Aggregator

வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைக்க தேசியக் குழு நியமனம்

1 month ago

வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைக்க தேசியக் குழு நியமனம்

Dec 8, 2025 - 03:52 PM

வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைக்க தேசியக் குழு நியமனம்

பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை முறையாக ஒருங்கிணைத்து, உரிய நபர்களுக்கு வழங்குவதற்காக தேசிய அளவிலான குழு ஒன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார். 

இன்று (08) இடம்பெற்ற அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர இதனை தெரிவித்தார். 

வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் உதவிகள் மற்றும் உபகரணங்கள் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சரியாகக் கிடைப்பதை இந்தக் குழு உறுதி செய்யும் எனவும் அவர் தெரிவித்தார். 

இந்தக் குழுவின் தலைவராக பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்தக் குழு இன்று (08) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

https://adaderanatamil.lk/news/cmix059tv02iso29ndslfe5ct

நைஜீரிய கத்தோலிக்க பாடசாலையில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தல்

1 month ago
வடக்கு நைஜீரியாவில் கடத்தப்பட்ட 100 மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர் 08 Dec, 2025 | 02:59 PM கடந்த மாதம் வடக்கு நைஜீரியாவிலுள்ள கத்தோலிக்க பாடசாலையொன்றில் அத்துமீறி நுழைந்த ஆயுதக் குழுவினர் கடத்தி சென்ற நூற்றுக்கணக்கான மாணவர்களில் மேலும் 100 மாணவர்கள்விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விடுவிக்கப்பட்ட 100 மாணவர்கள் நைஜீரியாவின் தலைநகரான அபூஜாவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை நைஜர் மாநில உள்ளூர் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், விடுவிக்கப்பட்ட 100 மாணவர்களும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன், பின்னர் குடும்பத்துடன் மீண்டும் இணைக்கப்படுவார்கள் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நைஜர் மாநிலத்தின் அகவாரா மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க பாடசாலையில் கடந்த மாதம் வெள்ளிக்கிழமை (21) அததுமீறி நுழைந்த ஆயுதக் குழுவினர் 303 மாணவர்கள் மற்றும் 12 ஆசிரியர்களை கடத்தி சென்றனர். இதில் 10 முதல் 18 வயதிற்குட்பட்ட ஆண் மற்றும் பெண் மாணவர்கள் அடங்குவதாக அந்நாட்டு கிறிஸ்துவ சங்கம் தெரிவித்தது. கடத்தப்பட்ட மாணவர்களில் 50 பேர் தப்பி சென்று அவர்களின் குடும்பத்துடன் சேர்ந்துள்ளனர். மேலும் 153 மாணவர்கள் மற்றும் 12 ஆசிரியர்கள் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/232767

நிவாரண பொருட்களுடன் யாழ். பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கியது அமெரிக்க விமானம்

1 month ago
Published By: Digital Desk 3 08 Dec, 2025 | 03:06 PM நிவாரண பணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.07) கொழும்புக்கு வருகை தந்த அமெரிக்கா விமான படையின் C130J Super Hercules விமானம் இன்று திங்கட்கிழமை (டிச.08) காலை நிவாரண பொருட்களுடன் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. நாடு முழுவதும் நிவார பணிகளுக்கு அமெரிக்காவிமான படையின் இரு Super Hercules விமானங்கள் வருகை தந்துள்ளதுடன் இலங்கை விமான படையினருடன் இணைந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/232771

நிவாரண பொருட்களுடன் யாழ். பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கியது அமெரிக்க விமானம்

1 month ago

Published By: Digital Desk 3

08 Dec, 2025 | 03:06 PM

image

நிவாரண பணிகளுக்கு  ஞாயிற்றுக்கிழமை (டிச.07) கொழும்புக்கு வருகை தந்த  அமெரிக்கா விமான படையின் C130J Super Hercules விமானம்  இன்று திங்கட்கிழமை (டிச.08) காலை நிவாரண பொருட்களுடன் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

நாடு முழுவதும் நிவார பணிகளுக்கு அமெரிக்காவிமான படையின் இரு Super Hercules  விமானங்கள் வருகை தந்துள்ளதுடன் இலங்கை விமான படையினருடன் இணைந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/232771

மக்களே அவதானம் - புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது : பேரா நாகமுத்து பிரதீபராஜா

1 month ago
இலங்கையில் அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது - பிபிசி வானிலை சேவை 08 Dec, 2025 | 03:34 PM இலங்கையில் அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக பிபிசி வானிலை சேவை அறிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் காணப்படும் வளிமண்டல மேகமானது இந்த வாரம் ஒரு புயலாக வலுப்பெறக்கூடும் என பிபிசி வானிலை சேவை அறிவித்துள்ளது. இந்தப் புயல் படிப்படியாக மேற்கு நோக்கி நகரும். இது புயலாக மாறினாலும் மாறாவிட்டாலும் இலங்கையின் சில பகுதிகளில் இடையிடையே நிலையின்மையுடனான கனமழை பெய்யும் என பிபிசி வானிலை ஆய்வாளர் லூயிஸ் லியர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/232779

டிரம்பின் புதிய தேசிய பாதுகாப்பு உத்திக்கு ரஷ்யா வரவேற்பு!

1 month ago
டிரம்பின் புதிய தேசிய பாதுகாப்பு உத்திக்கு ரஷ்யா வரவேற்பு! December 8, 2025 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய தேசிய பாதுகாப்பு உத்தியை ரஷ்யா வரவேற்றுள்ளது. அது ரஷ்யாவின் தொலைநோக்கு பார்வையுடன் பெரும்பாலும் ஒத்துப்போகிறது என்றும் ரஷ்யா கூறியிருக்கிறது. இந்த வாரம் அமெரிக்க அரசு வெளியிட்ட 33 பக்க ஆவணம், ஐரோப்பா ‘நாகரிக அழிவை’ எதிர்கொள்கிறது என்று கூறுகிறது. அது ரஷ்யாவை அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாகக் காட்டவில்லை. வெளிநாட்டு செல்வாக்கை எதிர்த்துப் போராடுவது, வெகுஜன இடப்பெயர்வை நிறுத்துவது மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தணிக்கை நடைமுறையை நிராகரிப்பது ஆகியவை அறிக்கையில் மற்ற முன்னுரிமைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. “நாங்கள் பார்க்கும் மாற்றங்கள்… பெரும்பாலும் எங்கள் நோக்கத்தோடு ஒத்துப்போகின்றன” என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான டாஸ் வெளியிட்ட பேட்டியில் கூறினார். “இது ஒரு நேர்மறையான நடவடிக்கையாக நாங்கள் கருதுகிறோம்,” என்று அவர் கூறினார். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் ஆவணத்தை ரஷ்யா தொடர்ந்து பகுப்பாய்வு செய்யும் என்றும் அவர் கூறினார். இந்த ஆவணம் அமெரிக்க வெளிநாட்டு உறவுகளை சிதைக்கக்கூடும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர். ஜேசன் க்ரோ, இந்த உத்தி “உலக அரங்கில் அமெரிக்காவின் நிலைக்கு பேரழிவு” என்று கூறினார். https://www.ilakku.org/russia-welcomes-trumps-new-national-security-strategy/

டிரம்பின் புதிய தேசிய பாதுகாப்பு உத்திக்கு ரஷ்யா வரவேற்பு!

1 month ago

டிரம்பின் புதிய தேசிய பாதுகாப்பு உத்திக்கு ரஷ்யா வரவேற்பு!

December 8, 2025

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய தேசிய பாதுகாப்பு உத்தியை ரஷ்யா வரவேற்றுள்ளது. அது ரஷ்யாவின் தொலைநோக்கு பார்வையுடன் பெரும்பாலும் ஒத்துப்போகிறது என்றும் ரஷ்யா கூறியிருக்கிறது.

இந்த வாரம் அமெரிக்க அரசு வெளியிட்ட 33 பக்க ஆவணம், ஐரோப்பா ‘நாகரிக அழிவை’ எதிர்கொள்கிறது என்று கூறுகிறது. அது ரஷ்யாவை அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாகக் காட்டவில்லை. வெளிநாட்டு செல்வாக்கை எதிர்த்துப் போராடுவது, வெகுஜன இடப்பெயர்வை நிறுத்துவது மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தணிக்கை நடைமுறையை நிராகரிப்பது ஆகியவை அறிக்கையில் மற்ற முன்னுரிமைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

“நாங்கள் பார்க்கும் மாற்றங்கள்… பெரும்பாலும் எங்கள் நோக்கத்தோடு ஒத்துப்போகின்றன” என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான டாஸ் வெளியிட்ட பேட்டியில் கூறினார். “இது ஒரு நேர்மறையான நடவடிக்கையாக நாங்கள் கருதுகிறோம்,” என்று அவர் கூறினார். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் ஆவணத்தை ரஷ்யா தொடர்ந்து பகுப்பாய்வு செய்யும் என்றும் அவர் கூறினார்.

இந்த ஆவணம் அமெரிக்க வெளிநாட்டு உறவுகளை சிதைக்கக்கூடும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர். ஜேசன் க்ரோ, இந்த உத்தி “உலக அரங்கில் அமெரிக்காவின் நிலைக்கு பேரழிவு” என்று கூறினார். https://www.ilakku.org/russia-welcomes-trumps-new-national-security-strategy/

போர் நிறுத்த திட்டம் ; ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளது ; உக்ரேன் புரிந்துகொள்ளவில்லை - அமெரிக்க ஜனாதிபதி

1 month ago
போர் நிறுத்த திட்டம் ; ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளது ; உக்ரேன் புரிந்துகொள்ளவில்லை - அமெரிக்க ஜனாதிபதி Published By: Digital Desk 3 08 Dec, 2025 | 11:56 AM போர் நிறுத்தம், அமைதி திட்டத்தை ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், ஆனால் உக்ரேன் புரிந்துகொள்ளவில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரேன், ரஷ்யா இடையே இன்று திங்கட்கிழமை (டிச. 08) 1 ஆயிரத்து 383வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். போர் நிறுத்த திட்டம் தொடர்பாக 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்க உக்ரேன் மறுத்து வருகிறது. இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் உக்ரேன் - ரஷ்யா போர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த டொனால்ட் ட்ரம்ப், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின், உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியிடம் பேசி வருகிறோம். போர் நிறுத்தம், அமைதி திட்டத்தை ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளது. அது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், இந்த திட்டத்தை உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி புரிந்துகொள்ளவில்லை. அது எனக்கு ஏமாற்றம் தான்’ என்றார். https://www.virakesari.lk/article/232752

போர் நிறுத்த திட்டம் ; ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளது ; உக்ரேன் புரிந்துகொள்ளவில்லை - அமெரிக்க ஜனாதிபதி

1 month ago

போர் நிறுத்த திட்டம் ; ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளது ; உக்ரேன் புரிந்துகொள்ளவில்லை - அமெரிக்க ஜனாதிபதி

Published By: Digital Desk 3

08 Dec, 2025 | 11:56 AM

image

போர் நிறுத்தம், அமைதி திட்டத்தை ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், ஆனால் உக்ரேன் புரிந்துகொள்ளவில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உக்ரேன், ரஷ்யா இடையே இன்று திங்கட்கிழமை (டிச. 08) 1 ஆயிரத்து 383வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். போர் நிறுத்த திட்டம் தொடர்பாக 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்க உக்ரேன் மறுத்து வருகிறது. இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் உக்ரேன் - ரஷ்யா போர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த டொனால்ட் ட்ரம்ப், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின், உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியிடம் பேசி வருகிறோம். போர் நிறுத்தம், அமைதி திட்டத்தை ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளது. அது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், இந்த திட்டத்தை உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி புரிந்துகொள்ளவில்லை. அது எனக்கு ஏமாற்றம் தான்’ என்றார்.

https://www.virakesari.lk/article/232752

கம்போடியா மீது தாய்லாந்து தாக்குதல்

1 month ago
கம்போடியா மீது தாய்லாந்து தாக்குதல் 08 Dec, 2025 | 12:43 PM கம்போடியா மீது தாய்லாந்து இன்று (டிச.08) வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. எல்லையில் கம்போடியா முதலில் அத்துமீறி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதாகவும் இதற்கு பதிலடியாகவே வான்வழி தாக்குதல் நடத்தியதாகவும் தாய்லாந்து தெரிவித்துள்ளது. கம்போடியா நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் உயிரிழந்ததாகவும், இதற்கு பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் தாய்லாந்து தெரிவித்துள்ளது. அதேவேளை, தாய்லாந்து நடத்திய தாக்குதலில் கம்போடியாவில் ஏற்பட்ட உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. இந்த மோதலால் தாய்லாந்து, கம்போடியா இடையே மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/232757

கம்போடியா மீது தாய்லாந்து தாக்குதல்

1 month ago

கம்போடியா மீது தாய்லாந்து தாக்குதல்

08 Dec, 2025 | 12:43 PM

image

கம்போடியா மீது தாய்லாந்து இன்று (டிச.08) வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. எல்லையில் கம்போடியா முதலில் அத்துமீறி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதாகவும் இதற்கு பதிலடியாகவே வான்வழி தாக்குதல் நடத்தியதாகவும் தாய்லாந்து தெரிவித்துள்ளது.

கம்போடியா நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் உயிரிழந்ததாகவும், இதற்கு பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் தாய்லாந்து தெரிவித்துள்ளது.

அதேவேளை, தாய்லாந்து நடத்திய தாக்குதலில் கம்போடியாவில் ஏற்பட்ட உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. இந்த மோதலால் தாய்லாந்து, கம்போடியா இடையே மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/232757

ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை மார்ச் மாதம்!

1 month ago
ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை மார்ச் மாதம்! 08 Dec, 2025 | 01:15 PM கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு பிரதான நீதவான் அசங்க பி பண்டாரகம இன்று திங்கட்கிழமை (08) உத்தரவிட்டுள்ளார். 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதி நாடகம் நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேருக்கு எதிராக கருவாத்தோட்டம் பொலிஸாரால் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கொழும்பு பிரதான நீதவான் அசங்க பி பண்டாரகம முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் ஏனைய சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். இதனையடுத்து, இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/232760

ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை மார்ச் மாதம்!

1 month ago

ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை மார்ச் மாதம்!

08 Dec, 2025 | 01:15 PM

image

கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு பிரதான நீதவான் அசங்க பி பண்டாரகம இன்று திங்கட்கிழமை (08) உத்தரவிட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதி நாடகம் நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில்  ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேருக்கு எதிராக கருவாத்தோட்டம் பொலிஸாரால் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு கொழும்பு பிரதான நீதவான் அசங்க பி பண்டாரகம முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது, ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் ஏனைய சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். 

இதனையடுத்து, இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/232760

அரசியல் தலையீடுகள் இன்றி தகுதியான துணைவேந்தர் யாழ் பல்கலைக்கு தெரிவாகுவாரா?

1 month ago
அரசியல் தலையீடுகள் இன்றி தகுதியான துணைவேந்தர் யாழ் பல்கலைக்கு தெரிவாகுவாரா? 08 Dec, 2025 | 12:14 PM தம்பு லோவி அண்மைய மாதங்களில் பல்கலைக்கழகங்கள் பற்றிய பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய ரீதியான தரப்படுத்தல்கள் வெளியாகியிருந்தன. இவற்றுள் இங்கிலாந்தை அடிப்படையாக கொண்ட டைம்ஸ் உயர் கல்வி தரப்படுத்தல் ( Times Higher Education World University Rankings) முக்கியமானது. இதன்படி, தொடர்ந்து 10 ஆவது வருடமாக இங்கிலாந்தின் ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றது. இரண்டாவது இடத்தை அமெரிக்காவின் மஸ்ஸாச்சுட்டஸ் இன்ஸ்டிடியூட், மூன்றாம் இடத்தை ப்ரின்ஸ்ட்டன் பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவையும் பெற்றுள்ளன. முதல் 40 இடங்களில் சீனாவின் 5 பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ளன. அதேவேளை இந்தியாவின் பல்கலைக்கழகங்களும் இம்முறை சிறந்த இடங்களை பிடித்துள்ளன. இந்திய பல்கலைக்கழகங்கள் எவையும் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடிக்கவில்லை என்றபோதிலும், அதன் 128 பல்கலைக்கழகங்கள் சர்வதேச தரப்பட்டியலில் இடம்பிடித்துள்ளன. 2016 ஆம் ஆண்டு இந்தியாவின் 19 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இந்த பட்டியலில் இடம்பிடித்திருந்தன. ஆனால், கடந்த 10 வருடங்களில் இது 7 மடங்காக அதிகரித்துள்ளமை இந்திய பல்கலைக்கழகங்களின் முன்னேற்றப்பாதையை காட்டுகின்றன. இத்தகைய ஒரு பின்னணியில் நாம் இலங்கை பல்கலைக்கழகங்களின் நிலைமையை ஆராய்ந்துபார்ப்போமானால், இலங்கையின் எந்த பல்கலைக்கழகங்களும் முதல் 1000 க்குள் இடம்பிடிக்கவில்லை என்றபோதிலும், 5 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. கொழும்பு பல்கலைக்கழகம், பேராதனை பல்கலைக்கழகம், மொரட்டுவ பல்கலைக்கழகம், சிலிட் மற்றும் களனி பல்கலைக்கழகம் ஆகியவையே அவை. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் எந்த பல்கலைக்கழகங்களும் இந்த பட்டியலில் இடம்பிடிக்கவில்லை. இலங்கையின் மூத்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் யாழ் பல்கலைக்கழகம் இருக்கின்றபோதிலும், இலங்கையின் சிறந்த பல்கலைக்கழகங்களின் வரிசையில் 7 ஆவது இடத்திலேயே யாழ் பல்கலைக்கழகம் இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் வெளியான வெபோமெட்ரிக்ஸ் தரப்படுத்தலின்படி, கொழும்பு பல்கலைக்கழகம், பேராதனை பல்கலைக்கழகம், ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம், ருகுணு பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம் , மொரட்டுவ பல்கலைக்கழகம் ஆகியவை முதல் இடங்களை பிடித்துள்ளன. கிழக்கு பல்கலைக்கழகம் 7 ஆவது இடத்திலும், யாழ் பல்கலைக்கழகம் 8 ஆவது இடத்திலும் இருக்கிறன. முன்னர் 13 ஆவது இடத்தில் இருந்த கிழக்கு பல்கலைக்கழகம் 7 ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கின்றமை கவனிக்கத்தக்கது. இது கடந்த சில வருடங்களில், ஆய்வு, கல்வி செயற்பாடுகள் மற்றும் இதர செயற்பாடுகளில் பல்கலைக்கழக நிர்வாகமும் கல்வியாளர்களும் சிறப்பாக செயற்பட்டிருப்பதை காட்டுகின்றது. யாழ் பல்கலைக்கழகத்தை பொறுத்தவரையில், மாணவர் வளமும், ஆசிரியர் வளமும் மற்றும் பௌதிக வளங்களும் ஒப்பீட்டளவில் சிறப்பாக இருக்கின்ற நிலையிலும் புலம்பெயர் தமிழ் மக்களின் கணிசமான உதவிகள் கிடைகின்றநிலையிலும் சர்வதேச மற்றும் தேசிய ரீதியான தரப்படுத்தல்களில் தொடர்ந்தும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் பின்தங்கிய நிலையில் இருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. இந்த நிலைமைக்கான காரணங்களை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டிய அவசியத்தை இது வெளிப்படுத்துகின்றது. இந்த வகையில் யாழ் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தரை தெரிவுசெய்வதற்காக இன்று நடைபெறும் மதிப்பீடு முக்கியத்துவம்பெறுகின்றது. தமது அரசியல் மற்றும் சுய விருப்பங்களுக்கு இடமளிக்காமல் எதிர்காலத்தில் யாழ் பல்கலைக்கழகத்தை அதன் கல்வி மற்றும் ஆய்வு நடவடிக்கைகளின் ஊடாக முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்வதற்கும் பிராந்தியத்தின் சமூக, பொருளாதார அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்பை வழங்கக்கூடியதுமான சரியான ஒரு தலைமையை தேர்ந்தெடுக்கும் பொறுப்பினை மதிப்பீட்டு புள்ளிகளை வழங்கும் யாழ் பல்கலைக்கழக சபை உறுப்பினர்கள் கொண்டிருக்கின்றார்கள். கடந்த காலங்களில் பல்கலைக்கழக தெரிவில் அரசியல் தலையீடுகள் அதிகளவில் இருந்தமை அனைவருக்கும் வெளிப்படையான ஒரு உண்மை. ஆகவே, துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் தகைமை, மற்றும் அவர்கள் பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் ஆய்வு செயற்பாடுகளுக்கும் சமூக அபிவிருத்திக்கும் நலன்களுக்கும் எவ்வாறு கடந்த காலங்களில் பங்களித்திருக்கின்றார்கள் என்பதையும் அவர்களின் பற்றுறுதி, தலைமைத்துவப்பண்பு, சர்வதேச தொடர்புகள் ஆகியவற்றையும் கவனத்தில் எடுத்து சரியான ஒருவரை தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புவோம். https://www.virakesari.lk/article/232755

600க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் பாதிப்பு

1 month ago
600க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் பாதிப்பு இலங்கையை சமீபத்தில் தாக்கிய திட்வா புயல் புத்தளம் மாவட்டத்தில் மட்டும் 600க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகளை அழித்து, பல விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்க வைத்துள்ளதாக மீன்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது. மீன்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் புத்தளம் மாவட்ட மக்களுடன் உரையாடலை மேற்கொண்ட போது இவ் விடயம் தெரியவந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட இறால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கம் உதவும் என்று அமைச்சர் உறுதியளித்தார். "சமீபத்திய பேரழிவால் பாதிக்கப்பட்ட எவரையும் நாங்கள் விட்டுவிட மாட்டோம்"என்று அவர் கூறினார். மேலும்,கடல் அரிப்பு இறால் வளர்ப்பையும் பாதித்துள்ளதாக தெரிய வந்தது.கடல் அரிப்பை தடுக்க புத்தளம் கடற்கரையில் ஒரு சுவரைக் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகளைஅரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். https://www.tamilmirror.lk/செய்திகள்/600க்கும்-மேற்பட்ட-இறால்-பண்ணைகள்-பாதிப்பு/175-369246

600க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் பாதிப்பு

1 month ago

600க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் பாதிப்பு

இலங்கையை சமீபத்தில் தாக்கிய திட்வா புயல் புத்தளம் மாவட்டத்தில் மட்டும் 600க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகளை அழித்து, பல விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்க வைத்துள்ளதாக மீன்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மீன்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் புத்தளம் மாவட்ட மக்களுடன் உரையாடலை மேற்கொண்ட போது இவ் விடயம் தெரியவந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட இறால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கம் உதவும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.

"சமீபத்திய பேரழிவால் பாதிக்கப்பட்ட எவரையும் நாங்கள் விட்டுவிட மாட்டோம்"என்று அவர் கூறினார்.

மேலும்,கடல் அரிப்பு இறால் வளர்ப்பையும் பாதித்துள்ளதாக  தெரிய வந்தது.கடல் அரிப்பை தடுக்க புத்தளம் கடற்கரையில் ஒரு சுவரைக் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகளைஅரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

https://www.tamilmirror.lk/செய்திகள்/600க்கும்-மேற்பட்ட-இறால்-பண்ணைகள்-பாதிப்பு/175-369246

மண்சரிவு அனர்த்தங்கள்: கண்டி மாவட்டத்தில் 35 மாணவர்கள் – 10 ஆசிரியர்கள் மரணம்!

1 month ago
மண்சரிவு அனர்த்தங்கள்: கண்டி மாவட்டத்தில் 35 மாணவர்கள் – 10 ஆசிரியர்கள் மரணம்! நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக கண்டி மாவட்டத்தில் 35 பாடசாலை மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் நிஹால் அழகக்கோன் தெரிவித்துள்ளார். அத்துடன் மாத்தளை மாவட்டத்தில் ஒரு பாடசாலை மாணவர் உயிரிழந்துள்ளதாகவும், நுவரெலியா மாவட்டத்தின் தகவல்கள் தற்போது திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் காணாமல் போன மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், கண்டி மாவட்டத்தில் 97,850 பாடசாலை மாணவர்கள் அனர்த்த நிலை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் கூறியுள்ளார். இந்தநிலையில் மாத்தளை மாவட்டத்தில் 8,500 பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரிய எண்ணிக்கையிலான மாணவர்கள் தற்போது இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியுள்ள நிலையில், எதிர்வரும் 16 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படும்போது, அவர்கள் அருகில் உள்ள பாடசாலைக்கு சென்று தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.samakalam.com/மண்சரிவு-அனர்த்தங்கள்-க/

மண்சரிவு அனர்த்தங்கள்: கண்டி மாவட்டத்தில் 35 மாணவர்கள் – 10 ஆசிரியர்கள் மரணம்!

1 month ago

மண்சரிவு அனர்த்தங்கள்: கண்டி மாவட்டத்தில் 35 மாணவர்கள் – 10 ஆசிரியர்கள் மரணம்!

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக கண்டி மாவட்டத்தில் 35 பாடசாலை மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் நிஹால் அழகக்கோன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாத்தளை மாவட்டத்தில் ஒரு பாடசாலை மாணவர் உயிரிழந்துள்ளதாகவும், நுவரெலியா மாவட்டத்தின் தகவல்கள் தற்போது திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காணாமல் போன மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், கண்டி மாவட்டத்தில் 97,850 பாடசாலை மாணவர்கள் அனர்த்த நிலை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் கூறியுள்ளார்.

இந்தநிலையில் மாத்தளை மாவட்டத்தில் 8,500 பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரிய எண்ணிக்கையிலான மாணவர்கள் தற்போது இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியுள்ள நிலையில், எதிர்வரும் 16 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படும்போது, அவர்கள் அருகில் உள்ள பாடசாலைக்கு சென்று தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.samakalam.com/மண்சரிவு-அனர்த்தங்கள்-க/