Aggregator

இலங்கையின் 200 மில்லியன் டொலர் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

1 month ago

இலங்கையின் 200 மில்லியன் டொலர் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

Dec 7, 2025 - 07:23 PM

இலங்கையின் 200 மில்லியன் டொலர் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர நிதியிடல் வசதியின் (RFI) கீழ் இலங்கை விடுத்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் கோரிக்கைக்கு முன்னுரிமை அளிக்க சர்வதேச நாணய நிதியம் (IMF) தீர்மானித்துள்ளது. 

இந்த அவசர நிதியிடல் வசதியின் (RFI) கீழான உதவிகள், இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதியிடல் வசதியின் (EFF) கீழ் வழங்கப்படும் கடன் வசதிக்கு மேலதிகமாக வழங்கப்படும் நிதியிடல் வசதியாகும் என்றும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. 

அத்துடன், விரிவாக்கப்பட்ட நிதியிடல் வசதியின் (EFF) கீழ் நாட்டிற்கு கிடைக்கவுள்ள ஐந்தாவது மீளாய்வை நிறைவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக, 2026 ஆம் ஆண்டின் முற்பகுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவிலிருந்து நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்காக, இலங்கையினால் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர் உடனடி நிதி உதவிக்கான அவசர கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும், அது தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் எவன் பப்பஜோர்ஜியோ கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.

https://adaderanatamil.lk/news/cmivs9kmk02h7o29nc0m9axqp

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2025

1 month ago
அவுஸ்திரேலியாவுடனான 2ஆவது ஆஷஸ் டெஸ்டில் மோசமான நிலையில் இங்கிலாந்து 07 Dec, 2025 | 06:31 AM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பிறிஸ்பேன் கபா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் பகல் இரவு போட்டியில் இங்கிலாந்து மிக மோசமான தோல்வியை எதிர்கொண்டுள்ளது. முதலாவது இன்னிங்ஸ் நிறைவில் அவுஸ்திரேலியாவை விட 177 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த இங்கிலாந்து, 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதற்கு அமைய இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்ப்பதற்கு இங்கிலாந்து மேலும் 43 ஓட்டங்களைப் பெறவேண்டியுள்ளது. இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில் ஸக் க்ரோவ்லி 44 ஓட்டங்களையும் ஒல்லி போப் 26 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எவரும் 20 ஓட்டங்களை எட்டவில்லை. முதல் இன்னிங்ஸ் ஹீரோ ஜோ ரூட் 15 ஓட்டங்களுடன் வெளியேறினார். பந்துவீச்சில் மிச்செல் ஸ்டாக், மைக்கல் நேசர், ஸ்கொட் போலண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். போட்டியின் மூன்றாம் நாளான சனிக்கிழமை (06) தனது இரண்டாவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 378 ஓட்டங்களில் இருந்து தொடர்ந்த அவுஸ்திரேலியா மொத்த எண்ணிக்கை 511 ஓட்டங்களாக இருந்தபோது கடைசி விக்கெட்டை இழந்தது. அலெக்ஸ் கேரி தொடர்ந்து திறமையாகத் துடுப்பெடுத்தாடி 63 ஓட்டங்களைப் பெற்றதுடன் மைக்கல் நேசருடன் 7ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மிச்செல் ஸ்டாக் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 141 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டறிகளுடன் 77 ஓட்டங்களைப் பெற்றார். மிச்செல் ஸ்டாக், ஸ்கொட் போலண்ட் (21 ஆ.இ.) ஆகிய இருவரும் 9ஆவது விக்கெட்டில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். பந்துவீச்சில் ப்றைடன் கார்ஸ் 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். வியாழக்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 334 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. https://www.virakesari.lk/article/232635

'உடுத்த உடுப்பு கூட இல்லை' - திட்வா புயலில் வீடு இழந்த குடும்பம் சந்திக்கும் துயர நிலை

1 month ago
'உடுத்த உடுப்பு கூட இல்லை' - திட்வா புயலில் வீடு இழந்த குடும்பம் சந்திக்கும் துயர நிலை கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ''என் கணவர் கொழும்புல கஷ்டப்பட்டு வேலை செய்து, சாப்பிடாமல் கூட இருந்து அதிகாலை 3 மணிக்கு எல்லாம் போயிட்டு தான் கஷ்டப்பட்டு இந்த வீட்டை பெரிய வீடாக கட்டி எங்களையும் சந்தோஷமாக வைத்திருந்தாரு. இப்போ வீடு வாசல் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றோம்.'' என வீட்டை இழந்து தவிர்க்கும் கோகிலவதனி தெரிவிக்கின்றார். மாத்தளை மாவட்டத்திற்கு உட்பட்ட கல்மடுவ பகுதியில் வசித்து வருபவர் கோகிலவதனி. மூன்று பிள்ளைகளுக்கு தாயான கோகிலவதனியின் கணவர் தயாளன், கொழும்பில் கூலித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். திட்வா புயலின் தாக்கத்தினால் இலங்கையில் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான பேரில் கோகிலவதனியும் ஒருவர் ஆவார். தங்க நகைகளை வங்கியில் அடகு வைத்தும், கடன்களை பெற்றும் தமது எதிர்காலத்தை எண்ணி கட்டிய வீடு திட்வா புயல் காரணமாக இன்று இல்லை என்கிறார் அவர். உறவினர் வீட்டில் குழந்தைகள் கடந்த 26-ஆம் தேதி பெய்த கடும் மழையின் போது இவர்களது வீட்டிற்கு அருகிலுள்ள மண்மேடொன்று சரிந்து வீழ்ந்துள்ளது. இந்த மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் கோகிலவதனியின் வீட்டின் ஒரு புறம் முற்றாக சேதமடைந்துள்ளது. மண்மேடு ஒரு புறத்தை சேதப்படுத்தியுள்ளதுடன், மறுபுறத்தில் வீடு தாழிறங்கியுள்ளது. வீடு கட்டியுள்ள நிலம் தாழிறங்கதாலும், வீடு முழுவதும் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாலும் இந்த வீட்டில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீடு அமைந்துள்ள நிலத்திற்கு கீழ் ஊற்று நீர் ஊடறுத்து செல்வதை அவதானிக்க முடிந்ததுடன், அதனால் வீடு படிப்படியாக தாழிறங்கி வருகின்றது என அவர்கள் குறிப்பிடுகின்றனர். வீட்டை இழந்து கிறிஸ்தவ தேவாலயத்தில் தற்காலிகமாக தங்கியிருந்த கோகிலவதனியின் குழந்தைகள், தற்போது பல கிலோமீட்டர் தொலைவிலுள்ள அவரது உறவினர் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உடைந்த வீடு, மின்சாரம் இல்லாத நிலைமை, குடிநீர் என அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்துக்கொள்ள முடியாத நிலையிலுள்ள தாம் எவ்வாறு பிள்ளைகளை இந்த இடத்தில் வைத்திருப்பது என்கிறார் கோகிலவதனி. படக்குறிப்பு,மாத்தளை மாவட்டத்திற்கு உட்பட்ட கல்மடுவ பகுதியில் வசித்து வருபவர் கோகிலவதனி. சமைத்து சாப்பிட கூட இயலாத நிலை ''பிள்ளைகளையும் அங்க விட்டு விட்டோம். போன் பண்ணி எப்போ வாரீங்க. எப்போ வாரீங்க, எப்போ கூட்டிட்டு போறீங்கனு கேட்குறாங்க. அவர்களை கூட்டிட்டு வந்து எங்க வைத்திருப்பது என்று தெரியவில்லை. அவங்களும் பாவம். நாங்களும் என்ன செய்வது? இங்க கூட்டிட்டு வந்து வச்சிருக்க இயலாத நிலைமை. நாங்களே இன்னுமொரு இடத்தில தான் தங்கியிருக்கின்றோம். அடுத்த நாள் காலையில வீடு இருக்குமா என்ற சந்தேகத்தில் தான் வருகின்றோம் நாங்கள். சமைத்து சாப்பிட கூட இயலாத நிலைதான் இருக்கு.'' என கோகிலவதனி குறிப்பிடுகின்றார். படக்குறிப்பு,தயாளன் கடுமையான கஷ்டத்திற்கு மத்தியில் கட்டிய வீட்டில் தான் வாழ்ந்தது சிறிது காலமே என கோகிலவதனி கண்ணீர் மல்க கூறுகின்றார். ''இந்த வீட்டில் வந்து நாங்கள் சந்தோஷமாக இருந்தோம். வீடு கட்டி ஐந்து ஆறு வருஷமாகுது. நாங்கள் பிள்ளைகளோட சந்தோஷமாக இருந்தோம் . இப்போது எப்படி திரும்ப வந்து இந்த வீட்டில இருப்பது என்று கவலையாக இருக்குது. நகை எல்லாம் வச்சு தான் இந்த வீட்டை கட்டி எடுத்தோம். என்ன செய்வது என்றே தெரியவில்லை. உடுப்பு கூட இல்லை. இன்னொருத்தர் கிட்ட வாங்கி தான் நாங்க உடுப்பை உடுத்துறோம்'' என அவர் குறிப்பிடுகின்றார். ''இனி இந்த வீட்டில் வாழ கஷ்டம். சின்ன மழை வந்தாலும் இந்த இடத்தில் இப்போது இருக்க முடியாது." படக்குறிப்பு,தயாளன் "கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த பணத்தில் தான் இந்த வீட்டை கட்டினோம். அதுவும் இல்லாமல் போயிட்டது. மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது," என்கிறார் தயாளன். தயாளன், கோகிலவதனி தம்பதிக்கு மாத்திரம் அல்ல. லட்சக்கணக்கானோர் இப்படியான பல பிரச்னைகளை திட்வா புயலினால் எதிர்கொண்டுள்ளனர். வீடுகளை சுத்திகரிக்கவும், வீடுகளுக்கான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்ளவும், வீடுகளை புனரமைத்துக் கொள்ளவும் அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்யும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கூறியுள்ளார். தமது எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளதை எண்ணி தயாளனும் கோகிலவதனியும் இந்த நாட்களை கடத்தி வருகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czj0m0pdlvyo

'உடுத்த உடுப்பு கூட இல்லை' - திட்வா புயலில் வீடு இழந்த குடும்பம் சந்திக்கும் துயர நிலை

1 month ago

'உடுத்த உடுப்பு கூட இல்லை' - திட்வா புயலில் வீடு இழந்த குடும்பம் சந்திக்கும் துயர நிலை

இலங்கை, திட்வா புயல்

கட்டுரை தகவல்

  • ரஞ்சன் அருண் பிரசாத்

  • பிபிசி தமிழுக்காக

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

''என் கணவர் கொழும்புல கஷ்டப்பட்டு வேலை செய்து, சாப்பிடாமல் கூட இருந்து அதிகாலை 3 மணிக்கு எல்லாம் போயிட்டு தான் கஷ்டப்பட்டு இந்த வீட்டை பெரிய வீடாக கட்டி எங்களையும் சந்தோஷமாக வைத்திருந்தாரு. இப்போ வீடு வாசல் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றோம்.'' என வீட்டை இழந்து தவிர்க்கும் கோகிலவதனி தெரிவிக்கின்றார்.

மாத்தளை மாவட்டத்திற்கு உட்பட்ட கல்மடுவ பகுதியில் வசித்து வருபவர் கோகிலவதனி. மூன்று பிள்ளைகளுக்கு தாயான கோகிலவதனியின் கணவர் தயாளன், கொழும்பில் கூலித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்.

திட்வா புயலின் தாக்கத்தினால் இலங்கையில் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான பேரில் கோகிலவதனியும் ஒருவர் ஆவார்.

தங்க நகைகளை வங்கியில் அடகு வைத்தும், கடன்களை பெற்றும் தமது எதிர்காலத்தை எண்ணி கட்டிய வீடு திட்வா புயல் காரணமாக இன்று இல்லை என்கிறார் அவர்.

இலங்கை, திட்வா புயல்

உறவினர் வீட்டில் குழந்தைகள்

கடந்த 26-ஆம் தேதி பெய்த கடும் மழையின் போது இவர்களது வீட்டிற்கு அருகிலுள்ள மண்மேடொன்று சரிந்து வீழ்ந்துள்ளது. இந்த மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் கோகிலவதனியின் வீட்டின் ஒரு புறம் முற்றாக சேதமடைந்துள்ளது.

மண்மேடு ஒரு புறத்தை சேதப்படுத்தியுள்ளதுடன், மறுபுறத்தில் வீடு தாழிறங்கியுள்ளது. வீடு கட்டியுள்ள நிலம் தாழிறங்கதாலும், வீடு முழுவதும் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாலும் இந்த வீட்டில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வீடு அமைந்துள்ள நிலத்திற்கு கீழ் ஊற்று நீர் ஊடறுத்து செல்வதை அவதானிக்க முடிந்ததுடன், அதனால் வீடு படிப்படியாக தாழிறங்கி வருகின்றது என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

வீட்டை இழந்து கிறிஸ்தவ தேவாலயத்தில் தற்காலிகமாக தங்கியிருந்த கோகிலவதனியின் குழந்தைகள், தற்போது பல கிலோமீட்டர் தொலைவிலுள்ள அவரது உறவினர் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

உடைந்த வீடு, மின்சாரம் இல்லாத நிலைமை, குடிநீர் என அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்துக்கொள்ள முடியாத நிலையிலுள்ள தாம் எவ்வாறு பிள்ளைகளை இந்த இடத்தில் வைத்திருப்பது என்கிறார் கோகிலவதனி.

இலங்கை, திட்வா புயல்

படக்குறிப்பு,மாத்தளை மாவட்டத்திற்கு உட்பட்ட கல்மடுவ பகுதியில் வசித்து வருபவர் கோகிலவதனி.

சமைத்து சாப்பிட கூட இயலாத நிலை

''பிள்ளைகளையும் அங்க விட்டு விட்டோம். போன் பண்ணி எப்போ வாரீங்க. எப்போ வாரீங்க, எப்போ கூட்டிட்டு போறீங்கனு கேட்குறாங்க. அவர்களை கூட்டிட்டு வந்து எங்க வைத்திருப்பது என்று தெரியவில்லை. அவங்களும் பாவம். நாங்களும் என்ன செய்வது? இங்க கூட்டிட்டு வந்து வச்சிருக்க இயலாத நிலைமை. நாங்களே இன்னுமொரு இடத்தில தான் தங்கியிருக்கின்றோம். அடுத்த நாள் காலையில வீடு இருக்குமா என்ற சந்தேகத்தில் தான் வருகின்றோம் நாங்கள். சமைத்து சாப்பிட கூட இயலாத நிலைதான் இருக்கு.'' என கோகிலவதனி குறிப்பிடுகின்றார்.

இலங்கை, திட்வா புயல்

படக்குறிப்பு,தயாளன்

கடுமையான கஷ்டத்திற்கு மத்தியில் கட்டிய வீட்டில் தான் வாழ்ந்தது சிறிது காலமே என கோகிலவதனி கண்ணீர் மல்க கூறுகின்றார்.

''இந்த வீட்டில் வந்து நாங்கள் சந்தோஷமாக இருந்தோம். வீடு கட்டி ஐந்து ஆறு வருஷமாகுது. நாங்கள் பிள்ளைகளோட சந்தோஷமாக இருந்தோம் . இப்போது எப்படி திரும்ப வந்து இந்த வீட்டில இருப்பது என்று கவலையாக இருக்குது. நகை எல்லாம் வச்சு தான் இந்த வீட்டை கட்டி எடுத்தோம். என்ன செய்வது என்றே தெரியவில்லை. உடுப்பு கூட இல்லை. இன்னொருத்தர் கிட்ட வாங்கி தான் நாங்க உடுப்பை உடுத்துறோம்'' என அவர் குறிப்பிடுகின்றார்.

''இனி இந்த வீட்டில் வாழ கஷ்டம். சின்ன மழை வந்தாலும் இந்த இடத்தில் இப்போது இருக்க முடியாது."

இலங்கை, திட்வா புயல்

படக்குறிப்பு,தயாளன்

"கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த பணத்தில் தான் இந்த வீட்டை கட்டினோம். அதுவும் இல்லாமல் போயிட்டது. மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது," என்கிறார் தயாளன்.

தயாளன், கோகிலவதனி தம்பதிக்கு மாத்திரம் அல்ல. லட்சக்கணக்கானோர் இப்படியான பல பிரச்னைகளை திட்வா புயலினால் எதிர்கொண்டுள்ளனர்.

வீடுகளை சுத்திகரிக்கவும், வீடுகளுக்கான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்ளவும், வீடுகளை புனரமைத்துக் கொள்ளவும் அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்யும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கூறியுள்ளார்.

தமது எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளதை எண்ணி தயாளனும் கோகிலவதனியும் இந்த நாட்களை கடத்தி வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/czj0m0pdlvyo

அனர்த்தங்களில் சிக்கி புதையுண்ட 8 சடலங்கள் துபாய் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்பு

1 month ago
அனர்த்தங்களில் சிக்கி புதையுண்ட 8 சடலங்கள் துபாய் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்பு 07 Dec, 2025 | 06:44 PM நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் மண்ணுள் புதையுண்ட சடலங்களை கண்டுபிடிப்பதற்காக ஜக்கிய அரபு எமிரேட்டிஸ் இயங்கும் துபாய் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் இதுவரை ரஜத்தனவில்லவில் 8 சடலங்களை தமது மோப்ப நாய்கள் ஊடாக கண்டுபிடித்துள்ளனர். இந்த அணியினர் தமது வாகனங்கள், அம்புலன்ஸ் மற்றும் மோப்ப நாய்கள், வல்லங்கள் சகிதம் இலங்கை வந்தடைந்து, அனர்த்தத்தில் காணாமல் போனோர்களது சடலங்களை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக நாட்டு மக்கள் அவர்களது உன்னத சேவையை ஆதரவளித்து, சமூக ஊடகங்களில் நன்றி தெரிவித்து வருகின்றனர். இவர்களது சகல மொழிபெயர்ப்பு, கொழும்பில் உள்ள தூதரக அதிகாரி அப்புதல்லாஹ் மற்றும் அப்பிரதேசத்தில் உள்ள இராணுவ அதிகாரி, பொலிஸார் இணைந்து இச்சேவையினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/232710

அனர்த்தங்களில் சிக்கி புதையுண்ட 8 சடலங்கள் துபாய் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்பு

1 month ago

அனர்த்தங்களில் சிக்கி புதையுண்ட 8 சடலங்கள் துபாய் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்பு

07 Dec, 2025 | 06:44 PM

image

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் மண்ணுள் புதையுண்ட சடலங்களை கண்டுபிடிப்பதற்காக ஜக்கிய அரபு எமிரேட்டிஸ் இயங்கும் துபாய் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் இதுவரை ரஜத்தனவில்லவில் 8 சடலங்களை தமது மோப்ப நாய்கள் ஊடாக கண்டுபிடித்துள்ளனர்.

இந்த அணியினர் தமது வாகனங்கள், அம்புலன்ஸ் மற்றும் மோப்ப நாய்கள், வல்லங்கள் சகிதம் இலங்கை வந்தடைந்து, அனர்த்தத்தில் காணாமல் போனோர்களது சடலங்களை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக நாட்டு மக்கள் அவர்களது உன்னத சேவையை ஆதரவளித்து, சமூக ஊடகங்களில் நன்றி தெரிவித்து வருகின்றனர். 

இவர்களது சகல மொழிபெயர்ப்பு, கொழும்பில் உள்ள தூதரக அதிகாரி அப்புதல்லாஹ் மற்றும் அப்பிரதேசத்தில் உள்ள இராணுவ அதிகாரி, பொலிஸார் இணைந்து இச்சேவையினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1002624579.jpg

1002624582.jpg

1002624602.jpg

1002624667.jpg

https://www.virakesari.lk/article/232710

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2025

1 month ago
இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு அவுஸ்திரேலியா துணிச்சலான பதில் 05 Dec, 2025 | 11:21 PM (நெவில் அன்தனி) பிறிஸ்பேன் கபா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவது ஆஷஷ் டெஸ்ட் கிரிக்கெட் பகல் இரவு போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் பெற்ற 334 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலியா 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்களை இழந்து 376 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அவுஸ்திரேலியா சார்பாக துடுப்பெடுத்தாடிய அனைவருமே திறமையை வெளிப்படுத்தியதுடன் அவர்களில் மூவர் அரைச் சதங்கள் குவித்தனர். அத்துடன் முதல் நான்கு விக்கெட்களில் பதிவான 50 அல்லது அதற்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் கொண்ட இணைப்பாட்டங்கள் அவுஸ்திரேலியாவை பலப்படுத்தின. ட்ரவிஸ் ஹெட் (33), ஜேக் வெதரோல்ட் ஆகிய இருவரும் 77 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். தொடர்ந்து ஜேக் வெதரோல்ட், மானுஸ் லபுஷேன் ஆகிய இருவரும் இரண்டாவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஜேக் வெதரோல்ட் 72 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் மானுஸ் லபுஷேன் (65), ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் மேலும் 50 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இதனை அடுத்து ஸ்டீவன் ஸ்மித் (61), கெமரன் க்றீன் (45) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 95 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஆனால், இருவரும் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து ஜொஷ் இங்லிஸ் 23 ஓட்டங்களுடன் வெளியேறினார். ஆட்ட நேர முடிவில் அலெக்ஸ் கேரி 46 ஓட்டங்களுடனும் மைக்கல் நேசர் 15 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் ப்றைடன் கார்ஸ் 113 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பென் ஸ்டோக்ஸ் 93 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். முன்னதாக போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 9 விக்கெட் இழப்புக்கு 325 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இங்கிலாந்து 334 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கடைசி விக்கெட்டை இழந்தது. ஜோ ரூட்டும் இழந்த ஜொவ்ரா ஆச்சரும் கடைசி விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஜொவ்ரா ஆச்சர் 38 ஓட்டங்ளைப் பெற்றதுடன் ஜோ ரூட் 138 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் மிச்செல் ஸ்டாக் 75 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றினார். மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும். https://www.virakesari.lk/article/232574

ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்

1 month ago
எமது வீட்டின் முன்னால் வந்து நின்ற இந்திய இராணுவ அணி வீட்டின் மீது சரமாரியாகத் துப்பாக்கியினால்ச் சுடத் தொடங்கியது. சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் அவரை தொடர்ச்சியான துப்பாக்கி வேட்டுக்கள் எமது வீடு நோக்கி நடத்தப்பட்டன. அந்த இருள்வேளையிலும் எமது வீடு திருவிழாக் கோல போலக் காட்சியளித்தது. சிறிது நேரத்தில் அவர்கள் வீட்டினுள் புகுந்தார்கள். எவரையும் காணாததால் எமது அயல் வீட்டிற்குச் சென்றார்கள். ஆனால் அவர்கள் எல்லோரு நல்லூரிற்குப் போய்விட்டார்கள் என்று நாம் எண்ணியிருக்க, "ஐயோ, பிள்ளைகள் இருக்கினம், சுடாதேயுங்கோ, வெட்டாதையுங்கோ" என்று அவலக் குரல்கள் கேட்கத் தொடங்கின. "அடக் கடவுளே, அவர்கள் எவரும் நல்லூரிற்குப் போகவில்லை" என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். அந்த அவலக் குரல்கள் எவையுமே இந்திய இராணுவத்தின் காதுகளுக்கு ஏறவில்லை. சரமாரியாகச் சுடத்தொடங்கியது இந்தியாவின் சாத்தான் படை. இடைவிடாது 30 நிமிடங்கள் வரை துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. அதன்பின்னர் எந்த அழுகுரலும் எமக்குக் கேட்கவில்லை. சுமார் காலை 4 மணியிருக்கலாம். கிழக்கில் கீற்றலான வெளிச்சம் பரவத் தொடங்கியிருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் நாமிருக்கும் பகுதியும் வெளிச்சமாகி விடும். நிச்சயம் எம்மைக் காண்பார்கள், நாமும் கொல்லப்படுவோம் என்பது உறுதி என்பது புரிந்தது. "சரி, இனி இதுக்குள்ள இருக்கேலாது, கையை தலைக்கு மேலால தூக்கிக்கொண்டு வெளியில போவம்" என்று தந்தையார் மெல்லிய குரலில் கூறிக்கொண்டிருக்க, "யாராவது இன்னும் உள்ளே ஒளிந்திருந்தால் இப்போதே வெளியே வாருங்கள், அல்லது நாம் உள்ளே வந்து சுட்டுக் கொல்வோம்" என்று ஆங்கிலத்தில் ஒருவன் கத்தினான். "வேறு வழியில்லை, இனிமேல் இருந்தால் கொன்றுவிடுவார்கள், சரி வெளியில் வரலாம்" என்று தந்தையார் கூறவும், இருந்த இடத்திலிருந்து எழுந்து, கைகளைத் தலைக்கு மேலே தூக்கிப் பிடித்தப‌டி, "நாம் சிவிலியன்கள், எங்களைச் சுடவேண்டாம்" என்று அழுதபடியே வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினோம். சில அடிகள்தான் முன்னால் எடுத்து வைத்திருப்போம். எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியவில்லை, சுமார் 30 அல்லது 40 இந்திய இராணுவத்தினர் எம்மைச் சூழ்ந்துகொண்டார்கள். சிலர் துப்பாக்கிகளை எமக்கு நேரே பிடித்தப‌டி சுட ஆயத்தமாவது தெரிந்தது. எமது வாழ்க்கை முடிவிற்கு வரப்போவது தெரியவே அழத்தொடங்கினோம். அவர்களுள் ஒருவன் முன்னால் வந்தான். சுமார் 50 இல் இருந்து 55 வயது வரை இருக்கலாம், ஹிந்தியில் ஏனைய இராணுவத்தினருக்கு ஏதோவொன்றைச் சொல்லிவிட்டு, "நீ புலிதானே, எங்கே ஆயுதங்களை ஒளித்து வைத்திருக்கிறாய்?" என்று கேட்டுக்கொண்டே தந்தையாரை துப்பாக்கியின் பின்புறத்தால் கடுமையாகத் தாக்கத் தொடங்கினான். அடியின் அகோரம் தாங்காது அவர் கீழே வீழ்ந்தபடி, "நான் ஒரு தபால் அதிபர், எனக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பில்லை" என்று ஆங்கிலத்தில் அலறத் தொடங்கினார். அருகில் நின்ற இன்னொரு இராணுவத்தினன் எனது பிடரியில் ஓங்கி அறைந்தான், சிறிதுநேரம் கண்கள் கலங்கி தலைசுற்றத் தொடங்கியது. தந்தையார் தன்னை தபால் அதிபர் என்று கூறியதும் அதுவரை அவரைத் தாக்கிக்கொண்டிருந்தவன் தாக்குவதை நிறுத்திவிட்டு பேசத் தொடங்கினான். "இங்கிருந்துதான் புலிகள் தாக்கினார்கள். உனக்குத் தெரியாமல் அவர்கள் இங்கு இருந்திருக்க முடியாது. அவர்களை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய் என்று சொல். ஆயுதங்களைக் காட்டு, அல்லது உங்கள் அனைவரையும் சுட்டுக் கொல்லப்போகிறேன்" என்று அதட்டினான். நாம் புலிகள் இல்லை, எம்மிடம் ஆயுதங்களும் இல்லை என்று நாம் கூறியதை அவர்கள் கேட்கும் நிலையில் இல்லை. காலை நன்றாக விடிந்திருந்த அவ்வேளையில் எம்மைச் சுற்றி நடந்திருந்த அகோரங்களை அப்போதுதான் நான் கண்டுகொண்டேன். எமது வீட்டின் முற்பகுதி முற்றாக இடிந்துபோயிருக்க, இந்திய இராணுவத்தின் தாங்கியொன்று வீட்டின் முன்னால் நின்றிருந்தது. கூரை முற்றாக எரிந்து போய் கீழே வீழ்ந்து காணப்பட்டது. ஒழுங்கையின் முழு நீளத்திற்கும் கட்டப்பட்டிருந்த மதில்கள் முற்றாக இடிந்து தரைமட்டத்துடன் சேர்ந்திருக்க, மின்கம்பங்கள், வேலிகள், மரங்கள் என்று அனைத்துமே முற்றாகத் தறிக்கப்பட்டு அப்பகுதி முற்றான அழிவினைக் கண்டிருந்தது.

ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்

1 month ago
சுமார் 8 அல்லது 9 மணியிருக்கலாம். செல்வீச்சின் அகோரம் குறைந்துபோயிருந்தது. இடையிடையே வீழ்ந்து வெடிக்கும் செல்களைத்தவிர அதிகளவான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. "அவங்கள் அப்படியே ரோட்டால போயிட்டாங்கள் போலக் கிடக்கு, இனிப்பிரச்சினையில்லை, அவங்கள் சனத்துக்கு ஒண்டும் செய்யம்மாட்டங்கள், பயங்கரவாதிகள் சுரண்டினால் ஒழிய அவங்கள் ஏன் சனத்தைச் சுடப்போறாங்கள்"? என்று தந்தையார் கூறினார். நாம் எதுவும் பேசவில்லை. இப்படியே சில மணித்துளிகள் போயிருக்கும். செல்வீச்சின் அகோரம் முற்றாக நின்று போயிருக்க, துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்கத் தொடங்கின. தூரத்தே கேட்க ஆரம்பித்த அச்சத்தம் நேரம் செல்லச் செல்ல எம்மை நோக்கி நகர்ந்துவருவது தெளிவாகத் தெரிந்தது. புலிகள் பயன்படுத்தும் ஏ கே 47 துப்பாக்கியின் ஒலி நான் நன்றாக அறிந்தது. ஆனால் அதனைக் காட்டிலும் வேறு வகை ஒலியொன்று தொடர்ச்சியாகக் கேட்க ஆரம்பித்தது. அன்று இரவுவரை எமது வீட்டின் முன்னால் நின்று பேசிக்கொண்டிருந்த புலிகளின் குரல்கள் அப்போது கேட்கவில்லை. அவர்கள் போயிருக்கலாம். அல்லது கொல்லப்பட்டிருக்கலாம். தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டிருந்த துப்பாக்கி வேட்டுக்களைத் தவிர இன்னொரு ஒலியும் தற்போது கேட்கத் தொடங்கியிருந்தது. பாரிய இரும்புச் சங்கிலியொன்றினை யாரோ வீதியால் இழுத்துவருவது போன்ற ஒரு ஒலி. இது நான் அதுவரை கேட்டிராதது. அது என்னவாக இருக்கும் என்று யோசிக்கத் தொடங்கினேன். சிலவேளை நல்லூர்க் கோயில் நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் சனங்கள் தமது பொருட்களை இழுத்துச் செல்கிறார்களோ என்னவோ என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். அவ்வொலியும் விட்டு விட்டு கேட்டுக்கொண்டிருக்க, கனர இயந்திரத் துப்பாக்கியின் ஒலியும் தற்போது மிக அருகில் கேட்கத் தொடங்கியிருந்தது. இலங்கை விமானப்படை வானிலிருந்து நடத்தும் 50 கலிபர் தாக்குலின்போது எழுப்பப்படும் தொடர்ச்சியான தாக்குதல் ஒலியினை ஒத்த ஒலி மிக அருகில் கேட்கத் தொடங்கியது. இரவு 11 அல்லது 12 ஐக் கடந்திருக்கலாம். திடீரென்று வீட்டின் மத்திய பகுதியில் செல்லொன்று வந்து வீழ்ந்து வெடித்தது. வெடிப்பின் தாக்கத்தின் பெரும்பகுதியைக் கூரை தாங்கிக்கொண்டதால் கூரையின் உச்சிப்பகுதி வீட்டினுள் வந்து வீழ்ந்தது. இனிமேல் தொடர்ந்தும் வீட்டில் இருப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்த நாம் பின்னால் இருந்த மரவள்ளித் தோட்டத்தினுள் சென்று படுத்துக்கொண்டோம். அன்று காலையில்த்தான் நீர்ப்பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும், தோட்டாம் முழுவதுமாக சேறாயிருக்க வேறு வழியின்றி குப்புரப் படுத்துக்கொண்டோம். சிறிது நேரத்தில் எமது வீட்டின் முன்னால் யாரோ சத்தமாகப் பேசுவது கேட்டது. அது இந்திய இராணுவம்தான் என்பது எமக்குத் தெரிந்தது. "வீட்டிலிருப்பவர்கள் வெளியே வாருங்கள்" என்று சத்தமாகக் கத்திக்கொண்டிருந்தான் ஒருவன். நாம் அசையவில்லை. நடுச் சாம இருளில் அவர்கள் முன்னால் செல்லும்போது எமக்கு என்ன நடக்கும் என்பது எமக்கு நன்றாகவே தெரிந்திருந்தது, ஆகவே சத்தமின்றி அங்கேயே படுத்துக் கிடந்தோம். நாம் படுத்திருந்த தோட்டவெளிக்கும் இந்திய இராணுவ அணிக்கும் இடையிலான தூரம் சுமார் 25 அல்லது 30 மீட்டர்கள் மட்டுமே இருக்கும். இருளும், உயர்ந்து வளர்ந்திருந்த மரவள்ளிக் கன்றுகளும் எம்மை முற்றாக மறைத்துவிட்டிருந்தன. அங்கு படுத்திருந்தவாறே எம்மைச் சுற்றி நடக்கும் படுகொலைகளைப் பார்க்கத் தொடங்கினோம்.

ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்

1 month ago
சாத்தானின் படையுடனான எனது அனுபவம் இடம்: கோண்டாவில், யாழ்ப்பாணம் காலம் : ஐப்பசி, 1987 அது ஒரு மாலை வேளை. பலாலி வீதியூடாக இந்திய இராணுவம் பலாலியில் இருந்து யாழ்நகர் நோக்கி நகர்ந்துவருவதாக அயலில் பேசிக்கொண்டார்கள். மிகக்கடுமையான செல்வீச்சு எமது பகுதிநோக்கி நடத்தப்பட்டுக்கொண்டிருந்தது. காலையில் இருந்து அயலில் உள்ளவர்கள் நல்லூர் கந்தசுவாமிக் கோயிலுக்குப் போவதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்தனர். "நீங்கள் போக இல்லையோ? இருக்கவே போரியள்? வந்தாங்கள் எண்டால் சுட்டுக் கொண்டு போடுவாங்கள். உரும்பிராயில நியாயமான சனத்தைக் கொண்டுட்டாங்களாம். நாங்கள் போகப்போறம். கொப்பரிட்டைக் கேட்டுப்போடு நீங்களும் வாங்கோ" என்று பக்கத்துவீட்டு பாமா அக்கா கூறிவிட்டுச் சென்றார். அவர் சொன்னதை தகப்பனாரிடம் கூறினேன். "தேவையில்லை, அவை போறதெண்டால் போகட்டும், நாங்கள் வீட்டிலை இருப்பம்" என்று ஒரே போடாய்ப் போட்டுவிட்டார். முதல் நாள் மாலையில் இருந்து எமது ஒழுங்கையில் சில போராளிகள் ஆயுதங்களோடு தரித்து நின்றிருந்தார்கள் நான்கு அல்லது ஐந்து பேர் இருக்கலாம். எமது வீட்டின் முன்னால் அமர்ந்திருந்த அவர்களுக்கு தேநீரும் சில உணவுப் பொருட்களையும் கொண்டுபோய்க் கொடுத்தேன். என்னைப்போலவே அருகில் இருந்தவர்களும் அவர்களைக் கவனித்துக் கொண்டார்கள். தகப்பனாரின் முகத்தில் ஈயாடவில்லை, வேறு நேரமாக இருந்திருந்தால் என்னை கொடுமையாகத் தாக்கியிருப்பார், ஆனால் புலிகளின் பிரசன்னம் அவரைத் தடுத்து விட்டிருந்தது. உரும்பிராய்ப் பகுதியை வட்டமடித்தபடி இந்திய விமானப்படையில் எம் ஐ 24 உலங்குவானூர்திகள் வானிலிருந்து மிகக்கடுமையான கனரக பீரங்கித் தாக்குதலையும் இயந்திரத் துப்பாக்கித் தாக்குதலையும் நடத்தத் தொடங்கியிருந்தன. அவை வானில் வட்டமடித்தவேளை கோண்டாவில் டிப்போவின் மேலாகவும் வந்துபோயின. புலிகள் அப்பகுதியில் நிற்பதைக் கண்டால் எமது பகுதிமீதும் தாக்குதல் நடக்கலாம் என்று அஞ்சிய நாம் வீட்டினுள் புகுந்துகொண்டோம். சில நாட்களாகவே மின்சாரம் தடைப்பட்டு இருந்தது. சந்தைகளும் இயங்கவில்லை. வீட்டில் கிடந்த பொருட்களைச் சேர்த்து சிற்றன்னையார் சமைத்திருந்ததை மதியம் அனைவரும் உட்கொண்டோம். மதியவேளைக்குப் பின்னர் செவீச்சின் உக்கிரம் அதிமானது. ஒவ்வொரு செல்லும் ஏவப்படும் போது எழுப்பும் ஒலியும், அது வீழ்ந்து வெடிக்கும்போதும் எழும்பும் ஒலியும் மிகத் துல்லியமாக‌ இப்போது கேட்கத் தொடங்கின. ஒரு சில கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்தே அவற்றினை ஏவுகிறார்கள் என்பது தெரிந்தது. சுமார் பத்து செக்கன்களுக்கு ஒன்று என்ற ரீதியில் செல்கள் வந்து வீழ்ந்து வெடிக்க ஆரம்பித்தன. எமது வீட்டின் மேலாகப் பறந்துசென்று கோண்டாவில்ச் சந்திப்பகுதியில் அவை வீழ்ந்து வெடித்தன. ஒவ்வொருமுறையும் அவை வந்து வெடிக்கும்போது எங்கள் வீட்டின் கூரைகள் சலசலத்து, கீழே வீழ்ந்து நொறுங்குவது தெரிந்தது. வீட்டின் பின்புறத்தில் ஒடுங்கலான பகுதியொன்றில் சீமேந்தினால் கட்டப்பட்ட கூரைப்பகுதியின் கீழ் நாங்கள் நின்றுகொண்டோம். வீட்டின்மீது செல் வீழ்ந்தாலும் நாம் நின்றபகுதி பாதுகாப்பானது என்பது எமது எண்ணம். சுமார் பகல் 2 மணியிலிருந்து இரவு 8 மணிவரை அவ்விடத்திலேயே அசையாது அமர்ந்திருந்தோம். இடைவிடாது நடத்தப்பட்ட செல்வீச்சினால் மனதளவிலும், உடலலளவிலும் அச்சத்துடன் நடங்கியபடி அங்கு அமர்ந்திருந்தோம். இரவாகியிருந்தாலும் கூட செல்கள் எமக்கு மேலால் பறந்து சென்று வெடித்தபோது மின்னல் பாய்ச்சியதுபோன்ற வெளிச்சத்தை ஏற்படுத்திச் சென்றது. ஒவ்வொருமுறையும் வீழ்ந்து வெடிக்கும் செல்களினூடு இதயமும் நின்று மீளவும் இயங்கியதுபோன்ற வலி.

பிரித்தானியாவை விட்டு செல்லும் வெளிநாட்டினர்: முதலிடத்தில் இந்தியர்கள்; 2ம் இடத்தில் சீனர்கள்!

1 month ago
மூட்டை முடிச்சுகளுடன் போனால் பெரிய தொகை தருவார்கள். மாதாமாதம் ஒரு தொகையும் வரும். இலங்கையில் பெரிய வீடுகளைப் பார்க்கவில்லைப் போல.

ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்

1 month ago
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள் அண்மையில் இஸ்ரேலுக்குப் பயணம் செய்த தனது அனுபவங்களை திரு நிராஜ் டேவிட் அவர்கள் காணொளிகள் வாயிலாக வெளியிட்டு வருகிறார். அவற்றில் சில காணொளிகளில் அவர் அங்கு தங்கியிருந்த‌ நாட்களில் பயணித்த பலவிடங்களையும் காட்சிப்படுத்தியிருந்தார். அவற்றுள் ஒன்று யூத மக்கள் மீது இரண்டாம் உலக யுத்த காலத்தில் நாசிகளால் மேற்கொள்ளப்பட்ட இனக்கொலை தொடர்பான சாட்சியங்கள், ஆதாரங்கள் ஆகியவற்றினை பாரிய நினைவாலயம் ஒன்றினுள் காட்சிப்படுத்தியிருந்தமை பதிவுசெய்யப்பட்டிருந்தது. தம்மீது நிகழ்த்தப்பட்ட இனக்கொலை தொடர்பாக தமது சந்ததிகள் தொடர்ச்சியாக அறிந்துகொள்ளவேண்டும் என்பதும், இனிமேல் அவ்வாறனதொரு இனக்கொலை தமது இனம் மீது நடக்காது தவிர்ப்பது எந்தளவு முக்கியமானது என்பதையும் தம் இன மக்களுக்கு தொடர்ச்சியாக வலியுறுத்துவதும் இந்நினைவாலயத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். கொல்லப்பட்ட அறுபது இலட்சம் யூதர்களில் ஒரு பகுதியினர் பயன்படுத்திய காலணிகள், அவர்களால் அணியப்பட்ட கறுப்பும் வெள்ளையும் சேர்ந்த வரிரியிலான ஆடைகள், அவர்கள் பயன்படுத்திய உணவருந்தும் பாத்திரங்கள், அவர்களின் புகைப்படங்கள் என்பவற்றோடு அவர்களை வதைப்படுத்திக் கொன்றுபோட்ட பல நாசிப் படைத் தளபதிகளின் புகைப்படங்களும் அங்கு மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இவற்றைத் தனது காணொளிகளில் காண்பித்த டேவிட் அவர்கள், எமதினத்திற்கு நடந்த அக்கிரமங்கள், அழிவுகள் குறித்து நாம் பேசுவதை எம்மில் ஒரு பகுதியினரே தடுத்து வருவதையும், சிங்கள இனத்தோடு நாம் ஒன்றித்து வாழ்வதை இவ்வாறான "பழங்கதைகள் பேசுதல்" எனும் முயற்சி தடுத்துவிடும் என்றும், அது இனவொற்றுமையினைக் குலைத்துவிடும் என்றும் காரணம் கூறிவ‌ருவதையும் குறிப்பிட்டு அங்கலாய்த்திருந்தார். யூதர்கள் தமக்கு நடந்த அழிவினைத் தொடர்ச்சியாகப் பேசியும், காட்சிப்படுத்தியும், ஆவணப்படுத்தியும் வரும் நிலையில், நாமோ எம்மீது நடத்தப்பட்ட அழிவுகளை வேண்டுமென்றே மறுத்தோ அல்லது மறைத்தோ வாழத் தலைப்படுதல் ஈற்றில் எமது இருப்பிற்கே முடிவாய் அமைந்துவிடும் என்பதும் அவரது ஆதங்கமாக இருந்தது. இக்காணொளிகளின் இறுதிப்பகுதியில் தமிழ் மக்களை நோக்ல்கி வேண்டுகோள் ஒன்றினை அவர் முன்வைத்தார். அதுதான் நாம் அனைவரும், தனிப்பட்ட ரீதியிலோ அல்லது ஒரு குழுவாகவோ எம்மீது நடத்தப்பட்ட அனைத்து அக்கிரமங்களையும் ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒருவடிவில் கட்டாயம் ஆவணப்படுத்தியோ அல்லது காட்சிப்படுத்தியோ தீரவேண்டும் என்பது. அவரது காணொளிகளைப் பார்த்தபோது அவர் கூறுவது எனக்குச் சரியென்றே பட்டது. ஏனென்றால், எம்மீது நடத்தப்பட்ட அநீதிகளை நாமே பேசவோ அல்லது காட்சிப்படுத்தவோ மறுப்பின், வேறு யார்தான் இதைச் செய்யப்போகிறார் எனும் கேள்வி எனக்குள் வந்தது. ஆகவேதான் எம்மீது நடத்தப்பட்ட அக்கிரமங்கள் தொடர்பான எனது அனுபவங்களை இங்கு பதிவிடலாம் என்று நினைக்கிறேன். இத்தளத்தில் இருக்கும் ஏனையவர்களும் தமது தனிப்பட்ட அனுபவங்களை இங்கு பகிருமாறும் வேண்டிக்கொள்கிறேன்.

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

1 month ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 58 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 58 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'இலங்கையை ஆண்ட முதல் அரசி அனுலா [அனுலாதேவி]' வட்டகாமினி மூன்று பிடகங்களையும் [திரிபிடகம் கௌதம புத்தரின் பல்வேறுபட்ட போதனைகள் கொண்ட பௌத்தர்களின் மூலமான புனித நூல் ஆகும். பிடகம் என்பது கூடை அல்லது திரட்டு எனப்பொருள்படும். அதன்படி மூன்று வகையான போதனைத் திரட்டுகளை திரிபிடகம் கொண்டுள்ளது. அவை: சுத்தபிடகம், விநயபிடகம், அபிதம்மபிடகம் என்பவையாகும். இந்த மூன்று பிடகங்களில் அடங்கிய இருபத்தொன்பது நூல்களையும் பௌத்த சமயத்தின் மூல நூல்கள் எனப்படுகின்றன. அவற்றிற் கூறப்படும் சமயக்கொள்கைகளே தேரவாதம் என்று கருதப்படுபவை.] அட்டகதாவையும் [அட்டகதா, பண்டைய இந்தியா மற்றும் இலங்கையின் சமூகம், கலாச்சாரம் மற்றும் மத வரலாறு பற்றிய பல தகவல்களை வழங்கும் பாலி பௌத்த நியதியின் வர்ணனைகள். / atthakatha, commentaries on the Pali Buddhist canon that provide much information on the society, culture, and religious history of ancient India and Sri Lanka.] புத்தக வடிவில் எழுதினார். ஆனால், இவை எந்த மொழியில் எழுதப்பட்டன என்பது குறிப்பிடப்படவில்லை. ஆனால் கட்டாயம் சிங்கள மொழியில் இல்லை, காரணம் அப்பொழுது சிங்கள மொழி என்று ஒன்று உலகிலேயே இல்லை. மகசுழி மகாதிஸ்ஸ [மகசுழி மகாதீசன் / Mahaculi Mahatissa], வட்டகமணியின் மரணத்திற்குப் பிறகு, பதினான்கு ஆண்டுகள் நீதியாகவும் நேர்மையாகவும் ஆட்சி செய்தார். அவரும் பல நல்ல வேலைகளைச் செய்திருப்பதாகத் தோன்றியது. எனினும் அவருடைய பூர்வீகம் தீபவம்சத்தில் கூறப்படவில்லை. பின்னர் வட்டகமணியின் மகன் சோரநாகன் [Chora Naga also known as Coranaga or Mahanaga] பன்னிரண்டு ஆண்டுகள் கொள்ளையனாக ஆட்சி செய்தான். சோரநாகாவிற்குப் பிறகு, மகசுழி மகாதீசனின் மகன் குட்ட திச்சன் அல்லது குட திச்சன் [Kuda Tissa] மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். பின்னர் அரசன் முதலாம் சிவன் அல்லது சிவா [Siva I] அனுலாவுடன் இணைந்து ஓராண்டு இரண்டு மாதங்கள் ஆட்சி செய்தான். பின்னர் ஒரு வெளிநாட்டில் இருந்து வடுகன் [வடுகா / Vatuka / அனுலாவின் இன்னும் ஒரு துணைவன். பின்னர் அவளால் விஷம் கொடுக்கப்பட்டார். இவர் முதலில் அனுராதபுரத்தில் தச்சராக இருந்தார்.] என்ற பெயருடைய ஒரு ராஜா, ஒரு தமிழன், ஒரு வருடம் மற்றும் இரண்டு மாதங்கள் ஆட்சி செய்தார். இங்கு வடுகா ஒரு தமிழன், 21 - 27, வெளிநாட்டிலிருந்து வந்தவன் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தீபவம்சத்தில் ஒரு தமிழன் வெளிநாட்டிலிருந்து வந்ததாக உள்ள ஒரே ஒரு உதாரணம் இதுதான்!. அதன் பிறகு, திஸ்ஸ [தருபாதுக திச்சன் / Darubhatika Tissa] என்ற விறகு வெட்டுபவன் ஒரு வருடம் ஒரு மாதம் ஆட்சி செய்தான். அப்போது தமிழ் மன்னன் என்றழைக்கப்படும் நிலயா [நிலியன் / Nilaya or Niliya] என்ற நபர் மூன்று மாதங்கள் ஆட்சி செய்தார். இந்த தமிழ் மன்னன் இந்தியாவில் இருந்து வந்ததாகக் கூறப்படவில்லை. அனுலா என்ற பெண் இந்த சிறந்த மேற்கூறிய நபர்களைக் கொன்று நான்கு மாதங்கள் இறுதியாக தானே ஆட்சி செய்தாள். அந்த சிறந்த மனிதர்கள் யார் என்று துல்லியமாக கூறப்படவில்லை என்றாலும், அவர்கள் திஸ்ஸ, சிவா, வடுகா, (மற்றொரு) திஸ்ஸ, மற்றும் நிலயா [Tissa, Siva, Vatuka, (another) Tissa, and Nilaya] என்று தெரிகிறது, சோரநாகன் ஒரு கொள்ளைக்காரனைப் போல ஆட்சி செய்ததால் சோரநாகனை சிறந்த நபராக விவரிக்கப்பட மாட்டார் என்று எண்ணுகிறேன். பின்னர் மகசுழி மகாதீசனின் இரண்டாவது மகன் குடகன்ன திஸ்ஸன் அல்லது குடகன்ன தீசன் [Kutakanna Tissa, also known as Makalan Tissa] இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அத்தியாயம் 21: குடகன்ன தீசனின் மகனான இளவரசர் பாதிகாபய அபயன் அல்லது பட்டிகாபய அபயா (Bhatikabhaya Abhaya), பிக்குகளுக்கும் புத்த மதத்திற்கும் நிறையச் நம்மை செய்து இருபத்தெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். குடகன்ன தீசனின் மற்றொரு மகன், இளவரசர் மகாதாதிக மகாநாகன் [Mahadathika Mahanaga], இவனும் பிக்குகளுக்கும் புத்த மதத்திற்கும் நிறையச் செய்தார். அவர் பன்னிரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். குடகன்ன தீசன் மற்றும் மகாநாகன் என்ற பெயர்கள் குறிப்பிடுவது போல், இவர்களும் தமிழர்களாக இருக்கலாம்? மகாதாதிக மகாநாகனின் மகன் அமந்தகாமினி அபயன் [Amandagamani Abhaya, also referred as Aḍagamunu] ஒன்பது ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் ஆட்சி செய்தான். தட்டிக [Dathika] என்பது தமிழ்ப் பெயர், 20-18 ஐப் பார்க்கவும், எனவே மகாதாதிக [மகாதட்டிக] என்பதும் தமிழ்ப் பெயர். இவர் விலங்குகளைக் கொல்வதைத் தடை செய்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. அமந்தகாமினி தமிழரான மகாதாதிகாவின் மகன். எனவே அமந்தகாமினியும் தமிழர்தான். எனவே, அவரது தம்பி கனிராஜனு திஸ்ஸனும் [Kanirajanu Tissa] மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்த தமிழனாகத் தான் இருக்க வேண்டும். அமந்தகாமினியின் மகன் சூலபாயன் [Chulabhaya] ஓராண்டு ஆட்சி செய்தான். அமந்தவின் (அமந்தகாமினியின்) மகள் , சிவாலி ரேவதி [Sivali] நான்கு மாதங்கள் ஆட்சி செய்தாள். அமந்தகாமினியின் சகோதரியின் மகன் இளநாகா [Ilanaga, also known as Elunna] ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தார். Part: 58 / Appendix – Dipavamsa / 'The first queen to rule Sri Lanka was Anula [Anuladevi]' Vattagamani caused the three Pitakas and the Atthakatha to be written in book form. The language in which these were written is not specified. Mahaculi Mahatissa reigned, after the death of Vattagamani, fourteen years justly and righteously. He seemed to have done many meritorious works too. His ancestry is not given in the Dipavamsa. Then Coranaga, son of Vattagamani, ruled like a robber for twelve years. After Coranaga, Mahchuli’s son, Tissa, ruled three years. Then king Siva cohabited with Anula and ruled for one year and two months. Then a king from a foreign country, Vatuka by name, a Damila, ruled for one year and two months. This is clearly stated that Vatuka is a Damila, 21 – 27, and came from a foreign country. This is the only instance in the Dipavamsa that a Damila came from a foreign country. Then a wood cutter by the name Tissa ruled for one year and one month. Then a person called Nilaya, known as the Damila king, ruled for three months. It is not stated that this Damila king came from India. A woman, Anula, killed these excellent persons and ruled for four months. Though it is not stated precisely who those excellent persons are, but it seems that they are Tissa, Siva, Vatuka, (another) Tissa, and Nilaya, as Coranaga wouldn’t have been described as excellent person because he ruled like a robber. Then Mahachuli’s second son, Kuttikannatissa ruled for twenty two years. Chapter 21: Prince Abhaya, the son of Kuttikanna, did quite a lot to the Bikkhus and to the Buddhism. He ruled for twenty eight years. Another son of Kuttikanna, prince Naga, also did quite a lot to the Bikkhus and the Buddhism. He reigned for twelve years. Kuttikanna and Naga could be Tamils as their names indicate. Amandagamani, the son of Mahadathika ruled for nine years and nine months. Dathika is a Tamil name, see 20-18, and therefore Mahadathika is also a Tamil name. He forbade the killing of animals. Amandagamani is the son of Mahadathika who is a Tamil. Therefore Amandagamani is also a Tamil. His younger brother Kanirajanu must also be a Tamil, ruled for three years. Amandagamani’s son, Culabhaya ruled for one year. The daughter of Amanda (gamani?), Sivali Revathi ruled for four months. Illanaga, a son of Amanda’s sister ruled six years. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 59 தொடரும் / Will follow துளி/DROP: 1931 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 58] https://www.facebook.com/groups/978753388866632/posts/32716283924686832/?

யாழ். வடமராட்சி கடற்கரையில் வெள்ளை நுரை! - அச்சத்தில் மக்கள்

1 month ago
யாழ். வடமராட்சி கடற்கரையில் வெள்ளை நுரை! - அச்சத்தில் மக்கள் 07 Dec, 2025 | 05:19 PM யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (7) காலை வெள்ளை நுரை கரையொதுங்கியதால் மக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/232702

யாழ். வடமராட்சி கடற்கரையில் வெள்ளை நுரை! - அச்சத்தில் மக்கள்

1 month ago

யாழ். வடமராட்சி கடற்கரையில் வெள்ளை நுரை! - அச்சத்தில் மக்கள்

07 Dec, 2025 | 05:19 PM

image

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (7) காலை வெள்ளை நுரை கரையொதுங்கியதால் மக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

IMG_2155.jpeg

IMG_2156.jpeg

IMG_2157.jpeg

IMG_2158.jpeg

IMG_2159.jpeg

https://www.virakesari.lk/article/232702

யாழில் 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவினை பெறும் பயனாளிகளின் பெயர்களை காட்சிப்படுத்த நடவடிக்கை - யாழ். மாவட்ட செயலாளர் ம. பிரதீபன்

1 month ago
யாழில் 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவினை பெறும் பயனாளிகளின் பெயர்களை காட்சிப்படுத்த நடவடிக்கை - யாழ். மாவட்ட செயலாளர் ம. பிரதீபன் Published By: Digital Desk 1 07 Dec, 2025 | 04:19 PM வெள்ள நிவாரண கொடுப்பனவு விடயத்தில் தகுதியான ஒருவர் புறக்கணிக்கப்பட்டிருந்தாலும், தகுதியற்ற ஒருவரிற்கு வழங்குவதற்கு சிபாரிசு செய்யப்பட்டிருந்தாலும் அதற்கு குறித்த பிரிவிற்குரிய கிராம அலுவலகர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் பொறுப்புக்கூற வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ம. பிரதீபன் அறிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான 25, 000 ரூபா கொடுப்பனவு தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளரால், பிரதேச செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில், தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினுடைய பேரிடர் சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட வீட்டை வசிப்பதற்கு ஏற்றதாக மாற்றுவதற்கும், துப்பரவுப்பணிகளை மேற்கொள்வதற்கும், வீட்டு உபகரணங்களை மீட்டெடுப்பதற்கும், சமூக பொருளாதார அதிர்ச்சிகளை நிர்வகிப்பதற்கும், ஒவ்வொரு வீட்டிற்கும் ரூபா 25 ஆயிரம் உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அந்த வகையில், தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினுடைய 05ஆம் திகதி கடிதத்தில் முற்றிலும் சேதமடைந்த வீடுகள், பகுதி சேதமடைந்த வீடுகள், வீடுகளுக்கு சேதம் ஏற்படாவிட்டாலும் சிறிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள், உதவித்தொகையினை பெறுவதற்கு தகுதியானது என்ற விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அனைத்து கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தருக்கு சரியான தெளிவுபடுத்தலை வழங்க வேண்டியது பிரதேச செயலரின் கடமையாகும். இவ்வாறான வெள்ள அனர்த்த நிலைமைகளின் போது அனைத்து கிராம மட்ட அலுவலர்களும் நேரடியாக பிரிவிற்கு சென்று தரவுகளை பெற்றுக்கொள்வதனை பிரதேச செயலர் உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். படிவத்தினை உரிய முறையில் பூர்த்தி செய்து உறுதிப்படுத்திய வகையில் மேற்படி கொடுப்பனவினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலர் உணவு நிவாரணம் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவிற்கு தகுதியான ஒருவர் புறக்கணிக்கப்பட்டிருந்தாலும், தகுதியற்ற ஒருவரிற்கு வழங்குவதற்கு சிபார்சு செய்யப்பட்டிருந்தாலும் அதற்கு குறித்த பிரிவிற்குரிய கிராம அலுவலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் பொறுப்புக்கூற கடமைப்பட்டிருப்பதனால் இவ்விடயங்களில் தனிப்பட்ட கவனமெடுத்து செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன் கொடுப்பனவைப் பெறுவதற்கு தகுதியானவர்களின் பெயர்ப் பட்டியலினை இற்றைப்படுத்தி உறுதி செய்து கிராம அலுவலர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகத்தில் தமிழ் மொழியில் காட்சிப்படுத்தி அதன் மென் பிரதியினை மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/232681