1 month ago
தமிழக முதல்வருக்கு தொலைப்பேசியில் நன்றி தெரிவித்த விஜித! Dec 8, 2025 - 10:29 PM இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரகால நிவாரண உதவிகளை வழங்கியமைக்காக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் விஜித ஹேரத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வருடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை கடினமான சூழலை எதிர்கொண்ட சந்தர்ப்பங்களில் தமிழக அரசு வழங்கிய ஆதரவு மற்றும் வெளிப்படுத்திய தோழமை உணர்விற்கும் அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது நன்றி தெரிவித்தார். அத்துடன், இரு தரப்பிற்கும் இடையிலான மக்கள் ரீதியான தொடர்புகள் எதிர்காலத்தில் மேலும் வலுவடையும் என்றும், நல்லெண்ணம் மற்றும் ஒத்துழைப்பு தொடர்ந்தும் வளரும் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார். https://adaderanatamil.lk/news/cmixecn2t02jeo29n5v3zxcwz
1 month ago
இந்தோனேசிய வெள்ள பேரழிவு; உயிரிழப்பு 1,000ஐ கடந்தது - ஒரு மில்லியனுக்கு அதிகமானோர் இடம்பெயர்வு 09 Dec, 2025 | 11:23 AM இந்தோனேசியாவில் கடந்த வாரம் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில், சிக்கி இதுவரையில் 1,000 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 10 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், 234 பேர் காணாமல் போயுள்ளதுடன் 5,000 பேர் காயமடைந்துள்ளனர். இதில் , வட சுமத்திரா மற்றும் மேற்கு சுமத்திரா மாகாணங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், 156,000 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. 975,075 பேர் தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இதேவேளை, அந்நாட்டு கடலோர மாவட்டங்களில் வெள்ளநீர் சற்று தளர்ந்துவரும் நிலையில், மலைப்பகுதிகளிலுள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. அடுத்து வரும் நாட்களில் கனமழை தொடரும் என அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ள நிலையில், இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது. இந்தோனேசியாவில் நவம்பர் முதல் ஏப்ரல் வரை நீடிக்கும் மழைக்காலம் பெரும்பாலும் கடுமையான வெள்ளங்களை ஏற்படுத்தும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/232844
1 month ago
கலா ஓயா வெள்ள மீட்பு: கடற்படையினரை கௌரவிக்கக் கோரிக்கை Dec 8, 2025 - 09:54 PM டித்வா பேரிடரின்போது புத்தளம் ஏ–12 வீதியில் பெருக்கெடுத்த கலா ஓயா வெள்ளத்தில் சிக்குண்ட பேருந்திலிருந்து மீட்கப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள், தமது மீட்பு நடவடிக்கைகளுக்குத் துரித நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் இன்று திங்கட்கிழமை (08.12.2025) கடிதமொன்றைக் கையளித்தனர். ஆளுநர் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, பல்கலைக்கழக மாணவர்களின் உடல் மற்றும் உள நலம் குறித்து ஆளுநர் விசாரித்தறிந்தார். அதனைத் தொடர்ந்து, பேரிடரின்போது தாம் எதிர்கொண்ட சவாலான அனுபவங்களை மாணவர்கள் ஆளுநருடன் பகிர்ந்துகொண்டனர். இதன்போது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தங்களது சக பயணி ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, பின்னர் சடலமாக மீட்கப்பட்ட துயரச் சம்பவம் குறித்தும், அந்தத் தருணத்தில் அவர்கள் எதிர்கொண்ட நெருக்கடி நிலை குறித்தும் ஆளுநரிடம் விவரித்தனர். மேலும், மீட்புப் பணிகளுக்காக வருகை தந்த மூன்று கடற்படை வீரர்கள், வெள்ளம் சூழ்ந்த அந்த ஆபத்தான சூழலில் 24 மணி நேரத்துக்கும் மேலாகத் தம்முடன் தங்கியிருந்ததோடு, வெள்ளத்தில் வீழ்ந்த சிலரையும் உயிருடன் மீட்டனர் என்பதையும் மாணவர்கள் ஆளுநரிடம் நினைவுகூர்ந்தனர். இத்தகைய அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அந்தக் கடற்படை வீரர்களைச் சிறப்பிக்குமாறு ஜனாதிபதி அவர்களிடம் பரிந்துரைக்குமாறும் மாணவர்கள் ஆளுநரிடம் விசேட வேண்டுகோள் விடுத்தனர். மிகவும் ஆபத்தான சூழலில், எவ்வித தாமதமுமின்றி மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவிய அனைத்துத் தரப்பினருக்கும், விசேடமாக மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தி வழிநடத்திய மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கும் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட மாணவர்கள், இந்த நன்றியுணர்வை வெளிப்படுத்தும் வகையிலான உத்தியோகபூர்வ கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்தனர். மாணவர்களால் கையளிக்கப்பட்ட குறித்த கடிதத்தை, ஆளுநர் உடனடியாகவே ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் அனுப்பி வைத்தார். https://adaderanatamil.lk/news/cmixd3mrs02jdo29nxsgtlt9y
1 month ago
அத தெரண கருத்துப்படங்கள்.
1 month ago
Published By: Digital Desk 1 09 Dec, 2025 | 10:38 AM வானிலை முன்னறிவிப்புக்கு அமைய எதிர்வரும் நாட்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதால் நாட்டின் பல முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களை குறைத்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, அனுராதபுரம் மாவட்டத்தில் நாச்சதுவ, ராஜாங்கனை, தெதுரு ஓயா, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் லுனுகம்வெஹெர, வெஹெரகல மற்றும் அம்பாறை மாவட்டத்தில் சேனநாயக்க சமுத்திரம் ஆகிய இடங்களில் நீர் மட்டத்தைக் குறைக்க தற்போது நீர்; திறந்து விடப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர், நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார். தற்போது வெளியிடப்படும் நீரின் அளவு கீழ் பகுதிகளில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதுவரை வெளியிடப்பட்டுள்ள முன்னறிவிப்புகளின்படி, எதிர்காலத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால்,இந்த நிலைமைகளைக் கண்காணிக்க நீர்ப்பாசனத் திணைக்கள அலுவலகங்கள் 24 மணித்தியாலமும் திறந்திருப்பதாகவும் இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, எதிர்கால நிலைமைகள் குறித்து விழிப்புடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பருவமழை தற்போது தொடங்கியுள்ளதால், இது தொடர்பாக விழிப்புடன் இருப்பது முக்கியம் என்றும், தற்போதைய நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, செயற்படவேண்டும் என்றும் நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர், நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/232841
1 month ago
Published By: Digital Desk 1
09 Dec, 2025 | 10:38 AM

வானிலை முன்னறிவிப்புக்கு அமைய எதிர்வரும் நாட்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதால் நாட்டின் பல முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களை குறைத்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அனுராதபுரம் மாவட்டத்தில் நாச்சதுவ, ராஜாங்கனை, தெதுரு ஓயா, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் லுனுகம்வெஹெர, வெஹெரகல மற்றும் அம்பாறை மாவட்டத்தில் சேனநாயக்க சமுத்திரம் ஆகிய இடங்களில் நீர் மட்டத்தைக் குறைக்க தற்போது நீர்; திறந்து விடப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர், நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
தற்போது வெளியிடப்படும் நீரின் அளவு கீழ் பகுதிகளில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதுவரை வெளியிடப்பட்டுள்ள முன்னறிவிப்புகளின்படி, எதிர்காலத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால்,இந்த நிலைமைகளைக் கண்காணிக்க நீர்ப்பாசனத் திணைக்கள அலுவலகங்கள் 24 மணித்தியாலமும் திறந்திருப்பதாகவும் இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, எதிர்கால நிலைமைகள் குறித்து விழிப்புடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பருவமழை தற்போது தொடங்கியுள்ளதால், இது தொடர்பாக விழிப்புடன் இருப்பது முக்கியம் என்றும், தற்போதைய நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, செயற்படவேண்டும் என்றும் நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர், நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
https://www.virakesari.lk/article/232841
1 month ago
சிறந்த அறிவிப்பு. நடைமுறைப்படுத்துவார்கள் என நம்புவோம். இப்போது அரச அலுவலகங்களில் பதவி உயர்வு கிடைக்க மூன்று மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் என்ற நடைமுறை இருக்கிறது. தனிச் சிங்கள அறிவிப்புக்களையும் அரசாங்க சுற்று நிரூபங்களையும் பார்க்கும் போது பயங்கரக் கோபம் வருவதுண்டு. சிங்களம் நன்கு தெரிந்திருந்தாலும் வேணுமெண்டு தமிழிலோ ஆங்கிலத்திலோ கதைத்தும் இருக்கிறேன். சிறிலங்கன் விமான சேவையில் தமிழர்கள் அபூர்வம். சில தமிழ் விமானிகள் இருந்தார்கள். குறிப்பாக மட்டக்களப்பிலிருந்து ஒருவர். அழகு தமிழிலே அறிவிப்புக்களை செய்திருக்கிறார். தமிழர்கள் இப்படியான துறைகளை தெரிவு வேண்டும். இல்லாவிட்டால் தமிழை ஆங்கிலத்தில்/சிங்களத்தில் எழுதி வாசிப்பதை நிறுத்த முடியாது.
1 month ago
ம், பெருந்தொகையான பணம், பொருட்கள் குவிகின்றன. கைகள் கடிக்கிறது, நாவில் நீர் ஊறுகிறது, முன்னைய காலமாக இருந்தால் பலமடங்கு ஒவ்வொரு அரசியல் வாதியின் பெயரிலும் வீட்டிலும் சேமிக்கப்பட்டிருக்கும். இப்போ ஒன்றும் செய்யமுடியவில்லை, மக்களுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கிறார். அதைவிட இவரை ஜனாதிபதியாக்க பேரணி செய்த அரசியல் வாதிகள் அனுராவை புகழ்ந்துகொண்டு அவர் பக்கம் நகர ஆரம்பித்து விட்டார்கள். கூப்பாடு போட்டவர்களும் அமைதியடைந்து விட்டார்கள். இந்த நேரத்தில் பாராளுமன்றத்தை கூட்டி என்ன செய்தி சொல்லப்போகிறார்? சந்திரிகா கூட பலநாடுகளின் உதவி வருவதை கண்ட பின், தானும் நிதியளிக்கிறேன் என இரண்டோ, இரண்டரை மில்லியனோ அளித்திருக்கிறார். இருக்க வீடு இல்லை என்று அழுதவர், தனது பெயரும் வரவேண்டும் என் நினைத்துள்ளார் பெரிய விடயம்!
1 month ago
தமிழருக்கு உதவி செய்வதில் அமெரிக்காவுக்குத்தான் எவ்வளவு அவசரம் என்று இதிலிருந்து தெரிகிறது. பெருந்தெருக்கள் வெள்ளத்தினால் பாதிப்படைந்துள்ளது, வாகன வசதியும் தற்போது அவசரமாக இயங்க முடியாத நிலையாக இருக்கலாம். தமிழருக்கு தாமதிக்காமல் அவசரமாக உதவி வழங்க அமெரிக்கா நினைத்து, நிவாரணப்பணிகளை துரிதப்படுத்த தனது இராணுவ வீரர்களையும் அனுப்பியிருக்கிறது. இது புரியாமல் வந்தவர்கள் பலாலியிலிருந்து இராமேஸ்வரம் எத்தனை கிலோ மீற்றர் என விசாரித்தார்கள் என கதை எழுதவும் கூடும்.
1 month ago
ஒரு நியாயமான விடுதலை போராட்டத்தை அடக்கி அழித்த இலங்கை இராணுவத்தை இயற்கை அனர்தங்களின் போது காணக்கிடைக்கவில்லை என்ற கவலை யாருக்கும் இல்லை.
1 month ago
நீங்களும் உங்கள் பங்குக்கு ஆரம்பியுங்கள் போரை. இயற்கையும் அழிக்கட்டும் நீங்களும் அழியுங்கோ!
1 month ago
ஐயோ, இப்படியுமா? நாங்கள் ஒருபுறம் குற்றம் சாட்டுகிறோம், இவர்களோ எங்களுக்கெதிராக பாராட்டு தெரிவிக்கிறார்கள், இவர்களும் அனுராப்பக்கம் அடித்துச்செல்லப்பட்டுவிட்டார்கள். அடித்தது அனுரா அலையென்றால், டித்வா புயலுமா இப்படி அடிக்குது. இது என்ன அநிஞாயம்?
1 month ago
ஒரே மூச்சில் முழுவதையும் வாசித்தேன். நாம் அப்போது கொக்குவில் பகுதியில் வசித்தோம். பிரம்படியில் இந்திய இராணுவம் செய்த படுகொலைகளை தொடர்ந்து உடனடியாக சங்கானைக்கு சென்றுவிட்டோம். பழைய சம்பவங்கள் பல இப்போது நினைவில் இல்லை. உங்கள் பகுதியில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றி இப்போதுதான் அறிகின்றேன். இந்திய இராணுவத்தினர் முல்லைத்தீவில் மனிதாபிமான உதவிகள் செய்வதாக கூறும் செய்தி நேற்று படங்களுடன் வந்தபோது பழைய நினைவுகள் வந்தன.
1 month ago
கூடி.... என்ன சாதிக்கப்போகிறார்கள்? கூடிய பொழுது எல்லோருமாக குற்றஞ்சாட்டி, கூப்பாடு போட்டு வெளியேறினார்கள், இப்போ ஏன் கூடவேண்டுமென்று அவசரம் காட்டுகிறார் இவர்? இப்போ மக்களுக்கு வேண்டியது உதவி. இவர் அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்காணித்து என்ன எதை மாற்றியமைக்கப்போகிறார்? ஓ..... தங்களைப்போல் நிவாரண தொகையை இவர்கள் பதுக்கிவிடுவார்கள் என்று பயப்படுகிறாரோ? கள்ளன் நினைப்பது தன்னைப்போற்தான் மற்றவர்களுமென்று. இவர் அனுராவுக்கு எதிராக ஒரு பேரணி கூட்டினார், அந்தப்பேரணி வெள்ளத்தோடு அனுரா பக்கம் அடியுண்டு போய்விட்டது. ஜனாதிபதி கனவை விட்டு, உழைத்து சாப்பிட முயற்சிக்கவும். உத்தியோகத்திற்கான கல்வித்தகமையுமில்லை, வருந்தியுழைக்க உடல் வளையாது, தந்தை வழி அரசியலும் தேறாது, விதி என்ன செய்ய நினைத்திருக்கிறதோ இவரை. ஆனால் ஒன்று, இவர் அரசியலுக்கு லாயக்கில்லை என்பதையே காலம் நிரூபித்து வருகிறது.
1 month ago
அடடே.... நிவாரணப்பொருட்கள் விமானத்தில் பலாலிக்கே வந்து இறங்கிவிட்டதா? அனுரா சொல்லி அனுப்பியிருப்பாரோ, அல்லது யாரும் தமிழரை நினைக்கமாட்டார்கள் என்று அமெரிக்காவே நினைத்து வந்திறங்கி விட்டதோ என்னவோ? இனி தமிழர் ஓரங்கட்டப்பட்டார்கள் என்கிற குற்றச்சாட்டு எழாது....?
1 month ago
இவர் செம்மணி நிலவரத்தை பார்வையிட சென்ற போது திருப்பி அனுப்பியிருக்கக்கூடாது என்பது என் கருத்து. எதிலும் மயிர் அளவு நுணுக்கம் பார்க்க வெளிக்கிட்டால் ஒரு கவளம் சோறு கூட சாப்பிட முடியாது.
1 month ago
சும்மா ஒரு கதைக்கு..... அனுர ஆட்சிக்கு வந்தவுடன்.... தமிழர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்,எல்லோருக்கும் சம உரிமை என அறிக்கை விட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?
1 month ago
சோவியத் ஒன்றியத்தின் சிதைவிற்கு பின் தனி ரஷ்யா உருவாகியது. அது மேற்குலகிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லாமல் தானும் தன் பாடும் என இயங்கிய நாடு.ஆயுதங்களை கூட தணிக்கை செய்தது. சகல வியாபார,அரசியல்களையும் மேற்குலகுடன் இணைந்தே செயல்பட்டு வந்தது. ஆனாலும் பிரித்து ஆளும் சுவை கொண்ட நரிப்புத்திகளுக்கு பத்தியப்படவில்லை. அதற்கு பதில் தான் உக்ரேனிய யுத்தம். சீனாவை விட ரஷ்யா பரவாயில்லை என அமெரிக்கா இப்போதுதான் புரிந்து கொண்டுள்ளது.இதை நான் யாழ்களத்தில் பலதடவை எழுதியுள்ளேன்.
1 month ago
இலங்கை விடயத்தில் நானே ராஜா நானே ரோஜா என்ற கனவில் மிதக்கும் கிந்தி இதை எதிர்பார்த்திருக்கவே மாட்டுது. செம செருப்படி. இலங்கை தமிழ் பிரதேசங்களில் சீனா அல்லது அமெரிக்க இராச்சியம் நிலை நிற்க வேண்டும் என்பது என் கனவு.வடகிழக்கு பகுதியில் கிந்தியனின் கால் பதிப்பு தமிழர்களின் முதலுக்கே நாசம். இது தமிழ்நாட்டு அரசியல் சித்திரங்களின் அனுபவம்.தடக்கி வீழ்ந்தாலும் டெல்லியை நோக்கி ஓடுகின்றார்கள்.😂 இதையே இன்னும் எத்தனை காலங்களுக்கு சொல்லிக்கொண்டிருக்கப்போகின்றோம்? எம்மினத்திற்கு வரலாற்று துரோகங்கள் நிறையவே உண்டு.அது வரலாறுகளாகவே இருக்கும். அதையாராலும் அழிக்க முடியாது.மறக்கவும் முடியாது.என்றும் நினைவில் வைத்திருப்போம். அது அப்படியே நிற்க.... இன்றைய உலக பூகோள அரசியல் ரீதியில் அடுத்து ஆகவேண்டியதை கவனித்தால் தான் அடுத்த தமிழ் சந்ததி நிம்மதியுடன் வாழ்க்கையை கடத்த முடியும். இன்று நேற்றல்ல....அன்று தொடக்கம் சீனாவால் உள்வாங்கப்பட்ட நாடுதான் இலங்கை. இலங்கை நாட்டில் தமிழினம் இல்லா விட்டால் சீனா என்றோ முழு நாட்டையும் தனது கட்டுப்பாட்டுக்குள் அபிவிருத்தி செய்து வைத்திருக்கும். இதை இன்று சிங்கள பகுதிகளில் தாராளமாக காணலாம்.வேக வீதிகள்,துறைமுக அபிவிருத்திகள் என சீனாவின் கை ஓங்கியே நிற்கின்றது. கிந்தியர்களுக்கு சிங்கள மக்களிடத்தில் பெரு மதிப்பில்லை. கிந்தி பாட்டுக்கள் கேட்பதுடன் சரி.😂 இலங்கை தமிழர்களை வைத்து பிராந்திய அரசியல் லாபம் தேடுவது கிந்திய நரிக்குணம் மட்டுமே வேறொன்றுமில்லை. கிந்தியாவின் அருகில் இருப்பது ஈழத்தமிழனின் துர்ப்பாக்கியம்.கிந்தியா இருக்கும் வரை அமெரிக்காவையோ,ஐரோப்பாவையோ,ரஷ்யாவையோ நொந்து கொள்வதில் எவ்வித பலனும் இல்லை.
1 month ago
நிவாரணப் பொருட்கள் வழங்குதல் மனிதாபிமான நடவடிக்கைகள் என்பன புட்டினுக்கு ஒத்துவராதவை. சூறாவளியின் இலங்கை பாதிப்பை பயன்படுத்தி தனது உக்ரைன் ஆக்கிரமிப்புக்கு பயன்படுத்த இலங்கை ஆட்களை எப்படி தூக்குவது என்று தான் நினைப்பார். எரிகின்ற வீட்டில் இருந்து என்ன பிடுங்கி எடுக்கலாம் என்று சிந்திப்பவர்.