Aggregator

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

1 month ago
வணக்கம் வாத்தியார் . ........! தமிழ் பாடகி : சின்மயி பாடகா் : உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ் பெண் : வாராயோ வாராயோ காதல்கொள்ள பூவோடு பேசாத காற்று இல்ல ஏன் இந்த காதலும் நேற்று இல்ல நீயே சொல் மனமே ஆண் : வாராயோ வாராயோ மோனலிஸா பேசாமல் பேசுதே கண்கள் லேசா நாள் தோறும் நான் உந்தன் காதல் ராசா என்னோடு வா தினமே பெண் : இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான்தான் உன்கையின் காம்பில் பூ நான் நம் காதல் யாவும் தேன்தான் ஆண் : பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம் மனம் காற்றைப்போல ஓடும் உன்னை காதல் கண்கள் தேடும் பெண் : ஹோ ஹோ ஹோ லைலைலைலை காதல் லீலை செய்செய்செய்செய் காலை மாலை ஆண் : உன் சிலை அழகை விழிகளால் நான் வியந்தேன் இவனுடன் சேர்ந்தாடு சிண்ட்ரெல்லா ஆண் : நீயே நீயே அந்த ஜூலியட்டின் சாயல் உன் தேகம் எந்தன் கூடல் இனி தேவை இல்லை ஊடல் பெண் : தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே எனை முத்தமிடுவாயே இதழ் முத்துக்குளிப்பாயே ஆண் : நீ நீ நீ நீ மை ஃபேர் லேடி வா வா வா வா என் காதல் ஜோடி பெண் : நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை அதற்கொரு ஆதார ஸ்ருதி நீ ......! --- வாராயோ வாராயோ ---

அர்ச்சுனாவின் அரசியல் தொடர்பில் தமிழ் மக்கள் தெளிவடைய வேண்டும்

1 month ago
🤣 இந்த தொலைபேசி உரையாடல் பதிவு நானும் கேட்டேன். இவரிடம் இருந்து கிடைத்த கிடைக்க தொடங்கிய ஏமாற்றங்கள்.

வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை!

1 month ago
அவர்களுடைய அந்த புத்தகத்தில் வாழை மரம் பற்றி ஏதாவது சொல்லபட்டிருக்கின்றதா அப்படி சொல்லபட்டிருந்தால் வாழை மரத்தின் நிலை பரிதாபம் தான் ☹️

இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.

1 month ago
😂 இல்லை…. ஒரு கருத்தை சொல்லும் போது….. பத்தி பத்தியாக எழுதாமல்…. இப்படி ……போட்டு இடைவெளிவிட்டு எழுதும் பாங்கு. ஏதோ நிறைய எழுதினமாதிரியும் தெரியும் 🤣. அதைவிட முக்கியமாக வாசிப்பவர் கவனம் தேவையான புள்ளியில் படியும். சமாதானத்துக்கான நோபல் பரிசு வெனிசுவேலாவின் எதிர்கட்சி அரசியல்வாதி மாரினா மச்சாடோ வுக்கு போயுள்ளது.

மன்னாரில் 14 காற்றாலைகளை அமைப்பதே அரசாங்கத்தின் முடிவாக உள்ளது : மன்னார் மறைமாவட்ட ஆயர்

1 month ago
காற்றாலைகள் மக்கள் வாழ்வாதாரத்தை அழித்துவிடும் என்று மக்களை தவறாக துண்டிவிட்டவர்கள் இவர்களும் அரசியல்வாதிகளும் தான்.

இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.

1 month ago
இந்த அவதார்தான் சிறியரின் பதிவுகளுக்கு அழகு . ...... எங்கே இசகு பிசகாய் நடந்துபோய் எழாத்துப் பிரிவுக்குள் போட்டுதோ என நினைத்தேன் ..........! 😂

இஸ்ரேல் - ஹமாஸ் அமைதித் திட்டத்தின் முதற்கட்டத்திற்கு கையெழுத்து: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

1 month ago
ட்றம்ப்… இன்னும் தனது நோபல் பரிசு ஆசையை கைவிடவில்லை என்று, இன்றைய ஜேர்மன் தொலைக்காட்சி செய்தியாக இருந்தது. ரஷ்ய - உக்ரைன் போரை முடிவிற்கு கொண்டுவர புட்டினுக்கு அழுத்தமும் கொடுக்கின்றாராம். 🤣

ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் தனிமனிதனின் அதிகார வெறியினால்,ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியது: கறுப்பு ஜுலை தொடர்பில் டில்வின் கருத்து

1 month ago
ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் தனிமனிதனின் அதிகார வெறியினால்,ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியது: கறுப்பு ஜுலை தொடர்பில் டில்வின் கருத்து October 10, 2025 கறுப்பு ஜுலை கலவரங்கள் ஜே.வி.பியினாலேயே நடத்தப்பட்டதாக பொய்யாகப் பரப்புரை செய்யப்பட்ட போதிலும், அக்கலவரங்களால் நாம் வெகுவாகப் பாதிக்கப்பட்டோம் என்பதே உண்மையாகும். ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் தனிமனிதனின் அதிகார வெறியினால் வடக்கு, கிழக்கு, தெற்கு என எவ்வித பேதமுமின்றி ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியிருக்கின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா சுட்டிக்காட்டினார். நந்தன வீரரத்ன என்பவரால் எழுதப்பட்டு, மனோரஞ்சனால் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட ‘நாட்டை உலுக்கிய 83 கறுப்பு ஜுலையின் ஏழு நாட்கள்’ எனும் புலனாய்வு நூல் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வொன்று ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வியாழக்கிழமை (9) கொழும்பிலுள்ள மகாவலி மைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய டில்வின் சில்வா மேலும் கூறியதாவது: கறுப்பு ஜுலை பற்றிய இந்த நூலானது மறைக்கப்பட்ட அல்லது திரிபுபடுத்தப்பட்ட வரலாற்றின் உண்மைகளை வெளிக்கொணர்வதற்குப் பங்களிப்புச்செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜுலை கலவரம் தொடர்பில் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அதேபோன்று 1988, 1989 களில் இடம்பெற்ற கலவரங்களை ‘ஜே.வி.பி கலவரம்’ என்று அடையாளப்படுத்துகின்றார்கள். ஆனால் உண்மையில் நாம் அந்தக் கலவரங்களைத் தோற்றுவிக்கவில்லை. மாறாக அவற்றால் வெகுவாகப் பாதிக்கப்பட்டோர். அதேபோன்று 1983 கறுப்பு ஜுலை கலவரத்தினால் நான் வெகுவாகப் பாதிக்கப்பட்டேன். ஏனெனில் அக்காலப்பகுதியில் நான் எமது கட்சியின் களுத்துறை மாவட்டம், பேருவளை ஒருங்கிணைப்பாளராகவும், முழுநேர கட்சி செயற்பாட்டாளராகவும் இருந்தேன். இருப்பினும் கலவரத்தை அடுத்து எமது கட்சியும் தடை செய்யப்பட்ட கட்சியாக அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து எமது அரசியல் செயற்பாடுகள் முடங்கியதுடன் அவற்றை இரகசியமாக முன்னெடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவுக்கு ஏகாதிபத்தியவாத அரசாங்கமொன்றைக் கட்டியெழுப்பவேண்டிய தேவையிருந்தது. அதற்காக தமிழர்கள் மீது ஒடுக்குமுறைகளைப் பிரயோகித்து, சிங்கள தேசியவாதத்தை முன்னிலைப்படுத்தினார். அதுமாத்திமன்றி அரசியலமைப்பின் ஊடாக சகல அதிகாரங்களையும் கொண்ட நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை அறிமுகப்படுத்தினார். அவ்வேளையில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத்தடைச்சட்டம் இப்போதும் நடைமுறையில் இருக்கின்றது. ஆனால் அதனை நீக்குவதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளும் எமது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு எமக்கும், மக்களுக்கும் எதிரான சகல ஒடுக்குமுறைகளும் திட்டமிட்டுப் பிரயோகிக்கப்பட்டன. அதேவேளை ஜே.வி.பியினாலேயே கறுப்பு ஜுலை கலவரங்கள் நடத்தப்பட்டன என்ற கருத்துக்களும் தீவிரமாகப் பகிரப்பட்டன. எனவே தமிழ் மக்களின் மனங்களில் இக்கலவரங்களை நாம் (ஜே.வி.பி) தான் நடத்தினோம் என்ற எண்ணம் இருக்கின்றதா எனத் தெரியவில்லை. அதன் பின்னர் நாம் வடக்கில் உள்ள போராட்ட இயக்கங்களுடன் தொடர்புகளைப் பேணிவருவதாகவும் ஐக்கிய தேசியக்கட்சியினால் பரப்புரை செய்யப்பட்டது. இவ்விரு கருத்துக்களுக்கும் இடையிலேயே பாரிய முரண் காணப்படுகின்றது. இவ்வாறு ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் ஒரு தனிமனிதனின் அதிகார வெறியினால் வடக்கு, கிழக்கு, தெற்கு என எவ்வித பேதமுமின்றி ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியிருக்கின்றது என்றார். https://www.ilakku.org/the-entire-country-paid-a-heavy-price-for-j-r-jayewardene-tilvin-silva-comments-on-black-july/

ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் தனிமனிதனின் அதிகார வெறியினால்,ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியது: கறுப்பு ஜுலை தொடர்பில் டில்வின் கருத்து

1 month ago

ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் தனிமனிதனின் அதிகார வெறியினால்,ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியது: கறுப்பு ஜுலை தொடர்பில் டில்வின் கருத்து

October 10, 2025

கறுப்பு ஜுலை கலவரங்கள் ஜே.வி.பியினாலேயே நடத்தப்பட்டதாக பொய்யாகப் பரப்புரை செய்யப்பட்ட போதிலும், அக்கலவரங்களால் நாம் வெகுவாகப் பாதிக்கப்பட்டோம் என்பதே உண்மையாகும். ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் தனிமனிதனின் அதிகார வெறியினால் வடக்கு, கிழக்கு, தெற்கு என எவ்வித பேதமுமின்றி ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியிருக்கின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா சுட்டிக்காட்டினார்.

நந்தன வீரரத்ன என்பவரால் எழுதப்பட்டு, மனோரஞ்சனால் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட ‘நாட்டை உலுக்கிய 83 கறுப்பு ஜுலையின் ஏழு நாட்கள்’ எனும் புலனாய்வு நூல் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வொன்று ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வியாழக்கிழமை (9) கொழும்பிலுள்ள மகாவலி மைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய டில்வின் சில்வா மேலும் கூறியதாவது:

கறுப்பு ஜுலை பற்றிய இந்த நூலானது மறைக்கப்பட்ட அல்லது திரிபுபடுத்தப்பட்ட வரலாற்றின் உண்மைகளை வெளிக்கொணர்வதற்குப் பங்களிப்புச்செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜுலை கலவரம் தொடர்பில் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அதேபோன்று 1988, 1989 களில் இடம்பெற்ற கலவரங்களை ‘ஜே.வி.பி கலவரம்’ என்று அடையாளப்படுத்துகின்றார்கள். ஆனால் உண்மையில் நாம் அந்தக் கலவரங்களைத் தோற்றுவிக்கவில்லை. மாறாக அவற்றால் வெகுவாகப் பாதிக்கப்பட்டோர்.

அதேபோன்று 1983 கறுப்பு ஜுலை கலவரத்தினால் நான் வெகுவாகப் பாதிக்கப்பட்டேன். ஏனெனில் அக்காலப்பகுதியில் நான் எமது கட்சியின் களுத்துறை மாவட்டம், பேருவளை ஒருங்கிணைப்பாளராகவும், முழுநேர கட்சி செயற்பாட்டாளராகவும் இருந்தேன். இருப்பினும் கலவரத்தை அடுத்து எமது கட்சியும் தடை செய்யப்பட்ட கட்சியாக அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து எமது அரசியல் செயற்பாடுகள் முடங்கியதுடன் அவற்றை இரகசியமாக முன்னெடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவுக்கு ஏகாதிபத்தியவாத அரசாங்கமொன்றைக் கட்டியெழுப்பவேண்டிய தேவையிருந்தது. அதற்காக தமிழர்கள் மீது ஒடுக்குமுறைகளைப் பிரயோகித்து, சிங்கள தேசியவாதத்தை முன்னிலைப்படுத்தினார்.

அதுமாத்திமன்றி அரசியலமைப்பின் ஊடாக சகல அதிகாரங்களையும் கொண்ட நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை அறிமுகப்படுத்தினார். அவ்வேளையில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத்தடைச்சட்டம் இப்போதும் நடைமுறையில் இருக்கின்றது. ஆனால் அதனை நீக்குவதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளும் எமது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு எமக்கும், மக்களுக்கும் எதிரான சகல ஒடுக்குமுறைகளும் திட்டமிட்டுப் பிரயோகிக்கப்பட்டன.

அதேவேளை ஜே.வி.பியினாலேயே கறுப்பு ஜுலை கலவரங்கள் நடத்தப்பட்டன என்ற கருத்துக்களும் தீவிரமாகப் பகிரப்பட்டன. எனவே தமிழ் மக்களின் மனங்களில் இக்கலவரங்களை நாம் (ஜே.வி.பி) தான் நடத்தினோம் என்ற எண்ணம் இருக்கின்றதா எனத் தெரியவில்லை. அதன் பின்னர் நாம் வடக்கில் உள்ள போராட்ட இயக்கங்களுடன் தொடர்புகளைப் பேணிவருவதாகவும் ஐக்கிய தேசியக்கட்சியினால் பரப்புரை செய்யப்பட்டது. இவ்விரு கருத்துக்களுக்கும் இடையிலேயே பாரிய முரண் காணப்படுகின்றது. இவ்வாறு ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் ஒரு தனிமனிதனின் அதிகார வெறியினால் வடக்கு, கிழக்கு, தெற்கு என எவ்வித பேதமுமின்றி ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியிருக்கின்றது என்றார்.

https://www.ilakku.org/the-entire-country-paid-a-heavy-price-for-j-r-jayewardene-tilvin-silva-comments-on-black-july/

இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.

1 month ago
ஜேம்ஸ்பாண்டுக்கு நிகரான சூப்பர் ஹீரோ “இலையான் கில்லர்” க்கு முன்பு இந்த அவதாரை பாவித்தீர்கள் என நினைக்கிறேன் ? முன்பெல்லாம் யாழை வாசிக்கும் போது கண்ணை சட்டென கவர்ந்தவை உங்கள் பகிடிகள்+அவதார்கள். யாழில் உங்களின் ஒரு பாணியை நான் கொப்பி அடிக்கிறேன்…… குறிப்பாக ஒரு கருத்தை ஊண்டி (emphasise) சொல்ல….. என்ன என கண்டுபிடிக்க முடிகிறதா?

இஸ்ரேல் - ஹமாஸ் அமைதித் திட்டத்தின் முதற்கட்டத்திற்கு கையெழுத்து: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

1 month ago
காசாவில் இன்றுமுதல் தற்காலிக போர் நிறுத்தம்; இஸ்ரேல் இணக்கம் Published By: Digital Desk 3 10 Oct, 2025 | 10:24 AM காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், இராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது. காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், இராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது. பணய கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் இன்னும் 48 பேர் பணய கைதிகளாக உள்ளனர். இதில் 28க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுதக்குழுவினரை முழுமையாக ஒழிக்கும் நோக்கிலும் காசா முனையில் இஸ்ரேல் தொடர்ந்து தரைவழி, வான்வழி தாக்குதலை நடத்தியது. 2 ஆண்டுகள் நடைபெற்ற இந்த போரில் காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 67 ஆயிரத்து 194 பேர் உயிரிழந்துள்லனர். இதனிடையே, பணய கைதிகள் விடுதலை, இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சி மேற்கொண்டார். அதன் பயனாக போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேல், ஹமாஸ் சம்மதம் தெரிவித்தன. ஒப்பந்தப்படி காசா முனை மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும். இதையடுத்து, 72 மணிநேரத்தில் இஸ்ரேலிய பணய கைதிகள் அனைவரையும் ஹமாஸ் ஆயுதக்குழு விடுதலை செய்ய வேண்டும். அதன்படி, உயிருடன் உள்ள 20 இஸ்ரேலிய பணய கைதிகள், கொல்லப்பட்ட 28 இஸ்ரேலிய பணய கைதிகளின் சடலங்களை ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்கு ஈடாக இஸ்ரேலிய சிறைகளில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 2 ஆயிரத்து 250 பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்படுவர். இந்நிலையில், காசா முனையில் போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் அமைச்சரவை இன்று இணக்கம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, காசாவில் போர் நிறுத்தம் இன்றுமுதல் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளது. தற்போதைய போர் நிறுத்தம் தற்காலிகமானதாகும். இரு தரப்பும் ஒப்பந்தப்படி அனைத்து விதிகளையும் பின்பற்றும் பட்சத்தில் தற்காலிக போர் நிறுத்தம் நிரந்தர போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும். ஆனால், இந்த ஒப்பந்தத்தை ஏதேனும் ஒரு தரப்பு மீறினாலும் மீண்டும் போர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/227379

திரிவைத்தகுளம் காணி ஆக்கிரமிப்பு தொடர்பில் வெளிப்படுத்தியமைக்காக மொட்டுக் கட்சியின் அமைப்பாளரால் கொலை மிரட்டல் : த.தே.ம.முன்னனி அமைப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு

1 month ago
திரிவைத்தகுளம் காணி ஆக்கிரமிப்பு தொடர்பில் வெளிப்படுத்தியமைக்காக மொட்டுக் கட்சியின் அமைப்பாளரால் கொலை மிரட்டல் : த.தே.ம.முன்னனி அமைப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு 10 Oct, 2025 | 09:07 AM திரிவைத்தகுளம் காணி ஆக்கிரமிப்பு தொடர்பில் வெளிப்படுத்தியமைக்காக மொட்டுக் கட்சியின் அமைப்பாளரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.தவபாலன் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வவுனியா, கண்டி வீதியில் அமைந்துள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை (09) முறைப்பாடு செய்த பின் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வெடிவைத்தகல் கிராம அலுவலர் பிரிவில் திரிவைத்தகுளம் என்னும் கிராமம் போகஸ்வேவ குடியேற்றவாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. அந்த விடயங்களை நாங்கள் கடந்த யூலை மாதம் கள விஜயம் செய்து ஊடகங்கள் வாயிலாக வெளிக் கொண்டு வந்திருந்தோம். காணி உரிமையாளர்கள ஒலுமடுவில் இருக்கிறார்கள். அவர்கள் காணியை வெளியாக்கிய போது அவர்கள் மீது வனஇலாகா திணைக்களம் வழக்கு தாக்கல் செய்து மூன்று வருடங்கள் வழக்கு இடம்பெற்று தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் தான் போகஸ்வேவ குடியேற்றவாசிகளால் குறிப்பாக மகிந்தவின் மொட்டுக் கட்சியின் அமைப்பாளராக இருக்கின்ற பிமல் தர்மராஜா குழுவினரால் டோசர் மூலம் காடுகள் அழிக்கப்பட்டு அந்த இடத்தில் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விடயங்களை ஊடகங்கள் மூலம் நாம் வெளியில் கொண்டு வந்திருந்தோம். கடந்த மாதம் 30 ஆம் திகதி அந்த இடங்களைப் பார்வையிட வன்னியின் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் சென்றிருந்தனர். அந்த இடத்திற்கு வருகை தநத காணியை ஆககிரமித்துள்ள பிமல் தர்மராஜா போன்ற குழுவினர் அங்கு வருகை தந்தவர்களை பார்த்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதுடன், என்னுடைய பெயரினையும், பிரதேச சபை உறுப்பினர் தமிழ் செல்வன் அவர்களது பெயரையும், வன்னிப் பாராளுடன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது பெயரையும் குறிப்பிட்டு அவர்கள் இங்கு இருக்கிறர்களா? அவர்களை வெட்டுவதற்காக, அவர்களை கொலை செய்ய தான் வந்தோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கத்திற்கு முன்னால் தெரிவித்திருந்தார்கள். அச்சுறுத்துகின்ற மற்றும் தெரிவித்த கருத்துக்கள் எல்லாம் கணொளிகளாக உள்ளன. அந்தப்பகுதி போகஸ்வேவ பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்டதாக இருந்தாலும் அந்த அச்சுறுத்தலுக்கு எதிராக வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு வருகை தந்து முறைப்பாட்டை வழங்கியுள்ளோம். அவர்கள் நேரடியாக போகஸ்வேவ பொலிஸ் நிலையம் ஊடாக இதனை அணுகுவவதற்காக இநத விசாரணையை மேற்கொள்ளுமாறு அந்த அதிகாரிக்கு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அறிவுறுத்தியுள்ளார். நாங்கள வாக்கு மூலம் வழங்கியுள்ளோம். எமது நிலங்கை அரச திணைக்களளுடன் இணைந்து ஆக்கிரமித்து 210 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்துள்ளார்கள். காண உரிமையாளர்கள் போவதற்கு தடை போடும் திணைக்களங்கள் குடியேற்ற சிங்களவர்கள் துப்பரவு செய்து அபகரிக்கும் போது பேசாமல் இருக்கிறார்கள். இனிவரும் காலஙகளில் எவ்வாறான அச்சுறுத்தல் வந்தாலும் திரிவைத்த குளம் தமிழர் காணிகளை மீட்க தொடர்ந்து போராடுவோம் எனத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/227371

திரிவைத்தகுளம் காணி ஆக்கிரமிப்பு தொடர்பில் வெளிப்படுத்தியமைக்காக மொட்டுக் கட்சியின் அமைப்பாளரால் கொலை மிரட்டல் : த.தே.ம.முன்னனி அமைப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு

1 month ago

திரிவைத்தகுளம் காணி ஆக்கிரமிப்பு தொடர்பில் வெளிப்படுத்தியமைக்காக மொட்டுக் கட்சியின் அமைப்பாளரால் கொலை மிரட்டல் : த.தே.ம.முன்னனி அமைப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு

10 Oct, 2025 | 09:07 AM

image

திரிவைத்தகுளம் காணி ஆக்கிரமிப்பு தொடர்பில் வெளிப்படுத்தியமைக்காக மொட்டுக் கட்சியின் அமைப்பாளரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.தவபாலன் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

வவுனியா, கண்டி வீதியில் அமைந்துள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை (09) முறைப்பாடு செய்த பின் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெடிவைத்தகல் கிராம அலுவலர் பிரிவில் திரிவைத்தகுளம்  என்னும் கிராமம் போகஸ்வேவ குடியேற்றவாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. அந்த விடயங்களை நாங்கள் கடந்த யூலை மாதம் கள விஜயம் செய்து ஊடகங்கள் வாயிலாக வெளிக் கொண்டு வந்திருந்தோம்.

காணி உரிமையாளர்கள ஒலுமடுவில் இருக்கிறார்கள். அவர்கள் காணியை வெளியாக்கிய போது அவர்கள் மீது வனஇலாகா திணைக்களம் வழக்கு தாக்கல் செய்து மூன்று வருடங்கள் வழக்கு இடம்பெற்று தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில் தான் போகஸ்வேவ குடியேற்றவாசிகளால் குறிப்பாக மகிந்தவின் மொட்டுக் கட்சியின் அமைப்பாளராக இருக்கின்ற பிமல் தர்மராஜா குழுவினரால் டோசர் மூலம் காடுகள் அழிக்கப்பட்டு அந்த இடத்தில் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விடயங்களை ஊடகங்கள் மூலம் நாம் வெளியில் கொண்டு வந்திருந்தோம்.

கடந்த மாதம் 30 ஆம் திகதி அந்த இடங்களைப் பார்வையிட வன்னியின் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் சென்றிருந்தனர். அந்த இடத்திற்கு  வருகை தநத காணியை ஆககிரமித்துள்ள பிமல் தர்மராஜா போன்ற குழுவினர் அங்கு வருகை தந்தவர்களை பார்த்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதுடன், என்னுடைய பெயரினையும், பிரதேச சபை உறுப்பினர் தமிழ் செல்வன் அவர்களது பெயரையும், வன்னிப் பாராளுடன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது பெயரையும் குறிப்பிட்டு அவர்கள் இங்கு இருக்கிறர்களா? அவர்களை வெட்டுவதற்காக, அவர்களை கொலை செய்ய தான் வந்தோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கத்திற்கு  முன்னால் தெரிவித்திருந்தார்கள். அச்சுறுத்துகின்ற மற்றும் தெரிவித்த கருத்துக்கள் எல்லாம் கணொளிகளாக உள்ளன.

அந்தப்பகுதி போகஸ்வேவ பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்டதாக இருந்தாலும் அந்த அச்சுறுத்தலுக்கு எதிராக வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு வருகை தந்து முறைப்பாட்டை வழங்கியுள்ளோம்.

அவர்கள் நேரடியாக போகஸ்வேவ பொலிஸ் நிலையம் ஊடாக இதனை அணுகுவவதற்காக இநத விசாரணையை மேற்கொள்ளுமாறு அந்த அதிகாரிக்கு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அறிவுறுத்தியுள்ளார். நாங்கள வாக்கு மூலம் வழங்கியுள்ளோம்.

எமது நிலங்கை அரச திணைக்களளுடன் இணைந்து ஆக்கிரமித்து 210 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்துள்ளார்கள். காண உரிமையாளர்கள் போவதற்கு தடை போடும் திணைக்களங்கள் குடியேற்ற சிங்களவர்கள் துப்பரவு செய்து அபகரிக்கும் போது பேசாமல் இருக்கிறார்கள். இனிவரும் காலஙகளில் எவ்வாறான அச்சுறுத்தல் வந்தாலும் திரிவைத்த குளம் தமிழர் காணிகளை மீட்க தொடர்ந்து போராடுவோம் எனத் தெரிவித்தார். 

https://www.virakesari.lk/article/227371

மன்னாரில் 14 காற்றாலைகளை அமைப்பதே அரசாங்கத்தின் முடிவாக உள்ளது : மன்னார் மறைமாவட்ட ஆயர்

1 month ago
மன்னாரில் 14 காற்றாலைகளை அமைப்பதே அரசாங்கத்தின் முடிவாக உள்ளது : மன்னார் மறைமாவட்ட ஆயர் 10 Oct, 2025 | 09:50 AM ஜனாதிபதியை சந்தித்து மன்னார் மக்கள் ஏன் காற்றாலை வேண்டாம் என கூறுகிறார்கள் என்பதை தெளிவு படுத்தினேன். எனினும் அரசாங்கத்தின் நிலைப்பாடு, குறித்த 14 காற்றாலைகளையும் மன்னாரில் அமைப்பதிலே மிகவும் திடமாக இருக்கிறார்கள் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார். மன்னார் பிரஜைகள் குழுவில் நேற்று வியாழக்கிழமை(09) மாலை சர்வமத குழு, பொது அமைப்புக்கள், போராட்டக்குழு ஆகியவற்றுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நான் ஜனாதிபதியை சந்தித்தேன். இதன் போது காற்றாலை தொடர்பான எமது பிரச்சனையை அவரிடம் முன் வைத்தேன். இந்த விடயம் குறித்து கதைத்த போது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்றால் அவர்கள் குறித்த 14 காற்றாலைகளையும் மன்னாரில் அமைப்பதிலே மிகவும் திடமாக இருக்கின்றார்கள். நான் அங்கு எந்தவித ஒப்பந்தங்களையும் செய்யவில்லை. நான் மக்களின் நிலைப்பாட்டையும், மன்னாரில் ஏன் காற்றாலை வேண்டாம் என்று மக்கள் கூறுகிறார்கள் என்ற நிலைப்பாட்டையும் ஜனாதிபதிக்கு தெளிவு படுத்தினேன். எனினும் அவருடைய நிலைப்பாடு என்னவென்றால் குறித்த 14 காற்றாலை களையும் அமைத்ததன் பின்னர் மன்னாரில் கனிய மணல் அகழ்வையோ அல்லது மேலதிக காற்றாலைகளையோ ஒரு போதும் அனுமதிப்பதில்லை என்ற வாக்குறுதியை வழங்கினார். கணிய மணல் அகழ்வு மன்னாரில் முற்றாக இல்லை என்பதை ஜனாதிபதி உறுதிப்படுத்தினார். அமைச்சரவை ஊடாக அதனை எமக்கு உறுதிப்படுத்தி தருவதாகவும் குறித்த 14 காற்றாலைகளையும் மக்கள் அனுமதிக்கின்ற போது எந்த ஒரு அரசாங்கமும் இச் சிறிய பகுதியில் கணிய மணல் அகழ்வு மற்றும் மேலதிக காற்றாலை அமைத்தல் போன்ற செயல்பாடுகளுக்கு அனுமதிக்கப் போவதில்லை. அதற்கும் அமைச்சரவை ஊடாக உறுதிமொழி வழங்குவேன் என கூறினார். எது எப்படியாக இருந்தாலும் நான் மன்னாரில் மக்களை சந்தித்ததன் பின்னர் இதற்கான நடவடிக்கையை எடுக்கலாம் என்று கூறி விட்டு அங்கிருந்து வந்தேன். நாங்கள் எவ்வித ஆவணத்திலும் கையொப்பம் இடவில்லை என அவர் இதன்போது தெரிவித்தார். https://www.virakesari.lk/article/227374

மன்னாரில் 14 காற்றாலைகளை அமைப்பதே அரசாங்கத்தின் முடிவாக உள்ளது : மன்னார் மறைமாவட்ட ஆயர்

1 month ago

மன்னாரில் 14 காற்றாலைகளை அமைப்பதே அரசாங்கத்தின் முடிவாக உள்ளது : மன்னார் மறைமாவட்ட ஆயர்

10 Oct, 2025 | 09:50 AM

image

ஜனாதிபதியை சந்தித்து மன்னார் மக்கள் ஏன் காற்றாலை வேண்டாம் என கூறுகிறார்கள் என்பதை தெளிவு படுத்தினேன். எனினும் அரசாங்கத்தின் நிலைப்பாடு, குறித்த 14 காற்றாலைகளையும் மன்னாரில் அமைப்பதிலே மிகவும் திடமாக இருக்கிறார்கள் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மன்னார் பிரஜைகள் குழுவில் நேற்று வியாழக்கிழமை(09) மாலை சர்வமத குழு, பொது அமைப்புக்கள், போராட்டக்குழு  ஆகியவற்றுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் ஜனாதிபதியை சந்தித்தேன். இதன் போது காற்றாலை தொடர்பான எமது பிரச்சனையை அவரிடம் முன் வைத்தேன். இந்த விடயம் குறித்து கதைத்த போது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்றால் அவர்கள் குறித்த 14 காற்றாலைகளையும் மன்னாரில் அமைப்பதிலே மிகவும் திடமாக இருக்கின்றார்கள்.

நான் அங்கு எந்தவித ஒப்பந்தங்களையும் செய்யவில்லை. நான் மக்களின் நிலைப்பாட்டையும், மன்னாரில் ஏன் காற்றாலை வேண்டாம் என்று மக்கள் கூறுகிறார்கள் என்ற நிலைப்பாட்டையும் ஜனாதிபதிக்கு தெளிவு படுத்தினேன்.

எனினும் அவருடைய நிலைப்பாடு என்னவென்றால் குறித்த 14 காற்றாலை களையும் அமைத்ததன் பின்னர் மன்னாரில் கனிய மணல் அகழ்வையோ அல்லது மேலதிக காற்றாலைகளையோ ஒரு போதும் அனுமதிப்பதில்லை என்ற வாக்குறுதியை வழங்கினார்.

கணிய மணல் அகழ்வு மன்னாரில் முற்றாக இல்லை என்பதை ஜனாதிபதி உறுதிப்படுத்தினார்.

அமைச்சரவை ஊடாக அதனை எமக்கு உறுதிப்படுத்தி தருவதாகவும் குறித்த 14 காற்றாலைகளையும் மக்கள் அனுமதிக்கின்ற போது எந்த ஒரு அரசாங்கமும் இச் சிறிய பகுதியில் கணிய மணல் அகழ்வு மற்றும் மேலதிக காற்றாலை அமைத்தல் போன்ற செயல்பாடுகளுக்கு அனுமதிக்கப் போவதில்லை. அதற்கும் அமைச்சரவை ஊடாக உறுதிமொழி வழங்குவேன் என கூறினார்.

எது எப்படியாக இருந்தாலும் நான் மன்னாரில் மக்களை சந்தித்ததன் பின்னர் இதற்கான நடவடிக்கையை எடுக்கலாம் என்று கூறி விட்டு அங்கிருந்து வந்தேன். நாங்கள் எவ்வித ஆவணத்திலும் கையொப்பம் இடவில்லை என அவர் இதன்போது தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/227374

அர்ச்சுனாவின் அரசியல் தொடர்பில் தமிழ் மக்கள் தெளிவடைய வேண்டும்

1 month ago
அர்ச்சுனாவின் அரசியல் தொடர்பில் தமிழ் மக்கள் தெளிவடைய வேண்டும் முருகானந்தன் தவம் ‘‘கொடுக்கின்ற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும்’’ என்பார்கள். அப்படி ஒரு அதிர்ஷ்டத்தின் வழியாகத் தமிழ் அரசியல்வாதியாக வடக்கிலிருந்து பாராளுமன்றத்திற்குள் நுழைந்து தனது கொள்கையில்லாத, தில்லாலங்கடி அரசியல் மூலமும் தனது சமூக ஊடகம் மூலமும் இன்று இலங்கையில் மட்டுமன்றி, புலம்பெயர் நாடுகளிலும் தமிழர்களினால் நன்கறியப்பட்டவராக , விமர்சனங்களுக்குட்பட்டவராக உருவெடுத்துள்ளார். அர்ச்சுனா இராமநாதன் எம்.பி.துணிச்சலான அரசியல்வாதியாக, கோமாளித்தன அரசியல்வாதியாக, புலம்பெயர் தமிழர் பணத்தில் அரசியல் செய்யும் அரசியல்வாதியாக, உண்மையை ஒளிவு, மறைவின்றி பேசும் அரசியல்வாதியாக, பொய், புரட்டுக்கள் நிறைந்த அரசியல் வாதியாக, கொள்கை இல்லாத அரசியல்வாதியாக, தமிழ் மக்களின் வலி உணர்ந்த அரசியல்வாதியாக, தமிழ் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் அரசியல்வாதியாக, ஏனைய அரசியல்வாதிகள் மீது சேறடிக்கும் இழிவான அரசியல்வாதியாக என பல கோணங்களில் பார்க்கப்படுகின்றார். விமர்சிக்கப்படுகின்றார். இலங்கை அரசியலில் அர்ச்சுனா எம்.பி. போன்று மிக இலகுவாக அரசியல்வாதியாக வெற்றி பெற்றவர்கள் வேறு யாரும் இல்லை என்று அடித்துக் கூற முடியும். அந்தளவுக்கு அவர் ஒரு அதிர்ஷ்டசாலி. ஆனால் அர்ச்சுனா எம்.பியின் கொள்கை ,கோட்பாடுகள் என்ன? அவரின் அரசியல் பாதை எது?அவரின் இலக்கு இலட்சியம் எவை?அவர் நல்லவரா, கெட்டவரா? நல்ல அரசியல்வாதியா அல்லது சிறந்த நடிகரா? அவர் கூறுவதில் எது உண்மை எது பொய்?அவர் தமிழ் தேசியவாதியா அல்லது தமிழ்த் தேசியத் துரோகியா ?அவர் யாருக்கு நண்பன் யாருக்குப் பகைவன்? என்பது தமிழ் மக்களுக்கும் ஏனைய தமிழ் அரசியல்வாதிகளுக்கும் புரியாத புதிராகவே உள்ளது. ஏன் இதில் தான் எந்த வகை என்பது அர்ச்சுனா எம்.பிக்கு கூட தெரியாமல்தான் உள்ளது. அதனால்தான் அவர் நித்தம் ஒரு அரசியல் செய்கின்றார். எப்போதும் பரபரப்புக்களை ஏற்படுத்துகின்றார். தனது சமூக ஊடகத்தை மட்டுமே நம்பியிருக்கின்றார்.இதற்கு தற்போது அவர் ஜெனீவா சென்று நடத்தும் ‘ரோட் ஷோ’ அரசியல் சிறந்த உதாரணம். அர்ச்சுனா இராமநாதன் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய நிலையில், 2024 ஜூலை மாதம், சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் இடம்பெற்ற முறைகேடுகளையும் ஒழுங்கீனங்களையும் சமூக ஊடகத் தளங்கள் மூலம் அம்பலப்படுத்தி தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றார். அதன்பின்னர் மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பிலும் தலையிட்டு மக்கள் மனம் வென்றார். இதன் விளைவாக, அவர் அரசியலுக்குள் நுழைந்தார். ஆனால், ஒரு மருத்துவராக நேர்மையானவராக இருந்த அர்ச்சுனாவால் ஒரு அரசியல்வாதியாக நேர்மையானவராக இருக்க முடியவில்லை. 2024 நவம்பரில் சுயேச்சைக் குழு 17 என்ற அரசியல் குழு ஒன்றை அமைத்து, அதன் மூலம் 2024பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு, 27,855 வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்குத் தெரிவானார். அவ்வாறு தெரிவாவதற்கு முன்னரே அர்ச்சுனா தேசிய மக்கள் சக்தியின் வடக்கிற்குப் பொறுப்பான ஒருங்கிணைப்பாளரான பெண் ஒருவருடன் தேசிய மக்கள் சக்திக்குத் தான் ஆதரவளிக்க விரும்புவதாக பேரம் பேசினார், ஆனால், அந்த ஒருங்கிணைப்பாளர் “முதலில் நீங்கள் உங்களை மூளையை பரிசோதியுங்கள்” என கூறி நிராகரித்தார். இது தொடர்பான தொலைபேசி உரையாடல் பதிவும் வெளியானது. இதனையடுத்து, சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாகக் கூறி அழையா விருந்தாளியாக ஐக்கிய மக்கள் சக்தியின் கிண்ணியா பிரசாரக் கூட்டத்தில் அர்ச்சுனா மேடையேறியபோது, சஜித் பிரேமதாசாவினால் மேடையிலிருந்து இறக்கப்பட்டார். இதனையடுத்து, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவளிப்பதாகக்கூறி அதன் ஆடையையும் அணிந்து கொண்டு திரிந்தார். ஆனால், அவர்களும் ஏற்க மறுக்கவேதான் சுயேச்சையாகத் தேர்தலில் போட்டியிட்டார். தேர்தலில் போட்டியிட முன்னரே இவ்வளவு பேரம் பேசுதல்களையும் அர்ச்சகனா செய்தபோதும் அவர் மீது நம்பிக்கை வைத்தே தமிழ் மக்கள் அவரை தேர்தலில் வெற்றி பெற வைத்தனர். தேர்தலில் வென்றவுடனேயே தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஆதரிப்பதாகத் தானாகவே அறிவித்தார். பாராளுமன்றத்திலும் ‘‘உங்களுக்கு 159 எம்பி.க்கள் அல்ல. என்னுடன் சேர்த்து 160எம்.பிக்கள்” என்று பிரதமரிடத்திலேயே தெரிவித்தார். அரசு கொண்டு வந்த சில சட்ட மூலங்களையும் ஆதரித்தார். ஆனால், அரசு அவரைக் கண்டு கொள்ளவே இல்லை. தனது அரசுக்கான ஆதரவை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்திப் பார்த்தார். ஆனால், அவர் நினைத்து நடக்கவில்லை . மாறாக, அவர் பாராளுமன்றத்தில் நிலையியல் கட்டளைகளுக்கு முரணாக நடந்து கொண்டதினால் ஒரு மாதத்திற்கு அர்ச்சுனாவின் பாராளுமன்ற உரைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய சபாநாயகர் தடைவிதித்தார். இதனையடுத்து, தான் அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவதாக அர்ச்சுனா சபையில் அறிவித்தார். தமிழ் மக்களின் எந்த நலனையும் கருத்தில் கொண்டு அவர் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறவில்லை. தன்னை அரசு தண்டித்து விட்டது என்ற கோபத்திலேயே அரசு கேட்காமல் அவராகவே வலிந்து கொடுத்த ஆதரவை அவராகவே வாபஸ் பெறுவதாக அறிவித்தார். அர்ச்சுனாவின் அரசியலே பொய், வாய்க்கு வந்ததை பேசுவது, ஏனையவர்கள் மீது சேறடிப்பத, தன்னை எதிர்ப்போரைக் கீழ்த்தரமாக சபையிலும் தனது சமூக ஊடகத்திலும் விமர்சிப்பது, தன்னை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஒரு வளர்ப்பாக காட்டிக் கொள்வது, தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பேசும் ஒரேயொரு தமிழ் மக்களின் பிரதிநிதி தானே என கூறிக்கொள்வது, தானே சிங்களம் பேசத்தெரிந்த தமிழ் பிரதிநிதி என்பதாக சுய தம்பட்டம் அடித்துக் கொள்வது தான். இவ்வாறாக வாய்க்கு வந்தபடி பொய்களைக் கூறியும் பித்தலாட்டங்களைச் செய்தும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரையும் தனது சமூக ஊடகத்தையும் வைத்து தமிழ் மக்களை முட்டாள்களாக்கி ஏமாற்றி வரும் அர்ச்சுனா எம்.பி. இப்போது அணி சேர்ந்துள்ளது நாமல் ராஜபக்‌ஷவுடன். இதனை பாராளுமன்றத்தில் ஒரு தடவை உரையாற்றும் போது, ‘‘நாமல் ராஜபக்‌ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், நான் அவரை ஆதரிப்பேன். அதனை அவரிடம் நேரடியாகவே கூறினேன். உங்கள் தந்தை, சித்தப்பா தமிழ் மக்களுக்குச் செய்த வேலைகளைச் செய்ய வேண்டாம். என்று அவரிடம் கூறியுள்ளேன். அவரும் அதற்கு இணங்கியுள்ளார்’’ என்று கூறியதன் மூலம் நாமல் ராஜபக்‌ஷவுடன் தனக்குள்ள தொடர்பை வெளிப்படுத்தினார். அதன்பின்னர் பாராளுமன்றத்தில் பல தடவைகள் நாமலுக்கு ஆதரவாகவும் ராஜபக்‌ஷக்களுக்கு ஆதரவாகவும் அர்ச்சுனா குரல் கொடுத்து வருகின்றார். அதுமட்டுமல்ல, தற்போது கொள்கலன்களில் கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பில் ராஜபக்‌ஷக்கள் சிக்கியுள்ள நிலையில், அந்த கொள்கலன்களில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகப் பாராளுமன்றத்தில் பகிரங்கமாகக் கூறி பொய்த் தகவலைப் பரப்பியவரும் இந்த அர்ச்சுனாதான். அவ்வாறு பொய் தகவலைப் பரப்பி அந்த கொள்கலன்கள் விடயத்தைத் திசை திருப்ப அர்ச்சுனாவை ராஜபக்‌ஷக்கள் குறிப்பாக, நாமல் ராஜபக்‌ஷ பயன்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகங்களும் வெளியிடப்படுகின்றன. ராஜபக்‌ஷக்களுடனான அர்ச்சுனா எம்.பியின் டீலை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் போக்குவரத்து விதிமுறை மீறல் குற்றத்தில் அர்ச்சுனா எம்.பி கைதானபோது பிணை எடுத்தவர் நாமல்ராஜபக்ச. இதன்போது அர்ச்சுனா எம்.பி கருத்துக்கூறுகையில், எனது கடவுள் பிரபாகரன் என்பதை அச்சமின்றி கூறுகின்றேன். ஆனால், சிங்கள மக்கள் தமக்காகச் சேவையாற்றிய மஹிந்த ராஜபக்‌ஷவை காட்டிக் கொடுத்துள்ளனர். எனக்காக உயிர் நீத்தவர்களுக்காக நான் முன்னிற்கின்றேன். ஆனால், இந்நாட்டு மக்கள் தமக்காக உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்காக முன்னின்ற தமது தலைவரைக்காட்டிக் கொடுத்துள்ளனர். மஹிந்த தமிழ் மக்களின் தலைவர் அல்லர். ஆனால், அவர் சிங்கள மக்களின் தலைவராவார். ஆனால், அவர்கள் மஹிந்தவைக் காட்டிக் கொடுத்துள்ளனர். நாமல் உள்ளிட்டோர் கள்வர்கள் என கூறியபோது, நானும் அவற்றை நம்பினேன். முழு நாடும் அதை நம்பியது. பொய் கூறியவர்களை மேலாக பாரிய பொய்களைக்கூறுபவர்கள் வந்ததும் அனைவரும் அவர்களை நம்பினர்.ஆனால் இறுதியில் அவர்களது பொய்கள் அனைத்தும் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.எனக்காக முன்னிலையானமைக்காக நாமலுக்கு மதிப்பளிக்கின்றேன்’’ என்றார். மீண்டும் நாட்டில் மீண்டெழும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ராஜபக்சக்கள் தற்போது இந்த அர்ச்சுனாவை தேர்ந்தெடுத்து பிரபாகரன் புகழ் பாட வைத்து அதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதிரான சிங்கள இனவாதத்தை தூண்டி அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கின்றார்கள். அதற்காகவே 2024 ஜூலை மாதம் வரையில் விடுதலைப்புலிகளின் தலைவரைப் பற்றியோ விடுதலைப் புலிகளைப் பற்றியோ எங்கும் எப்போதும் ஒரு வார்த்தைகூடப் பேசாத,தமிழ் மக்களின் எந்த வித வெகுஜனப் போராட்டங்களிலும் பங்கேற்காத, இந்த அர்ச்சுனா இன்று ‘‘பிரபாகரன் எனது தெய்வம்’’என்பதும் ‘‘தமிழ் மக்களுக்காகவே நான் முன்நிற்கின்றேன்’’ என்றும் முழங்கி வருகின்றார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தெய்வமாக நினைக்கும் வழிபடும் ஒருவரினால் எப்படி அதே தெய்வத்தை அழித்த அந்த தெய்வத்தின் தமிழீழம் என்ற ஆலயத்தைத் தகர்த்தெறிந்த ராஜபக்‌ஷக்களை ஆதரிக்க முடியும்? அவர்கள் நல்லவர்கள், வல்லவர்கள் என்று எவ்வாறு கூற முடியும்? ராஜபக்சக்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் நான் ஆதரிப்பேன் என எவ்வாறு அறிவிக்க முடியும்? எனவே, அர்ச்சுனா எம்.பியின் அரசியல் தொடர்பில் தமிழ் மக்கள்தான் அதிலும் குறிப்பாக சாவகச்சேரி மக்கள்தான் தெளிவடைய வேண்டும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அர்ச்சுனாவின்-அரசியல்-தொடர்பில்-தமிழ்-மக்கள்-தெளிவடைய-வேண்டும்/91-366032