம், இந்தியில் பேசுவதை அவர் உணர்ந்தார். சிவம் குடும்பம் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது? படக்குறிப்பு,புனேவில் உள்ள பிராந்திய மனநல மருத்துவமனை ஊழியர்களின் முயற்சியாலும், காவல் துறையினரின் ஒத்துழைப்பாலும் நிஜமாக்கப்பட்டது. சிவம் என்ற அந்த நபரால் தனது குடும்பத்தைப் பற்றியோ, பழைய நினைவுகளைப் பற்றியோ அதிகம் விவரிக்க முடியவில்லை என்பதை உணர்ந்த ரோஹினி, அவர் படித்த பள்ளியைப் பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். பள்ளி குறித்த பேச்சு வந்தபோது, சிவம் ரூர்க்கி பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் பெயரைக் கூறியுள்ளார் (அந்த நபருடைய அடையாளத்தை பாதுகாக்க அந்தப் பெயர் வெளியிடப்படவில்லை) "அந்தப் பள்ளியின் பெயரைக் கேட்டதும், அது எந்த நகரத்தில் இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் பின்னர் உரையாடலில் ஹரித்வார் பற்றி பேச்சு வந்தது. உடனே ஹரித்வாரிலும் அதன் அருகிலும் அந்தப் பெயர் கொண்ட பள்ளி இருக்கிறதா என்று கூகுளில் தேடத் தொடங்கினேன்" என்று ரோகினி பிபிசி மராத்தியிடம் கூறினார். "சிவம் கூறிய பெயருடன் பொருந்தும் ஒரு பள்ளியை கண்டேன். அந்தப் பள்ளியின் புகைப்படத்தை அவரிடம் காட்டியதும் அவர் உடனே அதை அடையாளம் கண்டுகொண்டார். அவரின் கண்களில் ஒரு ஒளி தெரிந்தது" என்கிறார் ரோகிணி. பட மூலாதாரம்,BBC Hindi படக்குறிப்பு,கேதார்நாத் வெள்ளம் (2013) ஆவண புகைப்படம் அதன் பிறகு ரோஹினி ரூர்க்கி மற்றும் ஹரித்வார் காவல்துறையினருடன் தொடர்பு கொண்டார். அங்கு இத்தகைய நபர் ஒருவரை அவர்கள் பராமரித்து வருகின்றனர் என்று அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உத்தரகாண்ட் காவல்துறை அவரைக் குறித்துத் தேடியபோது, இத்தகைய விவரங்களுடன் கூடிய ஒரு நபரைப் பற்றிய பதிவு இருப்பது தெரியவந்தது. ஆனால் அந்த நபர் 2013-ஆம் ஆண்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர் எனக் குறிப்பிடப்பட்டிருந்ததால், விசாரணை முடங்கியது. முதலில், 'இத்தகைய ஒருவர் காணாமல் போனதாக உங்களுக்குத் தெரியுமா?' என்று காவல்துறை அந்த நபருடைய குடும்பத்தினரிடம் விசாரித்ததாக ரோஹினி கூறுகிறார். அப்போது, கேதார்நாத் வெள்ளத்தில் தங்களது சகோதரர் அடித்துச் செல்லப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது உடல் கிடைக்காததால் அடையாள இறுதிச் சடங்கு செய்தோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பின்னர் காவல்துறையினர் அவருடைய புகைப்படத்தை குடும்பத்தினரிடம் காட்டியபோது, அது தங்களது சகோதரன் தான் என்று அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். சிவம் வைஜாபூரை எப்படி அடைந்தார்? சிவம் என்று அழைக்கப்பட்ட அந்த நபர் பல வருடங்களாகக் காணாமல் போயிருந்தார். 2013ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் அவர் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே அவர் காணாமல் போயிருந்தார். சுமார் இருபது வருடங்களாக அவர் வீட்டை விட்டு தனித்து வாழ்ந்து வந்துள்ளார் என ரோகிணி கூறுகிறார். உத்தராகண்டிலிருந்து வைஜாபூரை எப்படி அடைந்தார் என்பது பற்றி அந்த நபருக்கு எதுவும் நினைவில் இல்லை. அதைப் பற்றி அவரால் எதையும் சொல்ல இயலாது. 2015-ஆம் ஆண்டு, சிவம் வைஜாபூரில் உள்ள ஒரு கோவிலில் பராமரிப்பாளராக பணிபுரியத் தொடங்கினார். அங்கேயே உணவு உண்டு, அங்கேயே தூங்கி, கோவிலின் மரம் செடிகளை பராமரித்து வந்துள்ளார். ஆனால் அவர் எப்படி அங்கு வந்தார் என்பது குறித்து யாருக்கும் தெரியாது என்கிறார் ரோகிணி. குடும்பத்தினர் அவரை எப்படி அடையாளம் கண்டுகொண்டார்கள்? உத்தராகண்டில் உள்ள தனது குடும்ப உறுப்பினர்களுடன் வீடியோ காலில் பேச சிவம் அனுமதிக்கப்பட்டார். சிவமின் சகோதரர் அவருடன் வீடியோ காலில் பேசியவுடன், அவரை அடையாளம் கண்டுகொண்டார். அதுமட்டுமின்றி, சிவமும் தனது சகோதரனை அடையாளம் கண்டுகொண்டார். இருவருக்கும் கண்ணீர் மல்கியது. "தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்று சொல்வார்கள். அது எவ்வளவு உண்மை என்பதை நாங்கள் இங்கு புரிந்துகொண்டோம். பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தாலும், அந்த ரத்த சொந்தம் மிகவும் வலுவானது. அதை நாங்கள் நேரில் கண்டோம். அதன் பிறகு சிவமும் மிகவும் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினார்," என்று மனநல மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்ரீநிவாஸ் கோலோட் கூறினார். அவருடைய குடும்பத்தினர் அவரைச் சந்திக்க புனேவுக்கு வந்தனர். ஆனால் அவரை அழைத்துச் செல்வதில் ஒரு சிக்கல் இருந்தது. சிவம் மீதான திருட்டு குற்றச்சாட்டுகள் என்ன ஆயின? அவருடைய குடும்பத்தினர் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவர் கைது செய்யப்பட காரணமான வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்படவில்லை. கைதிகளுக்கான மனநல வார்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், அந்த வழக்கு முடிவுக்கு வரும் வரை அவரால் வீடு திரும்ப முடியவில்லை. இதுகுறித்து எனக்கு தகவல் கிடைத்ததும், இந்த வழக்கின் நிலையை சரிபார்த்ததாக ரோகிணி கூறுகிறார். ஆனால் அப்போது அந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் இல்லை. இது குறித்து காவல்துறைக்கும் நீதிபதிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகு, 2023 இல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, வழக்கு விசாரிக்கப்பட்டது. சிவம் நடக்க முடியாத நிலையில் இருந்ததால், வீடியோ கால் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். திருட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மற்றவர்கள், சிவம் திருட்டில் ஈடுபடவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர். ஆனால் கிராமவாசிகள் எங்களைப் பிடித்தபோது, அவர்கள் எங்களை கொன்றுவிடக்கூடும் என்ற பயத்தில், அங்கே வேலை செய்த நபரின் பெயரை பொய்யாகக் கூறினோம் என அவர்கள் கூறியதாக ரோஹினி விவரித்தார். அவர்களின் வாக்குமூலங்களுக்கு பின்னர், 2025-ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் அந்த வழக்கில் தீர்ப்பு வந்தது, அதில் சிவம் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார். இந்த உத்தரவு நகல் நவம்பரில் வந்ததும், சிவம் அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். குடும்பத்தினர் வருகையும் சிவம் பிரியாவிடையும் சிவம் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்தது எங்களுக்கு மறக்க முடியாத தருணம் என்று ரோகிணி கூறுகிறார். "கடந்த நான்கு ஆண்டுகளாக, வார்டில் சகோதரர் நிலேஷ் திகே மற்றும் சகோதரி கவிதா காதே ஆகியோர் அவரை கவனித்துக்கொண்டனர். சிவம் அனைவருக்கும் ஒரு குடும்ப உறுப்பினரைப் போல மாறிவிட்டதால், அவருக்கு விடைகொடுப்பது எங்களுக்கு ஒரு உணர்ச்சிபூர்வமான தருணமாக இருந்தது. ஆனால் அவர் தனது குடும்பத்தினரிடம் செல்வதில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தோம்" என்று ரோகிணி பகிர்ந்து கொண்டார். "நான்கைந்து வருடங்களாக, நாங்கள் அவருடன் ஒரு உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பை வளர்த்துக் கொண்டுள்ளோம். அவர் மிகவும் அமைதியான மற்றும் மென்மையான மனிதர். அவர் தனது வேலையை மிகச் சிறப்பாகச் செய்கிறார். உணவுக்குப் பிறகு தட்டுகளைக் கழுவுவதாக இருந்தாலும் சரி, படுக்கைகளைச் சரிசெய்வதாக இருந்தாலும் சரி, அவர் தனது வேலையை மிகச் சிறப்பாகச் செய்கிறார்," என்று கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்ரீனிவாஸ் கோலோட் கூறினார். கைதிகளுக்கான மனநல வார்டில் இருந்த ஒருவர் இவ்வாறு தனது குடும்பத்துடன் மீண்டும் இணைக்கப்படுவது இது தான் முதல் தடவை எனவும் அவர் குறிப்பிட்டார். சிவம் என்ற அந்த நபருடைய சகோதரர் அரசு வேலையில் இருப்பதாகவும், இந்த சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாகவும் ரோகிணி தெரிவித்தார். அவரது குடும்பத்தினர் தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அதே நேரத்தில், அவர்களின் தனியுரிமை மதிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டதாகவும் ரோஹினி கூறினார். எனவே பிபிசி மராத்தி அவர்களின் குடும்பத்தினரிடமிருந்து இதுகுறித்து எந்தக் கருத்தும் பெறவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly313wle0ko

ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்

1 month ago
வீட்டிலிருந்து கொண்டுவந்த தேங்காய்கள், அரிசி மற்றும் சில மரக்கறிகள் ஓரிரு வாரத்திலேயே தீர்ந்துவிட்டது. மீண்டும் போகலாம் என்று முடிவெடுத்தோம். அந்நாட்களில் வேறு சிலரும் கோண்டாவில் பகுதிகளில் தமது வீடுகளைப் பார்க்கப் போய்வருவது தெரிந்தது. ஆகவே, நாம் இரண்டாவது தடவையாகவும் எமது வீடு நோக்கிப் பயண‌மானோம். இம்முறை கெடுபிடிகள் சற்றுக் குறைந்திருந்ததைப்போலத் தெரிந்தது. ஆனால் இந்திய ராணுவத்தின் பிரசன்னம் அப்பகுதியில் இருந்தது. பலாலி வீதியின் ஓரத்தில் முகாம்களை அமைத்திருந்தார்கள். போய்வருவோர் கடுமையாகச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். எம்மையும் அவர்கள் சோதித்தார்கள். எதற்காக வீடுகளுக்குச் செல்கிறோம் என்று கேட்கப்பட்டது. இன்னமும் சேதப்படாமல் இருக்கும் பொருட்களை எடுத்துச் செல்ல வந்திருக்கிறோம் என்று கூறினோம், அனுமதித்தார்கள். இம்முறை நாம் வீட்டை அடைந்தபோது பக்கத்து வீட்டில் ஆட்கள் பேசும் சத்தம் கேட்டது. சென்று பார்த்தபோது அவ்வீட்டில் ஒருவரான பழனியண்ணாவும் இன்னுமொருவரும் நின்றிருந்தார்கள். வீட்டிலிருந்து துரத்தப்பட்ட நாளுக்கு முன்னைய நாளில் அவரைக் கண்டதற்கு இன்றுதான் அவரைக் காண்கிறேன். என்னைப் பார்த்தவுடன் அழத் தொடங்கினார். எதற்காக அழுகிறார் என்பது எனக்குப் புரியவில்லை. ஏன் என்று நான் வினவியபோது அவர் . நடந்ததை விபரித்தார். அவர் விபரிக்க விபரிக்க‌ அன்றிரவு நடந்த அகோரம் எனக்கு வெளிச்சமாகியது. எமது வீடுகளுக்குள் இந்திய ராணுவம் நுழைந்த நாளன்று பக்கத்து வீட்டில் எவருமே இல்லையென்றுதான் நாம் நினைத்திருந்தோம். ஏனென்றால், தாம் நல்லூருக்குப் போகப் போவதாக பாமா அக்கா கூறிவிட்டுச் சென்றதனால், அவர்கள் அங்கு இல்லை என்றுதான் முதலில் எண்ணியிருந்தேன். ஆனாலும் அன்றிரவு எமது வீட்டைக் கடந்து சென்ற இந்திய இராணுவம் பாமா அக்கா வீட்டினுள் நுழைந்தபோது கேட்ட அழுகுரல்களும் அதனைத் தொடர்ந்து கேட்ட நீண்ட துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் எனக்கு அங்கு ஆட்கள் இருந்திருக்கிறார்கள் என்பதைச் சொல்லிற்று. ஆனால் அங்கிருந்தோர் யார், எத்தனைபேர், அவர்களுக்கு என்ன நடந்ததது என்பதுபற்றி பழனியண்ணை சொல்லும்வரை எனக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை. காலையில் என்னுடன் பேசிவிட்டுச் சென்ற பாமா அக்காவின் குடும்பம் நல்லூருக்குப் போக ஆயத்தமாகியிருக்கிறது. ஆனால் செல்வீச்சுக் கடுமையாக நடக்க ஆரம்பித்ததையடுத்து, நிலைமை ஓரளவிற்கு சுமூகமானதும் நல்லூருக்குச் செல்லலாம் என்று இருந்திருக்கிறார்கள். ஆனால் நள்ளிரவுவரை செல்த்தாக்குதல் குறையவில்லை. அதன்பின்னர் துப்பாக்கிச் சண்டைகள் ஆர்ம்பமாகிவிட்டிருந்தமையினால் அவர்கள் நல்லூருக்குச் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு வீட்டிலேயே இருக்கலாம் என்று இருந்துவிட்டார்கள். பாமா அக்காவின் வீட்டிற்குப் பின்னால் அமைந்திருக்கும் பேபி அக்காவின் வீட்டினரும் அன்றிரவு பாமா அக்காவின் வீட்டிலேயே அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள். இந்திய இராணுவம் அவர்களது வீட்டருகில் வந்தபோது, பாமா அக்காவின் வீட்டிற்கு முன்னால் அமைந்திருக்கும் புகையிலைகளுக்கு புகைபோடும் குடிலுக்குள் பாமா அக்கா, பேபியக்கா, குலம் அண்ணா, மற்றும் பேபியக்காவின் இரு சகோதரர்கள், பேபியக்காவின் தகப்பனார் என்று ஏழுபேர் அடைக்கலம் புகுந்திருக்க ஏனையோர் அனைவரும் வீட்டினுள் இருந்திருக்கிறார்கள். முதலில் வீட்டினுள் நுழைந்த இராணுவம் சமயலறைப் புகைப்போக்கியின் கீழ் அமர்ந்திருந்த குடும்ப உறுப்பினர்களை யன்னலூடாகப் பார்த்துத் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய ஆரம்பித்திருக்கிறது. அதன்போதே "ஐய்யோ, சுடாதேயுங்கோ" என்ற அழுகுரல்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. அதன்பின்னர் புகையிலைக் குடில்ப் பக்கம் தனது பார்வையைத் திருப்பிய இந்தியப் பேய்கள் உள்ளிருப்போரை வெளியே வரும்படி அழைத்திருக்கின்றன. தம்மை அவர்கள் கொல்லம்மாட்டார்கள் என்று நம்பிய குலம் அண்ணை முதலில் வெளியே வர அவரை வெட்டிச் சாய்த்தது இந்திய ராணுவம். அப்போதுதான், "ஐயோ, பிள்ளைகளை வெட்டாதேயுங்கோ" என்று பேபியக்காவின் தாயார் அலறியிருக்கிறார். குலம் அண்ணை கொல்லப்பட்டதைக் கண்ட ஏனையோர் தொடர்ந்தும் குடிலுக்குல் ஒளிந்திருக்க, அவர்கள்மீது துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டதோடு கைக்குண்டுகளையும் வீசி எறிந்திருக்கிறது இந்தியாவின் சாத்தான்படை. உள்ளிருந்தோர் அனைவரும் கொல்லப்பட்டு குடிலுடன் எரிக்கப்பட்டார்கள். ஆனால் வீட்டினுள் இன்னமும் பதுங்கியிருந்தோருக்கு வெளியே நடக்கும் அகோரம் எதுவுமே தெரிந்திருக்கவில்லை. காலையில் எம்மை இழுத்துச் சென்றது போல அவர்களின் வீட்டினுள் மீதமாயிருந்தோரையும் இந்திய இராணுவம் இழுத்துச் சென்று துரத்திவிட்டிருக்கிறது. ஆகவே குடிலுக்குள் தஞ்சமடைந்திருந்தோர் இன்னமும் உயிருடன் இருப்பதாகவே குடும்பங்களின் ஏனையோர் நினைத்திருந்திருக்கின்றனர். சில வாரங்களின் பின்னர் பாமா அக்கா எமது குடும்பத்துடன் நல்லூர்க் கோயிலில் காணப்பட்டதாக அவரது குடும்பத்திடம் யாரோ கூறிவிட அவர்கள் எம்மை பல வாரங்களாகத் தேடியிருக்கிறார்கள். எம்முடன் பாமா அக்கா இருப்பதாக அவர்கள் நம்பிக்கையுடன் இருந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களது நம்பிக்கைகளையெல்லாம் வேறோடு அறுத்துவிட்ட சம்பவம் நாம் இரண்டாவது தடவையாக வீடுகளைப் பார்க்கச் சென்றபோது அவர்களுக்கு நடந்தது. பாமா அக்காவின் மாமனாரான பழனியண்ணாவும் அவரது உறவினர் ஒருவரும் எம்மைப்போலவே தமது வீடுகளைப் பார்க்க‌ வந்திருக்கின்றனர். முதலில் வீட்டினுள் சென்று அழிவுகளை நோட்டம்விட்டு விட்டு, பின்னர் புகையிலைக் குடிலுக்குள் சென்றிருக்கின்றனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களை கடுந்துயரத்தில் ஆழ்த்திவிட்டது. உள்ளே பாதி எரிந்த நிலையில் ஏழு சடலங்களை அவர்கள் கண்ணுற்றிருக்கிறார்கள். அப்போது அங்கு இருந்தது யாரென்பது ஓரளவிற்குத் தெரிந்துவிட்டது அவர்களுக்கு. அங்கு கிடந்த ஏழு சடலங்களுல் ஒன்று பாமா அக்காவினுடையது. அவர் அணிந்திருந்த மோதிரமும், அவர் தலையில் குத்தியிருந்த இரும்பிலான கிளிப்பும் அவரை அடையாளம் காட்டின. அங்கிருந்த மற்றைய பெண்ணின் சடலம் பேபி அக்காவுடையது. பாதி எரிந்த நிலையில் காணப்பட்ட அவரது ஆடைமூலம் அவரை அடையாளம் கண்டுகொண்டார் பழனியண்ணை. அவர்களைத் தவிர மீதமாயிருந்த நால்வரும் குலம் அண்ணை, பேபியக்காவின் தந்தை மற்று பேபியக்காவின் இரு சகோதரர்கள் என்பதை நாம் உணர்ந்துகொண்டோம். பாமா அக்கா உயிருடன், எம்முடன் இருக்கிறார் என்று அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை அன்று காலையுடன் அற்றுப்போனபோதே அவரை துக்கம் ஆட்கொண்டது. அதனாலேயே என்னைக் கண்டவுடன் அவர் அழத் தொடங்கினார். அன்று அவரும் அவரது உறவினரும் எமது ஒழுங்கையினுள் காணப்பட்ட சடலங்கள் அல்லது எலும்புக் கூடுகளை ஒரு குவியலாகப் போட்டு எரித்தார்கள். அவர்களது உறவினர்கள் ஏழுபேருடையவை தவிர்ந்த இன்னும் இருபது மனித எச்சங்களை அவர்கள் ஒழுங்கையின் அருகிலிருந்து தூக்கிவந்தார்கள். உடைந்த தளபாடங்கள், மரங்கள் , சருகுகள் கொண்டு நாம் அவர்களுக்கான இறுதிக் கிரியைகளைச் செய்தோம். எமது ஒழுங்கையில் மட்டுமே கொல்லப்பட்ட எம்மக்களின் எண்ணிக்கை 27.

ஜப்பானில் பாரிய பூகம்பம் : சுனாமி எச்சரிக்கை

1 month ago
ஜப்பான் நிலநடுக்கம்; 30 பேர் காயம் Published By: Digital Desk 3 09 Dec, 2025 | 12:19 PM வடக்கு ஜப்பானில் திங்கட்கிழமை (08) இரவு 7.5 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் மீளப் பெறப்பட்டது. திங்கட்கிழமை இரவு அந்நாட்டு நேரப்படி 11.15 க்கு ஜப்பானின் வடக்கிழக்கு கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து 10 அடி உயரத்திற்கு இராட்சத சுனாமி அலைகள் எழலாம் என ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (JMA) அறிவித்தது. அதன்படி, ஹொக்கைடோ, அமோரி மற்றும் இவாட் மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. மேலும் பல துறைமுகங்களில் 20 முதல் 70 செ.மீ (7 முதல் 27 அங்குலம்) உயரத்தில் சுனாமி அலைகள் தாக்கின. நிலநடுக்கத்தின் மையம் அமோரி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 80 கிலோ மீற்றர் (50 மைல்) தொலைவில், 50 கிலோ மீற்றர் (30 மைல்) ஆழத்தில் பதிவாகியது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், அதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தீயணைப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. உடைந்து விழுந்த பொருட்களாலே பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹச்சினோஹேயில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பலர் காயமடைந்துள்ளனர். அத்துடன், டோஹோகுவில் கார் குழி ஒன்றுக்குள் விழுந்ததில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. "ஜப்பான் மற்றும் ரஷ்யாவின் கரையோரங்களில், கொக்கைடோ நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 1,000 கிமீ (620 மைல்) தொலைவில் ஆபத்தான சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது" என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனை தொடர்ந்து குறித்த பகுதிகளில் வசிப்பவர்களை விரைவாக வெறியேறுமாறு பிரதமர் சானே தகைச்சி வலியுறுத்தினார். சுமார் 2,700 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சுமார் 480 குடியிருப்பாளர்கள் ஹச்சினோஹே விமான நிலையத்தில் தஞ்சம் அடைந்ததாக தலைமை அமைச்சரவைச் செயலாளர் மினோரு கிஹாரா தெரிவித்துள்ளார். சேத மதிப்பீட்டிற்காக 18 பாதுகாப்பு ஹெலிகொப்டர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி தெரிவித்துள்ளார். ஹொக்கைடோவில் உள்ள நியூ சிட்டோஸ் விமான நிலையத்தில் 200 பயணிகள் இரவு முழுவதும் சிக்கித் தவித்ததாக என்.எச்.கே செய்திச் சேவை தெரிவித்துள்ளது. வடகிழக்கு கரையோர பகுதிகளில் சில ரயில் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளதாக கிழக்கு ஜப்பான் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அணு மின் நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேற்கொண்டு வருவதாக என்.எச்.கே செய்திச் சேவை தெரிவித்துள்ளது. புகுஷிமா அணு மின் நிலையத்தில் எந்தவொரு அசாதாரண சம்பவங்களும் இடம்பெறவில்லை என சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் மேலும் வலுவான நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். என்.எச்.கே செய்திச் சேவை அறிக்கைகளின்படி, குறைந்தது ஒரு வாரமாவது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளனர். நில அதிர்வு மிகுந்த நெருப்பு வளையத்தில் அமைந்துள்ள ஜப்பான், உலகளாவிய ரீதியில் அதிகளவு நிலநடுக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாகும். உலகில் 6.0 அல்லது அதற்கு மேற்பட்ட ரிச்டர் அளவில் சுமார் 20 சதவீதமான நிலநடுக்கங்கள் ஜப்பானில் பதிவாகிறது. மேலும் 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9.0 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டு ஜப்பான் கடுமையாக பாதிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/232849

இலங்கைக்கு உதவத் தயார்.. இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு

1 month ago
இந்திய விமானப் படைக்கு சொந்தமான மற்றுமொரு ஹெலிகொப்டர் கட்டுநாயக்கவை வந்தடைந்தது! 09 Dec, 2025 | 03:05 PM இந்திய விமானப் படைக்கு சொந்தமான மற்றுமொரு ஹெலிகொப்டர் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று செவ்வாய்க்கிழமை (09) பிற்பகல் வந்தடைந்துள்ளது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த நிவாரண சேவை வழங்குவதற்காக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்திய விமானப் படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகொப்டர்கள் அத்தியாவசிய தேவை காரணமாக மீண்டும் இந்தியா நோக்கி இன்று பயணமாகியது. இதனையடுத்து, இந்திய விமானப் படைக்கு சொந்தமான மற்றுமொரு ஹெலிகொப்டர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. அனர்த்த நிவாரண சேவைக்காக இந்த ஹெலிகொப்டரில் 14 இந்திய வீரர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இந்திய அரசாங்கத்தினால் மேலும் பல அனர்த்த நிவாரண சேவைகள் இலங்கைக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/232875

ரூ. 1.38 பில்லியனை ஐ.நா ஒதுக்கியுள்ளது

1 month ago
ரூ. 1.38 பில்லியனை ஐ.நா ஒதுக்கியுள்ளது Editorial / 2025 டிசெம்பர் 09 , பி.ப. 02:44 - 0 - 26 இலங்கையின் மீட்பு நடவடிக்கைகளுக்கு, ஐக்கிய நாடுகள் சபை மத்திய அவசரகால மீட்பு நிதியிலிருந்து (CERF) 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை ரூபாய் 1.38 பில்லியன்) ஒதுக்கியுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உணவு விநியோகம், தங்குமிடம் ஆதரவு, நீர், சுகாதாரம் மற்றும் சுகாதார சேவைகள் உள்ளிட்ட அவசர உதவிகளை விரைவாக அதிகரிக்க இந்த நிதியுதவி உதவும். இலங்கை முழுவதும் உள்ள சமூகங்கள் பரவலான தாக்கங்களுடன் தொடர்ந்து போராடி வருகின்றன, வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட விரிவான சேதம் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்னும் இடம்பெயர்ந்துள்ளன. சமீபத்திய மதிப்பீடுகள் சூறாவளியின் விளைவுகள் ஆரம்பத்தில் புரிந்து கொள்ளப்பட்டதை விட பரந்ததாகவும் கடுமையானதாகவும் இருப்பதால், பலர் முழுமையாக மீள்வதற்கு நிலையான ஆதரவு அவசரமாக தேவைப்படுவதாகக் காட்டுகின்றன. "இந்த நிதி இலங்கைக்கு ஒரு முக்கியமான தருணத்தில் வருகிறது" என்று இலங்கையில் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் கூறினார். "டித்வா சூறாவளி நாடு முழுவதும் வாழ்க்கையை நிலைகுலையச் செய்துள்ளது, மேலும் பல குடும்பங்கள் இன்னும் தங்கள் அடிப்படை அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போராடி வருகின்றன. அவசர நிவாரணப் பொருட்கள் மற்றும் உபகரணங்களுடன் ஐ.நா. விரைவாக ஆதரவளித்தது. சான்றுகள் மற்றும் முன்னுரிமைத் தேவைகளால் வழிநடத்தப்படும் ஒருங்கிணைந்த பதிலை உறுதி செய்வதற்காக நாங்கள் அரசாங்கம், சிவில் சமூக கூட்டாளிகள் மற்றும் மனிதாபிமான சமூகத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம். இந்த அவசர நிதி, மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் ஆதரவை அடைய உதவும்." ஐ.நா.வின் உலகளாவிய அவசர நிதியம், CERF, திடீர் நெருக்கடியின் ஆரம்ப கட்டங்களில் உயிர்காக்கும் நடவடிக்கைகளை ஆதரிக்க மனிதாபிமான பதிலளிப்பவர்களுக்கு விரைவான நிதியை வழங்குகிறது. Tamilmirror Online || ரூ. 1.38 பில்லியனை ஐ.நா ஒதுக்கியுள்ளது

ரூ. 1.38 பில்லியனை ஐ.நா ஒதுக்கியுள்ளது

1 month ago

ரூ. 1.38 பில்லியனை ஐ.நா ஒதுக்கியுள்ளது

Editorial   / 2025 டிசெம்பர் 09 , பி.ப. 02:44 - 0     - 26

messenger sharing button

facebook sharing button

email sharing button

image_9a8cb7b06b.jpg

இலங்கையின் மீட்பு நடவடிக்கைகளுக்கு, ஐக்கிய நாடுகள் சபை மத்திய அவசரகால மீட்பு நிதியிலிருந்து (CERF) 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை ரூபாய் 1.38 பில்லியன்) ஒதுக்கியுள்ளது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உணவு விநியோகம், தங்குமிடம் ஆதரவு, நீர், சுகாதாரம் மற்றும் சுகாதார சேவைகள் உள்ளிட்ட அவசர உதவிகளை விரைவாக அதிகரிக்க இந்த நிதியுதவி உதவும்.

இலங்கை முழுவதும் உள்ள சமூகங்கள் பரவலான தாக்கங்களுடன் தொடர்ந்து போராடி வருகின்றன, வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட விரிவான சேதம் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்னும் இடம்பெயர்ந்துள்ளன. சமீபத்திய மதிப்பீடுகள் சூறாவளியின் விளைவுகள் ஆரம்பத்தில் புரிந்து கொள்ளப்பட்டதை விட பரந்ததாகவும் கடுமையானதாகவும் இருப்பதால், பலர் முழுமையாக மீள்வதற்கு நிலையான ஆதரவு அவசரமாக தேவைப்படுவதாகக் காட்டுகின்றன.

"இந்த நிதி இலங்கைக்கு ஒரு முக்கியமான தருணத்தில் வருகிறது" என்று இலங்கையில் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் கூறினார். "டித்வா சூறாவளி நாடு முழுவதும் வாழ்க்கையை நிலைகுலையச் செய்துள்ளது, மேலும் பல குடும்பங்கள் இன்னும் தங்கள் அடிப்படை அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போராடி வருகின்றன. அவசர நிவாரணப் பொருட்கள் மற்றும் உபகரணங்களுடன் ஐ.நா. விரைவாக ஆதரவளித்தது. சான்றுகள் மற்றும் முன்னுரிமைத் தேவைகளால் வழிநடத்தப்படும் ஒருங்கிணைந்த பதிலை உறுதி செய்வதற்காக நாங்கள் அரசாங்கம், சிவில் சமூக கூட்டாளிகள் மற்றும் மனிதாபிமான சமூகத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம். இந்த அவசர நிதி, மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் ஆதரவை அடைய உதவும்."

ஐ.நா.வின் உலகளாவிய அவசர நிதியம், CERF, திடீர் நெருக்கடியின் ஆரம்ப கட்டங்களில் உயிர்காக்கும் நடவடிக்கைகளை ஆதரிக்க மனிதாபிமான பதிலளிப்பவர்களுக்கு விரைவான நிதியை வழங்குகிறது.

Tamilmirror Online || ரூ. 1.38 பில்லியனை ஐ.நா ஒதுக்கியுள்ளது

பதுளைக்கு மீண்டும் எச்சரிக்கை

1 month ago
பதுளை மாவட்டத்தில் இன்று (09) காலை முதல் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால், மாவட்ட மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பதுளை மாவட்டச் செயலாளர் பண்டுக ஸ்ரீ பிரபாத் அபேவர்தன அறிவுறுத்தியுள்ளார். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லாமல், தற்போது தங்கியுள்ள தங்குமிடங்கள் அல்லது தற்காலிக தங்குமிடங்களில் தங்குமாறு மாவட்டச் செயலாளர் மேலும் மக்களுக்கு அறிவுறுத்துகிறார். பதுளை மாவட்டத்தில் சமீபத்திய நாட்களில் ஏற்பட்ட பேரழிவுகளால் சேதமடைந்த வீடுகள் மற்றும் சொத்துக்களின் இடிபாடுகளை மக்கள் இன்னும் தேடி வருவதாகவும், மாவட்டத்தில் மீண்டும் பெய்த கனமழை காரணமாக மண்சரிவு, பாறைகள் மற்றும் மரங்கள் இடிந்து விழும் அபாயம் உள்ளதாகவும், எனவே மக்கள் பாதுகாப்பான மையங்கள் அல்லது தற்காலிக தங்குமிடங்களில் தங்குமாறு மாவட்டச் செயலாளர் கேட்டுக் கொண்டார். Tamilmirror Online || பதுளைக்கு மீண்டும் எச்சரிக்கை

பதுளைக்கு மீண்டும் எச்சரிக்கை

1 month ago

பதுளை மாவட்டத்தில் இன்று (09) காலை முதல் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால், மாவட்ட மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பதுளை மாவட்டச் செயலாளர் பண்டுக ஸ்ரீ பிரபாத் அபேவர்தன அறிவுறுத்தியுள்ளார்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லாமல், தற்போது   தங்கியுள்ள தங்குமிடங்கள் அல்லது தற்காலிக தங்குமிடங்களில் தங்குமாறு மாவட்டச் செயலாளர் மேலும் மக்களுக்கு அறிவுறுத்துகிறார்.

பதுளை மாவட்டத்தில் சமீபத்திய நாட்களில் ஏற்பட்ட பேரழிவுகளால் சேதமடைந்த வீடுகள் மற்றும் சொத்துக்களின் இடிபாடுகளை மக்கள் இன்னும் தேடி வருவதாகவும், மாவட்டத்தில் மீண்டும் பெய்த கனமழை காரணமாக மண்சரிவு,  பாறைகள் மற்றும் மரங்கள் இடிந்து விழும் அபாயம் உள்ளதாகவும், எனவே மக்கள் பாதுகாப்பான மையங்கள் அல்லது தற்காலிக தங்குமிடங்களில் தங்குமாறு மாவட்டச் செயலாளர் கேட்டுக் கொண்டார்.


Tamilmirror Online || பதுளைக்கு மீண்டும் எச்சரிக்கை