Aggregator

மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு

1 month 1 week ago
காற்றாலை மின் உற்பத்தியினால் அப்படி என்ன சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் ஏற்படுகின்றது என்பதை மன்னார் மக்களும் , மாக்கஸ் அடிகளாரும் யாழ்களத்தில் விளங்கபடுத்த வேண்டும் குறைந்தபட்ச CO2 வை உருவாக்கும் காற்றாலை மின்சாரத்தின் பங்கு மேற்குலகநாடுகளில் மின்சார உற்பத்தியில் அதிகமாக அதிகரித்து வருகிறது.

‘நாம் மாற்று சக்தி இல்லை; நாமே முதன்மை சக்தி’ – மதுரை மாநாட்டுக்கு விஜய் அழைப்பு

1 month 1 week ago

‘நாம் மாற்று சக்தி இல்லை; நாமே முதன்மை சக்தி’ – மதுரை மாநாட்டுக்கு விஜய் அழைப்பு

August 12, 2025 12:57 pm

‘நாம் மாற்று சக்தி இல்லை; நாமே முதன்மை சக்தி’ – மதுரை மாநாட்டுக்கு விஜய் அழைப்பு

‘மதுரையில் நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சியை நிறுவுவதே நம்ம குறிக்கோள். மாற்று சக்தி நாமன்று, முதன்மை சக்தி நாம் என்பதை உலகுக்கு மீண்டும் உணர்த்துவோம்’ என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம். நம்மோட அரசியல் பயணத்தில் அடுத்தடுத்த கட்டங்களைத் தாண்டி வர்றோம். இடையில எத்தனை சவால்கள், நெருக்கடிகள் வந்தாலும் எல்லாத்தையும் மக்கள் சக்தியோட அதாவது உங்க ஆதரவால கடவுளோட அருளாள கடந்து வந்துகிட்டே இருக்கோம்.

வர 2026 சட்டமன்ற தேர்தலுக்கு நாம முழு பேச்சில் தயாராகிட்டு வர்றோம். இந்த சூழலில் நம்முடைய இரண்டாவது மாநில மாநாட்ட ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரை பாரப்பத்தியில நாம நடத்த இருக்கிறது உங்க எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

முத்தமிழையும் சங்கம் வச்சு வளர்த்த மதுரையில, நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து நின்னு, ஜனநாயகப் போரில் அவங்கள வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சியை நிறுவுவதே நம்ம குறிக்கோள் என்ற நிலைப்பாட்டை உறுதி செய்வதுதான் இந்த மாநாடு.

அதனாலதான் வைகை மண்ணில் நடக்கும் இந்த மாநாடு, ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது: வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்ற தேர்தல் அரசியல் மையக்கருத்த முன்வச்சி நடக்க இருக்குதுன்னு உங்களோட பகிர்ந்து கொள்வதில் ரொம்ப மகிழ்ச்சி.

மாநிலம் அதிர மாநாட்டுக்கு தயாராகும் மாற்று சக்தி நாமன்று, முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

https://oruvan.com/we-are-not-an-alternative-force-we-are-the-primary-force-vijays-invitation-to-the-madurai-conference/

‘நாம் மாற்று சக்தி இல்லை; நாமே முதன்மை சக்தி’ – மதுரை மாநாட்டுக்கு விஜய் அழைப்பு

1 month 1 week ago
‘நாம் மாற்று சக்தி இல்லை; நாமே முதன்மை சக்தி’ – மதுரை மாநாட்டுக்கு விஜய் அழைப்பு August 12, 2025 12:57 pm ‘மதுரையில் நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சியை நிறுவுவதே நம்ம குறிக்கோள். மாற்று சக்தி நாமன்று, முதன்மை சக்தி நாம் என்பதை உலகுக்கு மீண்டும் உணர்த்துவோம்’ என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம். நம்மோட அரசியல் பயணத்தில் அடுத்தடுத்த கட்டங்களைத் தாண்டி வர்றோம். இடையில எத்தனை சவால்கள், நெருக்கடிகள் வந்தாலும் எல்லாத்தையும் மக்கள் சக்தியோட அதாவது உங்க ஆதரவால கடவுளோட அருளாள கடந்து வந்துகிட்டே இருக்கோம். வர 2026 சட்டமன்ற தேர்தலுக்கு நாம முழு பேச்சில் தயாராகிட்டு வர்றோம். இந்த சூழலில் நம்முடைய இரண்டாவது மாநில மாநாட்ட ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரை பாரப்பத்தியில நாம நடத்த இருக்கிறது உங்க எல்லோருக்கும் தெரிந்ததுதான். முத்தமிழையும் சங்கம் வச்சு வளர்த்த மதுரையில, நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து நின்னு, ஜனநாயகப் போரில் அவங்கள வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சியை நிறுவுவதே நம்ம குறிக்கோள் என்ற நிலைப்பாட்டை உறுதி செய்வதுதான் இந்த மாநாடு. அதனாலதான் வைகை மண்ணில் நடக்கும் இந்த மாநாடு, ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது: வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்ற தேர்தல் அரசியல் மையக்கருத்த முன்வச்சி நடக்க இருக்குதுன்னு உங்களோட பகிர்ந்து கொள்வதில் ரொம்ப மகிழ்ச்சி. மாநிலம் அதிர மாநாட்டுக்கு தயாராகும் மாற்று சக்தி நாமன்று, முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம்’ எனத் தெரிவித்துள்ளார். https://oruvan.com/we-are-not-an-alternative-force-we-are-the-primary-force-vijays-invitation-to-the-madurai-conference/

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் – ஐநா கடும் கண்டனம்

1 month 1 week ago
இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் – ஐநா கடும் கண்டனம் August 12, 2025 10:28 am காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய ஆறு பத்திரிகையாளர்கள் படுகொலைக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தக் கொலைகள் சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல் என்று ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் அல் ஜசீரா நிருபர் ஒருவர் மற்றும் ஐந்து பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். முக்கிய இலக்கான அல் ஜசீரா நிருபர் அனஸ் அல்-ஷெரிப், ஹமாஸ் பயங்கரவாதப் பிரிவின் தலைவர் என்று இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது. ஊடக உரிமைக் குழுக்களும் கத்தார் உட்பட பல நாடுகளும் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளன. இந்தத் தாக்குதலால் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதாக பிரித்தானிய பிரதமரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் அழைப்பு விடுக்கின்றனர். காசா நகரில் உள்ள அவர்களது கூடாரத்தின் மீது இலக்கு வைக்கப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர், அவர்களின் இறுதிச் சடங்குகள் நேற்று நடைபெற்றன. இறுதிச் சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒன்லைனில் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்ட ஒரு பத்திரிகையாளர் அனஸ் அல்-ஷெரிப் ஆவார். எல்லைகளற்ற ஊடக ஆர்வலர் குழுவான Reporters Without Borders, ஷெரிப்பின் கொலையை கடுமையாகக் கண்டிப்பதாகக் கூறியது. மேலும் பல ஊடகக் குழுக்கள் இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளன. https://oruvan.com/un-strongly-condemns-journalists-killed-in-israeli-attack/

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் – ஐநா கடும் கண்டனம்

1 month 1 week ago

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் – ஐநா கடும் கண்டனம்

August 12, 2025 10:28 am

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் – ஐநா கடும் கண்டனம்

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய ஆறு பத்திரிகையாளர்கள் படுகொலைக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தக் கொலைகள் சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல் என்று ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் அல் ஜசீரா நிருபர் ஒருவர் மற்றும் ஐந்து பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்.

முக்கிய இலக்கான அல் ஜசீரா நிருபர் அனஸ் அல்-ஷெரிப், ஹமாஸ் பயங்கரவாதப் பிரிவின் தலைவர் என்று இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது.

ஊடக உரிமைக் குழுக்களும் கத்தார் உட்பட பல நாடுகளும் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளன.

இந்தத் தாக்குதலால் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதாக பிரித்தானிய பிரதமரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் அழைப்பு விடுக்கின்றனர்.

காசா நகரில் உள்ள அவர்களது கூடாரத்தின் மீது இலக்கு வைக்கப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர், அவர்களின் இறுதிச் சடங்குகள் நேற்று நடைபெற்றன.

இறுதிச் சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒன்லைனில் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்ட ஒரு பத்திரிகையாளர் அனஸ் அல்-ஷெரிப் ஆவார்.

எல்லைகளற்ற ஊடக ஆர்வலர் குழுவான Reporters Without Borders, ஷெரிப்பின் கொலையை கடுமையாகக் கண்டிப்பதாகக் கூறியது. மேலும் பல ஊடகக் குழுக்கள் இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளன.

https://oruvan.com/un-strongly-condemns-journalists-killed-in-israeli-attack/

ஜே.வி.பி – தேசிய மக்கள் சக்தி இடையே மோதல்; பிரதமர் ஹரிணியை விலகச் செய்ய சதி!

1 month 1 week ago
ஜே.வி.பி – தேசிய மக்கள் சக்தி இடையே மோதல்; பிரதமர் ஹரிணியை விலகச் செய்ய சதி! ஜே.வி.பி – தேசிய மக்கள் சக்தி இடையே உருவாகியுள்ள மோதல் நிலைமைகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன என்றும், பிரதமர் ஹரிணி அமரசூரியவை தானாகவே பதவி விலகச் செய்து தமது பிரதமரை நியமித்துக்கொள்ள ஜே.வி.பியினர் திட்டமிடுகின்றனர் என்றும் பிவித்துறு ஹெல உறுமய கட்சி தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிவித்துறு ஹெல உறுமய கட்சி தலைமையகத்தில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே கம்மன்பில இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது என்னைப் பற்றி கூறியதுடன், அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சூழ்ச்சிகள் நடத்தப்படுவதாகவும் அதனை தோற்கடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். உண்மையில் அவர் கூறுவதை கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு ஜனாதிபதி மிகவும் அதிருப்தி நிலையில் இருந்து உரையாற்றுவதை போன்றே இருந்தது. ஜனாதிபதி கூறுவதை போன்று அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சியாக கூறுவது அரசாங்கத்தின் குறைபாடுகளையும், மோசடிகளையும் சுட்டிக்காட்டுவதாக இருந்தால் நான் மறைந்து அல்லாமல் வெளிப்படையாகவே அதனை செய்வேன். நீங்கள் எதிர்க்கட்சிகளில் இருந்த போது அரசாங்கங்களை பலவீனப்படுத்துவதற்கான சூழ்ச்சிகளில் ஈடுபட்டீர்கள். கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காலங்களிலும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்புகளை வழங்காமல் பொருளாதார நெருக்கடியை அதிகரிக்க முயற்சிகளை செய்தது நீங்களே. இவ்வாறான நிலைமையில் உங்களை போன்று அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சிகளில் ஈடுபடுட்டதை போன்று எங்களை பார்க்க வேண்டாம் என்று கூறுகின்றோம். இதேவேளை கடந்த 6ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் சுப்ரீம் சட் செயற்கை கோள் திட்டமானது வெளிநாட்டு முதலீடே தவிர இலங்கையினதோ, ராஜபக்‌ஷக்களினதோ முதலீடு அல்ல என்று கூறியிருந்தார். இந்நிலையில் அந்த கருத்து தவறு என்று பிரதமரின் அரசாங்கத்தில் உள்ள கனிஷ்ட அமைச்சரான வசந்த சமரசிங்க கூறியிருந்தார். அவ்வாறு பிரதமரின் கருத்து தவறு என்றால் பிரதமருக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ அதனை திருத்திக்கொள்ள முடியும். ஆனால் கனிஷ்ட அமைச்சரால் அதனை திருத்த முடியாது. வசந்த சமரசிங்க பிரதமரை உலகின் முன்னால் அசௌகரியத்திற்கு உள்ளாக்கியுள்ளார். அது அரசாங்கத்திற்குள் உள்ள திசைக்காட்டி ஜே.வி.பி மோதல் வெடித்துள்ளது என்பதனை வெளிக்காட்டும் வகையிலேயே அமைந்துள்ளது. கூடிய விரையில் அமைச்சரவை மறுசீரமைப்பொன்று இடம்பெறுமென்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க மே மாதத்தில் கூறியிருந்தார். அப்போதே நாங்கள் இந்த முறுகல் நிலைமை தொடர்பில் கூறியிருந்தோம். இப்போது ஹரிணியை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி ஜே.வி.பியின் பிரதமராக பிமல் ரத்நாயக்கவை நியமிக்க எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் பிரதமர் பதவியில் இருந்து ஏன் ஹரிணியை நீக்கக்கூடாது என்று அமைச்சரவையில் ஜனாதிபதி 6 காரணங்களை வெளியிட்டுள்ளார். அதாவது அரசாங்கத்தின் வாக்கு வங்கியில் பெருமளவானவை ஜே.வி.பிக்கு உரியது அல்ல. திசைக்காட்டியின் தலைவராக ஹரிணியே இருக்கின்றார். அத்துடன் அரசாங்கத்தின் மேற்குலக நாடுகளின் தூதரகங்களின் பிரதிநிதியாக ஹரிணியே இருக்கின்றார். அடுத்ததாக பிரபுக்கள் தரப்பு, அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதியாகவும் அவரே இருக்கின்றார். புத்திஜீவிகள் தொழில்வல்லுனர்கள் துறையிலும் பிரதமரே பிரதிநிதியாக இருக்கின்றார். இதனால் இப்போதைக்கு இவை அனைத்துக்கும் பிரதிநியான ஹரிணியிடமே அந்தப் பதவி இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால் ஜனாதிபதியின் நிலைப்பாடு தொடர்பில் அதிருப்தியில் இருக்கும் ஜே.வி.பி தலைவர்கள் பிரதமரை அதிருப்திக்குள் தள்ளி அவரை பதவி விலகச் செய்யவே முயற்சிக்கின்றனர் என்றார். https://akkinikkunchu.com/?p=336592

ஜே.வி.பி – தேசிய மக்கள் சக்தி இடையே மோதல்; பிரதமர் ஹரிணியை விலகச் செய்ய சதி!

1 month 1 week ago

ஜே.வி.பி – தேசிய மக்கள் சக்தி இடையே மோதல்; பிரதமர் ஹரிணியை விலகச் செய்ய சதி!

%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%95%E0

ஜே.வி.பி – தேசிய மக்கள் சக்தி இடையே உருவாகியுள்ள மோதல் நிலைமைகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன என்றும், பிரதமர் ஹரிணி அமரசூரியவை தானாகவே பதவி விலகச் செய்து தமது பிரதமரை நியமித்துக்கொள்ள ஜே.வி.பியினர் திட்டமிடுகின்றனர் என்றும் பிவித்துறு ஹெல உறுமய கட்சி தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிவித்துறு ஹெல உறுமய கட்சி தலைமையகத்தில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே கம்மன்பில இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது என்னைப் பற்றி கூறியதுடன், அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சூழ்ச்சிகள் நடத்தப்படுவதாகவும் அதனை தோற்கடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். உண்மையில் அவர் கூறுவதை கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு ஜனாதிபதி மிகவும் அதிருப்தி நிலையில் இருந்து உரையாற்றுவதை போன்றே இருந்தது. ஜனாதிபதி கூறுவதை போன்று அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சியாக கூறுவது அரசாங்கத்தின் குறைபாடுகளையும், மோசடிகளையும் சுட்டிக்காட்டுவதாக இருந்தால் நான் மறைந்து அல்லாமல் வெளிப்படையாகவே அதனை செய்வேன்.

நீங்கள் எதிர்க்கட்சிகளில் இருந்த போது அரசாங்கங்களை பலவீனப்படுத்துவதற்கான சூழ்ச்சிகளில் ஈடுபட்டீர்கள். கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காலங்களிலும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்புகளை வழங்காமல் பொருளாதார நெருக்கடியை அதிகரிக்க முயற்சிகளை செய்தது நீங்களே. இவ்வாறான நிலைமையில் உங்களை போன்று அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சிகளில் ஈடுபடுட்டதை போன்று எங்களை பார்க்க வேண்டாம் என்று கூறுகின்றோம்.

இதேவேளை கடந்த 6ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் சுப்ரீம் சட் செயற்கை கோள் திட்டமானது வெளிநாட்டு முதலீடே தவிர இலங்கையினதோ, ராஜபக்‌ஷக்களினதோ முதலீடு அல்ல என்று கூறியிருந்தார். இந்நிலையில் அந்த கருத்து தவறு என்று பிரதமரின் அரசாங்கத்தில் உள்ள கனிஷ்ட அமைச்சரான வசந்த சமரசிங்க கூறியிருந்தார். அவ்வாறு பிரதமரின் கருத்து தவறு என்றால் பிரதமருக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ அதனை திருத்திக்கொள்ள முடியும். ஆனால் கனிஷ்ட அமைச்சரால் அதனை திருத்த முடியாது. வசந்த சமரசிங்க பிரதமரை உலகின் முன்னால் அசௌகரியத்திற்கு உள்ளாக்கியுள்ளார். அது அரசாங்கத்திற்குள் உள்ள திசைக்காட்டி ஜே.வி.பி மோதல் வெடித்துள்ளது என்பதனை வெளிக்காட்டும் வகையிலேயே அமைந்துள்ளது.

கூடிய விரையில் அமைச்சரவை மறுசீரமைப்பொன்று இடம்பெறுமென்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க மே மாதத்தில் கூறியிருந்தார். அப்போதே நாங்கள் இந்த முறுகல் நிலைமை தொடர்பில் கூறியிருந்தோம். இப்போது ஹரிணியை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி ஜே.வி.பியின் பிரதமராக பிமல் ரத்நாயக்கவை நியமிக்க எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் பிரதமர் பதவியில் இருந்து ஏன் ஹரிணியை நீக்கக்கூடாது என்று அமைச்சரவையில் ஜனாதிபதி 6 காரணங்களை வெளியிட்டுள்ளார்.

அதாவது அரசாங்கத்தின் வாக்கு வங்கியில் பெருமளவானவை ஜே.வி.பிக்கு உரியது அல்ல. திசைக்காட்டியின் தலைவராக ஹரிணியே இருக்கின்றார். அத்துடன் அரசாங்கத்தின் மேற்குலக நாடுகளின் தூதரகங்களின் பிரதிநிதியாக ஹரிணியே இருக்கின்றார். அடுத்ததாக பிரபுக்கள் தரப்பு, அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதியாகவும் அவரே இருக்கின்றார். புத்திஜீவிகள் தொழில்வல்லுனர்கள் துறையிலும் பிரதமரே பிரதிநிதியாக இருக்கின்றார். இதனால் இப்போதைக்கு இவை அனைத்துக்கும் பிரதிநியான ஹரிணியிடமே அந்தப் பதவி இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால் ஜனாதிபதியின் நிலைப்பாடு தொடர்பில் அதிருப்தியில் இருக்கும் ஜே.வி.பி தலைவர்கள் பிரதமரை அதிருப்திக்குள் தள்ளி அவரை பதவி விலகச் செய்யவே முயற்சிக்கின்றனர் என்றார்.

https://akkinikkunchu.com/?p=336592

மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு

1 month 1 week ago
மன்னாரில் கடும் பதற்ற நிலை - குவிக்கபட்டுள்ள பொலிஸார்.! Vhg ஆகஸ்ட் 12, 2025 மன்னார் பஜார் பகுதியில் சற்று முன் (செவ்வாய் நள்ளிரவு) பதட்ட நிலை ஏற்பட்டிருக்கின்றது. பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை மின் திட்டத்திற்கான காற்றாலை கோபுரங்கள் அமைப்பதற்கான பாரிய பொருட்கள் ஏற்றி வரப்பட்டு கொண்டிருந்த நிலையில் மக்களின் எதிர்ப்பால் பதட்ட நிலை ஏற்பட்டிருக்கின்றது. பொலிஸ் பாதுகாப்பு தற்போது குறித்த வாகனம் மன்னார் நீதி மன்ற பிரதான வீதியில் பொலிஸ் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. மக்கள் பொது அமைப்பினர் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளடங்களாக பொது மக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் சற்று வரை இந்த போராட்டத்தில் இணைந்திருக்கின்றார்கள். சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பொலிசார் குறித்த வாகனத்தை மன்னார் நகருக்குள் கொண்டு செல்ல முயற்சித்த போதும் மக்களின் பலத்த எதிர்ப்பினால் இந்த வாகனம் கொண்டு செல்ல முடியவில்லை. தொடர்ந்தும் மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் குறித்த காற்றாலைக்கான உதிரி பாகங்களை ஏற்றிவந்த பாரிய வாகனம் சுமார் 50க்கும் மேற்பட்ட பொலிசாரின் பாதுகாப்புடன் மன்னார் நீதிமன்ற பிரதான வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் இரண்டு வீதிகளுக்கும் அருகாமையில் அமைதியாக இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.battinatham.com/2025/08/blog-post_80.html

கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியில் டிப்பருடன் நேருக்கு நேர் மோதிய பேருந்து – 26 பேர் காயம்.!

1 month 1 week ago
கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியில் டிப்பருடன் நேருக்கு நேர் மோதிய பேருந்து – 26 பேர் காயம்.! Vhg ஆகஸ்ட் 12, 2025 கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியின் மின்னேரியா பட்டுஓயா பகுதியில் நடந்த வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர். மதுருஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து இன்று (12.08.2025) அதிகாலை 3 மணியளவில் டிப்பருடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் பொலன்னறுவை, மின்னேரியா மற்றும் ஹிங்குராக்கொட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. விபத்து குறித்து மின்னேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.battinatham.com/2025/08/26.html

கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியில் டிப்பருடன் நேருக்கு நேர் மோதிய பேருந்து – 26 பேர் காயம்.!

1 month 1 week ago

கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியில் டிப்பருடன் நேருக்கு நேர் மோதிய பேருந்து – 26 பேர் காயம்.!

Vhg ஆகஸ்ட் 12, 2025

AVvXsEiZEJ1wrdCIOnXzo8Iz-DEpDmtxjbkTRx55WEqkgYCx3Zyhh9hQafBJjPtJzyKav7l7Ir6cGGQjSPQnEzzsrERxoU5wYp5-v4z4GqcdDpT2j1mvqIOcx2fipmWQDh8xfqjjohuGnVAVm4Afc5H1u4XpdtMAVGDe-h-AMHWpPunQKEsiqasQ4qDMzilLEkFW

கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியின் மின்னேரியா பட்டுஓயா பகுதியில் நடந்த வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.

மதுருஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து இன்று (12.08.2025) அதிகாலை 3 மணியளவில் டிப்பருடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் பொலன்னறுவை, மின்னேரியா மற்றும் ஹிங்குராக்கொட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

விபத்து குறித்து மின்னேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

AVvXsEgKzIbNtAGt0r7ILa0GZARkgK5aJ0npBIoWp8bPq9M2l0U51wJVg_0dOXm6FCUt5Xu4PE6tq3U5_tZHJJP-6R6Yi49ualShyg-hu9_fSGK5l_QgZ3tghLMnMLWlH-2GNOj7YQYasW-zp3JH37O6fwLf4Eu1gC7ddAQC8TqJxP7y-AFiG6XuNKAAkOFNKOdK

AVvXsEgtR2u-dQyVjqXzzI1XlxY9gFladgQ8bLWrkzDfgFNZRoFRjFG-bBl6YJXnyenUuhlcbtY1QNoQ-a4JjFL8WrW2M0f9s1VHHocf2DRIGHqTd_ZyW8L-OGexTrr6ocGjYHOZQ48M7irp5idk54fcpnkcdVdz8dIAGCHa9vHmQinTq-raoziIT_pJmQltcU1x

https://www.battinatham.com/2025/08/26.html

தமிழ் மக்கள் நேர்மையான அரசியல்தீர்வு அரசியல் போராட்டத்தையும் நம்புகின்றார்கள் என்பதை என்பதை 15 வருடமாக வெளிப்படுத்தியும் கூட ஆயுதமுனைகளில் அவர்களை வைத்திருப்பதற்காக வடகிழக்கில் இராணுவ குவிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது- ரஜீவ்காந்

1 month 1 week ago
தமிழ் மக்கள் நேர்மையான அரசியல்தீர்வு அரசியல் போராட்டத்தையும் நம்புகின்றார்கள் என்பதை என்பதை 15 வருடமாக வெளிப்படுத்தியும் கூட ஆயுதமுனைகளில் அவர்களை வைத்திருப்பதற்காக வடகிழக்கில் இராணுவ குவிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது- ரஜீவ்காந் Published By: RAJEEBAN 12 AUG, 2025 | 10:51 AM தமிழ் மக்கள் நேர்மையான அரசியல்தீர்வு அரசியல் போராட்டத்தையும் நம்புகின்றார்கள் என்பதை; என்பதை 15 வருடமாக வெளிப்படுத்தியும் கூட ஆயுதமுனைகளில் அவர்களை வைத்திருப்பதற்காக வடகிழக்கில் இராணுவ குவிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது என மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார் செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- முத்தையன் கட்டு குளத்திலே இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் அங்கிருந்த ஊர்மக்கள், அந்த இளைஞனின் உறவினர்களின் தகவலின்படி அவர்கள் இராணுவத்தினரால் முத்தையன்கட்டு பிரதேசத்தில் இருக்கின்ற இராணுவமுகாமிற்கு சில விடயங்களிற்காக அழைக்கப்பட்டிருந்ததாகவும் அதன் பின்னர் அவர்கள் அந்த இராணுவமுகாமில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டு,அங்கு சென்ற ஐவரில் நால்வர் தப்பியோடிவந்த பொழுது,ஒருவர் அன்று மாலையிலிருந்து காணாமல்போயிருந்தார். அன்று முழுவதும் அவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அன்று முழுவதும் அவர் கிடைக்காத காரணத்தினால் அடுத்த நாள் காலைவரை காத்திருந்தார்கள். அடுத்த நாள் காலையிலே முத்தையன் குளத்திலே அவர் சடலமாக மிதந்துகொண்டிருந்தார், அந்த சடலத்தின் முகத்தில் பலத்த காயங்கள்,இரத்தம் காணப்பட்டது. இதன் பிற்பாடு இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் எதற்காக எடுக்க சென்றார்கள்? பொருளை எடுக்க சென்றார்களா?விற்க சென்றார்களா? இராணுவத்தினருடன் நட்பாக இருந்தார்களா? இதெல்லாம் அவசியமில்லை. இங்கு இருக்கின்ற பிரதான பிரச்சினை, ஒரு நாட்டிலே மக்கள் வாழ்கின்ற இடத்திலே இராணுவத்தின் பிரசன்னம் அவசியமற்றது.சிவில் செயற்பாடுகளிற்குள் இராணுவம் தலையிடக்கூடாது. எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் இராணுவம் ஆயுதபூர்வமான ஒரு அமைப்பு,நாட்டின் எல்லை பிரச்சினை,நாட்டில் ஏற்படுகின்ற அசாதாரண பிரச்சினைகளின் போது பயன்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஆயுத அமைப்பே இராணுவம். இந்த இராணுவத்தை மக்கள் வசிக்கும் பகுதிகளில் அதிகளவில் கொண்டதாக இன்று வடக்குகிழக்கு காணப்படுகின்றது. இராணுவத்துடன் ஏற்கனவே எங்களிற்கு பலத்த பிரச்சினைகள் உள்ளன,இராணுவத்திற்கு எதிராக நீதி கோரி போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன, இந்த போராட்டம் எவற்றிற்கும் நீதி வழங்காத நிலையில் வடக்குகிழக்கில் அதிகளவில் இராணுவமுகாம்களை வைத்திருக்கின்றார்கள். எதற்காக இந்த இராணுவ முகாம்களை வைத்திருக்கின்றார்கள் என்ற கேள்வி எமக்குள்ளது. ஏன் என்றால் இந்த இராணுவமுகாம்களால் தான் பிரச்சினைகள். இராணுவமுகாம் இருந்திருக்காவிட்டால் இன்று இந்த இளைஞர் உயிரிழந்திருக்கமாட்டார். இன்று அந்த குடும்;பத்திற்கு உழைத்துக்கொடுத்துக்கொண்டிருந்த ஒருவர் இல்லை. ஒன்பது மாத குழந்தை தந்தையற்றதாக போயுள்ளது. என்ன காரணம் தேவையற்ற விதமாக இராணுவத்தினரை இந்த பிரதேசங்களில் வைத்திருப்பதுதான் பிரச்சினை. வடக்குகிழக்கிலிருந்து இராணுவத்தை படிப்படியாக அகற்றுவோம் என தெரிவித்தவர்கள் கூட இன்று அதனை செய்கின்றார்கள் இல்லை என்ற குற்றச்சாட்டினை நான் முன்வைக்கின்றேன். தெற்கிலே 77 சூட்டுசம்பவங்கள் இடம்பெற்றுள்ளன, வடக்குகிழக்கிலே அவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை. எதற்காக இவ்வளவு இராணுவத்தை அங்கு குவித்துவைத்துக்கொண்டிருக்கின்றார்கள்? இன்று தென்பகுதியில் எல்லா இடங்களிலும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன. 12000க்கும் மேற்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்திலே வாழ்கின்றனர்.ஆனால் அவர்களில் ஒருவர் கூட கடந்த 15 வருடங்களில் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. தமிழ் மக்கள் நேர்மையான அரசியல்தீர்வு அரசியல் போராட்டத்தையும் நம்புகின்றார்கள் என்பதை; என்பதை 15 வருடமாக வெளிப்படுத்தியும் கூட ஆயுதமுனைகளில் அவர்களை வைத்திருப்பதற்காக வடகிழக்கில் இராணுவம் குவிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது, இராணுவத்தினரால் இடம்பெறும் சிக்கல் என்பது அதிகரித்துக்கொண்டிருக்கின்றது. இராணுவத்தினர் விவசாயம் செய்கின்றார்கள், ஹோட்டல் விடுதி சாப்பாட்டுக்கடை நடத்துகின்றார்கள்,மக்கள் செல்கின்ற இடமெல்லாம் ஆயுதத்துடன் திரிகின்றார்கள்,வீடு கட்டி கொடுக்கின்றார்கள், பிரதம அதிதிகளாக செல்கின்றார்கள், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுகின்றார்கள்,எந்தவொரு நாட்டிலும் இது இடம்பெறாது. ஜனநாயகபூர்வமான இடத்திலே இராணுவத்தின் இடம் எந்தளவிற்கு இருக்கவேண்டும் என்பதை முதலில் நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும். எனவே முத்தையன்கட்டிலே உயிரிழந்த கபில்ராஜிற்கு நீதிவேண்டும் என்ற ஒரு கோரிக்கையும்,இராணுவ குவிப்பு, இராணுவமயமாக்கல் என்பது நிறுத்தப்படவேண்டும் இராணுவத்தினர் அகற்றப்படவேண்டும் என்ற அரசியல் கோரிக்கையையும் நாங்கள் இன்று முன்வைக்கின்றோம். https://www.virakesari.lk/article/222376

தமிழ் மக்கள் நேர்மையான அரசியல்தீர்வு அரசியல் போராட்டத்தையும் நம்புகின்றார்கள் என்பதை என்பதை 15 வருடமாக வெளிப்படுத்தியும் கூட ஆயுதமுனைகளில் அவர்களை வைத்திருப்பதற்காக வடகிழக்கில் இராணுவ குவிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது- ரஜீவ்காந்

1 month 1 week ago

தமிழ் மக்கள் நேர்மையான அரசியல்தீர்வு அரசியல் போராட்டத்தையும் நம்புகின்றார்கள் என்பதை என்பதை 15 வருடமாக வெளிப்படுத்தியும் கூட ஆயுதமுனைகளில் அவர்களை வைத்திருப்பதற்காக வடகிழக்கில் இராணுவ குவிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது- ரஜீவ்காந்

Published By: RAJEEBAN

12 AUG, 2025 | 10:51 AM

image

தமிழ் மக்கள் நேர்மையான அரசியல்தீர்வு அரசியல் போராட்டத்தையும் நம்புகின்றார்கள் என்பதை; என்பதை 15 வருடமாக வெளிப்படுத்தியும் கூட ஆயுதமுனைகளில் அவர்களை வைத்திருப்பதற்காக வடகிழக்கில் இராணுவ குவிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது என மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந்  தெரிவித்துள்ளார்

செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-

முத்தையன் கட்டு குளத்திலே இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் அங்கிருந்த ஊர்மக்கள், அந்த இளைஞனின் உறவினர்களின் தகவலின்படி அவர்கள் இராணுவத்தினரால் முத்தையன்கட்டு பிரதேசத்தில் இருக்கின்ற இராணுவமுகாமிற்கு சில விடயங்களிற்காக அழைக்கப்பட்டிருந்ததாகவும் அதன் பின்னர் அவர்கள் அந்த இராணுவமுகாமில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டு,அங்கு சென்ற ஐவரில் நால்வர் தப்பியோடிவந்த பொழுது,ஒருவர் அன்று மாலையிலிருந்து காணாமல்போயிருந்தார்.

அன்று முழுவதும் அவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அன்று முழுவதும் அவர் கிடைக்காத காரணத்தினால் அடுத்த நாள் காலைவரை காத்திருந்தார்கள்.

அடுத்த நாள் காலையிலே முத்தையன் குளத்திலே அவர் சடலமாக மிதந்துகொண்டிருந்தார், அந்த சடலத்தின் முகத்தில் பலத்த காயங்கள்,இரத்தம் காணப்பட்டது.

இதன் பிற்பாடு இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

அவர்கள் எதற்காக எடுக்க சென்றார்கள்? பொருளை எடுக்க சென்றார்களா?விற்க சென்றார்களா? இராணுவத்தினருடன் நட்பாக இருந்தார்களா? இதெல்லாம் அவசியமில்லை.

இங்கு இருக்கின்ற பிரதான பிரச்சினை, ஒரு நாட்டிலே மக்கள் வாழ்கின்ற இடத்திலே இராணுவத்தின் பிரசன்னம் அவசியமற்றது.சிவில் செயற்பாடுகளிற்குள் இராணுவம் தலையிடக்கூடாது. 

எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் இராணுவம் ஆயுதபூர்வமான ஒரு அமைப்பு,நாட்டின் எல்லை பிரச்சினை,நாட்டில் ஏற்படுகின்ற அசாதாரண பிரச்சினைகளின் போது பயன்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஆயுத அமைப்பே இராணுவம்.

இந்த இராணுவத்தை மக்கள் வசிக்கும் பகுதிகளில் அதிகளவில் கொண்டதாக இன்று வடக்குகிழக்கு காணப்படுகின்றது.

இராணுவத்துடன் ஏற்கனவே எங்களிற்கு பலத்த பிரச்சினைகள் உள்ளன,இராணுவத்திற்கு எதிராக நீதி கோரி போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன, இந்த போராட்டம் எவற்றிற்கும் நீதி வழங்காத நிலையில் வடக்குகிழக்கில் அதிகளவில் இராணுவமுகாம்களை வைத்திருக்கின்றார்கள்.

எதற்காக இந்த இராணுவ முகாம்களை வைத்திருக்கின்றார்கள் என்ற கேள்வி எமக்குள்ளது.

ஏன் என்றால் இந்த இராணுவமுகாம்களால் தான் பிரச்சினைகள்.

இராணுவமுகாம் இருந்திருக்காவிட்டால் இன்று இந்த இளைஞர் உயிரிழந்திருக்கமாட்டார். இன்று அந்த குடும்;பத்திற்கு உழைத்துக்கொடுத்துக்கொண்டிருந்த ஒருவர் இல்லை.

ஒன்பது மாத குழந்தை  தந்தையற்றதாக போயுள்ளது. என்ன காரணம் தேவையற்ற விதமாக இராணுவத்தினரை இந்த பிரதேசங்களில் வைத்திருப்பதுதான் பிரச்சினை.

வடக்குகிழக்கிலிருந்து இராணுவத்தை படிப்படியாக அகற்றுவோம் என தெரிவித்தவர்கள் கூட இன்று அதனை செய்கின்றார்கள் இல்லை என்ற குற்றச்சாட்டினை நான் முன்வைக்கின்றேன்.

தெற்கிலே 77 சூட்டுசம்பவங்கள் இடம்பெற்றுள்ளன, வடக்குகிழக்கிலே அவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை. எதற்காக இவ்வளவு இராணுவத்தை அங்கு குவித்துவைத்துக்கொண்டிருக்கின்றார்கள்?

இன்று தென்பகுதியில் எல்லா இடங்களிலும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

12000க்கும் மேற்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்திலே வாழ்கின்றனர்.ஆனால் அவர்களில் ஒருவர் கூட கடந்த 15 வருடங்களில் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை.

தமிழ் மக்கள் நேர்மையான அரசியல்தீர்வு அரசியல் போராட்டத்தையும் நம்புகின்றார்கள் என்பதை; என்பதை 15 வருடமாக வெளிப்படுத்தியும் கூட ஆயுதமுனைகளில் அவர்களை வைத்திருப்பதற்காக வடகிழக்கில் இராணுவம் குவிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது, இராணுவத்தினரால் இடம்பெறும் சிக்கல் என்பது  அதிகரித்துக்கொண்டிருக்கின்றது.

இராணுவத்தினர் விவசாயம் செய்கின்றார்கள், ஹோட்டல் விடுதி சாப்பாட்டுக்கடை நடத்துகின்றார்கள்,மக்கள் செல்கின்ற இடமெல்லாம் ஆயுதத்துடன் திரிகின்றார்கள்,வீடு கட்டி கொடுக்கின்றார்கள், பிரதம அதிதிகளாக செல்கின்றார்கள், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுகின்றார்கள்,எந்தவொரு நாட்டிலும் இது இடம்பெறாது.

ஜனநாயகபூர்வமான இடத்திலே இராணுவத்தின் இடம் எந்தளவிற்கு இருக்கவேண்டும் என்பதை முதலில் நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

எனவே முத்தையன்கட்டிலே உயிரிழந்த கபில்ராஜிற்கு நீதிவேண்டும் என்ற ஒரு கோரிக்கையும்,இராணுவ குவிப்பு, இராணுவமயமாக்கல்  என்பது நிறுத்தப்படவேண்டும் இராணுவத்தினர் அகற்றப்படவேண்டும் என்ற அரசியல் கோரிக்கையையும் நாங்கள் இன்று முன்வைக்கின்றோம்.

https://www.virakesari.lk/article/222376

ஓற்றுமையின்மையே தமிழரின் இயலாமை

1 month 1 week ago
ஓற்றுமையின்மையே தமிழரின் இயலாமை லக்ஸ்மன் ஜெனிவாவில் செப்டெம்பரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் அமர்வுக்கு, “தமிழ்த் தரப்பில் பிரதான, பெரிய கட்சியை இணைத்துக் கொள்ளாமல் ஒரு கடிதத்தை எழுதினால், அது அனைத்துலக அரங்கில் எப்படிப் பார்க்கப்படும்?” என்ற கேள்வி ஒன்று தற்போது தமிழ்த் தேசிய அரங்கில் பேசப்படுகின்ற விடயமாக மாறியிருக்கிறது. கடந்த ஒகஸ்ட் மாத இறுதியில் யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அழைப்பில் நடைபெற்ற சந்திப்பு மற்றும் தயாரிக்கப்பட்ட கடிதம் தொடர்பிலேயே இந்தக் கருத்து வெளிவருகிறது. தமிழர்களுக்கு நீதி வேண்டி, அனைத்துலகை விசாரணைப் பொறிமுறையைக் கோரும் தமிழர் தரப்பு கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி ஐ.நாவுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தது. அந்தக் கூட்டுக்கடிதத்தின் தொடர்ச்சியாக மேலும் ஒரு கடிதத்தை அனுப்பும் வகையில், அதற்கான தயாரிப்பு வேலைகளுக்காக இந்தச் சந்திப்பு நடைபெற்றருந்தது. ஆனால், அந்தச் சந்திப்புக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி சமூகமளிக்கவில்லை. இந்த நிலையில்தான் இந்தத் தமிழ்த் தரப்பில் பிரதான, பெரிய கட்சியை இணைத்துக் கொள்ளாமல் ஒரு கடிதத்தை எழுதினால், அது அனைத்துலக அரங்கில் எப்படிப் பார்க்கப்படும்? என்ற கேள்வி உருவாகியிருக்கிறது. தமிழரசுக் கட்சி இதில் இணைந்துக் கொள்ளவில்லை என்பது உண்மையாக இருந்தாலும் இணைத்துக் கொள்ளாமல் என்ற சொற் பிரயோகம் பயன்படுத்தப்படுகிறது. இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் ஒருவித தீர்மானத்துடன், பிடிவாதத்துடன், தனிக்காட்டு ராஜா நிலைமையில் செயற்படுவதே தெரிகிறது. இருந்தாலும், அவர்களால் உருவாக்கப்படும் மாயைத் தோற்றத்தை உண்மையாக்கும் செயற்பாடுகள் தமிழர் தளத்தில் நடைபெறுகிறது என்றே இந்தக்கருத்தினை அடிப்படையில் கொண்டு பார்க்க முடியும். அதே போன்றதொரு நிலையே விடுதலைப்புலிகளின் தலைமையின் முழுமையான பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைக் கலைத்த பெருமை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இருந்தாலும் முழுப் பழியும் கூட்டமைப்பில் இணைந்திருந்த மற்றைய கட்சிகளின் மீதே சுமத்தப்பட்டு வருகிறது. இலங்கைத் தமிழரசுக் கட்சி தாமாக விலகிக் கொள்ள முடிவெடுத்திருந்தாலும், அது தமிழரசுக் கட்சியின் தமிழ்த் தேசிய அரசியல் பிழை என்பதை யாரும் கடுமையாகச் சொல்வதற்கல்ல சாதாரணமாகக் கூறுவதற்குக் கூட தயாரில்லை. தனிப்பட்ட ஒருவருடைய, ஒரு கட்சியினுடைய விடயங்கள் எழுந்தமானமாக, ஏகபோகத்தனத்துடன் மேற்கொள்ளப்படுவது யாராலும் கேள்விக்குட்படுத்தப்படாதிருப்பது என்வோ சரியாக இருக்கலாம். ஆனால், தமிழ் மக்களின் பொதுவான விடங்களில் எழுந்தமானமாகச் செயற்படுவது பொருத்தமானதாக இருக்காது என்பது ஒரு கட்சிக்குப் புரியாதிருக்கையில் பொதுமைப்படக் கருத்துக்கள் வெளியிடப்படுவது ஒன்றும் முதல் தடவையல்ல என்ற வகையில் திருத்த வேண்டியவர்களைத் திருத்தியாகவேண்டும் என்ற நிலைப்பாட்டுக்குத் தமிழ் மக்கள் வாந்தாகவேண்டும். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.நா.வுக்கு எழுதப்பட்ட கடிதத்தை தயாரிப்பதற்கான ஆரம்பப்பணியை மன்னாரைச் சேர்ந்த சிவகரன் தொடங்கியிருந்தார். அதன்பின் ஒவ்வொருவராக இணைந்து முதலாவது சந்திப்பு கிளிநொச்சியில் இடம்பெற்றது. இரண்டாவது சந்திப்பு வவுனியாவில். மூன்றாவது சந்திப்பு மீண்டும் கிளிநொச்சியில் நடைபெற்று ஒரு கூட்டுக்கடிதம் தயாரிக்கப்பட்டது. அந்தக் கடிதத்தில் பிரதானமாக இனப்பிரச்சினைத் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களைப் பொறுப்புக்கூற வைப்பதற்கான பொறிமுறையை ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்குள் மாத்திரம் மட்டுப்படுத்திக் கொண்டிருக்காமல் பன்னாட்டு பரிந்துரைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. இரண்டாவதாக, போர்க்களத்தில் நிகழ்ந்த குற்றங்களை விசாரிப்பதற்காக ஒரு பொறிமுறையை உருவாக்கினால், அதற்குக் காலவரையறை இருக்க வேண்டும் என்பதாக இருந்தது. இதனைத் தீர்மானிப்பதற்குப் பல வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்திருந்தது. வடக்கு, கிழக்கில் யுத்தம் மௌனிக்கப்பட்டு 12 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து சர்வதேசத்துக்கு ஒற்றுமையாக முதன் முதலில் எழுதியக் கடிதமாக இது அமைந்திருந்தது. அந்தக் கடிதத்தினால் சாதகமான விளைவேதும் கிடைக்கவில்லை. பொறுப்புக்கூறல் சார்ந்த விடயங்கள் மனித உரிமைகள் பேரவைக்குள் முடக்கியே இருக்கிறது. சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்காக உருவாக்கப்பட்ட கட்டமைப்புத் திறமையாகச் செயற்பட்டதா என்ற சந்தேகம் இருக்கிறது. அந்தக் கட்டமைப்பு இலங்கைக்குள் வருகைதந்து செயற்பட இலங்கை அரசு அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில், இந்தச் செப்டெம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கின்ற ஐ.நா. கூட்டத் தொடருக்கு முன்னதாக தமிழ்த் தரப்பு மீண்டும் ஒரு கூட்டுக்கடிதத்தை அனுப்புவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இது பாராட்டத்தக்கதே. யானைக்கு மணியைக் கட்டுதல் என்கிற விடயம் நடைபெறாதிருக்கையில் யாரேனும் மணியைக் கட்டியானால் பிரச்சினை என்கிற தோரணை உருவாக்கப்படுவது தவறாகும். எல்லோருடைய நோக்கமும் ஒன்றாக இருக்கையில் யார் மணியைக் கட்டினால் என்ன என்று சிந்திக்கின்ற நேர்மை இல்லாமலிருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. 1948 தொடங்கி, ஐக்கியத் தேசியக் கட்சி அரசாங்கத்தினால் தமிழர்களின் சுயநிர்ணயப் போராட்டம் கையாளப்பட்டிருக்கிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் கையாளப்பட்டிருக்கிறது. இவை இரண்டும் இணைந்து கையாண்டிருக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கையாண்டிருக்கிறது. இப்போது மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் தமிழர் பிரச்சினைக் கையாளப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் இம்முறை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வு நடைபெறவிருக்கிறது. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இலங்கைக்கு வந்து போயிருக்கும் ஒரு பின்னணியில் இந்தக் கூட்டுக் கடிதத் தயாரிப்பு நடைபெற்றிருக்கிறது. தமிழ் மக்கள் சர்வதேச நீதிப் பொறிமுறையைக் கோரிக் கொண்டிருக்கையில், புதிதாக ஆட்சியிலுள்ள அரசாங்கமும் உள்நாட்டுப் பொறிமுறைக்கான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் கருத்துக்களும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக இல்லாதிருக்கின்ற அதேவேளை, இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டுப் பொறிமுறையின் நம்பகத் தன்மையைப் பலப்படுத்துவதாகக் காணப்படுகிறது. எனவே, உள்நாட்டுப் பொறிமுறையைப் பலப்படுத்தும் கட்டமைப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தவேண்டிய தேவைப்பாடு இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சந்திப்புக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி அழைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அக்கட்சி கலந்து கொள்ளவில்லை. இந்தக் கூட்டுக் கடிதத் தயாரிப்பில் கலந்து கொள்ளாத நிலையில், அக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், நடத்திய ஊடகச் சந்திப்பில், தமது கட்சி கடிதம் ஒன்றை ஐ.நாவுக்கு அனுப்பியதாகவும், உள்நாட்டுப் பொறிமுறையைத் தாம் கோரவில்லை என்று கூறியிருக்கிறார். இதைப் பொறுப்புள்ள ஒரு தமிழ்த் தேசியக் கட்சியாக அவர் கூறுவதற்குக் காரணம் என்ன. கூட்டுக் கடிதத் தயாரிப்பில் கலந்து பங்குகொள்ளாதிருந்ததுடன், அவர் அதனைக் கைவிட்டிருக்கலாம். ஆனால், தம்முடைய அரசியலை செய்வதற்காக இதனைச் சொல்லியிருக்கிறார் என்பது மாத்திரம் வெளிப்படை. தமிழ் மக்களின் ஏகபோக அரசியல் தரப்புத் தாங்களே என விடுதலைப் புலிகள் தங்களை அறிவித்துக் கொண்டிருந்து பின்னர்த் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அதற்காக உருவாக்கிக் கொண்டனர். ஆனால், ஆரம்பத்தில் கூட்டமைப்பில் இருந்த கட்சிகள் யுத்த மௌனிப்பின் பின் ஒவ்வொன்றாக விலகிக் கொண்டன. விலக்கப்பட்டதாகக் கொள்ளலாமா என்பது இப்போதும் சந்தேகமானது. அத்துடன் விலக்கப்பட்டனவா, விலகிக் கொண்டனவா, விலகுவதற்கான சூழல் உருவாக்கப்பட்டதால் அது ஏற்பட்டதா என்பது இன்னமும் யாராலும் புரிதலுக்குட்படுத்தப்படவில்லை என்பது வேறு விடயம். இந்த நிலையில், ஒவ்வொரு விடயத்திற்கும் வியாக்கியானங்கள் முன்வைக்கப்படுவது நடைபெறுகிறது.இவற்றினை ஒவ்வொருவர் ஒவ்வொரு வகையில் விளங்கிக் கொள்வதும், நடைபெற்றுவரும் தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கென்று செயற்படுகின்ற கட்சிகள் தாய்க் கட்சி, தந்தை கட்சி, ஏக தரப்பு என்றெல்லாம் நடந்து கொள்வது சர்வதேச தரப்புகளை அணுகுகின்ற வேளைகளிலும் தேவைதானா என்பதுவே கேள்வியாக இருக்கிறது. தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளைப் பேசுவதற்குத் திறக்கப்பட்டிருக்கும் ஒரே அனைத்துலக அரங்கம் ஐ.நா. என்ற வகையில், இதனைப் பலவீனமான நிலையுடன் அணுகுவதால் பயன் ஒன்று விளையுமா என்பதனை விளங்கிக் கொள்வது முக்கியமானது. ஆனால், பொறுப்புக்கூறலை அனைத்துலகை நீதிமன்றங்களிடம் பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையோடு இனப்படுகொலையைத் திட்டமிட்டவகையில் நடத்தி வந்த ஒரு நாட்டில் இருந்து கொண்டு ஒற்றுமையின்மையுடன் அரசியல் நடத்துவதால் பயன் விளையுமானால் நல்லதே. ஈழத் தமிழர்கள் நீதிக்கான தமது போராட்டத்தில் அனைத்துலக அரங்கில் தமக்கு ஆதரவான சக்திகளைத் திரட்டிக்கொள்ள, ஈர்த்துக் கொள்ளப் பரந்துபட்ட வேலைத் திட்டங்களில்லாத நிலையில், தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டக் கூடிய விதத்தில் ஐ.நா. நகர்ந்துவரும் சூழலில் தமிழர் தரப்பின் ஒற்றுமையின்மை மேலும் பயனற்ற எதிர்காலத்தையே கொண்டுவரும் என்பதனை யாரும் மறந்துவிடக் கூடாது. இது தமிழரசுக் கட்சிக்கும் புரிய வேண்டும். இல்லாதுவிடின் மக்களால் புரியவைக்கப்படுதலே நல்லது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஓற்றுமையின்மையே-தமிழரின்-இயலாமை/91-362706

ஓற்றுமையின்மையே தமிழரின் இயலாமை

1 month 1 week ago

ஓற்றுமையின்மையே தமிழரின் இயலாமை

லக்ஸ்மன்

ஜெனிவாவில் செப்டெம்பரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் அமர்வுக்கு, “தமிழ்த் தரப்பில் பிரதான, பெரிய கட்சியை இணைத்துக் கொள்ளாமல் ஒரு கடிதத்தை எழுதினால், அது அனைத்துலக அரங்கில் எப்படிப் பார்க்கப்படும்?”

என்ற கேள்வி ஒன்று தற்போது தமிழ்த் தேசிய அரங்கில் பேசப்படுகின்ற விடயமாக மாறியிருக்கிறது. கடந்த ஒகஸ்ட் மாத இறுதியில் யாழ்ப்பாணத்திலுள்ள 
விருந்தினர் விடுதியொன்றில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அழைப்பில் நடைபெற்ற சந்திப்பு மற்றும் தயாரிக்கப்பட்ட கடிதம் தொடர்பிலேயே இந்தக் கருத்து வெளிவருகிறது.

தமிழர்களுக்கு நீதி வேண்டி, அனைத்துலகை விசாரணைப் பொறிமுறையைக் கோரும் தமிழர் தரப்பு கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி ஐ.நாவுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தது.

அந்தக் கூட்டுக்கடிதத்தின் தொடர்ச்சியாக மேலும் ஒரு கடிதத்தை அனுப்பும் வகையில், அதற்கான தயாரிப்பு வேலைகளுக்காக இந்தச் சந்திப்பு நடைபெற்றருந்தது. ஆனால், அந்தச் சந்திப்புக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி சமூகமளிக்கவில்லை.

இந்த நிலையில்தான் இந்தத் தமிழ்த் தரப்பில் பிரதான, பெரிய கட்சியை இணைத்துக் கொள்ளாமல் ஒரு கடிதத்தை எழுதினால், அது அனைத்துலக அரங்கில் எப்படிப் பார்க்கப்படும்? என்ற கேள்வி உருவாகியிருக்கிறது.

தமிழரசுக் கட்சி இதில் இணைந்துக் கொள்ளவில்லை என்பது உண்மையாக இருந்தாலும் இணைத்துக் கொள்ளாமல் என்ற சொற் பிரயோகம் பயன்படுத்தப்படுகிறது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் ஒருவித தீர்மானத்துடன், பிடிவாதத்துடன், தனிக்காட்டு ராஜா நிலைமையில் செயற்படுவதே தெரிகிறது.
இருந்தாலும், அவர்களால் உருவாக்கப்படும் மாயைத் தோற்றத்தை உண்மையாக்கும் செயற்பாடுகள் தமிழர் தளத்தில் நடைபெறுகிறது என்றே இந்தக்கருத்தினை அடிப்படையில் கொண்டு பார்க்க முடியும்.

அதே போன்றதொரு நிலையே விடுதலைப்புலிகளின் தலைமையின் முழுமையான பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைக் கலைத்த பெருமை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இருந்தாலும் முழுப் பழியும் கூட்டமைப்பில் இணைந்திருந்த மற்றைய கட்சிகளின் மீதே சுமத்தப்பட்டு வருகிறது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி தாமாக விலகிக் கொள்ள முடிவெடுத்திருந்தாலும், அது தமிழரசுக் கட்சியின் தமிழ்த் தேசிய அரசியல் பிழை என்பதை யாரும் கடுமையாகச் சொல்வதற்கல்ல சாதாரணமாகக் கூறுவதற்குக் கூட  தயாரில்லை.

தனிப்பட்ட ஒருவருடைய, ஒரு கட்சியினுடைய விடயங்கள் எழுந்தமானமாக, ஏகபோகத்தனத்துடன் மேற்கொள்ளப்படுவது யாராலும் கேள்விக்குட்படுத்தப்படாதிருப்பது என்வோ சரியாக இருக்கலாம். ஆனால், தமிழ் மக்களின் பொதுவான விடங்களில் எழுந்தமானமாகச் செயற்படுவது பொருத்தமானதாக இருக்காது என்பது ஒரு கட்சிக்குப் புரியாதிருக்கையில் பொதுமைப்படக் கருத்துக்கள் வெளியிடப்படுவது ஒன்றும் முதல் தடவையல்ல என்ற வகையில் திருத்த வேண்டியவர்களைத் திருத்தியாகவேண்டும் என்ற நிலைப்பாட்டுக்குத் தமிழ் மக்கள் வாந்தாகவேண்டும்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.நா.வுக்கு எழுதப்பட்ட கடிதத்தை தயாரிப்பதற்கான  ஆரம்பப்பணியை மன்னாரைச் சேர்ந்த சிவகரன் தொடங்கியிருந்தார். அதன்பின் ஒவ்வொருவராக இணைந்து முதலாவது சந்திப்பு கிளிநொச்சியில் இடம்பெற்றது.

இரண்டாவது சந்திப்பு வவுனியாவில். மூன்றாவது சந்திப்பு மீண்டும் கிளிநொச்சியில் நடைபெற்று ஒரு கூட்டுக்கடிதம் தயாரிக்கப்பட்டது.  அந்தக் கடிதத்தில் பிரதானமாக இனப்பிரச்சினைத் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களைப் பொறுப்புக்கூற வைப்பதற்கான பொறிமுறையை ஐ.நா. மனித 
உரிமைப் பேரவைக்குள் மாத்திரம் மட்டுப்படுத்திக் கொண்டிருக்காமல் பன்னாட்டு பரிந்துரைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது.

இரண்டாவதாக, போர்க்களத்தில் நிகழ்ந்த குற்றங்களை விசாரிப்பதற்காக ஒரு
பொறிமுறையை உருவாக்கினால், அதற்குக் காலவரையறை இருக்க வேண்டும் என்பதாக இருந்தது. இதனைத் தீர்மானிப்பதற்குப் பல வாதப்பிரதிவாதங்கள்
நிகழ்ந்திருந்தது.

வடக்கு, கிழக்கில் யுத்தம் மௌனிக்கப்பட்டு 12 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து சர்வதேசத்துக்கு ஒற்றுமையாக முதன் முதலில் எழுதியக் கடிதமாக இது அமைந்திருந்தது. அந்தக் கடிதத்தினால்  சாதகமான விளைவேதும் கிடைக்கவில்லை. பொறுப்புக்கூறல் சார்ந்த விடயங்கள் மனித உரிமைகள் பேரவைக்குள் முடக்கியே இருக்கிறது.

சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்காக உருவாக்கப்பட்ட கட்டமைப்புத் திறமையாகச் செயற்பட்டதா என்ற சந்தேகம் இருக்கிறது. அந்தக் கட்டமைப்பு இலங்கைக்குள் வருகைதந்து செயற்பட இலங்கை அரசு அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில், இந்தச் செப்டெம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கின்ற ஐ.நா. கூட்டத் தொடருக்கு முன்னதாக தமிழ்த் தரப்பு மீண்டும் ஒரு கூட்டுக்கடிதத்தை அனுப்புவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இது பாராட்டத்தக்கதே. யானைக்கு மணியைக் கட்டுதல் என்கிற விடயம் நடைபெறாதிருக்கையில் யாரேனும் மணியைக் கட்டியானால்  பிரச்சினை என்கிற தோரணை உருவாக்கப்படுவது தவறாகும்.

எல்லோருடைய நோக்கமும் ஒன்றாக இருக்கையில் யார் மணியைக் கட்டினால் என்ன என்று சிந்திக்கின்ற நேர்மை இல்லாமலிருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.
1948 தொடங்கி, ஐக்கியத் தேசியக் கட்சி அரசாங்கத்தினால் தமிழர்களின் சுயநிர்ணயப் போராட்டம் கையாளப்பட்டிருக்கிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் கையாளப்பட்டிருக்கிறது. இவை இரண்டும் இணைந்து கையாண்டிருக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கையாண்டிருக்கிறது.

இப்போது மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் தமிழர் பிரச்சினைக் கையாளப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் இம்முறை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வு நடைபெறவிருக்கிறது. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இலங்கைக்கு வந்து போயிருக்கும் ஒரு பின்னணியில் இந்தக் கூட்டுக் கடிதத் தயாரிப்பு நடைபெற்றிருக்கிறது.

தமிழ் மக்கள் சர்வதேச நீதிப் பொறிமுறையைக் கோரிக் கொண்டிருக்கையில், புதிதாக ஆட்சியிலுள்ள அரசாங்கமும் உள்நாட்டுப் பொறிமுறைக்கான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் கருத்துக்களும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக இல்லாதிருக்கின்ற அதேவேளை, இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டுப் பொறிமுறையின் நம்பகத் தன்மையைப் பலப்படுத்துவதாகக் காணப்படுகிறது.

எனவே,  உள்நாட்டுப் பொறிமுறையைப் பலப்படுத்தும்  கட்டமைப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தவேண்டிய தேவைப்பாடு இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சந்திப்புக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி அழைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், அக்கட்சி கலந்து கொள்ளவில்லை. இந்தக் கூட்டுக் கடிதத் தயாரிப்பில் கலந்து கொள்ளாத நிலையில், அக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், நடத்திய ஊடகச் சந்திப்பில், தமது கட்சி கடிதம் ஒன்றை ஐ.நாவுக்கு அனுப்பியதாகவும், உள்நாட்டுப் பொறிமுறையைத் தாம் கோரவில்லை என்று கூறியிருக்கிறார்.

இதைப் பொறுப்புள்ள ஒரு தமிழ்த் தேசியக் கட்சியாக அவர் கூறுவதற்குக் காரணம் என்ன. கூட்டுக் கடிதத் தயாரிப்பில் கலந்து பங்குகொள்ளாதிருந்ததுடன், அவர் அதனைக் கைவிட்டிருக்கலாம்.

ஆனால், தம்முடைய அரசியலை செய்வதற்காக இதனைச் சொல்லியிருக்கிறார் என்பது மாத்திரம் வெளிப்படை. தமிழ் மக்களின் ஏகபோக அரசியல் தரப்புத் தாங்களே என விடுதலைப் புலிகள் தங்களை அறிவித்துக் கொண்டிருந்து பின்னர்த் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அதற்காக உருவாக்கிக் கொண்டனர்.

ஆனால், ஆரம்பத்தில் கூட்டமைப்பில் இருந்த கட்சிகள் யுத்த மௌனிப்பின் பின் ஒவ்வொன்றாக விலகிக் கொண்டன. விலக்கப்பட்டதாகக் கொள்ளலாமா என்பது இப்போதும் சந்தேகமானது. அத்துடன் விலக்கப்பட்டனவா, விலகிக் கொண்டனவா, விலகுவதற்கான சூழல் உருவாக்கப்பட்டதால் அது ஏற்பட்டதா என்பது இன்னமும் யாராலும் புரிதலுக்குட்படுத்தப்படவில்லை என்பது வேறு விடயம்.

இந்த நிலையில், ஒவ்வொரு விடயத்திற்கும் வியாக்கியானங்கள்
முன்வைக்கப்படுவது நடைபெறுகிறது.இவற்றினை ஒவ்வொருவர் ஒவ்வொரு வகையில் விளங்கிக் கொள்வதும், நடைபெற்றுவரும் தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கென்று செயற்படுகின்ற கட்சிகள் தாய்க் கட்சி, தந்தை கட்சி, ஏக தரப்பு என்றெல்லாம் நடந்து கொள்வது  சர்வதேச தரப்புகளை அணுகுகின்ற வேளைகளிலும் தேவைதானா என்பதுவே கேள்வியாக இருக்கிறது.

தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளைப் பேசுவதற்குத் திறக்கப்பட்டிருக்கும் ஒரே
அனைத்துலக அரங்கம் ஐ.நா. என்ற வகையில், இதனைப் பலவீனமான நிலையுடன் அணுகுவதால் பயன் ஒன்று விளையுமா என்பதனை விளங்கிக் கொள்வது முக்கியமானது. ஆனால், பொறுப்புக்கூறலை அனைத்துலகை நீதிமன்றங்களிடம் பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையோடு இனப்படுகொலையைத் திட்டமிட்டவகையில் நடத்தி வந்த ஒரு நாட்டில் இருந்து கொண்டு ஒற்றுமையின்மையுடன் அரசியல் நடத்துவதால் பயன் விளையுமானால் நல்லதே.

ஈழத் தமிழர்கள் நீதிக்கான தமது போராட்டத்தில் அனைத்துலக அரங்கில் தமக்கு ஆதரவான சக்திகளைத் திரட்டிக்கொள்ள, ஈர்த்துக் கொள்ளப் பரந்துபட்ட வேலைத் திட்டங்களில்லாத நிலையில், தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டக் கூடிய விதத்தில்
 ஐ.நா. நகர்ந்துவரும் சூழலில் தமிழர் தரப்பின் ஒற்றுமையின்மை மேலும் பயனற்ற எதிர்காலத்தையே கொண்டுவரும் என்பதனை யாரும் மறந்துவிடக் கூடாது.

இது தமிழரசுக் கட்சிக்கும் புரிய வேண்டும். இல்லாதுவிடின் மக்களால் புரியவைக்கப்படுதலே நல்லது.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஓற்றுமையின்மையே-தமிழரின்-இயலாமை/91-362706

மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர்!

1 month 1 week ago
மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர்! யாழ் - மட்டுவில் பகுதியில் அமைக்கப்பட்டு இயங்காது உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டார். யாழ். மவட்டத்தின் தென்மராட்சி பிரதேச செயலக எல்லைகுட்பட்ட மட்டுவில் பிரதேசத்தில் 2022 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 20 திகதி அன்று அன்றைய பிரதமர் மகிந்தராஜபக்சவினால் திறத்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் எந்தவொரு வர்த்தக செயற்பாடும் இடம்பெறாத நிலையில் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நேரில் சென்று பார்வையிட்டதுடன் இயங்கச் செய்வதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இவ் விஜயத்தின் போது யாழ்-கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க,இளங்குமரன், தென்மராட்சி பிரதேச செயலாளர், உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். https://newuthayan.com/article/மட்டுவிலில்_அமைந்துள்ள_பொருளாதார_மத்திய_நிலையத்தை_பார்வையிட்ட_அமைச்சர்!

மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர்!

1 month 1 week ago

மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர்!

1189889692.jpg

யாழ் - மட்டுவில் பகுதியில் அமைக்கப்பட்டு இயங்காது உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டார்.

யாழ். மவட்டத்தின் தென்மராட்சி பிரதேச செயலக எல்லைகுட்பட்ட மட்டுவில் பிரதேசத்தில் 2022 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 20 திகதி அன்று அன்றைய பிரதமர் மகிந்தராஜபக்சவினால் திறத்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் எந்தவொரு வர்த்தக செயற்பாடும் இடம்பெறாத நிலையில் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நேரில் சென்று பார்வையிட்டதுடன் இயங்கச் செய்வதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.  

இவ் விஜயத்தின் போது யாழ்-கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க,இளங்குமரன், தென்மராட்சி பிரதேச செயலாளர், உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். 

https://newuthayan.com/article/மட்டுவிலில்_அமைந்துள்ள_பொருளாதார_மத்திய_நிலையத்தை_பார்வையிட்ட_அமைச்சர்!

சைபர் குற்ற மையங்கள்; பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவித்தல்!

1 month 1 week ago
சைபர் குற்ற மையங்கள்; பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவித்தல்! கிழக்கு ஆசியாவில் இயங்கும் சைபர் குற்ற மையங்களுக்கு இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்களை மோசடியாக ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கை நடைபெறுவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஐடி துறையில் வேலை வழங்குவதாகக் கூறி, இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 50,000 பேரை ஆட்சேர்ப்பு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய ஐந்து சைபர் குற்ற மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சமூக ஊடகங்கள் மூலம் போலி வேலை விளம்பரங்கள் பரப்பப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில வாரங்களில், இத்தகைய மோசடி மையங்களுக்கு 11 இலங்கையர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், இலங்கையில் வசிப்பவர்களுக்கு அப்பால், டுபாயில் பணிபுரியும் இலங்கையர்களும் ஐடி வேலை வாய்ப்புகள் என்ற போர்வையில் இம்மையங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, தாய்லாந்து, மியான்மார், கம்போடியா, லாவோஸ் போன்ற நாடுகளில் வேலை வாய்ப்புகள் இருப்பதாகக் கூறி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் விளம்பரங்களுக்கு பதிலளிக்கும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. https://www.samakalam.com/சைபர்-குற்ற-மையங்கள்-பாத/

சைபர் குற்ற மையங்கள்; பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவித்தல்!

1 month 1 week ago

சைபர் குற்ற மையங்கள்; பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவித்தல்!

கிழக்கு ஆசியாவில் இயங்கும் சைபர் குற்ற மையங்களுக்கு இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்களை மோசடியாக ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கை நடைபெறுவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐடி துறையில் வேலை வழங்குவதாகக் கூறி, இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 50,000 பேரை ஆட்சேர்ப்பு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய ஐந்து சைபர் குற்ற மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சமூக ஊடகங்கள் மூலம் போலி வேலை விளம்பரங்கள் பரப்பப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில வாரங்களில், இத்தகைய மோசடி மையங்களுக்கு 11 இலங்கையர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கையில் வசிப்பவர்களுக்கு அப்பால், டுபாயில் பணிபுரியும் இலங்கையர்களும் ஐடி வேலை வாய்ப்புகள் என்ற போர்வையில் இம்மையங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, தாய்லாந்து, மியான்மார், கம்போடியா, லாவோஸ் போன்ற நாடுகளில் வேலை வாய்ப்புகள் இருப்பதாகக் கூறி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் விளம்பரங்களுக்கு பதிலளிக்கும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

https://www.samakalam.com/சைபர்-குற்ற-மையங்கள்-பாத/