Aggregator
நெடுந்தீவுக்கான படகு சேவைகளின் புதிய நேர சூசி
10 AUG, 2025 | 10:09 AM
நெடுந்தீவுக்கான போக்குவரத்து இடர்பாடுகளை குறைக்கும் முகமாக திங்கட்கிழமை (04) முதல் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நெடுந்தீவு - குறிகட்டுவான் இடையேயான படகுகள் சேவை பரீட்சார்த்தமாக அதிகரிக்கப்படுகின்றது.
நெடுந்தீவுக்கான அதிகரித்த பயணிகள் மற்றும் சேவையில் ஈடுபட போதுமான படகுகள் இன்மை காரணமாக நெடுந்தீவுக்கு பயணிப்போர் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டது.
இதற்கமைய சனிக்கிழமை (09) குறிகட்டுவான் இறங்குதுறையில் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் கடற்தொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், மாவட்ட செயலாளர், மேலதிக மாவட்ட செயலாளர், நெடுந்தீவு பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாண பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இம்முடிவு எட்டப்பட்டது.
இதற்கமைய திங்கட்கிழமை காலை 6.15 மணிக்கு முதலாவது படகும் 6.45 க்கு இரண்டாவது படகும் நெடுந்தீவிலிருந்து புறப்பட்டு மீளவும் முறையே 7.30 மணிக்கும் 8.30 மணிக்கும் குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கியும் பயணிக்கும்.
அதேபோன்று மாலை 2.30 மணிக்கும் 3.30 மணிக்கும் நெடுந்தீவிலிருந்து படகுகள் புறப்பட்டு குறிகாட்டுவனை வந்தடைந்து, குறிகாட்டுவானில் இருந்து மீளவும் 4.00 மணிக்கும் 4.45 மணிக்கும் புறப்பட்டு நெடுந்தீவை சென்றடைய கூடியவாறு படகு சேவைகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
மேதகு- ஈழத்தமிழர்களின் அடையாளம்- பா.உதயன்
புங்குடுதீவில் அநாதரவாக கரையொதுங்கிய படகு – தீவிர விசாரணை
புங்குடுதீவில் அநாதரவாக கரையொதுங்கிய படகு – தீவிர விசாரணை
புங்குடுதீவில் அநாதரவாக கரையொதுங்கிய படகு – தீவிர விசாரணை
written by admin August 9, 2025
யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்கரை பகுதியில் ஆட்களற்ற நிலையில் மீன்பிடி படகொன்று இன்றைய தினம் சனிக்கிழமை இரவு 07 மணியளவில் கரையொதுங்கியுள்ளது. ஆட்களற்ற நிலையில் , படகினுள் மீன் பிடி வலைகளுடன் படகு கரையொதுங்கிய நிலையில் , சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, படகு தொடர்பிலான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை - மஹாபாரத கதைகளின் தொகுப்பு
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை - மஹாபாரத கதைகளின் தொகுப்பு
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை -1
மூலம் : யமுனா ஹர்ஷவர்த்தனா
தமிழாக்கம் : கார்த்திக்
திருமதி. யமுனா ஹர்ஷவர்த்தனா அவர்கள் எழுதி கிரி ட்ரேடிங் நிறுவனம் வெளியிட்ட ” Once upon a Time Thousands of years ago “ என்ற ஆங்கில புத்தகத்தின் மொழிபெயர்ப்பு இது. மஹாபாரத கதைகளின் தொகுப்பே இந்த நூல்.
ஆனை முகத்தோனுடன் ஓர் ஒப்பந்தம்
உலகின் தலைச்சிறந்த காவியத்தை எழுதுவதற்கான நேரம் அது , வரலாற்றை சந்ததியருக்காக ஆவணப்படுத்தப்பட வேண்டிய நேரம். மீனவப் பெண்ணான சத்யவதிக்கும், பராசர முனிவருக்கும் பிறந்த கரிய நிறத்தை கொண்ட ரிஷி கிருஷ்ண த்வைபாயனா அந்தப் பொறுப்பை தனதாக்கிக் கொண்டார்.
பரந்த வேதங்களை படிப்பதற்கும் அடுத்த தலைமுறைகளுக்கு தொகுத்து வழங்கவும் வசதியாக தொகுத்து மூன்றாக வகைப்படுத்தியதால் வேத வியாசர் என்றழைக்கப்படும் கிருஷ்ண த்வைபாயனா இந்த மிகப் பெரிய வேலையை எப்படி செய்து முடிப்பது என்ற சிந்தனையில் ஆழ்ந்தார். வரலாறு மிக நீண்டதாக ஐந்து தலைமுறைகளை உள்ளடக்கியதாக இருந்தது;விவரிப்பு மிக கடினமானதாக நூற்றுக்கணக்கான நபர்கள் மிக முக்கிய பாத்திரங்களில் கொண்டதாகவும் இருந்தது. கதாபாத்திரங்களின் உளவியல், சூழ்நிலைகளின் உளவியல் ; விவரிப்பின் மூலம் சொல்லப்படவேண்டிய சூழ்நிலைகள் என அவர் முன் இருந்த பணி கடினமாய் இருந்தது. கதை விவரிப்பு சுருக்கமாய் கச்சிதமாய் இருக்க வேண்டும். அதே நேரத்தில் எதையும் விட்டுவிடக்கூடாது. ஏனெனில், இந்த காவியம் , மனிதர்களை என்றும் வழிநடத்தக் கூடியது , இந்தக் காவியத்தில் இருக்கும் எண்ணற்ற பாத்திரங்களின் மூலம் ஒவ்வொருவரும் தன்னை மீட்டெடுப்பர், இந்த கதை, ஒருவரின் வாழ்வின் பாதையையே மாற்றக் கூடிய ஒன்றாகும். முன்னிருந்த வேலை கடினமானது. மீண்டும் நினைவுப்படுத்தி, நியாயப்படுத்தி தொகுத்து அதை எழுதுவது என்பது மனிதனால் ஆகக் கூடிய விஷயமில்லை என்பது வியாசருக்கு தெரியும். எனவே தெய்வத்தின் உதவியை நாட முடிவு செய்து ஆனைமுகனை பிரார்த்தித்தார்.
” கணேசா ! பிரணவ வடிவானவனே ! என்னுடைய தாழ்மையான வணக்கங்களை ஏற்றுக்கொள். மனிதகுலத்தின் நன்மைக்காக , மஹாபாரதம் எழுதப்பட்டு காப்பற்றப்படவேண்டியது நம்மின் கடமையாகும். இதற்காய் , உன் உதவி வேண்டி வந்துள்ளேன். கருணை வடிவானவனே ! மஹாபாரதம் எழுத ஒப்புக் கொண்டு என்னை சிறப்பிப்பாயாக…”
“வ்யாஸா ! நீ என்னிடம் இந்த உதவி கேட்டதற்கு நான் மிகவும் மகிழ்கிறேன். ஆனால்,எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும், உன் குடும்பக் கதையை உன்னருகில் உட்கார்ந்து நீ சொல்வதாய் என்னால் காத்திருக்க இயலாது, எனக்கு அவ்வளவு நேரமும் இல்லை ” என்றார் கணேசர்.
சிறிதும் இடைவெளி இன்றி கதையை சொல்லி செல்ல இயலாது. ஏனெனில் வரிகளை யோசிக்க அவருக்கு நேரம் வேண்டும் என வியாசர் அறிவார். விக்னேஸ்வரன்* மிகக் கடினமான நிறைவேற்றுவதற்கு கடினமான நிபந்தனையை விதிக்கிறார் என்பதையும் வியாசர் அறிவார். ஆனால் பல வருட தவத்தின் பயனாக கிடைத்த இந்த வாய்ப்பை வீணடிக்க அவர் விரும்பவில்லை. எனவே அவர் விநாயகரிடம் வேண்டினார், ஞான ஸ்வரூபனே நீ இல்லாமல் உலகில் ஞானம் என்பது இல்லாமல் போய்விடும். உங்கள் ஞானத்தின் உதவியால் நான் வரிகளை தொகுத்து சொல்கிறேன். இந்த எளியவன் சொல்வதை நீங்கள் புரிந்து கொண்டு எழுதும் வரையில் நான் இடையில் நிறுத்த மாட்டேன் என உறுதி அளிக்கிறேன்.
கஜானனர் இதற்கு ஒத்துக்கொண்டார். வியாசர் சொல்ல சொல்ல, அவர் தந்தத்தை ஒடித்து அதை எழுதுகோலாகக் கொண்டு பனை ஓலைச் சுவடிகளில் எழுதத் துவங்கினார். இடையில் வியாசர் கொஞ்சம் கடினமான வரிகளைக் கோர்த்து தர அதை புரிந்து கொண்டு விநாயகர் எழுத ஆகும் இடைவெளியில் அடுத்த அடுத்த வரிகளை அமைத்துக் கொள்ள வியாசருக்கு உதவியது. இதைப் புரிந்து கொண்ட விநாயகரும் சிரித்துக் கொண்டே எழுதினார்.
நாம் இன்று படித்து, கேட்டு கற்று மகிழும் மஹாபாரதம் இந்த விதமாகத்தான் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வியாசர் மூஷிக வாகனனுக்கு சொல்லி எழுதப்பட்டது. ஞானத்தின் அதிபதி மற்றும் வேதத்தை தொகுத்த ரிஷியின் இந்த கூட்டணி நமக்குள் ஒத்துழைப்பு மற்றும் இரக்கத்தின் விதைகளை தூவட்டும்.
மிக சரியான மனிதர்
அக்காலத்தில் முனிவர்கள் எல்லோரும் கடுமையான தவங்கள் மூலம் மிக பெரிய பேறு அடைய விரும்பி தவம் இருந்தனர். ஆனால் ஒருவர் மட்டும் பிறக்கும் பொழுதே எல்லாவகையிலும் சிறந்தவராக பிறந்தார் , சுகர், வியாசரின் மகனான இவர் பிறப்பிலேயே பிரம்மத்தை பற்றிய ரகசியத்தை அறிந்திருந்ததால் சுக ப்ரம்ம ரிஷி என அழைக்கப்பட்டார்.
ஒருநாள் , உலகத்தின் அறிவு பொக்கிஷத்தை காப்பாற்ற தனக்கொரு மகன் வேண்டுமென உணர்ந்த வியாஸர் சிவனை நோக்கி தவமிருக்கத் துவங்கினார். அதே சமயத்தில் விண்ணுலகத்தில் இருந்து ஓர் கிளி அங்கே பறக்க அதை அவர் பார்த்தார். அதன் மூலம் அக்கிளி , மிக அழகான அதே சமயம் தெய்வீக களைப் பொருந்திய ஒரு குழந்தையை தந்தது. அந்தக் குழந்தை சுக தேவர், கிளிகளின் கடவுள் என அழைக்கப்பட்டது.
சுகருக்கு , வியாஸர் வேதங்களையும் மற்ற விஷயங்களையும் கற்றுத் தர துவங்கினார். மிகக் குறுகிய காலத்திலேயே அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார் சுகர். மகனை, தந்தையே பரிட்சித்து சான்று அளிக்க முடியாத காரணத்தால், மிதிலையின் அரசராக இருந்த ஜனகரிடம் 1 அவரை அனுப்பி வைத்தார் வியாசர் .
சுகர் வரப்போவதை முன்பே தனது ஞான திருஷ்டியால் அறிந்த ஜனகர், தனது கோட்டை காவலாளிகளை அழைத்து, அவர் சொல்லும் வரை சுகரை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என கட்டளையிட்டார். அதேபோல், கோட்டை வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்ட சுக ப்ரம்ம ரிஷியும், மூன்று நாட்கள், உணவையோ, சொட்டு நீரோ மற்றும் துறக்கமோ இன்றி காத்திருந்தார். நான்காம் நாள், ஜனகரே கோட்டை வாயிலுக்கு வந்து பிரம்மாண்ட ஊர்வலமாய் அவரை அழைத்து சென்றார். உள்ளே அழைத்து வரப்பட்ட சுக பிரம்மத்தை சிறந்த அழகிகள் குளிப்பாட்டி அவருக்கு அறுசுவை விருந்தும் அளித்தனர். இவை எதையும் சிந்தையில் கொள்ளாத இளம் ரிஷி தனக்களிக்கப்பட்ட விருந்தை ஏற்றுக்கொண்டார்.
இதை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த ஜனகர் ” மகனே ! இப்பொழுது என்னுடன்அரசவைக்கு வருவாயாக ! ” என அழைத்தார்.
ஜனகரின் அரசவை வளர்ந்து வரும் நாட்டின் வளர்ச்சியை பிரதிபலிப்பது போல் இருந்தது. மிக அழகான நாட்டியப் பெண்மணிகள் நாட்டியமாடிக் கொண்டும் அருமையான பாடல்களைப் பாடிக்கொண்டும் இருந்தனர்.
அரசர் , சுகர் கையில் ஒரு கிண்ணத்தைக் கொடுத்து அதன் விளிம்பு வரை எண்ணையை ஊற்றி , அரசவையை சுற்றி வந்து அங்கிருந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய சொன்னார். அமைதியாக , அந்த கிண்ணத்தை கையில் ஏந்தி ஒரு சொட்டு எண்ணையும் சிந்தாமல் சென்று அங்கிருந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தார்.
அதைக் கண்டு மகிழ்ந்த ஜனகர் , சுகரை கட்டியணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ” என்னருமை மகனே ! இனி நீ கற்பதற்கு என்ன உள்ளது ? கஷ்டங்களோ , அரண்மனையின் செல்வச்செழிப்போ இல்லை உணர்வுகளை தூண்டு விஷயங்களோ உன்னை தீண்டவில்லை. நீ ஏற்கனவே ஒரு ப்ரம்மஞானி2 ” எனக் கூறினார்.
சுகர் எப்பொழுதும் இந்த உலக பிரஞை அற்று இருந்ததால் அவரை வியாசர் மிக கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டி இருந்தது. ஒருமுறை சுகர் ஆற்றங்கரையோரம் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். வியாசரும் அவரை பின்பற்றி சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது அங்கு சில இளம் பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர். சுகர் சென்றபொழுது அவர்கள் நாணம் அடையவில்லை. மாறாக அவர்கள் தங்கள் குளியலை தொடர்ந்தனர். ஆனால், அவரை தொடர்ந்து வியாசர் வந்தபொழுது , அவர்கள் உடனடியாக குளத்தில் மூழ்கி தங்களை மறைத்துக் கொண்டனர். இதைக் கண்ட ரிஷி ஆச்சர்யம் அடைந்து ”அழகான இளம் வாலிபன் நிர்வாணமாக நடந்தது உங்கள் உணர்வுகளை சீண்டவில்லை. ஆனால் முழுவதும் உடையணிந்த வயோதிகனான நான் வரும்பொழுது , வெட்கம் கொண்டு உங்களை மறைத்துக் கொண்டீர்களே.. இதற்கு விளக்கம் அளிக்க இயலுமா ” என வினவினார்.
அதற்கு அவர்கள் ” தவ ஸ்ரேஷ்டரே ! அவர் முழு ஞானம் அடைந்தவர் . ஆண் பெண் பாலின பேதத்தை கடந்து விட்டார். ஆனால் தாங்கள் அப்படி இல்லையே ! நாங்கள் எவ்வாறு வெட்கம் கொள்ளாமல் இருக்க இயலும் ” என பதில் உரைத்தனர்.
சுகர்தான், பின்பு மஹாபாரத்தையும் , ஸ்ரீமத் பாகவதத்தையும் உலகிற்கு பரப்பினார். இவ்வுலகிற்கு தேவையான ஞானத்தை காத்து மற்றவர்களுக்கு அளித்தார்.
ஜனகர் : சீதையின் தந்தை அல்ல. அவ்வம்சத்தில் வந்த அனைவருக்கும் இந்த பட்டம் உண்டு. எனவே இவர் அவ்வம்சத்தில் வந்த மற்றொரு அரசர்
ப்ரம்மஞானி : பிரம்மத்தை கற்றறிந்தவர்.
சஞ்சீவனி – உயிர் தரும் மந்திரம்
இது பாண்டவ / கௌரவர்களின் காலத்திற்கு மிக முன்னால் நடைபெற்ற ஒரு சம்பவம் ஆகும். தேவர்களும் அசுரர்களும் எப்பொழுதும் சண்டையிட்டுக் கொண்டே இருந்தனர். அப்போரில் அசுரர்கள் தொடர்ந்து வெற்றிப் பெற்றுக் கொண்டே வந்தனர். காரணம், அவர்களுடைய குரு சுக்ராச்சாரியாருக்கு இறந்த உயிர்களை மீட்டுத் தரும் சஞ்சீவனி மந்திரம் தெரிந்திருந்தது. அந்த மந்திரம் அறிந்தாலொழிய இப்போரில் வெற்றி பெறுவது என்பது இயலாது என்பதை அறிந்த தேவர்கள் பலத்த ஆலோசனைக்குப் பிறகு அவர்கள் குரு பிரகஸ்பதியின் மகன் கசன் என்பவனை சுக்ராச்சாரியாரிடம் அனுப்பி இம்மந்திரத்தை கற்று வரக் கூறினர்.
கசன், சுக்ராச்சாரியாரை அணுகி தன்னை சீடனாக ஏற்றுக் கொள்ள கேட்டுக் கொண்டான். பிரகஸ்பதியின் மேல் இருந்த மரியாதை மற்றும் கசனின் பணிவான நடவடிக்கையின் காரணமாய் அவனைத் தன் சீடனாக ஏற்றுக் கொண்டார் சுக்ராச்சாரியார். ஒரு சீடனாய் தன் கடமைகளை சுக்ராச்சாரியாரின் விருப்பத்திற்கேற்ப செய்து வந்தான். நாளடைவில் அவரது மகள் தேவயானிக்கும் மிக நெருக்கமாகிவிட்டான் கசன்.
வஞ்சக எண்ணம் கொண்ட அசுரர்கள் கசனின் நோக்கத்தை சந்தேகிக்க துவங்கினர். அதனால் சுக்ராச்சாரியார் அறியாமல் அவனை கொல்லவும் முடிவெடுத்தனர். ஒருநாள், அவனை கடத்தி சென்று கடலில் மூழ்கடித்து அவனது பிணத்தை சுக்ராச்சாரியார் முன் கொண்டுவந்து கிடத்தினர். அவர் கேட்டபொழுது எதோ ஒரு காரணம் சொல்லப்பட்டது. ஆனாலும் அவர்களது கெட்ட எண்ணத்தை அறிந்து கொண்ட சுக்ராச்சாரியார், சஞ்சீவனி மந்திரம் ஜெபித்து அவனை உயிர்ப்பித்தார்.
அடுத்த முறை அவனை கொன்று அவனது உடலை நாய்க்கு உணவாக இட்டனர் அசுரர்கள். இதை அறிந்த தேவயானி, சுக்ராச்சாரியாரிடம் முறையிட, மீண்டும் அவர் சஞ்சீவனி மந்திரம் ஜெபித்தார். இம்முறை நாயின் வயிற்றை கிழித்துக் கொண்டு வெளிவந்தான் கசன்.
மூன்றாம் முறை அசுரர் அவனை மரத்தில் கட்டி வைத்து உயிருடன் எரித்தனர். பின்பு அந்த சாம்பலை, மதுவில் கலந்து சுக்ராச்சாரியாருக்கு அளித்தனர். அதை குடித்தப்பின் தான், நடந்ததை உணர்ந்தார். இப்பொழுது அவருக்கு தேவர்களின் தந்திரமும் புரிந்தது.
சாம்பலாய் மதுவில் கலந்து அவரது வயிற்றில் இருந்த கசனுக்கு அவர் சஞ்சீவனி மந்திரத்தை போதித்தார்.பின் கீழே படுத்து அவர் அம்மந்திரத்தை ஜபிக்க , அவரது வயிற்றை கிழித்துக் கொண்டு உயிர் பெற்று வந்தான் கசன். அவனது குணத்திற்கு , அவனை உயிர் பெற்றவுடன் முதல் காரியமாய், அவனை உயிர்ப்பித்த குருவை சஞ்சீவனி மாத்திரம் ஜபித்து உயிர்பித்தான். பின்பு தேவர்களிடம் சென்று சேர்ந்தான்.
இதன் பின், சுக்ராச்சரியாரின் சாபத்தால் மது அருந்துபவர்கள் அவர் பட்ட கஷ்டம் போலவே அனுபவிப்பார்கள். சுக்ராச்சாரியாரின் உதிரத்தில் உயிர்பித்ததால், கசன் தேவயானிக்கு சகோதரன் முறை ஆகிவிட்டான். எனவே அவனை விடுத்து யயாதி என்ற மன்னனை மணமுடித்தாள் தேவயானி. இந்த யயாதியே பாண்டவர் / கௌவரவர்களுக்கு முன்னோடி ஆவான்.
ஈழத்து நாட்டார் தெய்வங்கள் - தி. செல்வமனோகரன்
இஸ்ரேலிற்கான ஆயுத ஏற்றுமதியை நிறுத்தியது ஜேர்மனி
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்
மூடப்படும் பாடசாலைகள் திறக்கப்படும் போதைப் பொருள் தடுப்பு மையங்கள்? - நிலாந்தன்
மூடப்படும் பாடசாலைகள் திறக்கப்படும் போதைப் பொருள் தடுப்பு மையங்கள்? - நிலாந்தன்
மூடப்படும் பாடசாலைகள் திறக்கப்படும் போதைப் பொருள் தடுப்பு மையங்கள்? - நிலாந்தன்
வட மாகாணத்தில் 982 பாடசாலைகள் காணப்படும் நிலையில் அவற்றில் 70க்கும் மேற்பட்ட பாடசாலைகளை மூடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். 10 பிள்ளைகள் கல்வி கற்கும் 35 பாடசாலைகள் காணப்படுவதாகவும் 11–20 பிள்ளைகள் கல்வி கற்கும் 64 பாடசாலைகளும், 20–50 பிள்ளைகள் கற்கும் 171 பாடசாலைகளும் இருப்பதாகவும் 50–100 பிள்ளைகள் கற்கும் 174பாடசாலைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலைகள் ஏன் மூடப்படுகின்றன? எப்படிப்பட்ட பாடசாலைகள் மூடப்படுகின்றன? பெரும்பாலும் உள்ளூரில் காணப்படும் சிறிய பாடசாலைகள்தான் அதிகமாக மூடப்படுகின்றன. அவை மூடப்படுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. முதலாவது காரணம், சனத்தொகை வீழ்ச்சி. இரண்டாவது காரணம், போட்டிப் பரீட்சை காரணமாக தேசிய மட்டப் பரீரசைகளில் உயர்ந்த அடைவைக் காட்டும் பாடசாலைகளை நோக்கி பிள்ளைகளை நகர்த்தும் ஒரு போக்கு.
எனினும் யுத்தம்தான் இதற்கு மூல காரணம் என்று ஒரு மூத்த கல்வி அதிகாரி தெரிவித்தார். போர் காரணமாக ஏற்பட்ட இடப்பெயர்வுகள் புலப்பெயர்வுகள் போன்றவற்றால் சனத்தொகை வீழ்ச்சி அடைந்தது. போரினால் பாடசாலைகள் அழிக்கப்பட்டன. அல்லது சேதமடைந்தன. போர்க்காலத்தில் இடம்பெயர்ந்த ஒரு தொகுதி பாடசாலைகள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பவேயில்லை.
போட்டிப் பரீட்சை காரணமாக நகர்ப்புற பாடசாலைகளில் நோக்கிச் செல்லும் மோகம் அதிகரிக்கின்றது. தேசியமட்ட பரீட்சைகளில் உயர்ந்த பெறுபேறுகளை அடைவதற்காக பிள்ளைகளை பந்தயக் குதிரைகள் போல பழக்கி எடுக்கும் ஆசிரியர்களையும் பாடசாலைகளையும் நோக்கி அல்லது நகரங்களை நோக்கி பிள்ளைகள் நகர்கிறார்கள். இதனால் உள்ளூரில் காணப்படும் சிறிய பாடசாலைகள் கைவிடப்படுகின்றன.
வரையறைக்கப்பட்ட எண்ணிக்கையைவிடக் குறைந்தளவு பிள்ளைகளைக் கொண்ட ஒரு பாடசாலைக்கு வளங்களை விரயம் செய்ய முடியாது. எனவே சிறிய பாடசாலைகளை மூடுவது தவிர்க்கமுடியாதது என்று கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள். யப்பானில் ஒரு தொடருந்துப் பாதையில் ஒரே ஒரு பிள்ளை பாடசாலைக்குப் போக வேண்டும் என்பதற்காக ஒரு ரயில்வே ஸ்டேஷனை மூடாமல் வைத்திருப்பதாக ஒரு செய்தி உண்டு. அது யப்பானில். ஆனால் இலங்கையில் அதிலும் போரால் எல்லா விதத்திலும் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பகுதிகளில் மிகச்சில பிள்ளைகளுக்காக அளவுக்கு அதிகமான வளங்களைக் குவிப்பதற்கு கல்விக் கட்டமைப்பும் தயாரில்லை.
இவ்வாறு பாடசாலைகள் அதிகமாக மூடப்படக்கூடிய வாய்ப்புகளைக் கொண்ட பிரதேசங்களில் அதாவது பிள்ளைகளின் தொகை குறைவாக உள்ள பகுதிகளில் பிள்ளைகளை ஒரு மையத்தில் இணைத்து, வளங்களையும் ஒரு மையத்தில் இணைத்து,கொத்தணிப் பாடசாலைகளை உருவாக்கிய பின் அப்பாடசாலைகளை நோக்கி பிள்ளைகளை ஏற்றி இறக்குவதற்கு உரிய வாகன ஏற்பாடுகளை செய்யலாம் என்று ஓய்வுபெற்ற கல்வி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
வவுனியா வடக்கு வலயத்தில் அவ்வாறு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்பு ஒன்றின் உதவியோடு வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீவுப் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவப் பாடசாலையும் அவ்வாறு வாகனத்தை விட்டு ஊர் ஊராக பிள்ளைகளை ஏற்றி இறக்குகிறது. அதில் மதமாற்ற உள்நோக்கங்கள் இருப்பதாக ஒரு பகுதி இந்துக்கள் மத்தியில் சந்தேகங்கள் உண்டு. அதே சமயம் கோவில்களைப் புனரமைப்பதற்குக் கோடி கோடியாகச் செலவழிக்கும் பக்தர்களும் அறக்கட்டளைகளும் தமது ஊர்களில் உள்ள பிள்ளைகளை ஏற்றி இறக்குவதற்கு வாகன ஏற்பாடுகளைச் செய்யலாம்.
வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மட்டும் 50 பாடசாலைகள் இதுவரை மூடப்பட்டு விட்டன, அவற்றில் பெரும்பாலானவை ஒரு காலகட்டத்தில் நவீன யாழ்ப்பாணத்தைச் செதுக்கிய கல்விச்சூழலைக் கட்டமைத்தவை.
கடந்த இரு நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்ட மிஷன் பாடசாலைகளுக்கு போட்டியாகவும் எதிராகவும் இந்து மறுமலர்ச்சியாளர்களும் அறக்கட்டளைகளும் கட்டியெழுப்பிய பாடசாலைகள் யாழ்பாணத்தின் மூலை முடுக்கெல்லாம் காணப்பட்டன.
ஊரின் ஒரு பகுதியில் ஓர் அமெரிக்க மிஷன் பாடசாலை அல்லது ரோமன் கத்தோலிக்க பாடசாலை காணப்படுமாக இருந்தால் அதற்குப் போட்டியாக சற்றுத் தள்ளி ஒரு சுதேச பாடசாலை கட்டப்படும். அதற்கு சரஸ்வதி, சன்மார்க்கா, சைவப்பிரகாசா… என்று ஏதாவது ஒரு இந்து மதம் சார்ந்த பெயர் வைக்கப்படும். ஊருக்குள் குறுகிய தூரத்தில் இவ்வாறு பாடசாலைகள் கட்டப்படுகையில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அங்கே போய்ப் படிக்குமாறு உந்தித் தள்ளினார்கள். இவ்வாறு போட்டிக்குப் பள்ளிக்கூடம் கட்டும் ஒரு போக்கின் விளைவாகவும்தான் நவீன யாழ்ப்பாணம் மேலெழுந்தது.
இனப்பிரச்சினைக்கு அமெரிக்க மிஷனும் ஒருவிதத்தில் காரணம் என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி கூறியிருக்கிறார். அரசாங்கம் தரப்படுதலை அறிமுகப்படுத்திய பொழுது அதனைத் தமிழர்கள் இன ஒடுக்குமுறையாக வியாக்கியானப்படுத்தினார்கள் என்ற பொருள்பட அவருடைய விளக்கம் அமைந்திருந்தது. மிஷன் பாடசாலைகளின் உழைப்பினால் யாழ்ப்பாணத்தில் கல்வி கற்றவர்களின் தொகை அளவுப் பிரமாணத்தைவிட அதிகமாக இருந்தது என்று அவர் விளங்கி வைத்திருந்திருக்கக் கூடும்.
இவ்வாறு போட்டிக்கு கட்டப்பட்ட பாடசாலைகளில் ஒருபகுதி இப்பொழுது மூடப்பட்டு வருகின்றது. கந்தர்மடத்தில் ஒரு பாடசாலை. கந்தர்மடம் சைவப் பிரகாச வித்தியாலயம். ஆறுமுகநாவலரால் கட்டப்பட்ட இந்தப் பாடசாலைக்கு ஈழப்போர் வரலாற்றில் முக்கியத்துவம் உண்டு. 1983ஆம் ஆண்டு நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இந்த பாடசாலை ஒரு வாக்களிப்பு நிலையமாக இருந்தது. அங்கே காவலுக்கு நின்ற படை வீரர்கள் மீது விடுதலைப் புலிகள் இயக்கம் தாக்குதல் நடத்தியது. அதில் சிப்பாய்கள் கொல்லப்பட்டார்கள். ஈழப் போரில் முதல்முதலாக ஒரு ரைஃபிள் கைப்பற்றப்பட்ட தாக்குதல் அது. அந்தப் பாடசாலையின் கழிப்பறைச் சுவரில் அந்தச் சுவரைத் தாண்டிக் குதித்துத் தப்ப முயன்ற ஒரு சிப்பாயின் ரத்தத்தில் தோய்ந்த கை அடையாளங்கள் பதிந்திருந்தன. அந்தப் பாடசாலை சில ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்டு விட்டது.
தமிழ் மக்கள் தமது ஜனத்தொகை தொடர்பாக சிந்திக்க வேண்டிய காலகட்டம் எப்பொழுதோ வந்து விட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளைப் பெறுமாறு குடும்பங்களை ஊக்குவிக்க வேண்டிய காலம் எப்பொழுதோ வந்துவிட்டது. அவ்வாறு அதிகம் பிள்ளைகளைப் பெறும் குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையைக் கொடுக்கத் தேவையான கட்டமைப்புகளை தமிழ் மக்கள் உருவாக்க வேண்டும். அரசற்ற தரப்பாகிய தமிழ் மக்கள் இந்த விடயத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களை எவ்வாறு ஒருங்கிணைக்கலாம் என்றும் சிந்திக்கலாம்.
கல்வித்துறையில் புலம்பெயர்ந்த தமிழ்ச் தாராளமாக உதவி வருகிறது. தனி நபர்களும் தன்னார்வ நிறுவனங்களும் பரவலாகத் தொண்டு செய்து வருகிறார்கள். தாம் படித்த பாடசாலையை மேம்படுத்த வேண்டும் என்று தாகத்தோடு பழைய மாணவர்கள் பல பாடசாலைகளுக்கு காசை அள்ளி வழங்குகிறார்கள். தமது கிராமத்தின் கல்வி நிலையை மேம்படுத்துவதற்காக தமது முகத்தைக் காட்டாமலேயே அமைதியாக உதவிகளை செய்து கொண்டிருக்கும் பலரை நான் அறிவேன்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலர் பாடசாலைகளில் பழைய மாணவர் சங்கங்களின் மீது அளவுக்கு மிஞ்சி செல்வாக்கு செலுத்துவதும் அங்கே குழப்பங்களை ஏற்படுத்துவதும் தொடர்பான குற்றச்சாட்டுகள் உண்டுதான். ஆனால் போர்க்காலத்திலும் 2009க்குப் பின்னரும் ஈழத் தமிழர்கள் மத்தியில் குறிப்பாக கல்வித்துறையில் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் உதவி மகத்தானது.
அதேசமயம் புலப் பெயர்ச்சி தொடர்ந்து நிகழ்திறது. தமது முதல் பட்டப்படிப்பை முடித்த பலருக்கும் புலப்பெயர்ச்சிதான் அடுத்த கவர்ச்சியான தெரிவாகக் காணப்படுகிறது. புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கை ஒரு பகுதி இளையோருக்கு கவர்ச்சியான முன் உதாரணமாக மாறிவிட்டது. இதனால் தொடர்ச்சியாக புலப்பெயர்ச்சி நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. இதுவும் தமிழ்ச் சனத்தொகையைக் குறைக்கின்றது.
தமது நாட்டிலேயே வாழ வேண்டும்;தமது தாய் நிலத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்; தனது அறிவையும் அனுபவத்தையும் தனது தாய் நிலத்துக்காக அர்ப்பணிக்க வேண்டும்; தமது வேரிலே நிலைத்திருந்து தமது சமூகத்துக்குப் பூத்துக் காய்க்க வேண்டும் என்ற இலட்சியப் பற்றை இளைய தலைமுறைக்கு ஊட்டக் கூடிய எத்தனை தலைவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு? இதனால் சனத்தொகை மேலும் குறைந்துகொண்டே போகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்துக்கு ஒரு ஆசனம் குறைந்துவிட்டது. இவ்வாறாக சனத்தொகை வீழ்ச்சியின் பின்னணியில், ஒரு காலம் போட்டிக்கு பாடசாலைகளைக் கட்டிய ஒரு சமூகம் இப்பொழுது பாடசாலைகளை மூடிக்கொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு தேசிய அபாயகரமான ஒளடதங்கள் சபை அதிகாரிகளுடனான சந்திப்பின்போது வட மாகாண ஆளுநர் ஒரு விடயத்தைப் பரிந்துரைத்திருந்தார்.வடக்கில் போதைப்பொருள் புனர்வாழ்வு மையங்களை உருவாக்குவதற்கு போதிய இடவசதிகள் இல்லையென்றால் அவசரத் தேவைக்கு ஏற்கனவே மூடப்பட்டுள்ள பாடசாலைகளில் பொருத்தமானவற்றை பயன்படுத்தலாமா என்ற பொருள்பட அப்பரிந்துரை அமைந்திருந்தது. ஒரு காலம் போட்டிக்குப் பபாடசாலைகளைக் கட்டிய ஒரு சமூகத்தில் இப்பொழுது போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை பராமரிப்பதற்கு கைவிடப்பட்ட பாடசாலைகள் பரிந்துரைக்கப்படும் ஒரு நிலை?
தமிழ் அரசுக்கட்சி விரும்பினால் எதிர்வரும் வாரம் சந்திக்கத் தயார்; தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அறிவிப்பு !
தமிழ் அரசுக்கட்சி விரும்பினால் எதிர்வரும் வாரம் சந்திக்கத் தயார்; தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அறிவிப்பு !
தமிழ் அரசுக்கட்சி விரும்பினால் எதிர்வரும் வாரம் சந்திக்கத் தயார்; தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அறிவிப்பு !
வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிவைத்த கடிதத்தில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி கையெழுத்திடாத நிலையில், அவர்கள் விரும்பும் பட்சத்தில் எதிர்வரும் வாரம் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்குத் தயாராக இருப்பதாக தமிழரசுக்கட்சியிடம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் இடையில் கடந்த முதலாம் திகதி கொழும்பிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற சந்திப்பின்போது தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிவைக்கவிருந்த (அனுப்பிவைக்கப்பட்டுவிட்டது) கடிதத்தில் தமிழரசுக்கட்சி கையெழுத்திடுவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
அதற்கமைய கடந்த 3 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருந்த தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டத்தின்போது மேற்படி கடிதத்தில் கையெழுத்திடுவது குறித்துத் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அத்தோடு அன்றைய தினம் மாலை 5.00 மணிக்கு இருதரப்பினரும் சந்திப்பதற்குத் தீர்மானித்திருந்ததாகவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த 3 ஆம் திகதி தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் அக்கட்சி உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தில் காத்திருந்த தமது கட்சியினரை சந்திக்கவில்லை எனவும், அதுபற்றித் தமக்கு அறியத்தரவில்லை எனவும் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டினார்.
அதன் நீட்சியாக கடந்த 7 ஆம் திகதி இருதரப்பினருக்கும் இடையில் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருந்த சந்திப்பு இறுதிநேரம் வரை உறுதிப்படுத்தப்படாததன் காரணமாக, அச்சந்திப்பும் நடைபெறவில்லை எனக் குறிப்பிட்ட கஜேந்திரகுமார், தமிழரசுக்கட்சி விரும்பும் பட்சத்தில் எதிர்வரும் வாரம் சந்திப்பொன்றை நடாத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாக அவர்களுக்கு அறியத்தந்திருப்பதாகவும் கூறினார்.
உக்ரைன் ஒரு துளி நிலத்தை கூட விட்டுக்கொடுக்காது - டிரம்பிற்கு ஜெலென்ஸ்கி பதில்
உக்ரைன் ஒரு துளி நிலத்தை கூட விட்டுக்கொடுக்காது - டிரம்பிற்கு ஜெலென்ஸ்கி பதில்
உக்ரைன் ஒரு துளி நிலத்தை கூட விட்டுக்கொடுக்காது - டிரம்பிற்கு ஜெலென்ஸ்கி பதில்
10 AUG, 2025 | 11:04 AM
உக்ரைன் ஒரு துளி நிலத்தை கூட விட்டுக்கொடுக்காது என தெரிவித்துள்ள அந்த நாட்டின் ஜனாதிபதி வொளோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி சமாதானத்திற்காக முன்வைத்த திட்டத்தினை நிராகரித்துள்ளார்.
உக்ரைன் ரஸ்யா செய்த விடயங்களிற்காக அந்த நாட்டிற்கு எந்த வெகுமானங்களையும் வழங்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனியர்கள் தங்கள் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிற்கு வழங்க மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
ரஸ்ய உக்ரைன் மோதலை முடிவிற்கு கொண்டுவருவதற்கு சில நிலங்களை கையளி;க்கவேண்டியிருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையிலேயே உக்ரைன் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
ரஸ்ய உக்ரைன் மோதலிற்கு தீர்வை காண்பதற்கா 15ம் திகதி ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/222212
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு தமிழ்த் தலைமைகள் கோருவது முறையற்றது - விஜயதாச ராஜபக்ஷ
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு தமிழ்த் தலைமைகள் கோருவது முறையற்றது - விஜயதாச ராஜபக்ஷ
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு தமிழ்த் தலைமைகள் கோருவது முறையற்றது - விஜயதாச ராஜபக்ஷ
10 AUG, 2025 | 12:45 PM
(இராஜதுரை ஹஷான்)
பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்துச்செய்ய வேண்டும் என்று தமிழ் அரசியல் தலைமைகள் தொடர்ச்சியாக வலியுறுத்துவது முறையற்றது. பூகோள பயங்கரவாதத்தை கருத்திற் கொண்டு தேசிய பாதுகாப்பினை முன்னிலைப்படுத்தியதாக இவ்விடயத்தில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் வெளிப்படைத்தன்மையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்துச்செய்ய வேண்டும் என்று தமிழ் அரசியல் தலைமைகள் தொடர்ச்சியாக வலியுறுத்துவது முறையற்றது.
உலகளாவிய ரீதியில் பயங்கரவாதம் தற்போது பல்வேறு வழிகளில் செயற்படுகிறது.இவ்வாறான நிலையில் இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்வது பிரச்சினைக்குரியதாக அமையும். தேசிய பாதுகாப்பினை முன்னிலைப்படுத்தியே அனைத்து தீர்மானங்களையும் எடுக்க வேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பில் எமது அரசாங்கத்தில் வெளிப்படையான பல நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.சிவில் தரப்பினர் உட்பட கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதாந்திரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்.
சட்டவரைபு வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கும் தருவாயில் இருந்த நிலையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதாக தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்யும் காலவரையை ஜனாதிபதியால் குறிப்பிட முடியுமா, இந்த அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் என்ற நம்பிக்கை கிடையாது.அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் ஒன்றிணையும் போது பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசாங்கம் ஆயுதமாக பயன்படுத்தும்.
ஜனாதிபதி சட்டத்தரணி தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.இருப்பினும் இதுவரையில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் வெளிப்படையானத் தன்மையில் மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வது சந்தேகத்துக்குரியது என்றார்.
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்
நடந்து முடிந்த 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வினாத்தாளுக்கு பதிலளித்த விதம் குறித்து பெற்றோர்கள் மாணவர்களிடம் கேள்வி கேட்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி கோரியுள்ளார்.
மாணவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தைக் கழிக்க வாய்ப்பளிக்குமாறும், புலமைப்பரிசில் பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு, குழந்தையின் குழந்தைப் பருவத்தை அழிக்க வேண்டாம் என்றும் பெற்றோர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், புலமைப்பரிசில் பரீட்சை என்பது ஒரு பரீட்சை மட்டுமே, இதன் காரணமாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கருத்து வௌியிட்ட அவர்,
"குறிப்பாக இந்த சிறு பிள்ளைகள் தங்கள் குழந்தைப் பருவத்தை மகிழ்ச்சியாகக் கழிக்க ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும்.
புலமைப்பரிசில் பரீட்சையை அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் தடுப்பது நம் அனைவரின் பொறுப்பாகும்.
பிள்ளைகள் தங்கள் திறனுக்கு ஏற்ப பரீட்சை எழுதுகிறார்கள்.
பிள்ளைகளின் திறன்கள் வேறுபட்டவை, எனவே பிள்ளைகளை ஒப்பிட்டுப் பார்த்து, இன்று பரீட்சையில் மாணவர்கள் என்ன எழுதினார்கள் என்று கேட்டு? அவர்கள் தவறான பதில் எழுதினால், அவர்களை திட்டவோ தண்டிக்கவோ வேண்டாம்.
அவர்கள் சரியான பதில் எழுதினாலும் சரி, தவறான பதில் எழுதினாலும் சரி, அந்த நேரத்தில் பிள்ளைகள் வினாத்தாளை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதே முக்கியம்.
எனவே நம் பிள்ளைகள் எப்படி பதிலளித்தாலும் சரி, பிள்ளைகளின் குழந்தைப் பருவத்தை நாம் திரும்பப் பெற முடியாது.
எனவே இந்த குழந்தைப் பருவத்தை பதில்களை எழுதுவதை அடிப்படையாகக் கொள்ளாதீர்கள்.
புலமைப் பரிசில் பரீட்சை என்பது பிள்ளைக்கு ஒரு பரீட்சை மட்டுமே. இந்த மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த பரீட்சைகளை எதிர்கொள்ளும் திறனைக் கொண்டுள்ளனர்.
அதனால் புலமைப் பரிசில் பரீட்சையை அடிப்படையாக கொண்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அழுத்தத்திற்கு உள்ளாக்கும் வகையில் செயல்பட வேண்டாம் என்று நான் தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்றார். https://adaderanatamil.lk/news/cme5dz9pc02d4qp4kfpcwl3e2