Aggregator
சூடானில் ஆயுத குழுக்களின் ட்ரான் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் உட்பட 50பேர் உயிரிழப்பு!

சூடானில் ஆயுத குழுக்களின் ட்ரான் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் உட்பட 50பேர் உயிரிழப்பு!
சூடானில் பாடசாலை , மருத்துவமனை மீது ஆயுத குழுவினர் ட்ரோனை ஏவி தாக்குதல் நடத்தியதில் 33 குழந்தைகள் உள்ளிட்ட 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
சூடானில் அந்நாட்டு ராணுவத்திற்கும், ரேபிட் சப்போர்ட் போர்சஸ்(ஆர்எஸ்எப்) எனப்படும் ஆயுதமேந்திய குழுவினருக்கும் சமீப காலமாக மோதல் நிலவுகிறது.
இந்நிலையில் கோர்டோபான் மாகாணத்தில் உள்ள கலோகி நகரில் உள்ள ஒரு சிறுவர்கள் பாடசாலை , மருத்துவமனை மீது ஆயுத குழுவான ஆர்எஸ்எப், நேற்றுமுன்தினம் இரவு ட்ரோன் ஏவியது. இந்த தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
ஆயுத குழுவினர்,முதலில் பாடசாலையை தாக்கியதுடன் பின்னர் பொதுமக்கள் உணவுக்காக உதவி வாங்க கூடியிருந்த இடத்தில் இரண்டாவது தாக்குதலை நடத்தியதாகவும் 50 பேர் இதில் கொல்லப்பட்டனர் எனவும் குழந்தைகள் 33 பேர் உள்ளடங்குவதாகவும் இந்த தாக்குதலுக்கு குறித்த அமைப்பினர் பொறுப்பேற்கவில்லை எனவும் சூடான் மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
யாழ். சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து அரசியல் செய்து பாராளுமன்றம் வந்தவர் இன்றுவரை அந்த மக்களுக்கு எந்த உதவியும் செய்ய செல்லவில்லை - இளங்குமரன்
பீபா(FIFA) உலகக் கிண்ணம் 2026 - செய்திகள்
பீபா(FIFA) உலகக் கிண்ணம் 2026 - செய்திகள்
வரலாற்றில் மிகப் பெரிய பீபா உலகக் கிண்ணத்துக்கான அணிகளுக்குரிய பகிரங்க குலுக்கல் இன்று
05 Dec, 2025 | 08:17 PM
![]()
(நெவில் அன்தனி)
கால்பந்தாட்ட வரலாற்றில் முதல் தடவையாக 48 நாடுகள் பங்குபற்றும் மிகப் பெரிய FIFA உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி அமெரிக்க கண்டத்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ளது.
உலகக் கிண்ணப் போட்டிக்கான அணிகளைக் குழுநிலைப் படுத்தும் பகிரங்க குலுக்கல் வொஷிங்டன் டிசியில் அமைந்துள்ள கென்னடி நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (05) இரவு நடைபெறவுள்ளது.

ஐக்கிய அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் கூட்டாக உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியை நடத்தவுள்ளன.
உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் மூன்று நாடுகள் கூட்டு சேர்ந்து நடத்துவது இதுவே முதல் தடவையாகும்.
2002 உலகக் கிண்ணப் போட்டியை ஜப்பான், தென் கொரியா ஆகிய இரண்டு நாடுகள் கூட்டாக நடத்தியிருந்தன. அதுவே கூட்டாக நடத்தப்பட்ட முதலாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியாகும்.
நான்கு ஜாடிகளில் தலா 12 நாடுகள்
உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட இதுவரை 42 நாடுகள் தகுதிபெற்றுள்ளதுடன் இன்னும் 6 நாடுகள் தகுதிபெறவுள்ளன.
இந்த 48 நாடுகளும் நான்கு ஜாடிகளில் நிரல்படுத்தல் பிரகாரம் இடம்பெறுகின்றன.

ஜாடி 1: கனடா, மெக்சிகோ, ஐக்கிய அமெரிக்கா (இந்த மூன்றும் கூட்டு வரவேற்பு நாடுகள்), ஸ்பெய்ன், நடப்பு உலக சம்பியன் ஆர்ஜன்டீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, பிறேஸில், போர்த்துக்கல், நெதர்லாந்து, பெல்ஜியம், ஜேர்மனி.
ஜாடி 2: குரோஷியா, மொரோக்கோ, கொலம்பியா, உருகுவே, சுவிட்சர்லாந்து, ஜப்பான், செனகல், ஈரான், தென் கொரியா, ஈக்வடோர், ஆஸ்திரியா, அவுஸ்திரேலியா.
ஜாடி 3: நோர்வே, பனாமா, எகிப்து, அல்ஜீரியா, ஸ்கொட்லாந்து, பரகுவே, டியூனிசியா, கோட் டி'ஐவொயர் (ஐவரி கோஸ்ட்), உஸ்பெகிஸ்தான், கத்தார், சவூதி அரேபியா, தென் ஆபிரிக்கா.
ஜாடி 4: ஜோர்தான், கபோ வேர்டே, கானா, கியூராகாவோ, ஹெய்ட்டி, நியூஸிலாந்து, ஐரோப்பிய ப்ளே ஓவ் ஏ, பி, சி, டி, FIFA ப்ளே ஓவ் சுற்றுப் போட்டி 1, 2.
ஜாடி 1இல் இடம்பெறும் 12 அணிகளும் A இலிருந்து L வரை 12 குழுக்களில் முதல் அணிகளாக குலுக்கல் மூலம் நிரல்படுத்தப்படும்.

2026 உலகக் கிண்ணப் போட்டிகளை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடுகள் என்ற வகையில் ஜாடி 1இல் (Pot 1) இடம்பெறும் மெக்சிகோ, கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகியன வெவ்வேறு நிறங்களிலான பந்துகளைக் கொண்டு முதல் அணிகளாக நிரல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று அணிகளும் ஏ 1 - மெக்சிகோ (பச்சை பந்து), பி 1 - கனடா (சிவப்பு பந்து), டி 1 - ஐக்கிய அமெரிக்கா (நீல பந்து) என நிரல்படுத்தப்படும்.
ஜாடி 2இல் இடம்பெறும் அணிகள் 12 குழுக்களில் 2ஆவது அணிகளாகவும் ஜாடி 3இல் இடம்பெறும் அணிகள் 3ஆவது அணிகளாகவும் ஜாடி 4இல் இடம்பெறும் அணிகள் 4ஆவது அணிகளாகவும் குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்படும்.
சம அளவிலான போட்டித் தன்மை
சம அளவிலான போட்டித் தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் அரை இறுதிகளுக்கு நான்கு வெவ்வேறு குழுக்களிலிருந்து அணிகள் தெரிவாகும்.
அதாவது பீபா தரவரசையில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் ஸ்பெய்ன், ஆர்ஜன்டீனா ஆகியன ஒரு பகுதியில் மேல் பாதி மற்றும் கீழ் பாதியாக (Top half and Bottom half) விளையாடும். அதேபோன்று தரவரிசையில் 3ஆம், 4ஆம் இடங்களில் உள்ள பிரான்ஸ், இங்கிலாந்து ஆகியன மற்றொரு பகுதியில் மேல் பாதி மற்றும் கீழ் பாதியாக விளையாடும்.

இந்த அணிகள் தத்தம் குழுக்களில் முதலிடத்தைப் பெற்றால் அரை இறதிவரை ஒன்றை ஒன்று எதிர்கொள்ள மாட்டாது.
12 குழுக்களில் நடத்தப்படும் உலகக் கிண்ணப் போட்டியில் ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கத்தைத் தவிர்ந்த ஏனைய கூட்டு சம்மேளனங்களை சேர்ந்த இரண்டு அணிகள் ஒரு குழுவில் இடம்பெறாது என கொள்கை அளவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு இது பொருந்தாது.
ஏனெனில் ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கத்தைப் பிரதிநிதித்தவப்படுத்தும் 16 அணிகள் உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ளன. அதேவேளை, ஒரே குழுவில் இரண்டு ஐரோப்பிய அணிகளுக்கு மேல் இடம்பெறாது.
பீபா உலகக் கிண்ண குலுக்கலில் பங்குபற்றும் உலகத் தலைவர்கள்
வொஷிங்டன் டி சி கென்னடி நிலையத்தில் இலங்கை நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள 42 அணிகளுக்கான பகிரங்க குலுக்கலின் போது வரவேற்பு நாடுகளின் தலைவர்கள் உட்பட இன்னும் பல நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.


கனடா பிரதமர் மார்க் கார்னி, மெக்சிகோ ஜனாதிபதி குளோடியா ஷெய்ன்போம், அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் ஆகிய மூவரும் இறுதி குலுக்கலின்போது அரங்கில் பிரசன்னமாகி இருப்பர்.
உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ள 16 நகரங்களில் உள்ள இலட்சக்கணக்கான இரசிகர்களிடம் போட்டிகளைக் கண்டு களிக்க வருகை தருமாறு மூன்று தலைவர்களும் அழைப்பு விடுக்கவுள்ளனர்.
அத்துடன் கால்பந்தாட்ட கூட்டு சம்மேளனங்களின் தலைவர்கள் உட்பட பிரதிநிதிகளும் கலந்து இன்றைய வைபவத்தில் பங்குபற்றவுள்ளனர்.
ஈரான் கால்பந்தாட்ட சங்கத் தலைவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த சங்கத்தைச் சேர்ந்த நான்கு பிரதிநிதிகள் ஏற்கனவே அமெரிக்கா சென்றுள்ளதாக அறியக்கிடைக்கிறது.
பீபா உலகக் கிண்ணம் 2026
பீகா உலகக் கிண்ணப் போட்டிகள் 2026 ஜூன் 11ஆம் திகதி முதல் ஜூலை 19ஆம் திகதிவரை நடைபெறும்.
72 குழுநிலைப் போட்டிகள், இறுதிப் போட்டி மற்றும் 3ஆம் இடத்துக்கான போட்டிகள் உட்பட 32 நொக் அவுட் போட்டிகளுளுடன் மொத்தம் 104 போட்டிகள் நடைபெறும்.
உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தை மூன்றாவது தடவையாக அரங்கேற்றவுள்ள மெக்சிக்கோ முதலாவது போட்டியை ஜூன் 11ஆம் திகதி தனது அணியின் பங்கேற்புடன் மெக்சிகோ சிட்டி விளையாட்டரங்கில் அரங்கேற்றும்.
மெக்சிகோவில் மொத்தம் 13 போட்டிகள் நடத்தப்படும்.
கனடா முதல் தடவையாக உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்துகின்றது. அந்த நாட்டிலும் 13 போட்டிகள் நடத்தப்படும். கனடா தனது ஆரம்பப் போட்டியை டொரொன்டோ விளையாட்டரங்கில் ஜூன் 12ஆம் திகதி நடத்தும்.
ஐக்கிய அமெரிக்காவில் மொத்தம் 78 போட்டிகள் நடைபெறும். ஐக்கிய அமெரிக்காவின் ஆரம்பப் போட்டி லொஸ் ஏஞ்சலிஸில் ஜூன் 12ஆம் திகதி நடைபெறும்.

உலக சம்பியனைத் தீர்மானிக்கும் மாபெரும் இறுதிப் போட்டி நியூ யோர்க் நியூ ஜேர்சி விளையாட்டரங்கில் ஜூலை 19ஆம் திகதி அரங்கேற்றப்படும்.
இப் போட்டிகளை முன்னிட்டு 60 இலட்சம் டிக்கெட்கள் விற்பனை செய்யப்படவுள்ளதுடன் அவற்றில் 2 இலட்சம் டிக்கெட்கள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன.


இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்
இலங்கைக்கு உதவத் தயார்.. இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு
இந்தோனேஷியா பெருவெள்ளம் : உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
பாகிஸ்தானின் முப்படைகளின் பிரதானியாக அசிம் முனீர் நியமனம்
யாழ். சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து அரசியல் செய்து பாராளுமன்றம் வந்தவர் இன்றுவரை அந்த மக்களுக்கு எந்த உதவியும் செய்ய செல்லவில்லை - இளங்குமரன்
'டடா காப்பாத்துங்க' : மண் சரிவால் சேறும் சகதியும் புகுந்த வீட்டிற்குள் கேட்ட குழந்தையின் குரல்
'டடா காப்பாத்துங்க' : மண் சரிவால் சேறும் சகதியும் புகுந்த வீட்டிற்குள் கேட்ட குழந்தையின் குரல்
'டாடா காப்பாத்துங்க' : மண் சரிவால் சேறும் சகதியும் புகுந்த வீட்டிற்குள் கேட்ட குழந்தையின் குரல்

கட்டுரை தகவல்
முரளிதரன் காசிவிஸ்வநாதன்
பிபிசி தமிழ்
7 டிசம்பர் 2025, 06:41 GMT
புதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர்
இலங்கையில் நிலச்சரிவுகளால் பலர் உயிரிழந்திருக்கும் நிலையில், பதுளை மாவட்டத்தில் மார்பளவு மண்ணில் புதைந்த பலர் துணிச்சலான சிலரது முயற்சியால் உயிரோடு மீட்கப்பட்டிருக்கிறார்கள். என்ன நடந்தது?
இலங்கையின் உவா மாகாணத்தில் பதுளை மாவட்டத்தில் பண்டாரவிளை நகரிலிருந்து சற்றுத் தொலைவில் அமைந்திருக்கிறது கவரக்கெல பகுதி. தேயிலைத் தோட்டங்கள் சூழ அமைந்திருக்கும் இந்த மலைப் பிரதேசத்தில்தான் நிலச்சரிவில் சிக்கிய பலர் உயிரோடு மீட்கப்பட்டார்கள்.
கவரக்கெலவில் வசிப்பவர்கள் பெரும்பாலும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள். தித்வா புயலின் தாக்கம் இலங்கையை நெருங்கியதும் இங்கும் தொடர்ச்சியாக மழை பெய்ய ஆரம்பித்தது. நவம்பர் 27ஆம் தேதிவரை எல்லாம் வழக்கம் போலவே இருந்தது.
நவம்பர் 27ஆம் தேதியன்றும் காலையிலிருந்து வழக்கமான மழைதான் பெய்துகொண்டிருந்தது. பிற்பகலுக்கு மேல் மழையின் தீவிரம் அதிகமானது. இந்த நிலையில், கவரக்கெலயின் பிரதான பாதையை ஓட்டியுள்ள மலைப் பகுதிகள் சிறிய அளவில் சரிய ஆரம்பித்தன.
இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அங்கிருந்த ஆட்களை ஒரு வாகனத்தை வைத்து வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்ல முயன்றார்கள். ஆனால், வாகனத்தில் ஆட்கள் ஏறி, வாகனம் நகர்வதற்குள் மழை நீர் அதிகரிக்கவே அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
"அந்த நேரத்தில் இரு பக்கங்களில் இருந்தும் மண் சரிந்து, தண்ணீரோடு கலந்து வர ஆரம்பித்தது. பக்கத்தில் இருந்த கோவிலில் புதுப்பிக்கும் பணிகள் நடந்துகொண்டிருந்ததால் அங்கிருந்த பலகைகளையும் கயிறையும் வைத்து ஆட்களை மீட்டு, மற்றொரு பக்கம் அனுப்பிக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில்தான் மலைப் பகுதியிலிருந்து பெரிய அளவில் மண் சரிய ஆரம்பித்தது" என்றார் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்களில் ஒருவரான ஆர். கஜேந்திரன்.
கவரக்கெலயின் பிரதான பாதையை ஓட்டி, கீழே இருந்த பகுதியில் சில வீடுகள் அடுத்தடுத்து அமைந்திருந்தன. மழை பெய்துகொண்டிருந்த அந்த நேரத்தில் பல வீடுகளில் இருந்த ஆட்கள் வெளியேறிவிட, மூன்று வீடுகளில் வசித்தவர்கள் உள்ளேயே இருந்தனர். ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளும் இருந்தன. அதில் ஒரு வீட்டில்தான் செல்வராஜ் - ரேணுகா தேவி தம்பதி வசித்துவந்தனர்.

அந்த மழை நாளில், அவர்களது வீட்டில் மூன்று பேரக் குழந்தைகளும் வந்திருந்தார்கள். இவர்களை சாப்பிட வைத்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு, வீட்டிற்குள் சகதியும் தண்ணீரும் புகுந்ததாக செல்வராஜ் கூறினார்.
"எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஐயோ, நாம் போனாலும் பரவாயில்லை, நம் பேரப் பிள்ளைகளும் இதில் சிக்கிக் கொண்டுவிட்டார்களே என்று இருந்தது. குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு தப்பிக்க முயன்றேன். வெளியில் வரும்போது என் மனைவியின் சேலை எதிலோ சிக்கிக்கொண்டுவிட்டது. நானும் சகதியில் சிக்கினேன்" என்கிறார் செல்வராஜ்.
அந்த நேரத்தில் பக்கத்து வீட்டு இளைஞர் ஒருவரும் வேறு சிலருமாகச் சேர்ந்து குழந்தைகளையும் செல்வராஜ் தம்பதியையும் மீட்டுள்ளனர். தற்போது கவரக்கெலையில் ஒரு முகாமில் தங்கியிருக்கிறார்கள் செல்வராஜ் குடும்பத்தினர்.
"அந்தத் தருணத்தை இப்போது நினைத்தாலும் புத்தி ஏதோ ஆகிவிடுகிறது" என்று சொல்லும்போதே அவரது கைகள் நடுங்குகின்றன.
செல்வராஜின் வீட்டிலிருந்த பேரக் குழந்தைகளில் அவருடைய மகள் தங்கேஸ்வரியின் குழந்தையும் ஒன்று. மழையும் வெள்ளமும் வரவும் தந்தையின் வீட்டை நோக்கி ஓடிவந்தார் தங்கேஸ்வரி. ஆனால், தந்தையின் வீடு நிலச்சரிவில் சிக்கியிருந்ததைப் பார்த்த அவர், அதில் சிக்கி தன் குழந்தையும் போய்விட்டது என்றுதான் முதலில் நினைத்துள்ளார்.
"நான் பாதி வழி வரும்போதே என் அப்பாவின் வீட்டில் மண் சரிந்துவிட்டதைப் பார்த்தேன். அவ்வளவுதான், என் குழந்தையை மீட்க முடியாது என நினைத்தேன். 'அப்பா வீட்டிற்கு குழந்தை அனுப்பினேன். அவர்கள் மண்ணுக்குள் போய்விட்டார்கள்' என கத்தினேன். சிறிது நேரத்திலேயே அப்பாவின் பக்கத்து வீட்டில் இருந்த பையன், பாப்பாவை மண்ணில் இருந்து எடுத்திருக்கிறார்கள் என்று சொன்னான்" என்கிறார் தங்கேஸ்வரி.
குழந்தை மீட்கப்பட்டுவிட்டாலும், இந்த நிகழ்வை இப்போது விவரிக்கும்போதும் அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

படக்குறிப்பு,மண் சரிவில் சிக்கியவர்களை மீட்ட இளைஞர்கள்
செல்வராஜ் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் இருந்த யோகத்தின் வீட்டில் அவரும் அவருடைய இரு குழந்தைகளும் மாமியாரும் இருந்தனர். கணவர், மழை நீரைத் திருப்பிவிடுவதாகச் சொல்லி வெளியில் போயிருந்தார். அந்த நேரத்தில் நிலச்சரிவு வந்துவிட, தன் குழந்தைகளை அருகில் இருந்த பாதை மீது தூக்கிப்போட்டுவிட்டு, அவரும் வெளியேறினார். ஆனால், மாமியார் உள்ளேயே சிக்கிக்கொண்டார்.
"என்ன செய்றதுன்னே எனக்குத் தெரியவில்லை. கத்திக்கொண்டே ஓடினேன். அப்போது மேலே இருந்து சில இளைஞர்கள் ஓடி வந்தார்கள். என் மாமியாரை யாராலும் காப்பாற்ற முடியாது என்றுதான் நினைத்தேன். ஆனால், எல்லோரும் சேர்ந்து அவரைக் காப்பாற்றிவிட்டார்கள்" என்கிறார் அவர்.
இவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் கமல்ராஜ். இவர் வீட்டிற்குள்ளும் நிலச்சரிவால் சேறும் சகதியும் புகுந்தபோது வீட்டிற்குள் குழந்தை இருந்தது. அவர் தனது வீட்டிலிருப்பவர்களைக் காப்பாற்ற வந்தபோது மார்பளவுக்கு சேறும் சகதியும் நிறைந்திருந்தது.
"சகதியால் சூழப்பட்டிருந்த வீட்டிற்குள் செல்லும்போது 'டாடா காப்பாத்துங்கன்னு' குழந்தையின் சத்தம் கேட்டது. பதற்றத்துடன் வீட்டிற்குள் சென்று பார்த்தால், யாரும் இருக்கும் இடமே தெரியவில்லை. குழந்தை எங்கே இருக்கிறாள் என்றே தெரியவில்லை. நான் தடவித் தடவி உள்ளே சென்றபோது 'டாடா வந்துட்டீங்களா' என்று குழந்தையின் குரல் கேட்டது. அவ்வளவுதான். வீட்டிற்குள்ளிருந்த ஒவ்வொருவரையும் பிடித்து இழுத்து வெளியில் வந்து சேர்த்தேன்" என்கிறார் கமல்ராஜ்.
"ஆனால், வீட்டை நெருங்கும்போது 'டாடா, என்னை எப்படியாவது காப்பாத்திடுங்க டாடா' என்ற குழந்தையின் குரல்தான் எனக்குத் தெம்பைக் கொடுத்தது. இல்லாவிட்டால் இது நடந்திருக்காது" என்கிறார் கமல்ராஜ்.
இங்கிருந்தவர்களின் துணிச்சலான முயற்சிகளால், இந்த நிலச்சரிவில் கவரக்கெலயில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட அனைவரும் இப்போது பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். வீட்டையும் பொருட்களையும் இழந்தவர்களுக்கு அரசு நிவாரண உதவிகளை அறிவித்திருக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு