Aggregator

ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்

1 month ago
ஒரே மூச்சில் முழுவதையும் வாசித்தேன். நாம் அப்போது கொக்குவில் பகுதியில் வசித்தோம். பிரம்படியில் இந்திய இராணுவம் செய்த படுகொலைகளை தொடர்ந்து உடனடியாக சங்கானைக்கு சென்றுவிட்டோம். பழைய சம்பவங்கள் பல இப்போது நினைவில் இல்லை. உங்கள் பகுதியில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றி இப்போதுதான் அறிகின்றேன். இந்திய இராணுவத்தினர் முல்லைத்தீவில் மனிதாபிமான உதவிகள் செய்வதாக கூறும் செய்தி நேற்று படங்களுடன் வந்தபோது பழைய நினைவுகள் வந்தன.

நாட்டு மக்கள் துன்பப்படுகிறார்கள் ; அவசரமாக பாராளுமன்றம் கூட வேண்டும் ; பிரதமரிடம் நாமல் கோரிக்கை!

1 month ago
கூடி.... என்ன சாதிக்கப்போகிறார்கள்? கூடிய பொழுது எல்லோருமாக குற்றஞ்சாட்டி, கூப்பாடு போட்டு வெளியேறினார்கள், இப்போ ஏன் கூடவேண்டுமென்று அவசரம் காட்டுகிறார் இவர்? இப்போ மக்களுக்கு வேண்டியது உதவி. இவர் அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்காணித்து என்ன எதை மாற்றியமைக்கப்போகிறார்? ஓ..... தங்களைப்போல் நிவாரண தொகையை இவர்கள் பதுக்கிவிடுவார்கள் என்று பயப்படுகிறாரோ? கள்ளன் நினைப்பது தன்னைப்போற்தான் மற்றவர்களுமென்று. இவர் அனுராவுக்கு எதிராக ஒரு பேரணி கூட்டினார், அந்தப்பேரணி வெள்ளத்தோடு அனுரா பக்கம் அடியுண்டு போய்விட்டது. ஜனாதிபதி கனவை விட்டு, உழைத்து சாப்பிட முயற்சிக்கவும். உத்தியோகத்திற்கான கல்வித்தகமையுமில்லை, வருந்தியுழைக்க உடல் வளையாது, தந்தை வழி அரசியலும் தேறாது, விதி என்ன செய்ய நினைத்திருக்கிறதோ இவரை. ஆனால் ஒன்று, இவர் அரசியலுக்கு லாயக்கில்லை என்பதையே காலம் நிரூபித்து வருகிறது.

நிவாரண பொருட்களுடன் யாழ். பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கியது அமெரிக்க விமானம்

1 month ago
அடடே.... நிவாரணப்பொருட்கள் விமானத்தில் பலாலிக்கே வந்து இறங்கிவிட்டதா? அனுரா சொல்லி அனுப்பியிருப்பாரோ, அல்லது யாரும் தமிழரை நினைக்கமாட்டார்கள் என்று அமெரிக்காவே நினைத்து வந்திறங்கி விட்டதோ என்னவோ? இனி தமிழர் ஓரங்கட்டப்பட்டார்கள் என்கிற குற்றச்சாட்டு எழாது....?

மீண்டும் அணைந்தது அணையா விளக்கு: யாழ். நினைவுத் தூபி மீண்டும் உடைத்து எறியப்பட்டது!

1 month ago
இவர் செம்மணி நிலவரத்தை பார்வையிட சென்ற போது திருப்பி அனுப்பியிருக்கக்கூடாது என்பது என் கருத்து. எதிலும் மயிர் அளவு நுணுக்கம் பார்க்க வெளிக்கிட்டால் ஒரு கவளம் சோறு கூட சாப்பிட முடியாது.

அரச அறிவிப்புகள் அனைத்தும் மும்மொழிகளிலும் கட்டாயம் - அதிரடி அறிவிப்பு

1 month ago
சும்மா ஒரு கதைக்கு..... அனுர ஆட்சிக்கு வந்தவுடன்.... தமிழர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்,எல்லோருக்கும் சம உரிமை என அறிக்கை விட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

1 month ago
சோவியத் ஒன்றியத்தின் சிதைவிற்கு பின் தனி ரஷ்யா உருவாகியது. அது மேற்குலகிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லாமல் தானும் தன் பாடும் என இயங்கிய நாடு.ஆயுதங்களை கூட தணிக்கை செய்தது. சகல வியாபார,அரசியல்களையும் மேற்குலகுடன் இணைந்தே செயல்பட்டு வந்தது. ஆனாலும் பிரித்து ஆளும் சுவை கொண்ட நரிப்புத்திகளுக்கு பத்தியப்படவில்லை. அதற்கு பதில் தான் உக்ரேனிய யுத்தம். சீனாவை விட ரஷ்யா பரவாயில்லை என அமெரிக்கா இப்போதுதான் புரிந்து கொண்டுள்ளது.இதை நான் யாழ்களத்தில் பலதடவை எழுதியுள்ளேன்.

நிவாரண பொருட்களுடன் யாழ். பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கியது அமெரிக்க விமானம்

1 month ago
இலங்கை விடயத்தில் நானே ராஜா நானே ரோஜா என்ற கனவில் மிதக்கும் கிந்தி இதை எதிர்பார்த்திருக்கவே மாட்டுது. செம செருப்படி. இலங்கை தமிழ் பிரதேசங்களில் சீனா அல்லது அமெரிக்க இராச்சியம் நிலை நிற்க வேண்டும் என்பது என் கனவு.வடகிழக்கு பகுதியில் கிந்தியனின் கால் பதிப்பு தமிழர்களின் முதலுக்கே நாசம். இது தமிழ்நாட்டு அரசியல் சித்திரங்களின் அனுபவம்.தடக்கி வீழ்ந்தாலும் டெல்லியை நோக்கி ஓடுகின்றார்கள்.😂 இதையே இன்னும் எத்தனை காலங்களுக்கு சொல்லிக்கொண்டிருக்கப்போகின்றோம்? எம்மினத்திற்கு வரலாற்று துரோகங்கள் நிறையவே உண்டு.அது வரலாறுகளாகவே இருக்கும். அதையாராலும் அழிக்க முடியாது.மறக்கவும் முடியாது.என்றும் நினைவில் வைத்திருப்போம். அது அப்படியே நிற்க.... இன்றைய உலக பூகோள அரசியல் ரீதியில் அடுத்து ஆகவேண்டியதை கவனித்தால் தான் அடுத்த தமிழ் சந்ததி நிம்மதியுடன் வாழ்க்கையை கடத்த முடியும். இன்று நேற்றல்ல....அன்று தொடக்கம் சீனாவால் உள்வாங்கப்பட்ட நாடுதான் இலங்கை. இலங்கை நாட்டில் தமிழினம் இல்லா விட்டால் சீனா என்றோ முழு நாட்டையும் தனது கட்டுப்பாட்டுக்குள் அபிவிருத்தி செய்து வைத்திருக்கும். இதை இன்று சிங்கள பகுதிகளில் தாராளமாக காணலாம்.வேக வீதிகள்,துறைமுக அபிவிருத்திகள் என சீனாவின் கை ஓங்கியே நிற்கின்றது. கிந்தியர்களுக்கு சிங்கள மக்களிடத்தில் பெரு மதிப்பில்லை. கிந்தி பாட்டுக்கள் கேட்பதுடன் சரி.😂 இலங்கை தமிழர்களை வைத்து பிராந்திய அரசியல் லாபம் தேடுவது கிந்திய நரிக்குணம் மட்டுமே வேறொன்றுமில்லை. கிந்தியாவின் அருகில் இருப்பது ஈழத்தமிழனின் துர்ப்பாக்கியம்.கிந்தியா இருக்கும் வரை அமெரிக்காவையோ,ஐரோப்பாவையோ,ரஷ்யாவையோ நொந்து கொள்வதில் எவ்வித பலனும் இல்லை.

நிவாரண பொருட்களுடன் யாழ். பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கியது அமெரிக்க விமானம்

1 month ago
நிவாரணப் பொருட்கள் வழங்குதல் மனிதாபிமான நடவடிக்கைகள் என்பன புட்டினுக்கு ஒத்துவராதவை. சூறாவளியின் இலங்கை பாதிப்பை பயன்படுத்தி தனது உக்ரைன் ஆக்கிரமிப்புக்கு பயன்படுத்த இலங்கை ஆட்களை எப்படி தூக்குவது என்று தான் நினைப்பார். எரிகின்ற வீட்டில் இருந்து என்ன பிடுங்கி எடுக்கலாம் என்று சிந்திப்பவர்.

அம்மனும் அமிர்தமும் (நாடகம்)

1 month ago
மிக்க நன்றி வில்லவன். ஒரு 'காமடி டிராமா' எழுதித் தாருங்கோ என்று தான் இங்கு நான் இருக்கும் இடத்தில் என்னைக் கேட்பார்கள். இந்த நாடகத்தையும் அப்படித்தான் எழுதினேன். ஆனால் அப்பொழுது எழுதி முடித்த போது, பல வருடங்களின் முன், நான் சிரிக்கவில்லை, கண்களை துடைத்துக் கொண்டே இருந்தேன். பின்னர் இன்று இங்கு களத்தில் கடைசிக் காட்சியை மீண்டும் எழுதிய போதும், காலையிலேயே, கண்கள் கலங்கிக் கொண்டேயிருந்தன................ இனி எங்கு காண்பமோ................ மிக்க நன்றி கவிஞரே. பிறப்பெடுக்கும் எல்லா உயிர்களினதும் ஒரே நோக்கம் தங்கள் சந்ததியை உருவாக்குதலே என்று சொல்லப்படுகின்றது. மரம் செடி கொடிகள் கூட. 'உருண்டு........' என்று அதையே சுட்டியிருந்தேன். ஆணும், பெண்ணும் இணைவது என்பதன் ஒரு வடிவம்...................

அம்மனும் அமிர்தமும் (நாடகம்)

1 month ago
நல்லதொரு நாடகம். மேடையில் நடிக்கும் போது பார்த்தால் இன்னும் நன்றாக இருக்கும். “உண்டு, உருண்டு, உறங்கி..” என்று எழுதியிருந்தீர்கள். இதில் ‘உருண்டு’ ஏன் வருகிறது? அம்மனுக்கும் கஞ்சத்தனம். போகிறபோது அமிர்தத்துக்கு ஏதாவது குடுத்திருக்கலாம். ஆக மொத்தத்தில் இவர் மூக்குத்தி அம்மன் இல்லை😊

அம்மனும் அமிர்தமும் (நாடகம்)

1 month ago
மிக அருமையாக இருந்தது @ரசோதரன் அண்ணை. ஏனோ தெரியல்லை, இந்த வரியை வாசிக்கும் போது எனது அம்மாவை நினைத்துக் கொண்டேன் கண்களில் நீர் துளிர்த்தது. நன்றி.

நிவாரண பொருட்களுடன் யாழ். பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கியது அமெரிக்க விமானம்

1 month ago
அமெரிக்காவின் சி - 130 சிறிய ஓடுபாதையிலேயே இறங்கி ஏறும் ஆற்றல் உள்ளது. அதனாலேயே அமெரிக்கா இந்த விமானத்தை பலாலி விமான நிலைய ஓடுபாதையில் இறக்கி ஏற்றக் கூடியதாக இருக்கின்றது. 2000 தொடக்கம் 3000 அடிகள் வரை நீளமான, ஒழுங்காக செப்பனிடப்படாத ஓடுபாதையிலேயே இந்த விமானம் இறங்கி ஏறும். பொதுவாக பெரிய பயணிகள் விமானம் ஏறி இறங்குவதற்கு 5000 அடிகள் அல்லது அதற்கு மேலான மிகச் சிறப்பான ஓடுபாதைகள் தேவையாக இருக்கின்றது. இந்தியா விமானப்படையிடம் சி - 130 இருக்கின்றது. ஆனாலும் அதை அவர்கள் இலங்கைக்கான மீட்பு நடவடிக்கைகளில் இன்னமும் உபயோகிக்கவில்லை என்று நினைக்கின்றேன். சி - 130 க்கு சமனான ரஷ்ய தயாரிப்பு விமானங்களும் உண்டு. அன்டனோவ் - 12. ஆனாலும் ரஷ்யா இலங்கைக்கு இன்னமும் எதையும் அனுப்பவில்லை.

நிவாரண பொருட்களுடன் யாழ். பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கியது அமெரிக்க விமானம்

1 month ago
தமிழீழத்தை வேட்டையாடிய இரண்டுமே ஓநாய்கள். ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல. அமெரிக்காவும் இணைந்தே எம்மை அழிந்தன. எமது தாயகனின் நிருவாகத்தை அழத்துவிட்டு சிங்களத்தை காத்தவாறு தமிழித்துக்கு உதவுவதாக நாடகம் போடுவதன் நோக்கம் தமிழர்கள் மீதான அக்கறையல்ல. சீனாவால் உள்வாங்கப்பட்ட சிறிலங்காவைவிட தமிழர்கள் எதற்கும் இசைவாக்கம் அடையும் இயல்புடையோரான தமிழரைக் கையாள்வது இலகுவானதென்பதை அமெரிக்கா அறியாதிருக்குமா? ஆனாலென்ன தமிழரால் துரத்தப்பட்டோர் போய் இருப்பதையும் விற்காமிலிருந்தால் சிறப்பு.

நிவாரண பொருட்களுடன் யாழ். பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கியது அமெரிக்க விமானம்

1 month ago
சிறிய விமானங்களைத் தவிர வேறு விமானங்கள் பலாலியில் இறங்க முடியாது என்று இந்தியா இதுவரை சொன்னதெல்லாம் பொய்யா கோப்பாலு.

ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்

1 month ago
அன்றிரவு முழுதும் நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல்களில் யாழ்நகர், குருநகர், பாசையூர், சின்னக்கடை, கொழும்புத்துறை, சுண்டுக்குளி ஆகிய பகுதிகளில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். இதில் வேதனை என்னவென்றால் அப்பகுதியெங்கிலும் புலிகளையோ அல்லது அவர்களது முகாம்களையோ நாம் காணவில்லை என்பதுதான். பழைய பூங்கா பகுதியில் அமைந்திருந்தத் புலிகளின் பயிற்சிமுகாமும் அன்றைய நாட்களில் இயங்கியிருக்க வாய்ப்பில்லை. அப்படியிருந்தபோதிலும், சனநெரிசல் மிகவும் அதிகமான அப்பகுதி மீது மிகவும் கண்மூடித்தனமான முறையில் செல்த்தாக்குதலை இந்தியாவின் சாத்தான்படை சகட்டுமேனிக்கு நடத்திக்கொண்டிருந்தது. நாம் பாசையூரில் அடைக்கலமாயிருந்த சில நாட்களில் யாழ்நகரினை இந்தியப் படை ஆக்கிரமித்துக்கொண்டது. வீதிகளில் ரோந்துவரும் இந்திய ராணுவத்தினை தூரத்திலேயே ஊர் நாய்கள் காட்டிக் கொடுத்துவிட சனமெல்லாம் வீடுகளுக்குள் அடைந்துவிடும். இந்திய ராணுவத்தின் பிரசன்னம் வீதியில் இருப்பது தெரியாது வீடுகளுக்கு வெளியே வந்தவர்கள் சிலர் வீதிகளிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பல மணிநேரமாக வீதிகளில் கிடந்த உடல்களை இந்திய ராணுவம் சென்றபின்னர் ஊரில் இருப்பவர்கள் எடுத்துவந்து அடக்கம் செய்தார்கள். சில சடலங்களின் மேலால் இந்திய ராணுவ வாகனங்கள் ஏறிச்சென்ற‌ அடையாளங்களும் காணப்பட்டன. சுமார் ஒன்று அல்லது ஒன்றரை மாத காலம் பாசையூரில் இருந்திருப்போம், கோண்டாவில், இருபாலை ஆகிய பகுதிகளில் மக்கள் தமது வீடுகளுக்குச் சென்று தேவையான பொருட்களை எடுத்து வர இந்திய ராணுவம் அனுமதியளித்திருக்கிறது என்று யாரோ சொன்னார்கள். ஆகவே பாசையூரில் நாம் தங்கியிருந்த வீட்டில் ஒரு சைக்கிளை கேட்டு எடுத்துக்கொண்டு கோண்டாவிலுக்குச் செல்லலாம் என்று தந்தையார் சொல்லவே, நானும் ஆம் என்றேன். பலாலி வீதியால் செல்லாதீர்கள். தின்னைவேலியில் இன்னும் சண்டை நடக்கிறதாம். பிரதான வீதிகளைத் தவிர்த்துவிடுங்கள் என்று ஆளாளுக்கு அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார்கள். அவர்கள் கூறியவாறே குச்சொழுங்கைகளுக்கூடாக‌ எமது பயணத்தை ஆரம்பித்தோம். பின்னர் ஆலய வீதி வழியே சென்று தின்னைவேலியில் ஆடியபாதம் வீதி, பாற்பண்ணை, மாதிரிக்கிராமம் என்று முழுவதுமாக உள் வீதிகளுக்கூடாக‌ நுழைந்து கோண்டாவில்ச் சந்திக்கும், பாமர்ஸ் ஸ்கூல் (கமல நல சேவைகள் நிலையம்) அமைந்திருந்த பகுதிக்கும் இடைப்ப்ட்ட பகுதியில், பலாலி வீதி கண்ணுக்குத் தென்படும் தூரத்தில் நாம் வந்தபோது, கோண்டாவில்ச் சந்தியில் இருந்து தின்னைவேலி நோக்கி இந்திய ராணுவத்தின் வாகனத் தொடரணி போய்க்கொண்டிருந்தது. வீதியின் இடதுபுறத்தில், சுமார் 50 மீட்டர்கள் தொலைவில் நின்றிருந்த எம்மைக் கண்டதும் வாகனத் தொடரணியை நிறுத்திவிட்டு துப்பாக்கிகளை நீட்டியவாறு பாய்ந்து வந்தது இந்திய ராணுவம். எனது கையில் ஒரு ஷொப்பிங் பை நிறைய தேசிக்காய்கள், வழியில் வரும்போது யாரோ ஒருவருடைய மரத்தில் பிடுங்கி எடுத்துக்கொண்டது. அப்பகுதியெங்கும் பற்றைக்காடுகளாய் மூடி வளர்ந்திருக்க, எம்மைக் கொன்றாலும் எவருக்குமே தெரியப்போவதில்லை என்று உணர்ந்துகொண்ட நாம், இந்திய ராணுவம் கட்டளையிட்டவாறே நிலத்தில் விழுந்து படுத்துக்கொண்டோம். எம்மைச் சுற்றிவளைத்த அவர்கள், "நீங்கள் புலிகளா, இங்கு ஏன் வந்தீர்கள், எங்கே போகிறீர்கள்?" என்று சரமாரியாக கேள்விகளை அடுக்கிக் கொண்டு போனார்கள். "நாம் புலிகள் இல்லை, பொதுமக்கள், எமது வீடுகளைப் பார்க்க வந்திருக்கிறோம்" என்று தந்தையார் கூறவும், எனது பக்கம் திரும்பி, "பையில் என்ன வைத்திருக்கிறாய்?" என்று ஒருவன் ஆங்கிலத்தில் கேட்டான். தேசிக்காய் என்று நான் கூறவும், அதனை நம்பாது பையைப் பறித்து நோட்ட‌மிட்டான். பின்னர் எங்கள் இருவரையும் இழுத்துக்கொண்ம்டு பலாலி வீதிக்கு வந்தார்கள். வீதியின் நீளத்திற்குக் காப்பரண்களும், இந்திய ராணுவ வாகனங்களும் தென்பட்டன. கோண்டாவில்ச் சந்திப்பகுதியில், வீதியினை மறித்து பாரிய ராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. எம்மை அங்கு கொண்டு சென்றார்கள். நிலத்தில் இருத்திவைக்கப்பட்ட எம்மை அவர்களின் அதிகாரியொருவன் வந்து பார்த்தான். ஆங்கிலத்தில் தந்தையாருடன் பேச்சுக்கொடுக்கவே, தன்னை மீளவும் தபால் அதிபர் என்று அவர் கூறியபோது, "என்னை ஞாபகம் இருக்கிறதா?" என்று அவர் கேட்டான். எமது வீட்டிற்கு வந்து, எம்மை வெளியே இழுத்துவந்து தாக்கிய அதே அதிகாரிதான் அவன். "உங்களின் புலிகள் எங்களில் பலரைக் கொன்றுவிட்டார்கள், நாம் அவர்களை விடப்போவதில்லை, அழித்தே தீருவோம்' என்று கர்வத்துடன் கூறிவிட்டு, "ஏன் இங்கே வந்தீர்கள்? இன்னமும் உங்களது வீட்டுப்பகுதியில் சண்டை நடக்கிறது, நீங்கள் அங்கு போகமுடியாது" என்று அவன் கூறினான். "வீட்டில் சமைப்பதற்குக் கூடப் பாத்திரங்கள் இல்லை, எமது சைக்கிள்களும் எமக்குத் தேவை. வீட்டிலிருந்து சில தேங்காய்களையும், மரக்கறிகளையும் எடுத்துவரத்தான் வந்திருக்கிறோம். ஒரு 30 நிமிடத்திற்குள் முடித்துவிட்டுக் கிளம்பிவிடுவோம்" என்று தந்தையார் மன்றாட்டமாகக் கேட்கவும், "நாம் உங்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, சண்டையில் அகப்பட்டு வீணாகச் சாகப்போகிறீர்கள், உங்கள் விருப்பம்" என்று கூறிவிட்டு, எமது வீடு அமைந்திருந்த ஒழுங்கை வரை எம்மை அழைத்துச் செல்லுமாறு ஒரு ராணுவ வீரனைப் பணித்தான். அவன் எங்களை அங்கு அழைத்துச் செல்லும்போது அப்பகுதியெங்கும் நிலையெடுத்திருந்த ஏனைய இந்திய ராணுவத்தினர் ஏதோ ஜந்துக்களைப் பார்ப்பது போன்று பார்த்துக்கொண்டார்கள்.

அம்மனும் அமிர்தமும் (நாடகம்)

1 month ago
காட்சி 5 (தட்சணாமூர்த்தியும் பார்வதியும் கதைத்துக்கொண்டிடுக்கிறார்கள்.) தட்சணாமூர்த்தி: அமிர்தத்தின்ரை போக்கே வரவர சரியில்லை. பார்வதியோட எல்லோரும் நல்லா பழகிறது பிடிக்கவில்லை போல தெரியுது. அதிலயும் தப்பு இல்லை............. அமிர்தத்திற்கு இந்த வீடுதான் உலகம். அவளை விட வேற ஒருவரை எல்லோருக்கும் பிடிக்கும் என்றால் தாங்க முடியாதுதான்........................ பார்வதி: ஓம் அப்பா, நானும் அதைக் கவனிச்சனான். அம்மா முந்தி மாதிரி இல்லை, கொஞ்சம் குழம்பின மாதிரி இருக்கிறா. தட்சணாமூர்த்தி: (சிரிக்கிறார்) என்ன பிள்ளை, அம்மாவிற்கு மெதுவா தட்டி விட்டுதென்று சொல்லிறாய்............... எங்க ஆளைக் காணவில்லை? பார்வதி: அம்மாவும் பெரியம்மாவும் கோயிலுக்கு போட்டினம். கோயில்ல இன்றைக்கு அம்மனுக்கு ஏதோ விசேசமாம், அம்மாதான் விடாப்பிடியா பெரியம்மாவை கூட்டிக்கொண்டு போனவா. அம்மாவிற்கு பெரியம்மாவில சரியான விருப்பம், ஆனால் நாங்கள் பெரியம்மாவோட அடுகிடைபடுகிடையாக இருக்கிறதுதான் பிடிக்கவில்லை. தட்சணாமூர்த்தி: அதுதான் பிள்ளை. அந்த பாரதத்தின்ட முகத்தைப் சில நேரத்தில பார்த்தால், சாட்சாத் அம்மனே குடி வந்த மாதிரி இருக்குது. பாரதத்தை முந்தி பார்த்த மாதிரி ஞாபகம் ஒன்றும் இல்லை................... பார்வதி: நீங்கள் மறந்துவிட்டியள், அப்பா. பெரியம்மா உங்கட கல்யாண வீட்டில நடந்த எல்லா விசயங்களையும் அப்படியே சொல்லுகிறா. பழைய கதை எல்லாவற்றையும் இப்ப நடந்தது மாதிரி சொல்லுகிறா................. தட்சணாமூர்த்தி: ஓமடி பிள்ளை, வயசும் போகுதுதானே, ஆனால் நான் எதையும் மறக்கிற ஆளில்லை. இப்ப இதுவா முக்கியம், எப்படி அமிர்தத்தை சமாதானப்படுத்திறதென்று பார்ப்பம்................. (அமிர்தமும் பாரதமும் கோயிலிலிருந்து வருகிறார்கள்.) அமிர்தம்: அப்பப்பா, என்ன வெயில், சித்திரை பிறந்தாலே சுட்டெரிக்குது காண்டாவனம்........... பாரதம்: அதுக்கும் கடவுளுக்குத் தான் பேச்சு.......... என்ன மனிதர், இயற்கையாக நடக்கிற விசயங்கள் நடக்கத்தானே வேண்டும். ஆயிரம் ஆயிரம் கோடி உயிரினத்தில ஒரு உயிரினம் தான் மானிடர். எல்லா நிகழ்வும் மனிதருக்கு மட்டுமே வசதியாக இருக்கவேணுமா..................... தட்சணாமூர்த்தி: என்ன பிள்ளை........... என்றைக்கும் இல்லாம இன்றைக்கு கோயிலுக்கு போயிட்டு சலிச்சு போய் வந்திருக்கிறா............ அமிர்தம்: கோயிலுக்கு போய்விட்டு வாற வழியில, சனங்களின்ர பேச்சைக் கேட்டு பார்வதம் மனம் நொந்து போய்விட்டாள். ஒரே வெயில், மழையே இல்லை நிறைய நாளா, அம்மை வருத்தம், அது இது என்று சனத்தின்da பிரச்சனைக்கு பாரதம் தான் காரணம் என்று சனம் ஒரே திட்டு.............. பார்வதி: யார் திட்டினது பெரியம்மாவை? பெரியம்மா என்ன கடவுளோ இவையினர கஷ்டங்களை எல்லாம் தீர்த்து வைக்கிறதுக்கு............. யார் திட்டினது என்று சொல்லுங்கோ, நான் போய் நல்லா நாலு கேட்டிட்டு வாறன்................. அமிர்தம்: வாய் தடுமாறிட்டுது. பாரதத்தை சனம் ஏன் திட்டுது, கோயிலுக்குள்ள இருக்கிற கடவுளைத் தான் காரணம் என்று சொல்லுது. அதுதான் பாரதத்திற்கு ஒரே கவலையா போயிட்டுது. தட்சணாமூர்த்தி: இதுக்குப் போய் நீ ஏன் பிள்ளை கவலைப்படுகிறாய்? சனம் அப்படித்தானே, படைக்கிறதும் அவனே, காக்குறதும் அவனே, அழிக்கிறதும் அவனே, எல்லாமே அவன் தான். நல்லது நடந்தால் போற்றிவினம், பிடிக்காதது நடந்தால் மாறிவிடுவினம். இதுகளையெல்லாம் காதில வாங்கிக் கொள்ளாதே பிள்ளை............. பாரதம்: அப்படி என்னவென்று விட்டிட்டு இருக்கிறது? எவ்வளவு ஜீவராசிகள் தோன்றி மறைந்து கொண்டிருக்கின்றன. எதுவுமே யாரையும் எதற்கும் குற்றம் சொல்வதில்லை, மனிதர் மட்டும் சகமனிதரையோ, இயற்கையையோ இல்லாவிட்டால் கடவுளையோ தேடி பழிசுமத்துகிறார்கள். தீதோ நன்றோ, இதுதான் வாழ்க்கை என்று வாழ்ந்து விட்டுப் போறதுதானே? பார்வதி: இல்லை பெரியம்மா, ஒரே ஒரு வாழ்க்கை தான், அதை எப்படி அப்படி சாதரணமா சொல்லிறியள்........... எல்லோரும் ஏதோ முடிஞ்சளவு நல்லா, வசதியா வாழத்தான் விரும்பிவினம். மனிதர் மட்டும்தான் சிந்திக்கினம், மற்ற உயிர்கள் சிந்திக்கிறது இல்லை தானே.................. அமிர்தம்: ஏய் பார்வதி, பெரியவர்களுடன் அப்படி கதைக்ககூடாது.................. பார்வதி: நான் என்ரை பெரியம்மாவோட தானே கதைக்கிறன், நீங்கள் ஏதோ மூன்றாம் ஆளிடம் நான் கதைக்கிற மாதிரி சொல்லிறியள். பாரதம்: அமிர்தம், நீ சும்மா இரு. பிள்ளை என்னோட தானே கதைக்கிறாள். அவள் தனக்கு சரியென்று பட்டதை சொல்லுகிறாள். பார்வதி, மனிதருக்கு மட்டும் சிந்திக்கின்ற இயல்பை கொடுத்ததிற்கு ஒரு காரணம் இருக்கும், ஆனால் அது நிச்சயமாக மற்ற உயிர்களை அழித்து வாழவோ அல்லது பழித்தும், பழி சுமத்தியும் வாழவோ இருக்காது. தட்சணாமூர்த்தி: சரி, சரி இதை விடுங்கோ. மற்றவர்களுக்காக நாங்கள் ஏன் சண்டை போடவேணும்.............. பார்வதி, அந்த புத்தகத்தை எடுத்து தா ஒருக்கால், நான் கொண்டு போய் அதைக் கொடுத்துவிட்டு வருகிறேன். (தட்சணாமூர்த்தியும் பார்வதியும் செல்கிறார்கள். அவர்கள் சென்ற பின்) அமிர்தம்: (பாரதத்தை நோக்கி) தாயே, நான் ஆரம்பத்திலயே சொன்னனான் தானே. மனிதருக்குள் எல்லாம் இருக்குது, சந்தர்ப்பம் கிடைத்தால் அது அது வெளியில வரும். இந்த அற்ப மனிதரை பார்த்து நீங்கள் பதறலாமோ................. இது எல்லாம் உண்டு, உருண்டு, உறங்கி அழிந்து போகிற ஒரு சாதாரண பிறவிதான்......... பாரதம்: நீ சொல்வது முற்றிலும் சரியே அமிர்தம். அவரவர் அனுபவிப்பது அவை அவை செய்தவையே, மழை இல்லாமல் போனது ஏன் என்றால் மனிதன் மழையை அழித்து விட்டான். இது தெரியாமல் கழுதைக்கு கல்யாணம் முடித்து வைத்தால், மழை வருமா........... அமிர்தம், நான் திரும்பிப் போகிற நேரம் வந்துவிட்டது. அமிர்தம்: தாயே, நான் ஒரு மிகச்சாதாரண மனிதப் பிறவி. நான் எதும் தவறு செய்திருந்தால்…. பாரதம்: உன்னை அறிந்துதான் நான் விரும்பி வந்தேன். நீ என்றும் என் விருப்பத்துக்குரியவள். என்றும் என்னுடனேயே இருப்பாய்................ (முற்றிலும் இருட்டாகின்றது.) (அமிர்தம் மட்டும் தனித்து நிற்கிறார்.) (தட்சணாமூர்த்தியும் வருகின்றார்.) தட்சணாமூர்த்தி: என்ன, கோயிலுக்கு போய் வந்தனி, இன்னும் சீலைகூட மாத்தாமல் அப்படியே நிற்கிறாய்? பாரதம் எங்கே? (அமிர்தம் ஒன்றும் பேசாமல் நிற்கிறார்.) தட்சணாமூர்த்தி: ஏனப்பா, பாரதம் எங்கே.......... அமிர்தம்: அவ போயிட்டா.............. தட்சணாமூர்த்தி: எங்க போயிட்டா? அமிர்தம்: எங்கேயிருந்து வந்தாவோ அங்கேயே போயிட்டா.............. தட்சணாமூர்த்தி: இப்ப எப்படி போனா…..ஒன்றுமே விளங்கவில்லை. அமிர்தம், பாரதம் உண்மையில யார்? அமிர்தம்: பாரதம் என்னுடை பெரியம்மா மகள் தான். தட்சணாமூர்த்தி: உனக்கு உண்மையில ஒரு பெரியம்மா இல்லை என்ற எனக்கு தெரியும் அமிர்தம். அமிர்தம்: ஆ............. தலைய சுத்துதே............ யாராவது ஓடி வாங்கோவன்.............. (எல்லோரும் ஒடி வருகிறார்கள்.) (முற்றும்.)

ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்

1 month ago
சுமார் நான்கு அல்லது ஐந்து மணித்தியாலங்கள் கிறீஸ்த்து ராசா கோயிலில் தங்கியிருந்தோம். செல்த்தாக்குதல் மெது மெதுவாக குறையத் தொடங்கியது. அதிகாலை 4 மணியளவில் மீளவும் கொய்யத்தோட்டத்தில் அமைந்திருந்த வீட்டிற்கு வந்தோம். ஆனால் வழமைபோல மறு நாள் மாலையும் செல்த்தாக்குதல்கள் ஆரம்பித்தன. அதே கொடூரமான, இடைவிடாத தாக்குதல்கள். பாசையூர் அந்தோணியார் ஆலயத்தை அகதிகள் முகாமாக அறிவித்திருக்கிறார்கள். இந்திய இராணுவம் அப்பகுதி மீது தாம் தாக்குதல் நடத்தப்போவதில்லை என்று உறுதியளித்திருக்கிறது. ஆகவே அங்கே போகலாம் என்று யாரோ சொன்னார்கள். ஆகவே இரவு 8 மணியளவில் சில உடுதுணிகளை எடுத்துக்கொண்டு பாசையூர் நோக்கிச் சென்றோம். எதிர்பார்த்ததுபோலவே அப்பகுதியெங்கும் சனக்கூட்டம். கோயிலின் உட்பகுதிக்குச் செல்ல முடியவில்லை, முற்றாக மக்களால் நிரம்பி வழிந்தது. ஆகவே ஆலய முன்றலில், கொடிக்கம்பத்தைச் சுற்றியிருந்த மணற்றரையில் அமர்ந்திருந்த பல நூற்றுக்கணக்கான மக்களுடன் நாமும் அமர்ந்துகொண்டோம். பாய்கள், படுக்கை விரிப்புக்கள் என்று கைகளில் அகப்பட்டதை மணலில் விரித்து குடும்பம் குடும்பமாக மக்கள் அமர்ந்திருந்தார்கள். யாழ்நகர் நோக்கி முன்னேறிவரும் இந்திய ராணுவம் அப்பகுதி நோக்கிக் கடுமையான செல்த்தாக்குதலைனை நடத்திக்கொண்ன்டிருந்தவேளை, கடலில் இருந்து கரையோரப் பகுதிகள் மீது கடுமையான பீரங்கித் தாக்குதலினை இலங்கை கடற்படை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக குருநகர், பாசையூர், கொழும்புத்துறை ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த குடியிருப்புக்களை இலக்குவைத்தே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பாசையூர் அந்தோணியார் ஆலயத்தில் அகதிகள் தஞ்சமடைந்திருப்பது இலங்கைக் கடற்படைக்குத் தெரியுமாதலால், அப்பகுதி இலக்குவைக்கப்படலாம் என்று பலர் கருதினர். ஆகவே சில குடும்பங்கள் அங்கிருந்து வேறு பகுதிநோக்கி கிளம்பிச் செல்ல ஆரம்பித்தன. தொடர்ச்சியாகப் பெய்துகொண்டிருந்த மழை, ஆலயமும் இலக்குவைக்கப்படலாம் என்கிற அச்சம் ஆகியவை எம்மை ஆட்கொள்ள நாமும் ஆலயத்திலிருந்துந்து புறப்பட்டு கொழும்புத்துறை நோக்கிச் செல்லும் வீதியில் ஒரு வீட்டில் அடைக்கலமானோம். அவ்வீட்டில் வசிப்பவர்கள், அன்றிரவு அங்கு வந்து அடைக்கலமானவர்கள் என்று சுமார் 30 அல்லது 40 வரையான மக்கள் அன்றிரவு அங்கு அச்சத்துடன் அமர்ந்திருந்தோம். செல்த்தாக்குதல் மீளவும் ஆரம்பமானது. ஒவ்வொரு இரவும் நடத்தப்படும் இத்தாக்குதல்களில் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டார்கள். அன்றிரவும் அப்படித்தான். அப்பகுதியெங்கும் பல வீடுகள் செல்பட்டு உடைந்து நொறுங்குவது எமக்குக் கேட்டது. பாசையூர் அந்தோணியார் ஆலயத்திலிருந்து ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்திலேயே நாம் அடைக்கலமாகியிருந்த வீடு அமைந்திருந்தது. இரவு 10 அல்லது 11 மணியிருக்கலாம், ஆலயப்பகுதியினை இலக்கு வைத்து கடுமையான தாக்குதலினை இந்திய ராணுவமும், இலங்கைக் கடற்படையும் நடத்தின. ஆலய முன்றலில் வீழ்ந்து வெடித்த செல்களினால் அங்கிருந்த பலர் துடிதுடித்து இறந்து போனார்கள். குறைந்தது 30 பேராவது கொல்லப்பட்டிருக்கலாம், பலர் காயப்பட்டார்கள் என்று அங்கிருந்து வெளியே ஓடிவந்தவர்கள் கூறியபோது, சில மணிநேரத்திற்கு முன்னர் நாம் அமர்ந்திருந்த இடமே தாக்குதலுக்கு உள்ளானது என்று அறிந்தபோது நாம் அச்சத்தில் உறைந்துபோனோம்.